​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 August 2026

சித்தன் அருள் - 2266 - அன்புடன் அகத்தியர் - திரிசூல பூஜை வாக்கு!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - திரிசூலம்  பூசை வாக்கு 

நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://youtu.be/npiKG6l6z6o

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=11221 

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 

( வணக்கம் அடியவர்களே. இவ் 12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் மிக முக்கியமான ஒரு பூசை முறை - திரிசூலத்தை வைத்து இல்லங்களில் பயன்படுத்துவது எப்படி என்று அனைவருக்கும் உரைக்கப்பட்டது. 

அவ் வாக்கை அதன் அதி மிக முக்கியத்துவம் கருதி இங்கு முதல் வாக்காக இப்போது நீங்கள் படிக்க உள்ளீர்கள். 

முழு கூட்டு பிரார்த்தனை வாக்குகள் பின்னர் வெளிவரும் என்று அறிய தருகின்றோம். 

வாருங்கள் திரிசூலம்  பூசை வாக்கின் உள் செல்வோம்.) 

===========================
# திரிசூலம் பூசை வாக்கு ஆரம்பம் …. 
===========================

திரிசூலம் பூசை வாக்கு நேரலை :-  https://youtu.be/npiKG6l6z6o?t=21402 

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக எதை என்று புரிய, அப்பனே, பின்னே விசையானது எவை என்று கூற, திரிசூலத்தில் பின் வடிவிலே வரும் அப்பா.

அடியவர் :- சிவாய  நம !!!!! சிவாய  நம !!!!! சிவாய  நம !!!!! 

சுவடி ஓதும் மைந்தன்:-  திரிசூலம் எடுங்க அய்யா .
 
அடியவர் :- சிவாய  நம !!!!!

சுவடி ஓதும் மைந்தன்:-   அய்யா எல்லாம் கேட்கறது வந்து, தயவு செய்து கேட்டுக்கோங்க. அகத்தியர் என்ன சொல்றாரோ அதை பண்ணுங்க, வந்து போதும். 

அடியவர் :-  அந்த ஆற்றல், அந்த விசை சொல்றாங்க பாருங்க. அந்த ஆற்றலானது திரிசூல வடிவத்துல வருமாம். திரிசூலம். ஒரு திரிசூலம் எடுத்துட்டு வாங்க.

அடியவர் 6:- ( திரிசூலத்தை எடுத்து கொடுத்தார் ) 

அடியவர் :-  எல்லாரும் நோட் பண்ணிக்கோங்க.

சுவடி ஓதும் மைந்தன்:-  நோட் பண்ணிக்கோங்க.

===========================
# தீய “விஷ” சக்திகளை திருப்பி அனுப்பும்  திரி சூலமும் வேலும்.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=21469 

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய அப்பனே, மூன்றும் எதற்காக? அப்பனே, எத்தனை தெய்வங்கள்? அப்பனே, எதற்காக? எவை என்று அறிய அப்பனே. 

பின் இதனால் பல கிரகங்கள் இருந்தும், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, பின் பல பல அப்பனே, பின் பல “விஷ”  அப்பனே, ஆற்றலும் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, பின் இரண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நடுவினில் மனிதன் வாழ்ந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இரண்டும் இறைவனானவன் அப்பனே, நிச்சயம் தன்னில் மனிதனை வாழ வைக்க….. 

அப்பனே, மீண்டும் விசையை அதாவது, நிச்சயம் தன்னில்  பின் “விஷ”  அப்பனே, பின் ஆற்றலை மீண்டும் அப்படியே அனுப்புகின்றது புவியிலிருந்து  அப்பனே. இதற்குத்தான் வேல். இதற்குத்தான் எவை என்று கூற  திரிசூலமும் வேலும். 

===========================
# சூலத்தின் நடு முனை - மனிதன் (-ve) 
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-   ஐயா, என்ன பண்றாங்க? ஐயா, புரியுதுங்களா? (சூலத்தின் நடு முனை அதனை சுட்டிக்காட்டி…) இதுதான் மனிதன். (சூலத்தின் நடு முனை) நடுவுல இருக்கிறது தான் மனிதன்.

அடியவர் :- மனிதன்.

சுவடி ஓதும் மைந்தன்:-  புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  (சூலத்தின் இரு பக்க முனைகள் அதனை சுட்டிக்காட்டி…) இதுவும், இதுவும் என்னது வந்து?  பிளஸ்ங்க ஐயா.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, இங்க சூலம் போடுங்க ஐயா, பெருசா.

அடியவர் :- சூலத்தை வரைங்க, அது பெட்டர்.

அடியவர் 6:- ( திரிசூலத்தை  வரைந்தார்  ) 

https://youtu.be/npiKG6l6z6o?t=21538 

அடியவர் 6:- ( சூலத்தின் நடு முனை அதனில் மனிதன் என்று எழுதினார் ) 

அடியவர் :-  (ஆமோதித்து வழிமொழிந்தார் ) மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  மனிதன் இது.  இருங்க ஐயா, நான் வரைக்கிறேன் ஐயா. ( எழுதுகோலை வாங்கி எழுத ஆரம்பித்தார் ) 

சுவடி ஓதும் மைந்தன்:-  இது சென்டர்ல வந்து மனிதன்மா… ஐயா, மனிதன் இது. ஓகேங்களா? 

===========================
# சூலத்தின் இரு பக்க முனைகள்  - மனிதனுக்கு ஆற்றல் தரும் (+ve)
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-   (சூலத்தின் இரு பக்க முனைகள் அதனை சுட்டிக்காட்டி…) இது வந்து ஆற்றல் பிளஸ். இதுவும் பிளஸ்.

https://youtu.be/npiKG6l6z6o?t=21551

அடியவர்கள்  :- ( ……….. )   

அடியவர் :-  பாதுகாக்குது.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, புரியுதுங்களா? அப்ப, இந்த பூலோகத்தில் வந்து “ விஷ”  ஆற்றல், இன்னும் எனர்ஜி எங்கிருந்தோ வந்து, அது சொல்வாரு. அதிகமா வருகின்ற பொழுது, இந்த ரெண்டும் என்ன ஆகுது ஐயா? மனிதனை ஐயா, புரியுதுங்களா?

அடியவர் :- சூலம் தான் பாதுகாக்குது. 

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா? 

அடியவர் :-  சூலம் தான் பாதுகாக்குது.

சுவடி ஓதும் மைந்தன்:-  சூலம் தான் இந்த ரெண்டு. ஐயா, சூலம் இது வந்து என்ன தெரியுங்களா? சூல வடிவுல தான் இருக்கும்மா. அது வந்து உங்களை காக்குறதுக்கு வந்து. 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஓகேங்களா? அப்ப, இதுவும் பிளஸ். இதுவும் பிளஸ். இங்கதான் மனுஷன். அப்ப, மனுஷனை காக்குறதுக்காக இந்த சூல வடிவுல வந்து, இறைவன். அது இறைவன் வச்ச அந்த பவர். அந்த பவர் என்பது என்ன ஆகுது வந்து? பாதுகாத்துக்குது வந்து.


அடியவர் :-  மனிதனை பாதுகாத்துக்குது.


அடியவர்கள்  :- ( ஆடியோ பதிவில்லை இவ்விடத்தில் ……….. )   


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, ரைட். அப்ப, இதை வந்து என்ன ஆகுது? பிளஸ், பிளஸ். இது என்னது? 


https://youtu.be/npiKG6l6z6o?t=21603 


குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய அப்பனே, நீங்களே தெரிந்து கொள்ள…


சுவடி ஓதும் மைந்தன்:-  அதான் ஐயா, இது மைனஸ். இங்க மனுஷன் என்பவன் தான் மைனஸ்.


அடியவர் :-   மைனஸ், கரெக்ட்.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, யாரு? அதுதான் யாரு?


அடியவர் :-    மனிதன்.


சுவடி ஓதும் மைந்தன்:-  நெகட்டிவ் காரன் யார் வந்து? 


அடியவர் :-   மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன்:-   மனிதன். 


https://youtu.be/npiKG6l6z6o?t=21619


===========================
# நல் எண்ணங்களே நல் வாழ்வு….
===========================


குருநாதர் :- இவ்வாறாகவே, மனிதன் எது என்று கூற, பின் அது எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, பின் அதாவது, மனதில் தீய எண்ணங்கள், தீய அழுக்குகள் எவை என்று புரிய இருந்தால், நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாகவே ஆகுவான். 


சுவடி ஓதும் மைந்தன்:-  (சூலத்தின் நடு முனை)  இது மைனஸ். அப்ப, மனுஷனோட தீய அழுக்குகள் எல்லாம் இருந்துச்சுன்னா என்ன ஆகுமாம் வந்து மனுஷன்?.


அடியவர் :-    தானா அழிவான்.


சுவடி ஓதும் மைந்தன்:-   மைனஸ். அப்படியே தான் இருப்பான். 


===========================
# உயர்ந்த ஆற்றல் - இறைவனை சேவித்தல், நல்லது செய்தல்
===========================


குருநாதர் :- எவை ஏது என்று கூற நிச்சயம் தன்னில்  இதனால் உயர்ந்த பின் ஆற்றல் எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, இறைவனை சேவித்தல்….. இன்னும் நல்லது செய்தல்….. இவ்வாறாக இருந்தால், எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, இதிலிருந்து விடுபட்டு, ஆற்றலோடு பின் பறக்குவான்.


அடியவர் :-  சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன்:-   அப்ப, என்ன பண்ணுவாங்கன்னா, இறைவனோடு ஒன்று இருத்தல், நல்ல எண்ணங்களை வந்து மனசுல….


அடியவர் :- தான தர்மம் செய்தல்.


சுவடி ஓதும் மைந்தன்:-  தான தர்மம் செய்றது, நல்ல பாடல்கள் பாடுறது, எனர்ஜி ஏத்துக்கினா?.


அடியவர் :-  கோயிலுக்கு எல்லாம் போகணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  இதுல இருந்து இப்படி, இந்த இங்க, இதுல இருந்து சூலத்துல இருந்து இப்படி வந்துட்டான்னா, மனுஷன் பறப்பான். ஐயா, புரியுதுங்களா? அந்த எனர்ஜியோட.


அடியவர் :-  பறப்பான் வெளியில.


சுவடி ஓதும் மைந்தன்:-  எனர்ஜி ஃபுல்லா. அப்ப, என்ன ஆகும்? பறந்துகிட்டே இருப்பான்ப்பா. பறக்கலாம். நல்லது நடக்கும் உங்களுக்கு வந்து. ஐயா, புரியுதுங்களா? ஐயா…..


அடியவர் :-  புரியுது, புரியுது.


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப, இந்த பறந்துகிட்டே இருக்கிறப்ப, இங்கிருந்து வெளிப்பட்டுறான். இங்கிருந்து வெளிப்படணும்ன்றாரு. இந்த மைனஸ்ல இருந்து வெளிப்படணும். 


https://youtu.be/npiKG6l6z6o?t=21696


===========================
# (-ve) மாயாஜாலத்தில் சிக்கி தவிக்கும் மனிதன்…
===========================


குருநாதர் :- ஆனாலும், இன்றைய பின் காலகட்டத்தில், எதை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் மாயாஜாலத்தில் எவை என்று கூற இன்னும் பின் அதிலேயே மனிதன் இருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன்:-  இங்கிருந்து வெளிய வர முடியலைங்க ஐயா. மனுஷனால.


அடியவர் :-  சிக்கிக்கிட்டான் உள்ள மாயாஜாலத்துல.


சுவடி ஓதும் மைந்தன்:-  சிக்கிக்கிட்டான் அந்த மைனஸ்லயே. அப்ப, இன்னும் வந்து என்ன ஆகுது ஐயா? மாந்திரீகம், அந்த இது ….இன்னும் என்ன? இங்கேயே தான் இருக்கிறான் மனுஷன். வெளியாக? 


அடியவர் :-   வர முடியவில்லை.


சுவடி ஓதும் மைந்தன்:-  அடியவர் :-  வர முடியவில்லை.




===========================
# ஒவ்வொரு இல்லத்திலும் திரிசூலம் வைத்து வழிபட வேண்டும்.
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=21722 


குருநாதர் :-  அறிந்தும், இவ்விசையானது எவ்வாறு என்பதை எல்லாம் இன்னும் அறிந்தும், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதற்காகத்தான் யான் சொல்கின்றேன். 


குருநாதர் :-  ஒவ்வொரு இல்லத்திலும் பின் வெளியில் தன் சூலத்தை வைத்து, நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் எவை என்று கூற எலுமிச்சை பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட அதாவது, இரண்டு தடத்தில், நிச்சயம் தன்னில் கூட இட்டு இட, பின் தானாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். அவ்வளவுதான். பின் வரவேண்டியதை தடுக்கும்.


அடியவர் :-   சிவாய  நம. சிவாய  நம. 


சுவடி ஓதும் மைந்தன்:-  வீட்ல எல்லாரும் என்ன பண்ணனும்?


அடியவர் :-  எதுக்காக எலுமிச்சை பழம் நடுவுல குத்துறாங்க? 


சுவடி ஓதும் மைந்தன்:-   நடுவுல இல்லைங்க ஐயா. (சூலத்தின் இரு பக்க முனைகள் அதனை சுட்டிக்காட்டி…) இங்க ஒன்னு குத்திட்டோம்னா, இங்க ஒன்னு குத்திட்டோம்னா, வந்து தானாக ஆற்றல் இங்க வந்து இறங்கிடும். வெளிய வைக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் :- ஓ !!!!!!


சுவடி ஓதும் மைந்தன்:-   முதல்ல வீட்டுக்கு வெளியே வைக்கணுங்க ஐயா. சூலத்தை எல்லாரும். இப்ப, சூலம் கொடுப்பாங்க இல்ல? அது எங்க வைக்கணும்?


அடியவர் :- வீட்டுக்கு வெளியிலே.


சுவடி ஓதும் மைந்தன்:- வீட்டுக்கு.


அடியவர் :- வெளியில்.


சுவடி ஓதும் மைந்தன்:-   வெளியில் வைக்க வேண்டும். 


குருநாதர் :-   எதை இவ்வாறாக, நிச்சயம் அப்பொழுது, நிச்சயம் ஆற்றல் எவ்வாறாக, நிச்சயம் இழுக்கும் என்பதை நீ கூறு. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப, இங்க வெளியே வச்சா, ஆற்றல் எப்படி இழுக்கும்ன்றாரு. இழுக்கும். எப்படி இழுக்கும்? ( சொல்லுங்க ) 


அடியவர் 6 :-  ( எலுமிச்சை மூலம் …..) 


https://youtu.be/npiKG6l6z6o?t=21785


குருநாதர் :-    அப்பனே, இவ் சக்தியானது. அப்பனே, இன்னும் அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமானால், அப்பனே, இன்னும் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் பின் அதிகம் உள்ளதப்பா. அவை அடுத்தடுத்து பின் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் இந்த சக்திகள் எல்லாம் நீங்க வந்து தெரிஞ்சுக்கொள்ளனும்னா, அந்த சக்தி உங்களுக்கு உணர்வதற்கு நீங்கள் வாய்ப்பில்லை. அடுத்த கட்டத்தை நான் சொல்றேன்றாரு. ஐயா, புரியுதுங்களா? 


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, வீட்டுக்கு வெளியே வச்சிட்டு, சூலத்தை ரெண்டு எலுமிச்சை கொடுத்துட்டு, (சூலத்தின் நடு முனை)  இது நீதான் மனுஷன். உன்னோட ஆற்றல் தான். 


குருநாதர் :-  அப்பனே, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனை எப்படி சீர் செய்வது என்று யாராவது சொல்லுங்கள், பார்ப்போம். எவ்வளவு புரிந்திருக்கிறது என்பது பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன்:- (சூலத்தின் இரு பக்க முனைகள் அதனை சுட்டிக்காட்டி…)  இங்க பிளஸ்ல வந்துரும், இங்க பிளஸ்ல வந்துரும். இது வந்து (சூலத்தின் நடு முனை)  மைனஸை எப்படி பிளஸ் ஆகுதுன்னு கேக்குறாரு. 


அடியவர்கள்  :- ( சில பதில்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்:- அதுதாங்க ஐயா. (சூலத்தின் இரு பக்க முனைகள் சக்தி ) கூட கூட என்ன ஆகும்? 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, (சூலத்தின் இரு பக்க முனைகள் சக்தி ) இது கூட கூட….. (சூலத்தின் நடு முனை)  இது குறைஞ்சிடும்ங்க ஐயா. ஐயா, புரியுதுங்களா? ஐயா, யாருக்கும் புரியலைங்களா?


===========================
# திரிசூலம் சக்திகள் விளக்கம்….
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=21847 


அடியவர் :- ஐயா, ரெண்டு சூலத்துடைய ரெண்டு பக்கம், ரெண்டு பிளஸ். அதாவது, பாசிட்டிவ் எனர்ஜி இருக்குது. நடுவுல மனிதன் நெகட்டிவ் எனர்ஜி. சோ, ரெண்டு பக்கம் சூலத்துல எலுமிச்சம் பழத்தை குத்துறப்போ, அந்த ரெண்டு புறமும், அந்த பிளஸ் ஆற்றல் அதிகமா இன்னும் ஈர்த்து, மனிதனுக்கு வீட்டுக்கு வாசல்ல வைக்கிறப்போ, அந்த மனிதனுக்குரிய நெகட்டிவ் எனர்ஜி எடுக்கும்ன்றாங்க.


===========================
# திரிசூலம் ஏன் என்று யாருக்கும் இதுவரை தெரியாது…….
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=21867 


குருநாதர் :-   எதை என்று புரிய… ஆனாலும், அறியாத முட்டாள்கள், மனிதர்கள் எவை என்று அறிய, நிச்சயம் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள். எதற்காக பயன்படுத்துகின்றோமே என்று தெரியாமல்.
அடியவர் :- சிவாய நம. ஐயா, தெரியாது ஐயா. உண்மையிலேயே தெரியாதுங்க ஐயா.


===========================
# திரிசூலம் அளிக்கும் மகத்தான பலன்கள்… 
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால் நடுவில் என்ன செய்ய வேண்டும்? எவை என்று அறிய, பின் அதை நீயாக நினைத்து, அனுதினமும் அப்பனே, எது என்று கூற. பின் அதாவது, நிச்சயம் சில மூலிகைகளான அப்பனே, பின் நிச்சயம் நீரை ஊற்றிக் கொண்டே வந்தால், உன் உள்ளம் தெளிவாகும்.


அடியவர் :- சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன்:-   நடுவில் இருக்குது நீயே. உன்னை சுத்தப்படுத்திக்கணும். பால் ஊத்தணும்.


அடியவர் :-  எதுக்காக அபிஷேகம் பண்ணனும்னு சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  எதுக்கு அபிஷேகம் பண்ணனும்? இதுதான் சென்டர். அப்ப.


அடியவர் :-   இல்ல, நம்மள சுத்தப்படுத்துறதுக்கு.


சுவடி ஓதும் மைந்தன்:-  உங்களை சுத்தப்படுத்திக்கோன்றாரு. அப்ப, இது ஆற்றல் வந்துரும் உள்ள. உள்ள எல்லாம் வீட்டுக்குள்ள இருப்பாங்க இல்ல? அப்ப, இதுக்குள்ள டெய்லி என்ன பண்ணனும்னா, இங்க வந்து பாலு.


அடியவர் :- பால் அபிஷேகம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  நடுவுல இதோ இதுக்கு. இதுக்குங்க ஐயா. இந்த கூர் (சூலத்தின் நடு முனை)  இருக்குல்ல, இதுதான் மனுஷன். அப்ப, இதுக்கு வந்து டெய்லி வந்து என்ன பண்ணனும்?


அடியவர் :-  (சூலத்தின் நடு முனை)  அபிஷேகம் பண்ணனும்.நடுவுல இருக்கும் இந்த கூருக்கு… (அதே நேரத்தில் சூலத்தின் இரு பக்க முனைகள் அதனில் 2 எலுமிச்சை சொருகப்பட்டு இருக்கும் என்று அறிக… )


சுவடி ஓதும் மைந்தன்:-  அபிஷேகம் பண்ணனும். ஐயா?


அடியவர் ஒருவர் :- (சூலத்தின் நடு முனை)  இதுல மூலிகை (அபிஷேகம்) எடுக்க, எடுக்க, எடுக்க அது சுத்தமாகும்…


சுவடி ஓதும் மைந்தன்:-  ஆமா. இதுல மூலிகை எடுக்க, எடுக்க, எடுக்க, இதுல மூலிகை ஊத்த, ஊத்த, நம்மளோட எண்ணங்கள் என்ன ஆகும்?


அடியவர் :- சுத்தமாகும். எண்ணங்கள்.


சுவடி ஓதும் மைந்தன்:-  சுத்தமாகும். எனர்ஜி சுத்தமாகும். 


குருநாதர் :-  இவ்வாறாக, நிச்சயம் கெடுவான் எவை என்று கேடு நினைப்பான் என்ற பழமொழி உண்டு. அறிந்ததே நீங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  கெடுவான்? 


அடியவர் :- கேடு நினைப்பான்.


சுவடி ஓதும் மைந்தன்:-  கேடு நினைப்பான். நீங்கள் அறிந்தது ஒன்று. 


===========================
# உங்கள் மீது தீய ஏவல் , பில்லி , சூனியங்கள் , தீய  தந்திரங்கள் , தீய  யந்திரங்கள்,  தீய ஏவல்  மந்திரங்கள்  - இவற்றை தவிடு பொடியாகும் திரிசூலம் - அவசியம் இவ்வழிபாட்டை உங்கள் இல்லங்களில் செய்க….
===========================

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=21946 


குருநாதர் :-  இவ்வாறாக, எவை என்று கூற, தந்திரங்கள், மந்திரங்கள், எவை என்று கூற, அதாவது, பின் பலிக்காது. 


சுவடி ஓதும் மைந்தன்:-   இப்படி இது மாதிரி பண்ணிட்டே இருந்தீங்கன்னா , தந்திரம்….


அடியவர் :-  மந்திரம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  மந்திரங்கள், மாயாஜாலம் எல்லாம் இருக்கிறாங்க இல்ல? அதெல்லாம் என்ன ஆகும்? பலிக்காதுப்பா. 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட (திரிசூலம்) இவை இல்லாமல் இருந்தால், எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட அனைவர் எவை என்று கூற, அதாவது, இல்லத்தில் கூட உள்ளே சென்று விடுவதால், அனைத்தும் குழப்பமே. 


சுவடி ஓதும் மைந்தன்:-   ஐயா வீட்ல வந்து நிறைய நெகட்டிவ் எனர்ஜி போகுதுங்க ஐயா. வீட்ல என்ன ஆகும்?


அடியவர் :-   துன்பம் தான் வீட்ல. வீட்ல பிரச்சனை தான் .


சுவடி ஓதும் மைந்தன்:- வீட்லயே துன்பம் தான். 


===========================
# திரிசூலம் பூசை - இவ்வழிபாட்டை  பய பக்தியுடன் , முழு முயற்சியுடன் உங்கள் இல்லங்களில் செய்க….
===========================


குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற, முழு மனதோடு முயற்சிக்க வேண்டும். செய்ய வேண்டும். அப்பனே, நிச்சயம் பின் யாரோ எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன்:-  யார் என்ன சொன்னாலும், நீங்க முழு முயற்சியோட என்ன பண்ணனும்?


அடியவர் :- முழு முயற்சியோட, நம்பிக்கையோட, நம்ம மனசார செய்யணும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  இது செஞ்சா….


===========================
# திரிசூலம் பூசை செய்பவர் மூலம், அவர்கள்  இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மகத்தான நல் சக்தி பரவும்….. 
===========================




குருநாதர் :-  எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அறிந்தும் கூட, அப்பனே, பின் நீயாக நினைத்த அப்பனே, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஆற்றல் உனக்குள்  வருகின்ற பொழுது, மீண்டும் உன்னால் அப்பனே, இல்லத்தில் உள்ள அனைவருக்கும் செல்லும் என்பேன், அப்பனே.


அடியவர் :- சிவாய நம. நம்ம ஒருத்தர், அதாவது, வீட்ல இருக்கிற தலைவர் ஒருத்தர்.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஒருத்தர் செஞ்சா போதும்.


அடியவர் :-  நம்மள சுத்தப்படுத்திக்கிட்டா, நம்மளுடைய ஆற்றல் வீட்ல இருக்கிற எல்லா பேருக்கும் பரவும், அப்படின்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  பரவும். ஓகேங்களா? 


===========================
வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோல் உயரும்,
கோல் உயரக் கோன் உயர்வான்…. 
-ஔவையார்  
===========================
# சிறு துளி பெரு வெள்ளம் 
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=22023 


குருநாதர் :- அப்பனே, இதுபோலத்தான் நன்மைகளை சிறுது சிறுதாக, பின் நிச்சயம் தன்னில் கூட செய்ய முடியும் என்பேன், அப்பனே.


அடியவர் :- சிவாய நம. இப்படித்தான் மாத்தணும்ன்றாங்க. கொஞ்சம் கொஞ்சமா.


சுவடி ஓதும் மைந்தன்:-   ஒரே அடியில மாத்தாது.


அடியவர் :-  ஆமா.


சுவடி ஓதும் மைந்தன்:-     இப்படித்தான் 


அடியவர் :-  மாத்தணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-    கொஞ்சம் கொஞ்சமா…ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் :-  ஒரு இல்லத்துல ஒருத்தர் மாறினா, குடும்பம் மாறும். 
ஒரு குடும்பம் மாறினா, ஒரு கிராமம் மாறும். 
ஒரு கிராமம் மாறினா, ஊர் மாறும். 
ஒரு ஊர் மாறினா, நாடு மாறும். 
நாடு மாறினா, உலகமே மாறிடும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   மாறிடும்… புரியுதுங்களா?


அடியவர் :-   எப்படி மாற்றத்தை கொண்டு வரணும்னு சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-   மாற்றத்தை எப்படி கொண்டு வந்துரணும்? சின்ன ஆள்ல இருந்து எடுத்துட்டு போவாரு.


அடியவர் :-    நம்பிக்கையா செய்யணும். 


===========================
# உங்களிடம் உள்ள சிவப்பு நிறத்தை நீக்குவது எப்படி ?
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=22053 


குருநாதர் :-  இதனால், நிச்சயம் தன்னில் எதை என்று கூற, இல்லத்திலிருந்தே எவை என்று புரிய, சில சில வழிகள் கூட, எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அதாவது, நீங்கள் வெளியில் பின் சென்று, பின் திரிந்து, நிச்சயம் இருக்கின்ற பொழுது, நிச்சயம் உங்களை அதிக அளவு, பின் எவை என்று அறிய, பின் சிவப்பு நிறம் பாதிக்கும். 


குருநாதர் :-  எவை என்று அறிய, இதனால், இல்லத்திற்கு பின் அனுதினமும் இவை செய்ய, செய்ய, இல்லத்திற்கு வந்து விட்டால், நிச்சயம் தன்னில் கூட, அவ் சிவப்பு நிறம் எவை என்று அங்கே நின்றுவிடும். வெளியில் தன்னில் கூட.


அடியவர் :-   சிவாய நம. நம்ம எங்க எங்கயோ சுத்துறோம்ல. சுத்திட்டு நிறைய சிவப்பு நிறம் ஒளி கதிர்  நிறைய வாங்கிட்டு வீட்டுக்கு வந்துறோமாம். அப்போ, இந்த வீட்டுக்கு வந்த உடனே, இதை நம்ம இந்த அபிஷேகம் நம்ம ரெகுலரா மனதார செஞ்சுட்டு வந்தோம்னா, சிகப்பு நிறம் வீட்டுக்கு வெளியிலேயே இருந்துருமா? வீட்டுக்குள்ள வராதாம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   வீட்டுக்குள்ள? 


அடியவர் :-  வராதுன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-   வராது. 


===========================
# எலுமிச்சை பழத்தின் மகத்தான சக்தி…..
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=22089 


குருநாதர் :-   எவை ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. ஏன் இப்படி? எதை என்று கூற, பின் அதாவது, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இதற்கு, அதாவது, இவ்வளவு பலம், எலுமிச்சைக்கும் இவ்வளவு பலம்.


அடியவர் :-  சிவாய நம 


சுவடி ஓதும் மைந்தன்:-   அந்த சிவப்பு நிறத்தை தடுக்குறதுக்கு எது?


அடியவர் :-  தடுத்து நிறுத்துறது எது? எலுமிச்சம் பழம். சைடுல குத்தி வச்சிருக்க 2 எலுமிச்சம் பழம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   எலுமிச்சம் பழம். அப்ப, டெய்லி வீட்ல வந்து 


===========================
# திரிசூலத்தின் முன்னர் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்….
===========================


குருநாதர் :- அறிந்தும், ஏது என்று புரிய பின் ஆனாலும், அடி தன்னில் விளக்கை கூட. 


சுவடி ஓதும் மைந்தன்:-    விளக்கு ஒன்னு ஏத்திடனும். இங்க வச்சிட்டு.


அடியவர் :-  ஒரு விளக்கு முன்னாடி  சூலத்தை குத்தி வச்சிடனும். 


குருநாதர் :- எதை ஏது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அதாவது, சூலம் எப்பொழுதும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. சூடாகவே நெருப்பு போல் எரிந்திருக்கும். அப்பொழுதுதான்.


அடியவர் :- சிவாய நம 


சுவடி ஓதும் மைந்தன்:-  சூலம் என்ன பண்ணனும்? நெருப்பு மாதிரி எரிஞ்சு இருக்குமாம். எப்பவுமே.


அடியவர் :- (கேள்வி) அதாவது, முன்னாடி விளக்கை வச்சுறோம்னா, அந்த விளக்கை நுனியில்…?.


சுவடி ஓதும் மைந்தன்:-  (பதில்) ஐயா, ஆல்ரெடி மேல இது மாதிரி வந்து நெருப்பாதான் இருக்குமாம். சூலமே.


அடியவர் :- ஓ, இயற்கை. ஓகே.


சுவடி ஓதும் மைந்தன்:-  இயற்கையாகவே. அப்ப, ஐயா, புரியுதுங்களா? 
……..
சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, புரியுதுங்களா எல்லாருக்கும்? 


https://youtu.be/npiKG6l6z6o?t=22149




குருநாதர் :-  இதனால், நிச்சயம் தன்னில் கூட, மனிதனிடத்தில் உள்ள, அதாவது, நிச்சயம் சில பைத்தியங்கள், சில எவை என்று கூற, பின் சில, பின் மாய எவை என்று அறிய , நிச்சயம் தன்னில் கூட. பின் இவையெல்லாம் போக போக மாறும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  பிளாக் மேஜிக். ஏவல் அதெல்லாம் இருக்குது இல்ல? அது மாதிரி எல்லாம் இப்படித்தான் சொல்றாங்க இல்ல? அப்ப, போக போக என்ன ஆகும்?


அடியவர் :- அது மாறும். பைத்தியம் மாதிரி பேசுவான்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பைத்தியம் மாதிரி பேசி நிக்கிறீங்க. சண்டை போடுறது எப்ப? என்ன பண்ணுவான்? சிறுது சிறுதாக.


அடியவர் :- கொஞ்சம் கொஞ்சமா மாறும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  மாறினே போகும். 


குருநாதர் :- எதை என்று அறிய, எவ்வாறு பின் அனுதினமும் இதில் தன் பின் மூலிகைகள் இடுகின்றீர்களோ, அதே மூலிகைகள் சிறிது நீங்கள் உட்கொள்ள வேண்டும்.


அடியவர் :- சிவாய நம!!!!!  அதுல என்னென்ன மூலிகை எல்லாம் நீங்க இந்த அபிஷேகத்துக்கு பயன்படுத்துறீங்களோ, அதை நீங்க சிறிது உட்கொள்ள வேண்டும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:- உட்கொள்ள வேண்டும். 


ஒரு அடியவர் :- ( கேள்வி – எந்தெந்த மூலிகைகள் … ) 


குருநாதர் :-  எதை அப்பப்பா அறிந்தும், உன் இஷ்டம் போல் செய். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அருகம்புல்லு, வில்வம், எல்லாம் வேப்பிலை எல்லாம் இது பண்றாங்க பாருங்க.


அடியவர் :-  தண்ணில கசக்கி போட்டு பிழிஞ்சு பண்ணிடுங்க.


சுவடி ஓதும் மைந்தன்:- வீட்டுக்கு வெளியில. ஐயா, உங்க வீடு இங்க இருக்குதுன்னா, வீட்ல வந்து வாசப்படியிலயோ, வாசப்படிகளோட வெளிய வைக்கலாம். நீங்க வந்து.


அடியவர் :-  வீட்டு வாசல்லையே இதை வச்சிரலாம்.


===========================
# பழங்காலத்தில் வீட்டில் வெளியே உள்ள விளக்கு மாடம் - முக்கோண வடிவில்  
===========================


குருநாதர் :-  அறிந்தும், அப்பனே, எதை என்று கூற, அப்பொழுதெல்லாம் விளக்கை வைப்பதற்கு தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, செதுக்கி வைத்திருந்தார்கள் என்பேன், அப்பனே. 


குருநாதர் :- இப்பொழுது அவையெல்லாம் இருக்கின்றதா? அப்பனே, ஏதோ வாஸ்து என்று தெரிவித்து விட்டார்கள்.


அடியவர் :-  பாருங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்பெல்லாம்.


அடியவர் :-  ஒவ்வொரு வீட்லயும் விளக்கு வைக்கிறதுக்கு ஒரு மாடம் வச்சிருப்பாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  வெளியில.


அடியவர் :-  யாராப்பா வைக்கிறாங்களா மாடம்?


சுவடி ஓதும் மைந்தன்:-  யாராவது வைக்கிறாங்களாப்பா?


அடியவர் :-  வெளியில போயிட்டு வரப்போ, இந்த ஆள் சொல்லிட்டு எல்லாமே வாஸ்துன்னு சொல்லிட்டாங்கப்பா.


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாம் வாஸ்துன்னு சொல்லி எடுத்துட்டாங்க.


===========================
# வாஸ்து  குறித்த அதிர்ச்சியான உண்மை 
===========================
# வாஸ்து - “அப்படி ஒன்று இல்லையப்பா.”
=========================== 


https://youtu.be/npiKG6l6z6o?t=22240


குருநாதர் :- அப்பனே, எவை என்று கூற, பின் வாஸ்து என்று சொல்பவன் இறக்காமல் இருக்கின்றான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லுங்கள், பார்ப்போம். 

குருநாதர் :-  அப்பனே, அதையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மாய மனிதன் எடுத்து வந்தவைத்தான் இவையெல்லாம். அப்படி ஒன்று இல்லையப்பா. 


அடியவர் :-   வாஸ்துன்னு ஒன்னு இல்ல. மாய மனிதன் எடுத்துட்டு வந்ததுப்பா. வாஸ்து பண்றவன்.


சுவடி ஓதும் மைந்தன்:-   வாஸ்து பண்றவன் வந்து.


அடியவர் :-   சரியா ஃபாலோ பண்றவன் இறக்காம இருக்கிறான். ( அதுவே ஆச்சரியம் ) 


===========================
# ஒரு பொய்,  எப்படி மாய உண்மை போல் ஆகின்றது ? 
===========================


குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற, பின் எதை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் உன்னிடத்தில் அதிகமாக எவை என்று கூற, செப்புகின்றானோ, அதுவே நடக்கும்போது போல், அப்பனே, அப்பனே, பின் எண்ணங்களும், அப்பனே, பிரதிபலிக்கும் என்பேன், அப்பனே.


அடியவர் :-   பாருங்க, அதாவது, ஒரு விஷயத்தை நம்ம திருப்பி திருப்பி ஒருத்தன் வந்து சொல்றப்போ, நமக்கே தோணிருமாம். அவன் சொல்றது நடக்குதோ.


சுவடி ஓதும் மைந்தன்:-   நடக்கும்டா. ஐயா, புரியுதுங்களா? அது நடக்கும்னு சொல்லிட்டு நமக்கு பயம் ஆயிடுமாம். ஐயா, புரியுதுங்களா? 


===========================
# வாக்குகளை பெருக பெருக, மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் 
===========================
# மக்கள் அனைவரும் நன்றாக வாழட்டும்.
===========================


குருநாதர் :-   அப்பனே, இதனால்தான், அப்பனே, இதனால் சிறுக சிறுக சொல்கின்றேன் அப்பனே. 


குருநாதர் :-  பெருக பெருக, அப்பனே, கற்றுக்கொள்ளுங்கள், அப்பனே. 


குருநாதர் :-  பெருக பெருக, மக்களுக்கு சொல்லுங்கள் என்பேன், அப்பனே. 


குருநாதர் :-  அனைவரும் வாழட்டும்.


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்………………….. )


அடியவர் :-  சிறுது சிறுதா சொல்லிக் கொடுக்கிறேன்ப்பா. பெருக பெருக, நல்லா வாழுங்க. எல்லா பேருக்கும் சொல்லிக் கொடுங்கன்றாங்க.


===========================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் …
===========================
# நல்ல ஆற்றல், அனைவருக்கும் நிம்மதி ஆரோக்கியம்  கிடைக்க, கோமதி சக்கரத்தை கொடுங்கள்
===========================


குருநாதர் :-  அப்பனே, அது மட்டுமில்லாமல், அடுத்து எது என்று கூற, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நல்ல ஆற்றல் அனைவருக்கும் நிம்மதி கிடைக்க, அப்பனே, கோமதி சக்கரத்தை கொடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து.


அடியவர் :-  சிவாய நம….கோமதி சக்கரம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   சிறுசா.


அடியவர் :-   சரி.


குருநாதர் :-  அப்பனே, இவை, அப்பனே, எப்படி விளக்குகிறேன் என்பதெல்லாம் பின்பு எடுத்துரைக்கின்றேன், அப்பனே. இவை செய்ய, அப்பனே, எப்படி ஆரோக்கியம் பிறக்கும், எப்படி எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சொல்கின்றேன் பின்பு என்பேன், அப்பனே. 


===========================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் …
===========================
# செப்பு நாணயத்தில் ஒரு புறம் வேலும் , மறுபுறம் திரிசூலமும் வைத்து கொடுங்கள்….
===========================




குருநாதர் :-  அதை முதலில் கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் ஒரு நாணயத்தையும் அதேபோல, அப்பனே, பின் அவ் நாணயத்தில் ஒரு முனையில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நல்விதமாக, அப்பனே, பின் திரிசூலமும், மற்றொரு, அப்பனே, பின் முனையில், அப்பனே, வேலும் இருக்கும்படி கொடுங்கள் என்பேன், அப்பனே. 


குருநாதர் :-  இதில்தான், அப்பனே, நிச்சயம் இன்னும் ரகசியம் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே. செப்புவேன், அப்பனே, இன்னும் விளக்கமாக.


அடியவர் :-  ஒரு முனையில திருசூலம்?


சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு நாணயம். ஒரு முனையில வந்து திருசூலம் இருக்கணும் வந்து.


அடியவர் :-  ஒரு பக்கம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு பக்கம் வேல் இருக்கணும்.


அடியவர் :-  சூப்பர். ஓகே.


சுவடி ஓதும் மைந்தன்:-  அது அப்புறம் கோமதி சக்கரம்.


அடியவர் :-  கோமதி சக்கரம்.


அடியவர் :-  நாணயம் என்ன மெட்டீரியல்ங்க ஐயா?


https://youtu.be/npiKG6l6z6o?t=22356 


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, அப்பனே, எத்தனை நாட்கள் எவை என்று கூற, பின் எத்தனை, எவை என்று அறிய, அப்பனே, பின் சொன்னேனே, அதேதான் என்பேன், அப்பனே. 


குருநாதர் :-  ஏனென்றால், அப்பனே, பின் எவை என்று கூற, இவைதான். அதாவது, நிச்சயம் பின் இதில்தான் தடுப்பதற்கு சக்தி அனைத்தும் அடங்கியுள்ளது என்பேன், அப்பனே. இடியாயினும் இதில், அப்பனே, பின்.


அடியவர் :-   செம்பு. செம்பு சொல்றாங்க. செம்பு.


சுவடி ஓதும் மைந்தன்:-  செம்புல ஒரு பொருள்ல வந்து இடி விழுந்தா கூட வந்து தாங்கும் சக்தி இதுக்கு வந்து.


அடியவர் :- நிறைய இடிதாங்கி வைக்கிறதுனால.


===========================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் …
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் புரிகின்றதா? அப்பனே, பொருள் எது என்று அறிய, அப்பனே, பின் கீர்த்தி. அப்பனே, எவை என்று, அப்பனே, ஒரு பொருள். அதாவது, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் சொல்லு என்பேன், அப்பனே? 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு பழமொழி சொல்லுன்றாரு. கீர்த்தி.


அடியவர் :-  கீர்த்தி. சிறிதாயினும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  சொல்லுங்க. சொல்லுங்க ஐயா.


அடியவர் 4 :- மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இப்ப குருநாதர் சொன்னபடி ஏற்கனவே வேல் கொடுத்திருக்கோம். இப்ப வேலை விட கொஞ்சம் பெருசா சூலாயுதம் கொடுக்க சொன்னாங்க. சூலாயுதமும் ரெடி ஆயிடுச்சு. இன்னைக்கு வரக்கூடிய அன்பர்கள் எல்லாம் பூஜையை முடிச்சிட்டு வாங்கிக்கலாம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   அம்மா , சூலம் எங்க வைக்கணும்னு தெரியுதுங்களா?


அடியவர் :-  சூலம் வீட்டுக்கு வெளியிலே வாசல் இல்ல. ஒரு விளக்கேற்றி.


சுவடி ஓதும் மைந்தன்:-   அதுக்கு தனியா நீங்க வந்து.


அடியவர் :-  ஒரு சிறு அமைப்பை நீங்க உருவாக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   உருவாக்கணும்.


அடியவர் :-  இதெல்லாம் விட்டுட்டீங்க. பண்ணுங்கன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-   சின்னதா இது இருக்கும். அப்ப எல்லாம் இருங்க ஐயா. இப்படி இருக்கும்.


அடியவர் :-  ஒரு சின்ன மாடம் உருவாக்கி.


சுவடி ஓதும் மைந்தன்:-   இப்படி மாதிரி உருவாக்கி.


அடியவர் :-  அந்த விளக்கு முன்னாடி சூலம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   இங்க விளக்கை வச்சு, இங்க சூலம் வச்சு, டெய்லி வந்து வெளிய வைக்கணும். வெளிய வச்சுன்னா நெகட்டிவ் ஆற்றல்.


அடியவர் :-  ஐயா, ஒரு சின்ன பானை வச்சு, மண்ணு வச்சு, அதுக்குள்ள சூலத்தை நிறுத்தணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   அதுக்குள்ள வெளிய வைக்கணும்.


அடியவர் :-  சூலத்தை வெளியில வச்சு நிறுத்திடலாம்.


சுவடி ஓதும் மைந்தன்:-   ஐயா.


அடியவர் :-  ஐயா, எப்ப எல்லாம் வெளியில போயிட்டு உள்ள வர்றீங்களோ, பண்ணுங்க ஐயா.


சுவடி ஓதும் மைந்தன்:-   எப்ப எல்லாம் டெய்லி பண்ணிட்டு போகணும் வந்து. ஏன்னா நெகட்டிவ் போர்ஸை தடுக்குறதுக்கு தான் இது வந்து. புரியுதுங்களா?


அடியவர் :-  சிகப்பு நிற ஆற்றலை தடுப்பதற்காக தான் வழி சொல்லி இருக்காங்க.


===========================
# உலகை காக்கும் அன்னை பராசக்தியின் கருணை…
===========================
# அன்னையின் கையில் எப்பொழுதும் இத்திரிசூலம் இருக்கும் ரகசியம் 
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=22455 


குருநாதர் :- இதனால்தான் எது என்று கூற, பின் அதாவது அம்மை. இவ்வுலகத்தில் பின் அன்னை அவள் எவ்வளவு கருணை என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் அன்னையின் கையில் எப்பொழுதும் இத்திரிசூலம் இருக்கின்றது.


அடியவர் :- சிவாய நம…  


அடியவர்கள்  :- ( உண்மையை அறிந்து , அன்னையின் கருணையை உணர்ந்து பரவசத்தில் கைதட்டல்கள்….)  


அடியவர் :-  சிவாய நம…  ஒவ்வொரு.


சுவடி ஓதும் மைந்தன்:-  எதற்காக திருசூலம்?


அடியவர் :-  ஒரு ஆயுதம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு.


சுவடி ஓதும் மைந்தன்:-  போன தடவை வேலை பத்தி சொன்னாரு. அப்ப அன்னை அவள் ஒரு திருடனா இருந்தாலும், எப்படி இருந்தாலும், ஒரு அம்மா என்ன பண்ணுவாங்க வந்து?  ஒரு பிள்ளையை…. என் பையன் நல்லவன் தான் சொல்லுவாங்க. அதனால்தான் இந்த திருசூலத்தை எப்பவுமே அந்த அம்மா? 


அடியவர் :-  வச்சிட்டே இருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  மக்களை காக்குறதுக்காக. ஐயா, புரியுதுங்களா? 


https://youtu.be/npiKG6l6z6o?t=22485 


===========================
# எச்சரிக்கை :- இறைவன் குறித்த “உண்மை” தெரியாமல் பேசினால் என்ன ஆகும் ? 
===========================


குருநாதர் :- அப்பனே, இதை தெரியாமல் மனிதன் இருக்கின்றானப்பா. கலியுகத்தில் வாழ தெரியாமல் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அவை இவை என்று செப்பிக்கொண்டு, அப்பனே, பைத்தியர் போல் திருவார்கள் அப்பா  நிச்சயம் தன்னில் கூட, இறைவனை வணங்கி.


அடியவர் :- சிவாய நம…  இறைவனை வணங்கிக்கிட்டு.. பைத்தியம் போல வந்து எதையாவது ஒன்னு சொல்லிட்டு பிதட்டிட்டு.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஏதாவது ஒன்னு பிதட்டிட்டு திரிவாங்களாம். இதெல்லாம் தெரியாம. 


குருநாதர் :-  அப்பனே, அதாவது நிச்சயம் இறைவனை, அப்பனே, பொய்யாக்காதீர்கள் என்பேன், அப்பனே. அதனால்தான் உண்மை சொல்ல வந்தேன் என்பேன், அப்பனே இவ்வுலகத்திற்கு.


அடியவர் :- இறைவனை செஞ்சு பொய்யாக்காதீங்கப்பா. இறைவன் உண்மை. அதனாலதான்…..


குருநாதர் :- அப்பனே, இறைவனைப் பற்றி பொய்யான தகவல் சொன்னால், அப்பனே, ஒவ்வொரு பாவமும் உன்னை சேருகின்ற பொழுது, அப்பனே, நீங்கள் பின் மீண்டு வர முடியாதப்பா சொல்லிவிட்டேன், அப்பனே.


அடியவர் :- இறைவனைப் பற்றி யாராவது தவறா பேசினா.


சுவடி ஓதும் மைந்தன்:-  தவறா நமக்கு தெரியும்.


அடியவர் :- பாவம் ஒன்னு ஒன்னா உங்களை சேர்ந்தது. நான் திருப்பி.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, தெரிய அமைதியா பொய் எப்படி சொல்றதுங்க ஐயா.


அடியவர் :- அந்த பாவம் நீங்க அது இறைவனை தவறா பேச பேச.


சுவடி ஓதும் மைந்தன்:-  அது தெரியாம எதுவும் பேசக்கூடாது.


அடியவர் :- பேசக்கூடாது. புரியாம பேசக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன்:-  புரியாம பேசக்கூடாதுங்க ஐயா. புரியாம பேசினால்.


அடியவர் :- பாவம் ஆயிடும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பாவம் ஆயிடும் வந்து. புரியாமல் பேசக்கூடாது. 


https://youtu.be/npiKG6l6z6o?t=22546


குருநாதர் :- புரிந்து. அப்பனே, இவ்வாறு அப்பனே, புரியாமல் பேசியதினால் தான், அப்பனே, உலகம் இப்படி இருளில் கிடைக்கின்றது என்பேன், அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவனைப் பற்றி தெரியாம.


அடியவர் :-  புரியாம.


சுவடி ஓதும் மைந்தன்:-  புரியாம.


அடியவர் :-  எதை எதையும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  தப்ப தப்பா பேசி தான்.


அடியவர் :-  உலகம் இருளில் கிடக்குன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  இருளில் கிடைக்கின்றது. 


குருநாதர் :- அப்பனே, இருளுக்கும் யார் காரணம் என்றால் மனிதன் தான் என்பேன், அப்பனே. அறிவுகள் கொடுத்து பின் மனிதன் பயன்படுத்தியதாக சரித்திரம் இல்லை என்பேன், அப்பனே. அதனால்தான் ஓடி வந்திருக்கின்றேன் உங்களிடத்தில்.


அடியவர்கள் :- ( பரவசத்தில் கைதட்டல்கள் …..) 


அடியவர் :-  அறிவு உங்களுக்கு கொடுத்தும்…. ஒரு பிரயோஜனமும் இல்லை. பயன்படுத்தவே இல்லை. அதனாலதான் நான் வந்திருக்கோம்ன்றாரு.


குருநாதர் :-  ஐயா, புரியுதுங்களா வந்து? 


===========================
(அடியவர்கள் கவனத்திற்கு :- எலுமிச்சை சக்திகளை ஈர்க்க வேண்டும்…. எலுமிச்சை புதிதாக பயன்படுத்த நன்று. எலுமிச்சை பழையதாக இருந்தால் மாற்றி விட நன்று.)  
===========================



ஒரு அம்மை அடியவர் :- ( திரி சூலத்தில் குத்தி வச்சிருக்கிற எலுமிச்சையை என்ன செய்ய என்பது போல கேள்வி …ஆடியோ தெளிவில்லை கூட்டத்தில் இருந்து கேட்டதால்…. ) 


குருநாதர் :- தாயே, எது என்று அறிய அழகாக நிச்சயம் தன்னில் ஓடும் நதியில் இடு.  அல்லது எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட மரத்தடியில். பின் எதையாவது செய்.


ஒரு அம்மை அடியவர் :- (ஆடியோ தெளிவில்லை கூட்டத்தில் இருந்து கேட்டதால்…. ) 


சுவடி ஓதும் மைந்தன்:-   எங்கயாவது விடலாம்மா…


அடியவர் :- அம்மா, எங்கயாவது செய்யுங்க என்று சொல்லிட்டாங்க அம்மா .


சுவடி ஓதும் மைந்தன்:-  எங்கயாவது செய்யலாம். ஓகேங்களா?

===========================
# ஆடி மாதம் முதல் தை மாதம் வரை - சிவப்பு நிற கதிர்கள்…
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=22597 


குருநாதர் :- தாயே, இன்னும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, இதனால் எவை என்று புரிய, அறிந்து கூட இவ் ஆடி மாதத்திலிருந்து எது என்று கூற, இன்னும் அதிகமாக எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, அதிக சக்திகளாக எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அதாவது பின் நிச்சயம் பின் அதாவது இவ்வாறு பல நிறங்கள் எவை என்று அறிய ஒன்று கூடி  அறிய சிவப்பு நிறமாக மாறுகின்ற பொழுது இவ் ஆடி மாதத்திலிருந்து நிச்சயம் தன்னில் கூட தை மாதம் வரை அதிக பாதிப்புகள் எப்பொழுதுமே ஆண்டுக்கு ஆண்டு.


அடியவர் :- அப்பா.


சுவடி ஓதும் மைந்தன்:-   ஐயா, புரியுதுங்களா? ஆடி மாதத்திலிருந்து எதுக்கு அதிகமா வருது?


அடியவர் :- தை மாதம் வரைக்கும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   தை மாதம் வரை 


குருநாதர் :-  எது என்று புரிய இதனால் ஆடி மாதத்தில் எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட கூட.
( ஆடியோ தடங்கல்கள் ) 


அடியவர் :- ஐயா, ஐயா. மைக் குடுங்க. மைக் குடுங்க. பேட்டரில போல. மைக் எடுப்பா தம்பி.
………..


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, என்னன்னா என்னன்னா இவ்  ஆடி மாதத்துல தான் தொடங்குமாம். அதிகம் இந்த ஆடி சிவப்பு நிறத்துல வந்து கம்மியாதான் இருக்கும். 0% தான் இருக்கும். இந்த ஆடி மாசம் வந்த உடனே என்ன ஆகும்? ஜாஸ்தி ஆயிடுமாங்க ஐயா வந்து. 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட கார்த்திகை எவை என்று கூற பின் அறிந்தும் எது என்று புரிய அப்பனே பின் அதாவது மார்கழி மாதத்தில் அதிகமாக பின் நிச்சயம் பின் அதாவது நிச்சயம் அதாவது 100 பின் எட்டிவிடும் என்பேன் அப்பனே. இதனால் பின் அழிவுகள் எங்கெங்கோ திடீரென்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே….. 


https://youtu.be/npiKG6l6z6o?t=22684 

( இத்துடன் திரிசூல பூசை தொடர்பான வாக்குகள் நிறைவு அடைந்தது… )

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete