​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 17 November 2024

சித்தன் அருள் - 1731 - கலந்துரையாடலின் முன்னுரை!


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அனைவருக்குமே எமது ஆசிகளப்பா! அப்பனே! சில சில வழிகளிலும் கூட முன்வினைகளாலும் (அனைவருக்கும்) சில விஷயங்கள், ஆனாலும் அவற்றை எல்லாம், எமது ஆசிகளாலும், அருளாலும், அகற்றிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே! இதனால் ஏது குறை அப்பனே! ஆனாலும் சிறிய சிறிய குறைகளை எல்லாம் பெரிது படுத்தக் கூடாதப்பா. ஏன் என்றால், மனிதன் என்றாலே, பெரும் குறையப்பா! அக்குறையை எப்படி கடக்க வேண்டும், எப்படி நீக்க வேண்டும் என்பதை சித்தர்கள் யாங்களே அறிவோம். இதனால் அப்பனே, குறைகள் இல்லை. அப்பனே! நிச்சயம் சொல்லிக்கொண்டேதான் வருகின்றேன்! உடம்பை பெற்றுவிட்டால், பின் கஷ்டத்தை நிச்சயம் அனுபவிக்கத்தான் வேண்டும்! இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்களை ரகசியமாக சொல்லும் பொழுது, கர்மா அண்டாதப்பா! இன்னும் சொல்வேன் அப்பனே! பொறுத்திருந்தால் என் மைந்தர்களுக்கும் கூட.

மனிதன் திருந்துகிற பாடில்லையப்பா! தன் சுய நினைவை இழந்து மாயவலையில் சிக்கி தவிக்கின்றானப்பா! அதி விரைவாகவே முன்னேற்றம் காணவேண்டும் என்பதெல்லாம் மனிதனின் அவா! இருந்தாலும் அப்பனே மனிதன் தாவ முடியாதப்பா, ஏன் என்றால், இறைவன், ஏன் எதற்கு என்று சோதிப்பானப்பா! சோதித்து, சோதித்து நிச்சயம் கொடுத்தால் தான் கடை வரையில் இருக்குமப்பா. ஆனாலும் அப்பனே! மனிதனோ அனைத்தும் உடனடியாக கிடைத்திட வேண்டும் என்று நிச்சயம் சில சூட்சிகளுக்கு சென்று விடுகின்றானப்பா! ஆனாலும் அப்பனே! அதுதான் மிகப்பெரிய தவறு அப்பா! இறைவன் கோபம் கொள்கின்றான், நாம் தானே படைத்தோம், இவன் இப்படி செய்கின்றானே என்று! இறைவன் கோபப்படுகின்ற பொழுது, அது அனைவருக்கும் சாபமாக போய் விடுகின்றது. ஆனாலும் அவ் சூழ்ச்சிக்கள் செய்கின்ற பொழுது முதலில் நன்றாகத்தான் இருக்குமப்பா. நன் முறைகளாக சந்தோஷங்களாகத்தான் இருக்குமப்பா! ஆனாலும், போகப்போக கீழே விழுந்து விடுமப்பா! பின்னர் இறைவனிடத்தில் சென்றாலும் ஒன்றும் நடக்காதப்பா! 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே! கலியுகத்தில் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான் அப்பனே! மனிதன் தீய சக்தியைத்தான் நம்புகிறான். மனிதன் இறை சக்தியை நம்புவதில்லை. அதனால்தான் நிச்சயம் அழிவுகள் வருமப்பா. இறைவன் பலம் என்று ஒன்று இருக்கிறது, ஆனால் நிச்சயம் அதை மறந்துவிட்டான் அப்பனே!  பக்திக்குள் பொய்யாக நுழைந்து வாழும் மனிதன், இனி வரும் காலங்களில் தெரிவிக்கின்றேன் அப்பனே!

கலியுகத்தில் தெஹிய சக்திக்குள் தான் மனிதன் நுழைவான். தீய சக்திகள்தான் பலனை தரும் என்று நினைத்துவிட்டான், அப்பனே! அதில் மேல் நோக்கி சென்றால் ஒரு வருடம், அல்லது இரண்டு வருடம், அது கடந்தால் கீழ் நோக்கி சென்று விடுவான் அப்பனே! கஷ்டங்கள் தொடர, மீண்டும் இறைவனிடத்தில் செல்வான் அப்பனே! பல பரிகாரங்கள் செய்வான் அப்பனே! ஆயினும் ஒன்றும் நடக்கப் போவதில்லை! மறுபடியும் இறைவன் இல்லை என்று சொல்லுவான். ஆனால் முதலில் அவன் என்னென்ன இடத்திற்கு சென்றான், என்னென்ன செய்தான் என்று சிந்திக்க மாட்டானப்பா! இதனால், மூளையும் அவனுக்கு மங்கி விடும் என்பேன் அப்பனே! கலியுகத்தில் மனிதனுக்கு, அறிவுகள் வளராதப்பா!

அப்பனே! ஒரு தீய கோள் வந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் என்னை தவிர யாரும் உணரவில்லை அப்பா! அது மேலும், மேலும் கீழே வரும் பொழுது, மனிதன் மூளையை பாதித்து, சிந்திக்கவே மாட்டானப்பா! ஒரு ஆடு சென்றால், மற்ற ஆடுகள் செல்வது போல், ஒருவன் செய்வதையே அனைவரும் செய்வார்கள். அப்பனே! அந்த கோள் நெருங்க நெருங்க மனிதனின் அறிவு செயல்படாது அப்பனே. அப்பனே! இது கலியுகம், முற்றிக்கொண்டே வருகின்றது. இதனால், தீமைதான் நடக்க வேண்டும் என்பது கட்டளை என்பேன். எப்படி நல்லது நடக்கும், கூறுங்கள் அப்பனே! நாங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே. அக்கோள் இறங்கி வந்தாலே, நிச்சயம் மனிதனால் வாழ முடியாதப்பா! 

பகுதிக்குள் நுழைந்தால், சோதனைகள் அதிகமாகும், ஆனால் அவன் பரம்பரை நன்கு வாழும். தீய சக்திக்குள் நுழைந்தால் பரம்பரையும் அழிந்து விடும், நோய்களும் வந்து விடும் அப்பனே! இன்னும் பக்தியை பொய்யாக்குவதற்குத்தான் விரும்புகின்றான் மனிதன்! ஆனால் சித்தர்கள் யாங்கள் விடுவதில்லை அப்பனே! 

அப்பனே! இறைவனை வணங்கினாலும் சரி, இல்லை இறைவனை வணங்காவிட்டாலும் சரி, நீதி நேர்மையை கடை பிடித்து வந்தாலே போதும், அவ் தர்மமே உங்களை மேல் நோக்கி எடுத்து செல்லுமப்பா! தர்மத்தை கடை பிடித்து வருவதே ஒரு பெரும் பரிகாரமப்பா! ஆனாலும், அதை யாருமே சொல்வதில்லை, அப்பனே! முதல் பரிகாரமே, தர்மத்தை கடைபிடி என்பதே. பின்னர் திருத்தலங்களுக்கு செல்லலாம், தர்மத்தை பின்னர் செய்யலாம். 

அனைத்து கண்டுபிடிப்புகளும், மருத்துவம் இன்னும் பல விஷயங்களும், எங்களுக்கு சொந்தமானதப்பா! ஆனாலும், சுவடிகளில் எழுதி வைத்ததை எடுத்து, காசுக்காக பயன்படுத்தி அத்தனையும் எங்கெங்கோ போய்விட்டது. ஆனால் கடைசியில் பார்த்தால், யான் தான் கண்டு பிடித்துவிட்டேன் என்று கூறிக்கொள்கிறான், மனிதன். மனித உயிர், எப்படி வாழ்ந்தால் பிரியாது என்று சூட்ச்சுமமாக எழுதி வைத்திருக்கின்றேன். ஆகவே, உடம்பு உயிருக்கு சொந்தமானதா? அல்லது உயிர் உடம்புக்கு சொந்தமானதா என்று சிந்தியுங்கள் அப்பனே! 

இறைவன், போகட்டும் போகட்டும் என்று பொறுத்துக் கொண்டிருக்கின்றானப்பா! இறைவனோ மனிதனை நம்புகிறான் அப்பனே! ஆனால், மனிதனோ, இறைவனை, ஏமாற்றி வருகிறான். என் பக்தர்களே, சில சூட்ச்சிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே! ஆனாலும், எச்சரிக்கிறேன், கடைசி முறையாக! இனிமேலும், உயிர் பலி இட்டுக்கொண்டு, தீய சக்திகளை சேர்த்துக்கொண்டு இருந்தால், மறந்து விடுங்கள் அப்பனே! குடும்பத்தையே மறந்து விடுங்கள் அப்பனே! எச்சரிக்கின்றேன் அப்பனே! சித்தர்களை வைத்துக்கொண்டு பணத்தை பிடுங்குவது, ஒரு பழ மொழியும் உண்டு. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். உண்மை. அதனால் தான் அப்பனே! தெய்வம் செல்லட்டும் என்று விட்டுக் கொண்டே இருக்குமப்பா! தற்காலத்தில் உபயோகிக்கும் துப்பாக்கியை போல. திருடனை ஓடு ஓடு என்று விட்டு, தூரத்தில் சென்றதும் காவலன் சுட்டு விடுவான். அதே போல், இறைவனும் ஓடு ஓடு என்று விரட்டுகிறான். அந்த ஓட்டம் சரியானதாக இருந்தால் பிரச்சினை இல்லை, தவறாக இருந்தால், இங்கிருந்தே இறைவன் சுட்டுவிடுவான்.

அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று மனிதன் இருக்க வேண்டும், ஆனால், மனிதன் சுயநலத்துக்காக வாழ்கிறான். 

"மார்பில் வலக்கால் பதித்து
இடக்கால் யோகநிலை மடக்கி 
சித்தத்தில் அகத்தியனை தியானித்தால்
உண்டதும் தெரியாது!
உறங்கியதும் தெரியாது!
அனைத்தும் அவராய் 
எளிதில் மாறிவிடும்!
அதன்பின் 
அகத்தில் தீ வளர்த்து 
அவரே செய்வார்
சித்த வேள்வி!
ஓம் அகத்தீசாய நமஹ!"

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபாமுத்தினர சமேத ஶ்ரீ அகஸ்தீசாய நம. ஐயா அந்த யோகாசன எப்படி செய்வது ஒரு நிழல் படம் இருந்தால் நன்றாக இருக்கும். (வலது கால் மார்பில் .....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா....

      ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

      Delete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ லோபாமுத்தினர சமேத ஶ்ரீ அகஸ்தீசாய நம.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete