அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 6
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
………..
………..
………..
===========================
# கருணை கடல் - திருவாசகம் மலிவு விலை புத்தகத்தை (Rs.20) அனைவருக்கும் எடுத்து கொடுக்க வைத்தார்கள்…. அந்த நெகிழ்ச்சியான நிகழ்வு யாத்திரை குழு அடியவர் மூலம் ஒரு குறுஞ்செய்தியாக உங்கள் பார்வைக்கு….
===========================
யாத்திரை குழு அடியவர் தகவல் :- எங்களிடம் திருவாசகம் 300 புத்தகங்கள் வீட்டில் கீழே வைக்கப்பட்டிருந்தன. அதை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், காலப்போக்கில் மறந்து போனது.
ஆனால் அதிசயமாக, குருநாதர் தாமே அந்த பதிகத்தை படிக்கச் சொல்லி, அந்த புத்தகத்தை எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அந்த புத்தகங்கள் அருகிலேயே இருந்ததால், உடனே எடுத்துச் சென்று குருநாதர் முன்னிலையில் படிக்க முடிந்தது. இதை யாத்திரை குழு அடியவர் அவர்கள், “குருநாதரின் அருளால் சரியான நேரத்தில் சரியான பொருள் வெளிப்பட்டது” என்ற உணர்வுடன் பகிர்கிறார்.
அவர் வாசகர்களிடம், “இந்த அனுபவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; குருநாதரின் வழிகாட்டுதல் எப்போதும் நேரத்துக்கு நேரம் நம்மைத் தொடுகிறது” என்று கூறுகிறார்.
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த
திருவாசகம் (எட்டாம் திருமுறை) (திரு-சிவம், வாசகம் – பேச்சு = சிவன் பேச்சு)
திருவாசகம் 256 பக்கங்கள் கொண்ட இந்த நூலை மிகக் குறைந்த விலையில் ( ரூ.20 ) வெளியிட்டுள்ளனர் .
நூல் வெளியீடு : கோசசிங்கணாயனார், சிவத்தொண்டு சிவசபை
448/9, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-81
தொலைபேசி : 9841514421.
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு +91-9884292841
யாத்திரை குழு அடியவர் ( திரு.ராகேஷ் அய்யா ) :- +91 79046 12352
இது வியாபார நோக்கம் அல்ல. இந்த சேவை நோக்கத்தை பல அடியவர்களுக்கு பகிரவும்.
உங்களால் இயன்ற திருவாசகம் புத்தகங்கள் குழந்தைகளுக்கு , அடியவர்களுக்கு வழங்குங்கள்….அதுவே மிக்க புண்ணியங்கள்…..
( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் )
( திருவாசகம் 48வது பதிகம் பாடி முடித்த பின்னர்…..)
===========================
# திருவாசகம் 48வது பதிகம் எதை குறிக்கின்றது?
===========================
குருநாதர் :- தாயே எதை அறிவித்து நிச்சயம் இதற்குப் பின் அதாவது பின் சூரியனின் பின் ஆதிக்கம், எதை என்று புரிய, இவ்வாறாக எதை குறிக்கின்றது இப்பாடல்?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாம் சூரியன் ஆதிக்கத்தோடு இருக்கிறீங்க வந்து… ஓகேங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த பாடல் எதை குறிக்கின்றது என்று எல்லாருக்கும் தெரிவிங்கன்றார் வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த சூரியன் ஆதிக்கம்….. யாராவது நீங்க என்னங்க ஐயா?.... என்ன இது வந்து குறிக்கிறது என்று…. எல்லாரும் ஒன்னு சொல்லணும்…..
அடியவர் 9 :- இரவா பிறவா பிறப்பெடுத்தேன் ஐயா
அடியவர் 6 :- ஈசனை சரணடையும் போது பிறவா நிலை கிடைக்கும் அப்படின்னு சொல்லி சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் ஒன்னு சொன்னாரு.. இவரு சொன்னாரு.. எல்லாம் சொல்லுங்க…
அடியவர் 8 :- ஈசனுடைய அருளை தேடி போகணும்னா அவரு சொல்ற சில குரு குருக்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பாடலோட இது
அடியவர் 7 :- இந்த பாடலோட மீனிங் சொல்றேன் மீனிங் வந்து பண்டாய நான்மறை
அடியவர் 10 :- பகவானோட அனுக்கிரகம்னு அவரோட வழியில போயாச்சுன்னா அதுக்கு நிகரா எதுவும் இல்லைங்கிறார்
அடியவர் 8 :- சிவபெருமான் வந்து நம்மள வந்து ஆட்கொள்ளும் போது நம்ம அவருடைய வழியிலே பின்பற்றி போகணும்
அடியவர் 10 :- அதுக்கு ஈக்குவலா எதுவுமே இல்லைங்கிற மாதிரி
அடியவர் 8 :- ஆமாம்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இப்பொழுது நிச்சயம் உங்களை எவை என்று புரிய எதை ஏன் இதை சொன்னேன் என்றால் பின் அனைத்தும் ஈசன் தான் வழியும் காட்ட வேண்டும். எது என்று புரிய ஈசன் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் எதையும் நீங்கள் கேட்க தேவையில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- புரிஞ்சுதுங்களா ?
அடியவர் 7 :- ஈசியா முடிச்சிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசியா முடிச்சிட்டாரு. உங்களுக்கும் அது என்ன பண்றது? சேம். ( ஒவ்வொரு அடியார்களை பார்த்து )....
உங்களுக்கும்…
உங்களுக்கும்…
உங்களுக்கும்…
நீங்கம்மா….
என்னம்மா உங்களுக்கும்…
உங்களுக்கும்… அப்பாக்கு அவர் கூட அதேதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவும் கேட்கக்கூடாது. யாரு இப்ப எடுத்துட்டு போறது ?
அடியவர்கள் :- ஈசன் தான்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் தான்… இறைவன் தான் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும்.. வேற யாரும் வந்து?
அடியவர் 7:- எதுவும் கேட்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவும் கேட்கக்கூடாது நீங்க வந்து யாரையும் நம்பியும் இருக்கக்கூடாது போகக்கூடாது யார் வந்து இப்ப உங்களை சரியா பார்த்துட்டு இருக்குதுன்னா யாரு?
அடியவர்கள் :- ஈசன்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன்
===========================
# அனைத்தும் ஆதி ஈசனார் !!!!!!
===========================
குருநாதர் :- மீண்டும் அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாகவே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அனைவரும் எது என்று புரிய எதனால் நிச்சயம் தன்னில் கூட எதனால் ஈசனே எவை என்று புரியப்பின் அனைவரையும் எது என்று புரியப்பின் நிச்சயம் தன்னில் சில வகையில் கொடுத்து நிச்சயம் அனைத்தும் ஏது என்று புரியப்பின் ஏது ஏது என்றெல்லாம் நிச்சயம் பின் அருள்களை வாங்கித் தருவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் ஈசன் என்ன பண்ணுவாரு உணர்ந்து எல்லாமே செஞ்சு, உங்களுக்கெல்லாம் என்ன பண்ணி கொடுப்பாரு? ஈசன் இன்னும்? அருள்கள்… அம்மா ஒன்னாம் தேதி…….அதெல்லாம் யார் வாங்கி கொடுப்பாரு வந்து ஈசன் தான் வாங்கிக் கொடுப்பார் ஒன்னு வந்து
குருநாதர் :- ஏன் எதற்காக என்றால் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு ஒரு கட்டத்தில் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் இவ்வாறு ஒரு பாதை நிச்சயம் நோக்கிச் செல்ல வேண்டும் என்பது விதி அவரவர். அதனால்தான் ஒன்றிணைத்தேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா
அடியவர் 10:- எல்லாரும் ஒன்னா அதே பாதையில போகணும்ன்றதுக்காக எல்லாரையும் ஒன்னா கூட்டிட்டு வந்திருக்கேன் இங்க
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து இவங்களுக்கு அது மாதிரி சொல்றாங்க ஒரு பாதையில வந்து நீங்க வந்து எல்லாமே என்னது டேக் ஈசன்
குருநாதர் :- எதை ஏது என்று புரியப்பின் அனைத்து கஷ்டங்களையும் எவை என்று கூட அவன்தான் போக்க வேண்டும். அவன்தான் கொடுக்க வேண்டும். பின் எடுப்பதும் அவனே. கொடுப்பதும் அவனே. நிச்சயம் தடுப்பதும் அவனே என்று எண்ணி இருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா உங்களுக்கு தான் இதெல்லாம் வருது…
எடுப்பதும் அவனே
அடியவர்கள் :- கொடுப்பதும் அவனே….
சுவடி ஓதும் மைந்தன் :- கொடுப்பதும் அவனே… தடுப்பதும் அவனே தான்…. நீங்களே இதுலவே உங்களுக்கு ஆன்சர் இருக்கும் என்னன்னு சொல்லிட்டு ஓகேங்களா? எல்லாமே அவர் தடுப்பதும்
சுவடி ஓதும் மைந்தன் :- இதுலவே நீங்க புரிஞ்சுக்கொள்ள வேண்டியதுதான்… அம்மா உங்களுக்கு கூட அம்மா… நீங்க இதுலயே புரிஞ்சுக்கொள்ள வேண்டியதுதான்… வேற யாரு? நீங்களும்… ஐயா நீங்களும்….
===========================
# அதிக புண்ணியம் - குருநாதர் அருளால் நலமாகும்….
===========================
அடியவர் 13:- நண்பர் ஒருவர் 15 வருஷமா அன்னதானம் செஞ்சுகிட்டு இருக்கிறார். குருநாதர் சொன்ன மாதிரி அவர் இன்ஜினா டிராவல் பண்ணிட்டு இருக்காரு. நான் பின்னாடி கம்பார்ட்மெண்ட்டா போயிட்டு இருக்கேன். அந்த இன்ஜினுக்கு இப்ப குவாலிட்டி ( உடம்பு சரியில்லை )
குருநாதர் :- அப்பனே எது என்பது அப்ப நிச்சயம் தன்னில் பழுது பார்ப்பவர்கள் யாங்கள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட பழுது பார்த்து தருகின்றேன் அப்பா . மீண்டும் பின்னாலே செல்.
அடியவர்கள் :- ( சந்தோஷ பரவசத்தில் பலத்த கை தட்டல்கள் )
அடியவர் 7 :- ( வருத்தத்தில் உச்சு கொட்டினார்கள் )
அடியவர் :- சரி பண்ணி கொடுத்துருவாங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- சரி பண்ணனும். ஓகேவா?
அடியவர்கள் :- ( சந்தோஷ பரவசத்தில் பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நான் சரி பண்ணி கொடுக்கிறேன் கொஞ்சம் வந்து..
அடியவர் 7 :- ( உங்க நண்பர் ) அவர் பின்னாடியே உங்களை போக சொல்றார்…
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் பின்னாடியே நீ போப்பான்னுட்டார் வந்து
அடியவர் 13:- சீரியஸா இருக்கார் அய்யா
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா?
அடியவர்கள் :- ( அவர் நண்பர் ) சீரியஸா இருக்காராம்…
அடியவர் :- அதை சரி பண்ணி கொடுத்துருவாங்க…
சுவடி ஓதும் மைந்தன் :-
குருநாதர் :- அப்பனே கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலை விட்டுருப்பா என்று சொல்கின்றார்… கவலை விடுப்பேபா. ஓகேங்களா?
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய அப்பனே, பின் அதிகமாக பின் புண்ணியங்கள் செய்தாலும் இப்படித்தான். அதிகமான பாவங்கள் செய்தாலும் இப்படித்தான் அப்பா.
அடியவர்கள் :- ( சில அமைதி சிரிப்பு….. )
அடியவர் 13:- அப்பாக்கு ( உடல் நிலை குறித்து கேட்டபோது …)
குருநாதர் :- அப்பனே கவலை விடு எது என்று ஒரு பின் முருகன் அருகிலே இருக்கின்றான். நீ என்ன பார்த்துக் கொள்வது? முருகன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. கவலை விடு. எதையும் கேட்காதே அவனைப் பற்றி. யாம் அறிவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் அறிஞ்சுக்கணும்பா. நீயும் பார்க்க அவர் முருகரே அவர் வந்து பார்த்துட்டு இருக்காருப்பா. அதனால அவரை பற்றி விட்டுட்டு இருப்பான்றார்.
குருநாதர் :- எதை ஏது என்று புரிய கடை பிறப்பு என்பதால் இன்னும் பின் ஆயுள் நீட்டி வைத்திருக்கின்றான் கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- இது கடை பிறப்பு என்பதால் இன்னும் வந்து ஆயுசு வந்து நீட்டி வச்சிருக்காருன்றார் வந்து
குருநாதர் :- கவலைகள் வேண்டாம். பின் நிச்சயம் பார்த்துக் கொள்கின்றேன்
சுவடி ஓதும் மைந்தன் :- கவலைப்படாதப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்.
குருநாதர் :- அப்பனே இன்னும் ஏது என்று புரிய உந்தனுக்கும் பல பின் எவை என்று இறை ஆற்றல்கள் எவை என்று புரிய அப்பனே அதை சரியாக எப்பொழுது ஏது என்று புரிய அப்பனே இன்னும் காலங்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது. சரியாக பயன்படுத்தி வெற்றிக்கொள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா?
குருநாதர் :- அப்பனே நலங்களாக பல வகைகளில் கூட உண்மைகள் நிச்சயம் உனக்கே புரியும் வண்ணம் அப்பனே தெரிவிக்கின்றேன்.
குருநாதர் :- எவை என்று புரிய அப்பனே நிச்சயம் எதற்காக வந்தாய் என்பவை எல்லாம் அப்பனே பின் போக போக தெரிய வைக்கின்றேன் அப்பனே. பின் பொறுத்திரு. அப்பனே எம்முடைய ஆசிகள் பரிசுத்தம்.
குருநாதர் :- அப்பனே நல்விதமாக எதை என்று கூறப்பின் நிச்சயம் தன்னில் காஞ்சி பின் மாநகரில் அப்பனே பின் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வா தரிசித்து வா. அப்பனே பல ஆலயங்களுக்கு அப்பனே உண்மை நிலை தெரியும் அப்பனே. பின் வெற்றிகள் காண்பாய் அப்பனே. பின் எதற்காக பிறவி என்றும் தெரிந்து கொள்வாய்.
அடியவர் 13:- அய்யா எனக்கு சொன்னாங்களா ?
அடியவர் 7 :- ஆமாம் அய்யா ( இந்த வாக்கு உங்களுக்குத்தான் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா?
===========================
# குலதெய்வம்…குறித்து ஒரு கேள்வி
===========================
அடியவர் 14 :- ஐயா எனக்கு குலதெய்வம்….
குருநாதர் :- அம்மையே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இப்படி சொன்னேனே முதலில் அதை எவை என்று புரிய..
சுவடி ஓதும் மைந்தன் :- யாரு எல்லாமே ஈசன் தான் என்று சொல்லிட்டாரு உங்களுக்கு வந்து
===========================
# சங்கு நாதம் ஏன் ஊதுகின்றீர்கள் ?
===========================
# ஏன் அதை ஊதுபவர்கள் எளிதில் கெட்டுப் போய் விடுகிறார்கள்.?
===========================
# சங்கு நாதம் ஊதும் அனைத்து அடியார்களுக்கும், பின் வரும் வாக்கினை அவசியம் நேரில் எடுத்து சொல்லுங்கள்….
===========================
அடியவர் 14 :- ஐயாவுக்கு சங்கு நாதம் பண்றேன் …
குருநாதர் :- தாயே எவை என்று கூற ஏன் இதை எவை என்று புரிய என்று சொல்ல வேண்டும்.
குருநாதர் :- எதை என்று புரிய பின் எதை என்று புரிய பின் மீண்டும் பின் வாயில் பின் வைத்துக்கொண்டு சிறுவர்கள் விளையாடுவார்களே….. பின் அதேபோல் விளையாடக்கூடாது.
குருநாதர் :- ஏன் எதற்காக எவை என்று புரிய இதை ஊதுகின்றீர்கள் என்று சொல்லித்தான் ஆகவேண்டும் கட்டாயம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- சும்மா சின்ன பிள்ளைகள் ஊத்துவாங்க பாருங்க..அந்த மாதிரி….
அடியவர் 14 :- எனக்கு சங்கு நத்தம் எந்த ஆலயத்துக்கு வந்தாலும் நான்….
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இல்லம்மா… இது ஏன் ஊதணும்னு சொல்லிட்டு?
அடியவர் 14 :- அது எனக்கு தெரியாததுனால தானே
அடியவர் 7 :- அதுதான் சொல்றாரு. விளையாட்டு பழக்கம் ஊதாத. எதுக்கு ஊதுற ?
குருநாதர் :- ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லணும்
அடியவர் 7 :- நீங்க சொல்லணும்… அவங்கதான் சொல்லணும்.
அடியவர் 4 :- எதுக்காக சங்கு ஊதுற?
அடியவர் 14 :- ( அகத்தியர் அய்யா ) உங்களுக்கு… ஐயாவுக்கு ரொம்ப பிடிக்கும்… மேல இருந்து கீழ குனிஞ்சு யார் சங்கு நாதம் பண்றான்னு பார்ப்பாங்க…. அப்படின்னு சொல்லிட்டு….
அடியவர் 9 :- சங்கு நாதம் வாசிக்கிறவங்களுக்கு இதய நோயே வராது. ஏன்னா அவங்க தம் கட்டி வாசிக்கிறதுனால அந்த இதயத்துல ….
குருநாதர் :- தாயே எவை என்று கூற இவையெல்லாம் தெரிந்தது. தெரியாமல் சொல்…
அடியவர் 7 :- தெரியாத சொல்லங்க. அவங்க சொல்லட்டும்… அவங்க ஏன் ஊதுறாங்கன்னு சொல்லட்டும்…
அடியவர் 14 :- அதான் அப்பா அப்பாக்கு ரொம்ப சந்தோஷப்படுவாரு… அதனால நாதம்…
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அம்மா ஏதோ சொல்லணும்…
அடியவர் 14 :- நாதம் பண்றது…. எனக்கு தெரியலையே…. எனக்கு இது தெரியவே இல்லை…. ஆனா எப்படி யாருமே சொல்லித் தரல… நான் தானாவே நாதம் பண்றேன்…
அடியவர் 17 :- விளையாட்டாதான் பண்றீங்க
அடியவர் 14 :- விளையாட்டா பண்ணானாலும்… அது தினம் அக்கம் பக்கத்துல பிளாட்ல… எவ்வளவு பிரச்சனை இருக்கும்… அதையும் மீறி டெய்லி நாதம் பண்றேன்… ஏதோ ஒரு மன சந்தோஷம்… அவர் பாக்குறாரு பூஜை பண்ணும்போது…
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய பின் உண்மையை நிச்சயம் சொல். யோசி?
சுவடி ஓதும் மைந்தன் :- யோசி
அடியவர் 5 :- நல்லா யோசி. சாமி சொல்லுவாரு.
அடியவர் 14 :- அவரு கனவுல வந்து சொன்னது அங்கேயே சிதம்பரத்திலேயே நான் வாங்குனேன்… எப்படி பண்ணனும்னு
சுவடி ஓதும் மைந்தன் :- எதற்காக ?
அடியவர் 14 :- நடராஜர் உத்தரவு கொடுத்து…
===========================
# சங்கு நாதம் ஊதும்போது - “என் மூச்சே நீதான் இறைவனே” என்று நினைத்து இருக்க வேண்டும்….
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஏன் என்றால் பின் மூச்சையும் கூட நீயே என்று தான் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எது என்று புரிய நிச்சயம் ஆனாலும் யாரும் இருப்பதில்லை. அதனால்தான் அதை ஊதுபவர்கள் எளிதில் கெட்டுப் போய் விடுகிறார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா என்னோட மூச்சுப்பா நீயே நீதான் என் மூச்சுன்னு சொல்லிட்டு ஊதணும் அது தெரியாம வந்து நம்ம ஊதிட்டோம்னா அது ஊதனவங்க லைஃப் ஐயா புரியுதுங்களா வந்து? ஏன் ஊதுறோம்?
அடியவர்கள் :- என் மூச்சே நீதான்ப்பா…
சுவடி ஓதும் மைந்தன் :- என் மூச்சு எடுத்துக்கோப்பா… நீயேன்னு சொல்லிட்டு தான்… அதை மாதிரி வச்சு… அதை நீ தெரியாம நான் ஏன் புரியுதுங்களா வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பதான் எனக்கே தெரியுது…
குருநாதர் :- தாயே நிச்சயம் அதனால்தான் நிச்சயம் அடிப்படை தத்துவங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தாயே கவலை இல்லை, இப்பொழுது தெரிந்து கொண்டாயா? நிச்சயம் ஏன் ஊதுகின்றாய் என்று?
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப தெரிஞ்சுக்கிட்டியேமா?
அடியவர் 14 :- அப்பா யாருன்றத தெரிஞ்சுக்கிட்டேன்
அடியவர் 7 :- மூச்சு ஊதுறதுக்காக எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்லுங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- மூச்சும் நீதான்ப்பா… என்னுடைய மூச்சு… அதான் என் உயிரே… எப்படி சொல்றது வந்து? என் உயிர் நீதான். அதுதான் நீ குடுத்தாதான்ப்பா. இந்த உயிருக்கு ஏதாவது பிச்சை…. அதுதான் ஊதுகின்றோம் வந்து. ஓகேங்களா அப்ப அது தெரிஞ்சு வேற தப்பு எல்லாம் பண்ணோம்னா.. லைஃப் வீணா போயிடும் வீணா போயிடும்ன்றாரு வந்து ஓகேங்களா?
===========================
# திருவாசகம் 27ஆம் பதிகம் ஓதுக…..
===========================
குருநாதர் :- தாயே இதனால் பின் 27வது அனைவரும் படியுங்கள்..
அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழு அடியவர்கள் :-
(8.027 புணர்ச்சிப்பத்து பதிகம் பாட ஆரம்பித்தனர்….)
சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 1
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து
சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே
உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 2
நீண்டமாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை
அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி
விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 3
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 4
திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு
ஆ ஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 5
பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 6
நினையப்பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 7
நெக்குநெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 8
தாதாய் மூவே ழுலகுக்குங்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 9
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 10
===========================
# பிறந்த தேதி 1, 10, 19, 28… சிம்ம ராசி … அடியவர்கள் உணர்க
===========================
குருநாதர் :- எதை கேட்கிறீர்கள் தாயே எதை என்று புரிய. நிச்சயம் இவ்வாறாக பின் சூரியனின் பின் ஆதிக்கத்தை எவ்வாறு என்பதை கூட இதை பின் உணருக.
சுவடி ஓதும் மைந்தன் :- சூரியன் ஆதிக்கம் இப்ப சொன்னார் இல்ல… வந்து… ஒன்னு இது வந்து இதெல்லாம் வந்து ( பிறந்த தேதி 1, 10, 19, 28, சிம்மராசி …) இந்த பாடலோட உணருகன்றாரு. என்ன உணர்ந்தீங்க?
அடியவர் 14 :- எல்லாம் அவனே
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் உங்களுக்கு பின் சேவை செய்ய இறைவனே. அதுதான் ஈசன் யாராலும் மாற்ற முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா இப்ப எல்லாம் எழுதி இருந்தீங்க பாரு இந்த ஒன்னாம் தேதி ( பிறந்த தேதி 1, 10, 19, 28, சிம்மராசி …) ஒன்னாம் சூரியன் எல்லாம் வந்து…. இதை வந்து யாரு வந்து மாத்தணும்னா…. தான் தன் விதிகளை என்ன வேணும்னு மாத்தணும்னா ஒன்றுதான் யாரு?
அடியவர்கள் :- ஈசன் ….
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் மட்டும்தான்.
குருநாதர் :- எது என்று புரிய இதனால் நிச்சயம் அவனை பிடித்துக் கொள்ளுங்கள். அவருக்கு தேவையானது அனைத்தும் பின் நிச்சயம் பின் ஈசனை ஆராய்ந்து கொடுப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உங்களுக்கு தேவையானதெல்லாம் என்ன பண்றது வந்து? உங்களுக்கு தேவையானது… ஈசன் தான் கொடுப்பாருமா… எல்லாருக்குமா… இந்த ஒன்னு.. இந்த சூரியன் ஆதிக்கம் நீங்க… நீங்க… ஐயா நீங்க… அம்மா நீங்க… நீங்க சேர்த்து… யாருக்கு கொடுப்பாங்க?
அடியவர்கள் :- ஈசன்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன்
குருநாதர் :- ஏன் எதற்கு என்றால் நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் சூரியனின் பாதை நிச்சயம் அவ்வாறு நோக்கிச் செல்கின்றது, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சூரியனோட ஒளிக்கற்றைகள் இந்த காலத்துல வந்து… அவ்வாறு வந்து இந்த ஒளிக்கற்றைகள் இருக்குது வந்து ….அதை மாதிரி வந்து… அந்த ஒரு இதுல போகுது…. அந்த கற்றைகள். அதனால இந்த காலத்துல…. அடுத்து யாருக்கு உங்களுக்கு கொடுக்கணும் அம்மா புரியுதுங்களா வந்து? சயின்ஸ்ல எடுத்து சொல்றாரு அவர் வந்து. அந்த ஒளிபெற்ற ஒரு பாதையில போகும் பொழுது…. அந்த இது வந்து அந்த அதுக்கு வந்து….. என்ன ஆகும் ஈசன் தான் உங்களுக்கு வந்து கொடுக்கணும். புரியுதுங்களா வந்து?
குருநாதர் :- ஏது இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எதை என்று கூற பின் ஒளிக்கற்றைகள் நிச்சயம் பின் செல்கின்ற பொழுது அப்பொழுது எதை என்று சூரியன் ஒளிக்கற்றைகள் யாராலும் தாங்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அதனால் நீங்கள் தான் அனைத்தும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஒரு சூரிய கற்றைகள் ஒரு சூரிய கற்றைகள் வந்து எவ்வளவு வெளிச்சம் போகும் யாராவது தாங்க முடியுமா? யாராவது உதவி பண்ணுவாங்களா? யாரும் வரமாட்டார்கள்… அப்ப வந்து யாருக்கு உங்களுக்கே…. நீங்க தான் பார்க்கணும்.. உங்களோட லைஃப் வந்து அப்ப ஈசன் என்ன பண்ணுவாரு ஏதாவது ஏற்படுத்துவார்..
குருநாதர் :- நிச்சயம் அதுவரை நீங்கள் பொறுத்தாகத்தான் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது நாள் வரை பொறுத்தாகத்தான் வேண்டும்
குருநாதர் :- பின் எத்தனை பின் நாட்கள் என்றெல்லாம் நிச்சயம் நீங்கள் கேட்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை மாசம் எத்தனை நாட்கள் அதெல்லாம் வந்து நீங்கள் கேட்கக்கூடாது…
குருநாதர் :- எதை ஏது என்று புரிய இதனால் நிச்சயம் தனி இவ்வாறாக நிச்சயம் சில வருடங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- சில வருடங்கள் கூட ஆகலாம் ஆகலாம்
குருநாதர் :- அறிந்தும் அதன் முன்மே யான் இருக்கின்றேன் உங்களுக்கு என்ன தேவையோ அதை யான் பூர்த்தி செய்து தருகின்றேன் கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலே நாங்கள் வந்து
அடியவர் 12:- ஐயா ஏற்கனவே ஒரு தடவை வாக்கு கேட்கும்போது ஒரு ஐயா மூலியமா சொல்லி பரிகாரம் பண்ண சொல்லி திருவண்ணாமலையில போயிட்டு அந்த காயின் வச்சு ₹1 காயின் வச்சு
குருநாதர் :- தாயே நிச்சயம் எதற்கும் லாபம் கொடுப்பவன் ஈசனே. இதனால் நிச்சயம் பின் ஈசனை வேண்டிக்கொள்ளுங்கள் எது என்று கூறி பின் நிச்சயம் தள்ளி அதனால்தான் ஈசன் முடிவெடுக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா அம்மா இதுதான் இது அர்த்தம் ஆயிடுச்சு வந்து… உங்களுக்கு என்னென்ன தேவையோ இந்த நேரத்துல யார் கொடுக்கணும் உங்களுக்கு ?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் தான் நாலு பேருக்கு வழிகாட்டணும். ஓகேங்களா? அந்த சூரியனோட அந்த ஆதிக்கம் இருக்குங்களா வந்து உங்களை வந்து அந்த பார்த்துக் கொள்வதற்கு வந்து யாரும் இல்ல.
அடியவர்கள் :- ஈசன் தான்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் தான். அப்ப ஈசன் என்ன பண்ணனும் வந்து நீங்க? என்ன தேவையோ அது ஈசன்ட்ட கேட்டுக்கோங்க.
அடியவர்கள் :- நாங்க என்ன செய்யணும் ?
சுவடி ஓதும் மைந்தன் :- அதான் ஈசன்…
அடியவர் 7 :- இறைவனடி….
===========================
# திருவாசகத்தை ஓதிக் கொண்டே இருங்கள்…
===========================
குருநாதர் :- அப்பனே கையில் வைத்துக்கொண்டு பாடலை பாடச் சொன்னேனே திருவாசகத்தை ஓதிக்கொண்டு இருங்கள்…
சுவடி ஓதும் மைந்தன் :- (திருவாசகத்தை) கையிலேயே வச்சிருக்கிறப்பா. அப்ப திருவாசகத்தை உங்களுக்கு ஓதிக் கொண்டே இரு. இது உங்களுக்கு பயன்படும்…..
===========================
# திருவாசகத்தை படிக்க முடியாவிடில், தூங்கும் போது உங்கள் தலையணை அருகிலாவது வைத்துக் கொண்டு தூங்குங்கள்…..
===========================
குருநாதர் :- நிச்சயம் அப்படி இல்லாவிடிலும் பின் நிச்சயம் படுத்து உறங்குகின்றீர்களே நிச்சயம் தன்னில் கூட, பக்கத்திலாவது வைத்துக்கொள்ளுங்கள் தலையில் .
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க படிக்க மாட்டீங்க… அப்படியே முடியாது. அப்ப திருவாசகம் எல்லாம் புக் என்ன பண்ணனும்?
அடியவர் 8 :- தலையில் பக்கத்தில வைத்துக்கொள்ளுங்கள்
அடியவர்கள் :- இல்ல எல்லாரும் படிக்கிறோம் சொல்லுங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இவங்களுக்கு
அடியவர் 11 :- இல்ல சப்போஸ் சந்தர்ப்ப சூழ்நிலை படிக்க முடியல என்றால் ….படுக்கும்போது
சுவடி ஓதும் மைந்தன் :- படுக்கும் போது என்ன பண்ணனும் ?
===========================
# திருவாசகத்தை ஓதிக்கொண்டே வந்தால் தேன் போல் வாழ்க்கை அமையும்…...
===========================
குருநாதர் :- தாயே எது என்று புரிய திருவாசகத்தை நிச்சயம் தன்னில் கூட பின் ஓதிக்கொண்டே வந்தால் தேன் போல் வாழ்க்கை அமையும்….
சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாருக்கும்….. திருவாசகத்தை ஓதிக்கொண்டே வந்தால்?
அடியவர்கள் :- தேன் போல் வாழ்க்கை அமையும்
சுவடி ஓதும் மைந்தன் :- தேன் போல் வாழ்க்கை அமையும்
===========================
# திருவாசகத்தை இறைவன் அவ்வளவு சுலபமாக ஓத விடமாட்டார்…
===========================
குருநாதர் :- ஆனால் இறைவன் அவ்வளவு சுலபமாக விடமாட்டான்.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இறைவன் படிக்கிறதுக்கு?
அடியவர் 7 :- அவ்வளவு சீக்கிரம் படிக்கிறதுக்கு விடமாட்டார்
சுவடி ஓதும் மைந்தன் :- விடமாட்டார்.
அடியவர் 16:- அய்யா ( இறைவன் ) பழத்தையும் கொடுத்து , நாடகத்தையும் நடத்துகின்றார்… ( திருவிளையாடல் படத்தின் வசனம் )
குருநாதர் :- எது என்று அறிய நிச்சயம் அப்படித்தான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதே மாதிரி பழத்தையும் கொடுத்துட்டு… நாடகத்தையும் நடத்தியவர் அவர்தான். ஓகேங்களா? புரியுதுங்களா அய்யா ?
அடியவர் 17 :- ஐயா தாயாருடைய நோய்….
குருநாதர் :- எதை புரிய அப்பனே கவலைகள் இல்லை. நிச்சயம் தன்னில் கூட யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே விதியில் அப்பனே நிச்சயம் சில போராட்டங்கள் எல்லாம் அப்பனே உன்னிடம் சொன்னாலும் புரியாது அப்பா. ஏனென்றால் அப்பனே யான் தான் வரவேண்டும் அப்பனே, சில எவை என்று ஒரு விதியை மாற்ற.
சுவடி ஓதும் மைந்தன் :- சில சிலருக்கெல்லாம் விதியில இருந்து… அதை ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கின்றார்.. ஓகேங்களா? அப்படித்தான்…. இருந்துச்சுன்னா நானும் ஒண்ணுமே பண்ண முடியாதுப்பா… இருந்தாலும் நான் வந்து, ஏதாவது பண்றேன்ப்பான்றாரு…. ஏன்னா விதியில இருந்து அப்படித்தான் சொல்லுவாரு…..
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அது விதியிலேயே இருந்துச்சுன்னா யாராலும் அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது வந்து… அதனால நான் பார்த்துக்கிறேன்… ஏதாவது பண்றேன்ப்பான்றாரு.. புரியுதுங்களா?
===========================
# உடம்பு என்ற இயந்திரத்திற்கு பல வகையான மூலிகை ஆற்றல் தேவைப்படுகின்றது.
===========================
குருநாதர் :- எதை எது என்று சொல்ல இதனால்தான் நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய நிச்சயம் பின் இயந்திரத்திற்கு பல வகையான நிச்சயம் தன்னில் கூட பின் ஆற்றல் தேவைப்படுகின்றது. இதனால்தான் எது என்று புரிய நிச்சயம் பின் இயற்கை மூலிகள் அவையும் எடுக்கச் சொன்னேன். நிச்சயம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த இன்ஜின் இது உடம்பு என்பது என்ன?
அடியவர் :- இன்ஜின்
சுவடி ஓதும் மைந்தன் :- இன்ஜின்… அந்த இன்ஜினுக்கு?
அடியவர் :-ஆயில் ஊத்தணும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆயில் ஊத்தணும் ஆயில்னா என்னது
அடியவர் :-இயற்கை மூலிகள்
சுவடி ஓதும் மைந்தன் :- இயற்கை மூலிகள்
சுவடி ஓதும் மைந்தன் :- அது கூட நீங்கள் எடுக்கலைன்னா வந்து என்னப்பா பண்றது?
அடியவர் :- திரிபலா , திரிகடுகம்….
===========================
# மூலிகைகள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்…
===========================
குருநாதர் :- ஆனால் நிச்சயம் பின் சொல்வார்கள் ஒரு மாதம் இரண்டு மாதம் என்று. அப்படி இல்லை. மூன்று ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகள்… எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஊரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு மாசமோ.. ஒரு ரெண்டு மாசமோ… எடுத்துக் கொண்டு… சரியாச்சு. ஒன்னும் ஆகலன்னு சொல்லிட்டு… இயற்கை மூலிகைகள் பத்தி
அடியவர் :- சொல்லக்கூடாது
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லக்கூடாது. மூன்று ஆண்டுகள் முதல்?
அடியவர் :- மூணு வருஷம்
அடியவர் 9 :- அஞ்சு வருஷம்
சுவடி ஓதும் மைந்தன் :- அஞ்சு வருஷம் சாப்பிட்டே ஆகணும்…
===========================
# விதியின் தன்மை - மூலிகைகள் தொடர்ந்து எடுக்க விடாது….
===========================
# குருநாதர், சித்தர்கள் வழியில் உள்ள சித்த மூலிகை மருத்துவர்கள் இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்..புரிய வையுங்கள் ….
===========================
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுதுதான் நன்றாகும். ஆனால் ஒன்றும் பின் ஆகவில்லை என்று ஓடிவிடுவான். இதுதான் விதியின் நிச்சயம் தன்மை.
சுவடி ஓதும் மைந்தன் :- விதி என்று என்ன அது? நல்ல நேரத்துல ஒரு வருஷம் ரெண்டு சாப்பிட்டு இருப்பாங்க. அதுக்குள்ளேயே அந்த நம்பிக்கை போயிடும். என்ன ஆகும் வந்து? சாப்பிட மாட்டாங்க. அப்புறம் என்ன ஆகும்?. அடா போடான்னு சொல்லிட்டு… அந்த விதி… அப்ப விதிதான் ஜெயிக்குதுன்றாரு வந்து.. அய்யா புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே விதியை மாற்ற வேண்டும். என்ன செய்ய வேண்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- விதியை மாற்ற வேண்டும் என்ன செய்ய வேண்டும்?
அடியவர் 6 :- இறைவனை தான் பிடிக்கணும்.
அடியவர் :- புண்ணியம் செய்ய வேண்டும்.
குருநாதர் :- எது என்று கூற பின் இறைவனை வணங்க வேண்டுமா?
அடியவர் 6 :- இறைவனை காலை தான் பிடிக்கணும்
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் எவை என்று கூறப்பின் இறைவனை எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் ஆண்டுகள்…. ஆண்டு கணக்கில் ஆகும்…
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை பிடிக்க விதியை மாற்றம் பண்ணா… ஆண்டு கணக்கில் ஆகும்ன்றார் வந்து…
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)


No comments:
Post a Comment