​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 28 November 2024

சித்தன் அருள் - 1741 - அன்புடன் அகத்தியர் - ஏழை பக்தன் வீட்டில் குருநாதர் பாகம் 2



ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை  பணிந்து     செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!

அப்பனே பின் யான் என்ன சொல்ல??? அப்பனே!!!

யானே வந்துவிட்டேன் உன்னை தேடி அப்பனே!!!

நலங்களாகவே அப்பனே அனைத்தும் செய்து தருகின்றேன் அப்பனே!! மெது மெதுவாகவே!!!

இதனால் கவலை ஒன்றும் இல்லையப்பா!!!

அப்பனே எவை வந்தாலும் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே !!!

கவலையை விடு அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகளப்பா..

அவை இவை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அப்பனே ஏன் எதை என்று அறியாமலே அதனால் அப்பனே உங்களுக்கு பின் என்ன செய்ய வேண்டும்?? என்பதை எல்லாம் யாங்கள் சித்தர்கள் அறிவோம் அப்பனே 

செய்கின்றோம் ஆசிகள்!! ஆசிகளப்பா!!

அப்பனே பலமுறை அப்பனே பின் பார்த்து விட்டேன் அப்பனே நலன்களாகவே!!!

அப்பனே உந்தனுக்கு எவர் மூலம் எதை என்று செய்ய வேண்டும் ??யார் மூலம் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் செய்ய வைப்பேன் அப்பனே.. கவலை விடு அப்பனே 

இதனால் நீங்கள் கேட்டு பெறுவதை விட!!!! அப்பனே பின் கேட்காமலே பின் செய்வது தான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் நன்மைகளாகவே அப்பனே போகப்போக அப்பனே ஏற்பாடுகள் செய்வேன் அப்பனே கவலையை விடு!!

அப்பனே நல் விதமாகவே அப்பனே பின் தீபம் ஏற்றி அப்பனே நல்விதமாகவே அப்பனே சிறிது நேரம் பின் உங்கள் இல்லத்தில் அனைவரும் தியானங்கள் செய்யுங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் தேவி நல்விதமாகவே பின் உங்களுக்கு தேவையானதை கொடுப்பாள் என்பேன் அப்பனே!!

அப்பனே இதனால் உங்களை யான் அறிந்து விட்டேன் அப்பனே !!!!! உங்கள் மனதையும் ஆராய்ந்து விட்டேன் அப்பனே!!!

இதனால் அப்பனே நிச்சயம் யான் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே நலன்கள் ஆகவே!!!

அப்பனே 

சில கர்மாக்களையும் போக்கி!!.... அப்பனே 

போக்கியும் விட்டேன் அப்பனே!!

நல்விதமாகவே அப்பனே கொடுப்பேன் அப்பனே 

அப்பனே இதனால் அப்பனே பின் நிச்சயம் யான் இங்கே அதாவது.. இதை பின் அப்பனே பின் சுற்றி சுற்றி பல ஆலயங்கள் இங்கே நிச்சயம் அப்பனே பின் அதாவது பல ஆசிரமங்களை யானே அமைத்துள்ளேன் என்பேன் அப்பனே அதனால் இங்கே தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

உந்தனுக்கு என்ன தேவையோ?? அதை பின் தக்க சமயத்தில் யானே கொடுப்பேன் அப்பனே நிச்சயம் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்..லோபா முத்தரையுடன் ஆசிகள்... ஆசிகள் அப்பனே!!!

இதனால் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே....யான் உன் அருகிலேயே இருக்கின்றேன் நலன்களாகவே... உந்தனுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டுமோ!!!...

அதை யான் செய்கின்றேன்.. யார் மூலம் என்று அறிந்து!!!!

அப்பனே பின் அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் ஆசிகளப்பா!!!

குருநாதர் நல்விதமாக அவருக்கும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கினார் அதன் பிறகு அந்த அடியவர் தன் மனதில் உள்ள கேள்விகளை  குருநாதரிடம் கேட்ட பொழுது 

பக்தர் 

குருவே நமஸ்காரம்!!!!

நீங்கள் இந்த எளியவனின் இல்லம் தேடி வந்து ஆசிகள் தந்ததில் மகிழ்ச்சி!!!... எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இன்று தான் தீபாவளி... அந்த அளவிற்கு நாங்கள் மகிழ்ந்து போயிருக்கின்றோம்.. உங்களுக்கு கோடான கோடிகள் நன்றிகள் குருநாதா!!!

நான் உங்களுடைய வழிகாட்டுதல் படி பறவைகள் விலங்குகள் பசுக்கள் இவற்றிற்கு முடிந்த வரை என்னால் ஆனவரை சேவைகள் செய்து வருகின்றேன் அனுதினமும்... சில நேரங்களில் காய முற்ற நோய்வாய்ப்பட்ட உயிரினங்கள் அவற்றை காப்பாற்ற முயற்சிகள் செய்யும் பொழுது இறந்து விடுகின்றன... அவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வருந்துகின்றது குருவே!!!!

குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே இறைவன் அப்பனே  இவ்வுலகத்தில் ஒவ்வொரு உயிருக்கும் அப்பனே நிச்சயம் பின்.. இவ்வளவு ஆண்டுகள் தான் என வாழ வேண்டும் என்று விதி அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் உயிர் இறைவனுக்கு சொந்தம் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் அவைகளை உயிர் இருக்கும் வரை அவைகளை நிச்சயம் பேணி காத்தாலே... புண்ணியம் அப்பா... மீதி எல்லாம் இறைவனே பார்த்துக்கொள்வான் என்பேன் அப்பனே!!

பக்தர் 

குருவே நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.. சில பறவைகள் காட்டு விலங்குகள் வாகனத்தில் அடிபட்டோ இன்னும் பல நோய்வாய்ப்பட்டோ கையறு நிலையில் இருக்கின்றன அவற்றையெல்லாம்.... நான் நேசித்து சேவைகள் செய்கின்றேன்

எனக்கு நீங்கள் ஒரு சக்தியை தர வேண்டும்!! அப்படி முடியாமல் இருக்கும் விலங்குகள் படும் பாட்டை கண்டு என்னால் தாங்க முடியவில்லை !!

என் கைகளால் தொட்டு சிகிச்சை அளிக்கும் பொழுது அவை நல்ல குணம் உடனடியாக பெற வேண்டும் பிராணிகளுடைய நோய்கள் தீர வேண்டும் இந்த சக்தியை நீங்கள் எனக்கு வழங்குங்கள் 

குருநாதர் அகத்தியர் பெருமான் 

அப்பனே நிச்சயம் இன்னும் சில காலம் செல்லட்டும் அப்பனே.... யான் உந்தனுக்கு செய்வேன் அப்பனே.

பக்தர் 

குருவே நான் இருக்கும் இந்த கிராமத்தில் வசதிகள் குறைவு தொல்லைகளும் பிரச்சனைகளும் அதிகம். குறிப்பாக கோமாதாக்களை காப்பாற்றுவதற்கு அதிகம் போராடுவதாக இருக்கின்றது... ஏனென்றால் மற்ற மதத்தினரும் இங்கு இருக்கின்றார்கள் அவர்கள் ஒத்துழைப்பு தராமல் புரிந்து கொள்ளாமல் எதிராக நிற்கின்றார்கள்.. இதனால் சிறிய அளவில் அரசியலில் நான் நுழைந்து அதன் மூலம் கிடைக்கும் பதவியை வைத்து மேலும் நான் உத்வேகத்துடன் கோமாதாக்களை என்னால் காப்பாற்ற முடியும் அதற்கு தங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் 

அப்பனே நிச்சயம் என்னுடைய ஆசீர்வாதங்கள் உண்டு என்று சொல்லிவிட்டேன் அப்பனே உண்டு 

உந்தனுக்கு  அனைத்தும் செய்கின்றேன் என்றும் சொல்லி விட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே... இதையும் செய்வேன் யான். 

அப்பனே நிச்சயம் கவலைகள் இல்லை அறிந்தும் கூட

அப்பனே நிச்சயம் அப்பனே கார்த்திகை திங்களில் நிச்சயம் உந்தனுக்கு ஒரு மந்திரத்தை அப்பனே சொல்லிக் கொடுப்பேன்!! அதை செப்பு தகட்டில் கூட அப்பனே எழுதி நன் முறைகளாகவே உருவேற்றி நிச்சயம் அப்பனே நினைத்ததை அடைந்து விடுவாய் என்பேன் அப்பனே... அதனால் பொறுத்திடுக.

அது மட்டும் இல்லாமல் அனுதினமும் சுதர்சன மந்திரத்தை அப்பனே நிச்சயம் அப்பனே இல்லத்திலே தீபமேற்றி செப்பி கொண்டே வா.. அப்பனே நலன்களாகும் என்பேன் அப்பனே கவலையை விடு. 

அப்பனே கவலைகள் இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் யான் சொல்லியதை அதாவது இப்பொழுது மந்திரத்தை செப்பிக் கொண்டே வா அதாவது சுதர்சன மந்திரத்தை அப்பனே... 

நிச்சயம் கார்த்திகை திங்களில் அப்பனே நிச்சயம் செப்பு தகட்டில் கீறி அப்பனே நிச்சயம்... அறிந்தும் கூட அப்பனே 

பின் வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே. ஆசிகள் ஆசிகள். 

பக்தர் 

குருவே நன்றிகள்!!!

தன் மகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆசீர்வாதம் வேண்டும் 

குருநாதர் அகத்தியர் பெருமான்

அப்பனே நிச்சயம் நீ புண்ணிய காரியங்களை செய்கின்றாய் அல்லவா...அப் புண்ணியமே... அனைவரையும் கூட காக்கும் என்பேன் அப்பனே!!!

அந்த பக்தரின் சகோதரி மகள்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என அனைவரும் வந்திருந்தார்கள் குழந்தைகள் அனைவரும் குருநாதரை நமஸ்கரிக்க!!!!

அப்பனே அனைத்து குழந்தைகளுக்கும் பின் நல்லறிவை அப்பனே யான் நிச்சயம் கொடுத்திட்டேன் அப்பனே... நலன்கள் ஆகவே அப்பனே... யான் இங்கு வந்த பொழுதே அனைவருமே பார்த்து விட்டேன் அப்பனே

யான் இங்கு வந்து விட்டேன் அப்பனே பின் கொடுத்தும் விட்டேன்... அப்பனே!!!!

கவலையை விடுங்கள் நிச்சயம் அவரவர் பின் கல்வியிலும் கூட பின் நல்விதமாகவே தேர்ச்சி பெற்று... அப்பனே உயர் கல்வியையும் உயர் இடத்தையும் அடைவார்கள் என்பேன் அப்பனே ஆசிகள். 

பக்தரின் சகோதரி மகள்கள் இருவர் வந்திருந்தனர் அவர்களின் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது மற்றவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது 

அந்த சகோதரி மகள்களில் ஒரு பெண் குருவே எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றாள் எனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் சனாதான தர்மத்தை காப்பாற்ற... தைரியத்தோடும் வீரியத்தோடும் போராட வீர சிவாஜி போல் எனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கேட்டார் .

அம்மையே ஒன்றை சொல்லுகின்றேன்.. யான் இங்கு வரும்பொழுது உங்கள் அனைவரின் மனதையும் பார்த்துவிட்டேன்...... உங்களுக்கு தேவையானதை யான் கொடுப்பேன் அம்மையே. 

அதிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது அம்மையே.

கவலைகள் இல்லை.

மற்றொரு சகோதரி மகளுக்கு ஆண் குழந்தை உண்டு பெண் குழந்தை இல்லை 

அந்தப் பெண்மணியும் குருவே எனக்கு ஒரு பெண் வாரிசு வேண்டும் துர்கா காளி மாதாவை போல் அநியாய அக்கிரமங்களை எதிர்த்து போரிட வேண்டும்... நியாயத்தை தர்மத்தை அனைவருக்கும் போதிக்க வேண்டும் அதனால் துர்கா மாதாவின் ரூபத்தில் எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்டார்!!

அம்மையே... நான் முன்பே சொல்லிவிட்டேன் அனுதினமும் தேவிக்கு விளக்கேற்றி தியானங்கள் நன்முறையாக செய்து வா அனைத்தும் தேவி செய்து முடிப்பாள்.. யானும் அனைத்தும் உங்களுக்கு செய்து தருகின்றேன் எக் குறைகளும் இல்லை தாயே!!!

பக்தர் 

குருவே மாற்றுக் கருத்து கொண்ட மாற்று கலாச்சாரத்தைக் கொண்ட வேற்று மதத்தினர் இந்த கிராமத்தில் அதிக அளவு வசித்து வருகின்றனர் ஊரில் நியாயத்திற்காக தர்மத்திற்காக போராடுவதற்கு சரியான ஒத்துழைப்பு இல்லை அதனால் இந்த சேவையை செய்து வரும் நாங்கள் என்னுடைய நண்பர்கள் அனைவரும் அரசியலில் நுழைந்து அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஊருக்கு நல்லதும் தர்மத்தை கடைப்பிடிக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறோம் அதற்கு தங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் 

அப்பனே நிச்சயம் பக்குவங்கள் ஏற்பட வேண்டும்!!

அதாவது பின் பயப்படுதல் வேண்டாம் என்பேன். 

அப்பனே நுழைந்தால் பின் எவை என்று அறிய அறிய அப்பனே நுழைந்து விட்டால் நிச்சயம் தெரியும் அப்பா.. இதனால் அப்பனே முயன்றால் தான் கஷ்டங்கள் பட்டால் தான் அப்பனே பின் நிச்சயம் எழுந்து அப்பனே மக்களுக்கு சேவையாற்ற முடியும் அப்பா. 

அதனால் அப்பனே நிச்சயம் தான் தம் விருப்பத்திற்கு ஏற்றவாறே நுழையுங்கள் அனுபவமும் கிடைக்கும் அதன் மூலம் வெற்றியும் கிடைக்கும் என்னுடைய ஆசிகளும் உண்டு.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் கணபதிக்கு அனுதினமும் ஒரு குடம் நீரை ஊற்றி நவ முறை வலம் வந்து வணங்கி கொண்டு வா!!!! அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அப்பனே!!!

பக்தரின் நண்பர் ஒருவர் குருநாதர் வழியில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் குருநாதரின் சீடனாக இருந்து வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் என்று விருப்பத்துடன் வேண்டுகோள் விடுத்தார் 

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே கவலை விடு அப்பனே நிச்சயம் நீ என்னிடத்தில் வந்து விட்டாய் அல்லவா!!!!

என்னிடத்தில் வந்து விட்டாலே யான் பார்த்துக் கொள்வேன் அப்பனே நலன்களாகவே ஆசிகள்.

அப்பனே இங்கு உள்ள அனைவரின் விதியிலும் சில சில வினைகள் உள்ளதப்பா... அவற்றையெல்லாம் யானே மாற்றி தருகின்றேன் அப்பனே நல்விதமாகவே.

னைவருக்கும் என்னுடைய ஆசிகள் ஆசிகளப்பா!!!

என்று ஆசீர்வாதங்கள் தந்தருளினார் அதன் பிறகு... அவர்கள் வீட்டில் வைத்து திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கும் உடன் வந்த அடியவர்கள் அனைவருக்கும் பாசத்துடன் அந்த குடும்பம் உணவை பரிமாறி மகிழ்ந்தது. 

அந்த குடும்பம் காட்டிய அன்பை கண்டு நெகிழ்ந்த திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் அந்த குடும்பத்திற்கு குருநாதர் சார்பில் குருநாதர் அன்பாக அன்பு பரிசாக அவர் செய்து வரும் சேவைக்காக மற்றும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக.......நிதி உதவியும் வழங்கினார்.. அவர் கொண்டு வந்திருந்த புது வஸ்திரத்தையும் இனிப்பையும்  அவருக்கு அளித்து விட்டார்...

அதன் பிறகு உன்ன நெடுநாளாக அவர் குருநாதரிடம் வேண்டிக் கொண்டிருந்த சிவாலயம்..... கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக குருநாதரிடம் வேண்டி கேட்டுக்கொண்ட பிரார்த்தனை... இவை அனைத்தும் இன்று நிறைவேறப் போகின்றது என்ற மகிழ்ச்சியில் அவர்

அருகில் இருக்கும் ஒரு சிவாலயத்திற்கு திரு ஜானகிராமன் ஐயாவை அழைத்துச் சென்றார்.

அந்த ஆலயம் தொன்மையை  குறித்து அந்த கிராமம் அறிந்திருக்கவில்லை.... அதனைப் பற்றி அறிவதற்கு குருநாதர் வருகைக்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்த காத்திருப்பு..... அந்த ஆலயத்தின் ரகசியத்தை பற்றி குருநாதர் உரைத்த வாக்கு... கிராம மக்கள் அதை கேட்டு நெகிழ்ந்து போன ஒரு நிகழ்ச்சி!!!

 அந்த ஆலயத்தின் தொண்மை ஆலயத்தில் அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் மகிமை....... குருநாதர் உரைத்த வாக்குகளால் கிராம மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்து ஓம் நமசிவாய !!! ஜெய் ஸ்ரீ ராம்!!!!  அகஸ்திய குருவே சரணம் சரணம் என வெளிப்பட்ட பக்தி உணர்ச்சி பெருக்கு ..... பாகம் 3 தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. அந்த பக்தருக்கு முதல் பாகத்தை படித்த சில அகத்தியர் பக்தர்கள் அவருக்கு பசுக்களை மீட்பதற்கு உதவுவதற்கு அவருடைய தொடர்பு எண் மற்றும் வங்கி விவரங்கள் கேட்டிருந்தார்கள்

    Ravindra Gawande, Central bank of India, Branch Hiwarkhed (Ruprao) Account.No.3107606486.

    Ifsc Code:-CBIN0281379.

    தொடர்பு எண் பேடிஎம் எண் 9766874873.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. Nandri ayya, enna mudintha siriya uthavihai ivarukku seiyya vaaipu kudutha agathiyar ayyavuku nadri.... ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

    Ravindra Gawande,
    Central bank of India,
    Branch Hiwarkhed(Ruprao)
    Account.No.3107606486.
    Ifsc Code :- CBINO281379.
    Mob.9766874873.

    ReplyDelete
  5. கந்தா போற்றி!!!! அகத்தீசா போற்றி!!!

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete