அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 4
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
===========================
# புதனின் ஆசிகள் - கன்னி ராசி , மிதுன ராசி
===========================
குருநாதர் :- எது என்று அறிய பின் அடுத்து எவை என்று புரிய நிச்சயம் தனில் புதனின் ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தும்… ராசி படிதான் கொடுத்தார்… புதனின் ஆசிகள்னா கன்னி அப்புறம் வந்து மிதுனம்.
( கன்னி ராசி , மிதுன ராசி அடியவர்களை அழைத்தார்கள் )
குருநாதர் :- எது என்று புரிய அப்பனே அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்தும்
குருநாதர் :- அப்பனே எது என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுதே கேட்கக்கூடாது. அனைவருக்கும் சந்தர்ப்பத்தை தருகின்றேன் கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் சந்தர்ப்பத்தை தருகின்றேன்
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய கவலை வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்கள் அனைவருக்குமே நிச்சயம் பின் சந்தர்ப்பத்தை தருகின்றேன் அப்பனே. நீங்களே கேளுங்கள் உங்களுக்கு என்ன தேவை என்று ஆனாலும் யோசித்து கேட்க வேண்டும். சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் நீங்க கேளுங்க கேளுங்கம்மா
அடியவர் 13 :- ( இவ் அடியவருக்கு தனிப்பட்ட வாக்குகள் வழங்கினார்கள் )
குருநாதர் :- தாயே எவை என்று புரிய கவலைப்பட தேவையில்லை எது என்று புரிய அனைத்தும் அறிந்திருக்கின்றேன் எதை விதி தன்னில் கூட………………………………………………………………………………………………………………………………………………
(விதி ரகசியங்கள்)
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
சுவடி ஓதும் மைந்தன் :- பிரம்மா இந்த நேரத்துல என்ன பண்ணிருக்காருன்னா…………………………………………………………………………………………………………………
(விதி ரகசிய விளக்கங்கள்)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
===========================
# திருமணம் - சொர்க்கமா அல்லது நரகமா ?
===========================
குருநாதர் :- கவலை வேண்டாம் தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. பின் ஏது என்று புரிய இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது தான் சொன்னேன். சரியான பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூறப்பின் திருமணங்கள் நடந்தாலே சொர்க்கமும், நரகமும் இங்கே காணப்படும்.
அடியவர் 7 :- ( அடடடா என்று பரிதாபப்பட்டார் )
சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்டா சொர்க்கம், நரகம் எங்க வந்தாகுது? ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ சரியான ஒரு மனைவி வந்து… இப்ப வந்து ஒருத்தருக்கு வந்து மனைவி வராங்களா? சரியான மனைவி வரணும். இல்லனா வந்து அந்த இப்ப ஒரு பொண்ணுக்கு வந்து சரியான கணவன்… கணவன் வரணும். அப்படி வந்தால் மட்டும்தான் சொர்க்கம். சொர்க்கம் இல்லைன்னா அந்த திருமணமே என்ன ஆகும்? நரகமாக போய்விடும்
===========================
# கலியுகத்தின் திருமணங்கள் எப்படி விதிக்கப்பட்டது?
# 10% திருமணங்கள் சொர்க்கம்.
# 90% திருமணங்கள் நரகம்
===========================
குருநாதர் :- தாயே கலியுகத்தில் 90% நரகமாகத்தான் போக வேண்டும் என்பது விதி.
அடியவர் 9 :- விதி
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப 10% தான்மா… 10 பேர். அப்ப 10 பேர்தான்… 10% தான்…. 100க்கு 90 வந்து… அப்ப அதனால்தான்…
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் இறைவனே சில உண்மையானவர்களை நிச்சயம் தன்னில் கூட பின் தாமதப்படுத்தி செய்கின்றான்
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் வந்து.. சில நல்லோர்களுக்கு வந்து… திருமணம் வந்து இறைவனே டைம் எடுத்து… கல்யாணம் பண்றார் வந்து.. புரியுதாம்மா ?
…………………………………………………………………………………………………………………………………………………
(தனி வாக்குகள், விளக்கங்கள், உரையாடல்கள்….. )
…………………………………………………………………………………………………………………………………………………
===========================
# தொடர்ந்து பல ஈசன் ஆலயங்களுக்கு சென்று கொண்டே இருக்க , அனைத்தும் தானாகவே நடக்கும்.
===========================
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நல்விதமாகவே எவை என்று கூற பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் பல ஈசன் ஆலயங்களுக்கு சென்று கொண்டே நிச்சயம் தன்னில் கூட. இவைதான் உன்னுடைய வேலையே எது என்று புரிய அனைத்தும் தானாகவே நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சில ஈசன் ஆலயங்களுக்கு சென்று கொண்டே இருக்கணும் நீங்க வந்து அது மாதிரி சென்று கொண்டே இருந்தா என்ன ஆகும் வந்து தானாகத்தான் நடக்கும் நடக்கும் நடக்கும்
அடியவர் :- எது நடக்குமோ அது நடக்கும்…
குருநாதர் :- தாயே பின் மீண்டும் சொல் இதனை எல்லாருக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் சொல்லும்மா ?
அடியவர் 13 :- ஈசன் ஆலயத்துக்கு போயிட்டே இருந்தா எது நடக்கணுமோ அது இறையருளால் நடக்கும்.
===========================
# அவரவர் விருப்பப்படி அவரவர் ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டே இருந்தாலே நிச்சயம் எது நடக்குமோ அது நடக்கும்.
===========================
குருநாதர் :- தாயே எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அவரவர் விருப்பப்படி அவரவர் ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டே இருந்தாலே நிச்சயம் தன்னில் எவை இருந்தாலும் பின் நிச்சயம் தன்னில் எது நடக்குமோ அது நடக்கும். மீண்டும் கூறு அனைவருக்கும்.
அடியவர் 13 :- அவங்க அவங்க இஷ்டப்படி அவங்க அவங்க இஷ்ட தெய்வத்தை கும்பிட்டுட்டு இருந்தாலே.. எது விதியில எழுதி இருக்கோ.. எது கடவுள் நினைக்கிறாரோ… அதுபடி எது நடக்கணுமோ.. அது நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா ?
குருநாதர் :- தாயே எது என்று கூறப்பின் நீ கேட்டாலும் எவை என்று கூறப்பின் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இறைவன் கொடுப்பானா என்ன? அனைவரும் கேளுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் கேளுங்கள் அனைவரும் கேளுங்கள் என்றார்
அடியவர் 13 :- நீ கேட்டா மட்டும் கடவுள் எல்லாத்தையும் கொடுத்துருவாரா?
அடியவர் 9 :- கடவுள் விருப்பப்பட்டால் தான்…
===========================
# எப்போது மெய்ப்பொருளை, இறைவனை மனிதன் உணர ஆரம்பிப்பான் ?
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் என்றால் நீங்கள் எவை என்று கூற கடவுளின் குழந்தைகள். இதனால் பின் அவன் விரும்பியதுதான் அவன் கொடுப்பான். ஆனால் மனிதனோ பின் யான் விரும்பி நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். எப்படி அப்பா ?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மனிதன் என்ன? நான் விரும்பியது நடக்கணும் என்று நினைக்கிறான்.
அடியவர் :- கோயிலுக்கு போன நடந்துருமான்னு கேக்குறாரு ஐயா
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? அப்ப ஒரு பாதை போட்டு இருக்காரு.
அடியவர் 13 :- அதுலதான் கூட்டிட்டு போவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுலதான் கூட்டிட்டு போவார்… ஒவ்வொருக்கும் ஒரு பாதை. அதுதான் கூட்டிட்டு போவார். அதை மீறி ஒன்னும்….
அடியவர் 7 :- அதுக்குள்ள வயசாகிடுதே…
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட இதை உணர்வதற்கே நிச்சயம் இவன் சொன்னானே 60, 70 ஆண்டுகள் ஆகிவிடுகின்றது..
சுவடி ஓதும் மைந்தன் :- யாரு? நீங்க சொன்னீங்க பாருங்க.. இறைவன் தான் நம்மளை எல்லாரும் நடத்தாருன்னு தெரியும்…. அதுதான் அதுதான் அப்படி (60, 70 ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.. )
===========================
# வாழ்க்கை என்பது என்ன?
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை என்பது என்ன கூறு?
அடியவர் :- வாழ்க்கைன்னா போராட்டம்தான்
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கைன்னா வாழ்க்கை என்பது என்னன்னு கூறுன்றார்
அடியவர் 14 :- வாழ்க்கை என்பது இருக்கிற வரைக்கும், யாருக்கும் எந்த துக்கமும் பண்ணாம, சந்தோஷமா வாழணும். மத்தவங்களையும் நம்ம சந்தோஷப்படுத்தணும்.
குருநாதர் :- அப்பனே எதை என்று அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே நீ முதலிலே ஒரு 16 வயதில் நினைத்திருந்தால்…. அப்பனே இப்பொழுது… அப்பனே பின் எவை என்று புரிய.
அடியவர் 14 :- அப்பதானே நமக்கு வந்து மைண்ட் ஒர்க் ஆகுது
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய நிச்சயம் யான் சொல்கின்றேன். 60, 70 உன் வயதை நீ சொன்னாயே… அதையே நான் திரும்பி சொல்கின்றேன்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ கூட ஒர்க் ஆகாது. 20 30 வயசு கூட ஒர்க் ஆகாது வந்து…. 60 70 அப்பதான் வொர்க் ஆகும் என்றார் வந்து
===========================
# வாழ்க்கை எனும் போராட்டங்கள்…
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே அனைவருக்கும் அப்பனே போராட்டமாகத்தான் வாழ்க்கை… அப்பனே நிச்சயம் திருமணம் இல்லை… மீண்டும் குழந்தைகள் இருந்தால் எவை என்று அறிய மீண்டும் பின் படிப்பு எவை என்று அறிய தொழில் எவை என்று புரிய இன்னும் பின் எவை என்று புரிய இன்னும் பின் பிள்ளைகள் இன்னும் இன்னும் எதை என்று புரிய இதனால் பின் எவை என்று புரிய இதனை ஏற்கனவே முன்னுரைத்து விட்டேன்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை சொல்லிட்டாரு.. மனசு… படிக்கணும் அப்புறம் பிள்ளை பிறக்கும்… அதனால கஷ்டம் அதான் அன்னைக்கு சொன்னாரு கூட்டுப்பிரார்தனையில் வந்து அடுத்து அது ஏற்கனவே சொல்லிட்டாரு கூட்டுப்பிரார்தனையில் அதுக்கு முன்னாடியே சொன்னாரு… நான் எக்ஸ்பிளைன் பண்ணேன்.. அப்புறம் வந்து எனக்கு வந்து பேரப்பிள்ளைங்க… அதுவிட கஷ்டம்… அப்படியே என்ன ஆகும்? வாழ்க்கை போயிட்டே இருக்கும்..
===========================
# எப்போதும் இன்பமாகவே வாழ்வது எப்படி ?
===========================
குருநாதர் :- ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட இன்பமும் துன்பமும் எவை என்று கூற பின் மூளை தன்னில் கூட பின் ஒரு பக்கம் துன்பம். ஒரு பக்கம் இன்பம். அதை பயன்படுத்திக் கொள்வது நீங்களே
சுவடி ஓதும் மைந்தன் :- மூளை தன்னை இருக்கு?
அடியவர் 7 :- ஒன்னுதான்
சுவடி ஓதும் மைந்தன் :- யார் சொன்னது
அடியவர் 9 :- மூளை ஒன்னுதான் வலது பக்கம் இடது பக்கம்
சுவடி ஓதும் மைந்தன் :- அதான் அதுதான் சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு பக்கம் இன்பம்.
அடியவர்கள் :- ஒரு பக்கம் துன்பம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு பக்கம் துன்பம். அதை நீங்க இன்பமாக்கிக் கொள்வதும்….
அடியவர் :- துன்பமாக்கிக் கொள்வதும்
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பமாக்கிக் கொள்வதும் எதுல இருக்குது?
அடியவர் :- நம்மகிட்ட தான் இருக்குது
சுவடி ஓதும் மைந்தன் :- மூளையில தான் இருக்குதுன்றார் வந்து.
குருநாதர் :- அதில்தான் நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு சிறிய மென்பொருளை பொருத்தி உள்ளான்.
சுவடி ஓதும் மைந்தன் :- மென்பொருளை என்னது? சிப்பு… சாப்ட்வேர்… அங்கதான் என்ன பண்ணிருக்காரு வந்து?
அடியவர் :- சொருகி வச்சிருக்காரு
சுவடி ஓதும் மைந்தன் :- சொருகி வச்சிருக்காரு
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கதான் வந்து… ஒரு பக்கம் இன்பம். ஒரு பக்கம் துன்பம்.
===========================
# எப்போதும் இன்பம் பெரும் ரகசிய வாய்ப்பாடு / சூத்திரம்.
===========================
1. அறிவு வைத்து புண்ணியம் செய்தல். புண்ணியத்தின் மூலம் இன்பம் அடைதல் ….இன்பத்தின் மூலம் மீண்டும் அறிவை சரியாக பயன்படுத்தி
2. மீண்டும் முதலாம் புள்ளிக்கு செல்க மேலே…..
===========================
குருநாதர் :- அதை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ வாழ்க்கையில் எப்பொழுதும் இன்பத்தை காண்கின்றான். யார் ஒருவன் சரியாக பயன்படுத்தவில்லையோ வாழ்க்கையில் முழுவதும் துன்பத்தை காண்கின்றான்.
அடியவர் :- புண்ணியம் என்ற சாப்ட்வேரா ஐயா?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே அதற்கும் தனியாக ஒன்று உள்ளதப்பா. நிச்சயம் எவை என்று புரிய அப்பனே இவ் மென் பொருள் என்பது அறிவு யான் இங்கு குறிப்பிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு என்ற சாப்ட்வேர்.. இங்க ஒன்னு
அடியவர் :- அறிவை பயன்படுத்தினா இன்பம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்பம். அறிவை நம்ம சரியா பயன்படுத்தனும் அம்மா.
அடியவர் :- அறிவை பயன்படுத்தினா புண்ணியம் பண்ணலாம். அறிவை பயன்படுத்தாம இருந்தா புண்ணியம் பண்ணாம இருப்போம்.
அடியவர் :- அப்ப இன்பம் துன்பம்னு சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? புரியுதுங்களாமா?
அடியவர் 6 :- புரியுது
அடியவர் :- அறிவுதான்….
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு வந்து சரியா பயன்படுத்தணும் அறிவை பயன்படுத்தலைன்னா?
குருநாதர் :- பின் அத் துன்பம் வந்துவிட்டால் இறைவனிடத்தில் ஓடுவது..
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பம் வந்துவிட்டால்
அடியவர் 10 :- இறைவனிடத்தில்
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனிடத்தில் ஓடுவது
குருநாதர் :- இன்பம் வந்துவிட்டால் எங்கேயோ ஓடுவது
அடியவர் :- இன்பம் வந்துவிட்டால் இறைவன் கிட்ட ஓடணும்…
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பம் வந்துவிட்டால் மட்டும் இறைவன் கிட்ட வேற இங்க
அடியவர் :- இன்பம் வரும்போது இறைவன்ட்ட போகணும்
சுவடி ஓதும் மைந்தன் :- இன்பம் வரும்பொழுது இறைவன்ட்ட போறது இல்லையே….. எங்கேயோ ஓடுகிறீர்கள்
குருநாதர் :- மீண்டும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட மீண்டும் திசை திருப்புவான் எவை என்று அறிய இறைவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் இன்பம் நீங்க கிடைத்தா என்ன பண்ணுவாரு இறைவன் ? போயிட்டு வாடா கண்ணா…. அப்படின்னு சொல்லிட்டு போயிட்டு திருப்பி என்ன பண்ணுவாரு?
அடியவர் :- துன்பத்தை கொடுப்பார்
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பத்தை கொடுத்து கொடுத்து…
===========================
# யாத்திரை குழுவினர் அனைவரின் வெற்றி…
# இறை ஆசிகள் பலமாக பெற்றுள்ளார்கள்….
===========================
குருநாதர் :- தாயே நலங்கள். கவலைகள் வேண்டாம் நல்விதமாக எம்முடைய ஆசிகள் இருக்கின்ற பொழுது அனைவருக்கும் என்னென்ன செய்ய வேண்டுமோ நிச்சயம் செய்வேன். ஏனென்றால் இறை ஆசிகள் பலமாக பெற்றுள்ளீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோருக்கும் இறை ஆசிகள் பலமாக இருக்கிறது
அடியவர்கள் :- ( சந்தோசத்தில் பலத்த கைதட்டல்கள்…… )
குருநாதர் :- அறிந்தும் கூட ஆனால் ஏன் நடக்கவில்லை என்றும் கேள்வி கேட்டு விடாதீர்கள்
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….. )
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இவ்வளவு இருந்தும் ஏன் நடக்கல மட்டும் கேட்காது…. காது கேட்காது
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….. )
…………………………………………………………………………………………………………………………………………………
( ஒரு அடியவருக்கு தனி வாக்குகள், விளக்கங்கள், உரையாடல்கள்….. )
…………………………………………………………………………………………………………………………………………………
===========================
# எஃது வயிற்றுக்கும் வாயிற்கும் சோறு?
===========================
குருநாதர் :- தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் வயிற்றுக்கும் நிச்சயம் தன்னில் கூட பின் வாயிற்கும் அதுதான் சோறு…
சுவடி ஓதும் மைந்தன் :- எது சோறு?
அடியவர்:- இறைவன் நினைப்பது
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் நினைப்பது … இறைவன் பாடுறவங்க பாருங்க…. அது என்னது வந்து உங்க வயிற்றுக்கு சாப்பிடுறதுதான்… உன் வாய்க்கு வந்து… வாய்க்கு
அடியவர் 12 :- 24 ஹவர்ஸ் அதுதான் நினைப்பா இருக்கனும்….
குருநாதர் :- தாயே பல வித்தியாசங்கள் உண்டு. இதனால் நிச்சயம் தன்னில் சிறு சிறுதாகத்தான் எடுத்துரைக்க முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பல நிறைய ஞானங்கள் இருக்கின்றது வந்து… அதனால சிறு சிறுசாதான்… நம்ம வந்து இப்ப எடுத்துரைக்கணும்ன்றாரு வந்து…
குருநாதர் :- தாயே இதனால் கவலை வேண்டாம் நல்முறையாகவே அனைத்தும் மாற்றித் தருகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவும் கவலைப்பட தேவையில்லை எல்லாமே மாற்றித் தருகின்றேன்
===========================
# புண்ணியங்கள் அவை மீண்டும் பாவம் ஆக்கக்கூடாது
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட சித்தனின் பின் எவை என்று கூறப்பின் சித்தன் அருகே வந்துவிட்டால் எது என்று கூறிய நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் அவை தன் மீண்டும் பாவம் ஆக்கக்கூடாது. அதனால்தான் இறைவன் சில காரியங்கள் பின் நிச்சயம் மெதுவாக செய்கின்றான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? சித்தரிடம் வந்துவிட்டாலே சில புண்ணியங்கள் இருக்குது. ஆனால் திருப்பி அது வந்து பாவம் ஆக்கிக்கூடாது. அதனாலதான் நான் வந்து அதை நீங்க கழிச்சே…. நீங்க வந்து… புண்ணியம் புரியுதுங்களா எப்படின்னு?
அடியவர்கள் :- புரியுது
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து புண்ணியங்கள் இருக்குது எல்லாருக்குள்ளயும் வந்து. ஆனால் பாவம் சேரக்கூடாது. பாவம் சேரக்கூடாது என்பதற்காக உங்களுக்கு என்ன பண்றாரு? அந்த கஷ்டத்தினாலேயே நீ வந்து எல்லாம் தெரிஞ்சுக்க கூடாதுன்னு சொல்லிட்டு புரியுதுங்களா?
அடியவர்கள் :- புரியுது
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் இறைவன் இருக்கு அந்த கஷ்டத்தை…. கொடுக்கிற கஷ்டத்தின் மூலமா….
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment