​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 18 November 2024

சித்தன் அருள் - 1733 - அன்புடன் அகத்தியர் - ஹரித்துவார் வாக்கு!









28/9/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 
வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ மா சண்டிதேவி கோயில் ஹரித்வார்.

ஆதிசிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!! ஆசிகள்!!

அப்பனே எவ்வாறு நலம் என்பதை கூட வரும் வரும் காலத்தில் அப்பனே...

ஏன்? எதற்கு? மலைகள்.... எவை என்று அறிய அறிய அப்பனே காடுகள்... நிச்சயம் அப்பனே இங்கெல்லாம் சென்றால் அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் மேல்பரப்பு அப்பனே கீழ்பரப்பு... ஆனாலும் அப்பனே மேல் பரப்பிலிருந்து அப்பனே நிச்சயம் பின் கதிர்வீச்சுக்கள் பல பல அப்பனே பின்  நிச்சயம் மேலோட்டமாகவே மலையின் மீது படும் என்பேன் அப்பனே 

இவ்வாறு அப்பனே மலையின் மீது ஏறும் பொழுதும் காடுகளிலும் எவை என்று அறிய அறிய அவை நிச்சயம் பின் படும்பொழுது அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!!
உயர்வுகள் ஏற்படும் அப்பா!!!

எவ்வளவுக்கு எவ்வளவு மலையின் மீது ஏறுகின்றீர்களோ!!!! அப்பனே பின் நிச்சயம் அவ்வளவுக்கு அவ்வளவு உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே. 

ஆனால் மனிதனோ!?!? என்னால் முடியவில்லை!! பின் அதாவது அங்கு இருக்கின்ற முருகன் என்னிடத்தில் இருக்கின்றான்!!... அதாவது அங்கே இருக்கும் தெய்வம் பின் இங்குதான் இருக்கின்றது என்றெல்லாம் அப்பனே பொய்கள் எவை என்று அறிந்தும் கூட!!.....

இதனால் அப்பனே நிச்சயம்..ஏறு... எவை என்று அறிய அறிய மலைகளின் மீதும் பின் காடுகளிலும்... எவையன்று அறிய அதனால் தான் அப்பனே சித்தர்கள் எவை என்று பின் புரியாத அளவிற்கு இருந்தாலும் பின் அவையெல்லாம் கண்டுபிடித்து நிச்சயமாய் அப்பனே சென்றார்கள் என்பேன் அப்பனே!!!

ஞானம் தித்திக்க வேண்டும்!!!
எப்படி?? ஞானம் தித்திக்க வேண்டும்!!... எதை என்றும் உண்மை என்றும் கூட அதாவது ஞானத்தை பின் எப்படி பெறுவது என்பதை எல்லாம் அப்பனே பின் ஏனைய வாக்குகளிலும் கூட யான் தெரிவித்து விட்டேன் அப்பனே!!! பின் நிச்சயம் அப்பனே அமைதியாக இருந்தாலே போதுமானதப்பா 

அப்பனே நிச்சயம் அதாவது எதற்கும் தீங்கு செய்யாமல் அப்பனே பின் அதாவது நலமாகவே அதாவது பின் அமைதியாக வாழ்ந்துட்டு பின் வந்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் எளிதில் நிகழுமப்பா!!!

ஆனால் மனிதனோ இன்றைய காலத்தில் அப்படி இல்லை!!!

உடனடியாக கிடைக்க வேண்டும் பின் இறைவனை வணங்கினால் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!

நிச்சயம் அப்பனே யார் ஒருவன் சரியாகவே அப்பனே அதாவது திருமலை (திருப்பதி) எவை என்று அறிய பெருமானிடத்தில் அப்பனே பின் அதாவது எவை என்று அறிந்தும் கூட அப்பனே பின் 108 முறை செல்கின்றானோ.... அவந்தன் உயர்ந்து நிற்பானப்பா!!!! அவந்தனுக்கு அனைத்தும் தெரியுமப்பா!!!

அவைமட்டும் இல்லாமல் அப்பனே.. பின் அதாவது கந்தன் மலை அதாவது அப்பனே பின் அறிந்தும் கூட பழனி மலை அப்பனே ஏறுகின்ற பொழுது அதாவது எதை என்று கூட பன்மடங்கு அதாவது 500 முறை அப்பனே ஏறினால் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் போகன் (போகர் சித்தர்) செய்வானப்பா!!

அப்பனே ஒவ்வொரு மலைக்கும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சக்திகள் உண்டப்பா 

ஆனால் அது தெரிவதில்லை!!!

அவை மட்டுமில்லாமல் ஓதிமலை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சிறப்படையும் அப்பா... அப்பனே அதுமட்டுமில்லாமல் அங்கும் இங்கும் பின் அலைபாய்ந்து எதை என்று தெரியாமலும் பின் (கதிர்வீச்சு) அலைகள் அப்பனே எவை என்று கூட காடுகள் மீதும் அப்பனே பின் ஒவ்வொரு கற்கள் அதாவது எதை என்று கூட... வெள்ளி கற்கள் அப்பனே எவை என்று அறிய அறிய தங்க கற்கள் அது மட்டும் இல்லாமல் எவை என்று அறிய அறிய வைரக் கற்கள்.. ஆனாலும் அப்பனே அவற்றின் மீது அக்கதிர்கள் விழுந்து அப்பனே எழும்பொழுது அப்பனே நிச்சயம் எங்கு தாக்குகின்றதோ... அங்கு இறைவன் அங்கே அமர்ந்தானப்பா!!!

அதனால் தான் அப்பனே பின் மலைகளில் ஏறும் பொழுது அப்பனே பல வினைகள் அதாவது பின் பாவ வினைகள் அகலும் அப்பா 

புண்ணிய வினைகள் அதாவது அறிந்தும் கூட அதேபோல் அப்பனே பின் ஒவ்வொரு மனிதனுக்கும் கூட கதிர்களோடு அப்பனே எவை என்று அறிய அறிய சிறு சிறு அணுக்கள் அப்பனே பின் சிறு சிறு துகள்கள் அப்பனே உடம்பில் பதிந்து பதிந்து ஆனாலும் அப்பனே... பின் எவை என்று கூட அதில் பட்டு பின் ஒளியானது அப்பனே உடம்பில் படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது துகளானது அப்பனே நிச்சயம் ஆடுமப்பா!!! நிச்சயம் ஆட்டி வைத்தால்!!!!! அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே..... 

"""""ஆட்டி வைப்பவன் அப்பனே இறைவனே என்பேன் அப்பனே!!!!!

எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அப்பனே அப்படியே ஒரே இடத்தில் இருந்து விட்டால் நிச்சயம் அப்பனே எதை என்று கூட எத் துகளும் ஆடாதப்பா... அப்படியே இறைவனை எதை என்று அறிய அறிய அப்பனே பின்  மனப்பாடங்கள் செய்து பல வகையிலும் கூட செய்து செய்து அப்பனே எவை என்று தெரியாமலே... மீண்டும் அப்பனே பின் பிறக்க வேண்டியது தான் அப்பனே 

அதனால் ஒரு பிறவி கொடுக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே...அப் பிறவி முழுமை பெற்றதாக இருக்க வேண்டும்... அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு நல்லவைகளாக சொல்லிச் சொல்லி அப்பனே நிச்சயம் மனமாற்றங்கள் ஏற்படுமாறு அப்பனே தெய்வத்தின் அருளை பெறுமாறு செய்ய சொல்லி தந்து கொண்டே இருக்கின்றேன். 

வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே உண்மையை ஏற்க மாட்டார்கள் அப்பா.... பொய்யை எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே!!! சில சில உண்மைகளை சொன்னாலும் ஏற்கமாட்டான் அப்பா மனிதன்!!.. 

ஏனென்றால் அவந்தனுக்கு புத்திகள் மாறிவிட்டது என்பேன் அப்பனே... பைத்தியம் என்பேன் அப்பனே அதனால்... அதாவது உலகம் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது புவியானது நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய லேசாக நிச்சயம் இப்படியும் அதாவது அப்படியும் அதாவது வடக்கு தெற்காக சாயும் பொழுது தான்... அப்பனே எவை என்று கூட அனைத்தும் எவை என்று கூட சரியும் அப்பா... 

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!

இதற்காக எல்லாம் போராடி கொண்டு அப்பனே நிச்சயம் இருக்கின்றேன் அப்பனே அதாவது சித்தர்கள் கூட எப்படி  என்பதையெல்லாம்...

ஆனாலும் அப்பனே இதையெல்லாம் விஞ்ஞான மூலம் கண்டுபிடிக்க முடியாதப்பா.... அப்பனே எங்களை மீறி அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்றும் நடக்கப் போவதில்லை... உங்களுக்கும் கூட 

அதனால் அப்பனே உண்மைதனை உணர வேண்டும்... சித்தர்கள் யார்? என்பதை கூட!! சித்தர்களை எவை என்று கூட எதை என்று அறிய அறிய வணங்கினால் நிச்சயம் எவை என்று அறிய அறிய வணங்குவதற்கும் அப்பனே வாக்குகள் கேட்பதற்கும் அப்பனே பின் அதாவது சித்தன் வழியில் வருவதற்கும் தகுதிகள் வேண்டுமப்பா!!!

அத் தகுதிகள் யாரிடத்திலும் இல்லையப்பா!!! பின் தகுதி இல்லாதவனிடம் தான் அதாவது தகுதி இல்லாதவன் தான் அப்பனே எதை எதையோ புறம் கூறிக் கொண்டிருக்கின்றானப்பா!!

பின் தேவையில்லையப்பா!!! எவை என்று அறிய அறிய.. அப்பனே பின் தேவை என்றால் எதை என்று அறிய அறிய அப்பனே புரியட்டும் அப்பனே பின் தேவை எதை என்று அறிய அறிய இவ்வுலகத்திற்காகவே..
யாங்கள் தவங்கள் செய்து மலைகளிலும் காடுகளிலும் எவை என்று தெரியாமலும் பனியிலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் தவங்கள் செய்து செய்து பல ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்து கண்டுபிடித்து அப்பனே பின் மாற்றம் அடையச் செய்வோம் வருங்காலத்தில் அப்பனே 

ஆனாலும் அப்பனே எதை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே இயற்கையாலே பெரும் பாதிப்பு அப்பா 

அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே குலுங்கும்!!! என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெற்கு எதை என்று அறிய அதாவது... வட தெற்கு அப்பனே கிழக்கு மேற்கு இப்படியாகவும் அப்பனே பூமியானது எவை என்று அறிய அறிய நீங்கள் நடுங்குகின்றீர்களே அதே போல் நடுங்குமப்பா!!!

ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே பின் தாக்கங்கள் அதாவது கர்மா நிலைகள் அப்பனே ஒவ்வொரு எண்ணங்கள் அதாவது மனிதனின் எல்லைகள் மீறும் பொழுது அப்பனே அழுக்குகள் அதாவது... அதிகமாக அப்பனே பின் துகள்கள் சேர்ந்து விடுகின்றது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அழுக்கு துகள்கள் சேர்கின்ற பொழுது அப்பனே அவ்சக்தியானது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே மேலோட்டமாக அப்பனே சில எதை என்று அறிய அறிய நீங்களும்  எவை என்று அறிய இதை என்று பயன்படுத்தாத அளவிற்கும் கூட இருந்தாலும் அவை தன் ஜிந்தத்தின் மேல்  அப்பனே பின் எவை என்று அறியாமலும் பின் புரியாமலும் இருக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய உலகம் எவை என்று கூட ஆடும் அப்பா 

அவ் ஜிந்தம் நிச்சயம் அப்பனே அப்படியே இருக்கும் பொழுது எதை என்று கூட... அதாவது ஜிந்தம் என்பது சதுரம் என்று யான் குறிப்பிடுகின்றேன் அப்பனே... எதை என்று அறிய அறிய சதுரத்தில் பின் அமர வைக்க வேண்டும் என்பேன் அப்பனே 

நீங்களும் ஒரு சதுரத்தில் அமைந்து விட்டால் அப்பனே உங்களை அசைக்க முடியாதப்பா!!! அப்பனே பின் அவ் சதுரத்தில் அமைவதற்கும் அப்பனே பல பல தவங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே ஞானங்கள் அதாவது எதை என்று புரிய புரிய நல் மனதுகள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே... சதுரத்தில் பின் அமைந்து விட்டால் அப்பனே பின் ஒன்றும் செய்ய முடியாதப்பா உங்களையும் கூட!! இதனால் அப்பனே யோகங்கள் தான் என்பேன் அப்பனே! 

ஆனாலும் யாரும் அவை தன் உட்கார பின் முடியப்போவதில்லை இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே!! வருவான் செல்வான் அப்பனே நோய்களுடனே என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் மனிதராக பிறப்பெடுத்து ஞானி என்று சொல்லலாம் ரிஷி என்று சொல்லலாம் சித்தன் என்று சொல்லலாம்... அப்பனே ஆனாலும் நிச்சயம் பின்  நோய்கள் உண்டு என்பேன் அப்பனே.. நோயை நிச்சயம்  முடிந்தால் நிச்சயம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!!

ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய மலைகளிலும் பின் எவை என்று காடுகளிலும் பின் திரியும் பொழுது அப்பனே யான் சொல்லி இருக்கின்றேனே அப்பனே எவை என்று கூட....அவ் ஒளியானது படும்பொழுது அப்பனே அனைத்தும் மாறும் அப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே 

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே பின் ஓரிடத்தில் அமர்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே... எவை என்று அறிய அறிய நமச்சிவாயனை அழைத்தாலும் பின் எவை என்று அறிய அறிய!!...

அதனால் அப்பனே மனது பெரிதாக இருக்க வேண்டும் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட... அப்பனே நிச்சயம் மனது அவ்வாறு பெரிதாக இருந்தால் அப்படி இறைவன் அமர்வான் என்பதை எல்லாம் அப்பனே நேற்றைய பொழுதிலே...(காசி வாக்கில்) யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே!!

அப்பனே அளவுகள் கடந்து கடந்து அப்பனே இதனால் நிச்சயம் அப்பனே ஆடத்தான் போகின்றது என்பேன் அப்பனே இவ்வாறு ஆடும்பொழுது அனைத்தும் ஆடும் அப்பா... அப்பனே உடம்பில் உள்ள எவை என்று சில கதிர்களும் குலுங்கும் அப்பா... அப்பனே அவை தன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அவை தன் ஆடுகின்ற பொழுதும் கூட அப்பனே நிச்சயம் நோய்களும் வந்து விடும் அப்பா... நிச்சயம் அப்பனே நேற்றைய பொழுதிலும் சொல்லிவிட்டேன் அப்பனே... நிச்சயம் எவை என்று எவ் சக்திகளாலும் பின் கண்டுபிடிக்க முடியாதப்பா சொல்லி விட்டேன் அப்பனே

நலன்கள் நலன்கள் இன்னும் இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு மனிதனுக்கு!!! ஆனாலும் சரியான வழியை பின் அப்பனே நிச்சயம் தெரிந்திருக்கவில்லை... அதாவது மதிப்பெண்கள் அதிகமாக இல்லை என்பேன் அப்பனே மனிதனிடத்தில்... குறைவாக உள்ளது என்பேன் அப்பனே மதிப்பெண்கள் அப்பனே 

மதிப்பெண்கள் அதிகமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தேர்ச்சி பெற முடியும் என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே!!! ஆனாலும் குறைவான எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அப்பன தேர்ச்சி விகிதங்கள் அப்பனே பின் குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே நிச்சயம் முன்னேற முடியாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே மனிதனால் அப்பனே

இதனால் அப்பனே அதாவது புவியானது அப்பனே பின் எவை என்று கூட தன் சுற்று வட்டத்திலிருந்து அப்பனே எவை என்று அதாவது எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படியே செல்கின்ற பொழுது தான் அப்பனே மனிதனின் எவை என்று கூட மூளையில் எதை என்று கூட!!!

 அறிவுகள் மாறும் அப்பா அப்பனே மாறுகின்ற பொழுது எதை எதையோ செய்வான் பின் சண்டைகள் இடுவான் அதாவது பக்திக்கு எதிர்விதமாக பேசுவான் அப்பனே பின் இல்லத்தில் தாயையும் அடிப்பான் தந்தையையும் அடிப்பான் அப்பனே பிள்ளைகளையும் அடிப்பான் அப்பனே எவை என்று கூட அதாவது கணவன் மனைவிமார்களுக்கு இடையே சண்டைகள் எவை என்று கூட போட்டி பொறாமைகள் வரும் அப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே 

இதனால் அப்பனே நிம்மதி இல்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே... அப்பனே அதனால் சரியான வழியிலே அப்பனே புவியானதை நிச்சயம் பின் எவை என்று கூட இயக்க வேண்டும் என்பேன் அப்பனே..

அதற்காக யாங்கள் நிச்சயம் பின் அனைவரும் கூட பின் எங்களை நம்பி உள்ளீர்கள் அப்பனே... அதனால் அப்பனே யாங்கள் நிச்சயம் உங்களுக்கு செய்தாக வேண்டிய கட்டாயம் அப்பனே... கட்டாயமே அப்பனே எவை என்று அறிய அறிய!! இவ் அகத்தியன் அனைத்தையுமே செய்வானப்பா!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் முதலிலே வாழ்வதற்கு தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே... வாழத் தெரியாமலே நிச்சயம் அவை இவை என்று பரிகாரங்கள் எது என்று கூட செய்தாலும் ஒன்றும் பலிக்காதப்பா!!!

வாழத் தெரிந்தவன் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே அமைதியாக இருப்பான்....

வாழத் தெரியாதவன் அனைத்தும் சொல்லிக் கொண்டிருப்பானப்பா!!! இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான் அங்கு இருக்கின்றான் இங்கு இருக்கின்றான் என்று சொல்வான் அப்பா 

ஆனாலும் அப்பனே வாய் பின் எவை என்று அறிய அறிய ஒருநாள் அப்பனே எதை என்று புரிய புரிய அதனால்...அவன் வாயே அவந்தனுக்கு வினையாக போய்விடும் என்பேன் அப்பனே... அதனால் பாவமாகி விடும் என்பேன் அப்பனே... எதை என்று கூட நல்லது பின் தீயது... என்பதெல்லாம் அப்பனே இறைவனால் நிச்சயிக்கப்படுகின்றது என்பேன் அப்பனே....

இதனால் அப்பனே மனிதன் சொல்வதும் எவை என்று கூட நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் சில கர்மாக்கள் ஏற்பட்டு அப்பனே முதுமையில் எப்படி ஏன் எதை என்று அறிய அறிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்பதை எல்லாம் அப்பனே புரியாமல் வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இத் தேவி எவை என்று கூட அப்பனே அதாவது கௌதம முனியின் இடமப்பா!!! எவை என்று அறிய அறிய அப்பனே பின் கௌதமன் எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் எவை என்று புரியாமலும் எதை என்று அறியாமலும் கூட அப்பனே இங்கு தவங்கள் மேற்கொண்டு மேற்கொண்டு அப்பனே அதாவது பின் எவை என்று அறிந்தும் அறிந்தும் கூட பல ஆண்டுகள் அப்பனே பின் அறிந்தும் கூட 

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் எதை என்று கூட சக்திகள் பலம் பெற்றுவிட்டான் அப்பனே... நலமாகவே... இதனால் சக்திகள் ஏற்று ஏற்று ஆனாலும் இங்கெல்லாம் அழிவுகள் வந்து கொண்டே இருந்தது.... பின் அதாவது மலைகளிலும் ஆறுகள் மூலம் தண்ணீர் பெருக்கெடுத்து இங்கு ஓடியது 

ஆனாலும் மக்கள் அலறியடித்து பின் எதை என்று கூட மீண்டும் மீண்டும் மேல்நோக்கி சென்றால் நிச்சயம் பின் வாழ்ந்து விடலாம் என்றெல்லாம் இங்கு அமர்ந்தார்கள்!!

 ஆனாலும் எவை என்று கூட கவுதமன் யோசித்தான் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று கூட தம்  தவ சக்தியால் அனைத்து தெய்வங்களையும் நிச்சயம் அனைவரையும் இங்கு அழைத்தான் நிச்சயம்!! பின் நிறுத்துங்கள் என்றெல்லாம் நிச்சயம் நிறுத்தி அனைத்து தெய்வங்களையும் கூட பின் அதாவது பெண் தெய்வங்களும் வந்து எதை என்று கூட பின் நல் முறையாக 

 பின் கௌதமனே உந்தனுக்கு என்ன வேண்டும்?? என்று தேவியும் கேட்க!!!


கௌதமனும் நிச்சயம் பின் தேவியிடம் பின் எவ்வாறு என்பதையும் கூட எதை என்று அறிய அறிய இங்கு நிச்சயம் வந்தால் நிச்சயம் பல மன மாற்றங்கள் ஏற்பட அதாவது சில செய்வினை கோளாறுகள் அதாவது பின் கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட சில சில ஜாதக நிலைகளிலும் கூட எவை என்று தெரியாமலே பின் மனிதனுக்கு எவை என்று புரியாமலே.... வரும்..அவை எல்லாம் நிச்சயம் தடுக்க வேண்டும் எதை என்று அறிய அறிய அதனால் மனிதனுக்கு புத்தி மாற்றங்கள் ஏற்படும்... அவையெல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்கிணங்க நிச்சயம் தாயே... நிச்சயம் இவை ஒரு புண்ணிய ஸ்தலமாகவே நிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம்!!!

நிச்சயம் அவ்வாறே ஆகட்டும் கௌதமனே..!!!

. உந்தனுக்கு என்ன தேவை?? என்று நிச்சயம்!!! தேவியும்!!! அறிந்தும்!!!

பின் யாரெல்லாம் பின் எவை என்று இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றார்களோ... அதாவது இமயம் தன்னில் கூட நிச்சயம் அனைத்தும் நிறைவேற வேண்டும் தாயே!!!
இதுதான் என்னுடைய கோரிக்கையும் கூட!!

பின் நிச்சயம் கௌதமனே நிச்சயம் எதை என்று அனைத்தும் தருகின்றேன்... பின் நிச்சயம் எவை என்று அறிய அறிய மீண்டும் ஒரு வரத்தை கேள் என்று!!! தேவி கூற!!!

கௌதமனும் தேவியே!!!! நிச்சயம் காலம் காலமாக இங்கே யான் தவம் புரிய வேண்டும்!!! அதாவது என் உடம்பு சென்றாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய பின் நிச்சயம்... பின் கண்களுக்கு தெரியாமலே நிச்சயம் பின் எவை என்று புரியப் புரிய நிச்சயம் தவங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்!! நிச்சயம் அறிந்தும் கூட இங்கு வருவோருக்கெல்லாம் நன்மைகள் பயக்க வேண்டும் என்பதையெல்லாம்!!! நிச்சயம் தாயே 


 பின் அதேபோல கொடுக்கின்றேன் என்று தேவியும்!!

அதனால் அப்பப்பா!!! இன்னும் இன்னும் அப்பனே நிச்சயம் சித்தர்கள் வந்து பின் வாக்குகள் செப்பும் பொழுது அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் தெளிவுகள்...

இன்னும் இன்னும் ஞானிகள் பற்றியும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே... நலன்கள் ஆசிகளப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட ஏன் எவை என்று அறிய அறிய மலைகள் மீது அப்பனே இன்னும் இன்னும் எவ் சக்திகள் எல்லாம் இயங்குகின்றது என்பதை எல்லாம்... அப்பனே ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அப்பனே எதை என்று கூட சித்தர்கள் பல ரிஷிகள் ஏன் எதற்கு என்று பல மனிதர்கள் வாழ்வதற்கே அப்பனே நிச்சயம் அப்பனே 

இவை எல்லாம் அப்பனே கடல்தானப்பா ஒரு காலத்தில் அதாவது அப்பனே எதை என்று கூட மூழ்கி இருந்தது (ஹரிதுவார் ரிஷிகேஷ் எல்லாம் முற்காலத்தில் கடலாக இருந்தது அவற்றையெல்லாம் மாற்றி தற்பொழுது) அப்பனே.. அவற்றையெல்லாம் தள்ளித்தான்... அப்பனே பின் ஈசன் எவை என்று கூட... பின் மனிதனாகவே எவை என்று அறிய அப்பனே வந்து எவை என்று அறிய இன்னும் மனிதர்களை பெருக்கெடுத்தி நிச்சயம் வாழ வேண்டும்!!! பின் மனிதர்கள் எப்படி பிறந்தீர்கள் என்பதை எல்லாம் வரும் வரும் காலத்தில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே பின் கர்மங்களை குறைத்து ஆனாலும் ஈசன் நினைத்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் அப்பனே எவை என்று அறிய அறிய சொல்லி விட்டேன் அப்பனே!!!

பின் ஈசன் கொடுத்ததை அப்பனே நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே பின் வாக்குகளில் கூட யான் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன்!!

ஆனாலும் சரியாக பயன்படுத்துவதே இல்லை அப்பனே!! இதனால் பின் எதை என்று கூட பின் படைத்தவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!! எப்பொழுது பின் படைப்பது?? எப்பொழுது பின் அழிப்பது?? என்பதெல்லாம் அப்பனே 

அதனால் நிச்சயம் அப்பனே இயற்கையே உங்களைக் கொல்லப் போகின்றது ஏனென்றால் அப்பனே இயற்கையை மீறி அதாவது... இயற்கையும் கூட தெய்வம் எதை என்று அறிய அறிய... நிச்சயம் அப்பனே அதனால் அப்பனே.. எப்பொழுது பின் எப்படி எதை என்று கூட தகுந்தார் போல் எதை என்று அறிய முன்னோர்கள் சொல்லி விட்டு போனார்கள் என்பேன். அப்பனே... அவ்வாறு வாழ்ந்து வந்தால்தான் அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே 

அவ்வாறு வாழவில்லை என்றால் அப்பனே மாற்றங்களும் ஏற்படாது என்பேன். அப்பனே... இறைவனை வணங்கினாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பா..

ஏன் எதற்கு அப்பனே இவ்வளவு தூரங்கள்?? அப்பனே இன்னும் இன்னும் இவ்வளவு தொலைவிலும் கூட வந்து வாக்குகள் செப்புகின்றேன் என்றால்... பின் வரும் காலத்தில் அப்பனே.... இதற்கும் தெளிவுகள் வரும் அப்பா அப்பனே...

எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே..

பின் ஆஞ்சநேயனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணம் அப்பனே எவை என்று... புரியப் புரிய அப்பனே ஆஞ்சநேயனும் கூட இங்கு அழகாகவே வீற்றிருக்கின்றான் என்பேன் அப்பனே அழகாகவே அப்பனே 

அதாவது பின் யான் சொன்னேனே எதை என்று கூட கௌதம முனி தவம் மேற்கொண்டிருந்த பொழுது அப்பனே பல நோய்களும் கூட இங்கு தாக்கியது என்பேன் அப்பனே....அழகாகவே அப்பனே அதாவது கீழிருந்து மேல் நோக்கி எவை என்று அறிய அறிய அப்பனே பின் அனைத்து இடங்களிலும் தேடித் தேடி வந்து அப்பனே எவை என்று கூட மூலிகைகளையும் கூட அப்பனே இங்கு இட்டு அப்பனே பின் அதாவது ஒரு ஊது ஊதினான் ஆஞ்சநேயன் அப்பனே... பின் காற்றோடு அனைத்தும் பறந்து போனது என்பேன் அப்பனே நோய்களும் கூட...

அதேபோலத்தான் அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது இன்னும் நோய்கள் வரத்தான் போகின்றது... அதாவது காக்கத்தான் போகின்றான் அனுமான் என்பேன் அப்பனே... நலன்களாக ஆசிகள் உண்டு அப்பனே இன்னும் மூலிகைகளை பற்றியும் கூட சொல்கின்றேன் அப்பனே எங்கெங்கு என்னென்ன மூலிகைகள் எல்லாம் ஒளிந்து இருக்கின்றது?? என்பதை எல்லாம் சொல்லிவிட்டால் அப்பனே மனிதன் அதை பறித்து கொண்டு அப்பனே எவை என்று கூட பணத்திற்காக ஓடுவான் அப்பனே... அனைத்து வித்தைகளையும் தெரிந்து கொண்டு அப்பனே மனிதனை மயக்கி அப்பனே எதை எதையோ சொல்லி யான் தான் இறைவன் பின் சொல்லிவிடுவான் அப்பனே 

 அதனால்தான் யாங்கள் காட்டவில்லை என்பேன் அப்பனே இன்னும் மனிதனுக்கு.... என்பேன் அப்பனே 

இன்னும் ஆசிகள் அப்பனே சொல்லி சொல்லி எவை என்று அறிய அறிய தீர்த்து அப்பனே பின் நலமாகவே அனைவருக்கும் மாற்றம் அடைய செய்கின்றேன். அப்பனே உலகத்தை அப்பனே எவை என்று கூட... எவ்வாறு என்பதையும் கூட ஆராய்ச்சிகள் இன்னும் இன்னும் அப்பனே எங்களுடையது... அவையெல்லாம் என் பக்தர்களுக்கு தெரியட்டும் அப்பனே!!

ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலயம் மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ ஸ்ரீ சண்டி மா தேவி கோயில்... ஹரித்வாரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நீல மலையில் அதாவது நீர் பர்வத் மேல் அமைந்துள்ளது. கோயிலுக்கு ரோப் கார் மூலம் செல்ல முடியும் படிக்கட்டுகள் வழியாகவும் செல்ல முடியும். மேலே சண்டி தேவி மற்றும் ஆஞ்சநேயர் அஞ்சனாதேவிக்கு கோயில்கள் உள்ளது. மலையின் எதிர்புறத்தில் மானசாதேவி கோயில் உள்ளது. 

சண்டி தேவி கோயில் சித்த பீடம் ஆக உள்ளது. கோயில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete