குருநாதர் உரைத்த புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 4
சனி தோஷம் நீங்க அனுமான் வழிபாடு ரகசியம்
அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே எவை என்றும் புரியாமல் மனிதன் தவித்து கொண்டிருக்கின்றான் அப்பனே
ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே பின் ராம அவதாரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே (கஷ்டங்கள் ) நெருங்காமல் இருக்க அப்பனே நிச்சயம் ராமனை அதாவது அறிந்தும் கூட.... அப்பனே எப்படி ஏது என்ன செய்வது என்று என்பதை எல்லாம் அறியாமல் அப்பனே பின் ராமன் சீதா தேவியும் திகைக்கின்ற பொழுது!!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் அனுமான் அப்பனே பின் அதாவது பின் சனி கிரகத்தின் அருகில் இருந்து அப்பனே அதன் கதிர்களை பெற்று வந்து பெற்று வந்து... அப்பனே நிச்சயம் ராமனையும் சீதா தேவியையும் காப்பாற்றினானப்பா!!!!
(சனீஸ்வரனால் எப்படிப்பட்ட சோதனைகள் எல்லாம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஏற்பட்டது என்பதை மகாராஷ்டிரா மாநிலம் நஷ்தான்பூர் சனி மகாராஜ் ஆலய வாக்கில் குருநாதர் உரைத்தது சித்தன் அருள் பதிவு எண் 1229 ல் வெளிவந்துள்ளது)
அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அனுமானுக்கு இன்னும் கூட அப்பனே.... சிரஞ்சீவியாகவே வாழ்ந்து வந்து அப்பனே நிச்சயம் அவனிடத்தில் சென்றால் கூட கதிர்கள் அதிகமாக இருக்கும் பொழுது அப்பனே மனிதர்களின் பிரச்சினைகள் தீருகின்றது என்பேன் அப்பனே!!!!
அப்பனே இதனால்தான் அப்பனே பின் அறிகின்ற பொழுதும் கூட அதாவது பின் ராமன் அவனின் கூட சனி கிரகம் தாக்குகின்ற பொழுது இவ்வாறெல்லாம்... அமையும் என்பதெல்லாம் இதனால் அப்பனே நிச்சயம் அங்கு சென்று (சனி கிரகத்திற்கு) கதிர்களைப் பெற்று அப்பனே நிச்சயம் பின் அருகிலே (ராமரோடும் சீதா தேவியோடும்) இருந்தான் ஹனுமான் என்பேன் அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட
இதனால் தான் அப்பனே சில சில பெரிய பெரிய பின் அதாவது அறிந்தும் கூட கஷ்டங்கள் வந்தாலும் நிச்சயம் அதை நிவர்த்தி செய்வதற்கான பின் அறிவுரைகள் அப்பனே பின் நிச்சயம் அனுமானிடம் இருந்தது என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எவ்வளவு மனிதர்களுக்கு இக்காலத்தில் நிச்சயம் அப்பனே குற்றங்கள் குறைகள் அப்பனே இருந்தால் இருந்தாலும் கூட அப்பனே சனீஸ்வரனின் (தோஷம்) கதிர்கள் அதிகமாக இருந்தால்... அப்பிரச்சனைக்கு அவனே நிச்சயம் அப்பனே பின் பிரச்சனையை கூட அப்பனே சுலபமாக தீர்த்து விடுவான் என்பேன் அப்பனே அவ் சக்தி அப்பனே சனி கிரகத்திற்கு உண்டு என்பேன் அப்பனே.
அப்பனே இதனால்தான் அப்பனே அனுமான் எவை என்று அறிய அறிய அதாவது சனி ஈஸ்வரனின் பின் நல்விதமாக கதிர்கள் பெற்று அப்பனே உள்ளே குவித்தான் அதாவது பக்கத்தில் இருந்தான் அப்பனே
இதனால் அப்பனே சனீஸ்வரனின் கதிர்கள் இருக்கும் வரையில் அதாவது யாரும் ஒன்றும் செய்ய இயலாத அப்பா... அப்படி நிச்சயம் இறப்பினும் அப்பனே பேரோடும் (புகழோடும்) வாழ்வார்கள் அப்பனே!!
அதனால் தான் அப்பனே வரலாறு ராமனையும் சீதாவையும் கூட பேசுகின்றது என்பேன் அப்பனே!!!
அடியவர்களுக்கு தற்போது குருநாதர் உரைத்த ரகசியங்கள் புரிந்திருக்கும்.
சனி கிரகத்தால் சில தோஷங்கள் ஏற்பட்டு அதனால் கஷ்டங்களை அனுபவிக்கும் மக்கள் குருநாதரிடம் ஜீவநாடி வாக்கு கேட்கும் பொழுது குருநாதர் அப்பனே அனுதினமும் அனுமன் இடத்திற்கு சென்று தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். என்றும் ஞாயிறு ராகு காலத்தில் வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டு வர வெற்றிகள் உண்டாகும் கஷ்டங்கள் குறையும் என்று பொதுவாக்காகவும் தனிநபர் வாக்குகள் ஆகவும் கூறி இருக்கின்றார்... சனியின் தாக்கங்கள் குறைவதற்கு அனுமான் வழிபாடு செய்வதற்கான ரகசியம் மற்றும் தார்பரியம் என்ன என்பதை இந்த வாக்கில் குருநாதர் விளக்கமாக கூறியுள்ளார்.
ராமருக்கும் சீதா அம்மாவிற்கும் சனி பகவானால் வரும் கஷ்டங்களை மாற்றுவதற்கு அனுமன் நேரடியாக சனி கிரகத்தின் இடத்திற்கு சென்று அங்கிருந்து கதிர்களை பெற்று வந்து... ராமரோடும் சீதா தேவியுடன் அகலாது இருந்து சனீஸ்வரனின் கதிர்வீச்சுகளை குவித்து அதனை பரவச் செய்ததன் மூலம் தோஷங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். சனிபகவானின் முழுக்கதிர்வீச்சுக்களை அனுமன் தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் சனீஸ்வரனால் ஏற்பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபட அனுமன் வழிபாடு செய்து அனுமனிடமிருந்து நாம் கதிர்வீச்சுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் ரகசியத்தை கூறியுள்ளார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete