​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 14 August 2026

சித்தன் அருள் - 2276 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

திருப்பதி திருமலையில் 

திருப்பதி ஏழுமலையான்  தரிசன ரகசியம் மற்றும் உபதேசங்கள்  அடியவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு பாகம்1

அப்பனே எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட எப்படி ஏது என்று அனைவருமே நாங்கள் நாராயணன் தரிசனம் செய்ய வேண்டும் என்றே செல்கின்றார்கள் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே ஒருவர் கூட நாராயணன் என்னை பார்ப்பானா என்று வருவதில்லை என்பேன் அப்பனே

 ஏன்??

அப்பனே இதனால்தான் மூடநம்பிக்கை என்று யான்  குறிப்பிடுவேன் இங்கு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

அனைவரும் திருப்பதி சென்று பெருமாளை பார்க்க போகின்றோம் திருமலை பார்க்க போகின்றோம் என்று சொல்கின்றார்கள் செல்கின்றார்கள் 

ஆனால் பெருமாள் நம்மை பார்ப்பாரா என்று யாரும் நினைப்பதில்லை என்று குருநாதர் கேட்கிறார்.


குருநாதர் வாக்கு


அப்பனே, எங்கு? ஏது? என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எங்கு அமர்வான்????, என்பேன்,

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவன் நலமாகவே, அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏகாதாசி அன்று முழுவதும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, இப்பொழுது குளித்தீர்களே,(புஷ்கரணியில் அடியவர்கள் குளித்தார்கள்)



 அங்குதான் ஒரு நாள் முழுவதும் அங்கு அமர்வானப்பா.
நிச்சயம் தன்னில் கூட, !!

அப்பொழுது நீங்கள் உள்ளே சென்றாலும், அப்பனே, எவரை பார்ப்பீர்கள்,????  சொல்வீர்களாக,

 சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

ஏகாதசி அன்று ஒரு நாள் முழுவதும் பெருமாள் , புஷ்கரணியில்  மட்டும் தான் இருப்பாராம்.



அடியவர் 1

இன்னைக்கு ஏகாதாசி.


குருநாதரின் வாக்கு.

அப்பனே, ஒவ்வொரு நாளும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு இடத்திலும் இருப்பானப்பா.


 அப்பொழுது உள்ளே இருப்பவன் யார்?


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.


பெருமாள் 
 ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருப்பாரு.


குருநாதரின் வாக்கு.


 ஆனால் மனிதனோ, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூறுகிறேன்.

 அதனால்தான், அப்பனே, அடிப்படை விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

 அதனால்தான், அப்பனே, பின் அறிவியல், அதாவது, விஞ்ஞானம் மூலமாக யான் எடுத்துரைக்கப் போகின்றேன், இவையெல்லாம், அப்பனே, பொறுத்திருந்தால். அப்பனே.



 அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் அழகாக, அப்பனே, மரத்தடியில் உறங்குவான், என்பேன், அப்பனே.



 நிச்சயம் இது யாருக்கு தெரியும்? 


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிடும் பெருமாள் உறங்கி செல்லும் மரம் ஆனது ... திருப்பதி திருமலையில் 4 மாட வீதி வடக்கு பாகத்தில் புஷ்கரணி குளத்திற்கு பின்புறம் அதாவது ஆதி வராக பெருமாள் கோயிலின் பின்புறம் ஒரு பெரிய அரசமரம் உள்ளது... தரிசனம் முடித்து லட்டு பெற்றுக்கொள்ள வரும் பொழுது லட்டு கவுண்டர் காம்ப்ளக்ஸ் வாசல் வழியாகவும் இந்த மரத்தை அடைய முடியும்.. தற்போது இந்த மரத்தடியில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றது. 
இந்த மரத்தின் மகிமையைப் பற்றி ஏற்கனவே குருநாதர்..17/10/2023 பத்ரிநாத் வாக்கில் கூறியுள்ளார் சித்தன் அருள் பதிவு எண் 1516... மீண்டும் இந்த வாக்கினைப் படித்து உணர்ந்து கொள்ளவும்


தற்போது
புஷ்கரணியில் குளிப்பவர்கள் இந்த மரத்தின் மகிமை தெரியாமல் அவர்கள் அங்கு துணிகளை காய போடுவது ஓய்வு எடுப்பதும் என்று செயல்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பெருமாள் ஏகாதசி அன்று புஷ்கரணியில் குளத்தில் இருந்திட்டு, கொஞ்ச நேரம் ஒரு மரத்தடியில், அங்கதான் உறங்குவார். 



குருநாதரின் வாக்கு

அப்பனே, இப்படி இருக்க, அப்பனே, உள்ளே சென்று எவரை பார்ப்பீர்கள்????
, நீங்கள் சொல்லுங்கள்.


 அடியவர் 1


ஐயா, நாராயணன் ஒரு சில ரூபத்துல.....



குருநாதரின் வாக்குகள்.

அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. அதாவது, ஒன்றை சொல்கின்றேன்,
 அப்பனே. நீ கூட, அப்பனே, பின் சாதாரண மனிதன் தானப்பா. 

ஆனாலும், அப்பனே, ஒரு நாளைக்கு, அப்பனே, ஒரு இடத்தில் இருக்கின்றாயா???? என்ன!?!?!


, எவை என்று புரிய, அப்பனே. இறைவன், அப்பனே, அவன் எப்படி, அப்பா, நீயே கூறு.




அடியவர் 1


உண்மைதான், தந்தையே.


குருநாதரின் வாக்குகள்.


அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே. எப்பொழுது???? எங்கு இருப்பான்???? என்பவை எல்லாம், அப்பனே, சித்தர்களுக்கே உரித்ததாகும், என்பேன், அப்பனே.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


பெருமாள் எந்த நேரத்தில் எங்கு இருப்பார்??? இறைவன் எப்பொழுது என்று எப்படி என்பதெல்லாம்
 சித்தருக்கு மட்டும்தான் தெரியுமாம். 




அடியவர் 1
தந்தையே மனிதர்கள் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


குருநாதரின் வாக்கு 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, எதை என்று புரிய, அப்பனே. பாவம் இருந்தால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. பாவம் எவை என்று புரிய, அப்பனே. ஒரு கல்லை, அப்பனே, குறிப்பது போல், என்பேன், அப்பனே.


 நிச்சயம் உன், அப்பனே, பின் தலையில், பின் ஒரு பாறாங்கல்லை வைத்தால், அப்பனே, பின் எதனைப் பற்றி நீ நினைப்பாய்?????


, சொல், அப்பனே.




அடியவர் 1

அதன் எடை அதிகமாக இருக்கின்றது என்று நினைப்பேன்.  தந்தையே 




குருநாதரின் வாக்கு. 

அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பாறாங்கல்லின் எடையை வலி என்று தான் நீ நினைப்பாய், என்பேன், அப்பனே.

 இறைவனை மறந்தே விடுவாய், என்பேன், அப்பனே. இதுதான் பாவம், என்பேன்,


 அப்பனே. புண்ணியம், அப்பனே. அதனால்தான், எவ்வாறெல்லாம் புண்ணியம், பின் பெருக்க வேண்டும்??? என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே.

அதை நீ பெருக்கினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எங்கு எவை என்று கூற, அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் அதை நீ உணர மாட்டாய், என்பேன், அப்பனே. 


அதனால், நேரடியாக அங்கே சென்று விடுவாய், என்பேன், அப்பனே. எங்கு இருக்கின்றான்?, அங்கே. 



   அப்பனே, எதை என்று கூற, அப்பனே, ஏன், அப்பனே, நாராயணனை பார்க்கின்றீர்கள்???,


 அப்பனே, பார்த்தேன், அப்பனே,

 நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் நீ கேள்வி கேட்பாய், என்பேன், அப்பனே. யான் உன்னை பார்த்திருக்கின்றேன்.

 அதனால்தான் உன்னை கேட்கின்றேன், அப்பனே.


 அடியாரை பார்த்து குருநாதர் கேள்விகளை கேட்க அதற்கு அடியவர் தந்த பதில் 


பூலோகத்தில் நன்முறையாக வாழ வேண்டும் என்று பொருளாதாரத்திலும் தடங்கல் இல்லாமல் வாழ்வதற்கே நாராயணனை பார்க்க வருகின்றார்கள் தந்தையே!!!


குருநாதரின் வாக்கு

அப்பனே, இது ஒதுக்கப்பட்ட இடம், அப்பா
. இதை, அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே. 




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பூலோகம் என்பது என்னது??? ஐயா?


அடியவர்கள் ஒன்று சேர பதிலுரைத்தனர்


ஒதுக்கப்பட்ட இடம்.

ஒதுக்கப்பட்ட இடம்.

சிறைச்சாலை.

 பூலோகம் என்பது ஒதுக்கப்பட்ட இடம்




குருநாதரின் வாக்கு

அப்பனே, ஒதுக்கப்பட்ட இடத்தில், அப்பனே, எப்படி, அப்பா,????? மனக்குழப்பங்கள் இல்லாமல், அப்பனே, நன்றாக மனிதன் வாழ்வான் என்று நீ சொல்.




அடியவர் 1
தந்தையே, இதற்கு தீர்வு காண வேண்டும் 


குருநாதரின் வாக்கு


அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் விஞ்ஞான முறையில் எடுத்து வந்தால், ஏனென்றால் வருங்காலத்தில், அப்பனே, பின் என்ன சொன்னாலும், மனிதன் எதை என்று கூற, அப்பனே, பொய் என்று!!! எண்ணிக்கொள்வான் 


 எவை என்று கூற, அப்பனே, உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டான்.


 ஏனென்றால் இறைவனை பொய் ஆக்க, எவை என்று கூற, அதாவது இறைவன் பொய்யாக வேண்டும் என்பதுதான் கலியுகத்தின் கட்டாயம் கூட.


 அதனால் யாங்கள் விடப்போவதில்லை.



  அப்பனே, ஏன், எதை என்று புரிய, அப்பனே, எதற்காக, பின் நாராயணனை, பின் நிச்சயம் தன்னில் கூட, காண வந்தீர்கள்?????

நிச்சயம் தன்னில் கூட . அவனை  ஏன்????, நிச்சயம் தன்னில்  கூட, பின் எவை என்று ஏன் காண வேண்டும்??????.
 
அப்பனே, எவை என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அறிவியல் வரியாக விவரிக்கின்ற பொழுது, அப்பொழுது  சொல்கின்றேன்.

திருப்பதி திருமலையில் குருநாதர் அலி அவர்களுக்கு கூறிய உபதேசம் பாகம் இரண்டில் தொடரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment