வணக்கம் அகத்தியர் அடியவர்களே
குருநாதர் அகத்தியர் பெருமான்... பெங்களூரு சத்சங்கத்தில் நவ தீபங்களை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களுக்கு எல்லாம் ஒரு பரிட்சையை வைத்திருக்கின்றார்.
வாக்குகளில் தெளிவாக விஷயங்களை கொடுத்திருந்தாலும் சிலருக்கு சந்தேகம் இருக்கின்றது. பூஜை செய்யும் இடத்தில் பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து விரித்து வைத்து அதன் மேலே வெற்றிலை பாக்குகள் வைத்து அதாவது 9 விளக்குகளுக்கு 9 செட் வெற்றிலை பாக்கு வைத்து அதன் மேலே நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை வைத்து அதன் மேலே ஒன்பது விளக்கு வைத்து இரட்டை திரி இட்டு விளக்கை ஏற்றி.... அந்த விளக்கில் பச்சைக் கற்பூரம் ஏலக்காய் லவங்கம் கலந்த பொடியினை இட்டு நவகிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை 108 முறை ஜெபம் செய்து வர வேண்டும்.
சிலர் பூஜை முடிந்த பிறகு அன்றாடம் வெற்றிலையையும் நவதானியங்களையும் என்ன செய்வது என்று கேட்டிருக்கின்றார்கள்
வெற்றிலையை நாம் தெய்வத்திற்கு பூக்களை பயன்படுத்த பிறகு எப்படி ஆற்றில் கொண்டு போய் இடுகின்றோமோ அதே போல் ஆற்றில் தூய்மையான முறையில் விட்டு விடுவது நலம்... மாற்றி மாற்றி பூஜைகள் செய்யும் பொழுது எடுத்து வைக்கும் நவதானியங்களை வாயில்லா ஜீவராசிகளுக்கு பறவைகளுக்கு விலங்குகளுக்கு அல்லது ஆற்றில் விட்டுவிடலாம்....
இதனைக் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது
குருநாதர் முதலில் இதை செய்து கொண்டே வாருங்கள் உங்களுக்கே போகப் போக புரியும் உங்களுக்கு தெரியும் என்று கூறி இருக்கின்றார் இதை முழு மனதோடு செய்யும்பொழுது அவரவர் மனதில் தோன்றுவதை செய்து கொள்ளலாம்
இதற்கான உதாரணமாக புகைப்படங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அன்னை லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நமஹ! அய்யனின் வருகையை இல்லத்தில் எதிர்நோக்கி இவ்வையகம் சிறந்திடவே
ReplyDeleteதங்கள் உத்தரவை தடையின்றி கடைபிடிக்க தங்களது ஆசிகளை வேண்டுகிறேன் அய்யனே!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteமிகவும் நன்றி. ஆறு இல்லாத இடத்தில் கோயில் குளத்தில் விடலாமா?
ReplyDeleteநன்றி.
👏👏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete