அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 2
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
===========================
# சித்தர்கள் மறைத்து வைத்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள்
===========================
குருநாதர் :- மனிதன் வித்தியாசமாக எவை என்று கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். அனைத்தும் பின் சுவடிகளில் எழுதி வைத்ததுதான் அவன் பயன்படுத்துகின்றான்.
குருநாதர் :- இதையும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனுள்ளே அதன் மேலே, நிச்சயம் அதிலும் கூட நிச்சயம் சில விஷயங்கள் யாங்கள் மறைத்து வைத்துள்ளோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது தான் அவன் கண்டுபிடிச்சிருக்கிறான் வந்து.
அடியவர் 7:- வந்துட்டு இருக்கு ஆனா சில விஷயங்கள் ……
சுவடி ஓதும் மைந்தன் :- நாங்கள் மறைச்சு வச்சிருக்கிறோம்
குருநாதர் :- அறிந்தும் அதனுள்ளே இதை இழுத்துச் செல்வோம் மேலே. பின்பு பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை மறைச்சு வச்சது எல்லாம் நான் வந்து அதெல்லாம் சயின்ஸ்.. என்னது வந்து… எடுத்துட்டு வந்து கொஞ்சம்தான் அதைவிட நாங்க மேல வந்து அப்ப நாங்க அதை வந்து மேல வந்து எடுத்துட்டு வருவோம் எடுத்துட்டு வருவோம்.
===========================
# மனிதர்கள் உடம்பில் உள்ள மின்கலத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது எப்படி ?
===========================
குருநாதர் :- நல்விதமாக ஆற்றலை எது என்று முதலில் எது என்று புரிய இக்கலியுகத்தில் நிச்சயம் தன்னில் மின்கலத்தின் பின் அளவு நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, பின் எது எவை என்று, நேர்மறையா ? எதிர்மறையா?
சுவடி ஓதும் மைந்தன் :- பாசிட்டிவா நெகட்டிவா? இந்த உடம்புல இந்த கலியுகத்தில் எனர்ஜி?
அடியவர் :- நெகட்டிவாதான் அய்யா
சுவடி ஓதும் மைந்தன் :- நேர்மறையா எதிர்மறையா?
அடியவர் :- எதிர்மறைதான் அய்யா
சுவடி ஓதும் மைந்தன் :- எதிர்மறைதான்
அடியவர் :- எதிர்மறை
சுவடி ஓதும் மைந்தன் :- நெகட்டிவ்
குருநாதர் :- தாயே இவ்வாறாக இருந்தால் பின் எவ்வாறு எதை என்று கூறப்பின் மதிப்பெண்கள் எவை என்று அறிய பூஜ்ஜியத்திலிருந்து தாண்டவே இல்லையே… முதலில் ஆற்றலை பெருக்க வேண்டும்.
அடியவர் :- அதுக்கு என்ன பண்ணனும்?
சுவடி ஓதும் மைந்தன் :- பூஜ்ஜியத்திலிருந்து
அடியவர் 3 :- தாண்டல
சுவடி ஓதும் மைந்தன் :- தாண்டல
அடியவர் :- நெகட்டிவ்
குருநாதர் :- பின் இன்னும் திருத்தலமாக எவை என்று புரிய ஆனாலும் திருத்தலத்தில் கூட நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய சில எதிர்மறைகள் நிச்சயம் தன்னில் கூட இவைதன் உலக ஆற்றல் எது என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருத்தலமும் போனாலும் என்ன ஆகுது?
அடியவர் :- நெகட்டிவ்
அடியவர் 5 :- நெகட்டிவ் எனர்ஜி வருது
சுவடி ஓதும் மைந்தன் :- நெகட்டிவ் எனர்ஜி தான் வருதுமா அப்ப ஏன்?
===========================
# நீங்கள் நினைத்த காரியங்கள் தானாக எப்போது நடக்கும் ?
===========================
குருநாதர் :- அறிந்து கூட இதனால் பெருக்க வேண்டும் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அதனால்தான் சில திருத்தலங்களுக்கு சென்று நிச்சயம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நாங்கள் பின் நிச்சயம் உங்களுக்கு சொல்கின்றோம்.
குருநாதர் :- அதை செய்தாலே உங்கள் காரியங்கள் நாங்களே நிச்சயம் தன்னில் கூட பின் ஏற்படுத்தி விடுவோம் கவலை வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க கேட்டு… எனக்கு அது வேணும் இது வேணும்னா தேவையில்லை…
அடியவர் 5 :- அந்த கோவிலுக்கு எல்லாம் போனாலே
சுவடி ஓதும் மைந்தன் :- கோயில் போயிட்டு அதனுடைய ஆற்றல் எப்படி இன்கிரீஸ் பண்ணனும்னு சொல்லிட்டு அகத்தியர் சொல்றாராம் அதை நீங்கள் செஞ்சாவே?
அடியவர் 5 :- ஆட்டோமேட்டிக்கா நடக்கணும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆட்டோமேட்டிக்கா (நடக்கணும்)
===========================
# நிச்சயம் கூலி (நீங்கள் நினைத்த காரியங்கள்) கண்டிப்பாக தானாகவே கிடைத்து விடும்.
===========================
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறப்பின் உங்களுக்கு தொழில் பின் ஸ்தானத்தில் நிச்சயம் தன்னில் கூட செல்கின்றீர்கள், நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய.
குருநாதர் :- அதனால் சென்று எவை என்று கூறப்பின் நீங்களும் பின் எவை என்று பின் செய்கின்றீர்கள் வேலையை கூட, அறிந்தும் கூட.
குருநாதர் :- அதற்கு தகுந்தார் போல் நிச்சயம் கூலி கிடைத்து விடுகின்றது அவ்வளவுதான் எதை என்று புரிய.
குருநாதர் :- இதுதான் நிச்சயம் தன்னில் கூட அதனால் ஏது என்று புரிய நான் சொல்வதை கேளுங்கள். திருத்தலத்திற்கு போய் என்ன செய்ய பின் என்ன செய்ய வேண்டும் என்று.
குருநாதர் :- அதை செய்தால் நிச்சயம் கூலி கண்டிப்பாக தானாகவே கிடைத்து விடும்.
குருநாதர் :- ஆனால் நிச்சயம் நீங்கள் பின் வேலை செய்யாமலே கூலி கேட்டால், நிச்சயம் கிடைக்காது. சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப
அடியவர் 7:- வேலைக்கு போனா எப்படி சம்பளம் கிடைக்குதோ…
சுவடி ஓதும் மைந்தன் :- வேலைக்கு போனா சம்பளம் கிடைக்குது.
அடியவர் 7:- அதே மாதிரி
சுவடி ஓதும் மைந்தன் :- அதே மாதிரிதான்… கோயிலுக்கு எதுக்கு போறாங்க வந்து? நீங்க எனக்கு அது வேணும் .. இது எல்லாம் போகக்கூடாது அங்க போயிட்டு….
அடியவர் 7:- என்ன செய்யணும்?
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன செய்யணும்? எது செய்யணும் ?
அடியவர் 7:- நான் சொல்லித்தரேன்
சுவடி ஓதும் மைந்தன் :- நான் சொல்லித்தரேன் , அதன்படி செஞ்சா உங்களுக்கு கூலி என்ன பண்ணனும்?
அடியவர் 7:- நான் தரேன்
அடியவர் :- தானாகவே கிடைக்கும் கூலி.
சுவடி ஓதும் மைந்தன் :- தானாகவே கிடைக்கும் கூலி. ஆனா நீங்க கேட்கக் கூடாது.
===========================
# வேலை செய்யும் முன்பே கூலி கேட்டால் என்ன ஆகும் ?
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய, பின் அதாவது எவை என்று புரிய முதலில் பின் வேலை செய்யும் இடத்தில் நிச்சயம் தன்னில் கூலி கேட்டுவிட்டால் என்ன செய்வான்? நிச்சயம் நீங்களே கூறுங்கள்?
அடியவர் 9 :- வேலையை விட்டு நீக்கிருவாங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் இறைவன் செய்வார்.
அடியவர் 7 :- ஹா… ஹா… ஹா ….
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல இறைவன் என்ன பண்ணக்கூடாது?
அடியவர் 7 :- கூலி கேட்கக்கூடாது
சுவடி ஓதும் மைந்தன் :- கூலி கேட்கக்கூடாது.
அடியவர் :- வேலை செய்யணும்…
சுவடி ஓதும் மைந்தன் :- வேலை செய் முதல்ல
===========================
# உங்களிடம் உள்ள இறை பலத்தை எப்படி கெடுத்து வைத்துள்ளனர்?
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று ஆனால் இறை பலத்தை நிச்சயம் இறைவனை பின் எது என்று புரிய கெட்ட பெயர் ஆக்க வேண்டும். இறைவனை இல்லை சொல்ல வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் இப்படித்தான் என்று சொல்லி எவை என்று கூட பின் மனிதனை கெடுத்து விட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷனை வந்து கெடுத்துட்டாங்க வந்து. இறைவனை வணங்கினா?
அடியவர் 7 :- ஒன்னும் நடக்காது
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னும் நடக்காது இல்ல..
அடியவர்கள் :- ( இவ் அடியவர் தவறாக சொன்னதால் அங்கு சிரிப்பு அலைகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- என்னங்க அய்யா ( இப்படி சொல்றீங்க )
அடியவர் 7 :- அது கிடைக்காது.. இது கிடைக்காது..
சுவடி ஓதும் மைந்தன் :- இது கிடைக்கும்.. அப்படி நடக்கும்.. இப்படி நடக்கும்னு சொல்லிட்டு… என்ன பண்ணிட்டாங்க மனுஷனை ?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா எல்லாமே இது பண்ணிட்டாங்க ஆனால் உண்மை நிலையை மறைச்சு வச்சிட்டாங்க.
குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட, இதனால் இறைவன் எங்கு இருப்பான்? எதை என்று புரிய யாருக்காவது தெரியும் என்றால் நிச்சயம் தெரியாது. ஆனாலும் யான் காட்டுகின்றேன் பொறுத்திருந்தால்.
===========================
# ஏன் மாயை , உங்கள் வெற்றியை தடுக்கின்றது?
===========================
குருநாதர் :- எதை என்று கூற ஆனால் எங்கும் நிறைந்திருப்பான் இறைவன். எப்படி நீங்கள் கண்டுபிடிப்பது? சொல் பார்ப்போம்?
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் எங்கும் எங்கும் எங்கதான் இருப்பாரு இப்ப பூ போட்டாரு இல்ல… எப்படி காண்பது? எப்படிமா காண்பது?
குருநாதர் :- தாயே கண்ணிருந்தும் கண்ணில்லை உங்களுக்கு. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கண் இருந்தும் ?
அடியவர் 7 :- கண்ணில்லை
சுவடி ஓதும் மைந்தன் :- கண்ணில்லை
குருநாதர் :- எது என்று அறிய கண்ணானது நிச்சயம் பின் சில மாயங்களை எவை என்று அறிய, பின் எதை என்று பார்த்தால் பின் நிச்சயம் வெற்றி பெற முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கண் என்பது என்ன பாக்குது வந்து?
அடியவர் :- மாயை
சுவடி ஓதும் மைந்தன் :- மாயை பாக்குது…
அடியவர் 7 :- பார்த்தா? வெற்றி ஆகாது.
சுவடி ஓதும் மைந்தன் :- வெற்றி ஆகாது. மாயைன்னா என்னது வந்து?
அடியவர் 4 :- ஒரு illusion…
அடியவர் 4 :- ஒரு இல்லாதது பார்ப்பது
சுவடி ஓதும் மைந்தன் :- கண் பார்த்ததெல்லாம் வந்து
அடியவர் :- இறைவனை காண்பது
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை காண்பது தான் வந்து…
( இறைவனை காணாத அனைத்தும் மாயையே )
===========================
# இவ் யாத்திரை குழு அடியவர்கள் பிறவி நோக்கம்
===========================
குருநாதர் :- எதை என்று புரிய தாயே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் எது என்று புரிய, ஆனாலும் நிச்சயம் வந்திருப்பவர்கள் எல்லாம் நிச்சயம் சேவைக்காகத்தான் வந்திருக்கின்றீர்கள்.
அடியவர்கள் :- ( பரவசத்தில் பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்திருப்பவர்கள் எல்லாருமே என்ன பண்றது?
அடியவர் :- சேவை செய்யணும்
சுவடி ஓதும் மைந்தன் :- சேவை என்ன தெரியுங்களா?
அடியவர் :- பிறருக்காக பிரார்த்தனை செய்யணும், உழவார பணி செய்யணும் …பிறருக்காக பிரார்த்தனை செய்யணும்….
===========================
# உங்கள் வேலை என்ன ? ஏன் கஷ்டங்கள் வருகின்றது ?
===========================
குருநாதர் :- ஆனாலும் அதை விட்டுவிட்டு, அதாவது நீங்கள் நிச்சயம் தன்னில் கூட எவ்வேலைக்கு உலகத்திற்கு வந்திருக்கின்றீர்களோ நிச்சயம் அவ்வேலை சரியாக செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு வேலை வச்சிருக்காரு இறைவன். அதுக்காகத்தான் நீங்க வந்திருக்கீங்க. அந்த வேலை செய்யவில்லை என்றால்?
அடியவர் :- கஷ்டம்தான்
அடியவர் 10 :- அந்த வேலையை தான் அய்யா நீங்க சொல்லி தரணும்
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- அப்பனே எது என்று நிச்சயம் தன்னில் கூட, ஆனால் அவ்வேலையை அவ்வளவு சுலபமாக பின் செப்ப முடியாது.
===========================
# அடுத்த சென்னை சத்சங்கம் எப்போது?
===========================
குருநாதர் :- இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் கழியட்டும். இங்கே வருவேன். உன்னை பார்ப்பேன்.
அடியவர் 7 :- உங்களை பார்த்து பார்த்து சொல்றேன் என்று சொல்லிவிட்டார்…அது என்ன வேலைன்னு…
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் வருவார்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா?
அடியவர் :- மூணு மாசம்…
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் மூணு மாசம். மூணு மாசம்னா?
அடியவர் 7 :- ( 2026ஆம் ஆண்டு ) ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்…
அடியவர் 4 :- இந்த மாசமா , வாரமா ?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வாரம் இல்லை அம்மா… நான் கைலாஷ் போறேன்மா…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆகஸ்ட்… ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர்ல வருவேன். அப்பனா அகத்தியர் சொல்லுவார்
குருநாதர் :- எதை அறிவித்து இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட நீங்கள் எதையும் கேட்காதீர்கள். அனைத்தும் பின் எம் அருளால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும். ஏனென்றால் பின் எவை என்று கூற அனைவரும் பார்த்துள்ளேன் எது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் என்னை எதுவும் கேட்க தேவையில்லை…. ஏன்னா உங்கள் அனைவரையும் நான் பார்த்திருக்கிறேன்
குருநாதர் :- அது மட்டுமில்லாமல் பின் எவ்வளவு எவ்வளவு திருத்தலங்கள் அலைந்து திரிந்து நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை எத்தனை திருத்தலங்கள் எல்லாம் போனீங்க வந்து அங்கெல்லாம் கூட நான் பார்த்திருக்கேன்மா.
அடியவர் 7 :- உங்களை பார்த்திருக்கேன் ( என்று சொல்றார் )
குருநாதர் :- எது என்று புரிய ஆனாலும் இவையெல்லாம் எவை என்று அறிய நிச்சயம் தனி வருங்காலத்தில்… ஏனென்றால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. இவை தன் விஞ்ஞானப் பூர்வமாகவே யான் விளக்குகின்றேன். கவலைகள் பட தேவையில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இது புரியலையா? என்ன பண்ணுவாரு?
அடியவர் :- சயின்ஸ் மூலம் சொல்லுவார்.
சுவடி ஓதும் மைந்தன் :- சயின்ஸ் எடுத்துட்டு வராரு
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சயின்ஸ் எடுத்துட்டு வந்து…. நீங்க வந்து கவலைப்படாதீங்க…. சயின்ஸ்ல வந்து நான் சொல்றேன்றாரு
===========================
# உங்கள் முதுகில் உள்ள மின்கலத்திற்கு சக்தி ஏற்றுவது எப்படி ?
===========================
# How to charge the battery on your back?
===========================
குருநாதர் :- முதலில் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் உடல் பாகங்களை ஈர்க்க வேண்டும். எப்படி ஈர்ப்பது? எது என்று புரிய நிச்சயம் தன்னில் மின்கலத்தின் ஆற்றல் அதிகரித்தாலே போதுமானது.
சுவடி ஓதும் மைந்தன் :- பேட்டரி…. உங்களுக்கு எல்லாம் பண்ணிட்டு எல்லாமே ?
அடியவர் 7 :- பேட்டரி சார்ஜ் பண்ணனும்
சுவடி ஓதும் மைந்தன் :- சார்ஜ் பண்ணனும். எப்படி சார்ஜ் பண்ணனும்? எப்படி சார்ஜ் பண்றது? இந்த செல் இருக்குது. அந்த செல் இருக்குது. சார்ஜ் பண்ணிடுவீங்க வந்து. ஆனா உங்களை நீங்க எப்படி சார்ஜ் பண்றது?
அடியவர் 7 :- அதுக்குத்தான் கோவில் கோவிலா போக சொல்லியிருக்காரு
அடியவர் 7 :- இறை பாடல்கள் பாடுவது அய்யா ..
குருநாதர் :- அப்பனே ஆனாலும் அப்பனே பின் அவன் நினைத்தால்தான் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் நீங்க கோவிலுக்கு போனா
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன்) அவர் நினைச்சாலும் அந்த பேட்டரிய சார்ஜ் பண்ண முடியும்….
அடியவர் 6 :- அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….
===========================
# உங்கள் பரம்பரையில் உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியங்களையும் வழிபாடுகளையும் நீங்கள் தொடருவது அவசியம். நீங்கள் செய்யும் அவ் நன்மைச் செயல்களைப் பார்த்து, உங்கள் முன்னோர்கள் மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சி புண்ணியமாக உங்களிடம் திரும்பி, உங்கள் வாழ்க்கையில் வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.
===========================
குருநாதர் :- எவை என்று புரிய, நிச்சயம் அதனால் உங்கள் பரம்பரை எதை என்று அறிய நிச்சயம் பயன்படுத்தியதோ அதை நிச்சயம் ஒழுக்கமாக பயன்படுத்துங்கள். போதுமானது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உங்கள் பரம்பரை அவங்க பரம்பரை அவங்க பரம்பரையில என்ன பயன்படுத்தினாங்க? நல்லா வந்து ஒழுக்கமா வாழ்ந்தாங்க. தர்மத்தை எப்படி பூஜைகள் பண்ணாங்க.
இப்ப வந்து
( ஒவ்வொரு அடியவரையும் பார்த்து பின்வருமாறு சொன்னார்கள் )
உங்க வீட்ல ஒன்னு பண்ணிருப்பாங்க…
உங்க வீட்ல பண்ணிருப்பாங்க..
உங்க வீட்ல ஒன்னு பண்ணிருப்பாங்க..
உங்க வீட்ல பண்ணிருப்பாங்க…
அது கேட்டு அதன்படி நீங்க நடந்துக்கோங்க வந்து…
அடியவர் 13 :- அது தெரியலைனா ?
சுவடி ஓதும் மைந்தன் :- என்னம்மா? ( சத்தமாக சொல்லுங்கள் )
அடியவர் :- அது தெரியலைனா ?
அடியவர் 13 :- (கேள்வி விளக்கம் கொடுத்தார்கள்) இப்ப வந்து நம்ம வீட்ல, என்ன வழி? நம்ம மூதாதையர் என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இப்போ நம்ம செய்றோம்ல.. எங்களுக்கு அவங்க செய்த அது தெரியாது. இப்போ எங்க மாமனார் மாமியாருக்கும் அது தெரியாது. அவங்க தாத்தா பாட்டிகள்… அவங்களும் வந்து தெரியாது.
குருநாதர் :- தாயே!! எது என்று அறிய தெரியாது.. தெரியாது.. தெரியாது.. அனைத்தும் தெரியாது. பின் எப்படி பின் துன்பம் வராமல் இருக்கும்?
அடியவர் 13 :- நீங்க ஒரு வழி சொல்லுங்க அய்யா.
===========================
# ஒரு அடியவரின் விதி ரகசியங்கள்……..
===========================
குருநாதர் :- தாயே!!! சில காலம் ____________________. அதுதான் உன்னுடைய விதி.
அடியவர் 7 :- இல்லம்மா சாதாரணமா நம்ம வீட்ல எல்லாம் அந்த இடத்துல பார்த்தீங்கன்னா… சாதம் பண்ணினாங்கன்னா சாமிக்கு ஒரு நெய்வேத்தியம் பண்ணிட்டு.. காக்காக்கு போட்டுட்டு தான்.. நமக்கு சாப்பாடு போடுவாங்க. எவ்வளவு அர்ஜென்ட் இருந்தாலும். சோ அந்த முறையெல்லாம், அந்த மாதிரி வீட்ல பெரியவங்க என்னெல்லாம் முறை பண்ணினாங்களோ, அந்த முறையை ஃபாலோ பண்ணுங்க. நீங்க நல்லா இருப்பீங்கன்னு சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதி விளக்கங்கள் )
அடியவர் 13 :- இறைவன் பணி எடுத்து நாங்க செஞ்சுட்டு இருக்கோம்.
குருநாதர் :- அறிந்தும் தப்பிக்க, இறைவன் பணி பின் செய்தாலும் துன்பம்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் பணி செஞ்சாலும், துன்பம்தான். புரியுதுங்களா? இறைவன் பணி செஞ்சாலும் துன்பம்தான்.
குருநாதர் :- எதை ஏது என்று புரிய இத்துன்பத்தை அறிந்தும் எவை என்று புரிய எப்படி போக்குவது நிச்சயம் தன்னில் கூட? இறைவனே கொடுத்தால், தாயே!! எப்படி நீ பின் வெல்வாய் சொல்?
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பத்தை ?
அடியவர் 9 :- கடவுளே கொடுத்துக்கிட்டு இருக்கார்…
சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் தான் கொடுத்திருக்காரு இங்க வந்து. நீங்க கடவுளுக்கே கோயில் கட்டினாலும் என்ன ஆகும் வந்து ?
அடியவர் 13 :- அய்யா ( பதில் சொல்ல முற்பட்டார் )
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல அம்மா. அப்படி சொல்லக்கூடாது இதை சொல்லுங்கமா ஃபர்ஸ்ட். நீங்க கோயில் கட்டுறீங்கன்னு சொல்றீங்களா? அப்ப கூட துன்பம் தான் வரும்ன்றாரு. இறைவனே கொடுத்துட்டு இருக்காருன்றாரு வந்து. ஓகேங்களா ?
குருநாதர் :- தாயே நிச்சயம் சில அனுபவ பாடங்கள் நிச்சயம் தன்னில் கூட கிடைத்தே தீரும்.
அடியவர் 13 :- (அமைதி…….)
அனைத்து அடியவர்களும் :- (அமைதி…….)
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட விதியில் தன்னில் கூட எவ்வளவு எவ்வளவு கஷ்டங்கள்… எதை என்று போராட்டமாக இச்சூழ்நிலையில் நீ வாழ வேண்டும் என்பது விதி. எவரால் நிச்சயம் தடுத்திட முடியும்?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த சமயத்துல.. இது பார்க்கின்ற பொழுது.. கேட்கும் பொழுது உன்னுடைய விதியில என்ன இருக்குது வந்து?
அடியவர் :- கஷ்டப்படுறது
சுவடி ஓதும் மைந்தன் :- போராட்டமாதான் அம்மா..இருக்குதுன்றாரு…
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட விட்டுவிடாதே நிச்சயம் இறைவனை.
சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டம் வருதே அது வருதேன்னு சொல்லிட்டு?
அடியவர் :- இறைவனை விட்றாதீங்க
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை விட்டுடாதீங்க
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் ஏவை என்று ஏது என்ற உணவு கொடுப்பான் பொறுத்தருள்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உணவு கண்டிப்பா
குருநாதர் :- எது என்று கூற உண்பதற்கு கொடுப்பான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணுவார் சொல்லுங்க பார்ப்போம்?
அடியவர் 6 :- தேவைக்கு கொடுப்பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- தேவைக்கு கொடுப்பார் இப்பொழுது.
குருநாதர் :- தாயே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் ஏது என்று புரிய பல வகைகள் கூட ஏன் எதற்கு என்றெல்லாம் சொல்கின்றேன். இதனால் இப்பொழுது நீ பொறுத்தே ஆகவேண்டும் தாயே. நிச்சயம் தன்னில் கூட செய்வேன் யானும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா இப்ப வந்து என்ன பண்றாருன்னா போராட்டமான வாழ்க்கை வந்து… எப்படி இருந்தாலும் வந்து போராட்டம். ஏன்னா விதி தான் அம்மா , அவர் சொல்லுவார் வந்து இதெல்லாம் வந்து
குருநாதர் :- தாயே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட சொல்கின்றேன் எவை என்று புரிய இறைவன் தீர்ப்பே இதுதான்.
குருநாதர் :- நீங்கள் பின் எவை என்று புரிய பின் போராட்டங்கள் என்று. ஆனால் நிச்சயம் எங்கெங்கு தேடினாலும் எதை எதையோ தேடினாலும் யான் இறைவன் என்று மனிதன் சொல்லிக் கொண்டாலும் நிச்சயம் முடியாது தாயே.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன சொல்றார் தெரியுங்களா உன்னுடைய வாழ்க்கையில வந்து இப்பொழுது வந்து போராட்டம் தான் வந்து அப்ப நீ எங்கு சென்றாலும் கோயில் சென்றாலும் மனிதனிடத்தில் வந்து எதை சொன்னாலும் எப்படி போனாலும் என்ன ஆகுமா வந்து. ஆனா நீங்க என்ன பண்ணுவீங்க வந்து ஏதாவது கிடைக்குமா ஏதாவது இது ஆகுமான்னு…. நீங்க போவீங்களா ஆனாலும்
குருநாதர் :- தாயே அவர்களும் இறைவனை பெயரை வைத்து தான் நிச்சயம் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை நீ யோசிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷனே என்ன பண்றாரு வந்து?
கடவுள் பெயரை சொல்லிதான்
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்களே கடவுள் பெயர் சொல்லிதான் வந்து ஏதோ பிழைப்பு நடத்திட்டு இருக்காங்க வந்து புரியுதுங்களாமா அப்ப வந்து ஒண்ணுமே வந்து
குருநாதர் :- தாயே எதை என்று புரிய நல்லதற்காக ஒரு அடியை நீ எடுத்து வைத்தால்………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………பின் உன்னை வந்து சேரும். இதுதான் விதி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதி ரகசியங்கள் விளக்கங்கள்….)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
குருநாதர் :- தாயே பொறுத்திருந்தால் இறைவன் கையை நீட்டுவான் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
===========================
# இறைவனின் மறுபெயர்
===========================
குருநாதர் :- பின் நிச்சயம் இறைவனுக்கு பின் மறுபெயர் எதை என்று அறிய அறிய “பொறுத்து” என்றும் சொல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனுக்கு மறுபெயர் என்னது?
அடியவர்கள் :- பொறுமை
சுவடி ஓதும் மைந்தன் :- பொறுமையும் சொல்லலாம் வந்து..
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் எவை என்று புரிய கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய ஆட்களை யானே அனுப்புகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலைப்படாதீங்க. உங்களுக்கு என்னன்னா… ஏதோ ஏதோ ஒன்று
குருநாதர் :- தாயே எவை என்று ஒரு அப்பனே இன்னும் எது என்று அறிய திருப்பணி எவை என்று புரிய என்றெல்லாம் நீ பின் உளறிக் கொண்டிருக்கின்றாய் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் நினைத்தால் எவை என்று அவனை, நிச்சயம் அவனை எப்பொழுது சீர்படுத்துவான் என்று அவனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நீங்க பொறுத்து தான் ஆக வேண்டும். ஆனா அகத்தியர் வந்து யாரை எதுனா தேவையோ அது வந்து உங்களுக்கு வந்து கொடுப்பார்….
===========================
# யாத்திரை குழுவினருக்கான பொது ஆசிகள்………….
===========================
குருநாதர் :- அப்பனே நலங்களாகவே இதனால் கவலைப்பட தேவையில்லை. நிச்சயம் ஒருவருக்கும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் ஏது என்று கூட அனைத்தும் அறிந்திருக்கின்றோம். இதனால் நிச்சயம் போக போக எம்முடைய ஆசிகளாலும் அருளாலும் நிச்சயம் அனைத்தும் மாறும். உயர்வுகள் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் வந்து இது பொதுவா சொல்லிட்டாரு வந்து.. எல்லாருக்கும் வந்து ஒரு ஒரு கஷ்டம் ஒரு ஒரு இது அதனால வந்து என்னை தேடி வந்துட்டு இருக்கீங்கள வந்து நான் வந்து கண்டிப்பா உங்களுக்கு வந்து ஹெல்ப் பண்றேன் ஹெல்ப் பண்றேன்றாரு ஒன்று
குருநாதர் :- தாயே எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட கவலைப்பட தேவையில்லை. எதை என்று அறிய யான் சொல்லிய பின் சித்தர்கள் சொல்லிய பின் எவை என்று கூட பல எவை என்று அவுஷதங்கள் எதை என்று அறிய அவுஷதங்கள்.
அடியவர்கள் :- மருந்து
சுவடி ஓதும் மைந்தன் :- மருந்து எல்லாம் சொல்லி இருக்கிறோம் வந்து அதை வந்து எடுத்துட்டே வாங்கன்றாரு
===========================
# அடுத்தடுத்து பல மாற்றங்கள் நிகழப்போகின்றது.
===========================
குருநாதர் :- ஏனென்றால் உலகம் நிச்சயம் மாய உலகம். நிச்சயம் கலியுகம் அழி யுகம் எவை என்று புரிய நிச்சயம். பின் அதாவது உலகம் எவை என்று நிச்சயம் கஷ்ட உலகம் எது என்று புரிய. ஏனென்றால் அடுத்தடுத்து பல மாற்றங்கள் நிகழப்போகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- பல மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழப்போகின்றது
குருநாதர் :- உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் இறைவனை வணங்கினாலும் வீணே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் என்ன பண்ணனும்?
அடியவர்கள் :- இதுதான் சிச்சுவேஷன் என்று தெரிஞ்சு பேசாம….
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை வந்து உண்மையான நிலை இறைவன் வந்து நீங்க தெரிஞ்சுக்கணும். அப்படி தெரிஞ்சுக்கலைன்னா வணங்கினாலும் வந்து
அடியவர்கள் :- வீண்
சுவடி ஓதும் மைந்தன் :- வீண்
===========================
# இறைவன் வருத்தப்பட்டால் என்ன ஆகும்?
===========================
குருநாதர் :- கடைசியில் எது எனக்கு இறைவன் இல்லை என்று சொல்லிவிட்டு எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் ஏது என்று புரிய. அதாவது படைத்தவனை பின் இல்லை என்று எவை என்று அறிய பின் அவன் மனதும் கஷ்டமாகிவிடும். அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட கஷ்டமாகவே அனைத்தும் பின் நீங்கள் அனுபவிப்பீர்கள். இதுதான் நிச்சயம் மக்களுக்கு யாருக்கும் இவை தன் நிச்சயம் தெரிவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- படைத்தவர் நம்ம மேல பாசமா இருப்பாரு அப்ப அவர் என்ன பண்ணுவாரு நீங்க குடுக்கலன்னா என்ன பண்ணுவீங்க வந்து ஒரு நாள் வெறுத்துருவீங்க. அட கடவுள் இல்லன்னு சொல்லுவான். அப்படி இருக்கும் பொழுது அவர் என்ன பண்ணுவாராம்
அடியவர்கள் :- இன்னும் கஷ்டத்தை ஜாஸ்தி பண்ணுவாரு…
சுவடி ஓதும் மைந்தன் :- மனம் வருந்துவார். ஏன்னா நம்ம இவ்வளவு கொடுத்த நிச்சயம் இவர் அது உணராம.. ஒன்னும் பண்ணாம.. என்னடா இப்படி பண்ணிட்டாருன்னு மனம் கஷ்டம் படும்போது உன்னோட லைஃப் டோட்டல் டோட்டல் க்ளோஸ். அம்மா புரியுதுங்களா?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment