​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 16 August 2026

சித்தன் அருள் - 2279 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு - 2!




திருப்பதி திருமலையில் குருநாதர் அகத்தியர் பெருமான் அடியவர்களுக்கு செய்த உபதேசங்கள் பாகம் 2 

அடியவர்:

தந்தையே, தற்பொழுது தீய சக்திகள் ஊடுருவும் நிலையில் இருப்பதால், நல் சக்திகள் அதை தடுக்க வேண்டும் என்று.

குருநாதர் வாக்கு.

அப்பனே, அதை நிச்சயம் தன்னில் கூட, விஞ்ஞான முறையில் எடுத்துரைப்பேன், அடுத்தடுத்த வாக்கில். அப்பனே  நிச்சயம் தன்னில் ஏனென்றால், அப்பனே, எவை என்று கூற, அப்பனே, இப்பொழுது உனக்கு எடுத்துரைத்தாலும், உனக்கு மட்டும் தெரியுமப்பா, இதனை எப்படி கொண்டு செல்ல முடியும்? என்பதை எல்லாம், அப்பனே, எப்படி அவை அழித்திட வேண்டும்??? என்பவை எல்லாம், அப்பனே, யாங்கள் அறிவோம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதனால், அப்பனே, பல மக்கள்தான் அதற்கு காரணமாக திகழ்கின்றார்கள், அப்பனே. 

அதனால் மக்களை வைத்தே, நிச்சயம் அதை, நிச்சயம் பின் விரட்டுகின்றோம்.

மற்றொரு அடியவர் குருநாதர் வாக்குகளில் குறிப்பிடும் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று கொண்டு வந்து கொண்டே இருக்கின்றார் அவர் ஏற்கனவே முன்பு ஒரு முறை குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது ஆலயத்திற்கு சென்று வந்ததால் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கின்றது என்று குருநாதர் வாக்குகளை தெரிவித்து இருந்தார் அதனைக் குறித்து அந்த அடியவர் மீண்டும் கேட்ட பொழுது... அதாவது குருநாதர் கூறிய அனைத்தையும் செய்து கொண்டே வந்து குருநாதர் குறிப்பிடும் ஆலயங்களுக்கும் சரி முறையில் சென்று கொண்டே வந்து கொண்டே இருந்ததால் கிடைத்திருக்கும் நேர்மறை சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று குருநாதரிடம் கேட்டதற்கு

குருநாதர் வாக்கு 

அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட சிறிது காலம் பொறுத்திரு!!!!...,

எதற்காக, எவை என்று கூற, எவை என்று அறிய, அப்பனே, நல்விதமாக விளக்கங்கள் தருகின்றேன்.  விளக்கங்கள் தருகின்றேன். அப்பொழுது நீ புரிந்து கொள்வாய், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட

அப்பனே, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சக்தி அதிகமாக இருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, அப்பனே, பின் கவலை!!!

சக்தி குறைவாக இருந்தாலும், கவலை தான், என்பேன், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட, எப்படி?, எதை ? என்று கூற, பின் அதாவது, சமம் அளவு எடுத்து வரவேண்டும்.

அப்பொழுதுதான்  இறைவனையும் காண முடியும். 

எதை என்று கூற, அப்பனே, இவ்வாறாக, சக்திகள் அதிகமாக இருந்தாலும், அப்பனே, நிச்சயம் தினம் கவலைகள் அதிகம் கொள்ளும்.

சக்திகள் குறைவாக இருந்தாலும், அப்பனே, பின் கவலைகள் அதிகமாக கொள்ளும்.

ஆனாலும், அப்பனே, இதற்கெல்லாம் காரணம், அப்பனே, கிரகங்களின் அப்பனே, பின் நிலைமையே, என்பேன், அப்பனே.

எங்கு, எதை என்று புரிய, அப்பனே, சம அளவு இருக்கின்றது என்பதற்கு, அப்பனே, இன்னும், அப்பனே, பின் தானாகவே, அப்பனே, போக போக, அப்பனே, சமநிலைப்படுத்தி, அப்பனே, பின் எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில்கூட சில விஷயங்களை மாற்றி, அப்பனே, நலமாகவே, அப்பனே, பின் உனக்கே தெரிவிக்கின்றேன். அதை மட்டுமில்லாமல், எவ்விடம் செல்ல வேண்டும்??? என்பவை எல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது, அப்பொழுது சில விஷயங்கள், சில ரகசியங்கள் உமக்கே புரியும்.

இதற்கிடையே ஒரு பெண் அடியவர் பெருமாள் புஷ்கரணியில் இருப்பார் அவரை அங்கே குளித்துவிட்டு வணங்க வேண்டும் என்று சொல்ல

குருநாதர்:
தாயே, நிச்சயம் எதை என்று புரிய, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, வணங்கினால்தான், நிச்சயம் பின் இறைவன் வருவானா என்ன? 
நீயே கூறு.

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

கும்பிட்டாதான் இறைவன் வருவாரா?

குருநாதர்:
எதை என்று கூற, பின் எண்ணங்கள், பின் நிச்சயம், பின் அதிகமாக இருந்தால், நிச்சயம் தன்னில் கூட, அவனுக்கு அதாவது நாராயணனுக்கு பின் தெரியும். பின் இவன் எப்படிடா இப்படி நல்ல எண்ணங்களாக இருக்கின்றான் என்று, நிச்சயம் உன்னை தேடி வருவான், உன்னை பார்ப்பான். அவ்வளவுதான், தாயே. 

எண்ணங்கள் சரி இல்லாமல், எவ்வளவு சுற்றினாலும், எப்படி பின் வணங்கினாலும், நிச்சயம் தன்னில் கூட, எவையென்று  உடம்பில் பின் விபூதி பூசிக் கொண்டாலும், நிச்சயம் இறைவன் எப்படி, தாயே, வருவான்???. வாசனை தான் எடுக்கும்.


அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இன்னும் அடிப்படை விஷயங்கள் எல்லாம் சொல்கின்றேன், அப்பனே. அதை நிச்சயம் சொன்னால் கூட, நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


இதற்கிடையே அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு அடியவரின் மகளுக்கு குருநாதா நல்கிய வாக்கு

 குருநாதர்:
அப்பனே, எம்முடைய ஆசிகள் பலமாக, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிவு, நிச்சயம் தன்னில் கூட, பின் அதிகாலையிலே எழச்சொல், அப்பனே, நன்முறைகளாக,

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு 4 மணி, அப்பனே, அளவில் எழுந்திருக்க சொல்... சில ஆற்றல்கள் அப்பனே வந்து படும் என்பதை எல்லாம் அப்பனே அனைவருக்குமே தெரியும் என்பேன் அப்பனே 

இதனால் நிச்சயம் சியம் தன்னில் கூட பல நோய்கள் இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிறுவர்களுக்கு அல்லது புத்தி இல்லாமை இருப்பவர்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட நான்கு அல்லது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதற்கு முன்பே எழுந்து நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அவை மட்டும் இல்லாமல் நன் முறைகளாகவே எதை என்று புரிய அப்பனே பின் அதாவது எதை என்று அறிய சரியாகவே சரியான நீரினை எடுத்து உறங்குவதற்கு முன்பே எழுந்து அதை சரியாகவே அருந்தி இறைவன் நாமத்தை து தித்து அப்பனே பல புத்தகங்களை நிச்சயம் தன்னில் கூட பல வகையான ஆற்றல்களை ஈர்க்க நிச்சயம் தன்னில் கூட பல வகையான பாடல்கள் இருக்கின்றது அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பாடிவிட்டு வந்தாலே அப்பனே மன மாற்றங்கள் அப்பனே நிச்சயம் எவ்வாறு ஆக வேண்டும் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இவை மட்டுமில்லாமல் அப்பனே அதிகாலையில்
நான்கு மணி அளவில் எழுந்து அப்பனே நிச்சயம் இவ்வாறு தான் ஆக வேண்டும் என்றெல்லாம்
.பின் இறைவனை வேண்டிக்கொண்டு, வேண்டிக்கொண்டு அப்பனே இவ்வாறாக சில மாதங்களோ அல்லது அவரவர் நிச்சயம் தன்னில் பாவத்திற்கு புண்ணியத்திற்கு ஏற்ப அப்பனே இருந்தால், ஒரு நாள் நிச்சயம் திடீரென்று வெற்றி கிட்டும், அப்பா. நிச்சயம் தன்னில் கூட!! அவை மட்டும் இல்லாமல் இக்குழந்தையும் நல்ல விதமாகவே எதை என்று புரிய அப்பனே அதிகாலையிலும் அப்பனே உடம்பில் சில ஆற்றல்கள் அப்பனே நிச்சயம் குறைவாக உள்ளது அப்பா.. இப்படி குறைவாக உள்ளதால் அப்பனே எதை என்று கூற... என் எவை சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் போகும் அப்பா அவை மட்டும் இல்லாமல் அப்பனே.. தான் எண்ணத்திற்கு தகுந்தவாறு பின் செய்து கொண்டு இருக்கும் அப்பா. 

அவ் ஆற்றலை பெருக்க அப்பனே யான் சொன்னேன் அதை செய்து முடிக்க நன்று. 

இவை ஒரு அரை மண்டலம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே செய்துவிட்டு மீண்டும் கேட்க சொல் மீண்டும் உரைக்கின்றேன் அப்பனே ஆசிகள்! ஆசிகள்!


மற்றொரு அடியவர்:

 பாப்பாவும் பையன்,  படிப்பு கொஞ்சம் இப்பொழுது.............

---

 குருநாதர்:
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், 5 மணிக்கு, அப்பனே, பின் காலையில் எழுச் சொல் அப்பனே பின்பு பார்ப்போம்.


சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்.

5 மணிக்கு கண்டிப்பா எழணும், 5 மணிக்கு எழுந்து படிக்கணும்.


அடியவர்:
பொண்ணு எழுந்துறாங்க, ஐயா, 

 பையன் தான் எழமாட்டேங்கிறான், ஐயா.


குருநாதர்:
அப்பனே, எதை என்று, அப்பனே, சோம்பேறி அவ்வளவுதான்.


ஒரு பெண் அடியவர்...தன் குழந்தையை 
விளையாட்டு துறை போகணும்னு ரொம்ப ஆசை.


 குருநாதர்:
எதை என்று கூற, அப்பனே, எவை என்று கூற, அம்மையே, எவை என்று அறிய, பின் குழந்தாய் அறிந்த கூட, நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் பின் நீ சொல்கின்றாய் அல்லவா, நிச்சயம் அதற்கு — நீ மூன்று மணி அளவில் எழுந்திரு, பார்ப்போம். நிச்சயம் அப்பொழுதுதான் இவனுக்கு ஆழ்ந்த சிந்தனைகள் உள்ளது என்பதே அர்த்தம்.



  மூன்று மணிக்கு எழுந்து விளையாடச் சொல், பார்ப்போம்.



  இல்லையென்றால், நடிப்புதான். நடிப்பது என்பதே பொருள் அப்பனே, ஒருவனுக்கு முழு ஈடுபாடு இருந்தால், அப்பனே, நிச்சயம் இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தனை, நிச்சயம் ஓங்கி நிற்கும், அப்பா. இதனால், அப்பனே, வெற்றி அடைவான்.


அப்பனே, அதனால்தான், குழந்தாய் என்று குறிப்பிடுகின்றேன், யான்.


 அப்பனே, பின் உங்களுக்கே தெரிவிக்கின்றேன், அப்பனே, 

ஒரு பெண் மீது நீங்கள் ஆசை கொண்டால், அப்பனே, எப்பொழுதும், அப்பனே, பின் நிச்சயம் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா!!!

அதேபோலத்தான் அனைத்தும், அப்பனே, இச்சிறுவனுக்கு சொல்லுங்கள்.


  அப்பனை எதை என்று கூற அதனை நீ அதிகம் நேசிக்கிறியா? அப்பனே, பார்ப்போம், எதை என்று கூற, அப்பனே, பின் தாய், எவை என்று கூற, பின் எவை என்று கூற, பின் பார்க்கட்டும், நிச்சயம், பின்பு உரைப்பேன், அனைத்தும், பின் அவ்வாறாக இருந்தால், யானே உன்னை இழுத்துச் சென்று விடுவேன்.



அச் சிறுவன் 

புரியலையே. குருநாதர் கூறியது எனக்கு புரியவில்லை என்று சொல்ல 

 சுவடி ஓதும் மைந்தன் சிறுவனை பார்த்து... நீ எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் செய்கின்றாயோ அதை குருநாதர் பார்த்து உன்னை அதில் எடுத்துச் செல்வார் என்று கூறுகின்றார்.







குருநாதர்

 எதை என்று கூற, பின்பு என்ன செய்வாய்????

சுவடி ஒதும் மைந்தனின் விளக்கம் 

மூன்று மணிக்கு எழுந்து அதன் மீது ஈடுபாடு கொண்டு விளையாடப் பிறகு என்ன செய்வாய் என்று குருநாதர் கேட்கின்றார் 


அடியவரின் மகன் 

அதனைப் பற்றி விவரமாக புரிந்து கொள்வேன் 


குருநாதர்


 அறிந்தும்  எவை என்று கூற, பின் பல பொது அறிவியல், பின் பொது அறிவிலான, பின் வழிகளும் பயன்படுத்து.


  அப்பா, பின்பு யானே உனக்காக பாடு படுகின்றேன்.

குழந்தையின் தந்தை 

ஐயா, அதுல வந்து பொது அறிவு வந்து புத்தகம் மூலமாக எடுக்கணுமா ஐயா,??

 மொபைல் மூலமா? 

குருநாதர்

 எவை, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் நிச்சயம், நிச்சயம் புத்தகம் மூலம்.

அக் குழந்தை சிறுவன்.

  புக் நிறைய படிக்கிறேன். 


குருநாதர் 

 எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் இப்பொழுது பேசி இருக்கின்றதே, பின் அலைபேசி, நிச்சயம் தன்னில் கூட, அதை வைத்துக்கொண்டு, நிச்சயம் பொது அறிவு என்று, பின் வேறு விதமாக பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வளவுதான்.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


 சிறுவனின் கைகளில் மொபைல் கொடுத்தால் அதில் பொதுஅறிவு படிக்கின்றேன் என்று வேறு ஏதாவது பார்த்துக் கொண்டிருப்பார்  அதனால் வந்து.  புத்தகத்தை கொடுக்கணும்.


 
குருநாதர்

 முதலில் யான் சொல்லியதை நிறைவேற்றச் சொல். பின்பு யானே சேர்ப்பேன். 



 எதை, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பா, படிப்பினை கூட, நிச்சயம் தன்னில்  காதல் செய்.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

 படிப்பினை கூட, நீ நல்லா விரும்பனும்ன்றாரு. நல்லா இன்ட்ரஸ்ட் பண்ணனும்ன்றாரு.


குருநாதர் 

 அப்பா, பின் அனைத்திலும், அப்பனே, எதை என்று கூற, இப்படி, அப்படி என்றெல்லாம், நிச்சயம் பின் (தராசு) எடை மாறுகின்றதே, அப்படித்தான் இவனுக்கு இப்பொழுது.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

தராசு அப்படி இப்படி என மேலே கீழே நிலையில்லாமல் இருப்பது போல இவருடைய மனதும் விளையாட்டு படிப்பு அங்கு இங்கு என மாறிக்கொண்டு இருக்கும் என்று குருநாதர் சொல்கின்றார்.



  அதிகாலையில் எழுவது எவை என்றறிய, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் அந்நேரத்தில் சோம்பேறித்தனமாகத்தான் இருப்பார்கள். நிச்சயம் தன்னில் கூட, அது இதற்கு மாற்று யோசனையாக சொல்கின்றேன். ஆனாலும், நிச்சயம் கடினம் தான். நிச்சயம் தன்னில் கூட பார்த்துக்கொள்வோம்.


 அறிந்தும் கூட ஏனோ தானோ என்று தான் இப்பொழுது 

 அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். அனைவரிடத்திலும் கேள்,

 முதலில் பின் நிச்சயம், பின் அதிகாலையில் நீராடுகின்றார்களா என்று.

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி அவரவர் லட்சியத்தை அடைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வெற்றிகள் கிடைக்கும். 




குருநாதர்


 அப்பனே, அனைத்தும் நடக்கும் அப்பா. விரும்பியதெல்லாம் அப்பனே, இவனுக்கு.


அடியவர் கூட்டு பிரார்த்தனையில் சாதுக்களுக்கும் பொதுமக்களுக்கும் நடக்கும் அன்னதானம்   குறித்து தவறான கருத்துக்களை பரப்பவர்களை பற்றி அதாவது கூட்டுப் பிரார்த்தனை அன்னதானத்தை உண்டால் கர்மா சேர்ந்து விடும் என்று சில அரைகுறை புத்தி கொண்ட மனிதர்கள் பேசித் திரிக்கின்றார்கள் இதனைப் பற்றி குருநாதர் இடம் கேட்டதற்கு 


 அப்பனே, இதற்கு அப்பனே, நாராயணனே சாட்சி என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதற்கு விவரமாக, அப்பனே, பின் நிச்சயம் நாராயணன், நாரதரின் லீலைகள் கூட இருக்கின்றது என்பேன். அப்பனே, பின் பகுதியில் அதை சொல்கின்றேன். இங்கே வைத்தே!!,



அடியவர்

கூட்டு பிரார்த்தனையில் அன்னதானம் உண்பதை  குறித்து தவறாக பேசுகின்றார்கள் ஐயா... கூட்டுப் பிரார்த்தனை அன்னதானத்தை உண்டால் கர்மா சேர்ந்து விடும் என்று தவறாக பேசுகிறார்கள் ஐயா



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


  இதில் நாரதர் நாராயணன் லீலை, இருக்கின்றது என்று குருநாதர் சொல்கின்றார் இதைப் பற்றி குருநாதர் விளக்கமாக திருப்பதியில் வைத்து சொல்ல போகின்றார் பொறுத்திருங்கள் 


  அதெல்லாம் வந்து, ஐயா, மனிதன் வினை சம்பாதிக்கணும். கலியுகத்துல வந்து, ஐயா, எப்படின்னு தெரியுங்களா? மனிதன் என்ன சம்பாதிக்கணும்? கர்மத்தை தான் சம்பாதிக்கணும். பாவத்தை சம்பாதிக்கணும், ஐயா. அப்ப எப்படி சொல்லுவாங்க?
இப்படி தவறாகத்தான் சொல்லித் தருவார்கள் அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் குருநாதர் இதைப் பற்றி விளக்கத்தை தரப்போகின்றார்.


அடியவர்

  சரி, ஐயா. அப்ப நவகிரக தீபம் பற்றி கூட சொல்லுங்க. வீட்ல ஏற்றுவது குறித்து அனைவரும் தவறாக பேசுகின்றார்கள் ஐயா.


குருநாதர்

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,(தவறாக பேசுகின்றவர்கள்) அவனுடைய எண்ணம் என்பேன். அப்பனே, 

 அப்பனே, இதற்கு விஞ்ஞான முறையில் எடுத்துரைத்தால் தான், அப்பனே, மனிதன் மாறுவான். ஏனென்றால், அப்பனே, பின் ஒரு ஆடு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, ஒன்று செய்தால், பின் பின்னே இருக்கும் ஆடுகளும் அதையே செய்யும் என்பேன். அப்பனே,

 அதனால், அப்பனே, பின் அப்படித்தான் ஆகிவிட்டது. அழிவுக்கு வந்துவிட்டது உலகம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் மாற்ற சில யோசனைகள், அப்பனே, விஞ்ஞான முறையில் எடுத்து வருவேன். கேட்டால், நன்று, 



ஐயா.  அது அவங்களோட தனி விஷயம் ஆனால் பொதுவாக வந்த அனைவரிடத்திலும் இது போன்று பொதுவாக கூறுகின்றார்கள் இது சரியில்லை அதெல்லாம். 

குருநாதர்

 அப்பனே, எதை என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது சொன்னேன் அல்லவா? அப்பனே, மனிதனின், அப்பனே, பின் பாவம் அதிகப்படுத்த வேண்டும். 

அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இதனால் இறைவன் நடத்தும் லீலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

 கிருஷ்ண அவதாரத்தை பார்.  

அடியவர்

சரிங்க ஐயா


குருநாதர்

அப்பனே, பின் உனக்காக அடுத்தடுத்து, பின் பிரார்த்தனை கூடங்களில் யான் இதை உரைக்கின்றேன். அப்பனே, அப்பொழுதுதான் வலிக்கும். 

 இதை பத்தி, அப்பனே, இன்னும் எவை என்று உரைப்பேன். எதை என்று கூற, அப்பனே.




  இதன்பிறகு குருநாதர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடியவருக்கு உரைத்த வாக்கு


இந்த அடியவரோடு ஒரு குழுவாக இணைத்துக் கொண்டு பயணிக்கும் பக்தர்கள் குழுவினருக்கு குருநாதர் உரைத்த வாக்கு



அப்பனே, எம்முடைய ஆசிகள், அப்பனே, குறையில்லை, அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒரே குறை, 

குறை எது என்று புரிய, அப்பனே, அனைத்தும் முன்னோர்களால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று அறிய,

 அதனால்தான், அப்பனே, நல்விதமாக, எம்முடைய பின் ஆசிகள்


 சில, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சிலவற்றை எடுத்துக் கொண்டாலும், அப்பனே, சில வகைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பின் எவை என்று கூற, அப்பனே, இருப்பவர்கள் எல்லாம், அப்பனே, சில வழிகளில், சில தீய சக்திகளும் தாக்கி இருக்கின்றது, அப்பா. 


இதனால், அப்பனே, அதனால்தான், அப்பனே, பொறுத்திரு, 

அங்கு செல், இதை செய், அதை செய் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, சொல்லிக்கொண்டே, பக்குவங்களை வளர்த்துக் கொள்ள, எவை என்று புரிய, அப்பனே,



 இதனால், அப்பனே, இவர்கள் எதை என்று, அப்பனே, கடுமையான எதை என்று புரிய, அப்பனே, சில, அப்பனே, மாய வித்தைகளிலும் சிக்கிக்கொண்டு, சிக்கிக்கொண்டு,


 இதனால்தான், அப்பனே, மெதுமெதுவாக, அப்பனே, பின் எவை என்று அறிய, யான் எடுத்து வருகின்றேன், அப்பனே, 


அதனால், பொறுத்திருந்தால், இன்னும் நலன்கள் ஆகுமப்பா.


 அது மட்டுமில்லாமல், அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், விவரமாக,


 இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது ஒன்றை உன்னை பார்த்து கேட்கின்றேன், அப்பனே,


 எதை என்று, அப்பனே, எதை, அனைவருக்கும் இது பொருந்தாது என்பேன், அப்பனே,


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, நீயும் கேட்டுக்கொண்டே இருக்கின்றாய்,

 பின் அனைவருக்கும் எவை என்று கூட, வாக்குகள் வேண்டும் என்று, 


ஆனாலும், இப்படியே, எதை என்று, அப்பனே, ஒரு மருத்துவரிடம், நிச்சயம் தன்னில் கூட, பின் எனக்கு உடம்பு, பின் அதாவது சரியில்லாமல், எவை என்று, பின் இருக்கின்றது,


 நீங்கள் அங்கிருந்தே, நிச்சயம் தன்னில் சரி செய்யுங்கள் என்று,

 நிச்சயம், அப்பனே, பின் எவை என்று கூற, பின் இவ்வாறு செய்யலாமா???? என்ன!?!?!?


தொலைபேசியில் குருநாதர் வாக்கினை கேட்கும் அடியவர்

  குருவே தவறுதான் அப்படி செய்யக்கூடாது செய்யக்கூடாது, 


குருநாதர்

 அப்பனே, இதனால், ஒரு எவை என்று கூட, அமாவாசை எது என்று முடியட்டும், அப்பனே, அனைவரும் யாருக்கு வாக்குகள் பின் வேண்டுமோ, அவர்கள்தான் வரவேண்டும்  சொல்லிவிட்டேன்.


 ஏனென்றால், எவை என்று கூற, பின் இவர்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, அவரவர்களே, அப்படி புரிந்து கொண்டால் மட்டுமே, அவர்களுக்கு பயம், அப்பனே, பின் நிச்சயம் வரும், அப்பா, 

செய்வார்கள், அப்பா,


 இல்லையென்றால், அப்பனே, ஏதோ ஒன்றை, எதை என்று புரிய, அப்பனே,


 இதனால், அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே, அவர்களுக்கும், அப்பனே, பல வகையில் கூட, எவை என்று, அப்பனே, பின் நீ கேட்பவர்களுக்கு, எவை என்று கூட, சில ஏவல் நிலைகள் தாக்கி, எவை என்று புரிய, அப்பனே,

 ஏவல் நிலைகள் என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எப்படி மனிதனாலும் கூட, எவை என்று கூட, எண்ணியதே, அப்பனே, தீய, அப்பனே, மனதில், பின் எவை என்ற தீயவை, பின் நினைப்பதே, ஒரு ஏவல் நிலைதான் என்பேன், அப்பனே


, இதனால், அப்பனே, குற்றங்கள் இல்லை, குறைகள் இல்லை,


 அப்பனே, ஒவ்வொருவருக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, யான் சொல்லி, இதை நிறைவேற்றி, எதை என்று கூட, அப்பனே, இன்றைய நாளில், எவை என்று புரிய, அப்பனே, எம்முடைய ஆசிகள், அப்பனே,

 பின் ஏக  ஒன்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஆசிகளை கூட, அப்பனே, பின் எதை என்று புரிய, பின் நாராயணன் பரிபூரண ஆசிகளோடு, அப்பனே, நிச்சயம் இருக்கின்ற பொழுது, அப்பனே, பின் நேரடியாக உரைக்கின்றேன், அப்பனே, 


பின் எவருக்கு கேட்க வேண்டுமோ??, அப்பனே, நிச்சயம், பின் எவை என்று கூற, அவன் அங்கு இருக்கின்றான், இவன் இங்கு இருக்கின்றான், எதை என்று கூற பின், அவனுக்கு சொல் என்றெல்லாம், பின் இவை தன், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற,

 அதனால்தான், அப்பனே, பின் அடிப்படை எவை என்று அறிய அறிய அப்பனே, பின் நிச்சயம் தன் ஞானங்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான், அப்பனே, 

அங்கு செல்க, இங்கு செல்க என்றெல்லாம், அப்பனே, 


அப்பனே, பின் சென்ற இடங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் அருளும் வாங்கி தந்து கொண்டே இருக்கின்றேன், அப்பனே, 


இதனால், அப்பனே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,


 இதனால், அப்பனே, யாருக்கு கேட்க வேண்டுமோ???, யாருக்கு வாக்குகள் வேண்டுமோ???, அவர்கள் நேரடியாக வரச் சொல், அப்பனே,

 சரி செய்து விடுகின்றேன், அப்பனே, நலங்களாக!!
 அனைத்தும்!!!

 , அப்பனே, அனைத்து அனைவரையும் ஏன்? எதற்கு, அப்பனே, பின் எவை என்று கூற, பின் அனைவரையும் அழைக்கின்றாய் (ஆலயத்திற்கு யாத்திரை செல்வதற்கு) அல்லவா?

 அதேபோல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய,

அப்பனே ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறையுடன் தான் இருக்கின்றார்கள், என்பேன், அப்பனே,


 இவையெல்லாம் எப்படி? வந்தவை என்பவை எல்லாம், அப்பனே, யான் அறிவேன், அப்பா,

 



 அப்பனே, இதனை எப்படி?? போக்குவது என்பது எல்லாம் யான் அறிவேன், அப்பனே,


 நிச்சயம் தன்னில் கூட கவலை வேண்டாம், என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவருக்கும், அப்பனே, பின் ஒவ்வொரு வினையும் எதை என்று அறிய, அப்பனே, வினை என்பது, அப்பனே, பின் முன்வினையா,??? அப்பனே, பின் இப்பொழுது வினையா???

, அதாவது வாழ்ந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு இருக்கும் இடத்தில், அப்பனே, பின் வினையா??? என்பதை எல்லாம் அழகாக எடுத்திருக்கின்றேன். அவரவர் பிழைக்கட்டும், என்பேன், அப்பனே, நலமாக எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே,



 ,அப்பனே, எதை என்று கூற, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, இங்கிருந்து, அப்பனே, பின் அதாவது நீ கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா? நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, பின் அதாவது அனைவருக்கும் வாழ்வாதாரத்தை, நிச்சயம் தன்னில் கூட, அதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் நாராயணனிடம் இருந்தே சொல்கின்றேன், அப்பனே,

 அனைவருக்கும் நிச்சயம் தன்னில் கூட, பணம், அப்பனே, வரும், அப்பா,

 நன்றாக, அப்பனே, புண்ணியங்கள் செய்யச் சொல்,

 அப் புண்ணியத்தின் வழியாகத்தான், அப்பனே, ஏவல் நிலைகள் எல்லாம் தீர்த்துக்கொள்ள முடியும், அப்பனே,

 அதனால்தான், அப்பனே, புண்ணியம் பெருக்கினால், யான் நேரடியாக வருவேனப்பா, சொல்வேனப்பா,

 நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நீங்கள் எப்படியோ எதை என்று, அப்பனே, பின் எப்படி மனதை வைத்திருக்கின்றீர்களோ, 

அப்படித்தான், அதேபோலத்தான், அப்பனே, யாங்களும் வாக்கை சொல்ல முடியும், என்பேன், அப்பனே, 

நீ எவை என்று கூற, அப்பனே, பின் அதாவது அலைபேசியிலே, அப்பனே, கேட்டால், யானும் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, அப்பனே, பின் அதற்கு ஒரே எவை என்று கூற, பின் நீ எப்படி கேட்கின்றாயோ, அதற்கு தகுந்தவாறுதான் பதில் அளிப்பேன், சொல்லிவிட்டேன்.


  அப்பனே, ஓரளவு, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, எது என்றெல்லாம் அடிபட்டவர்கள் தான் உன்னிடத்தில் இருப்பவர்கள் எல்லாம், என்பேன், அப்பனே


 அப்பனே, இதனால்தான், அப்பனே, இன்னும் ஞானங்கள் கொடுக்கின்றேன், அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே, 

எது என்று புரிய, அப்பனே, அதனால் சொல்லிவிட்டேன், அப்பனே, நாளை பொழுதில், நிச்சயம், பின் அதாவது தூரத்தில் சென்றுவிட்டால், என் நண்பன் என்றெல்லாம் சொல்லக்கூடாது, என்பேன், அப்பனே,



  அப்பனே, ஏனென்றால், அப்பனே, நிச்சயம் சொல்லுகின்றேன், அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் சொல்கின்றேன், உனக்கு இது, இதுபோல் கேட்டால், உனக்குத்தான் பாவம், சொல்லிவிட்டேன்,


அடியவர் அமாவாசைக்கு குருநாதர் மந்திர உபதேசம் வருகின்றேன் என்று சொல்லியிருந்தார் ஐயா



  அப்பனே, எதை  என்று கூற, அப்பனே, இன்னும் வரவில்லை, அமாவாசை




அடியவர் குருநாதருடைய அருளால் யாத்திரைகள் நல்லபடியாக செய்து கொண்டே இருக்க வேண்டும்




  நிச்சயம் உண்டு, என்பேன், அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் புண்ணியத்தை பெருக்கினாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவர்களும் நன்றாக இருக்கலாம், அப்பனே, பின் இவர்களை சார்ந்து, அப்பனே, பின் அவர்களும் (அவர்கள் குடும்பத்தினர் நன்றாக இருக்கலாம், சொல்லிவிட்டேன்.



   அப்பனே, எதை என்று, அப்பனே, எவை என்று, ஏன், எதற்காக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இன்றளவு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சாதத்தை இட சொன்னேன் என்பதற்கும் கூட, அப்பனே, அதற்கும் அர்த்தங்கள் உண்டு, அப்பனே,


 ஒவ்வொருவருக்கும் எது என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏவல் நிலைகள் எதனால் என்பதை எல்லாம், அப்பனே, அதை சரி செய்து கொள்ள, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ் நேரத்தில் கூட, பின்  அப்பனே, நிச்சயம் தன்னில் ஏகாதாசி, எவை என்று, அப்பனே, இன்றைய தினத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே, நாராயணனுக்கோ அல்லது, அப்பனே, எத் தலங்கள் ஆயினும் சரி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, பின் அதாவது சமர்ப்பித்தால், திருத்தலத்தில், என்பேன், அப்பனே,


 நிச்சயம் தன்னில் கூட,  அவைதன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் , ஏகாதசி அன்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, அப்பனே, மிக உயர்ந்த ஆற்றல்கள், அப்பனே, பின் வந்து கொண்டே இருக்கும், என்பேன், அப்பனே, பின் திருத்தளங்களுக்கு, என்பேன், அப்பனே,


 அதாவது நிச்சயம் அன்றைய காலகட்டத்தில், அப்படித்தான், அப்பனே, நிச்சயம், பின் எவை என்று, திருத்தலத்தில் அமைத்தார்கள், என்பேன் அப்பனே.

(ஏகாதசி நாள் அன்று பெருமாள் கோயில்கள் அல்லது மற்ற திருத்தலங்கள் எதுவாயினும் சரி எலுமிச்சை சாதத்தை அன்னதானமாக அனைவருக்கும் வழங்கலாம் ஏகாதசி தினம் அன்று திருத்தலங்களுக்கு உயர்ந்த ஆற்றல்கள் வந்து கொண்டே இருக்கும் இப்படி செய்யும்பொழுது அந்த ஆற்றல்கள் நமக்கும் கிடைக்கும் என்று குருநாதர் கூறுகின்றார்.)



 இதனால், அப்பனே, நிச்சயம் எலுமிச்சை சாதத்தை கொடுக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தீய சக்தி என்ன ???என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒரு மின்சாரம் போல்தான், என்பேன், அப்பனே, அவை ஈர்த்து, அப்படியே செல்லும், என்பேன்,

 அப்பனே, இதனால்தான், அப்பனே, கொடுக்கச் சொன்னேன், அனைத்திலும் விஷயம் இருக்கின்றது, என்பேன், அப்பனே,

 மனிதனுக்கு தெரியவில்லை,


 வருங்காலத்தில் எடுத்திருக்கின்றேன், ஆசிகள்,

அப்பனே, அனைத்தும் சொல்கின்றேன், அனைவருக்கும், என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடியவர் சிலருக்காக குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது

அப்பனே, பின் அவருக்கு சொல்!, இவருக்கு சொல்! என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், பின் எதில் கேட்கக்கூடாது, சொல், நீயே!!!

(வாக்குகளை அலைபேசியில் கேட்கக் கூடாது நேரடியாக வந்து குருநாதர் முன்பு அமர்ந்து கேட்க வேண்டும்)

அப்பனே, எம்முடைய ஆசிகள் நலமாகவே வெற்றி உண்டு ஆசிகள் ஆசிகள்.

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குகள் கேட்ட அடியவருக்கு சுவடி ஓதும் ஜானகிராமன் ஐயா குருநாதர் அனைவரையும் உங்கள் குழுவினர் அனைவரையும் நேரடியாக வரவழைத்து ஓரிடத்தில் வாக்குகள் தரப் போகின்றார் ஐயா இப்பொழுது ஆசிர்வாதம் செய்து விட்டார் அதனால் உங்கள் குழுவினருக்கு நேரடியாக வாக்குகள் கிடைக்கும் ஐயா என்று தெரிவித்தார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment