​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 29 November 2024

சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2


சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1 இன் தொடர்ச்சியாக !

ஒரு மணி நேரத்துக்குப்பின் காப்பி கடையின் இடத்தை அடைந்த நண்பர், கடைக்கு எதிரே ரோட்டில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, இதெல்லாம் தேவையா, எதற்காக அவசரப்பட்டு வந்தோம் என்று யோசித்தபடியே, தன்னை அழைத்த பெண் அங்கே நிற்கிறாரா என்று பார்க்க, சற்றே அதிர்ந்து போனார்.

ஒரு ஐந்தடி உயரம், மிக இளமையான தோற்றம், நெற்றியில் மிகப்பெரிய குங்குமப்பொட்டு, கை நிறைய வளையல்கள், விரல்களில் பலவித கற்கள் பதித்த மோதிரங்கள், மூக்கில் ஒரு தங்க வளையம், பெண்கள் அணியும் "குர்தி" என்கிற உடையில், இத்தனைக்கும் சேரா விதத்தில், மிக நீளமான தலை முடியை சித்தர்கள் போல் தலை மேல் லிங்க ரூபத்தில் கட்டி இருந்தார்.

கடைகாரரிடம் வணக்கம் சொல்லிவிட்டு, அவரை நெருங்கும் போதே மிக கெட்டியான பன்னீர், ரோஜா வாசனை இவரை தாக்கியது. இதை உணர்ந்தவர், தான் சந்திக்க போகிற பெண் சாதாரண பெண் அல்ல என்பதை உணர்ந்தார்.

அருகில் சென்று "நீங்கள் தானே ஒரு மணிநேரம் முன் என்னை தொடர்பு கொண்டது?" என்று வினவினார் என் நண்பர்!

"ஆம்! நான் தான்!" என்றவர் "பரவாயில்லை! சக்கர வளயத்தை நன்றாக போட்டுள்ளீர்கள். தலையில் முடிக்குள் வைத்துள்ளது பைரவர் பிரசாதமோ? நல்லது!" என்றார். நீ என்ன செய்தாலும் எனக்கு தெரியும் என்கிற தோரணை அதில் இருந்தது!      

பேச்சை வழி மாற்றும் விதமாக "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றார் நண்பர்!

"ஹிமாலயத்திலிருந்து வருகிறேன்! உத்தர பிரதேசத்திலுள்ள யோகி என் நண்பர்!" என்றார்!

"ஒ! அப்படியா!" என்றவரிடம் நெருங்கி "நான் சொன்ன யோகி முதலமைச்சர்" என்றார்!

இவர் மிக உயர்ந்த இடத்திலிருந்து வந்தவர் மட்டும் அல்ல, உயர்வான தொடர்பும் உடையவர் என்று உணர்ந்து, பேச்சை மாற்றும் விதமாக 

"பத்மநாப ஸ்வாமியை போய் பார்த்தீர்களா?" என்றார், நண்பர்.

"ஆஹ்! உள்ளே போய் பார்த்தேன்!" என்றார்!

"இதே உடையில் உள்ளே போனீர்களா? உங்களை நிச்சயமாக உள்ளே கடத்தி விட்டிருக்க மாட்டார்களே. புடவை அல்லது ஒரு வேஷ்டி உடுத்தியிருக்க வேண்டுமே!" என்றார் நண்பர். பதிலுக்கு அவர் சொன்னது, இவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.

"இதே உடையில் தான் உள்ளே சென்றேன். யாரும் என்னை பார்க்கவில்லை/கவனிக்கவில்லை! பார்க்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டுதான் சென்றேன். அதன்படியே நடந்தது. பத்மநாப ஸ்வாமியை தரிசனம் செய்தேன். அகத்தியர் அங்கில்லை. எங்கோ சென்றிருக்கிறார்! அவரை கைலாசத்துக்கு போகும் போது பார்த்துக் கொள்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்.

"அதெப்படி, கோவிலுக்குள் எங்கும் சிசி டிவி கேமரா உள்ளது. 24 மணிநேரமும் எட்டு பக்கத்திலும் நடப்பவற்றை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கும். அதில் உங்கள் உருவம் நிச்சயமாக பதிந்திருக்கும்!" என்றார், என் நண்பர்!

இவர் தனக்கு ஏதேனும் பிரச்சினையாகிவிடும் என்று நினைத்து இந்த கேள்வியை கேட்கிறார் என்று உணர்ந்த அந்த பெண்மணி, சிரித்துக் கொண்டே "எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது. உங்களுக்கு தெரிந்த யாராவது உள் இருந்தால், வீடியோவை பார்க்க சொல்லுங்கள். எந்த பிரேமிலும் நான் இருக்க மாட்டேன்" என்றார்!

மொத்தத்தில் குழம்பி போய் நின்ற நண்பர், அவராகவே தெளிவானபின் கேள்வியை கேட்கட்டும் என்று சிரித்தபடி நின்ற அந்த பெண்மணி, அவரின் விசித்திர தோற்றத்தை வேடிக்கை பார்த்து செல்லும் மனிதர்கள், சற்று நேரம் அமைதியாக சென்றது.

"சரி! அது போகட்டும்! எப்படி என்னை கண்டு பிடித்தீர்கள்? நான் இங்கு அல்லது, அந்த கடையில் காப்பி சாப்பிடுவேன் என்று எப்படி உங்களுக்கு தெரிந்தது?" என்றார் நண்பர்.

"அது மிக எளிது! எல்லா மனிதர்களும், தான் செல்லும் இடத்தில் எல்லாம் தன் கர்ம வாசனையை விட்டு செல்கிறார்கள். கெட்ட கர்மா வாசனையை வாயு பகவான் பூமியிலிருந்து அழித்து விடுவார். ஆதலால், நல்ல வாசனை மட்டுமே தங்கி இருக்கும். அதிலிருந்து, தற்போது அந்த கர்மவாசனை உடையவர் எங்கிருக்கிறார் என எளிதாக கண்டு பிடிக்க முடியும்! தற்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்" என்று கூறி நிறுத்தினார்.

"உங்கள் பெயர் என்ன? ஏன் உங்கள் எண்ணை என் செல்லில் சேமிக்க முடியவில்லை?" என்றார் நண்பர்.

"பெயர் என்பது ஒரு முக்கியமான விஷயமா? பிலாசபியில் உடலுக்கு பெயர் முக்கியமா? நான் அழைக்கும் எண்ணை சேமிக்க முடியாது. அது உங்களுக்கு தேவையும் இல்லை. யாரிடமும் பற்று கூடாது. எனக்கு தேவை என்றால் உங்களை நானே தொடர்பு கொள்கிறேன். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!" என்றாள் அந்த பெண்மணி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

11 comments:

  1. இந்த கலி காலத்தில் இப்படியும் சில மர்மங்கள், ஆச்ச்ர்யங்கள், இது நிச்சயமாக சிலிர்ப்பூட்டும் அமானுஷ்ய அனுபவம் தான்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. ஆச்சர்யம் ஆக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏற்படும் போது ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.

    ReplyDelete
  5. குருநாதரின் அருளால் ஒரு முக்கிய பதிவு.
    மோட்ச தீப ஞானம் - துன்பங்களை நீக்கும்

    http://fireprem.blogspot.com/2024/10/blog-post.html?m=1

    ReplyDelete
  6. இது போன்ற அனுபவத்தையே அடியேன் விரும்புகிறேன்.படிக்கும் ஒவ்வொரு தருணமும் அழகான சுவாரஸ்யம் அடுத்த பாகத்தை படிக்க மனதில் ஆர்வமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நடந்த நிகழ்ச்சிகளை அதன் படியே தெரிவிப்பதே அன்றி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதுவது என் தொழில் அல்ல. எமக்கு தொழில் அகத்தியர் உத்தரவு! ஆகவே தாங்கள் விமர்சனத்தில் சற்றேனும் மரியாதையை கடை பிடிப்பது நல்லது. அடியேன் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

      Delete
  7. அருமையான பதிவு ஓம் அகத்தீசாய நம 🙏

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete