​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 18 August 2026

சித்தன் அருள் - 2281 - அறிவுரை வாக்கு!


சித்தர்கள், முக்காலத்தையும் அறிந்தவர்கள். ஞானிகள். இறைவனை பிரார்த்தனை செய்தும் நற்காரியம் எதுவும் பெறாத/நடக்காத பக்தர்கள் பலர்,  இவர்களை நாடி வந்து, இவர்கள் மூலம் நன்மை பெற்றவர்கள் ஏராளம்.  இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்" என.

இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள்.  இப்படி அவர்கள் எழுதி வைத்த ஓலை சுவடிக்கு பெயர் தான் "நாடி". நம் பிரச்சனைகளை தீர்க்க நாம்தான் சித்தர்களை தேடி போகவேண்டும்.  அவர்களாக வரமாட்டார்கள்.

இப்படி இவ்வுலகுக்கு வந்த அருளை, மனிதர் நாடி சென்றுதான் அருள் வாக்கு பெற வேண்டும்.  

உரைத்தவர்: அகத்தியர் மைந்தன், திரு.ஹனுமந்த தாசன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment