​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 August 2026

சித்தன் அருள் - 2289 - அகத்தியர் வாக்கு!


இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும். ஆனால் இறைவன் என்ன செய்தார்? மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக் கூடிய  அறிவையும் தந்து அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்து விட்டு வரட்டும் என்று தந்தால் மனிதன் நன்மையை நாடுவதை விட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி தன்னையும் கெடுத்துக்கொண்டு தன் சந்ததியையும் கெடுத்துக் கொண்டு இந்த உலகத்தையும் கெடுத்துக் கொண்டான். ஒரு வகையில் பார்த்தால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்கு காரணமாகி விட்டது என்று கூட வேடிக்கையாக கூறலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2288 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 14!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 14

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( பகுதி 13  அதன் தொடர்ச்சியாக ….)

குருநாதர் :-  அப்பனே, பிறவி எப்பொழுதோ முடிந்துவிட்டது. அதனால் என்னிடத்தில் உன்னை பின் ஒரு பொம்மையாக வைத்திருக்கின்றேன். போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  பிறவி எப்பொழுதுமே உனக்கு முடிஞ்சு போச்சு. ஆனால் என்னிடத்தில் என் பக்கத்திலே ஒரு பொம்மையாக வைத்திருக்கின்றேன். 

குருநாதர் :-  அப்போது, அப்பொழுது ஆற்றலை ஊட்டுகின்றேன். அவ்வளவுதான். உனக்கு 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அப்பப்ப என்ன தேவையோ, அது நான் கொடுக்கின்றேன். 

குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம். அப்பன் பின் எவை என்று ஒரு மோட்சம் தான். இப்பிறவி அதனால் அனைத்தும் கற்பித்து விட்டேன். உனக்கு இப்பிறவி, இந்த பிறவி மோட்சம் தான். அதனால உனக்கு எல்லா விஷயத்தையும் நான் கற்றுக் கொடுத்துட்டேன். 

===========================
# ( கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டாம்  முறையாக பாட சொல்லி  கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்க்கு  இவ் பாடலை அனைவருக்கும் எடுத்து சொல்க)
===========================

குருநாதர் :-   அப்பனே, அனைவருக்கும் இன்னொரு முறை இப்பாடலை பாடு. 

( கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டாம்  முறையாக பாட சொல்லி  கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்க்கு  இவ் பாடலை அனைவருக்கும் எடுத்து சொல்க)

அ  - என்ற சொல்லினிலே அன்பை தருவாய், போற்றி !!!!! 

ஆ - என்ற சொல்லினிலே ஆணவத்தை போக்குவாய், போற்றி  !!!!!  

இ - என்ற சொல்லினிலே இயல் இசை நாடகத்தை தருவாய்,போற்றி !!!!! 
 
ஈ - என்ற சொல்லினிலே ஈன்றவர் நெஞ்சை மகிழ்விப்பாய், போற்றி !!!!! 

உ  - என்ற சொல்லினிலே உலகெலாம் வலம் வருவாய், போற்றி !!!!! 

ஊ - என்ற சொல்லினிலே ஊன் உடம்புக்குள்ளே ஆலயம் அமைத்தாய், போற்றி !!!!! 

எ - என்ற சொல்லினிலே எங்களையும் வாழ வைப்பாய், போற்றி !!!!! 

ஏ - என்ற சொல்லினிலே ஏழு பிறப்பின் நிலையை மாற்றுவாய், போற்றி !!!!! 
 
ஐ - எனும் சொல்லினிலே ஐயம்பட உரைப்பாய், போற்றி !!!!! 
 
ஒ  - எனும் சொல்லினிலே ஒளியின் ஒளியாய் இருப்பாய், போற்றி !!!!! 
 
ஓ - என்ற சொல்லினிலே ஓம்கார பிரணவ வடிவே, போற்றி !!!!! 
 
ஔவெனும் சொல்லினிலே ஔடதமாய்  இருப்பாய், போற்றி !!!!! 
 
அகத்துக்குள் வாழுகின்ற ஈசனே போற்றி, போற்றி, போற்றி !!!!! 
 
அகத்தீசனே போற்றி, போற்றி, போற்றி, போற்றி !!!!!  

திருச்சிற்றம்பலம். 

( பாடல் பாடி முடித்தபின்னர் …..) 

===========================
# அடியவர் உரைத்த மகத்தான அனுபவங்கள்….
===========================

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, ஏதாவது கருத்தை அனைவருக்கும் தெரிவி. 

சுவடி ஓதும் மைந்தன்  :- ஏதாவது கருத்து அனைவருக்கும் தெரிவி என்றார். 

அடியவர் #5:- எல்லோருக்கும் வணக்கம். அகத்திய அடியார்கள் அத்தனை பேருக்கும் வணக்கம். 

ஐயா, தொடர்ந்து பல விஷயங்கள் உங்களுக்கு சொல்லி இருக்கார். ஆனா, நீங்க எல்லாரும் கேள்வி கேக்குறீங்க. முதல்ல ஜீவநாடி படிக்கும்போதே மொத்தம் சொல்லிட்டார். 

நாம ஒன்றாம் வகுப்பிலிருந்து எப்ப இரண்டாம் வகுப்பு டிகிரிக்கு போறோமோ, அப்பதான் நமக்கு புரியுது. இன்னும் ஒன்றாம் வகுப்பு கீழேயே வரக்கூடாது. 

**** எல்லாம் ஆசான் செயல்னா, எல்லாமே நடந்துரும். ****

இதுக்கு நான் ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.  36 வருடங்கள் நான் சித்த மருத்துவர். 36 வருடங்களா அகத்தியருடைய திருநாமத்தை தவிர ஒன்றுமே எனக்கு தெரியாது. 

மரணத்துக்கு போகின்றவரை கூட மாற்றி அமைச்சாருன்னா, நான் இல்ல…. அகத்தீசன் தான். 

அப்போ நாம எல்லாமே கான்சியஸ் மைண்ட்ல இறைவனை பார்க்கணும், பார்க்கணும்னு நினைக்கிறோம். 

**** (subconcious mind) சப்கான்சியஸ் மைண்ட்ல இறைவன் என்கிட்ட தான் இருக்கிறான், அப்படின்னு நம்ம நினைக்கிறது இல்லை. ****

**** அது என்னைக்கு நினைக்கிறோமோ, அன்னைக்கு எல்லாருமே அகத்தியரை பார்க்கலாம். ****

அகதீசாய நமஹ….

அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

அடியவர் 7:- சாய் ராம்.

===========================
# அனைத்தும் அகத்திய மாமுனிவர் அருளால் நடக்கும்… 
# அனைத்தும் அகத்திய மாமுனிவர் நடத்துகிறார்…
#  அனைத்தும் அகத்திய மாமுனிவர் நடத்திக் கொண்டிருக்கிறார் …. 
===========================

குருநாதர் :-  அப்பனே, இன்னும் ஒரு விளக்கத்தை கூற வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- இன்னும் ஒரு விளக்கத்தை கூற வேண்டும். 

அடியவர் #5:-  அதேபோன்று, ஐயா சொன்னது போன்ற, தொடர்ந்து நாம் முதல்ல நாம யாருன்னு பார்க்கணும். எதிர் வீட்டில் இருக்கிற நம்ம குழந்தைகளுடைய தவறுகளை நாம் சுட்டிக்காட்டுறோம். 

நாம யாருன்னு ஏன் பார்க்கிறது இல்ல? நாம் யார்? நாம் என்ன தவறு செய்றோம்? அப்படிங்கிறது நினைக்கும்போதே, இது ஆகுமாங்க. இந்த நாடியில வந்து அகத்தியர் சொல்றது நடக்குமாங்க. அப்படிங்கிற கேள்விகளை நாம கேட்கக்கூடாது. 

நடக்கும்….. 

நடத்துகிறான்…. 

நடத்திக் கொண்டிருக்கிறான்…. 

அப்படின்னு…… 

**** உறுதியா நாம என்னைக்கு நம்பனும்னா, அன்றைக்கு அடுத்த நொடியே, அதாவது அடியார்கள் அழைத்தால், ஆயிரம் கோடி மைலுக்கு அப்பால் இருந்தாலும், அகத்தியன் அடுத்த நிமிஷத்திலேயே வந்துருவான். அதுதான் அகத்தியன். ****

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 

குருநாதர் :-  எதை என்று அறிய பார்த்தீர்களா? எவை என்று கூறப்பின் எவ்வளவு நம்பிக்கை? இப்படி நம்பிக்கை வைத்துக் கொண்டால் போதும். அனைவரும் அதனால்தான் ஒரே அடியில் சொல்லிவிட்டேன். என்னிடத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்திலே இருக்கின்றேன். அமர்.

அடியவர் #5:-  ( அகத்தின் ஈசனாரின் அருள் உத்தரவை ஏற்று உடனே அமர்ந்தார்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அவ்வளவுதான். ஒரே அடியில சொல்லிட்டாராம். 

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன்  :-  உனக்கு சொல்லிட்டு நான் ஒன்னும் இல்லப்பா. உன் கூடவே இருக்கிறேன். வழிநடத்துறேன் உன் கூடவே இருந்து என்று சொல்லிட்டாருங்க. ஐயா, 

===========================
# முன்னோர்கள் ஆசி மூலம்  வெற்றி மற்றும்  சொர்க்க வாழ்வு. 
===========================

குருநாதர் :- அப்பனே, கேள். 

அடியவர் #4:- அப்பனே, நம் முன்னோர்கள் நலமா? 

குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் தனனில் கூட பின் நீ அழைத்து வந்தாயே?  அவனிடத்தில் கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அதை கேளுங்க. அவர் என்ன சொல்றாருன்னு. 

அடியவர் #4:-  ஐயா, முன்னோர்கள் நலமா? 

அடியவர் #5:- முன்னோர்கள் நலமா என்றால்  ஐயா, உங்களுக்கு அவங்க நலமா இருக்காங்களா இல்லையான்னு ஏன் சந்தேகம் வந்தது? 

அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )  

அடியவர் #4:-   அவங்க நன்றாக இருந்தா, ஆசீர்வாதம் பண்ணா இன்னும் நல்லா இருக்கும். 

அடியவர் #5:- அதாவது நீங்கள் ஒன்னு எதிர்பார்த்து தான் இன்னும் வாழ்றீங்களா? அகத்தியன் கிட்ட இவ்வளவு வருடங்களா வந்தும், இன்னும் எதிர்பார்த்து தான் வாழ்றீங்களா? 

அடியவர் #4:-  ஐயா, அருளாசி  இருந்தாலும் பொருளாசியும் இருக்கு. ஐயா, 

அடியவர் #5:- என்னங்க? ஐயா, 

அடியவர் #4:-  அருளாசி இருந்தாலும் பொருளாசியும் இருக்கு. 

அடியவர் #5:- அருளாசியும் இருக்குது. 

அடியவர் #4:-  பொருளாசியும் வேணும். பொருளாசியும் வேணும். 

அடியவர் #5:- அப்ப நீ பொறுத்து தான் பார்க்கணும். 

அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )  

அடியவர் 7:- ( ஆச்சரியத்தில் ) சாய் ராம் 

குருநாதர் :-  அப்பனே, இதனால்  அப்பனே, முன்னோர்கள் ஆசி இன்னும் அப்பனே பொறுத்து தான் ஆக வேண்டும். புரிகின்றதா? அடுத்த வினாவிற்கு வா. 

அடியவர் #4:- அப்பனே, மனை அமையாததால், மனையில் மனமில்லை. 

குருநாதர் :-  அப்பனே, நீ அழைத்து வந்தாயே. அவனை எழுப்பி கேள். 

அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )   

அடியவர் #4:-  ஐயா, இன்னும் மனை அமையாததால மனதில் நிம்மதி இல்லை. 

அடியவர் #5:- அந்த மனை அமையாது. ஏன் அமையல? உங்களுக்கு ஏன் அமையலன்னு தோணுது? அந்த இடம் ? 

அடியவர் #4:-  ஏன் அமையலன்னா, அந்த சூழ்நிலை இன்னும் அமைய மாட்டேங்குது. சூழ்நிலை அமைந்தாலும் அது சரி வருமான்னு தெரியல. 

அடியவர் #5:-  ஐயா, உங்கள் மனதில் ஒரு எண்ணத்தை வைத்து தேடுகிறீர்களா? இருக்கின்ற இடமே சொர்க்கம் என்று நினைக்கிறீர்களா? 

அடியவர் #4:-  இது அலைபாயும் மனது. ஐயா, 

அடியவர் #5:-  அலைபாயும் மனதை முதலில் கட்டுப்படுத்துவதற்கு 

அடியவர் #4:-  சரிங்க. 

அடியவர் #5:-   காலையில் பிரம்ம முகூர்த்தம் மூன்று டு நாலு ஞானிகள் எழும் நேரம். நாலு டு ஆறு மனிதர்கள் எழும் நேரம். நீங்க கொஞ்சம் ஞானிகளா…. மூணு டு நாலு தினம் பண்ணா…. ஒரு 21 நாட்களில் மனம் அமைதி பெறும். அப்பொழுது நீங்கள் இருக்கின்ற இடமே உங்களுக்கு சொர்க்கமாகும்…. 

அடியவர் #4:- சரிங்க. 

குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று ஒரு முதலில், அப்பனே, முன்னோர்கள் ஆசி. அப்பனே, பின் அதிகமாக கிடைக்க வேண்டும். அடுத்து, அப்பனே, பின் எவை என்று கூறப்பின் சொர்க்கம் என்பது, அப்பனே, நீ நினைத்த காரியம் நடைபெறும். அப்பனே, அடுத்த கேள்வி என்ன? 

அடியவர்கள் :- ( அமுக்க  சிரிப்புகள் )   

அடியவர் #4:-  அப்பா, மீனாட்சி அம்மாள் காளியாக தெரிந்தார். 

குருநாதர் :-  எது என்று புரியா? பின் , நீ கொண்டு வந்தாயே. அவனேயே  எழுப்பு. 

அடியவர் #5 :-  (பதில் சொல்ல எழுந்தார்கள்)

அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )   

அடியவர் #4:-  ஐயா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல போகும்போது, அங்க மீனாட்சி அம்மா தெரியல. அவர் ஒரு காளி அம்மனாக தெரிந்தால், அது ஏன்? 

அடியவர் #5 :-   அது எத்தனை முறை? அதுபோன்று தெரியுது. 

அடியவர் #4:-  இல்ல, ஒரு தடவை தான். ஒரு தடவை. 

அடியவர் #5 :-   அன்றைய மன சூழ்நிலையில் நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்பாளை பார்த்தாய்? 

அடியவர் #4:-  உண்மையா சொன்னா, அன்னைக்கு நல்ல விதமாதான் போயிருந்தேன். ஆனாலும், 

அடியவர் #5 :-  ஐயா, அந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஏற்கனவே பார்த்து, உங்கள் மனதில் பதிந்து, அந்த நினைப்பில்…. அந்த…. மீனாட்சியை பார்த்தீர்களா? 

அடியவர் #4:-  அப்போ, ஒரு போராட்ட சூழ்நிலை இருந்தது. ஐயா, 

அடியவர் #5 :-  மன சஞ்சலத்தால் பார்க்கின்ற போது, உங்களுடைய கோபம் தான் உங்களுக்கு அது காளியாக இருக்கிறது. அமைதியாக இருந்தால், அது மீனாட்சி. மனம் கோபப்பட்டு, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு படுகின்ற நிலையில் இருந்தால், அது காளி. 

அடியவர் #4:-  சரிங்க 

குருநாதர் :- அப்பனே, அருகில் உன் மனைவியை, காளி வைத்திருக்கின்றாய். அதனால் தெரிகின்றது. அப்பனே, போதுமா? 

அடியவர்கள் :- (குபீர்  சிரிப்புகள்)   

அடியவர் #4:-  அப்பனே, தாங்களே கூறியுள்ளீர்கள். இது  நான் கொடுத்த வரம் என்று. 

குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட காளி யார்? அப்பனே? 

அடியவர்கள் :- (  சிரிப்புகள்)   

சுவடி ஓதும் மைந்தன்  :-  காளி யாருப்பா? 

அடியவர் #4:-  காளியும் அன்னையே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. 

குருநாதர் :-  அப்பனே, கேளும். 

அடியவர் #4:-   அப்பா, சில முறை கனவுகளில் இயற்கை பேரிடர் நிகழ்வுகள் தோன்றுகின்றன. 

குருநாதர் :-  அப்பனே, நீ அழைத்து வந்தாயே. அவனையே எழுப்பு. 

அடியவர்கள் :- (குபீர்  சிரிப்புகள்)   

அடியவர் #5 :-  ( எழுந்தார்கள் ) ஐயா, சொல்லுங்க. 

அடியவர் #4:-  சில சமயம் இயற்கை பேரிடர்கள் வரும்போது, முன்னாடியே கனவு வருது. ஐயா, அதுக்கு தகுந்தாப்புல நடக்கிறது. உலகத்திற்கு அது ஏன் எனக்கு உணர்த்தப்படுகிறது? 

அடியவர் #5 :- ஐயா, சதாகாலமும் (அகத்தீசன் ) என்னுடைய நாமத்தை சொல்லுகின்றவர்கள்…. வருகின்ற காலங்களில் என்ன வரும்?  என்கின்ற உணர்வை அவர்களுக்கு தருகிறார்கள். அந்த உணர்வினால், அப்படிப்பட்ட பேரிடர்கள் இப்ப கூட சொல்றாங்க. இந்த ஆண்டு, இந்த ஆண்டு… நடந்த பத்தாம் தேதி, இந்த ஆண்டு சொல்றார்கள்…. ஜோதிட வல்லுனர்கள் பஞ்சபூதத்தின் தத்துவத்தின்படி… ஒன்பது நவகிரகங்களுடைய கோட்கள் புரட்ட….. அதாவது கும்ப ராசியில்… அவிட்டம் நட்சத்திரத்திற்கு ராகு அமர்ந்திருக்கிறார். அதேபோன்று, மிருகசீரிடத்தில்  சூரியன் அமர்ந்திருப்பதால், இரண்டரை ஆண்டு காலம் உலகம் முழுதும் பொருளாதார சிக்கல், பணவரவு, நோய் நொடிகள், மனிதர்கள் 90 விழுக்காடு அளவுக்கு மீறிய சுயநலமாக வாழ்வார்கள் என்று விதி அமைக்கப்பட்டிருக்கிறது.  அந்த விதியை நீ சதாகாலமும் சிந்திப்பதால், உனக்கு அந்த உணர்வுகளை ஆசான் கொடுத்திருக்கிறார். 

===========================
#  பூமியை நெருங்கி வரும் மிகப்பெரிய கோள்.
===========================
# இன்னும் வெப்பம் இவுலகில் அதிகமாகும் 
===========================

அடியவர் #4:-   ஆனால் அதை தம்மால் தடுக்க முடியவில்லையே என்ற ஒரு வருத்தம் ????

குருநாதர் :-  அப்பனே, இங்கு கேட்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- (சுவடியை நோக்கி ) இங்க கேட்கணும். 

அடியவர் #4:-  (சுவடியை நோக்கி திரும்பினார்  )

அடியவர் #4:-    அப்பா, அப்படி உணர்த்தப்படும்போது…

குருநாதர் :-   அப்பனே, எது என்று கூட பின் அவன் சொன்னானே. அப்பனே, நிச்சயம் எது என்று புரிய. அதாவது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, சரியாகவே அப்பனே, எது என்று புரிய, அறிய, அப்பனே, தை மாதத்திலே, பின் நிச்சயம் பின் அதிக வறட்சி தொடங்கிவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அவர் (அடியவர் #5) சொன்னாரே, இது எப்ப தொடங்கிச்சு? 

அடியவர் #4:-  தையிலே தொடங்கிடுச்சு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தையிலவே தொடங்கிச்சு. 

குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் அடுத்தடுத்து, அப்படி நிச்சயம் ஏது என்று புரிய, இப் புவி தன்னை, அப்பனே, பின் அதாவது பல பின் நூறு ஆண்டுகளுக்கு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு கோளானது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைத்து கிரகங்களை விட, அப்பனே, அது பெரியது என்பேன் அப்பனே.  

அது நிச்சயம் தன்னில் பூமியை நெருங்கி வரும் என்பேன் அப்பனே.

அவ்வாறு நிச்சயம். அவ்வாறு, அப்பனே, அது சூரியனை விட பல மடங்கு அப்பனே, பின் வெப்பம் வாய்ந்தது என்பேன் அப்பனே. 

அவ்வாறாக அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பின் புவியானது, அதாவது பூமியினை, பின் நிச்சயம் தன்னில் கூட தொடுகின்ற பொழுது, அப்பனே, எவை என்று அறிய  அப்பனே, பின் அப்பனே, அவ் வெப்பத்திற்கு புவியானது அப்பனே, நிச்சயம் தாங்காதப்பா. 

அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நெருப்பு, அப்பனே, பின் இன்னும் எரிக்கற்கள். அப்பனே, இன்னும் வெப்பம் அதிகமாகும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  புரியுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மழையும் கூட அப்பனே, எது என்று புரிய, அப்பனே, பின் நிச்சயம், பின் வெப்பமாகத்தான் பொழியும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அந்த மழை கூட, அது மாதிரி வரும் பொழுது, சூடாதான் பொழியும். 

===========================
# கந்தப்பெருமான் தனது வேலால் வெப்பத்தைத் தடுத்து, பூமியை காத்துக்  கொண்டு உள்ளார்கள்.
===========================

குருநாதர் :-  அப்பனே, இதனால்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சொன்னேனே, அப்பனே, இதனால் தான் முருகன் வேலோடு, அப்பனே, அதை எடுத்துக் கொண்டே வருகின்றான். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அதனால்தான், அந்த வெப்பத்தை போட்டு போட்டு என்ன பண்றாரு? அந்த வேலை என்ன பண்றாரு? எடுத்து நிறுத்துன்னு வந்து, பூமியை வந்து இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு? அடிக்கடி க்கு வெப்பத்தை?  

அடியவர் #5:- தணிக்கிறார் . 

===========================
# வரவுள்ள வெப்பத்தின் பேரழிவுகள்…..
===========================

குருநாதர் :-  அப்பனே, வெப்பம் அப்பனே, நிச்சயம் மனிதனை தாக்குகின்ற பொழுது, அப்பனே, மனிதனின் மனநிலைகள் மாறும் அப்பா. பைத்தியம் போல் திரிவான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அந்த வெப்பம் வந்து, மனுஷன் தாக்கும் போது  என்ன ஆகும் ?  

அடியவர்கள் :- மனிதன் பைத்தியம் போல் ஆகிவிடுவான்…

சுவடி ஓதும் மைந்தன்  :- மனிதன் பைத்தியம் போல் யோசிப்பான் என்று சொல்கின்றார்.  

குருநாதர் :-  அப்பனே, உடம்புகள் பழுதாகும் அப்பா. அதிக நோய்கள் ஏற்படும் அப்பா.  திடீர் திடீர்னு இறந்து விடுவான் அப்பா.

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஓகேங்களா? 

குருநாதர் :- அப்பனே, இதனால்  எது என்று புரிய அப்பனே, நிச்சயம் கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- கேட்கலாம். 

அடியவர் #4:-  இந்த வறட்சியால் லோபமுத்திரை ஆன  தாய் காவேரி வறண்டு கிடைக்கிறாள். வருத்தமாக இருக்கிறது. 

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. நிச்சயம், அவனை கேள். எழுப்பி.

அடியவர் #5 :- ( பதில் சொல்ல எழுந்தார்கள்) 

அடியவர்கள் :- (  சிரிப்புகள்)  

அடியவர் #4:- அய்யா இந்த வறட்சியால் தாயான லோபமுத்திரை, காவேரி தாய் வறண்டு கிடைக்கிறாள். வருத்தமாக இருக்கிறது. 

அடியவர் #5:- கால கிரகங்கள் கலியுகத்தில் வருகின்ற கால கிரகங்களில் மாற்றங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். அதே மாதிரி இருக்காது.  உலகம் எப்படி இருந்தாலும், அதேபோன்று கால நிலைகள் கூட நமக்கு மாறிக்கொண்டே வருகிறது. அதற்கான சூழ்நிலையும் நீங்கள் நினைப்பதைப் போல ஒரு நல்ல காரியங்கள் நடப்பதற்கும் சில காலங்கள் பொறுத்து தான் நாம் ஆகவேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற பின் என் மாணவனை தான் நீ அழைத்து வந்திருக்கின்றாய். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள், கை தட்டல்கள்….)  

அடியவர் #4:-  எல்லாம் தங்கள் அருள் ஆசி அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறு ஆசிகள் இருக்கின்ற பொழுது உனக்கு, அப்பனே, தரமாட்டானா  என்ன இவ் அகத்தியன்?  

சுவடி ஓதும் மைந்தன்  :- இவ்வாறு நீயே என்னை சொல்ற.. நீயே என்னை கேட்கிற… இவ்வாறு ஆசிகள் இருக்கும்போது, உனக்கு நான் தரமாட்டேன்னா என்ன? 

குருநாதர் :-  அப்பனே, தராதற்கு ஒரு காரணம் உண்டு. ஏன்  என்றால், இப்பொழுது தந்தால், அவை உன்னால் சமாளிக்க முடியாது. 

அடியவர் #4:-  புரிகிறது..

குருநாதர் :- அப்பனே, எனக்கு புரியவில்லை. 

அடியவர்கள் :- ( பலத்த குபீர் சிரிப்புகள்….)  

அடியவர் #4:-  இப்பொழுது மனை அமைந்தால், அது என்னால் தாங்க முடியாது என்ற கருத்தில் கூறியுள்ளீர்கள்.  

குருநாதர் :- அப்பனே, எது என்று இன்னும் என்னென்ன பின் கேள்விகள் கேட்பாய் என்பதெல்லாம் பின் எனக்கு தெரியும். ஆனால், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எனக்கு புரியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு உன் வாழ்க்கை பத்தி எனக்கு புரியலப்பா. உன் கூட விளையாடுறாங்க. வேற ஒன்னும் இல்ல. 
ஓகேங்களா? வந்து 

===========================
# எருமை போல் நமது பொறுமை = கருணை = நன்றி…..
===========================

அடியவர் #4:-  கருணை.

குருநாதர் :- அப்பனே, எருமை என்று யான் சொல்கின்றேன். 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  

அடியவர் #4:- எருமை.

சுவடி ஓதும் மைந்தன் :- நீ கருணை என்று சொன்ன,  நான் எருமை என்று சொல்லுகின்றேன். 

குருநாதர் :-  அப்பனே, எதனால்? 

அடியவர் #4:-  (குருநாதர்) எவ்வளவு கருணை மழை பொழிந்தாலும், (எனக்கு ) புரிய மாட்டேங்குது. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று கூற, என்னுடைய ஆசிகள் என்று சொல்லிவிட்டாய். அப்பனே, இதனால் , அப்பனே, நிச்சயம் எருமை அப்பனே, பின் எவ்வாறு உதைத்தாலும், எவ்வாறு மழை பெய்தாலும், அனைத்தும் பொறுத்துக் கொள்ளும். அதுபோல், பொறுத்துக் கொண்டிரு.  அப்பனே, ஏனென்றால், உன் …………………….. அப்படித்தான். அப்பனே. இழுத்து, அடித்து, …..………. அப்பனே, இதனால் , எருமை போல் இரு. பார்த்துக் கொள்வோம். அனைத்தும் நடக்கும். 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  

அடியவர் #4:-  தாங்கள் கூடவே இருந்தால், அதுவே போதும். 

குருநாதர் :- அப்பனே, புரிகின்றதா? இப்பொழுது எதற்கு சொன்னேன் என்று? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிரிப்பை அடக்கமுடியாமல் ) ஐயா, இப்படி எல்லாம் அகத்தியர் சொல்றாரு. ஐயா, அதனால வந்து எல்லாத்தையும் அது தரல, இது தரல, இப்படி தரல, அப்படி எல்லாம் சொல்லல. எருமை மாட்டு மாதிரி பொறுத்தே ஆகவேண்டும். அவ்வளவுதான். 

அடியவர் #4:-   சிவனேன்னு இருக்கின்றேன் ( அமைதியாக )

===========================
# அனைவருக்குமே ஒரு வாக்கு…..
===========================

குருநாதர் :-  அப்பனே, அனைவருக்குமே சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட, பின் அவையே, அதாவது அவ் உயிரே, அமைதியாக எவை என்று கூட கடக்கின்றது  காலத்தை. எவ்வளவு அடிகள், எவ்வளவு எவை என்று புரிய பின்  என்ன ஏது என்று எதை செய்தாலும் , ஆனாலும் எதை என்று புரிய பின், மனிதன் காத்துக் கொண்டிருக்கின்றானா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எருமை மாதிரி ஒன்னும் தெரியாதும்மா… அது என்ன அடி அடிச்சாலும், மழை பெஞ்சாலும், எல்லாத்தையும் காத்து நிக்குது…..

குருநாதர் :- அப்பொழுது மனிதன் பெரியவனா? எருமை பெரியதா? எருமை என்று சொல்லக்கூடாது. நிச்சயம் நன்றி என்றே சொல்ல வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நன்றி, அதுக்கு நன்றி என்றே சொல்ல வேண்டும் என்றாரு. அதுவே வந்து காத்து நிக்குதுப்பா. எவ்வளவு அடி வச்சாலும், எட்டி உதைச்சாலும், அது மேல எது போட்டாலும், அது என்ன பண்ணுது? பார்த்து நிக்குது. ஆனால் மனிதன் காத்துக்கொள்ளவில்லை. அப்ப, அது பெருசா? மனுஷன் பெருசா? எருமை தான் பெருசு என்றார். அதனுடைய புத்தி மிக பெருசு என்றார்.  

===========================
# எதை இறைவன் உங்களுக்கு பெரிதாக கொடுப்பார்? 
===========================

குருநாதர் :- எது என்று அறிய, அதேபோலத்தான் நீ எதை தாங்கிக் கொள்கிறியோ, அதை நிச்சயம் பெரிதாக இறைவன் கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 

அடியவர் #4:-  புரியுது. 

குருநாதர் :- அப்பனே, புரிகின்றது, புரிகின்றது என்று சொல்கின்றாய். அப்பனே, கடைசியில், அப்பனே, பின் குழப்பி விடுகின்றாய். 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  

அடியவர் #4:-   என்ன பண்ணறது அப்பா…. நீங்கள் கூட இருக்கின்றதால், நம்பிக்கையை குழப்பிக்கொள்ளும். 

குருநாதர் :- அப்பனே, அதனால் எருமை போல் இரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   எருமை போல் இரு. எது வந்தாலும், தாங்கிக்கோ. நம்ம பார்த்துக்கலாம். 

===========================
# எருமை அதற்கு மற்றொரு பெயர், கருணை.
===========================

குருநாதர் :-  அப்பனே, சித்தர்கள் அருகில் வந்தால், இப்படித்தான் அப்பா, நிச்சயம். 

**** அப்பனே, எருமை, அப்பனே போல் இருக்க வேண்டும்.  ****

**** அதற்கு பெயர், மற்றொரு பெயர், கருணை. **** 

சுவடி ஓதும் மைந்தன் :-  எருமை மாதிரி இல்ல. அது பேர் என்னது? கருணை, கருணை, கருணை, கருணை, கருணை. 

குருநாதர் :-   அப்பனே, நீ எப்பொழுது கருணையாக போகின்றாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :- நீ எப்போது வந்து, ஐயா, எருமையா? 

குருநாதர் :-   அப்பனே, என்னிடத்தில் நீ விளையாடுகின்றாய். அதேபோலத்தான் உன்னிடத்தில், பின் விளையாடுகின்றேன்.

அடியவர் #4:- என் அப்பன் அகத்தீசன் இடத்தில் விளையாடாமல் யாரிடத்தில் விளையாடுவது ?
 
குருநாதர் :-  அப்பனே,  அதனால்தான் எருமை என்று சொல்லிவிட்டேன். 

அடியவர் #4:-  எல்லாம் தங்கள் கருணை. 

குருநாதர் :-   அப்பனே, எருமை, 

அடியவர்கள் :- (பொறுமையின் ஆழம் உணர்ந்து ) கருணை, கருணை, கருணை, எருமை…..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளை சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2287 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் வாக்கு!








வணக்கம் அகத்தியர் அடியவர்களே

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் உள்ள வடக்கு வீதியில் அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் அம்மன் அக்னி குண்டத்தின் மீது நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கி தவமிருக்கும் மிகவும் அபூர்வமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

இத்தலம் திருவண்ணாமலையில் உள்ள மிகவும் பழமையான அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.கார்த்திகை தீபத் திருவிழா தோன்றுவதற்கு மூல காரணமாக இத்தலத்து ஆதி காமாட்சி அம்மன் விளங்குகிறார்.

பூத நாராயண பெருமாள் எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இடதுபுறம் தபஸ் காமாட்சி தவம் செய்யும் காமாட்சி அதாவது ஆதி காமாட்சி ஆலயம் அமைந்துள்ளது திருவண்ணாமலை செல்லம் பக்தர்களுக்கும் கிரிவலம் செய்யும் பக்தர்களுக்கும் இப்படி ஒரு மகிமை வாய்ந்த ஆலயம்... ஆலயம் இருப்பது தெரியவில்லை திருவண்ணாமலை ஊர் மக்களுக்கு மட்டும் தெரிந்திருக்கின்றது மிகவும் பழமையான கிரிவலம் தோன்றுவதற்கு காரணமான.. அன்னை காமாட்சி அம்மன் ஆலயம் 

கட்க தீர்த்தம் காணப்படும் குளத்தையும் அன்னை உருவாக்கிய.. தலம் இது!!



இந்த ஆலயத்தை பற்றி அருணாச்சல புராணம் மற்றும் பல்வேறு புராண கதைகள் இருந்தாலும் குருநாதர் இந்த ஆலயத்தை பற்றியும் அன்னையைப் பற்றியும்.. சிறு குறிப்பாக வாக்குகள் தந்தார்..

இந்த ஆலயத்தில் வைத்து குருநாதர் வாக்கு உரைத்ததற்கான காரணத்தையும் தெரிவித்தார்!!




அவை பின்வருமாறு. 




ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்; அகத்தியன்,

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள். அப்பனே, பல கோடி அப்பனே நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம். அப்பனே


, ஏன், எதற்கு, இவ் அம்மையும் கூட!!! நிச்சயம் ஆசீர்வாதம்!!

 ஏனென்றால் அப்பனே, இங்கு பின் ஆசிரமமும் அப்பனே, பின் இடைக்காடனும், பின் நடத்தி, வந்தான் அப்பா!!



  அப்பனே, இதனால் அப்பனே, உங்களுக்கும் சில கிரக நிலை பற்றி நிச்சயம்  தெரியும். ஏனென்றால் அப்பனே !!! நிச்சயம் தன்னில் கூட, இனி கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய. அப்பனே, பல விஷயங்கள் உங்களுக்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இடைக்காடன் ஆசீர்வதிக்கும் பொழுது, கிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரிய வரும் வருங்காலத்தில்
அப்பனே, கவலைகள் இல்லை!! நிச்சயம் தன்னில் கூட !!!

இதனால்தான் அப்பனே, பக்குவங்கள் பெற்று, அப்பனே பின், அறிவின், அப்பனே, பாதை பெற்று, அப்பன் நிச்சயம் தன்னில் கூட பக்குவங்கள் ஏற்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,  அப்பனே, உங்களுக்கு இல்லறமும் உண்டு.


 அதனால்தான் அப்பனே, உங்களை மெதுவாக நடத்துகின்றேன் யான்.

 
 இதனால் அப்பனே, எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இன்று, அப்பனே, நிச்சயம் தெளிவான ஞானத்தை உங்களுக்கு அள்ளித் தருவேன். அப்பனே, 


 அப்பனே, பின், என்ன செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் தன்னில் செய்கின்றேன்.
 அப்பனே, 


 அப்பனே, நிச்சயம் தெளிவு கொடுப்பேன்.  அறிந்தும் கூட, அப்பனே,

அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பல நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று, அப்பனே, பலவற்றையும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட,

 அப்பனே, அதாவது, , தீய வினைகள் எல்லாம், அப்பனே, பின், ஒரு காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

 மனிதனின், பின், பெரும் பாடு, எவை என்று கூட, அப்பனே, நோய்கள், அப்பனே, எதை என்று புரிய,


 இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனதிற்கு நிம்மதி இல்லை, அப்பனே,

 இவையெல்லாம், எது என்று புரிய, அப்பனே, பின், அதாவது, அப்பனே, பின், ஏதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், இவ்வாறாக, நிச்சயம் மன நிம்மதி, , காசுகள் இல்லை, இன்னும் கூட, அப்பனே, பின், நோய்கள் என்றெல்லாம் பரவி, அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, யான்தான், நிச்சயம் தனி கூட, எவன் என்று கூட, பின், பெரியவன், தீய சக்தி தான் இவ்வுலகத்தில் பெரியது என்றெல்லாம்,
 அப்பனே, அவ் தீய சக்தி ஆட்டம் கண்டது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


, இதனால் பின், ஒன்றும், ஒன்றும், ஒன்றும், செய்ய முடியாது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட


, இவ்வாறாக, எது என்று புரிய, ஆனால், நிச்சயம் தன்னில் கூட, பின், எவை என்று புரிய, பின், அப்படி, எதை என்று கூற, இப்படியா???? என்று அன்னை!!

, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், அனைத்தும் இணைந்து அழிக்கின்றேன் என்று அன்னை!!

(தீய சக்திகளை அழிப்பதற்கு அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து அன்னை அவதாரம்)

, நிச்சயம் தன்னில் கூட, பின், அனைத்து, பின், எவை என்று கூட, பின், ஏது என்று புரிய, பின், அனைத்தும், எவை என்று கூட, பின், சாந்தமான ரூபத்திலே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று,  ஒரு ஆற்றலை கொண்டு, நிச்சயம் அனைத்தும், பின், எவை என்று கூட, பின், பின், ஏது என்று கூட, பின்,   சக்திகள் இணைத்து, பின், அதாவது, நிச்சயம், பின், கைகள் வழியாக, நிச்சயம் ஆற்றலை செலுத்தினாள்..அன்னை, 

பின், நிச்சயம் அமைதியாகவே,


 பின், எது என்று புரிய, பின், அதாவது, தீய சக்தி அழிந்தது,


 இதனால், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,

 அமைதியாக இருந்து, நிச்சயம் வழிநடத்துவாள் ஆசிகள்.


அடியவர் கேள்வி!!

அப்பா
, அன்னையை நாங்கள் எந்த விதம் வணங்குவது?



அப்பனே, எதை என்று கூட, பின், நிச்சயம் தெளிவு கூட, அருள்கள், அப்பனே, பின், நிச்சயம் தெளிவு, அவளே, பின், அழைத்தாள்... இங்கு இப்பொழுது அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட 

 

, இதனால், அப்பனே, பின் அவள், எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம்,. நீங்கள்.வணங்கலாம் அப்பனே, அவளை.



அடியாரின் கேள்வி.. அப்பா இந்த ஆலயத்திற்கு பக்கத்தில் துர்கா தேவி ஆலயம் உள்ளது கட்க தீர்த்தம் உள்ளது இதன் மகிமை கூறுங்கள்


 இதனால், அப்பனே, எதை என்று புரிய.
  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதன், பின், வாக்கு மிகப் பெரிது என்பேன்,
 அப்பனே. பொறுத்திருந்தால் நிச்சயம்  சொல்வேன். இப்பொழுது வேண்டாம் என்பேன், அப்பனே. 

ஆசிகள் நிச்சயம் மற்றொரு முறையும் சொல்கின்றேன்.
 

அடியாரின் கேள்வி.. அப்பா இந்த ஆலயத்தில் உள்ளே அன்னையாருக்கும் முன்பாக கௌதமரிஷியின் சிலையும் உள்ளது அதன் மகிமையை பற்றியும் கூறுங்கள்.

அப்பனே, அதனால், அப்பனே, நிச்சயம் இடைக்காடன், அப்பனே, பின், ஆசிரமத்தை அமைத்தான். அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் ஞானிகள். அப்பனே, எதை என்று கூட, அப்பனே, இங்கே வந்து, எதை என்று கூட, அப்பனே, பின், பல வெற்றிகள் கூட,

அப்பனே, பின், எதை என்று புரிய, அப்பனே, இங்கிருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, பின், பல ரிஷிகள் அப்பனே, நேரடியாக, அப்பனே, நிச்சயம், அதாவது, எது என்று கூட, பின், அதாவது, பின், அனைத்து சக்திகளும் ஒன்று இணைந்து காமாட்சியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

அப்பனே, இவ்வாறாக இணைந்து, அப்பனே, பின், இங்கே, பின், எவை என்று பின் சக்தியாக இருந்து, நிச்சயம் தன்னில் கூட, அவ் சக்திகளை  பெற்று,   ஞானிகள், பின், கண்ணுக்கு இதமாகவே பின்,  இங்கிருந்து, நிச்சயம் ஈசனை தரிசித்தனர்.

(ஆதி காமாட்சி அம்மன் ஆலயத்தின் பின்புறம் பூலோக முதல் சொர்க்கமான மாமலை அண்ணாமலை ஈசனின் தரிசனம் அற்புதமாக காட்சி தெரியும்)

இதனால், அப்பனே, பல முனிவர்களும் இங்கு வந்து, பின், எதை என்று புரிய, அப்பனே, ஈசனை தரிசிப்பதற்காகவே!!

இதனால், அப்பனே, மறைமுகமாக, அப்பனே, பல முனிவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.

அப்பனே, அடுத்த முறை ஒரு மூலாதாரம் உள்ளது என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லுவேன் என்பேன், அப்பனே, அடுத்த முறை சொல்கின்றேன்.

அப்பனே ஆசிகள்!!! ஆசிகள்!!

ஆலயம் பற்றிய மேலும் விவரங்கள் 

திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்
Dec 2, 2025
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற  மூல காரணமாக அமைந்த காமாட்சியம்மன் 

காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள  வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும். 

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ  பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்....

தீய சக்திகளை அதாவது அசுர சக்திகளை சாந்தரூபத்தில் சக்திகளை அனைத்தும் ஒருங்கிணைத்து அழித்து பின்..(குருநாதர்  அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் படி ) 

(அருணாச்சல புராணம் கூற்றுப்படி அதாவது தீயசக்தி அசர சக்தியான மகிஷாசுரன் வதம் செய்துவிட்டு)

 அன்னை மலை கிரிவலம் வரும் பொழுது
கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.

இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்கந்தபுராணம் மற்றும் அருணாச்சல புராண நூல்கள் சான்றளிக்கின்றன.

ஆலய மேப்

Vadaveethi Sri Aadhi Kamakshi Temple
https://maps.app.goo.gl/iMqWBAM1PxdPS6w97?g_st=atm

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 
 

Wednesday, 19 August 2026

சித்தன் அருள் - 2286 - அகத்தியர் வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2285 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 13!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 13

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 12  அதன் தொடர்ச்சியாக ….)

===========================
# அடி முட்டாள் தனமான மூடநம்பிக்கை :- 
# அசைவம் நிறுத்தினால் குழந்தைகளுக்கு சத்துக்கள் உடம்பில் வராது 
===========================

அடியவர் #1  :-  அடுத்தது, அய்யா உயிர் பலி இடமாட்டேன். இடுவதற்கு அனுமதிக்க மாட்டேன்னு சொல்லி, ஐயாவுடைய வாக்கு டெய்லி படிக்கிறோம் இல்லையா? அப்ப அது வந்து இப்ப நம்ம பெரியவர்கள்ட்ட, இப்ப நம்ம இருக்கிறோம். அது மாதிரி சொல்றப்ப, குழந்தைகளுக்கு சத்து இல்ல. நீ வந்து ஏன் கொடுக்க மாட்டேங்குற? வைக்க மாட்டேங்குற? நம்மளே பேசுறாங்க ஐயா. அதுக்கு ஒரு பதில் சொல்லுங்க.

குருநாதர் :- எது என்று புரிய பின் அதாவது, பின் அனைவரும் இவ்வாறு உட்கொள்வதால், அனைவரும் நன்றாக இருக்கின்றார்களா? நீங்கள் பார்.

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் கறி எல்லாம் சாப்பிடுறாங்க. எல்லாரும் நல்லா இருக்குறாங்களா? உங்களுக்கு தெரியுமான்னு கேக்குறாரு. 

அடியவர் #2  :- இல்லைங்க அய்யா, இப்ப தம்பி வந்து கண்ணாடி கழட்ட மாட்டேங்குறான். கண்ணாடி கழட்டுனா வந்து blur இருக்கு. என்ன சொல்றாங்க? sureity கொடுங்க, இந்த மாதிரி கீரை கொடுங்க, அப்படின்னு சொல்றாங்க. 

குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய  அப்பனே, பின் பலவகை கீரைகளே உள்ளதப்பா.  இதன் மூலம் இல்லாததா? 

**** பொன்னாங்கண்ணியில் இல்லாததா அப்பனே ? **** 

****  பின் கரிசலாங்கண்ணியில் இல்லாததா அப்பனே ? **** 

****  முருங்கை இலையில் இல்லாததா அப்பனே ? **** 

அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கைதட்டல்கள்………… ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  கரிசலாங்கண்ணில இல்லாததா? 

அடியவர் :- முருங்கை இலை, 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருங்கை இலை? 

அடியவர் :-  பொன்னாங்கண்ணி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொன்னாங்கண்ணி. 

===========================
# பொன்னாங்கண்ணி கீரை  = 100 உயிர்களுக்கு சமம்.
===========================

குருநாதர் :-  எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட சிறிது பின் அதாவது, பொன்னாங்கண்ணி கீரை எதை என்று புரிய பின் ஏது என்று புரிய. பின் ஒரு 100 பின் எவை என்ற பின் உயிர்களுக்கு சமம். 

அடியவர் #1 :- ( ஆச்சரியத்தில்) அப்பா !!!!!!!!!!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  பொன்னாங்கணி உட்கொண்டால், ஒரு 100 இறைச்சிக்கு சமம் என்றார் வந்து…. 

அடியவர் #2 :- எல்லாத்திலேயும் பூச்சி மருந்து அடிக்கிறாங்க அய்யா. 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

குருநாதர் :-  எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  கூட அப்பனே, எவை என்று கூட நீ தனியாக பின் வளர்த்து அப்பனே, உண்டு.

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

அடியவர் #7 :- உங்கள தனியா வளர்த்து சாப்பிட்ட சொல்லறாரு . 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரியுது இல்ல? சொல்லணும், கேக்கணும். அப்ப என்ன பண்ற? நீ தனியா? 

அடியவர் :- வளர்த்து சாப்பிடணும். 

குருநாதர் :-   அப்பனே, சோம்பேரி. நிச்சயம் தன்னில் யார் எதை கொடுத்தால், பின் உட்கொள்ள வேண்டுமா? எவை என்று கூற உட்கொண்டுதான் நோய் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அது சோம்பேரி என்றாரு. நீ எதை கொடுத்தாலும் சாப்பிட்டுடுவியா? நீ பண்றா….. என்றாரு. 

குருநாதர் :-  எது என்று அறிய அப்பனே, பின் இதுவும். அப்பனே, பின் சோம்பேரி விலக்குவதற்காகவே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் அடிக்குது. என்னது? உன் சோம்பேரியை நீக்குறதுக்காக தான். அப்ப நீ அதை அடிக்குதுன்னு தெரியுது இல்ல? ஏன் சாப்பிடுற? நீயே விளைவி என்றாரு. 

அடியவர் 6 :-  தொட்டியிலே வளர்க்கலாம். 

குருநாதர் :-  அப்பனே, நிலத்தை தரட்டுமா? 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை வளர்க்கறதுக்கு? 

அடியவர் 7  :- இடம் வேணுமான்னு கேக்குறாரு? 

சுவடி ஓதும் மைந்தன் :- இடம் வேணுமான்னு கேக்குறாருங்க. ஐயா, 

அடியவர் 7  :- இடம் வேணும்னா   சொல்லுங்க. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை இல்லை. அப்பனே, உன் வேலையை செய்து கொண்டே இரு. அனைத்தும் நல்கும். 

அடியவர்கள் :- ( கைதட்டல்கள்  ) 

சுவடி ஓதும் மைந்தன் :- தொடர்ந்து உன்னுடைய கடமையை செஞ்சுட்டே இரு. நீ அதை வளர்க்கிறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் வரும்ன்றாரு. 

பாடகர் :- ( ஹாஸ்யமாக ) அவர் ஒரு ஏக்கர் கேக்குறாரு ஜானகி. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று  அப்பனே, பின் இங்கெல்லாம் கொடுத்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நாளை பிணங்கள்  அப்பனே, புதைப்பிட்டு விடுவார்கள். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க எல்லாம் இடம் கொடுத்தா என்ன பண்ணுவாங்களாம்? 

அடியவர் 7:- நாலு பேரை புதைச்சிடுவாங்க….

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஏக்கர் அவர் சொன்னாரு இல்ல? விருகம்பாக்கத்தில்… அங்கெல்லாம் இடம் கொடுத்தாருன்னா, ஒரு ஏக்கர் கொடுத்தாருன்னா, நாளைக்கு பிணம் புதைச்சிட்டு போயிடுவாங்க. எல்லாம்… அங்கெல்லாம் வந்து….

குருநாதர் :-  அப்பனே, எங்கு எதை எவை என்று கூற மண் என்று உள்ளது என்பேன் அப்பனே.  அவ் மண்ணால் தான் அப்பனே, அனைத்தும் நல்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு மண்ணு இருக்குதாம் வந்து… 

அடியவர் :- ஒரு ஊருக்கு, ஒரு மண். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒவ்வொரு ஊருக்கு மண்ணு… இதுக்கு தான் வந்து… அந்த மண்ணை வந்து. 

குருநாதர் :-  அப்பனே, அவ் மண்ணை உட்கொண்டாலே அனைத்தும் விலகும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நீ ஒரு மண்ணு இருக்குதாம் ? அந்த மண்ணை நீ உட்கொண்டாலே…. எல்லா வியாதியும் போகும்ன்றாரு. 

அடியவர் 3 :- அந்த மண்ணுல விளைஞ்சது, 

சுவடி ஓதும் மைந்தன் :-  விளைஞ்சது இல்ல? மண்ணு… மண்ணு இருக்கு. 

அடியவர் 18  :- மண்ணு இருக்குது. ஒரு ஊர்ல, ஒரு சிவன் கோவில்ல அந்த மண்ணு சாப்பிட்டாவே எல்லாம் போற மாதிரி ஒரு மண்ணு. சிவன் கோவில், 

குருநாதர் :-  தாயே, இதனால்  உங்கள் பின் முன்னோர்களின் ஆன்மாக்கள் அனைத்தும் நீங்கள் தான் முற்று பெற வைக்க வேண்டும். அதனால்தான் கவலை வேண்டாம். திரிவீர்கள். ஆனாலும் மெதுவாகத்தான், முற்று பெற்றவுடன் அவர்களே சரியாக. இதனால் தான் உங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்கள் எவை என்று புரிய, நிச்சயம் பின் வழிபாடு இல்லை. நீங்களாவது வழிபாடு செய்து அனைத்தும் பின் அழைத்துச் சென்று எவை என்று விட்டு விடுங்கள் இறைவனிடத்தில் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உங்களுக்கு என்ன பண்றது? அலையற வேலைதான். அங்க போறது, இங்க போறது. யாரோ சொன்னா அங்க போவோமா, இங்க போவோமா, அப்படி போவோமா? அப்ப உங்களை, உங்களை வச்சுக்கிட்டு அவங்க என்ன பண்றாங்க? முன்னோர்களை?

அடியவர் #1 :- முக்தி அடைய வைக்கணும் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொன்னும் முக்தி அடையும் போது உங்களுக்கு நல்லதா இருக்கும். அதெல்லாம் கொடுப்பாருமா. சாப்பாட்டுக்கு எல்லாம் குறையில்லாம கொடுப்பாங்க. பெட்ரோலுக்கு காசு கொடுப்பாங்க. எல்லாமே வரும். ஆனா?  

அடியவர் #1 :- நாங்க தான் போய் தேடி கண்டு பிடிக்கணும்….

சுவடி ஓதும் மைந்தன் :- தேடி… அப்படியே போகும் என்று போகின்ற பொழுது ஒருத்தர் ஒருத்தர் லைன் லைன்ல முக்தி அடையும் பொழுது… ஆமா, இது மாதிரி நிறைய இருக்குமா? ஒருத்தர் ஒருத்தருக்கு வந்து சொல்லிடுவார். உங்களால தான் முக்தி அடையனும்னு சொல்லிட்டு… பல பேருக்கு இது மாதிரி வந்திருக்குது. வந்து… அப்ப வரும் பொழுது அவங்களுக்கு சில கஷ்டம் மெதுவாதான் நல்லா இருக்கும். வந்து.. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அவங்க நல்லா முக்தி போனல எல்லாரும் வந்து அப்ப நீங்க தான் அனுப்புனீங்க. அதனால வந்து (முன்னோர்கள் வழிபாடு ) பண்ணிட்டே இருங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களால எல்லாம் முக்தி அடையும் பொழுது அவங்க ஆரோக்கியமா இதை பண்ணிருவாங்க. 

===========================
# முன்னோர்கள்  முக்தி அடைஞ்சாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது? 
===========================

அடியவர் #1 :- ( முன்னோர்கள் ) அவங்க முக்தி அடைஞ்சாங்கன்னு நமக்கு எப்படி தெரிஞ்சுக்கிறது? 

குருநாதர் :-  எதை என்று கூற பின் நீங்கள் அதாவது குறை உள்ளதே,  அவை சரியாகிவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது குறை இருக்குறது எல்லாம் வந்து… அது என்ன ஆகும்? 

அடியவர் 7:- சரி ஆகிடும்….

சுவடி ஓதும் மைந்தன் :-  சரியாயிடுச்சுன்னா?  

அடியவர் #1 :- அது சரியாகுறதுக்குரிய அறிகுறிகளும் காட்டுமா அய்யா ? 

குருநாதர் :-  **** நிச்சயம் தன்னில் கூட ****.

சுவடி ஓதும் மைந்தன் :-   நிச்சயம் காட்டிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நீங்க வணங்க வணங்க. அது முக்தி போக போக ஒன்னொன்னு.. போக போக உங்களுக்கு தெரியும். நிச்சயமாக தெரியும். 

===========================
# 488 நோய்களுக்கு ஒரே மருந்து…
===========================
# அன்பு அடியவர்களே , கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
===========================

அடியவர் #2 :-  அய்யா இது வந்து கண் சார்ந்த எல்லாத்துக்குமே இந்த கீரைங்களா?  இல்ல எப்படிங்க  அய்யா? 

அடியவர் :- பொதுவாக பொன்னாங்கண்ணி , கரிசலாங்கண்ணி, முருங்கை இலை

குருநாதர் :-  எதை எது என்று புரிய பின் அதாவது  488 நோய்கள் எவை என்று புரிய பின் இவை தன் ஒன்றே. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  488 நோய்களுக்கு இந்த பொன்னாங்கண்ணி கீரை , கரிசலாங்கண்ணி கீரை , முருங்கை கீரை 

குருநாதர் :-  இவையெல்லாம் நிச்சயம் பின் நன்கு அரைத்து எதை என்று கூற, பச்சை தன்னில் கூட அரைத்து, வெறும் வயிற்று  தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் உட்கொண்டு வந்தாலே, நிச்சயம் பின் வெறும் வயிற்றில் அதிகாலையிலே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை  எல்லாம் நல்லா அரைக்கணும் வந்து…. 

அடியவர்  :- பச்சையா சாப்பிடணும், 

சுவடி ஓதும் மைந்தன்  :-   பச்சையா சாப்பிடணும்…..

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதெல்லாம் ( பிள்ளைகளுக்கு ) கொடுங்கம்மா. ( பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை )  நிறைய கொடுங்கம்மா. 

அடியவர் #1 :- நான் குடுத்துட்டேன். போன தடவையா ஐயா வாக்கு சொல்றப்பயே இதுவரைக்குமே தொடர்ந்து கொடுத்துட்டு இருக்கோம். 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற பின் அடிக்கடி அப்பனே பின் நிச்சயம் தன்னில் பிம்பத்தை கழட்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அடிக்கடி இது ( கண்ணாடி) கழட்டணும்ன்றாரு. 

அடியவர் :- கண்ணாடிய காட்டணும்னு சொல்றார் 

அடியவர் #2 :-  ( கண்ணாடி)  கழட்ட மாட்டேங்குறாங்க அய்யா. கழட்டுனா தெரியு மாட்டேங்குது என்று சொல்றான்   அய்யா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- தம்பி, கழட்டு. நீ வந்து. 

அடியவர் # 1 :-  கழட்டுனா blur ஆ இருக்குனு சொல்ரான் அய்யா…

சுவடி ஓதும் மைந்தன்  :-  அகத்தியர் சொல்லி இருக்காரு. ஓகேங்களா? 
அடிக்கடி கழட்டணும். ஓகேவா? 

அடியவர் #2 :-  கழட்டுனா தெரிய மாட்டேங்குது என்று சொல்கிறான் அய்யா. 

குருநாதர் :- அப்பனே  யான் பார்த்துக் கொள்கின்றேன்

அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்களை ) 

( சில உரையாடல்கள் ) 

குருநாதர் :-  எவை என்று புரிய பின் நிச்சயம் இப் பிம்பமே. அப்பனே, பின் எவை என்று கூற சில நோய்களை உருவாக்கும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இந்த கண்ணாடியே….. சில பிராபலத்தை (problem) உருவாக்கும். ஓகேங்களா? 

===========================
# முன்னோர்கள் …சிறுவனாக பிறந்து ….
===========================

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய இதனால் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  கூட இவனால் எது என்று புரிய அப்பனே, பின் எவை என்று அறிய பின் இவன், அப்பனே, ஏற்கனவே பிறந்தவன் தான் அப்பா, எது என்று புரிய. இதனால் , அப்பனே, எது என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இவன் ஏற்கனவே பிறந்தவன் தான். முன்னோர்கள்ல… ஏதோ வந்து….. ஓகேங்களா? உங்களை விட முன்னோர்கள் தான். அப்ப, உங்க பேச்சு கேக்குறான் என்பது…. உங்களை விட அறிவாளி தான் இருப்பான். ( மிரட்டும் தொனியில் ) அது பண்ணு, இது பண்ணு. வீட்ல மிரட்டுவான். எல்லாரையும் வந்து…. ஏன்னா, உங்களை விட வந்து பெரியவர்தான் இருக்கும் பொழுது, இவர் மூலமா ஏதோ வந்து எல்லாரும் என்ன பண்றாங்க வந்து?  

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப, அவங்க மூலமா நீங்க பண்ணனும்.  எல்லாம் அப்ப பண்ணும் பொழுது, அந்த ஆண்மக்கள் ஒவ்வொன்னா ஒவ்வொன்னா சாந்தி அடைஞ்சு. 

குருநாதர் :-  அம்மையே, இதனால் தான் இப்படித்தான் ஒவ்வொன்றாக உனக்கு சொல்லி எவை என்று அறிய பின் பக்குவப்படுத்தி அனைத்தும் கொடுத்து விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அதனால, ஒவ்வொரு இதுலயும் உனக்கு சில விஷயங்களை நான் சொல்றேன். அதனால, வந்து நீங்க அப்படியே 

குருநாதர் :-  இதனால்  எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட கவலைகள் இல்லை. யானே  அழைத்துச் செல்வேன் சில இடங்களுக்கு. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அதனால, நீங்க கவலைகள் படாதீங்க. வந்து சில இடங்களுக்கு யானையை கூட்டிட்டு, நானே கூட்டிட்டு போறேன். 

===========================
# சித்தர்கள் அருள் இருந்தால் மருத்துவம், நன்றாகும். 
===========================
# சித்த மருத்துவத்தில் மந்திரங்கள் யாரும் உபயோகிப்பதே இல்லை 
===========================

அடியவர் # 2  :-  மருந்துகள் எடுக்கலாமா? ஐயா, சித்த மருத்துவத்துல மருந்து…. ? 

குருநாதர் :-  எது என்று புரிய. தாயே, எடுத்தாலும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறும். மெதுமெதுவாகவே.  

சுவடி ஓதும் மைந்தன்  :- எடுத்தாலும், பொறுமை. 

அடியவர் # 1  :- அந்த மருந்துகள் மேல நம்மளுக்கு ஒரு நம்பிக்கை வரணும் இல்லையா? அதை எடுக்கலாமா? என்ன?  அப்படிங்கறதுக்காக. 

குருநாதர் :-  தாயே, போக போக புரிய வைக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அது போக போக உங்களுக்கு புரிய வைக்கின்றார் என்றாரு. அதனால, வந்து எது எடுத்தாலும் கொஞ்சம் லேட் ஆகும்ன்றாரு. வந்து நானும் பார்த்துக்கிறேன்மா என்றாரு. 

குருநாதர் :-  தாயே, எவை என்று கூறப்பின் மருத்துவம் எவை என்று கூறப்பின் எங்கள் அருளால் தான் எவை என்று புரிய. அதற்கும் மந்திரங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இப்பொழுது அதை உபயோகிப்பதே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- மருந்து சாப்பிட்டாலும் மந்திரம் சாப்பிடணும். மந்திரம் அதுக்கு உயிர் கொடுக்கணும். ஆனால் இன்றளவு ?.....

அடியவர் :-  யாரும்  கொடுக்கிறது இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- யாரும் கொடுக்கிறதே இல்லை. 

குருநாதர் :-  இதனால் , அதிக அளவு நிச்சயம் செயற்கைதான் நாடுவான். கலியுகத்தில். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அதிக அளவிலே என்ன பண்ணுவாங்க? செயற்கைதான் நாடுவான். 

குருநாதர் :-  நிச்சயம் இவ்வாறாக வரும் காலத்தில், நிச்சயம் இவ்வளவு எது மூலிகைகளுக்கு என்ன மந்திரம்? பின் எவை என்று கூட சொல்கின்றேன். உயிர் பிழைத்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  வருங்காலத்துல மந்திரமும் மந்திரமும் சொல்லித் தராது. உயிர் பிழைத்துவிடும். என்னது? 

அடியவர் :- அந்த அந்த செடியை பறிக்கும் போது….. 

===========================
# பழங்கள் மூலம் எப்படி உயிர் சக்தி பெறுவது?
===========================

குருநாதர் :-  தாயே, இப்பழங்களை வைத்துள்ளீர்கள். நீங்கள் எதை என்று புரிய  

சுவடி ஓதும் மைந்தன்  :- பழத்தை எல்லாம் வச்சிருக்கீங்க. வந்து 

குருநாதர் :-  அறிந்தும் ஆனாலும், ஏது ஏது எதற்கு என்றால், நிச்சயம் தனி அனைவரும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இறைவனிடம் வைத்தால் , அதற்கு உயிர் சக்தி கிடைத்துவிடும். நீங்கள் உட்கொள்ளலாம் என்று… 

அடியவர் #1 :- இறைவனுக்கு படைச்சு நமக்கு…. இது பண்றது… அதனால   சக்தி வந்துரும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதெல்லாம் வந்து உயிரற்ற பொருட்கள். அப்போ, இறைவன் எல்லாம் வைக்கிறீங்க. எல்லாம் பழங்கள் எல்லாம் சொல்லிட்டு… படைக்கும் பொழுது, அது வந்து இறை வணங்கும் பொழுது, அது ஒரு சக்தி வரும். அதை நீங்கள் உட்கொண்டால், உடம்புக்கு நல்லது. 

குருநாதர் :-   தாயே, இதனால்  ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒவ்வொன்றாக சொல்கின்றேன். கவலைகள் விடு. 

அடியவர் #3 :- ஐயா, இப்ப எனக்கு இந்த மாதிரி கண்ணாடி நீங்க கழட்ட சொல்றீங்க. ஆனா, இது முன்னாடியே கொஞ்ச நாள் கழட்டுனதுனால கண்ணுல ரொம்ப வலிக்குதுன்னு சொல்லி அழுது இருக்கான். அப்ப? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் பின் எவை என்று புரிய. பின் கவலை வேண்டாம். யான் பார்த்துக் கொள்கின்றேன். பின் மூலிகைகளை யான் சொல்லிய மூலிகைகளை இட்டுக் கொண்டே இரு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீ கவலைப்படாதம்மா. அடிக்கடி கழட்ட சொல்லுங்க. வந்து ஓகேங்களா? கழட்டும் பொழுது…….

குருநாதர் :-  தாயே, இவையே எதை என்று கூறப்பின், நிச்சயம் தன்னில் கூட. அதாவது, நிச்சயம் தன்னில் கூட. பின் இவையும் பின், அதாவது போதை பொருள் எவை என்று அறிய 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு போதை மாதிரிதான். எல்லாமே இப்ப குடிக்கிறாங்கன்னா, வந்து அது விட்டா என்ன ஆகும்? ஆனா, உடம்பு நல்லா இருக்கும். குடிச்சு இருப்பான் ஒருத்தன். வந்து அது விட்டா என்ன ஆகும்? கை கால் தளரும்….அந்த நிலைமைக்கு அப்படியே வந்துரும். டேய், என்னடா இதுன்னு சொல்லிட்டு வந்து, அதனால ஒரு கெட்ட பழக்கத்துல இருந்து சீக்கிரம் விட்டான்னா என்ன ஆகும்? அதனால வந்து கஷ்டமாதான் இருக்கும். கஷ்டமாதான் இருக்கும். வந்து ஓகேங்களா? 

குருநாதர் :- தாயே , கவலைகள் இல்லை. பார்த்துக் கொள்கின்றேன். அடுத்தடுத்த வாக்கு சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் சொல்றது செய்யுங்க வந்து…. 

குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சிலர் எவை என்று அறிய பின், அதாவது, பின் குளிர்ந்த பின் பழங்கள் எல்லாம் கண்களில் இடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- குளிர்ந்த பழங்கள் எல்லாம் வெள்ளரிக்காய், பிஞ்சு தண்ணி பழங்கள். தண்ணி பழங்கள் எல்லாம் கண்கள்ல வந்து கொஞ்சம் கொஞ்ச நேரம் விடுங்க. 

அடியவர் #3 :- இல்ல. இதுல வச்சிருக்கிற வெள்ளரிக்காய்  அப்படியே கட் பண்ணி, ஒயிட் கிளாத் வச்சீங்க. அது மேல பழத்துண்டுகளை வச்சு கொஞ்ச நேரம் குளிர்ச்சி பண்றதுக்காக 

சுவடி ஓதும் மைந்தன்  :- அந்த மாதிரி பண்ணுங்க. 

===========================
# இறை பலங்கள் மனிதனுக்கு தெரியாது……
===========================

குருநாதர் :-  ( ………………………………………… ……………………… ……………………………………………… ……………………………………….  ஒரு அடியவரின் குழந்தைக்கு குருநாதர் மகத்தான ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு விதி ரகசியங்கள், இறை பலங்கள் ரகசியங்கள் அடங்கிய வாக்குகள் அருளினார்கள். …….. …..…………………………………………  …………………………………………  …………………………………………  …………………………………………  …………………………………………  …………………………………………  …………………………………………  ) 

===========================
# அடியவர் # 4 பாடல்கள் பாடினார்கள் 
===========================

பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே…

குருநாதர் :-  அப்பனே, இவ் பொருள் என்ன? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீ படிச்சியே  அதோட பொருள் என்னன்னு கேக்குறாரு. 

அடியவர் # 4:-  இந்திரலோகத்தை விட நீதான் வேண்டும் அப்பா, 

குருநாதர் :-  அப்பனே, எப்படியோ பின் எவையோ தப்பித்துக் கொண்டாய். 

சுவடி ஓதும் மைந்தன்  :- ஏதோ ஒன்னு சொல்லி தப்பிச்சிட்டப்பா. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

அடியவர் # 4:- உங்கள் பிள்ளை அல்லவா….

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்  கூட அறிந்தும் எவை என்று கூற, எதையோ சொல்லி தப்பித்துக் கொள்கின்றாய். 

சுவடி ஓதும் மைந்தன்  :- எதையோ சொல்லி தப்பித்துக் கொள்கின்றாய். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :-  அப்பனே, கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- கேட்கலாம். 

அடியவர் # 4:- நம் வீட்டில் வேல் வழிபாடு செய்கின்றோம். 

குருநாதர் :- அப்பனே, எது என்று நீ அழைத்து வந்தாயே. பின் ஒன்று சேர்ந்து எவை என்று கூறுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- நீங்க ரெண்டு பேரு ஒன்னா நின்னுங்கன்றாரு. இன்னொரு வாங்க, இன்னொரு வாங்க, 

அடியவர் 7:- முன்னாடி வாங்க. 

இது ரசனாமா. உள்ள வாங்க. ஐயா, சூப். ஐயா, ஐயா, அடுத்த சூப் சூப் குடிக்கிறாங்க. உள்ள போய் படுத்துக்கடா. உள்ள போய் படுத்துக்க. கண்ணாடி கை. லெமன் ஜூஸ். லெமன் ஜூஸ் சாப்பிடுறீங்களா? லெமன், லெமன், லெமனா. ஓகே, இந்த பழம் இருக்குமா? இந்த ஆரஞ்சு ஆப்பிள் கூட ஆப்பிள் இங்க இருக்கு. ஆப்பிள் போடலாம். ஆப்பிள் போட்டு கொடுப்பான். ஏய், முன்னாடி வாங்க. ஐயா, முன்னாடி வாங்க. ரெண்டு பேரும் 

குருநாதர் :-  அப்பனே உங்களுக்கு சந்தர்ப்பத்தை தருகின்றேன். நீ ஒரு கேள்வி, அவன் ஒரு கேள்வி. 

சுவடி ஓதும் மைந்தன்  :- நீ ஒரு கேள்வி, அவர் ஒரு கேள்வி. கேட்கலாம். 

அடியவர் #4:-  ஐயா, நம் வீட்டில் வேல் வழிபாடு செய்கின்றோம். ருத்ராட்சத்தில் இடும் குவளை மட்டும் நீர் கணிசமாக தினமும் குறைகின்றது. ஐயா, 

குருநாதர் :- அப்பனே, இதன் தன்மை இப்பொழுது யான் உரைக்கப் போவதில்லை. இப்ப சொல்ல மாட்டாராம். 

அடியவர் #5:- ஐயா, ஒரு பாடல் சொல்லிட்டு கேட்கலாமா? 

குருநாதர் :- அப்பனே, பாடும், 

சுவடி ஓதும் மைந்தன்  :- பாடும். 

===========================
# அடியவர் #5 - அருமையான “அகத்தீசர்” பாடல்கள் பாடினார்கள் 
===========================

===========================
(கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டு முறை பாட சொல்லி கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்களுக்கு பின் வரும்   இவ் பாடலை அனைவருக்கும் எடுத்துச் செப்புக…)
===========================

அ  - என்று சொல்லினிலே அன்பை தருவாய், போற்றி !!!!! 

ஆ - என்ற சொல்லினிலே ஆணவத்தை போக்குவாய், போற்றி  !!!!!  

இ - என்ற சொல்லினிலே இயல், இசை, நாடகத்தை தருவாய், போற்றி !!!!! 
 
ஈ - என்ற சொல்லினிலே ஈன்றவர் நெஞ்சை மகிழ்விப்பாய், போற்றி !!!!! 

உ  - என்ற சொல்லினிலே உலகெலாம் வலம் வருவாய், போற்றி !!!!! 

ஊ - என்ற சொல்லினிலே ஊன் உடம்புக்குள்ளே ஆலயம் அமைத்தாய், போற்றி !!!!! 

எ - என்ற சொல்லினிலே எங்களையும் வாழ வைப்பாய், போற்றி !!!!! 

ஏ - என்ற சொல்லினிலே ஏழு பிறப்பின் நிலையை மாற்றுவாய், போற்றி !!!!! 
 
ஐ - எனும் சொல்லினிலே ஐயம்பட உரைப்பாய், போற்றி !!!!! 
 
ஒ  - எனும் சொல்லினிலே ஒளியின் ஒளியாய் இருப்பாய், போற்றி !!!!! 
 
ஓ - என்ற சொல்லினிலே ஓம்கார பிரணவ வடிவே, போற்றி !!!!! 
 
ஔவெனும் சொல்லினிலே ஔடதமாய்  இருப்பாய், போற்றி !!!!! 
 
அகத்துக்குள் வாழுகின்ற ஈசனே !!!!  போற்றி, போற்றி, போற்றி !!!!! 
 
அகத்தீசனே !!!!! போற்றி, போற்றி, போற்றி, போற்றி !!!!!  

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2284 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 12!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 12 

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 11 அதன் தொடர்ச்சியாக ….)

===========================
# அடுத்தடுத்த வாக்கில் மூலிகைகள்….
===========================

குருநாதர் :-  நிச்சயம் அடுத்தடுத்த வாக்கில் பல மூலிகைகள் பற்றியும் சொல்கின்றேன். கவலைகள் வேண்டாம். உங்களை நீங்கள் வெல்வதற்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தடுத்து இதுல வந்து… நான் மூலிகைகள் எல்லாம் கூட சொல்றேன். உங்களை நீங்கள் வெல்வதற்கு 

குருநாதர் :- ஆனாலும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நிச்சயம் தன்னில் கூட பின்  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் நீங்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. 

குருநாதர் :-  எதை எது என்று கூட அனைத்தும் தானாகவே நடக்கும். எவை என்று கூற பின் . ஏனென்றால் உலகம் எவை என்று கூற பின் . அனைவரும் உணர்ந்திருக்கிறீர்கள். நிச்சயம் உலகம் சுற்றுகின்றது என்பது இதனால்  மனிதனுடைய வாழ்க்கையும் நிச்சயம் மாறும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் தெரியும்ல, உலகம் சுற்றுறதா இல்லையா? நம்புறீங்களா இல்லையா? அதேபோலத்தான் கண்டிப்பாக?  

அடியவர்கள் :- வாழ்க்கையும் மாறும். 

சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கையும் மாறும். 

===========================
# அனைத்தும் கொடுக்க கண் இமைக்கும் நேரம் போதும்….
===========================

குருநாதர் :- எதை ஏது என்று கூற இவை எல்லாம் விஞ்ஞானபூர்வமாக விளக்கி வைக்கின்றேன் பொறுத்திருந்தால்.  நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு பின் நிச்சயம் ஒரு கண் இமைக்கும்  நேரத்தில், பின் நிச்சயம் யான் கொடுத்து விடுவேன் அனைத்தும். 

குருநாதர் :-  ஆனாலும் சில அனுபவங்கள் எவை என்று புரிய பின் ஏது என்று அறிய, நிச்சயம் அடுத்தடுத்து பின் நிச்சயம் இவ் ஆன்மா அடுத்த நிலையில் செல்வதற்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உடனே என்னால கண்ணை இமைக்கும் ….அப்படி கண்ணு அடிச்சு (முடிப்பதற்குள்)  உனக்கு யோகம் கொடுத்துருவார் என்ற ரகசியம் வந்து, ஏனால் இந்த ஆன்மா அடுத்த கட்டை நோக்கி செல்லும். இந்த ஆன்மா வந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அப்ப அந்த செல்லும் பொழுது…அம்மா  புரியுதுங்களா? 

அடியவர்கள் :- புரியுதுங்க  அய்யா….

===========================
# எங்கு உங்கள் உயிர் உள்ளது? 
===========================

குருநாதர் :- எதை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் இதனால்  நல்விதமாகவே பின் உடம்பு எப்படி வேலை செய்கின்றது?  என்பதை எல்லாம் அடுத்தடுத்த வாக்கில் எடுத்துரைக்கும் பொழுது, நிச்சயம் எங்கு உங்கள் உயிர் உள்ளது, எங்கு எவை என்று அவ் உயிருக்கு ஏற்ப,  நிச்சயம் பாவமும் புண்ணியம் எங்கு உள்ளது என்பதை எல்லாம் சாவியோடு விளக்குகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சாவியோடுனா என்னது? 

அடியவர் :- பூட்டை திறக்குறது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பூட்டை திறக்குறது. அப்ப உங்க உடம்புல வந்து எங்கெங்க உயிர் இருக்குது? ஒருத்தர் ஒருத்தருக்கு வந்து சொல்றாரு. வந்து 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற, நெற்றியில் பின் இட வேண்டும். எவை என்று அறிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு பிரிந்துள்ளது உங்களுக்கு . 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த செல், அந்த உயிர் வந்து இங்க (நெற்றியை சுட்டிக்காட்டி) எடுத்துட்டு வரணும். (நெற்றி) அங்க எடுத்துட்டு வந்தாதான் சக்சஸ். உங்களுக்கெல்லாம் எங்கெங்க இருக்குது? 

அடியவர்கள் :- அங்கங்க இருக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒருத்தர் ஒருத்தருக்கு அங்கங்க  இருக்குதுன்றார் வந்து

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட கால் பாதத்திலும் ஒருவருக்கு இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கால் பாதத்தோட போய் இருக்குமாம்  வந்து 

குருநாதர் :- நிச்சயம் அவையெல்லாம் எப்படி கொண்டு எவை என்று கூட சேர்ப்பது? எவை என்று புண்ணியம். இதனால்  அனைத்தும் யார் எடுத்துரைக்கின்றேன் பொறுத்திருந்தால். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் எப்படி கீழ கால் பாதத்துல இருந்து எப்படி இங்க வந்து நிறுத்துன்னு வரீங்க? வந்து கால் பாதத்துல இந்த லைஃப் க்ளோஸ்.. நினைச்சது  எப்படி நடக்கும்ன்றார்? வந்து அதெல்லாம் நான் வந்து வரும் காலத்துல 

அடியவர் :- சொல்லித்தரேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லித்தரேன். 

===========================
# அனைவரின் கூடு, பழுது அடைந்து உள்ளது.
===========================

குருநாதர் :- எதை ஏது என்று புரிய, இதனால்  நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்குமே  எவை என்று கூட கூடு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பழுது அடைந்துள்ளது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் கூடு என்றது என்னது? 

அடியவர்கள் :- உடம்பு பழுது அடைந்து விட்டது. 

சுவடி ஓதும் மைந்தன் :- உடம்பு?....... பழுது அடைந்து விட்டது. 

குருநாதர் :- அறிந்தும் பின் அப்பழுது அடைந்துகளுக்கு முதலில் பின் எவை என்று அறிய, பின்ன அவுஷதங்கள் இடுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பழுதடைந்த உடம்புக்கு முதல்ல?  

அடியவர் :-  மருந்து கொடுக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மருந்து கொடுக்கின்றேன். 

குருநாதர் :- மருந்து.. என்ன மருந்து?  நீங்களே சொல்லுங்கள் ?. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மருந்து என்ன மருந்து ? 

அடியவர் :- பாடல் தாங்க. பாராயண பாடல்தான். 

குருநாதர் :- எதை எவை என்று கூற, ஏதாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும். எவை என்று புரிய, எவை என்று கூற பின் . 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்கணும். அதுதான் மருந்து என்றார். 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் இக் கூன் உடம்பிற்கே. நிச்சயம் தன்னில் கூட பின் என்னவென்று ஆகும். இவ் உடம்பு என்று தெரிவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த கூன் உடம்பிற்கே நம்ம என்ன? அப்படி என்ன சொல்றது? வந்து நம்ம என்ன ஆகுமனே நம்மளுக்கு வந்து தெரியும். அந்த கூன் உடம்புக்கு வந்து அடுத்து என்ன ஆகப்போறதுன்னே தெரியல. அய்யா புரியுதுங்களா? 

குருநாதர் :- நிச்சயம் பின் அவ்வாறு பின் தன்னைத்தானே பின் நிச்சயம் எவை என்று பின் காப்பாற்ற முடியாத பின் இவ் கூடுக்கு பின் மற்றவரை பற்றி எல்லாம் கேட்கின்றது. 

அடியவர்கள் :- ( அமுக்க சிரிப்புகள் ) 

அடியவர் :- வயசாக  வயசாக இந்த உடம்பு என்ன ஆகும் ? எப்படி இருக்கும் ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  நம்மளே நாமளே வந்து காப்பாற்றிக் கொள்ள முடியாம, இந்த கூண்டு என்பது என்ன ஆகுது? வந்து 

அடியவர் :-  மத்தவங்களை பத்தி கேக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மத்தவங்களை பத்தி கேக்குது. 

குருநாதர் :- இதனால்  வாழ்க்கை வட்டம். எவ்வாறு உங்களுக்கு நல்லது நடைபெறும் என்றால், நிச்சயம் தன்னில் கூட ஒன்றாம் வகுப்பை  நீங்கள் தாண்ட வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்னா என்ன பண்ணனும்? 

அடியவர் :- ஒன்றாம் வகுப்பில் இருக்கின்றோம்…

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னாவது வகுப்பில் நீங்க… அப்பன்னா ஒரு பத்தாவது வரணும் அம்மா… அவர் சொல்றது புரியுதுக்கு. 

===========================
# ஆற்றலை பெருக்க பலவகையான திருத்தலங்கள் உள்ளது…
===========================

குருநாதர் :- இதனால் தான் எது என்று கூற பின் அதனால் நிச்சயம் தன்னில் கூட பலவகையான திருத்தலங்கள் உள்ளது. எவை என்று கூற பின்  நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய. 

குருநாதர் :-  இதனால்  நல்விதமாகவே ஆற்றலை தருகின்றேன். ஆற்றலை பெருக்கினால் அனைத்தும் நலமாகும். பின் இறைவன் என்ன கொடுப்பது? யான்  என்ன கொடுப்பது? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வகையான  ஆற்றலை வந்து உங்களுக்குள்ள பெருக்கிட்டாங்கன்னா….. எல்லாமே கிடைச்சிடும்ன்றார். அப்ப இறைவன் கொடுத்தது என்ன?

அடியவர் :-  நான் கொடுத்தது என்ன?

===========================
# சித்தர்கள் வாக்கு, சிந்திக்க முடியாத வாக்கு. 
===========================

குருநாதர் :- தாயே நிச்சயம்  **** எதையும் பின் யாரும் கொடுப்பதில்லை.  **** 

**** நிச்சயம் நீங்களாகவே பெற்றுக் கொள்கிறீர்கள். **** 

அவ்வளவுதான். 

பின் எவை அகத்தியன் அங்கு சொன்னான், இங்கு சொன்னான் என்றெல்லாம். 

நிச்சயம் அதாவது, நிச்சயம் அறிவுள்ளவனுக்கு எதை என்று கூற  மாற்றி மாற்றி யான் சொல்வேன். 

**** சித்தர்கள் வாக்கு எவை என்று அறிய சிந்திக்க முடியாத வாக்கு. ****

சுவடி ஓதும் மைந்தன் :-  அங்க அப்படி சொன்னாரு. அதெல்லாம் என்னடா? இப்படி சொல்றாரு, இப்படி சொல்றாரு. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வந்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க என்ன சொன்னாரு? இப்ப நான் கொடுக்க 

அடியவர்கள் :- ஆற்றல் உங்களுக்கு கிடைச்சிட்டா, நீங்களே எல்லாம் பெற்று இருக்கலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான். 

குருநாதர் :- அவ் ஆற்றல் பின் இயக்க வேண்டும். எது என்று வரும் காலத்தில் அவையும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த ஆற்றல் ?

அடியவர் 7:- எப்படி இயக்கலாம்…

குருநாதர் :-  இதனால்  நிச்சயம் தன்னில் கூட பின் உங்களை நீங்கள் பின் நம்பாமல், நிச்சயம் மற்றவரை நம்பினால் எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களை நீங்கள் நம்பாத வரையில்…… உங்களை நீங்கள் அந்த ஆற்றல் பெருக்காத வரையில்……. நீங்க எதை பத்தி இது பண்ணாலும்….. மற்ற இது பண்ணாலும்… ஒன்னும் மைனஸ் இருக்குது. 

===========================
# யாத்திரை குழுவினர் - உங்கள் பிறவியின் ரகசியம் 
===========================

குருநாதர் :- இதனால்  எது என்று கூற பின் உங்கள் பிறவியின் ரகசியம் என்ன? அனைத்தும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க எதுக்காக வந்தீங்க? எதுக்காக?  பிறவியின் ரகசியத்தை யான் சொல்கின்றேன். 

குருநாதர் :- இவ் பிறவியின் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கும் பன்மடங்கு புண்ணியம் வேண்டும். பின் யானே அவையெல்லாம் கொடுத்து நிச்சயம் சொல்கின்றேன். 

அடியவர் :- குருநாதா  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் கைதட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பிறப்பின் ரகசியத்துக்கும் ?

அடியவர்கள் :- புண்ணியம் வேண்டும். அந்த புண்ணியத்தை கொடுத்து, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை கொடுத்து?  

அடியவர் :- ரகசியத்தை சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ரகசியத்தை சொல்கின்றேன். 

குருநாதர் :- இதனால்  வருத்தப்பட தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு குறை. நிச்சயம் தன்னில் கூட ஏதோ சில வகையான பின் எவை என்று கூட தவறுகளாலோ அல்லது எது என்று கூற பின் காலத்தின் கட்டாயமாகவோ இருக்கலாம். ஆனாலும், நிச்சயம் கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதோ எல்லாருக்கும் ஒரு காலத்தின் சூழ்நிலைகளோ…. இல்ல. ஏன்னா, அது வந்து 

அடியவர் :- ஒரு பிறவி பற்றி கவலை வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- கவலை வேண்டாம். வேண்டாம் என்றால், வந்து 

குருநாதர் :- அனைத்தும்  எது என்று அறிய, நிச்சயம் கவலையோடு பின் மனிதன் பிறந்தாலும், கவலையோடு எது என்று புரிய பின் போவானா என்ன? இவையெல்லாம் சொல்லிவிட்டார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கவலையோடு பிறக்கின்ற மனுஷன் எப்பவுமே கவலையோடு போவானா? 

===========================
# மாறி மாறி அமையும் விதியின் விளையாட்டு……
===========================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட மாறி மாறி அமையும் இன்பமும் துன்பமும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாறி மாறி அமையும். இன்பமும் துன்பமும் 

குருநாதர் :- அறிந்தும் எவை என்று ஒரு ஆரோக்கியமும், நிச்சயம் நோயும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆரோக்கியம் வரும். நோயும் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   நோயும் வரும். 

குருநாதர் :-  அறிந்தும் பணமும் வரும். பின் இழப்பும் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பணமும் வரும். பணமும் வரும். இழப்பும் வரும். 

===========================
# இங்கு யார் பெரிய அறிவாளி? 
===========================

குருநாதர் :- நிச்சயம் யார் இங்கு அறிவாளி கொடுத்ததை அப்பா அல்லது பின் இறைவன் கொடுத்துள்ளான். நிச்சயம் இதை தக்க வைக்க என்ன செய்வது என்று யோசிக்கின்றானே. அவன்தான் பெரிய அறிவாளி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  யார் இங்க அறிவாளி? பணம் வருது. டேய், இது போகும்டா? பணம் வரும். நம்மளுக்கு வந்து இது போகப்போகுதுடா? இது எப்படி தக்க வைக்கிறது? இப்ப எப்ப தக்க? அதை யோசிக்கிறான் பாரு. அவன்தான் 

குருநாதர் :-  நிச்சயம் எப்படி தக்க வைப்பது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி தக்க வைப்பது? 

அடியவர்கள் :- தர்மம் செய்யணும் 

அடியவர் :- பணமா இருந்தாலும் , புண்ணியம் first செய்யணும்.

குருநாதர் :- எதை காசு வந்தாலும் புண்ணியம் செய்ய மனம் வராது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  காசு வந்தாலும் 

அடியவர் :-  புண்ணியம் செய்ய மனம் வராது. 

குருநாதர் :- எதை இந்த காசு இல்லாவிட்டால் நிச்சயம் தன்னில் கூட காசு வந்தால் யான் புண்ணியம் செய்வேன் என்று சொல்வது 

சுவடி ஓதும் மைந்தன் :-  காசு வந்து இல்லாதபோது என்ன சொல்லுவாரு? காசு இல்லடா.  காசு இருந்தா நான் புண்ணியம் செய்வேன். 

குருநாதர் :-  வந்துவிட்டால், நிச்சயம் தன்னில் இறைவன் யாரோ, நீ யாரோ. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அட போடா, இறைவன் யாரோ, நான் யாரோ. போடா, காசு இருந்துச்சா? எஸ்கேப், 

அடியவர் 7:- ஜூட் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜூட். அவ்வளவுதான். அப்படித்தான் சொல்றார். 

===========================
# இவ்வுலகத்தில் சிறந்த படிப்பு எது?
===========================

குருநாதர் :-  இதனால் தான், நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு படிப்புகள் வாழ்க்கையில்.  

குருநாதர் :-    **** அனுபவ படிப்பை விட இவ்வுலகத்தில் சிறந்த படிப்பே இல்லை. **** 

சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவம் விட சிறந்த படிப்பு? 

அடியவர்கள் :- இவ்வுலகத்தில் இல்லை 

குருநாதர் :-   இப்படிப்பு எங்கு படிக்கலாம்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த படிப்பை எங்க படிக்கலாம்? 

அடியவர்கள் :- ( சில பதில்கள் ) 

குருநாதர் :-  அப்பனே, யானே சொல்கின்றேன். 

**** இறைவனிடத்தில் மட்டும்தான் படிக்கலாம். ****

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க ஏதாவது சொல்லி இருப்பீங்க. அதனால, அகத்தியர் என்ன சொல்றாரு? 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

அடியவர் :- நான் சொல்றேன்..

சுவடி ஓதும் மைந்தன் :-  யாருகிட்ட படிக்கலாம்? 

===========================
# எப்போது மிகச் சரியாக இறைவனிடம் நன்றி சொல்ல வேண்டும் ?
===========================

குருநாதர் :-  அப்பொழுது இறைவன் எவை என்று நெருங்கினால், அப்பொழுது அனுபவம் தர, துன்பத்தை கொடுப்பான். அவ்வளவுதான். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்ன சொல்றாரு? அப்ப இறைவனை நெருங்கினால், துன்பத்தை வைத்து, அதன் மூலம் அனுபவத்தை கொடுப்பார். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது நீங்கள் இறைவனுக்கு நன்றிதான் செலுத்த வேண்டுமே. தவிர, எதையும் கேட்கக்கூடாது இறைவனிடத்தில்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பா, இந்த அனுபவத்தை நீ தந்தியேடா எப்பா. போதும்டா எப்பான்னு சொல்லிட்டு…. என்ன சொல்லணும்? இறைவன் கிட்ட 

அடியவர் :- நன்றி சொல்லவேண்டும்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நன்றி சொல்லனுமே தவிர, அதை கொடு, இதை கொடுன்னு கேட்கக்கூடாதுன்றார். 

குருநாதர் :-  பின் நிச்சயம் பின் கேட்டாலும், இறைவனுக்கு கோபம் தான் வரும். ஏனென்றால், இவனுக்கு இவ்வளவு துன்பங்கள் கொடுத்து மீண்டும் கேட்கின்றான் என்று இன்னும் அழுத்துவான். 

அடியவர் :- ( சிரிப்புகள் )

ஒரு அடியவர் :- என்ன அடி ? என்ன அடி ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் ஐயா, 

அடியவர் 7 :-புரியுது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் என்ன பண்ணுவாரு? இறைவன் ஒன்னும் கேட்டா என்ன பண்ணுவாரு? ஏன்னா, இவன் திருந்தவே இல்லடா. ஒன்னும் இவன் எவ்வளவு கொடுத்தும் கஷ்டங்கள் கொடுத்தும், 

அடியவர் :- இன்னும் திருந்தல… 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் திருந்தல. இவர் வந்து அப்ப இன்னும் என்ன பண்ணுவான்? அடிடா, அப்படின்னு சொல்லிட்டு, 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, போதுமடா, சாமி என்று சொல்ல வேண்டும் அளவிற்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா போதும் என்ற போதும்டா. இந்த துன்பம்னு சொல்லி எப்ப சொல்றீங்களோ, அப்ப என்ன பண்ணுவாரு? கொஞ்சம் கொஞ்சம் வந்து, 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் யோசிப்பான். அப்பொழுது, 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் என்ன பண்ணுவாரு? அப்பதான் என்ன பண்ணுவாரு? 

அடியவர் 7 :- இறைவன்  யோசிப்பார்….

===========================
# சித்தர்களை தேடி வந்தவர்கள், புண்ணியசாலிகளே. 
===========================

குருநாதர் :-  எது என்று புரிய இதனால்  கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் என்னை தேடி வந்துவிட்டீர்கள். 

**** சித்தர்களை தேடி வந்தவர்கள், புண்ணியசாலிகளே.  **** 

சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களை தேடி வந்தவர்கள்?

அடியவர்கள் :- புண்ணியசாலிகளே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியசாலிகளே. 

குருநாதர் :-  ஒரு நாள் அனைத்தும் சரியாகும். எந்நாள் என்பது நீங்கள் கேட்கக்கூடாது. யாங்கள் முடிவெடுக்க வேண்டும். 

அடியவர் : - பொறுமையாக இருக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாம் ஒரு நாள்?  

அடியவர் : - சரியாகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரியாகும், ஆனால் எந்நாள் என்று நீங்க கேட்கக்கூடாது. 

===========================
# தொடர் வண்டியின் சிவப்பு விளக்கை  பார்த்து காத்திருக்கும் வாழ்க்கை 
===========================

ஜோதிடர் :- அய்யா எங்க போனாலும் கேட் போட்டா எப்படி அய்யா  ?

குருநாதர் :-  எது என்று அப்பனே, நிச்சயம் அப்படித்தான் அப்பா.  

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :-  தொடர்  வண்டியை  பார். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவை யோசித்து… 

பாடகர் :- எங்க போனாலும் கேட்டு போறீங்க என்று சொல்லறார். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் எங்க போனாலும் கேட்டு போனா. ஆமா, தொடர வேண்டியது என்ன? 

பாடகர் :-  கேட்டு போட்டுதான் போகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எது ? 

அடியவர் 7:- கேட்டு போட்டா, நின்னு போகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நின்னு போகுது இல்ல? அது மாதிரி நீ எண்ணி கொள்ளுப்பா. அதான் வாழ்க்கைப்பான்றாரு. ரயில் நினைச்சு சொல்றாருங்க. ஐயா, 

அடியவர் 7:-  அதான் கேட்டு ரயில்ல 

சுவடி ஓதும் மைந்தன் :-  அங்கங்க கேட்டு போடுவாங்க இல்ல? 

அடியவர் 7:-   அதுதான். 

குருநாதர் :-  அதனால் மீண்டும் எவை என்று கூற பின் காத்திருப்பான். எப்பொழுது சிவப்பு எரிகின்றது என்று. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

அடியவர் 7:- ஆமா….நீ கேட்டு சொல்லிட்டார், அதுக்கு பதில் 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிக்கணும். ஆமா, வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு…. எப்படா இறைவன் கொடுப்பாருன்னு….. அந்த சிவப்பு பார்த்துட்டே இருப்பான். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கொடுப்பான். மீண்டும் செல்லலாம். இப்படித்தான் அப்பா, அனுபவம் கற்க முடியும். பிறவி பலனை அப்பனே முழுமை அடைய  செய்ய முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி இருந்தா மட்டும்தான்?...... பிறவி பலனை வந்து? 

அடியவர் :- முழுமை அடைய செய்ய முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- முழுமை அடைய  செய்ய முடியும்.. இல்லை என்றால்?

அடியவர் :-  முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடியாது. 

===========================
# இறைவனை நெருங்க, நெருங்க….என்ன நடக்கும்? 
===========================

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதனால் , அப்பனே, பின் பிறவி வேண்டாம் என்றே, அப்பனே, இறைவன் உங்களுக்கு உணர்த்துவான் அப்பா. இறைவனை நெருங்க, நெருங்க….. 

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை நெருங்க, நெருங்க. என்னது?

அடியவர் :- பிறவி  வேண்டாம்.

சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா………………… இந்த பிறவி வேணாம்டா. எப்பா………………… போதும்டா, சாமி………………… என்று சொல்லிட்டு…. உணர்த்திவைப்பார். ஓகேங்களா? 

குருநாதர் :-  அறிந்தும்  கூட, ஆனால் மனிதன் என்னவோ அறிவாளி என்று நினைத்து, இறைவனை எவை என்று புரிய பின் நெருங்கினால் அனைத்தும் கொடுப்பான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் மனுஷன் என்ன நினைச்சுட்டு இருக்கான்? வந்து இறைவன்ட்ட போனா என்ன கிடைக்கும்? 

அடியவர் :-  இறைவனை  நெருங்குனா எல்லாம் கிடைக்கும்னு மனுஷன் நினைக்கிறான் அய்யா. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் கிடைக்கும் அப்பா. அனுபவத்தின் மூலமாக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கிடைக்கும். 

அடியவர் 9 :-  அனுபவம்…

சுவடி ஓதும் மைந்தன் :-  அனுபவத்தின் மூலமாக 

அடியவர் 9 :-  உடனே கிடைக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உடனே கிடைக்காது. கொஞ்சம் லேட்டா கிடைக்கும். அனுபவம், ஐயா, 

அடியவர் 9 :-  அனுபவிச்சு தீர்க்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம்.அப்பதான் கிடைக்கும். 

குருநாதர் :-  இதனால் , அப்பனே, முதலில் அனுபவமே உங்களுக்கு தெரிவில்லை. இதனால் , அப்பனே, பின் சொல்லிவிட்டேன். 

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சந்தர்ப்பத்தை தருகின்றேன். பார்ப்போம், உங்களுக்கு என்னென்ன தேவை என்று ஒருவர் ஒருவராக கேளுங்கள். 

ஆனால், நிச்சயம் தன்னில் கூட பின் என்ன எது என்று என்னிடத்தில் கேட்பதற்கு முன்பே ஒரு பாடலை பாடிட்டுத்தான் கேட்க வேண்டும். 

அடியவர் :- சூப்பர், சூப்பர்! போன தடவை மாதிரி…. 

(கருணைக்கடல்,  கடந்த சென்னை சத்சங்கத்தில் இதே போல இவ் யாத்திரை குழு அடியவர்கள் பாடல் பாடி பின்னர் வாக்குகள் அளித்தார்கள்.) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு சான்ஸ் குடுத்துட்டாரு. என்ன சொன்னாரு? திருப்பி வந்து நான் சொல்றேன், உங்களுக்கு என்ன கேள்வின்னு சொல்லிட்டு ஒரு பாடலை பாடிட்டு தான் என்கிட்ட கேட்கணும். பாடல் பாடி, எல்லாருக்கும் உண்டு. 

===========================
# அடியவர் #1 
===========================
……………
……………
……………
……………

( “முத்தைத் தரு பத்தித் திருநகை" பாடல் பாடி முடித்தார்கள் )

குருநாதர் :- தாயே  நிச்சயம் யான் சொன்னாலும், மீண்டும் நீ கேள்விகள் தான் கேட்கப் போகின்றாய். அதனால் உன்னிடமே கேட்டு விடுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் என்ன சொன்னாலும் திருப்பி என்ன பண்ண போறீங்க? அதையே தான் நீங்க கேட்க போறீங்க. அதனால முழுசா உன்னையே கேட்டு.. நீயே சொல்லுமான்னுட்டாரு. கேட்கலாம்.

===========================
# அடியவர் #1 கேட்ட கேள்வி இவ் உலகில் பலரும் பரம்பரை பரம்பரையாக தொடரும் சில அடையாளங்கள்/நோய்கள்  குறித்த… இவ் கேள்வி பதில் பலருக்கு நல் புரிதல்கள் உண்டாகும்
===========================

அடியவர் #1  :- ஐயா! பரம்பரையா வரக்கூடிய நோய்கள் வந்துட்டு… நம்ம பரம்பரையோட முடிஞ்சு போயிரணும். அடுத்த நம்ம தலைமுறைக்கு அடுத்து தொடரக்கூடாது. அப்படிங்கறதுக்காக என்னங்க, ஐயா? 

குருநாதர் :-  தாயே, எது என்று புரிய. இப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் மனிதன் வகுத்துக் கொண்டான். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் வந்து என்ன பண்றது? இதெல்லாம் மனுஷன் வந்து வகுத்துக் கொண்டது. 

குருநாதர் :- எது என்று புரிய யோசித்து பார். தாயே, நீயே யோசித்து கேள் இதனை, நன்றாக. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை யோசித்து கேட்கணும்ன்றார். நன்றாக திரும்பி கேட்கணும்.

அடியவர் #1  :- ஆனா இதுதாங்க, ஐயா! கேள்வி இப்ப ( 3 ஆம் தலைமுறை முன்னோர்கள்) அவங்களுக்கும்  இருக்கு, (2 ஆம் தலைமுறை முன்னோர்கள்) அவங்களுக்கும்  இருக்கு, (முதலாம் தலைமுறை) எனக்கும் அதே மாதிரி பிரச்சனை இருக்கு. அப்படிங்கிறப்ப, அந்த எங்க போனாலும்……..?. 

குருநாதர் :-  எது என்று புரிய இவையெல்லாம் ஒரு அடையாளம். எதை என்று புரிய இப்படியும் வைத்துக்கொள்ளலாம். அதாவது, நிச்சயம் தன்னில் கூட சில ஆன்மாக்கள் எதை என்று புரிய. 

அதாவது, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இருந்தது, பின், அதாவது, மனிதன் பின் ஏது பூலோகத்திற்கு வந்துவிட்டாலும், நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் தேடி தேடி அலைந்து விடும். 

இதனால் , நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் எது என்று புரிய. 

பின் இவ்வாறாக, நிச்சயம் தனி இருக்கின்றார்கள் என்றால், பின் அவ்வா ஆன்மாவிற்கு தெரிந்துவிடும். 

ஓடோடி வந்துவிடும். சுலபமாக. அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட பின் இணைந்து எவை என்று கூட காத்துவிடும். இவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றது தெரியுங்களா? இது ஆத்மா வந்து என்ன ஆகுமா? நம்மளுக்கு எதுவோ அடையாளமா இருக்கணும். அப்பதான் நம்ம ஈஸியா போய் அவங்கள காக்க முடியும். புரியுதுங்களா? 

அடியவர் 7 :- புரியுது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வந்து நீங்க ஒரு ஆன்மா வச்சுக்கோங்களேன். உங்களுடைய அம்மா இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். அதுக்கு அவங்க அம்மா இருக்காங்கன்னு சொன்னாங்கன்னா, ஒரு இது கொடுத்துருவாங்க. அப்ப அவங்க அம்மா என்ன? ஃபர்ஸ்ட்ல ஒரு அம்மா இருக்காங்க இல்ல? அப்ப ரெண்டாவது அம்மா, மூணாவது அம்மா, இன்னைக்கு நாலாவது அம்மா. அந்த அம்மா வந்து என்ன நினைப்பாங்களாம்? ஒரு இது, ஒரு ஏதாவது நமக்கு கொஞ்சம் அப்போ ஓகே. 

அடியவர் 6  :- ஐடென்டிஃபிகேஷன், 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐடென்டிஃபிகேஷன்க்காக நம்ம ஈஸியா வந்து அவங்கள காப்பாத்தலாம். உலகத்துக்கு போயிட்டு சிக்னல் மாதிரி, ஏன்னா தேட முடியாது இல்ல? என்னென்னன்னு சொல்லிட்டு, இப்ப உங்களுக்கு அடையாளம் வந்துச்சுன்னா, அவங்க என்ன பண்ணும்? ஆன்மா டக்குனு கண்டுபிடிச்சு உங்ககிட்ட வந்துரும். 

அடியவர் #1  :- நம்ம காப்பாத்துறதுக்காக, 

சுவடி ஓதும் மைந்தன் :- காப்பாத்துறதுக்காக அந்த அடையாளங்களுக்காக, 

அடியவர் #1  :-  அந்த அடையாளமே நம்மளை துன்புறுத்துற மாதிரி இருந்தா என்னங்க? 

குருநாதர் :-  எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் இல்லை என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, துன்புற்ற, துன்புத்த, துன்புறுத்தாது. 

குருநாதர் :- ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட அவர்களுக்கு முன்னால், அவர்களுக்கு முன்னால், அவர்களுக்கு முன்னால் முழுமை அடையாத ஆன்மாக்கள் எவை என்று அறிய  நிச்சயம் தன்னில் இவர்களாலும் பின் முடியாததால் தான், நிச்சயம் தன்னில் மீண்டும் பின் அடையாளப்படுத்தி, இவர்களால் முடியுமா என்று. அதனால்தான் நீங்கள் அலைந்து கொண்டிருக்கின்றீர்கள். அவ்வளவுதான் உங்கள் எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? புரியலையா? யாருக்கும் புரியலையா? அதனாலதான் அகத்தியர் வந்து நல்லா படிக்குமா, படிக்குமான்னு சொல்றது. அந்த ஆன்மாவால முடியாது. ஏன்னா, எத்தனையோ பிறவிகளை வந்து முழுமை பெற வந்து வைக்க முடியாது. அப்ப என்ன பண்ணுவாங்க? அவ்வளவுதானே. நம்ம ஆர்டிகுலர்ஸ் நம்மளால முடியாது. அடுத்து இதுக்கு பண்ணுவோம், அப்படி பண்ணுவோம், அப்படி பண்ணுவோம்னு சொல்லிட்டு, சரிங்க, புரியுதுங்களா? அப்ப கடைசில என்ன பண்ணாங்க? அந்த முன்னோர்கள் உங்களால காக்க முடியும்னு சொல்லிட்டு, உங்க மேல வந்து ஒரு இதை வச்சு, உங்கள் மூலமா எல்லாம் தீர்த்துக்கொள்வாருமா? புரியாதுங்களா? அப்ப நீங்க என்ன பண்ணனும்? என்ன பண்ணுவீங்க? நீங்க வந்து 

அடியவர் #1  :- இதற்கான கோயில், கோயிலா அலைந்து கொண்டிருக்கின்றோம்….தீர்வு எங்க கிடைக்கும் என்று அலைந்து 

சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்ட். அப்ப எங்க கிடைக்குது? எங்க கிடைக்குது? அங்க போய் அது பண்ணலாமா? இது பண்ணலாமா? என்று அப்படி பண்ணும்போது… உங்களை வச்சு அந்த ஆத்மா என்ன பண்ணுது? 

அடியவர் #1  :- அவர்களுக்கான பசியை ….


சுவடி ஓதும் மைந்தன் :- முக்தி ஆகும் பொழுது, அப்ப என்ன? கடைசில வந்து உங்களை வாழ்த்திட்டு, உங்களுக்கான குறைகள் நீக்கிட்டு போகும். புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஆமா, ( உலகோருக்கு தெரிய வைக்க வேண்டும் )  இதெல்லாம் டைப் பண்ணுங்க ஐயா, சரி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆகும்? வந்து கடைசில எல்லாம் முழுமை பெற்ற பின்ன, எம்மா, நீதான்ப்பா, மூணு முழுமை பெற்ற. நான் புரிஞ்சுக்கணும். உங்களுக்கு என்ன செய்வீங்க? அது உங்களுக்கு செஞ்சுட்டு பரிபூரணமா. அவங்க மோட்சத்துக்கு போவாங்க. உங்களுக்கு குறைகள் நலமாகும். நீங்க சந்தோஷமா இருந்துருங்கன்றார். 

அடியவர் #1  :- சரிங்க, 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!