​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 18 August 2026

சித்தன் அருள் - 2281 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 11!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 11 

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 10 அதன் தொடர்ச்சியாக ….)

(அனைத்து அடியவர்களும் மதிய வேளை உணவு உண்ட பின்னர் , அடியவர்கள் மீண்டும் சிவபுராணம் படித்தனர். கருணைக்கடல் மீண்டும் வாக்குகள் அருளினார்கள் சிவ புராணம் பாடி முடித்த பின்னர்  ) 
அம்மை அடியவர் :- ( இல்லமே அதிரும் வண்ணம் பலத்த சங்கு நாத ஒலி எழுப்பினார்கள்…….. )

===========================
# பொறுமை இழந்தவன் அனைத்தும் இழந்து விடுகின்றான்
===========================

குருநாதர் :- அப்பனே, எவை என்று கூற, அப்பனே, சிறிது சிறிதாக அனைத்தும் அனைவருக்குமே மாற்றித் தருகின்றேன். ஆனால் வாழ்க்கையில் பொறுமை அவசியம், அப்பா. பொறுமை இழந்தவன் அனைத்தும் இழந்து விடுகின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் குருநாதர் மாற்றிக் கொடுக்கிறார். ஆனால் பொறுமை தேவை என்றார் வந்து. அந்த பொறுமை இல்லை என்றால், அனைத்தையும் 

அடியவர்கள் :- இழந்து விடுகிறான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இழந்து விடுகின்றான். 


குருநாதர் :- அப்பனே, இதனால் மீண்டும் பாவம் ஏற்படுகின்றது, அப்பா. இதனால், அப்பனே, எதை என்று புரிய, மீண்டும் முதலிலே வருவது சாதாரணம் இல்லை, அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பொறுமை காத்திருந்தா, என்ன பண்றாரு? 

அடியவர் 3  :- மாத்தி அமைப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- மாற்றி அமைப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொறுமை இழந்துவிட்டால்?

அடியவர் :- திருப்பி மீண்டும் வரணும்… 

சுவடி ஓதும் மைந்தன் :-   மீண்டும்? 

அடியவர் 6 :- முதல் இருந்து வரணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   முதல் இருந்து வரணும். 

===========================
# உடம்பை பழுது பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நன்றாக நடக்கும் அனைவருக்கும். 
===========================

குருநாதர் :-  இதனால், அப்பனே, கவலை வேண்டாம், அப்பனே. எதை எப்பொழுது நிச்சயம் தன்னில் கூட சரி செய்தால், நலமாகும் என்பவை எல்லாம் யாம் அறிந்து வைத்திருக்கின்றோம், அப்பனே. 

குருநாதர் :-  இதனால், அப்பனே, கவலை வேண்டாம், அப்பனே. எதை  இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இக்கூடு, அப்பனே, நிச்சயம் எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இக்கூட்டில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறிவேன், அப்பனே. அவையெல்லாம், அப்பனே, எதை என்று கூற பழுது பார்க்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே, நன்றாக நடக்கும் அனைவருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கூடுனா என்ன சொல்றார் தெரியுங்களா? 

அடியவர் 13 :- உடம்பு 

அடியவர் :- உடம்பு தானே அய்யா ?. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம் . உடம்பு . 

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த உடம்புல என்னென்ன வச்சிருக்கீங்கன்னு யாருக்கும் தெரியாது. அதெல்லாம் என்ன பண்ணனும்? 

அடியவர்கள் :- பழுது பார்க்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பழுது பார்க்கணும். 

குருநாதர் :-  அதனுள்ளே பல வழிகளில் கூட என்னென்னமோ, ஏது என்று மீண்டும் எதை என்று புரிய, பழுதை அதாவது அதிகமாக்கிக் கொள்கிறார்கள் மனிதர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும்? 

அடியவர்கள் :-  பழுதை அதிகமாக்கி…..

சுவடி ஓதும் மைந்தன் :- பழுதை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.  ஒன்னுமே தெரியாம, திருப்பி என்ன பண்றாங்க? மனுஷன்? 

அடியவர்  :- திருப்பி, திருப்பி, 

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி, திருப்பி தப்பு பண்ணி, அந்த பழுதை ?

அடியவர்  :- அதிகமாக்குறாங்கா… 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதிகமாக்கிக் கொள்கிறார்கள். 

குருநாதர் :- இதனால் எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பொறுமை எவை என்று அறிய, அனைத்தும் பெற்று தரும். எவை என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-   பொறுமை ?

அடியவர் :- எல்லாத்தையும்…..

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாத்தையும்? 

அடியவர் 7, அடியவர் :- வாங்கித் தரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- வாங்கித் தரும். 

===========================
#  அனைத்தையும் இழக்கும் எளிய துன்ப வழி எது?
===========================

குருநாதர் :- பொறுமை இழந்தவன் நிச்சயம் பின்  ஏது என்று புரிய, பின்  அதாவது பின் அனைத்தும் இழந்தவன் போலே. இதை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொறுமை இழந்தவன்?

அடியவர் 7 :-  அனைத்தும் இழந்தவன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படியும் நினைச்சுக்கலாம். அவ்வளவுதான் வாழ்க்கை? ………. முடிஞ்சு போச்சுன்றார். 

குருநாதர் :- அப்பனே, எவை என்று பொறுமை எத்தனை நாட்கள் பொறுமை என்றும் நீங்கள் கேட்கலாம், ஆதாயத்துடனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொறுமை…எத்தனை நாள் வந்து பொறுமையா இருக்கிறதுன்னு சொல்றார். 

குருநாதர் :- எதை ஏது என்று புரிய, அப்பனே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட புரிந்து கொள்ளுங்கள். மனிதனின் பின் நிலைமைகள், அப்பனே, அனைத்திற்கும் பொறுத்துத்தான் இருக்கின்றீர்கள். எவை என்று கூற, ஆனாலும் இறை ஆசிகளை பெற, நீங்கள் பொறுத்துவதே, அதாவது பொறுத்துக் கொள்வதே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா விஷயங்களுக்காகவும்?

அடியவர் :-  பொறுமையா இருக்கிறோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொறுமையா இருக்கிறோம். ஆனால் இறைவனோட ஆசியை பெறுவதற்கு?

அடியவர் :-    பொறுமை இல்லாம இருக்கிறோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொறுமை இல்லையே அப்பா. 

===========================
#  இறைவன் எதிர்பார்க்கும் பொறுமை இருந்தால்  வெற்றி, சுகங்கள் பெற்றுத்தரும்.
===========================

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற, பின் அவ் பொறுமை, அப்பனே, நிச்சயம் பின்  இறைவன் எவை என்று புரிய, அப்பனே, பார்க்கின்றோம். பார்த்துக் கொள்வோம். பின் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் இருப்பான், அப்பா.

குருநாதர் :- எவ்வாறு எது என்று கூட செய்கின்றான். இன்றும் சில கஷ்டங்களும் கொடுப்பான், அப்பா. ஆனாலும் அதிலும் பொறுமை இருந்தால், அப்பனே, வாழ்க்கையில் வெற்றி, சுகங்கள்.

குருநாதர் :-  அப்பனே, வயது ஒன்றும் தேவையில்லை. அப்பனே, வயதும் குறைக்க, இறைவனால் முடியும், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  வாழ்க்கையில வந்து…. பொறுமை?

அடியவர் :- பொறுமை என்பது அவசியம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அவசியம். அந்த பொறுமை இல்லை என்றால், அனைத்தையும்….. ? 

அடியவர் :- இழந்துவிடுவார்கள்.

===========================
#  அன்பு அகத்திய மாமுனிவர் பக்தன் எப்படி இருக்க வேண்டும் ?
===========================

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் மாயை நோக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவை, இவை, இல்லம், குழந்தைகள், எதை என்று புரிய, அப்பனே, இப்படியே, அப்பனே, பின் நிச்சயம் நீங்கள் இருக்கக்கூடாது என்பேன், அப்பனே. என்னிடத்தில் இருந்து கொண்டு…

சுவடி ஓதும் மைந்தன் :-   என்னிடத்தில்… அகத்தியர் கூட இருந்து, என் பிள்ளை நல்லா இருக்கணும். எனக்கு வீடு வேணும். அப்புறம்?..... 

அடியவர்கள் :- குழந்தை வேணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தை வேணும். அப்புறம்?.....

அடியவர்கள் :-  கல்யாணம் வேணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கல்யாணம் வேணும். அப்படி எல்லாம் நீங்க வந்து கேட்கக்கூடாது. 

குருநாதர் :- எதை ஏது என்று புரிய, புண்ணியம் செய்தவர்கள் இவ்வாறு கேட்பதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் செய்தவர்கள்… இவ்வாறு கேட்பதில்லை. 

===========================
#  அனுபவம் =  புண்ணியம் 
===========================

குருநாதர் :-  அனுபவசாலிகள் இவ்வாறு கேட்பதில்லை. அனுபவமும் புண்ணியமும் ஒன்றே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவசாலிகளும் இவ்வாறு? 

அடியவர்கள் :- கேட்க மாட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்க மாட்டாங்க. 

குருநாதர் :-  அனைத்தும் இறைவன் வகுத்ததே என்று மேலே பார்த்து சென்று கொண்டே இருப்பான். இவன்தான் அனுபவசாலி. 

சுவடி ஓதும் மைந்தன் :-   நடத்துறியா? நடத்து. போயிட்டே இருக்கணுமா? என்ன சொல்லணும்? 

அடியவர்:- சர்வம் சிவார்ப்பணம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   நடத்துறியா? நீதானே பார்த்துட்டு இருக்கிற…

குருநாதர் :- எவை என்று அறிய, பின்

**** அனைத்தும் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான். ****

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் ? 

அடியவர் :- இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறார் . 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்த்துட்டே தான் இருக்கிறார். 

குருநாதர் :- ****  அவனின்றி ஒரு அனுபவம் அசையாது என்று பழமொழியும் உண்டு **** . தெரிகிறதா? 

சுவடி ஓதும் மைந்தன் :-   அவனின்றி ஒரு அனுபவம் அசையாது என்ற ஒரு பழமொழியும் உண்டு. 

குருநாதர் :- எது என்று கூற, அப்பொழுது நிச்சயம் நடத்துபவனும் அவனே. முடித்து வைப்பவனும், அவனே 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னங்க சொல்றாங்க. 

அடியவர்கள் :- நடத்துபவனும், அவனே.  நடத்தி வைப்பவனும் அவனே…

சுவடி ஓதும் மைந்தன் :-  அவனே  எல்லாமே. இது எப்படி அர்த்தம் என்றால் ....... நடத்தியும் வைப்பார்…... முடிச்சு வைப்பார்….. 

===========================
#  விதியின் இரு எதிர் துருவங்கள் - வெற்றி அதன் ரகசியங்கள்…. 
===========================

குருநாதர் :- அறிந்தும் ஏது என்று அறிய, பின் பிறப்பு என்றால் இறப்பு உண்டு. 

**** துன்பம் என்றால் நிச்சயம் எது என்று அறிய எவை இன்பம் உண்டு. **** 

****  திருமணம் என்றால் மறுமணம் உண்டு. **** 

இவையெல்லாம் எது என்று அறிய…… 

****  பணம் என்றால் நிச்சயம் இழப்பும் உண்டு. **** 

இன்னும் சொல்லுங்கள், பார்ப்போம்?

சுவடி ஓதும் மைந்தன் :-  எதிர் எதிரே சொல்றார் வந்து… 

அடியவர் :- ஒளி, இருள். 

குருநாதர் :-  **** இரவு பகல் ****  

எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட….. 

**** அனைத்தும் இரண்டு இரண்டு தான். ****

எவை என்று அறிய பின்……

**** ஒன்று சரியாக, பின் எவை என்று கவனித்தால், மற்றொன்று பிழைத்துக் கொள்ளும். **** 

சுவடி ஓதும் மைந்தன் :-   இது என்ன அர்த்தம் தெரியுங்களா? 

அடியவர்கள் :- எல்லாமே இரண்டா இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாமே இரண்டு இரண்டா இருக்குது. வந்து அதுல வந்து என்ன சொல்றாரு? வந்து பணம் என்றால் அடுத்து… 

இது யாருக்காவது தெரியுமா? 

இதுதான் புதுசா இருக்குது……. எல்லாமே புதுசுதான்…….. 

பணம்…… பணம் அதிகமா வருதுன்னா என்ன ஆகும்? வந்து…. இழப்பு ஏதோ வரப்போகுதுன்னு அர்த்தம். 

அடியவர் 20 :- நோய் வரும். 

===========================
# இறைவன், ஏன் முதலிலே ஆரோக்கியத்தை கொடுக்கின்றார்?
===========================

குருநாதர் :- எதை எவை என்று கூற பின்  நோய்க்கு அப்பனே, பின் எதிர் எவ்வாறு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  நோய்க்கு எதிர் எவ்வாறு? 

அடியவர்கள் :- ஆரோக்கியம், ஆரோக்கியம். 

குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் அதனால்தான் முதலிலே ஆரோக்கியத்தை உங்களுக்கு கொடுக்கின்றான் இறைவன். ஆனால் இவ் ஆரோக்கியத்தை வைத்துக்கொண்டு என்னென்ன வேஷங்கள் போட்டு, நிச்சயம் தன்னில் மீண்டும் எவை என்று அதற்கு நேராக பின் கொடுக்கின்றான். அவ்வளவுதான் வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல எல்லாருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறார். அந்த ஆரோக்கியம் வச்சு என்ன பண்றீங்க? நல்லதா பண்றீங்க? வேஷம் போடுறோம். ஏமாத்துறோம். கெட்டது பண்றோம். அப்ப என்ன பண்ணுவோம்? அடுத்து ஈக்குவல் நோய் வரும். 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற, ஆனால் நீங்களும் கேட்கலாம். முதலிலே ஒன்னும் ஒன்றும் தெரியாதவருக்கெல்லாம் நோய் பின் வருகின்றது என்று. அடுத்து ஆரோக்கியம் வரும். அவ்வளவுதான் வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? எல்லாருக்கும், ஐயா, நான் ஒண்ணுமே பண்ணலையே. சின்ன குழந்தைக்கு இது… இவங்க என்ன தப்பு பண்ணாங்கன்னு சொல்றவங்க என்ன பண்ணுவாங்க? கொஞ்ச நாள் நோய் இருந்துட்டு, அடுத்து என்ன பண்ணுவாங்க? ஆரோக்கியம் வரும். புரியுதுங்களா? 

குருநாதர் :-  அப்பனே, இதுதான் வாழ்க்கை என்பேன்  அப்பனே. ஏன்  என்றால், பின் உலகமும் ஓரிடத்தில் இடத்தில் நிற்பதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலகம்? 

அடியவர்கள் :- சுத்திக் கொண்டே இருக்கின்றது…

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓரிடத்தில் இடத்தில்? 

அடியவர்கள் :- நிற்பதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிற்பதில்லை.

குருநாதர் :- இதனால், அப்பனே, எவை என்று கூற, பிரிவு…. இன்னும் என்னென்னவோ வரும் அப்பனே. 

ஆனாலும், அப்பனே, எவை என்று கூற பின் , மீண்டும் பின், அவை என்று கூற பின்  அதே இடத்திற்கு வருகின்ற பொழுது யாராவது மூலம், அப்பனே, பின் நட்பு ஏற்படும். 

அப்பனே, பின் அனைவருக்கும், அப்பனே, பின் எதை என்று கூற அதனால்தான் இறைவன், அப்பனே, பின் யாரும் அனாதையாக விட்டு விடுவதே இல்லை இக்கலியுகத்தில்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால உங்களுக்கு என்னென்ன தேவையோ, அதனால நீங்க பொறுத்தே ஆகணும். 

===========================
#  நினைத்த காரியம் உடனே நடக்க…….?
===========================

குருநாதர் :- அவை இல்லை என்றால், பின் உலகம் எவ்வளவு வேகம் சுற்றுகின்றது, அவ்வளவு வேகம் நீங்கள் ஓட வேண்டும். உங்களால் முடியுமா என்றால், முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலகம் எவ்வளவு பாஸ்ட்ல சுத்துது. உங்களுக்கு சீக்கிரம் நடக்கணுமா? அவ்வளவு வேகமா நீங்க ஓடணும். ஓட முடியுமா என்றால்? 

அடியவர் :- முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடியாது. 

குருநாதர் :- அப்பனே, எது என்று கூற, இதனால், அப்பனே, பின் ஓட வேண்டும் என்றால், அப்பனே, இரவு பகலும் உழைத்தாக வேண்டும். அப்பனே, முடியுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :- உடனே நடக்கணும்னா என்ன பண்ணனும்? இரவு, இரவு பகலும் உழைக்கணும். ஒரே பகலும் உழைக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் அது உங்களால் முடியாது. முடியாது. 

===========================
#  மந்திரம் யாருக்கு வலிமை தரும்?
===========================

குருநாதர் :-அப்பனே, பின் மந்திரங்கள் ஏன்? அப்பனே, சொல்லுங்கள். மந்திரங்கள் ஏன்? மனதை அடக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரங்கள் ஏன்? மனசு அடக்கி, மனதை அடக்குவதற்கு. மனதை பக்குவப்படுத்த. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று ஒரு மந்திரம் சொன்னால், அவை நடக்கும் என்பதுதான். இப்பொழுது அது வேறப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப மந்திரம் என்ன சொன்னான்னா என்னது? இந்த மந்திரம் சொன்னால் நடக்கும். 

குருநாதர் :- அப்பனே, ஆனால் மந்திரம் யாருக்கு நிச்சயம் பின் எவை என்று வலிமை தரும் என்றால், யாருக்காவது தெரியுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரம் யாருக்கு வந்து வலிமை தரும்? யாருக்காவது தெரியுமா? 

குருநாதர் :-  **** அனைத்தும் இழந்தவனுக்குத்தான். ****

சுவடி ஓதும் மைந்தன் :-  மந்திரம் எப்போ வந்து நல்லா எல்லாம் சக்சஸ் ஆகுமா? 

அடியவர்:- எல்லாம் இழந்ததுக்கு அப்புறம், 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் இழந்ததுக்கு அப்புறம், நீங்க மந்திரம் சொன்னா?

அடியவர்:-  சக்சஸ் ஆகும்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  சக்சஸ் ஆகும். 

( மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்…) 

குருநாதர் :- அப்பனே, அதன் முன்னே சொன்னால் என்ன ஆகும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதன் முன்னே சொன்னால் என்ன ஆகும்? 

குருநாதர் :-  நீங்கள் எதற்கு சொல்கிறீர்கள் என்றால், நிச்சயம் மனிதர்கள் எவை என்று கூற இன்னும் கிடைக்க வேண்டும். இன்னும் கிடைக்க வேண்டும். இன்னும் கிடைக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மந்திரத்தை எது சொல்றாங்க? வந்து கிடைக்கணும், கிடைக்கணும், கிடைக்கணும், கிடைக்கணும். 

குருநாதர் :- இதை வைத்துக்கொண்டு மனிதன் என்னென்னவோ செய்கின்றான். அம் மந்திரத்தை சொன்னால், இவை வருமாம். ஆனாலும், நிச்சயம் தன்னில் வரும். ஆனாலும், எது என்று கூற, எவை அறிய, எதை என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் அடிப்படை தத்துவத்தை உங்களுக்கு விளக்கி மீண்டும் எடுத்துரைக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் அடிப்படை தத்துவம் உங்களுக்கு நான் விளக்கி மீண்டும் எடுத்துரைக்கின்றேன். 

===========================
#  இறைவன், ஏன் நீங்கள் கேட்டதெல்லாம் செய்வதில்லை ?
===========================

குருநாதர் :- இறைவன் ஏன் , நீங்கள் கேட்டதெல்லாம் பின் எவை என்று கூற, பின் செய்வதில்லை நிச்சயம் தன்னில் கூட? 

குருநாதர் :-  அவை செய்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் எவை என்று அந்நேரத்தில் நிச்சயம்  தன்னில் கூட மீண்டும் அழிந்து விடும் என்பதற்காகவே. 

**** இறைவன் நினைப்பது சரி. **** 

**** மனிதன் நினைப்பது தவறு. ****

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் ஏன் அந்தந்த நேரத்தில் உங்களுக்கு கொடுக்கிறது இல்ல? சொல்லுங்க, பாப்போம். 

அடியவர் :- இறைவன் நினைக்கிற மாதிரி நடந்துக்கிறது.

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நேரத்துல வந்து, உங்களுக்கு வந்து 

அடியவர்  :-  அந்த பக்குவம் வரல. 

===========================
#  இறைவன், ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை?
===========================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று கூற, பின் மனிதன் திருமணம், திருமணம் என்று ஓடுகின்றான். ஆனால் நடப்பதில்லை. ஏன்? நிச்சயம் தன்னில் கூட அத்தகுதி அவனிடத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். 

அடியவர்  :-  திருமணம் பண்ண தகுதி இல்லைன்னு சொல்றாங்க. 

===========================
#  இறைவன், ஏன் பணம்  கொடுப்பதில்லை?
===========================

குருநாதர் :- எவை என்று கூட  பணம், பணம் என்று ஓடுகின்றார்கள். ஆனாலும் ஏன்? பணம் இறைவன் கொடுப்பதில்லை?. 

**** பணம் பின் அவனிடத்தில் வந்துவிட்டால், அதை தக்க வைக்க பின் அவனால் முடியாது. **** 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? 

குருநாதர் :- அனைத்தும், அனைத்து இழப்புக்களும் இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதே மாதிரிதான் எல்லா இழப்புக்களும் இதுபோல் 

அடியவர்  :-   நடந்து கொண்டிருக்கிறது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நடந்து கொண்டிருக்கின்றது. 

===========================
#  இறைவன், ஏன் குழந்தை  கொடுப்பதில்லை?
===========================

குருநாதர் :- எதை என்று புரிய? குழந்தை, குழந்தை என்று ஓடுகிறீர்கள். ஏன் கொடுப்பதில்லை? எவை என்று புரிய? பின் , அப்பொழுது உன்னால் முடியாது என்றுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   குழந்தை, குழந்தைன்னு ஓடுகின்றீர்கள். ஏன் வந்து குழந்தை கொடுப்பதில்லை? அந்த குழந்தை கொடுத்தாலும் உங்களால?  

அடியவர் 7:- முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்த்துக்க முடியாது. 

===========================
#  எப்போது உங்களுக்கு அனைத்தும் உடனடியாக கிட்டும்?. 
===========================

குருநாதர் :- எதை எது என்று அறிய அதனால்தான் இறைவனை அடிப்படை தத்துவத்தோடு நிச்சயம் உணர்ந்து கொண்டால், உங்களுக்கு அனைத்தும் கிட்டும். உடனடியாக கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் வந்து உணர்ந்துக்கணும்ன்றார். எல்லாத்தையும்… இறைவனை வந்து அடிப்படையோடு உணர்ந்துக்கினீங்கன்னா, உங்களுக்கு என்ன ஆகும்? 

அடியவர் :- உடனே எல்லாமே கொடுத்துருவார். 

சுவடி ஓதும் மைந்தன் :- உடனடியா எல்லாம் கிடைக்கும். 

குருநாதர் :-  உடனடியாக கிடைத்தால், நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆனாலும் அதற்கும் அனுபவ பாடம் தேவை. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன தேவை? உடனடியா கிடைக்கணும்னா என்ன தேவை? 

அடியவர் :- இறைவனை யார் தெரிஞ்சுக்கணும்

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சுக்கணும். 

அடியவர் :-  அனுபவ பாடம் தேவை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அவை அனுபவ பாடம் நீங்கள் கற்றுக்கொண்டால், உடனடியா உங்களுக்கு எல்லாமே வரும். 

அடியவர் :-  அதை தக்க வச்சுக்கவும் முடியும். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment