​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 14 August 2026

சித்தன் அருள் - 2275 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 8!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 8 

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 7 அதன் தொடர்ச்சியாக ….)

அடியவர் 19 :-  அய்யா ( கேள்வி ) 

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் முன் ஜென்மத்தில் நீ தர்மம் ஏந்திக் கொண்டிருந்தாய் அல்லவா? அங்கு சென்று விட்டு வா. அனைத்தும் செப்புகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- காஞ்சிபுரம். நிறைய கோயில்கள் நீங்க தர்மம் ஏந்திக்கிறீங்க. அங்க போயிட்டு வந்தீங்கன்னா, நான் சில விஷயங்கள் சொல்றேன் சொல்லிவிட்டார். நீங்க போயிட்டு வாங்க ஐயா. 

அடியவர் 10 :-   லோக ஷேமத்திற்காக ?

குருநாதர் :-   எது என்று அப்பனே கவலைகள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அது அகத்தியர் வந்து ( பார்த்துக் கொள்வார்கள் )  

அடியவர் 23 :- சேவைகள் சேவைகளுக்கு.. குருநாதர் சொன்ன மாதிரி.. நமக்கு சரியான வழிகாட்டுதல்… சரியான பாதையில போயிட்டு இருக்கோமா என்று ….

குருநாதர் :-   அப்பனே சரியான பாதையில் செல்லவில்லை என்றாலும், இப்பொழுது எவை என்று கூற அப்பனே பின் எழுத்துரைகின்றேன்  அல்லவா?  

சுவடி ஓதும் மைந்தன் :- சரியான பாதையில் செல்லவில்லை என்றாலும்…. நமக்கு மனசு வந்து… இதுவா இருந்தாலும்… இப்ப நான் வந்து உனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன்ப்பா. ஓகேங்களா?  புரியுதுங்களா ஐயா? 

===========================
# சித்தன் பாதையில் பயணம் - கர்மத்தை நிச்சயம் அழிக்கும்.
===========================

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தனி சித்தன் பாதையில், அப்பனே எப்படியாவது அப்பனே கர்மத்தை பின் சேர்த்தாலும், அப்பனே நிச்சயம் பின் மறைந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரிஞ்சோ.. தெரியாமோ… ஏதோ ஒன்னு வந்து தப்பு பண்ணிடுறோம். ஆனா சித்தன் பாதையில… அது வந்து என்ன பண்ணுவாரு வந்து?  

அடியவர் 6 :- சரி பண்ணி விடுவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- சரி பண்ணி விட்டுருவாருப்பா. 

அடியவர் 15  :- ஐயா நமஸ்காரம். வருஷக்கணக்கா _____ . எப்பதான் சரியாகும் ? தேவையானா பரிகாரம் கொஞ்சம் வழி சொல்லணும். 

குருநாதர் :-   ( …………….. ) 

அடியவர் 15  :- ( …………….. ) 

( இவ் அடியவருக்கு உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்குகள் காண்போம்…தனி வாக்குகள் நீக்கம் ) 

===========================
# பல வயதான தாய் , தந்தையரை - அவர்களுக்கே தெரியாமல் கவனித்து கொள்ளும் இறைவன் , கருணைக்கடல் திருவடிகள் போற்றி போற்றி….
( இது தனி வாக்கு என்றாலும் , கருணைக்கடல் காட்டும் கருணை எல்லையில்லாதது…) 
===========================

குருநாதர் :-   தாயே எதைப் பற்றியும் கவலைப்படாதே. எம்முடைய ஆசிகள். யான் இருக்கின்றேன் உன்னை பார்த்துக் கொள்ள. கவலைகள் வேண்டாம். 

குருநாதர் :-  எதை ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவரவர் பின் பாதையில் தான் செல்வார்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் தடுப்பதற்கு ஆளில்லை தாயே. உன்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் யான். போதுமா? 

குருநாதர் :- அதனால் கவலைகள் இல்லை உன்னைப் பற்றி பார். உன்னைப் பற்றியும் பார்ப்பதற்கு யான் இருக்கின்றேன். 

===========================
# பல வயதான தாய் , தந்தையரை - மறந்து விடும் பிள்ளைகள் குறித்த வாக்கு…
===========================

குருநாதர் :- தாயே இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூற சிறு வயதில் நிச்சயம் தன்னில் கூட பின் பின் தாய், தாய் என்று பாசம் விடுவார்கள். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் வயது ஆக ஆக புத்தியும் மாறி விடுகின்றது எது என்று புரிய கலியுகத்தில். 

குருநாதர் :- ( ………………………. )

===========================
# உங்கள் தாய் தந்தையை எப்படி கணித்து கொள்கின்றீர்களோ, அதே போல் உங்கள் குழந்தை உங்களுக்கு செய்யும்….
===========================

( மற்றொரு அடியவருக்கு ) 

அடியவர் 16   :- அப்பா அம்மா ரொம்ப விட முடியல பார்த்துக்கிற மனநிலையும் ஆசையும் இருக்கு… அதுக்கு உண்டான சூழ்நிலை குருநாதர் வைத்து… 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் கடமை அப்பா.  அவன் கடமையை அப்பனே நிச்சயம் சரியாக செய்ய வேண்டும். சரியாக செய்யவில்லை என்றால் அப்பனே நிச்சயம் பின் உன் பிள்ளைகள் அப்பனே எவை என்று அப்பனே பின் இப்படித்தான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது எப்படி தெரியுமா சூழ்நிலை எல்லாம் காரணம் சொல்லக்கூடாது. உன் கடமை நீ செய்யணும். உன் கடமை நீ செய்யாட்டி, உங்களுக்கு உனக்கு ஒரு பொறந்து, உனக்கு ஒரு பாப்பாவோ, ஒரு தம்பியோ பொறந்து, அவன் என்ன பண்ணுவானாம் ? 

அடியவர் :- அதே மாதிரி பண்ணுவான் 

சுவடி ஓதும் மைந்தன் :- அதே மாதிரி பண்ணுவான் 

குருநாதர் :-  அப்பனே இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே நீ என்ன செய்கின்றாயோ, அது நிச்சயம் தன்னில் கூட, இன்னும் பல மடங்கு உனக்கு செய்கின்றது, என்று பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- நீ என்ன செய்கின்றியோ…. பல மடங்கு உனக்கு திருப்பி ?

அடியவர் :- வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கே  வரும்பா. அய்யா புரியுதுங்களா ? ஓகேங்களா?  நீ என்ன பண்றியோ….. என்ன தம்பி புரியுதா?  நீ என்ன பண்றியோ…. அது என்ன பண்ணும்?  திரும்பி வரும். உனக்கே திரும்பி வரும். 

அடியவர் 18:- இப்ப நான் இருந்து கோவிலுக்கு எல்லாம் நான் வந்து பூஜை பண்ணிட்டேன்…. 

குருநாதர் :-  தாயே எதையும் நிச்சயம் தன்னில் கூட பின் எவன் என்று திருவாசகத்தை கையிலே வைத்துக் கொள். நிச்சயம் பார்த்துக் கொள்வோம். 

குருநாதர் :-  ஆசிகள் எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏற்கனவே ஆசிகள் அவர்களுக்கு இருக்கின்றது தாயே நிச்சயம் உடனே நீ பார்த்துக்கொள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அவங்கள பத்தி நினைக்காதம்மா…. அவங்கள ஆல்ரெடி ஆசிகள் எல்லாம் இருக்குது… உனை நீ பார்த்துக்கொள். 

===========================
# பலரும் அறியாத கருணைக்கடல் இறைவனின்  ரகசியங்கள்.
===========================

குருநாதர் :-  பல விஷயங்கள் எது என்று அறிய நிச்சயம் மனிதன் எதை எதையோ எது என்று புரிய செய்தாலும் அதையெல்லாம் யான் விலக்கிக் கொண்டிருக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- பல விஷயங்கள்ல உங்களுக்கு நெகட்டிவ் அதெல்லாம் செஞ்சிருக்காங்க. உங்க பிள்ளைகளுக்கு எல்லாம் வந்து…. அதையும் நான் வந்து ?

அடியவர் 7 :-  விலக்கி இருக்கேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- விலக்கி இருக்கிறேன் 

அடியவர் 18:-  மனிதர்களால வந்த வினைன்னு சொன்னாரு.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம். மனிதனால வந்த வினைதான்.  

அடியவர் 18:-  அதை விளக்கிட்டேன்னு சொல்றாரு.  (குருநாதர்) அவர் இல்லைன்னா நாங்க இல்ல……… ( நன்றி உணர்ச்சியுடன் பல உரைகள் உரைத்தார்கள் ) 

குருநாதர் :-  கவலைகள் இல்லை. எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய தாயே கவலைப்பட தேவையில்லை. நிச்சயம் தன்னில் கூட பின் உனக்கு பின் அனைத்து ஆசிகளும் வாங்கித் தருகின்றேன் இன்னும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா ஆசிகளும் உங்களுக்கு வாங்கித் தருகின்றேன். 

===========================
# பல தாய் , தந்தையர்கள் தனியாக இருப்பது குறித்த ஒரு இறை ரகசியம்…
===========================

குருநாதர் :-  எதை என்று கூற பின் உன் பிள்ளைகள் பின் உன்னோடு இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அவர்களின் பாசத்தை தான் நீ பார்ப்பாய் நிச்சயம் தன்னில் கூட. பின் இறைவன் அனுக்கிரகத்தை இழந்து விடுவாய். அதனால் தனியாக இருந்து, அனைத்தும் பெற்றுக்கொள். 

அடியவர்கள் :-  ( பலத்த கை தட்டல்கள்…. ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   உங்க பிள்ளையா இருந்தா நீங்க அதையே நினைச்சுட்டு இருப்பீங்க வந்து…. 

அடியவர் 18:-   ( பிள்ளைகள் …………………………………) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல அப்படி இல்ல…நீங்க அதையே… ஐயோ இப்படி பண்றாங்களே இப்படி இருக்காங்களே அதையே நினைச்சுட்டு இருப்பீங்க…. நீங்க தனியா இருந்தா இறைவன் உன்னை பார்த்துக்கிட்டு எல்லா ஆசிகளையும் கொடுத்துட்டு மோட்சத்துக்கான வழிகள் உங்களுக்கு வந்து…இது பண்ணிடுவார்..

அடியவர் 18:-   ( ஒரு கோவில் கும்பாபிஷேகம் குறித்து கேட்டபோது )

குருநாதர் :-  தாயே கவலைப்பட தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட முருகனே வருவான். எவை என்று கூற பின் ஐயனே வருவான் பிள்ளையோனே வருவான். நடத்திக் கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாராவது வருவாரு?  மூணு பேரும் வருவாரு. முருகனும் வருவாரு. ஐயனும் வருவாரு. பிள்ளையார் வருவார் …

குருநாதர் :-  எது என்று அறியறியே நிச்சயம் தன்னில் கூட பின் அதனால்தான் அவரவர் காலத்தை நிச்சயம் கணிக்கின்ற பொழுது அதாவது நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் எப்பொழுது வெளிகாட்ட வேண்டுமோ, அப்பொழுது அவர்களே வெளிக்காட்டுவார்கள்.  

குருநாதர் :-  அதுநாள் பொருத்தே ஆகவேண்டும் வாழ்க்கையில். ஆனால் பல பேர்கள் நான் அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்று. ஆனாலும் அவன் விரும்பும் எக்காலம் என்று, நிச்சயம் அக்காலம் பொருத்தே ஆகவேண்டும். 

அடியவர் 18:-   ( கும்பாபிஷேகம் குறித்து மீண்டும் கேட்ட போது )

குருநாதர் :-  தாயே எது என்று சிறப்பாக நடக்கும். எவை என்று கூற எம்முடைய ஆசிகள். 

===========================
# அனைவருக்கும் ஆற்றலை பெருக்க, நிச்சயம் வேல்மாறல் தேவைப்படுகின்றது அவசியம். 
===========================

அடியவர் 18:-   ( வேல் மாறல் பாராயணம் குறித்து கேட்டபோது )

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். கவலைகள் வேண்டாம். 


குருநாதர் :-  எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்கும் எவை என்று கூற ஆற்றலை பெருக்க நிச்சயம் பின் வேல்மாறல் தேவைப்படுகின்றது அவசியம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லோருக்கும் ஆற்றல் INCREASE பண்ணோம்னா …வேல்மாறல் தேவைப்படுகின்றது. உங்களுக்கு ஆற்றல் அதிகமா இருந்தா.. பண்ணிக்கோங்க…

===========================
( பொது :- அனைவரும் செம்பு வேல் இல்லத்தில் வைத்து, அனுதினமும், உங்கள் வாழ்நாள் முழுவதும், விடாமல்,  வேல்மாறல்  பாராயணம் செய்க )
===========================

அடியவர் 18:-   ( ……………………. )

குருநாதர் :-  எது என்று புரிய தாயே எம்முடைய ஆசிகள். கவலை வேண்டாம். எத்தனை நாட்கள் எது என்று புரிய நிச்சயம் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனாலும் இப்பொழுது சிக்கிக் கொண்டாய். என்ன வேண்டுமானாலும் கேள். உனக்கு ஆசிகள் தருகின்றேன். 

அடியவர்கள் :- ( சந்தோஷ குபீர் சிரிப்புகள்….. )

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க வந்து அகத்தியர் அகத்தியர்ன்னு சொல்லி இருந்தீங்களாம் வந்து… ஆனா இப்ப எங்களை சிக்கினார் உனக்கு என்ன வேணுமோ கேளுமான்ட்டார்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா இப்படி கேக்கணும் அகத்தியர் வந்து… ஏன்னா அதுதான் அவரே கேக்கணும்…. 

அடியவர் 7:- என்ன வேணும் ?

===========================
# குருநாதரை, இறைவனை  எப்படி வணங்க வேண்டும்? - பரம ரகசியம்….
===========================
# பின்வரும் வாக்கை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்
===========================
# உங்கள் இல்லத்தில் பதிவு எடுத்து பூசை அறையில் ஒட்டி வையுங்கள்….
===========================
# அவசியம் பலருக்கும் இதனை சொல்லிக்கொடுங்கள் 
===========================

அடியவர் 20 :- (குருநாதர் கிட்ட) எனக்கு என்ன கேட்கணும்னு கூட தோனலைங்க… 

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட  **** இப்படித்தான் இருக்க வேண்டும் ****. 

எது என்று புரிய **** நிச்சயம் அனைவரும் கூட**** …  

பின்  **** அகத்தியனே **** !!!!!.......

எவை என்று புரிய பின்  **** தந்தையே ****  !!!!!.......  

எது என்று புரிய அப்படியும் யான், எவை என்று கூற பின்… 

**** நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அறிந்து கூட பின் ஏற்றுக் கொள்கின்றேன் **** . 

**** நிச்சயம் பின் எங்களுக்கு ஒன்றும் தெரியாது****. 

**** நீங்களே வழிகாட்டுங்கள்****  என்றுதான் சொல்ல வேண்டும். 

**** அவ் பக்குவ நிலை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்****. 

**** யாரிடமும் அவ் பக்குவம் இல்லை**** . 

**** பின் கொடுத்தாலும், இறை பலங்கள்  என்ன பிரயோஜனம்?**** 

அடியவர்கள் :-   ( ரகசியம் அறிந்த மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்….)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படித்தான் சொல்லணுமா. அகத்தியர் அப்பா எனக்கு ஒன்னும் புரியல. எனக்கு தெரியாது என் வாழ்க்கை. ஏதாவது சொல்லுன்னு சொல்லி தான்… என்ன பண்ணுவாராம்?  

அடியவர்கள் :-  சரணாகதி 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவரே வந்து.. அதுதான் பக்குவம்… 

அடியவர்கள் :-  சரணாகதி ஆகிடனும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரணாகதி… அதுதான் பக்குவம்… நீங்கள் அது தெரியாம, அது வேணும், இது வேணும்னு கேட்டிருந்தால்….. அது பக்குவம் இல்லை…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அப்ப அது இல்லாத விடத்தில் இறைவன் கொடுத்தாலும் நீங்கள் சரியாக பயன்படுத்த மாட்டார்கள். அதனாலதான் இறைவன் என்ன பண்றாரு?  அதுதான் இறைவன்.. கடைசில என்ன கேட்கணும் வந்து… அந்த பக்குவம் வரணும். எப்பா ஏதாவது கொடுப்பா உன்னையே நம்பி இருக்கிறோம்… அந்த பக்குவத்துக்கு வரணும்ன்றது… 

===========================
# காலம் சென்ற அகத்திய மாமுனிவர்  மைந்தன் திரு. ஹனுமந்தாசன் அய்யாவை நினைவு கூர்ந்த தருணம்…. 
===========================

அடியவர் 20 :- 20  வருஷத்துக்கு முன்னாடி ஹனுமந்தாசன் அய்யாவை நமஸ்காரம் பண்ணி, எல்லாம்  கேட்டபோது… நீ கவலையே படாதம்மா…. அகத்திய மகரிஷி எல்லாம் பார்த்துட்டு இருக்கார்…எல்லாம் செய்யறார்…அந்த 20…. 22 வருஷமா நடந்தது நல்லா …. 

( ஹனுமந்தாசன் அய்யா நாடி படித்து) என்னுடைய ரிட்டையர்மென்ட் அமைதியா நடக்கும்னு சொன்னாரு…. அப்படியே அவர் என்ன சொன்னாரோ அப்படியே நடந்தது. 

அப்புறம்தான் என் பையனை ( ஒரு ஆலயத்திற்கு ) அழைத்து சென்று..ஏன்னா (ஹனுமந்தாசன் அய்யா நாடி வாக்கில் ) அவர் என்ன சொல்றாரோ அப்படித்தான் பண்ணுவோம். 

(ஹனுமந்தாசன் அய்யா) அவாளோட நாடி ( வாக்கு )  இதெல்லாம்…. இது யாராவது சின்ன பொண்ணு (.....)  அவதான் எழுதுவாங்க…. எல்லாம் எழுதி கொடுப்பாங்க… எல்லாம் என்ன செய்வாரு 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால கூட அதே மாதிரிதான் சொல்றாரு… உனக்கு என்ன இது நான் பார்த்துக்கிறேன். எல்லா அருளும் நான் வாங்கி கொடுக்கிறேன்… நீங்க கவலைப்படாதம்மான்றாரு வந்து 

அடியவர் 20 :-  அது மாதிரி கூட ரெண்டு பேருமே…. அவர் என்ன… என்ன சொல்றாரோ அதை மீறி…ஒன்னும் கூட செய்ய மாட்டாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா ஆமா அவங்க என்ன சொல்றாங்களோ அதான் கேப்பாங்க 

அடியவர் 20 :-  ( சுவடி வாக்கை அப்படியே பயன்படுத்தும் பிள்ளைகள் குறித்து பெருமையாக சொன்னார்கள்….இதனை கேட்டவுடன்  )

குருநாதர் :-  அதனால தாயே எது என்று புரிய நிச்சயம் அவ் அளவிற்கு புத்தியை நிச்சயம் தன்னில் கூட இறைவன் கொடுத்திருக்கின்றான் என்றால் அவர்கள் கெடுவார்களா?  நீயே யோசி. 

அடியவர் ஒருவர் :-  அவங்கள பத்தி கேக்குறியே அந்த அளவுக்கு …(அவங்க கெட்டுப்போவாங்களா) ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அளவுக்கு வந்து… அவங்க கெட்டுப்போவாங்களா?  அதனாலதான்… 

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட அதனாலதான் உன்னை நீ பார்த்துக்கொள். கவலைகள் வேண்டாம். எது என்று புரிய இதனால் இறை ஆசிகளோடு நிச்சயம் தன்னில் கூட பின் மோட்சமும் பெறுவாய். 

அடியவர்கள் :-   ( இவ் அடியவரின் மோட்ச ரகசியம் அறிந்த மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்….)

சுவடி ஓதும் மைந்தன் :-  இறை ஆசிகளோடு மோட்சம் பெறுவாய் 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். எம்முடைய ஆசிகள். உனை நான் பார்த்துக் கொள்கின்றேன். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னை நான் பார்த்துக்கிறேன்ட்டாரு.

அடியவர் ஒருவர் :-  இப்பவும் அவர்தான் பார்த்துட்டு இருக்காரு… 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா 

குருநாதர் :-  எது என்று புரிய எது என்று அறிய நிச்சயம் பின் என்ன அறிந்து கொண்டீர்கள் நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க எல்லாம் என்ன அறிந்து கொண்டீர்கள்?

அடியவர் 7:-  இதுல இருந்து என்ன புரிஞ்சுகிட்டீங்கன்னு கேட்குறார் …

குருநாதர் :-  அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் யான் எவை என்று புரிய பின் உங்களுக்கு தேவையானதை யான் வழங்குகின்றேன். கவலையை விடுங்கள். 

அடியவர் 21 :- ஆனா ஐயா உங்க வார்த்தையிலிருந்து ஏதாவது ஒன்னு வருமான்னு… ஒரு ஆசை தானே படுறோம்?  

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, இவ் ஆசை நிச்சயம் தன்னில் கூட, இதற்கு பின் மறு, எவை என்று கூற பின் அதாவது சமன்படுத்தி சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆசை = தோசை 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சும்மா சொன்னேன் தோசை என்று  நான் சொன்னேன்மா. ஆசை ஈக்குவல் டு? 

அடியவர்  :-துன்பம் 

அடியவர் 21 :- துன்பம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  துன்பம். அது கூட கேட்காதும்மான்றாரு. 

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய பின் எதையும் கேட்காதே நிச்சயம் தன்னில் கூட. பின் யான் உன் அருகிலே இருக்கின்றேன் போதுமா?  

ஏனென்றால் நிச்சயம் எவை என்று புரிய அதாவது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்  கூட பின் அதாவது எதுவும் பின் தெரியாமல் இருந்தால் வழிகாட்டியாக யான் இருப்பேன். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் கேட்டுத்தான் இங்கு வந்தீர்களா? அதாவது இங்கு வந்தீர்கள் என்று யான் சொல்லவில்லை பூலோகத்திற்கு?. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் கேட்டுத்தான் நான் வரணும்னு சொல்லிட்டு.. கேட்டுத்தான் இந்த பூலோகத்திற்கு வந்தீர்களா? சொல்லுங்க ஐயா? 

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் கேட்காமல் தான் நிச்சயம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் கவலைகள் விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்துமே கேட்காமல் தான் கேட்காமல் தான் இங்க நடக்குது. 

நீங்க பூலோகத்துக்கு வரேன்னு கேட்டீங்களா? 

ஈசன் கும்பிட்டேன்னு நீங்க கேட்டுட்டீங்களா?  

இல்ல ஓலைச்சுக்கு வந்து நம்ம படிப்போம்னு நீங்க கேட்டீங்களா? 

 உங்க பிள்ளைகள் வந்து பொறப்பாங்கன்னு நீங்க வந்து?  சொல்றேன் 

இப்ப இவங்கதான் பொறப்பாங்க இவங்கதான் பொறப்பாங்க வேண்டுனீங்களா ?  

எல்லாமே கேட்காமல் தான் நடக்கின்றது.

===========================
# எப்பொழுது இறைவன் அனைத்தும் தந்துவிடுவார்?
===========================

குருநாதர் :-  அப்படி பின் எப்பொழுது நீங்கள் பின் இறைவனிடத்தில் எதையும் கேட்காமல் பின் இருக்கின்றீர்களோ, அப்பொழுது அனைத்தும் தந்துவிடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுது நீங்கள் இறைவனிடம்?  

அடியவர் :- கேட்காம இருக்கிறோமோ… 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்காம இருக்கிறோமோ? 

அடியவர்  :-  அப்ப இறைவன் கொடுப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இறைவன் கொடுப்பார். 

அடியவர்  15 :-  கேட்டாத்தானே இறைவன் கொடுப்பார்?

குருநாதர் :-  அப்பனே கேட்டுக்கொண்டே இரு.  இறைவன் கொடுப்பானா என்று பார்ப்போம். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ….) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இருப்பா. இறைவன் கொடுப்பாரா இல்லையா  என்று? 

அடியவர் 7:- பார்ப்போம் 

குருநாதர் :-  அப்பனே சுயநலத்திற்காக அப்பனே எதையும் கேட்கக்கூடாது 

அடியவர் 19  :- பொது நலத்திற்காக கேட்கணும்….. 

அடியவர் 9 :- ஐயா எங்க எல்லாருக்கும் (அன்னை) லோபாமுத்திரை அம்மாவுடைய ஆசீர்வாதம் வேணும் ஐயா 

குருநாதர் :-  நிச்சயம் எவை என்று ஒரு நாள் வந்து சொல்வாள். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு நாள் வந்து சொல்வார். 

அடியவர்கள் :- ( மகிழ்ச்சி கைதட்டல்கள்…) 

===========================
# இறைவனிடம், குருநாதரிடம்  எப்படி நாம் பேசுவது ? 
===========================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது பக்குவம் எதைச் சார்ந்து? எதை என்று புரிய, அறிந்தும்  கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட மௌனத்தை, அதாவது நிச்சயம் இறைவனிடத்தில் காண்பிக்க வேண்டும். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணனும்? 

அடியவர் :- இறைவனிடத்தில் மௌனத்தை காண்பிக்கணும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மௌனமா இருக்கணும்… மௌனத்தால…. 

குருநாதர் :-  எது என்று மனதிற்குள்ளே பேச வேண்டும் இறைவனிடத்தில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாரிடத்தில் பேசணும்? 

அடியவர் :-  இறைவனிடத்தில் மௌனமா  பேசணும்

குருநாதர் :-  நிச்சயம் இது போல அடுத்த வாக்கில் நீங்கள் இறைவனிடத்திலேயே பேசுங்கள். அல்லது என்னிடத்திலே மனதுக்குள்ளே பேசுங்கள். யான் வந்து சொல்கின்றேன். 

அடியவர் 12 :-  அப்படித்தான் டெய்லி பேசுறேன் அய்யா . அப்ப கேக்குறாரு அவரு?.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு வந்து?  

அடியவர் :- கேக்குறாரு 

அடியவர் 23 :- மனசுக்குள்ள பேசிட்டு இருக்கேன். ஆனா அவர் வெளிய சொல்லுன்னு சொல்றார்…

குருநாதர் :-  தாயே எவை என்று அறிய அதற்கு பதில், நிச்சயம் யான் உரைப்பேன்.

அடியவர் 23 :- வெளிய சொல்லுன்னு அப்படினு …..(சொல்றார்…) 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க என்ன பண்றாங்க?  

அடியவர் 12 :-  நாங்க என்ன பேசுறோமோ அதை அவரே சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை அவரே சொல்லுவாரு. நீங்க வந்து கேட்டு வந்து பெற அவசியம் இல்லை. 

===========================
# ஏகாதசிக்கு எலுமிச்சை சாதம் செய்து ஆலயத்தில் கொடுக்க முடியவில்லையே என்று தனது ஆதங்கத்தை தெரிவித்த போது ( இது பலருக்கும் பொருந்தும்…பல நேரங்களில் சில வழிபாடுகளை செய்ய முடியாமல் போகும் பொது….)  
===========================

அடியவர் 20  :-  நேத்துக்கு ( ஒரு அடியவர் ) அம்மா மூலியமா லெமன் ரைஸ் பண்ணி அன்னதானம் பண்ண சொன்னீங்க ஐயா. உடனே நான் என்ன நினைச்சேன். ஏகாதசிக்கு என்னால பண்ண முடியல. சோம்பேரியா சொல்லிக்கிறேன். சோம்பேரியா இருந்ததுனாலதான் ஐயா வந்து… 

குருநாதர் :-  தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் சொன்னால்… செய்தால் போதும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சொன்னதை, நீ எப்ப வேணா செஞ்சுலாம் போதும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment