அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 9
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
………..
………..
………..
( பகுதி 8 அதன் தொடர்ச்சியாக ….)
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் எவை என்று புரிய அறியும் கூட எவை என்று அறிய அறிந்து நிச்சயம் தன்னில் கூட சில வகைகளில் யில் யானே செய்கின்றேன். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சில வழி வகையில் உங்களுக்கு என்ன தேவையோ… நானே செய்து தரேன். கேளுங்க ஐயா… சந்தர்ப்பம் வருது…
அடியவர் 3 :- இஷ்ட தெய்வமும் குருநாதரும் கூடவே இருந்தாங்க….
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் எம்முடைய ஆசிகள் இருந்தால்தான் இங்கு வந்திருக்கின்றாய் அப்பனே.
அடியவர் 3 :- நான் என்ன செய்யணும் ஐயா நான் என்ன செய்யணும்
குருநாதர் :- அப்பனே செய்து கொண்டிரு செய்து கொண்டிருப்பதை சிறப்பாக செய். பின்பு பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன செஞ்சு கொண்டிருக்கிறதோ… அதை நீ சிறப்பாக செய்… சில இதுகள் பார்ப்போம்.
குருநாதர் :- சில எது என்று கூட சில தடுமாற்றங்கள் விதியில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் எவை என்று புரிய சில பிரச்சனைகள் எவ்வாறு என்பதை எல்லாம் பெண்ணின் மூலமாகவே எவை என்பதை இதனால் அப்பனே அதை தடுக்கின்றேன் முதலில்.
சுவடி ஓதும் மைந்தன் :- சில விஷயங்கள்ல வந்து இது சில இதுல எல்லாம் வந்து பிரச்சனை எல்லாம் வரப்போகுது. அதை நான் முதலில் தடுக்கின்றேன்.
குருநாதர் :- எதை என்று கூறப்பின் இவ்வாறு இதை தடுக்கவில்லை என்றால் பின் எதையும் கொடுப்பது பின் வீணை.
அடியவர் :- அந்த தடுக்காம (எதை கொடுத்தாலும் வீணே)
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல இதை தடுத்து எதை கொடுத்தாலுமே எதை கொடுத்தாலும் வீணே.
அடியவர் :- அவர் பயந்து இருக்கார்..
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து முதல்ல என்ன தடுக்கணுமோ… அதை தடுத்துறேன். அப்புறம் வந்து ஈஸியா நீங்க வந்து வர்றது.. ?
அடியவர் :- ( கொடுப்பாங்க )
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா?
===========================
# கருணைக்கடல் எடுத்துரைத்த விதியில் உள்ள உயிர் கண்டம்…..
===========================
குருநாதர் :- தாயே எது என்று புரிய இவள் தனக்கும் எவை என்று கூற பின், அறிந்தும் கூட பின் எவையாவது இவள் தன் ( ……விதியில் உள்ள உயிர் கண்டம்….. ) என்று. ஆனாலும் அதை காப்பாற்றுவதே எவை என்று கூறப்பின் எளிதல்ல. ஆனாலும் இவள் அடுத்து எவை என்று சென்று கொண்டிருக்கின்றாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னதான் சொல்றாரு. உன்னை ( ……விதியில் உள்ள உயிர் கண்டம்….. ) என்று ஏற்பாடு பண்ணிக்கிறாங்க. அதை காப்பாத்துறதுக்கே இறைவன் யோசிச்சுக்கிறாரு. நீங்க அடுத்த நிலைமைக்கு போறீங்களேமான்றாரு.
குருநாதர் :- இதனால் இதை முடிக்கட்டும். பின் நீ விரும்பியதை சுலபமாக கொடுத்து விடுவான் இறைவன்.
அடியவர் 14 :- ஐயா அது பண்ணிட்டு தான் இருக்காங்க… ………….
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்க எதுவுமே சொல்லாதீங்க நீங்க வந்து. ஓகேங்களா? இவர் வந்து சொல்லுவார். அதனால அதை தடுப்பதற்கு… அதை பார்க்கிறார்.
குருநாதர் :- ஏன் எதற்கு என்றால் விதியிலே இவை உள்ளது. இவை மாற்ற நிச்சயம் தன்னில் கூட, இவை மாற்றிட்டு அனைத்தையும் செய்து விடுவான்.
===========================
# கும்பாபிஷேகம் / ஆலயம் தொடர்பான கேள்வி….
===========================
அடியவர் 18 :- நவகிரகத்துக்கு மேல இருக்க கோபுரம் இதை எடுத்துட்டாங்க… தூணை… மறுபடியும் வச்சா வைக்க முடியல… இப்ப முந்தாநாள் தான் … அதனால அது இல்லாம இன்னைக்கு எல்லாம் பூஜை பண்ணி நாளைக்கு இது பண்ணிட்டு இருக்கேன். நவகிரகத்துக்கு மட்டும் மேல கோபுரம் இல்லாம இருக்கலாமா? உள்ளுக்குள்ள….
குருநாதர் :- தாயே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் மழை வந்தால் எதை என்று புரியாது அனைவரும் ஏன் குடை பிடிக்கின்றார்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- மழை வந்தால் ஏன் அனைவரும் குடை பிடிக்கின்றார்கள் ?
அடியவர்கள் :- மேலே போடணும்…
அடியவர் 18 :- மேலே போடணும் என்று சொல்றறாரா ?
அடியவர்கள் :- ஆமாம்…
குருநாதர் :- எது என்று அறிய போக போக நிச்சயம் பின் தெரியப்படுத்தும் எவை என்று மாற்றி விடுவார்கள். கவலை வேண்டாம்.
அடியவர் 18 :- கோவிலுக்குள்ளே இருக்கு அது…
சுவடி ஓதும் மைந்தன் :- போக போக என்ன பண்ணுவாங்க தெரியுங்களா அது எப்படின்னு சொல்லிட்டு யாராவது வந்து சொல்லுவாங்களாம். இப்படி பண்ணுப்பா இப்படி பண்ணுமான்னு சொல்லிட்டு அதை மாத்திரலாம்ன்றாரு ஒன்னும் பிரச்சனை இல்லை.
அடியவர் 18 :- இதை தூக்கும்போது யாராவது தூக்கி வைக்க முடியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இல்லமா. அது என்ன பண்றாங்கன்னா வந்து அது வந்து யாராவது ஒருத்தர் சொல்லி சொல்லி…. அது போக போக மாத்திடுவாங்க… என்ன பண்ணனும்… எது பண்ணனும்னு மாத்திடுவாங்க. பிரச்சனை மாத்திடுவாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஆனா போக போக மாத்திடுவாங்களாம்.
அடியவர் 18 :- அதை விழா நல்லா நடக்கணும் நடக்கணும் ஐயா
===========================
# கருணைக்கடல் எடுத்துரைத்த விதியில் உள்ள உயிர் கண்டம்….மீண்டும்
===========================
குருநாதர் :- எதை என்று புரிய தாயே இதனால் அமைதி காத்திருந்தால் நல்லதாகவே நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க கொஞ்சம் பொறுத்து தான் ஆக வேண்டும்மா சரிங்களா
அடியவர் 14 :- ஐயா இப்போ யாரோ ( ……விதியில் உள்ள உயிர் கண்டம்….. ) அளவுக்கு வந்துருக்காங்கன்னு சொன்னீங்க. ஐயா அது …….. என்று தெரிஞ்சுக்கலாமா?
குருநாதர் :- தாயே எவை என்று கூறப்பின் எவை என்று கூற பின் சொன்னால் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் வேண்டாம் இப்பொழுது அவ் விஷயம். மறந்துவிடு. ஈசனை நினைத்துக்கொள்.
சுவடி ஓதும் மைந்தன் :- தேவையில்லை
அடியவர் 14 :- கோவிலுக்கு வந்து காட்டு பகுதியில இருக்கு… கோவில் நம்ம வீடு தள்ளி இருக்கு…. என்னன்னா இன்னும் கோவிலுக்கு போயிட்டு வந்து பூஜை பண்ணி… ( மன கலக்கத்துடன் கேள்வி கேட்டார்கள் ….)
குருநாதர் :- எது என்று புரிய தாயே பின் கவலையில்லை ஈசன் துணை இருப்பான் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்கமா வந்து… அதனால ஏன் ஈசன் உங்களுக்கும் வந்து எதுவும் இது பண்ணலன்னா… கொஞ்சம் இழுத்துட்டு போறாருன்னா… உங்கள வந்து அந்த விதியில அப்படி இருக்கு… வந்து ஓகேங்களா?
அடியவர் 14 :- (எனது .....................) விஷயத்துல கூட சர்டிபிகேட் வாங்குறதுக்காக அதுவும் தள்ளி தள்ளி போயிட்டு…
குருநாதர் :- எதை என்று புரிய கவலை விடு தாயே எதை என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- எதை பத்தி கவலைப்படாதமான்றாரு விதியில இப்ப என்ன தெரியுமா இருக்குது? உங்களுக்கு போராட்டமான வாழ்க்கை. அதனால நீங்க பொறுத்தே ஆக வேண்டும்ன்றாருமா. இது யாரிடத்திலும்… என்ன பண்ணாலும்… வந்து செல்லாதுன்றாரு வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் பார்த்துக் கொள்வார். புரியுதுங்களா?
===========================
# கருணைக்கடல், இறைவன் நல் வழிமுறைகள்
===========================
குருநாதர் :- தாயே இதனால்தான் எது என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட உன்னை பொய் சொல்லி பின் அனுப்பலாம் பின் மூன்று மாதங்கள். இரண்டு மாதங்கள் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நடக்கும் என்று. நீயும் சந்தோஷப்பட்டு கொள்வாய். ஆனால் கடைசியில் ஒன்றும் நடக்காது எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னை சந்தோஷப்படுத்த நான் தெரிவிக்கலாம்.
அடியவர் :- மூணு மாசத்துல அஞ்சு மாசத்துல நடக்கும் என்று சொல்லி….
சுவடி ஓதும் மைந்தன் :- நீ என்ன பண்ணுவ வந்து? ஓ…. நடந்ததுன்னு சொல்லிட்டு ஓடி போயிடுவீங்க. ஆனால் நாளைக்கு வந்து அதெல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு என்னடா சொன்னாருன்னு சொல்லிட்டு…
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து முதல்ல மைனஸ் தான் எடுத்துட்டு வருவாரு இவரு. பிளஸ் எடுத்துட்டு வரமாட்டாரு. (மக்கள்) எல்லாரும் பிளஸ் எடுத்துட்டு வருவாரு. உனக்கு அங்க நடக்கும். இப்படி நடக்கும். நீ அப்படி போன்னு சொல்லுவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஆனால்) அகத்தியர் என்பவரு பிளஸ்ல
அடியவர் 6:- சொல்ல மாட்டாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்ல மாட்டாரு.
அடியவர் 6:- மைனஸ் தான் சொல்லுவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- மைனஸ் தான் சொல்லுவாரு. அந்த மைனஸ் சொல்லிதான், பிளஸ் எடுத்துட்டு வருவாரு. அவருக்கு தெரியும். மைனஸ் சொல்லிட்டேன்னா நீங்க வந்து அடுத்த பிளஸ் எடுத்துட்டு போறது அவருக்கு தெரியும். ஓகேங்களா? இது ஜீவநாடி. இப்படிதான்மா வந்து…
===========================
# தாயத்து எச்சரிக்கைகள்…
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ( பல மனிதர்கள் தாயத்து வாங்கி, அணிந்து கஷ்டப்படுவதை அழகாக எடுத்துரைத்தார்கள். எண்ணங்கள் சரியில்லாமல் தாயத்து செய்பவர்கள் , அவர்களின் தீய மனநிலை/எண்ணங்கள் அவ் தாயத்து உள்ளே சென்று விடும். அவ் தாயத்து வாங்கி அணிபவர்கள் வாழ்க்கை கஷ்டப்படுவார்கள் என்று அழகாக தனது வாழ்க்கையில் சந்தித்த நபர்களை பற்றி எடுத்துரைத்தார்கள்..இதனை அன்பு அடியவர்கள் சற்று சிந்தித்து பார்க்கவும்…. )
அடியவர் 14 :- நான் இதுவரைக்கும் எங்கேயும் போனது இல்ல ஐயா…. சாமியை விட்டுட்டா அதுக்கப்புறம்..சாமி கூடவே இருப்பாருங்களா ஐயா… ?
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவனை ) அவர புடிங்க. அவர் பண்ணுவாரு. போராட்டமான வாழ்க்கை தான். அவர் நல்லது பண்ணுவாரு உங்களுக்கு.
குருநாதர் :- எவை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் சொல்வார்கள் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் இறைவன் நினைத்தால்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு வந்து சொல்லுவார்கள் நான் செய்றேன் அது நீ செய்றன்னு சொல்லிட்டு.. ஆனாலும் இறைவன் கூட அங்க கூட வந்து சில விஷயங்கள் தெரிஞ்சுக்கொள்ள தடுக்கிறார்ன்றாரு ஓகேங்களா?
குருநாதர் :- தாயே இதனால் மௌனத்தை காத்திரு நிச்சயம் தன்னில் கூட அதி விரைவிலே அனைத்தும் நடக்கும்.
===========================
# விதியின் கடும் போராட்டத்தோடு , வருத்தத்துடன் கேட்ட கேள்வி
===========================
அடியவர் 14 :- என் கூட அகத்திய பெருமான் இருப்பாங்களா அய்யா?
குருநாதர் :- எதை எதை எது என்று புரிய, தாயே எவை என்று அறிய, அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு நேரம் உனக்கு உரைத்துக் கொண்டிருக்கின்றேன்.
அடியவர்கள் :- ( அனைவரும் இவ் அடியவருக்கு ஆதரவாக பல நல் மொழி உரைத்தனர் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? கவலைப்படாதீங்க…நல்லதே நடக்கும்.
குருநாதர் :- தாயே நல்முறையாக எம்முடைய ஆசிகள்.
===========================
# பயன்படுத்திக் கொள்ளுங்கள் திருவாசகத்தை…
===========================
===========================
# (பகுதி 6 வாக்கு ) திருவாசகத்தை படிக்க முடியாவிடில், தூங்கும் போது உங்கள் தலையணை அருகிலாவது வைத்துக் கொண்டு தூங்குங்கள்…..
===========================
குருநாதர் :- அனைவருக்கும் எவை என்று புரிய சொல்லிக் கொடுத்துவிட்டேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாசகத்தை.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு எல்லாருக்கும் என்ன பண்றாரு?
அடியவர்கள் :- திருவாசகம் படிக்கணும்…
சுவடி ஓதும் மைந்தன் :- எங்க அய்யா அவரு ஜோதிடர். ஏதோ கேட்டு இருந்தாரு? எல்லாருக்கும் என்ன பண்ணனும் திருவாசகத்தை?
அடியவர்கள் :- சொல்ல முடியல னாலும் தலையணை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்ல முடியலனாலும்
அடியவர் ஒருவர் :- எல்லோருக்கும் திருவாசகம் புத்தகத்தை கொடுக்கலாமா ?
குருநாதர் :-அப்பனே நிச்சயம் கொடுத்தால் படிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- படிக்கலனா அவ்வளவுதான்
குருநாதர் :- அப்பனே உங்களுக்கு தெரிவிக்கின்றேன். அப்பனே தெரியாதவர்கள் என்ன செய்வது?
சுவடி ஓதும் மைந்தன் :- ஓரளவுக்கு நீங்க அகத்தியர் பத்தி தெரிஞ்சுக்கிறீங்க. எல்லாம் தெரிஞ்சிருக்கிறீங்க. ஓகே. தெரியாதவர்கள் என்ன பண்றது?
அடியவர் ஒருவர் :- வீட்ல வச்சிருந்தாலே போதும்னாரு…. தெரியாதவங்களுக்கு சொல்றேன்… அவங்க வீட்ல வச்சிருந்தாலும்.. அவங்கள மனம் மற்றம் அடைந்து …
===========================
# ஜோதிட பலன் நன்றாக சொல்ல ஆசிகள் கேட்டபோது…
===========================
ஜோதிடர் :- ( என்னை ) நாடி வந்து பலன் கேக்குறவங்க, நல்ல விதமா பலன் சொல்லி, அதுக்கு ஆசீர்வாதம் சொன்ன பிறகு குருநாதர் வழி காண்பிகாணும்.
குருநாதர் :- அப்பனே இப்படி சொன்னேன் இதே போல் ஒவ்வொன்றாக சொல்லித் தருகின்றேன்
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லலாம் இப்ப சொன்னேன்ல அதே மாதிரி ஒன்னு டிஃபரெண்ட்டா விஷயங்கள் எல்லாம் நான் சொல்லிக் கொடுக்கிறேன்ப்பா அதை சொல்லி நீ பொழைச்சுக்கோப்பான்றாரு
ஜோதிடர் :- குருநாதர் ஆசீர்வாதம் வேண்டும். குருநாதர் கூடவே இருக்கனும்.
===========================
# ஆறில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்?
===========================
குருநாதர் :- அப்பனே கவலை வேண்டாம் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஆறில் அப்பனே நிச்சயம் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்?
அடியவர் 4 :- ஆறில் கிரகம் இருந்தால் என்ன பலன் என்று கேட்கின்றார்?
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒருத்தர் ஒருத்தர் கேக்குறாரு..
ஜோதிடர் :- ஆறாம் இடம், நோய் கடன் எதிரி ஸ்தானம். ருண , ரோக , சத்ரு ஸ்தானம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ?
அடியவர் ஒருவர் :- நோய் கடன் விஷயத்துல எதிரிகள் எல்லாம் நிறைய பேர் நோய்கள் வரும்.
ஜோதிடர் :- ( மெதுவாக ) ஆறாம் இடம் நோய் கடன் எதிரி ஸ்தானம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் சொல்லுங்க ஐயா
அடியவர் :- ( சத்தமாக சொல்லுங்க )
ஜோதிடர் :- ஆறாம் இடம் நோய் கடன் எதிரி ஸ்தானம். அந்த இடத்துல அசுப கிரகம் இருந்தா, சில கஷ்டங்கள் கொடுத்து, நிவர்த்தி ஆகும்னு சொல்லி பொதுவா சொல்றதுக்கு ஜோதிடத்துல. சுப கிரகம் இருந்தாலும் கஷ்டங்கள் உண்டு. ஆனா அதிலிருந்து மீளறது கொஞ்சம் கஷ்டம் அப்படின்னு சொல்லி… அதாவது அசுப கிரகம், அசுப ஸ்தானத்துல இருந்தா… சில நெகட்டிவிட்டி… நெகட்டிவ் to நெகட்டிவ் பாசிட்டிவ் சொல்லுவோம் இல்லையா… அந்த மாதிரி
குருநாதர் :- அப்பனே ஆறாம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பேன்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆறாம் இடம் என்பது மிகவும்?
அடியவர் :- சிறப்பு வாய்ந்தது
சுவடி ஓதும் மைந்தன் :- சிறப்பு வாய்ந்தது என்பேன்.
===========================
# ஆறாம் இடம் அதன் அதி சிறப்புகள் - உலகம் அறியாத ரகசியங்கள்…
# கடனும் வராது. நோயும் வராது. எதுவுமே வராது.
===========================
குருநாதர் :- அப்பனே ஆறாம் இடம் பலம் பெற்றால், நோய்களும் வராது. அப்பனே கடனும் வராதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- நோயும் வராது. கடனும் வராது.
குருநாதர் :- அப்பனே ஆறாம் இடம் என்பது அப்பனே நிச்சயம் தன்னில் கூட சேவையை குறிக்கும் என்பேன் அப்பனே. அச்சேவையை ஒழுங்காக செய்தால், ஒன்றுமே அப்பனே தேவையில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆறாம் இடம் என்பது என்ன?
அடியவர்கள் :- சேவைக்கான இடம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சேவைக்கான இடம். நீ ஒழுங்கா சேவை செஞ்சன்னா…?
அடியவர் :- எதுவுமே தேவையில்லை
சுவடி ஓதும் மைந்தன் :- கடனும் வராது. நோயும் வராது. எதுவுமே வராது.
===========================
# ஆறாம் இடம் , அதன் அதிபதி கொடுத்தால் , யாராலும் பின் தடுக்க முடியாதப்பா, அதிர்ஷ்ட வாய்ப்புகளை.
===========================
குருநாதர் :- அப்பனே ஆனாலும் இப்படித்தான் அப்பா, ஜோதிடன் சொல்லிக்கொண்டே இருக்கின்றான். ஆறாம் இடம் சரியில்லை. ஆறாம் இடம் மிகவும் மோசமானது என்று. ஆனால் ஆறாம் இடத்தில் உள்ள கிரகங்கள் கொடுத்தால், யாராலும் பின் தடுக்க முடியாதப்பா, அதிர்ஷ்ட வாய்ப்புகளை.
ஜோதிடர் :- ரிஷப ராசி ரிஷப லக்னம், துலா ராசி…. மேஷ ராசி விருச்சிக ராசிக்காரங்க…. ஆறு எட்டு ஒன்னா வரும். சோ அப்ப அவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்களா? குருநாதர் சொல்லணும்.
(அடியவர்கள் கவனத்திற்கு :- ரிஷப லக்கினத்திற்கு/ராசிக்கு - துலாம் 6ஆம் இடம். விருச்சிக லக்னத்திற்கு/ராசிக்கு , மேஷம் 6ஆம் இடம். )
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இதற்கும் அப்பனே மாற்று எவை என்று கூறப்பின் அவன் நிற்கும் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் பெண் மூலம் லாபத்தை அடையலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- பின் மூலம் எப்படி சொன்னீங்க நீங்க எது எதுன்னு புரியலையே இல்ல இது சொல்லிட்டாரு ரிஷபம்
ஜோதிடர் :- ரிஷபம் துலாம் விருச்சிகம் மேஷம் இந்த லக்ன ராசிக்காரங்களுக்கு ஆறும் எட்டும் ஒன்னாதான் வரும். அதாவது மேஷ ராசிக்காரங்களுக்கு எட்டாம் அதிபதி விருச்சிக விருச்சிகம். எட்டாம் இடமும் ஒன்னாதான் வரும் மேஷத்துக்கு. அதே மாதிரி துலா ரிஷபத்துக்கும் எட்டாம் இடமும் ஆறாம் இடமும் . அப்போ இவங்க எல்லாம் குருநாதர் சொன்ன மாதிரி புண்ணியம் பண்ணவங்களா? இவங்க எல்லாம் நல்லவங்களா?
குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அல்லவா அப்பனே பின் பெண்களை நன்கு கவனித்துக் கொண்டால் யோகம். அப்படி இல்லை என்றால் அதிலேயே அழிந்து விடுவார்கள்.
ஜோதிடர் :- பெண்கள் என்றால் குடும்ப பெண்களா ?
அடியவர்கள் :- ( குபீர் …குபீர் …குபீர் சிரிப்புகள் )
அடியவர் 7 :- எல்லா பெண்களையும் மரியாதையோடு நடத்தினா …
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா பெண்களையும் மரியாதையோடு நடத்தினா யோகங்கள். ஆனால் அவர்களால் முடியாது. லைஃப் டோட்டல் காலியாகும்ன்றாருங்க ஐயா. வேற ஒன்னும் இல்லைங்க ஐயா. ஓகேங்களா?
குருநாதர் :- அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின் எவை என்று கூறப்பின் வரிகளுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் அப்பனே கவலை வேண்டாம் இப்பொழுது போதும் அப்பா.
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கவலை வேண்டாம். ஆசிகள். பின் எவை என்று புரிய பின் சந்தர்ப்பத்தை கொடுத்துவிட்டேன். அமருங்கள் நீங்கள்.
அடியவர் :- எல்லாம் உட்காருங்க…
அடியவர் 7 :- எல்லாரும் உட்காருங்க…
அடியவர் 13 :- அய்யா முன்னோர்கள் ஆசிர்வாதம் , குலதெய்வத்தின் ஆசிர்வாதம்..
குருநாதர் :- தாயே இப்படி சொன்னேனே மூன்று மாதங்கள் கழித்து யான் உரைப்பேன் நிச்சயம் தன்னில் கூட இதை நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா இது என்ன சொல்றது தெரியுங்களா இப்பொழுது என்ன பண்றது வழி சொல்லுங்க மூணு மாசம் கையில வச்சுக்கணும் அந்த பக்கம் விடுமா அது இருக்குமா நல்லா அதை இப்ப என்ன சொன்னாரு நீங்க எதை கேட்டாலும் எது எல்லார்களே நீங்க எந்த கேக்குறீங்களோ அது என்ன கையில யாரு கையில இருக்குது?
அடியவர்கள் :- ஈசன் கையில இருக்குதுன்னு
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் கையில இருக்குதுன்னு சொல்லிட்டா எல்லாம் நீங்க அது மாதிரி எதுவுமே கேக்கணுமா ஒரே பதில்தான்மா அவருக்கு வந்து…. நீங்க எதை கேட்க வந்தீங்க யாரு கையில இருக்குது? அதெல்லாம் வந்து நீங்க எதை கேட்க வந்தீங்க… நீங்க எதை கேட்க வந்தீங்க…. இந்த அம்மா என்ன கேட்க வந்தாங்க…. இவரு எந்த… அப்புறம் அந்த அம்மா அப்புறம்…. இதெல்லாம் யாருக்குள்ள இருக்குது வந்து? ரிலீஸ் பண்ணுவாருமா… இருமா… ரிலீஸ் பண்ணுவாருமா… டேட் அவர் பிக்ஸ் பண்ணனுமா….அவர் ரிலீஸ் பண்ணனும் ஒரு டேட் வச்சிருப்பாரு இல்ல…. ரிலீஸ் பண்ணுவாரு. அதுக்குள்ள நம்ம என்ன பண்ணனும்? நீ இதை டேட் ரிலீஸ் பண்ணுவாரு எவரு?
அடியவர்கள் :- (ஈசன் ) அவர்தான் அவர்தான் ரிலீஸ் பண்ணுவாரு.
ஒரு அடியவர் :- அப்பா இறந்து மூணு மாசம் ஆகுது. அவர் நல்ல ஆத்ம சாந்தி அடைஞ்சாரா?
குருநாதர் :- எது என்று அறிய அதனாலதான் எதையும் சொல்லவில்லை தாயே. திருவாசகத்தை
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்க அமைதியா இருங்கமா… அதனாலதான் உங்களை எல்லாரும் எழுப்பி என்ன பண்ணிட்டாரு ?
அடியவர் 9:- திருவாசகத்தை எல்லாருக்கும்
அடியவர் 13 :- ஈசன் தான் எல்லாமே அவங்களுக்காக செய்வார்…
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால செய்வாரு. உங்களுக்காக எல்லாத்தையும் அவர்தான் செய்வாரு. கொஞ்சம் நீங்க பொறுத்தாக வேண்டும்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று விளக்க, எதை என்று அறிய நிச்சயம் பின் சிவபுராணத்தை பின் ஓதுங்கள்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழு அடியவர்கள் :- ( சிவ புராணம் பாட ஆரம்பித்தார்கள் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment