அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 3
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
………..
………..
………..
===========================
# மற்ற உயிர்களை கொல்லக்கூடாது…..
===========================
குருநாதர் :- தாயே எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற , ஏன் எதனால் மற்ற உயிர்களை கொல்லக்கூடாது என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் இவை தன் விஞ்ஞானப் பூர்வமாக விவரித்தால் தான் மனிதனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பிற உயிர்கள் கொல்லக்கூடாது. ஓகேங்களா? அது வந்து ஏன் கொல்லக்கூடாதுன்றாருன்னா…. இப்ப சொன்னாலும்?
அடியவர் 5 :- புரியாது
சுவடி ஓதும் மைந்தன் :- புரியாதுப்பா ….
அடியவர் :- சயின்ஸ் படி சொல்றேன் என்று சொல்கின்றார்…
குருநாதர் :- யான் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றேன். ஆனாலும் மனிதனுக்கு புரியவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் சொன்னாலும் இனிமேல் என்ன பண்றாரு மனிதனுக்கு வந்து?
அடியவர் :- புரிய மாட்டேங்குது
சுவடி ஓதும் மைந்தன் :- புரியலை. அப்ப என்ன பண்றாரு அவர் வந்து?
அடியவர் 7 :- சயின்டிஃபிக்கா சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன் :- சயின்டிஃபிக்… சயின்ஸ்… அதுதான் சொல்றாரு
குருநாதர் :- நிச்சயம் இவ்வாறாக சொல்கின்ற பொழுது மனிதன் எதை என்று புரிய இன்னும் இன்னும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனுக்கு காசுகள் கொடுத்து அழித்திட வேண்டுமோ…. அப்படியெல்லாம் மனிதன் வருங்காலத்தில் அழிப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? மனுஷனை அழிக்கணும் முதல்ல மனிதனுக்கு. அப்ப என்ன பண்றது?
அடியவர் :- பணம்
சுவடி ஓதும் மைந்தன் :- பணத்துக்கு… பணத்தின் மேல ஆசைகள் ஏற்படுத்துவார்ன்றாரு. பணத்தின் மேல கொடுத்து கொடுத்து…
அடியவர் :- ஆசைகள் ஏற்படுத்தி
சுவடி ஓதும் மைந்தன் :- ஆசைகள் ஏற்படுத்தி அதன் மூலமா
அடியவர் :- அழிவு ஏற்படுத்தி
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா அழிவையும் ஏற்படுத்தி ஏற்படுத்துவார்ன்றாரு. அம்மா புரியுது எல்லாருக்கும் வந்து?
===========================
# இறைவன் , ஏன் ஒவ்வொருவருக்கும் குறை ஒன்று வைத்து அனுப்புகிறார்?
===========================
குருநாதர் :- இதனால் எதை என்று கூற, தான் குறை பின் பெரிது எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் பின் எவை என்று கூறப்பின் ஏன் குறை ஒவ்வொருவருக்கும்? மீண்டும் சொல்லுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஒரு ஒரு குறை
குருநாதர் :- எவை என்று அறிய பின் குறை இல்லாத ஆள் இவ்வுலகத்தில் இல்லை. ஏனென்றால் குறையுடன் பின் நிச்சயம் தன்னில் அனுப்பினால் தான், படைத்தவனையும் நிச்சயம் நம்புவான் என்று படைத்தவனுக்கு தெரியும்.
அடியவர் :- இறைவனை அப்பத்தான் நினைப்போம்….
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும்?
அடியவர் :- ஒரு குறை இருக்கிறது
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு குறை இருக்கும். அந்த குறை இல்லைன்னா…. ?
அடியவர் 6 :- கடவுள் இல்லைன்னு சொல்லிடுவான். அதனால வந்து குறையை வச்சுக்கிட்டே தான் இருப்பேன் என்று சொல்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இறைவனுக்கு… அந்த குறையே இல்லைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க வந்து?
அடியவர் 6 :- கடவுளை நினைக்க மாட்டோம்...
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து எல்லாருக்கும் குறை உண்டு..
குருநாதர் :- ஆனாலும் எது என்று புரிய, பின் அக்குறையை கூட சரி செய்ய வேண்டும் என்றால் எப்படி?
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சிறிய குறைதான். அதையும் சரி செய்ய வேண்டும் என்றால் எப்படி?
அடியவர் 7 :- அதனால அது இருக்கட்டும்
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படிமா?
அடியவர் 6 :- அவரே தான் ….
குருநாதர் :- நிச்சயம் அவன் குறை வைத்தது, அவனே சரி செய்தால் தான் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஒரு ஒரு குறை வாழ்க்கையில. குறை யார் வச்சது?
அடியவர்கள் :- இறைவன்
சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் வச்சுக்கிறாரு… அந்த குறை…. அதுவும் வந்து என்ன பண்றீங்க நீங்க வந்து? அந்த குறை கூட சரியாகணும்னு சொன்னா எப்படி சரியாகும்?
சுவடி ஓதும் மைந்தன் :- சரி ( ஆகுமா ) ?
அடியவர் :- ஆகாது…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆகாது அப்ப….
அடியவர் :- ஆகணும்னா இறைவன் தான் மனசு வைக்கணும்
சுவடி ஓதும் மைந்தன் :- மனசு வச்சாதான்
அடியவர் :- அந்த குறை சரியாகும்
குருநாதர் :- அக்குறை ஏன் வைத்திருக்கின்றான்?
குருநாதர் :- சொல்லுங்கள் பார்ப்போம் அனைவரும்?
அடியவர்கள் :- ( சற்று அமைதி / யோசனை )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் உங்களுக்கு ஏற்றவாறு தான் எவை என்று புரிய.
அடியவர் 9 :- அவங்களுக்கு ஏத்த மாதிரி குறை…
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்களுக்கு ஏத்தவாறு ஒரு ஒரு குறை வச்சுக்கிறார். ஏன் குறை? அந்த குறையும் இல்லைன்னா என்ன ஆகும்?
அடியவர்:- இறைவனை நினைக்க மாட்டோம்
அடியவர் 9 :- இறைவனை வணங்க மாட்டோம்
குருநாதர் :- இப்பொழுது சொல்லியதை அப்படியே சொல்கின்றீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப சொல்லியது… இப்ப நான் சொன்னேன்ல… அதேதான்மா நீ சொல்ற…
அடியவர் 7 :- ( அப்படி ) இல்ல. குறை இல்லைன்னா திமிரா ஆயிடுவேன் அதனாலதான்… ( இவ் அடியவர் சொல்லி முடிக்கும் முன்னர் )
குருநாதர் :- அப்பனே எது என்று கூற அப்பனே பின் உன் ஆட்டத்தை பார்த்தேன் அப்பனே.
அடியவர்கள் :- ( பலத்த குபீர் சிரிப்புகள் )
குருநாதர் :- எதை என்று கூட அடக்கி வைத்திருக்கின்றேன் இப்பொழுது.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- உன் ஆட்டத்தை நான் பார்த்தேன் தான்ப்பா. இப்பொழுது அடக்கி வச்சிருக்கிறேன்….
குருநாதர் :- அப்பனே இதே போல்தான் அப்பனே நிச்சயம் அனைத்தும் கொடுத்துவிட்டால்… அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே…. பின் ஆடி விடுவார்கள் என்பேன் அப்பனே.
===========================
# மனித வாழ்க்கை வயது - ஒரு எளிய உபாயம்…
===========================
குருநாதர் :- ஆடிவிட்டு பின் இவர்களையும் கெடுத்துக்கொண்டு, இவரை சார்ந்தவர்களும் கெடுத்துவிட்டு நிச்சயம் அனைத்தும் அழித்து விடுவார்கள். அவ்வளவுதான் நிச்சயம் தன்னில் கூட. ஏன் இந்த வாழ்க்கை? ஏன் இந்த பிழைப்பு?
அடியவர் 10 :- ஐயா நாங்க வாழ்றதே மேக்ஸிமம் வந்து 60, 70 இயர்ஸ் தான். வாழ்ற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போறோமே…..
குருநாதர் :- அப்பனே பின் அதாவது எது என்று புரிய ஏன் இவ்வாறு வயதை நீ எடுத்துரைக்கின்றாய் அப்பனே? பின் அனைவரும் எவை என்று நீ சொல்ல வேண்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்ப்பா 60, 70 சொல்ற இதை? ஏன்ப்பா சொல்றே (60, 70 வயது வரைதான் ) வாழ முடியும் என்று?
அடியவர் 10 :- மேக்ஸிமம் அவ்வளவுதான் வாழ முடியும் என்னால வந்து …
குருநாதர் :- எதை என்று அப்பனே நிச்சயம் தன்னில் ஏது என்று அப்படி இல்லையப்பா. நிச்சயம் அனைவரிடத்திலும் கேட்டு பார் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படியெல்லாம் இல்லப்பா. 60, 70 எல்லாம் வந்து இல்லை.
அடியவர் 6 :- 90, 100 வயது வரை எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் வாழ்ந்து இருக்காங்கப்பா. அவங்க எல்லாம் கேட்டு பாருப்பா. நாங்க எல்லாம் எப்படி வாழ்ந்தோம்? எதுன்னு சொல்லி அவங்களை கேட்டு வா….
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் அப்பனே இவன் அமைதியாக எவை என்று ஒரு இல்லத்தில் பின் இவன் தனக்கு பின் உணவு பின் வந்து விடுகின்றது. வேளை வேளைக்கு… அப்பனே பின் இதனால்தான் கேள்வி கேட்கின்றான். தாயே இவன் வெளியே துரத்து. செல்லட்டும். இப்படியே விட்டிருந்தால் இவன் சோம்பேரி ஆகிவிடுவான்.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்…….. )
சுவடி ஓதும் மைந்தன் :- எந்த வேலையும் செய்யாம ….அப்படித்தான் சொல்றாரு அகத்தியர் வந்து…
அடியவர் 7 :- வேளைக்கு வேளை சாப்பாடு வருது..
சுவடி ஓதும் மைந்தன் :- வேளை வேளை சாப்பாடு வந்து. அதனாலதான் இப்படி கேள்வி கேக்குற. நீ கஷ்டப்பட்டு நீ இது மாதிரி பண்ணிருந்தேன்னா என்ன பண்ணிருப்ப வந்து?
அடியவர் 7 :- கேக்க மாட்டேன்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து நீ சாப்பாடு போடாதமான்றாரு. அவரே செஞ்சுகிட்டு போறதா.. அப்ப சோம்பேரி ஆயிடுவாரு.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்…….. )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் இதன் மூலமும் உனக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில லாபங்கள் அப்பனே பின் உருவாகட்டும். அப்பனே நீ கேள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கங்க சென்று. இதுதான் உன்னுடைய வேலை.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து உன்னுடைய வேலை என்னது? ஒரு 70க்கு மேல 80க்கு மேல வாழ்றாங்க பாருங்க அவங்க போய் கேட்கணும் நீங்க வந்து. ஐயா என்னங்க ஐயா? எப்படிங்க ஐயா நீங்க வாழ்றீங்க? எப்படிங்க இறையாற்றல் பெற்றீங்க என்ன பண்ணனும் நீங்க போய் கேட்கணும்ன்றாரு வந்து… எங்க எங்க இருக்குறாங்களோ…
அடியவர் 7 :- அது உங்களுக்கு புண்ணியமா போகும்
சுவடி ஓதும் மைந்தன் :- சாமியார் எல்லாம் இருக்காங்க இல்ல
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கங்க அவங்க எல்லாம் கேட்க சொல்றாரு போய். அப்படியே உங்களுக்கு என்ன ஆகும்னா… புண்ணியம் பெருகும்.
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் ஏது என்று புரிய அப்பனே, பின் கேட்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் உபயம் எல்லாம் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வாறு நீங்க எல்லாரும் கேட்கின்ற பொழுது… உனக்கு தேவையான பதில்கள்?
அடியவர் 7 :- கிடைக்கும். உபயம்.. நல்லது நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லது நடக்கும். உபயம்னா என்னது? உபயம்னா….
அடியவர் 7 :- அதான் நல்லது மாதிரி நமக்கு தேவையான
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு என்ன தேவையானதோ?
அடியவர் 6 :- அது கிடைக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- அது கிடைக்கும். அதுக்கு பதில் கிடைக்கும்.
அடியவர் 7 :- அதனால அவருக்கு உபயோகமா இருக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு அந்த அவங்க சொல்றது வந்து?
அடியவர் 7 :- உபயோகமா இருக்கும். அவருக்கு.. அவரோட கேள்விக்கு தேவையான பதில் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்கும்.
அடியவர் 7 :- அவருக்கு உபயோகமா இருக்கும்
குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே எதை என்று கூறப்பின் எங்களுக்கு எப்பொழுது ஏது என்று கூற பின் நிச்சயம் வாயை விட வேண்டும். வாயை மூட வேண்டும் என்றெல்லாம் தெரியும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்ப நீங்க பேசணும்? எப்ப பேசக்கூடாது? எப்ப நாங்க பதில் அளிக்கணும்? அதல்லாம் தெரியும்பா.
குருநாதர் :- அப்பனே எவை என்று கூற இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இவை என்று கூற இப்படி செய்கின்ற பொழுது, உன் கேள்விக்கு பதில் வரும் தானாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீ அங்கங்க கேட்கின்ற பொழுது உன் கேள்விக்கு?
அடியவர் :- பதில் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பதில் நிச்சயமாக கிடைக்கும்ன்றார்
குருநாதர் :- அப்பனே விட்டுவிடக்கூடாது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது ஒரு முறையோ, இருமுறையோ. அப்பனே மாதக்கணக்கில் செல்ல வேண்டும்.
அடியவர் :- ( தொடர்ந்து செய்ய வேண்டும் )
குருநாதர் :- அப்பனே ஒவ்வொரு பிரசாதத்தையும், அப்பனே ஒவ்வொரு வார்த்தைகளும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் ஆன்மீக நாட்டத்தை உன்னை நிச்சயம் ஏது என்று புரிய
அடியவர் 7 :- நீங்க இப்படி கேட்க போறதுனால… உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகிக்கிட்டே போகும். நீங்க அதுல போயிட்டு இருக்கனும். ஒன்னு ரெண்டு பேரை கேட்டுட்டு விட்டுடாதீங்க கண்டினியூவா போயிட்டே இருங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு விடை அதுல வரும். 70 80 வயசு ஆகுது. உங்களுக்கு எப்படிங்க ஐயா? எப்படிங்க இருக்கிறீங்க அய்யா ? வந்து என்னங்க பண்றீங்க? கண்ணெல்லாம் நல்லா தெரியுதா உங்களுக்கு?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒர்க் ஆகுதா? அப்படின்னா கேளுங்க. அவங்க பதில் சொல்லுவாங்க வந்து. அந்த நேரத்துல வந்து.. உங்களுக்கு வந்து
அடியவர் :- புண்ணியம் கிடைக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் கிடைக்கும். உங்களுக்கு… நீங்க என்ன
அடியவர் 6 :-விடை கிடைக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- விடை கிடைக்கும்ன்றாரு. தேடுறதுக்கு விடை கிடைக்கும்ன்றாரு
குருநாதர் :- அப்பனே எது என்று கூற இப்படித்தான் அப்பனே வழிகாட்ட வேண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் அனைத்தும் சரி செய்கின்றேன் என்றால் அப்பனே நீ அமைதியாக உட்கார்ந்து விடுவாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் இப்படித்தான் வந்து?
அடியவர் 7 :- சரி பண்ணனும்.
அடியவர் 6 :- வழிகாட்டணும்
சுவடி ஓதும் மைந்தன் :- வழிகாட்டணும். அப்படி நான் வழிகாட்டலைன்னா?
அடியவர் 7 :- நீங்க கேக்குறதுக்கு நான் சரி பண்ணிருவேன்னு சொல்லிட்டா நீங்க கம்முன்னு இருந்துருவீங்க
அடியவர் :- அமைதியா இருப்பீங்க
அடியவர் 7 :- முயற்சி பண்ண மாட்டீங்க
===========================
# அனைத்திலும் அடிப்படை தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும்.
===========================
குருநாதர் :- அப்பனே நல்ல விதமாக எவை என்று புரிய அப்பனே நிச்சயம் அப்பனே இதனால் முதலில் அப்பனே பின் அடிப்படை தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. அடிப்படை பின் தத்துவம் தெரிந்து கொள்ளாமல் என்ன பின் நிச்சயம் தன்னில் கூட பின் சொன்னாலும் புரியாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல என்ன பண்ணனும்?
அடியவர் :-அடிப்படை தெரிஞ்சுக்கணும்
சுவடி ஓதும் மைந்தன் :- அடிப்படைன்னா என்னது இங்கிலீஷ்ல
அடியவர் 6 :- பேசிக்
சுவடி ஓதும் மைந்தன் :- பேசிக் பேசிக்கே தெரியல. அப்ப இறைவன் வந்து என்ன இதுன்றாரு வந்து
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட பின் படித்தாலும், நிச்சயம் தன்னில் எவ் தொழிலில் செய்தாலும், நிச்சயம் அடிப்படை நிச்சயம் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு படிக்கிறதுனாலும் அடிப்படை வேணும். ஒரு வேலைக்கு போனாலும் பேசிக் அதெல்லாம் வேணும். அதெல்லாம் வந்து..
அடியவர் 6 :- சமையல் பண்ணாலும் அதுக்கான பேசிக் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். எந்த வேலைக்குமே அடிப்படை முக்கியம் இல்லைங்க ஐயா
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட உனை அடுத்த நிலைமைக்கு யான் எடுத்துச் சொல்கின்றேன்.
===========================
# நிச்சயம் தர்மத்தைப் பற்றி கூறுங்கள்
===========================
குருநாதர் :- நிச்சயம் தர்மத்தைப் பற்றி யாராவது எழுந்து நின்று கூறுங்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த நிலைமைக்கு நான் சொல்றேன். யாராவது ஒருத்தர் வந்து தர்மத்தை பற்றி சொல்லுங்க இப்படித்தான் வாழ வேண்டும் என்று. அடுத்து நான் சொல்றேன். யாராவது எழுந்து நில்லுங்கமா. யாராவது சொல்லுங்க ஐயா?
அடியவர் 11 :- (எழுந்து நின்றார் )
அடியவர் 7 :- சொல்லுப்பா. தர்மத்தை பற்றி சொல்லு.
அடியவர் 11 :- தர்மம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யனும்..
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் இவையெல்லாம் எவை என்று புரிய அப்பனே , பின் பக்குவம் இல்லாத வார்த்தைகள்.
அடியவர் 7 :- இன்னும் பக்குவமான வார்த்தை வேணுங்கிறார்.
குருநாதர் :- அப்பனே இரண்டே… எவை என்று கூறப்பின் இவ்வாறு நியாயமா நீ சொல்வது? அப்பனே இது அனைவருக்குமே தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மம் செய்யணும். என்ன சொன்னார்?
அடியவர் 10 :- எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்மம் செய்யணும்,
சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாருக்கும் தெரியுமாம்.
அடியவர் 7 :- இது இல்லாம வேற ஏதாவது கேக்குறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேற ஏதாவது கதை மாதிரி சொல்லுப்பா. தர்மத்தை பற்றி…
அடியவர் 10 :- அய்யா தர்மம்ங்கிறது உயிருக்கு உயிர் வேறுபடும். ஒரு எறும்புக்கு வந்து ஒரு சின்ன ஒரு பருக்கை கூட தர்மம் தான். ஒருத்தவங்களுக்கு ஆறுதலான வார்த்தை கூட ஒரு தர்மம் தான். அவங்க நோயுற்று இருக்கிறப்ப அவங்களுக்கு போய் ஒரு சின்ன உதவி கூட தர்மம் தான். அது வந்து உயிரினத்துக்கு உயிரினம் ஆட்களுக்கு ஆள் வேறுபடும். அந்த அளவுக்கு நம்ம ஒரு சின்ன ஒரு இது செஞ்சாலுமே அது தர்மத்தின் கணக்குல தான் வரும். அடுத்தவங்க மனது புண்படாம….
குருநாதர் :- தாயே சொல்லிக் கொடுத்ததெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிக் கொடுத்ததெல்லாம் சொல்றீங்க.. இது ஆல்ரெடி தெரியும் எல்லாருக்கும்.
அடியவர் 9 :- ஆமாங்க…
குருநாதர் :- புதிதாக சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் எத்தனை எத்தனை திருத்தலங்கள்… எத்தனை எத்தனை எதை என்று புரிய சென்றிருக்கின்றீர்கள். எத்தனை வாக்குகள் நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். இதனால் புதிதாக யோசியுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புதிதா சொல்லணுமாம்.
அடியவர் 12 :- அய்யா , இறை அருளால் கூறுகின்றோம். தேவைக்கு முன் குறிப்பறிந்து அளிப்பதே தர்மம்.
குருநாதர் :- அப்பனே அது இறைவனுக்கு தெரியும்.
அடியவர் :- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
அடியவர் 13 :- நல்லது செய்யலனாலும், கெடுதல் செய்யாம இருக்கணும்.
குருநாதர் :- எதை என்று புரிய பின் இதைத்தன் சொல்லியதே. ஒரு ஆடு போகுமாம். அதன் பின்னே அனைத்தும் போகுமாம். அதுபோலத்தான் நீ சொல்கின்றாய்
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் 13 :- (சிரிப்புடன்….) ஐயா ( நாங்க ) எது சொன்னாலும், ( அகத்தியர் ) ஐயா ஒரு பிரேக் போடுறாங்க….
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய நிச்சயம் சரியான பதில் அளித்தால், நிச்சயம் தன்னில் கூட, உனக்கு என்ன தேவை என்று யானே கொடுத்து விடுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- சரியான பதில் சொல்லணும்
அடியவர் 7 :- யாராவது சரியான பதில் சொல்லிட்டீங்கன்னா… உங்களுக்கு என்ன தேவையோ…. அவர் அதை கொடுத்துறேங்கிறாரு… கரெக்டான ஆன்சர் சொல்லுங்க…
===========================
# தர்மத்தைப் பற்றி - ஒரு நல் சிந்தனை….
===========================
அடியவர் 8 :- அமாவாசைக்கு எல்லாம் மாட்டுக்கு எல்லாம் கீரை கொடுக்குறாங்க ஐயா. அது வந்து அந்த அமாவாசை நேரத்துல தான் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. பசி உணர்ந்து கொடுக்கணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க. எல்லாருமே கொடுத்தா நமக்கு நல்லதுன்னு நினைக்கிறாங்க. அதனால அதுக்கு என்ன நல்லது? அது பசி….
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய கொடுத்தால் நன்றாக ஆகிவிடுமா என்ன? நீ கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லாரும்… அகத்திகீரை கொடுத்தா நல்லா ஆயிடுமா வாழ்க்கை?
அடியவர் 8 :- நல்லது வந்து… நம்ம.. நம்ம வாழ்க்கை நல்லா ஆகும்னு நம்ம யோசிக்க கூடாதுங்க. அது இறைவன் பார்த்துக்குவாரு. அந்த மாட்டுக்கு என்ன பசிக்குது..எப்ப பசிக்குது ( என்று உணர்ந்து கொடுக்க வேண்டும் )
குருநாதர் :- அப்பனே எதை என்று அறிய உங்கள் சுயநலத்துக்காக தான் கொடுக்கின்றீர்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- யார் கொடுக்குறீங்க?
அடியவர் :- சுயநலத்திற்காகத்தான்…
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னுடைய சுயநலத்திற்காகத்தான்
குருநாதர் :- அப்பனே எதை என்று அறிய எவ் நேரத்திலும் கொடுக்கலாம் அப்பா. தவறில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அமாவாசை மட்டும் இல்ல.
அடியவர் 7 :- எப்ப வேணாலும் கொடுக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்ப வேணாலும்?
அடியவர் :- கொடுக்கலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- கொடுக்கலாம்.
===========================
# நீங்கள் பிறந்த தினத்தில் தர்மம் செய்யுங்கள்
===========================
# நீங்கள் பிறந்த தேதியில் தர்மம் செய்யுங்கள்
===========================
# நீங்கள் பிறந்த எண்ணில் ( மாதம் தோறும் ) தர்மம் செய்யுங்கள்
===========================
# நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் ( மாதம் தோறும் ) தர்மம் செய்யுங்கள்
===========================
குருநாதர் :- அப்பனே அவை மட்டுமில்லாமல் அவரவர் அப்பனே பின் பிறந்த தினத்தில் கொடுப்பது உத்தமம்.
குருநாதர் :- அப்பனே ஏனென்றால் நிச்சயம் நீங்கள் வந்துவிட்டீர்கள். அதனால் அப்பனே சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே அவரவர் அப்பனே பின் நட்சத்திரத்தில் கொடுத்தாலும் கூட அப்பனே பின் நிச்சயம் பின் எதை என்று புரிய பின்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு?
அடியவர் 7 :- பிறந்த தினம்… நட்சத்திரத்துல
சுவடி ஓதும் மைந்தன் :- நட்சத்திரத்துல கொடுத்தாலும்… பிறந்த தினத்துல கொடுத்துட்டாலும்…
குருநாதர் :- எதை எண்களும்
சுவடி ஓதும் மைந்தன் :- எண்கள்
அடியவர் 7 :- ஆமா…பிறந்த தேதி
===========================
===========================
# வணக்கம் அன்பு அடியவர்களே…
இவ்வளவு மகத்தான வாக்கு — நம் பிறந்த நாளில் செய்ய வேண்டிய தர்மம் குறித்து குருநாதர் அளித்த உத்தரவு வாக்கு — நம் அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு பொது உபதேசம்.
குருநாதர் நமக்கு தந்த இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்வு பெறுங்கள்.
உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் பிறந்த தேதி, கிழமை, நாள், எண், நட்சத்திரம் ஆகிய அனைத்தையும் குருநாதர் கூறிய படி அழகாக பதிவு செய்து வைத்து, வாரம் தோறும்… மாதம் தோறும்… வருடம் தோறும் தர்மம் செய்து வாருங்கள்.
பிறந்தநாள் தர்மத்தின் மகத்துவத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். பிறந்தநாள் தர்மத்தை பலமாகப் பரப்புங்கள்.
நம் பிறந்தநாள் விவரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யும் தர்மம் — நம் உயிர் மூச்சாகட்டும், நம் வாழ்வின் நெறியாகட்டும்.
===========================
===========================
குருநாதர் :- எது என்று புரியும் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய… அதாவது ஒவ்வொரு எது என்று புரியும் நிச்சயம் தன்னில் பல மடங்கு ஏது என்று அறிய…
குருநாதர் :- இதனால் எவை என்று கூற முதலில் அழைக்கின்றேனே எதை என்று அறிய பின் துலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- ( துலாம் ராசி அடியவர்களை அழைத்தார்கள். அப்போது அடுத்தது நமது ராசி அழைப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது என்றும் எடுத்துரைத்தார்கள். )
யாத்திரை குழு அடியவர்கள் :- ( சுவடி ஓதும் மைந்தனுக்கு அவ்வப்போது பழரசம் கொடுத்து உபசரித்தனர்…)
===========================
# சுவடி எப்படி இயங்குகின்றது என்று ஒரு எளிய விளக்கம் அளித்தார்கள்
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் ஜீவநாடி ஓகேங்களா. டாக்டர் ஈசிஜி போகும் தெரியுமா? ஜீவநாடி என்பது இதுதான். ஈசிஜி மாதிரி போகும். ஆனா அது பார்க்கும்போது சரியா எழுத்து வந்துரும் பாருங்க நல்லா. ஈசிஜி தெரியுதுங்களா இது ஒரு இது தெரியுதுங்களா தெரியுது பாருங்களேன். ஈசிஜி கோடு தான் கோடு கோடு தான் ஈசிஜி மாதிரி போகும் அடுத்தது எடுத்துல வரும் அம்மா நிறைய விஷயம் இருக்குமா. ஆனா எப்படிதான் உங்களுக்கு புரிய வைக்குதுன்னு எனக்கு தெரியல. ஏன்னா இது நான் வந்து நீங்களே கேக்குறது எப்படி வருதுன்னா நான் எப்படி சொல்றது? சொல்லுங்கமா நீங்களே வந்து?
அடியவர் 9:- அதுதான் உங்க கண்களுக்கு மட்டும் தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மையிலேயே எனக்கு கூட தெரியாதுமா எப்படி வருதுன்னா… பச்சைன்னு இருக்குது …..ஏன்னா யாராவது வந்து எப்படி வருதுன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது? சொல்லுங்க?
அடியவர் 6:- பகவான் அனுக்கிரகம் தான்.
===========================
# ஒவ்வொரு குலத்தின் முன்னோர்களும் எப்படி அவர்கள் குலத்தை காத்து நின்று வழிநடத்துகின்றனர் என்று ஒரு உதாரணம் இவ் அடியவரை வைத்து….
===========================
குருநாதர் :- தாயே கவலைகள் வேண்டாம். நல்விதமாகவே அனைத்தும் அமையும். உயர்வு நிலைகள் உண்டு.
…………………………………………………………………………..……………………………
……………………………………………..…………………………………………………………
( நீண்ட தனி வாக்குகள்…பல ரகசியங்கள் இவ்வாக்குகளில் அவ் அடியவருக்கு கிட்டியது.)
…………………………………………………………………………..…………………………………………………………………………..…………………………………………………………………………..…………………………………………………………………………..…………
(விதி ரகசியங்கள், முன்னோர்கள்/பரம்பரை ரகசியங்கள், தெய்வங்களின் அருள்கள் நிலைகள் ……என்று மிக அருமையான நீண்ட வாக்குகள் இவ் அடியவருக்கு அருளினார்கள் ) ………………………………………………………………..…………………………………………………………………………..…………………………………………………………………………..…………………………………………………………………………..……………………
குருநாதர் :- தாயே கவலை வேண்டாம் நிச்சயம் இன்னும் பின் மூன்று மாதங்கள் கழித்து இங்கே வருவேன் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- மூன்று மாதங்கள் கழித்து வருவேன். அப்போ உங்களுக்கு சில விஷயங்கள் சொல்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment