​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 26 November 2024

சித்தன் அருள் - 1738 - அன்புடன் அகத்தியர் - திரு ரவீந்திர காவண்டே!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ராம் டெக் கோட்டை கோயிலில் குருநாதர் வாக்குகள் தந்த பின்.... அப்பனே என் ஏழை பக்தன் ஒருவன் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றான்... அவந்தன் இல்லத்திற்கு செல்க என்று குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் மத்திய பிரதேசத்தில் எல்லையில் அகோலா மாவட்டம் ஹிவர்கேட்..  கிராமத்தில் வசித்து வரும் திரு ரவீந்திர காவண்டே.... என்னும் பக்தர்

இவரது இல்லத்திற்கு தான் குருநாதர் உத்தரவிட்டார் செல்வதற்கு. 

அகத்தியர் அடியவர்கள் சித்தன் அருள் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இவரை பற்றி தெரியும். 

ஒரு ஏழை விவசாயியான இவர்... மகாராஷ்டிராவில் பசு கொலைக்கு எதிராக பசுவதைகளுக்கு எதிராக உறுதியாக நின்று போராடுபவர்...

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்களை தன்னந்தனியாக நின்று மீட்டு காத்தவர். 

இதனால்

வேற்று மதத்தினரால் பல எதிர்ப்புகளையும் கொலை முயற்சிகளையும் அடிதடி சண்டைகள் என இவரை கொல்ல முயற்சிகள் நடந்தாலும் அதை எல்லாம் குருநாதருடைய திருவருளால் காப்பாற்றப்பட்டு தனது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றார். 



தன்னந்தனியாக இரவில் இறைச்சிக்காக நெடுஞ்சாலையில் பசுக்களை கடத்திச் செல்லும் பொழுது கடத்துபவர்கள் துப்பாக்கி வாள் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொண்டு செல்லும் பொழுது தன்னந்தனியாக வண்டிகளை வழி மறித்து பசுக்களை காப்பாற்றுபவர்.

இவர் மீது குருநாதருக்கு தனிப்பட்ட பாசம் எப்பொழுதும் உண்டு.. எப்போதாவது தொலைபேசி மூலமும் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு குருநாதருடைய வாக்குகள் இவருக்கு கிடைக்கும்!

 ஓரிருமுறை திரு ஜானகிராமன் ஐயாவை திருவண்ணாமலையிலும் காசியிலும் வைத்து சந்தித்தும் குருநாதரிடம் நேரடியாக வாக்குகளும் வாங்கி இருக்கின்றார். 

இவருக்கு சொந்தமாக வீடு இல்லை...

ஒரு ஏழை குடிசை தான் இவருக்கு சொந்தமாக உள்ளது.

 முன்னோர்களின் சிறிய நிலத்தில் சிறிதளவு விவசாயம் செய்து கொண்டு அனு தினமும் பறவைகள் விலங்குகள் என சகல ஜீவராசிகளுக்கும் நீர் ஆதாரங்கள் உணவுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் வழங்கி வருவார். 

உயர் அழுத்த நீர் குழாய்களில் அழுத்தம் காரணமாக வெளியேற்றப்படும் நீரை கூட சிறிது சிறிதாக சேகரித்து... பெரிய பெரிய நீர் குழாய் செல்லும் பாதைகளில் நீர் வெளியேற்றப்படும் இடங்களில் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்து பறவைகள் விலங்குகள் என நீர் அருந்துவதற்கு ஆதாரமாக நிறைய தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்தியும் உள்ளார்.

கொரோனா கால சமயத்தில்... சில விஐபிகளுக்கு கிடைக்கும் முன்னுரிமை சலுகைகளை குறித்து குருநாதரிடம் இவர் கேள்விகளை கேட்ட பொழுது குருநாதர்

அப்பனே அவர்கள் எல்லாம் முன் ஜெனனமதில் அதிகப்படியான நீர் தானங்களை அதாவது ஏரி குளம் வாய்க்கால்கள் என நீர் நிலைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு சகல ஜீவராசிகளுக்கும் பயன்பெறுமாறு ஏற்படுத்தி சேவை செய்து ஏழை பெண்களுக்கு திருமண உதவி ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்றவை செய்து புண்ணியத்தை அதிகப்படியாக சம்பாதித்துக் கொண்டவர்கள் தான் இறைவன் ஆசிப் படி அவர்கள் விரும்பும் பிரபலமாக!!!

( உதாரணத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உயர் பதவியை வகிக்கும் அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் திரை நட்சத்திரங்கள் என சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களாக பிறப்பெடுக்கின்றார்கள்.

அவர்கள் செய்த புண்ணியம் தான் இப்பிறப்பில் அவர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றது அப்பனே இதற்காகத்தான் அப்பனே பின் மனிதர்களுக்கு சொல்கின்றோம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள்!!! புண்ணியங்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்று. 

அப்பனே நீயும் சரியான கேள்வியை கேட்டாய் நீயும் இது போன்று பல சேவைகளை புண்ணியங்களை சம்பாதித்து வைத்திருக்கின்றாய்.. உந்தனக்கும் இது போன்ற பிறப்பும் நீ விரும்பினால் பிறக்கலாம்.

 உந்தனுக்கு கடைநாளில் இறைவன் தரிசனமும் கிடைக்கும்... இறைவனை உன்னிடத்தில் கேட்பான் அடுத்த பிறவி வேண்டுமா? எத்தகைய பிறவி வேண்டும் என்று அப்படி பிறவி வேண்டுமென்றால் உந்தன் விருப்பப்படியே ஆகட்டும் என்று இறைவனே உன்னிடத்தில் கேட்பான்!!!... மோட்சம் வேண்டுமென்றாலும் அதையும் தந்து விடுவான். இறைவன் உந்தனக்கு நல் ஆசிகள் தந்து விடுவான் என்று... வாக்குகள் உரைத்திருந்தார். 

பசுக்களை காப்பாற்றுவதற்காக இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் சிறைச்சாலைக்கும் சென்று இருக்கின்றார் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சிறையில் இருந்தார் இவர் .

இவருக்காக குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது அப்பனே எதிராளிகளின் பகைமை இவனை தாக்காமல் இருப்பதற்காகவே யாங்களே இவனை சிறையில் வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம்.

 இவன் அருகிலேயே கிருஷ்ணனும் கருணை சித்தன் ஆன இயேசு நாதனும் இருக்கின்றார்கள். 

உங்களுக்குத்தான் அது சிறை!!

 ஆனால் யாங்கள் உள்ளே அவனைப் பாதுகாப்பாக வைத்துள்ளோம். இவை அனைத்தும் எங்களுடைய திட்டப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது அவனை பாதுகாப்பதற்காகவே சிறையில் வைத்துள்ளோம்!!!

அவன் எப்பொழுது வெளியே வர வேண்டுமோ? அப்பொழுது வெளியே வந்து விடுவான் நீங்கள் கவலை அடைய தேவை இல்லை !! அவந்தனை யாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று 

  குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

 அதன் பிறகு அவர் சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்து குருநாதருடைய திருவருளால் அவருடைய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றார்.

இப்படி இறைச்சிக்காக பசுக்கொலைகளை செய்பவர்களை எதிர்த்து பசுக்களை காப்பாற்றி அவரது கிராமத்தில் இருந்து இடது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அக்கோட் கோ ரக்சன் எனும் கோசலைக்கு அனுப்பி வைத்து பசுக்களை பராமரிப்பு செய்து வருகின்றார்... இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்களை மீட்டெடுத்து கோசலையில் வைத்து பராமரிப்பு சேவையை செய்து வருகின்றார்.

கடந்த ஆண்டு கடத்திச் செல்லும் பசுக்களை காப்பாற்ற சென்ற பொழுது அவரை நேரடியாக தாக்கிக் கொலை செய்ய முயற்சிகள் நடந்த போது குருநாதர் அவரை நேரடியாக சென்று காப்பாற்றினார்.

அதற்கு பிறகு குருநாதர் அவருக்கு கூறிய வாக்கில் அப்பனே யான் உன் அருகிலே தான் இருக்கின்றேன் உன்னை காப்பாற்றிக் கொண்டே தான் வருகின்றேன்.. என்னுடன் எனது சீடன் ஆன முஹம்மது நபியும் உன் உடனேயே இருக்கின்றான்.. அவந்தனுடைய ஆசிர்வாதமும் உந்தனுக்கு எப்பொழுதும் உண்டு.

நபி சொல்கின்றானப்பா.. யான் கருணையை காட்டச் சொல்லி தான் வழிகாட்டினேன்!!!

 ஆனால் மனிதர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகின்றார்கள் என்று நபியும் வருத்தத்தில் இருக்கின்றானப்பா!!

அவந்தனும் உன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா....

வேற்று மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களில் அவந்தனுக்கு உடன்பாடு இல்லை என்றும் 

நீ எக்குறைகளும் கொள்ளாதே!!! அவந்தனும் உன்னை பாதுகாப்பான்!!!

நீ கருணையோடு பசுக்களை காப்பாற்றி வருவது சித்தர்கள் யாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!! என்றும் வாக்குகள் தந்திருந்தார்!!!!

மனிதர்களாகிய நாம் செய்யும் புண்ணிய செயல்களில் தான் சித்தர்கள் யாங்கள்  திருப்தி அடைகின்றோம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் நடந்தது.

அதாவது கடந்த வருடம்

மார்கழி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரம் குருபூஜை சிறப்பாக ஒரு முறை கொண்டாட குருநாதருக்கு சாற்றி வழிபாடு செய்ய ஒரு முறை இவர் துளசி மாலை ஏற்பாடு செய்ய இவர் நினைத்தபடி அதை செய்ய முடியாமல் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை செய்திருப்பார் போலிருக்கின்றது.... அதாவது அவரது மனைவியிடம் குருநாதருக்கு பூஜையை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் அதனால் அந்த வேலை செய் இந்த வேலை செய்!! அப்படி செய்!! இப்படி செய் !! என்று மாலை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருப்பார் போலிருக்கிறது... அதை குருநாதரும் அவரது வீட்டிற்கு சென்று அதை பார்த்து இருக்கின்றார். 

குருபூஜை சிறப்பாக வீட்டில் அவர் செய்திருக்கின்றார்.

அதன் பிறகு குருநாதர் சூரத் நகரில் இருக்கும் காலபைரவர் ஆலயத்திற்கு செல்ல உத்தரவிட திரு ஜானகிராமன் ஐயாவும் ஆலயத்திற்கு வந்தார் அதன் பிறகு ஆலயத்தில் வைத்து குஜராத்தில் உள்ள

அகத்தியர் பக்தர்களுக்கு சத்சங்கம் நடந்தது.

சூரத்தில் சத்சங்கம் நடப்பதை அறிந்த இவர் உடனடியாக ரயில் ஏறி குருவின் ஆசிர்வாதம் கேட்பதற்காக வந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டார். 

இவரது முறை வரும்பொழுது குருநாதர்!!

 அப்பனே !!

உன்னிடம் யான் மாலையை கேட்டேனா???

என்று கேள்வியுடன் குருநாதர் ஆரம்பித்தார். 

அவரும் குழம்பி எப்பொழுது  குருநாதர் எந்த ?மாலையை குறித்து இப்பொழுது பேசுகின்றார் என்று தயங்கி நிற்க !!!!

குருநாதர் மீண்டும் அப்பனே!!!!...... எந்தனுக்கு குரு பூஜை செய்ய வேண்டும் என்று நீ உன் வீட்டில் நடந்து கொண்டதை இல்லத்தாளுடன் விவாதம் செய்ததை யான் பார்த்தேன். அப்பனே!!

யான் உன்னிடம் கேட்டேனா??? அப்பா எந்தனுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய் என்று!!! அப்பனே

 இறந்தவனுக்கு தானப்பா மாலையும் பூக்களும்!!!!

உயிரோடு சுற்றி கொண்டு இருக்கும் எந்தனக்கு எதற்கப்பா??? மாலை!!!... எங்களுக்கு உடல் மட்டும் தான் இல்லை..... அப்படியே சூட்சமமாக உயிரோட்டமாகவே சுற்றி கொண்டு இருக்கின்றோம் அப்பனே

அப்பனே எந்தனக்கு அன்பு மட்டுமே போதுமானது!!!... மாலைகளோ பூஜைகளோ அபிஷேகங்களோ!!!  எந்தனக்கு தேவையில்லை!!!

யாங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.. அன்பு ஒன்று மட்டும் போதுமானது அப்பனே...

உங்களை புண்ணியங்கள் செய்யச் சொல்லி அதன் மூலம் உங்கள் பிறவிக் கடனை தீர்ப்பதற்கே யாங்கள் மனிதர்களுக்கு உதவி செய்கின்றோம். அப்பனே!!!

அன்பை ஒன்றை மட்டும் செலுத்து !!!

அது மட்டும்  போதும் அப்பனே!!!

நீ செய்து வரும் சேவைகளே ஜீவகாருண்யமே எங்களுக்கு போதுமப்பா!!!... 

எவன் ஒருவன் எதையும் எதிர்பார்க்காமல் ஜீவகாருண்யத்தோடு நற்செயல்கள் செய்து வருகின்றானோ.. அவந்தன் அருகில் யாங்கள் சித்தர்கள் இருப்போம். அவந்தனக்கு எங்களுடைய ஆசிகள் எப்பொழுதும் உண்டப்பா!!!

நீ பசுக்களுக்கு செய்து வரும் சேவையே எங்களுக்கு பெரிதப்பா !!!

நீ செய்யும் பூஜையும் புனஸ்காரங்களோ பெரிதில்லை அப்பனே.. என்று செல்லமாக அவரிடம் குருநாதர் கடிந்தும் கொண்டார்!!!

சேவை செய்வது மட்டும்தான் வேலை இவருக்கு இவருடைய நிலத்தில் சிறிதாக செய்து வரும் விவசாயமும் அதன் மூலம் வீட்டு உணவு தேவையை சிறிதளவு நிவர்த்தி செய்ய முடிகின்றது. 

 இவருடைய துணைவியார் ஒரு மகள் இருக்கின்றார்கள். இவருடைய துணைவியார் ஒரு சிறிய தனியார் நர்சரி பள்ளியில் குழந்தைகளுக்கு ஒரு குறைந்த சிறிய சம்பளத்தில்  ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகின்றார்.

மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள். 

அனுதினமும் பறவைகளுக்கு விலங்குகளுக்கு பசுக்களுக்கு உணவு சேவை நீர் சேவை மருத்துவ சேவை என இவர் செய்து வருவதை அறிந்து வட இந்தியாவில் இருக்கும் இரு அகத்திய பக்தர்கள் இவருடைய சேவையை அறிந்து தங்களால் முடிந்த சிறிய உதவியை மாதாமாதம் இவருக்கு அனுப்பி கொடுத்து சேவைக்கு உதவி வருகின்றனர்.

இப்படிப்பட்ட இந்த பக்தன் வீட்டிற்கு தான் குருநாதர் ஜீவ நாடியை கொண்டு செல்ல உத்தரவிட்டார். 

அதன்படி அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மற்றும் அகத்தியர் அடியவர் இருவரும் நாக்பூர் ராம் டெக் ஆலயத்தில் இருந்து அவரது ஊருக்கு சென்றனர்... கிட்டத்தட்ட ஆறு மணி நேர சாலை வழி பயணம்.

அந்த கிராமத்திற்கு சென்ற பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து தன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன்  அழைப்புச் சென்றார்.

அவரது வீட்டில் குருநாதர் வருவதை அறிந்த அவர் பக்கத்து கிராமத்தில் இருந்து இருக்கும் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் மகள்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். 

வீட்டு வாசலில் வைத்து குருநாதருக்கு ஆரத்தி எடுத்து சுவடி வரும் மைந்தனுக்கு பாத பூஜை செய்து அழைத்துச் செல்ல முன் வர !!!திரு ஜானகிராமன் ஐயா மறுத்துவிட்டார்.

திரு ஜானகிராமன் அய்யா அவர்கள்

  நான் ஒரு சாதாரணமானவன்... ஏதோ குருநாதர் இட்ட கட்டளையை நான் செய்து கொண்டிருக்கின்றேன்!

 நீங்கள் என்னை விட பெரியவர் அதனால் என் காலில் நீங்கள் பூஜை செய்யக்கூடாது என்று எவ்வளவோ மறுத்துவிட்டார்... 

ஆனாலும் அவரும் அவரது குடும்பமும் இது மராத்திய கலாச்சாரம்!!

எங்கள் வீட்டிற்கு குருநாதர் வந்திருக்கின்றார் குருநாதருடைய மைந்தன் நீங்கள்!!!.... தயவு செய்து இந்த மரியாதையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தி கால்களில் ஜலம் ஊற்றி மஞ்சள் குங்குமம் சாற்றி இன் முகத்தோடு குருநாதரை உள்ளே வரவேற்று பூஜை அறையில் ஜீவநாடி பெட்டகத்தை வைத்து மனதார பூஜை ஆரத்தி செய்து வழிபாடு செய்தனர். 

அவர்கள் வீட்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளுமே இல்லை 

மேலே கூரைக்கு பதிலாக பிளாஸ்டிக் சாக்கு பைகளால் மூங்கிலில் இணைத்து கட்டப்பட்ட கூரை. 

வீட்டில் தனியாக அறை என்று எதுவும் இல்லை ஒரு சிறிய அறை அந்த அறைக்குள்ளே சமையல் கட்டு பூஜை அறை மற்றும் படுக்கை அறை என ஒரு சிறிய நான்கு சுவருக்கு நடுவில் அப்படியே இருக்கின்றது. 

துணிமணிகள் வைப்பதற்கு கூட அலமாரிகள் என்று எதுவும் இல்லை... மிக எளிமையான எளிமையான குடும்பம் மற்றும் வீடு.

மழைக்காலங்களில் நீர் கூரை சாக்குகளின் வழியாக உள்ளே இறங்கி விடும். 

இதையெல்லாம் பார்த்த

திரு ஜானகிராமன் அய்யா பார்த்தவுடன் நெகிழ்ந்துவிட்டார்!!!...

ஏனென்றால் திரு ஜானகிராமன் அய்யாவிற்கு நிறைய பேர் ஜீவநாடி படிப்பதற்கு போனில் தொடர்பு கொள்வார்கள் எங்களுக்கெல்லாம் படிக்க மாட்டீர்களா???? எங்கள் ஊருக்கெல்லாம் வர மாட்டீர்களா???.... ஏன் எங்கள் ஊரில் சத்சங்கம் நடத்த முடியாதா????

வசதி படைத்தவர்களுக்கு மட்டும் படிப்பீர்களா???.... என்றெல்லாம் குதர்க்கமாகவும் பேசுவார்கள்...

இதையெல்லாம் கேட்கும் பொழுது திரு ஜானகிராமன் ஐயாவும் சில சமயங்களில் நொந்து கொள்வார்!!!.... குருநாதர் அங்கு செல்!! இங்கு செல்!! என்று உத்தரவு தரும் பொழுது ஊன் உறக்கமின்றி ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருப்பார்...

 ராம் டெக் ஆலயத்தில் குருநாதர் குமரி முதல் இமயம் வரை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்... மனித குலம் கஷ்டங்களில் இருந்து மீண்டு வர கர்மா பாவங்களை அகற்றி நல்வாழ்வு வாழ மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் எப்படி புண்ணியங்களை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு திருத்தலம் திருத்தலமாக அலைந்து திரிந்து குருநாதரின் வாக்குகளை இந்த உலக நன்மைக்காக தன்னுடைய சுய வாழ்க்கையை கூட பாராமல் சுற்றித் தெரிந்து கொண்டிருக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை நிலைமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் என்ன சொல்கின்றாரோ? எங்கு செல்ல செல்கின்றாரோ அங்கு மட்டும் தான் செல்வார்.

 யாருக்கு ஜீவநாடி வாக்கு படிக்க வேண்டுமோ அதை குருநாதர் தான் முடிவு செய்து சொல்வார்!! அதன்படி தான் திரு ஜானகிராமன் ஐயா நடப்பார். 

ஆனால் மனிதர்கள் சில சமயங்களில் இப்படி பேசுவதை கேட்டு குறிப்பாக இந்த யாத்திரைக்கு  ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு சிலர் ஃபோனில் தொடர்பு கொண்ட ஒரு விதமாக பேச !!.......

திரு ஜானகிராமன் ஐயாவும் குருநாதரிடம் என்னப்பா?இது??

 இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று முறையிட!!!

அப்பனே யாருக்கு?? எந்த நேரத்தில் வாக்கு சொல்ல வேண்டும்? என்று எந்தனுக்கு தெரியும்... 

மகனே நீ ஒன்றும் கவலைப்படாதே!!!

 உன்னையும் யாரும் கேள்விகள் கேட்பதற்கு உரிமை இல்லை......

யாருக்கு வாக்குகள் தர வேண்டும் என்பதை யான் தான் முடிவு செய்ய வேண்டும்!!!...

 அனைவருக்குமே எந்தன் வாக்குகள் உண்டு!!!

எவை? எப்பொழுது? உரைக்க வேண்டும் என்பதை யான் தான் தீர்மானிப்பேன்!!!அப்பனே!!!

உண்மையான அன்பும் பக்தியும் புண்ணியமும் இருந்தால்...... யாரும் என்னை தேடி வர தேவையில்லை!!!!

 யானே இல்லம் தேடி சென்று வாக்குகள் தருவேன்....

பணத்தாலோ அதிகாரத்தாலோ எந்தன்  வாக்குகள் கிடைக்காது !!! 

ஒரு ஏழை பக்தன் என்பவன் எப்படி இருப்பான்? எப்படி வாழ்வான்?  என்பதை  விரைவில் அனைவருக்கும் காட்டுவேன்!!!

 நீ கவலைப்படாமல் பொறுத்திரு!!! என்று ஜானகிராமன் ஐயாவிற்கு குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

இதன் பிறகு ஒரு வாரத்திலேயே இவருடைய வீட்டிற்கு குருநாதர் செல்ல சொல்லி உத்தரவு தந்து அங்கு செல்ல வைத்தது மிகவும் அற்புத நிகழ்வாக இருந்தது. 

அந்த பக்தரும் அவருடைய குடும்பத்தினரும் ஜீவநாடிக்கு மலர்கள் தூவி வணங்கி தீபாராதனை செய்து பூஜையை செய்த பிறகு அவருக்கும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குகள் தந்தருளினார்!!

குருநாதர் ஏழை பக்தன் திரு ரவீந்திர காவண்டே வீட்டில் உரைத்த வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத  திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment