அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 13
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
………..
………..
………..
( பகுதி 12 அதன் தொடர்ச்சியாக ….)
===========================
# அடி முட்டாள் தனமான மூடநம்பிக்கை :-
# அசைவம் நிறுத்தினால் குழந்தைகளுக்கு சத்துக்கள் உடம்பில் வராது
===========================
அடியவர் #1 :- அடுத்தது, அய்யா உயிர் பலி இடமாட்டேன். இடுவதற்கு அனுமதிக்க மாட்டேன்னு சொல்லி, ஐயாவுடைய வாக்கு டெய்லி படிக்கிறோம் இல்லையா? அப்ப அது வந்து இப்ப நம்ம பெரியவர்கள்ட்ட, இப்ப நம்ம இருக்கிறோம். அது மாதிரி சொல்றப்ப, குழந்தைகளுக்கு சத்து இல்ல. நீ வந்து ஏன் கொடுக்க மாட்டேங்குற? வைக்க மாட்டேங்குற? நம்மளே பேசுறாங்க ஐயா. அதுக்கு ஒரு பதில் சொல்லுங்க.
குருநாதர் :- எது என்று புரிய பின் அதாவது, பின் அனைவரும் இவ்வாறு உட்கொள்வதால், அனைவரும் நன்றாக இருக்கின்றார்களா? நீங்கள் பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் கறி எல்லாம் சாப்பிடுறாங்க. எல்லாரும் நல்லா இருக்குறாங்களா? உங்களுக்கு தெரியுமான்னு கேக்குறாரு.
அடியவர் #2 :- இல்லைங்க அய்யா, இப்ப தம்பி வந்து கண்ணாடி கழட்ட மாட்டேங்குறான். கண்ணாடி கழட்டுனா வந்து blur இருக்கு. என்ன சொல்றாங்க? sureity கொடுங்க, இந்த மாதிரி கீரை கொடுங்க, அப்படின்னு சொல்றாங்க.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய அப்பனே, பின் பலவகை கீரைகளே உள்ளதப்பா. இதன் மூலம் இல்லாததா?
**** பொன்னாங்கண்ணியில் இல்லாததா அப்பனே ? ****
**** பின் கரிசலாங்கண்ணியில் இல்லாததா அப்பனே ? ****
**** முருங்கை இலையில் இல்லாததா அப்பனே ? ****
அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கைதட்டல்கள்………… )
சுவடி ஓதும் மைந்தன் :- கரிசலாங்கண்ணில இல்லாததா?
அடியவர் :- முருங்கை இலை,
சுவடி ஓதும் மைந்தன் :- முருங்கை இலை?
அடியவர் :- பொன்னாங்கண்ணி,
சுவடி ஓதும் மைந்தன் :- பொன்னாங்கண்ணி.
===========================
# பொன்னாங்கண்ணி கீரை = 100 உயிர்களுக்கு சமம்.
===========================
குருநாதர் :- எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட சிறிது பின் அதாவது, பொன்னாங்கண்ணி கீரை எதை என்று புரிய பின் ஏது என்று புரிய. பின் ஒரு 100 பின் எவை என்ற பின் உயிர்களுக்கு சமம்.
அடியவர் #1 :- ( ஆச்சரியத்தில்) அப்பா !!!!!!!!!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- பொன்னாங்கணி உட்கொண்டால், ஒரு 100 இறைச்சிக்கு சமம் என்றார் வந்து….
அடியவர் #2 :- எல்லாத்திலேயும் பூச்சி மருந்து அடிக்கிறாங்க அய்யா.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அப்பனே, எவை என்று கூட நீ தனியாக பின் வளர்த்து அப்பனே, உண்டு.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
அடியவர் #7 :- உங்கள தனியா வளர்த்து சாப்பிட்ட சொல்லறாரு .
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியுது இல்ல? சொல்லணும், கேக்கணும். அப்ப என்ன பண்ற? நீ தனியா?
அடியவர் :- வளர்த்து சாப்பிடணும்.
குருநாதர் :- அப்பனே, சோம்பேரி. நிச்சயம் தன்னில் யார் எதை கொடுத்தால், பின் உட்கொள்ள வேண்டுமா? எவை என்று கூற உட்கொண்டுதான் நோய் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அது சோம்பேரி என்றாரு. நீ எதை கொடுத்தாலும் சாப்பிட்டுடுவியா? நீ பண்றா….. என்றாரு.
குருநாதர் :- எது என்று அறிய அப்பனே, பின் இதுவும். அப்பனே, பின் சோம்பேரி விலக்குவதற்காகவே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் அடிக்குது. என்னது? உன் சோம்பேரியை நீக்குறதுக்காக தான். அப்ப நீ அதை அடிக்குதுன்னு தெரியுது இல்ல? ஏன் சாப்பிடுற? நீயே விளைவி என்றாரு.
அடியவர் 6 :- தொட்டியிலே வளர்க்கலாம்.
குருநாதர் :- அப்பனே, நிலத்தை தரட்டுமா?
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அதை வளர்க்கறதுக்கு?
அடியவர் 7 :- இடம் வேணுமான்னு கேக்குறாரு?
சுவடி ஓதும் மைந்தன் :- இடம் வேணுமான்னு கேக்குறாருங்க. ஐயா,
அடியவர் 7 :- இடம் வேணும்னா சொல்லுங்க.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை இல்லை. அப்பனே, உன் வேலையை செய்து கொண்டே இரு. அனைத்தும் நல்கும்.
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- தொடர்ந்து உன்னுடைய கடமையை செஞ்சுட்டே இரு. நீ அதை வளர்க்கிறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் வரும்ன்றாரு.
பாடகர் :- ( ஹாஸ்யமாக ) அவர் ஒரு ஏக்கர் கேக்குறாரு ஜானகி.
குருநாதர் :- அப்பனே, எது என்று அப்பனே, பின் இங்கெல்லாம் கொடுத்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நாளை பிணங்கள் அப்பனே, புதைப்பிட்டு விடுவார்கள்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க எல்லாம் இடம் கொடுத்தா என்ன பண்ணுவாங்களாம்?
அடியவர் 7:- நாலு பேரை புதைச்சிடுவாங்க….
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஏக்கர் அவர் சொன்னாரு இல்ல? விருகம்பாக்கத்தில்… அங்கெல்லாம் இடம் கொடுத்தாருன்னா, ஒரு ஏக்கர் கொடுத்தாருன்னா, நாளைக்கு பிணம் புதைச்சிட்டு போயிடுவாங்க. எல்லாம்… அங்கெல்லாம் வந்து….
குருநாதர் :- அப்பனே, எங்கு எதை எவை என்று கூற மண் என்று உள்ளது என்பேன் அப்பனே. அவ் மண்ணால் தான் அப்பனே, அனைத்தும் நல்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு மண்ணு இருக்குதாம் வந்து…
அடியவர் :- ஒரு ஊருக்கு, ஒரு மண்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு ஊருக்கு மண்ணு… இதுக்கு தான் வந்து… அந்த மண்ணை வந்து.
குருநாதர் :- அப்பனே, அவ் மண்ணை உட்கொண்டாலே அனைத்தும் விலகும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த நீ ஒரு மண்ணு இருக்குதாம் ? அந்த மண்ணை நீ உட்கொண்டாலே…. எல்லா வியாதியும் போகும்ன்றாரு.
அடியவர் 3 :- அந்த மண்ணுல விளைஞ்சது,
சுவடி ஓதும் மைந்தன் :- விளைஞ்சது இல்ல? மண்ணு… மண்ணு இருக்கு.
அடியவர் 18 :- மண்ணு இருக்குது. ஒரு ஊர்ல, ஒரு சிவன் கோவில்ல அந்த மண்ணு சாப்பிட்டாவே எல்லாம் போற மாதிரி ஒரு மண்ணு. சிவன் கோவில்,
குருநாதர் :- தாயே, இதனால் உங்கள் பின் முன்னோர்களின் ஆன்மாக்கள் அனைத்தும் நீங்கள் தான் முற்று பெற வைக்க வேண்டும். அதனால்தான் கவலை வேண்டாம். திரிவீர்கள். ஆனாலும் மெதுவாகத்தான், முற்று பெற்றவுடன் அவர்களே சரியாக. இதனால் தான் உங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்கள் எவை என்று புரிய, நிச்சயம் பின் வழிபாடு இல்லை. நீங்களாவது வழிபாடு செய்து அனைத்தும் பின் அழைத்துச் சென்று எவை என்று விட்டு விடுங்கள் இறைவனிடத்தில்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உங்களுக்கு என்ன பண்றது? அலையற வேலைதான். அங்க போறது, இங்க போறது. யாரோ சொன்னா அங்க போவோமா, இங்க போவோமா, அப்படி போவோமா? அப்ப உங்களை, உங்களை வச்சுக்கிட்டு அவங்க என்ன பண்றாங்க? முன்னோர்களை?
அடியவர் #1 :- முக்தி அடைய வைக்கணும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொன்னும் முக்தி அடையும் போது உங்களுக்கு நல்லதா இருக்கும். அதெல்லாம் கொடுப்பாருமா. சாப்பாட்டுக்கு எல்லாம் குறையில்லாம கொடுப்பாங்க. பெட்ரோலுக்கு காசு கொடுப்பாங்க. எல்லாமே வரும். ஆனா?
அடியவர் #1 :- நாங்க தான் போய் தேடி கண்டு பிடிக்கணும்….
சுவடி ஓதும் மைந்தன் :- தேடி… அப்படியே போகும் என்று போகின்ற பொழுது ஒருத்தர் ஒருத்தர் லைன் லைன்ல முக்தி அடையும் பொழுது… ஆமா, இது மாதிரி நிறைய இருக்குமா? ஒருத்தர் ஒருத்தருக்கு வந்து சொல்லிடுவார். உங்களால தான் முக்தி அடையனும்னு சொல்லிட்டு… பல பேருக்கு இது மாதிரி வந்திருக்குது. வந்து… அப்ப வரும் பொழுது அவங்களுக்கு சில கஷ்டம் மெதுவாதான் நல்லா இருக்கும். வந்து..
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அவங்க நல்லா முக்தி போனல எல்லாரும் வந்து அப்ப நீங்க தான் அனுப்புனீங்க. அதனால வந்து (முன்னோர்கள் வழிபாடு ) பண்ணிட்டே இருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களால எல்லாம் முக்தி அடையும் பொழுது அவங்க ஆரோக்கியமா இதை பண்ணிருவாங்க.
===========================
# முன்னோர்கள் முக்தி அடைஞ்சாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது?
===========================
அடியவர் #1 :- ( முன்னோர்கள் ) அவங்க முக்தி அடைஞ்சாங்கன்னு நமக்கு எப்படி தெரிஞ்சுக்கிறது?
குருநாதர் :- எதை என்று கூற பின் நீங்கள் அதாவது குறை உள்ளதே, அவை சரியாகிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது குறை இருக்குறது எல்லாம் வந்து… அது என்ன ஆகும்?
அடியவர் 7:- சரி ஆகிடும்….
சுவடி ஓதும் மைந்தன் :- சரியாயிடுச்சுன்னா?
அடியவர் #1 :- அது சரியாகுறதுக்குரிய அறிகுறிகளும் காட்டுமா அய்யா ?
குருநாதர் :- **** நிச்சயம் தன்னில் கூட ****.
சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயம் காட்டிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நீங்க வணங்க வணங்க. அது முக்தி போக போக ஒன்னொன்னு.. போக போக உங்களுக்கு தெரியும். நிச்சயமாக தெரியும்.
===========================
# 488 நோய்களுக்கு ஒரே மருந்து…
===========================
# அன்பு அடியவர்களே , கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
===========================
அடியவர் #2 :- அய்யா இது வந்து கண் சார்ந்த எல்லாத்துக்குமே இந்த கீரைங்களா? இல்ல எப்படிங்க அய்யா?
அடியவர் :- பொதுவாக பொன்னாங்கண்ணி , கரிசலாங்கண்ணி, முருங்கை இலை
குருநாதர் :- எதை எது என்று புரிய பின் அதாவது 488 நோய்கள் எவை என்று புரிய பின் இவை தன் ஒன்றே.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- 488 நோய்களுக்கு இந்த பொன்னாங்கண்ணி கீரை , கரிசலாங்கண்ணி கீரை , முருங்கை கீரை
குருநாதர் :- இவையெல்லாம் நிச்சயம் பின் நன்கு அரைத்து எதை என்று கூற, பச்சை தன்னில் கூட அரைத்து, வெறும் வயிற்று தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் உட்கொண்டு வந்தாலே, நிச்சயம் பின் வெறும் வயிற்றில் அதிகாலையிலே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை எல்லாம் நல்லா அரைக்கணும் வந்து….
அடியவர் :- பச்சையா சாப்பிடணும்,
சுவடி ஓதும் மைந்தன் :- பச்சையா சாப்பிடணும்…..
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ( பிள்ளைகளுக்கு ) கொடுங்கம்மா. ( பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை ) நிறைய கொடுங்கம்மா.
அடியவர் #1 :- நான் குடுத்துட்டேன். போன தடவையா ஐயா வாக்கு சொல்றப்பயே இதுவரைக்குமே தொடர்ந்து கொடுத்துட்டு இருக்கோம்.
குருநாதர் :- அப்பனே, எவை என்று கூற பின் அடிக்கடி அப்பனே பின் நிச்சயம் தன்னில் பிம்பத்தை கழட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அடிக்கடி இது ( கண்ணாடி) கழட்டணும்ன்றாரு.
அடியவர் :- கண்ணாடிய காட்டணும்னு சொல்றார்
அடியவர் #2 :- ( கண்ணாடி) கழட்ட மாட்டேங்குறாங்க அய்யா. கழட்டுனா தெரியு மாட்டேங்குது என்று சொல்றான் அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- தம்பி, கழட்டு. நீ வந்து.
அடியவர் # 1 :- கழட்டுனா blur ஆ இருக்குனு சொல்ரான் அய்யா…
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்லி இருக்காரு. ஓகேங்களா?
அடிக்கடி கழட்டணும். ஓகேவா?
அடியவர் #2 :- கழட்டுனா தெரிய மாட்டேங்குது என்று சொல்கிறான் அய்யா.
குருநாதர் :- அப்பனே யான் பார்த்துக் கொள்கின்றேன்
அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்களை )
( சில உரையாடல்கள் )
குருநாதர் :- எவை என்று புரிய பின் நிச்சயம் இப் பிம்பமே. அப்பனே, பின் எவை என்று கூற சில நோய்களை உருவாக்கும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கண்ணாடியே….. சில பிராபலத்தை (problem) உருவாக்கும். ஓகேங்களா?
===========================
# முன்னோர்கள் …சிறுவனாக பிறந்து ….
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய இதனால் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவனால் எது என்று புரிய அப்பனே, பின் எவை என்று அறிய பின் இவன், அப்பனே, ஏற்கனவே பிறந்தவன் தான் அப்பா, எது என்று புரிய. இதனால் , அப்பனே, எது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இவன் ஏற்கனவே பிறந்தவன் தான். முன்னோர்கள்ல… ஏதோ வந்து….. ஓகேங்களா? உங்களை விட முன்னோர்கள் தான். அப்ப, உங்க பேச்சு கேக்குறான் என்பது…. உங்களை விட அறிவாளி தான் இருப்பான். ( மிரட்டும் தொனியில் ) அது பண்ணு, இது பண்ணு. வீட்ல மிரட்டுவான். எல்லாரையும் வந்து…. ஏன்னா, உங்களை விட வந்து பெரியவர்தான் இருக்கும் பொழுது, இவர் மூலமா ஏதோ வந்து எல்லாரும் என்ன பண்றாங்க வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அவங்க மூலமா நீங்க பண்ணனும். எல்லாம் அப்ப பண்ணும் பொழுது, அந்த ஆண்மக்கள் ஒவ்வொன்னா ஒவ்வொன்னா சாந்தி அடைஞ்சு.
குருநாதர் :- அம்மையே, இதனால் தான் இப்படித்தான் ஒவ்வொன்றாக உனக்கு சொல்லி எவை என்று அறிய பின் பக்குவப்படுத்தி அனைத்தும் கொடுத்து விடுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, ஒவ்வொரு இதுலயும் உனக்கு சில விஷயங்களை நான் சொல்றேன். அதனால, வந்து நீங்க அப்படியே
குருநாதர் :- இதனால் எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட கவலைகள் இல்லை. யானே அழைத்துச் செல்வேன் சில இடங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, நீங்க கவலைகள் படாதீங்க. வந்து சில இடங்களுக்கு யானையை கூட்டிட்டு, நானே கூட்டிட்டு போறேன்.
===========================
# சித்தர்கள் அருள் இருந்தால் மருத்துவம், நன்றாகும்.
===========================
# சித்த மருத்துவத்தில் மந்திரங்கள் யாரும் உபயோகிப்பதே இல்லை
===========================
அடியவர் # 2 :- மருந்துகள் எடுக்கலாமா? ஐயா, சித்த மருத்துவத்துல மருந்து…. ?
குருநாதர் :- எது என்று புரிய. தாயே, எடுத்தாலும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறும். மெதுமெதுவாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- எடுத்தாலும், பொறுமை.
அடியவர் # 1 :- அந்த மருந்துகள் மேல நம்மளுக்கு ஒரு நம்பிக்கை வரணும் இல்லையா? அதை எடுக்கலாமா? என்ன? அப்படிங்கறதுக்காக.
குருநாதர் :- தாயே, போக போக புரிய வைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது போக போக உங்களுக்கு புரிய வைக்கின்றார் என்றாரு. அதனால, வந்து எது எடுத்தாலும் கொஞ்சம் லேட் ஆகும்ன்றாரு. வந்து நானும் பார்த்துக்கிறேன்மா என்றாரு.
குருநாதர் :- தாயே, எவை என்று கூறப்பின் மருத்துவம் எவை என்று கூறப்பின் எங்கள் அருளால் தான் எவை என்று புரிய. அதற்கும் மந்திரங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இப்பொழுது அதை உபயோகிப்பதே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- மருந்து சாப்பிட்டாலும் மந்திரம் சாப்பிடணும். மந்திரம் அதுக்கு உயிர் கொடுக்கணும். ஆனால் இன்றளவு ?.....
அடியவர் :- யாரும் கொடுக்கிறது இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- யாரும் கொடுக்கிறதே இல்லை.
குருநாதர் :- இதனால் , அதிக அளவு நிச்சயம் செயற்கைதான் நாடுவான். கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதிக அளவிலே என்ன பண்ணுவாங்க? செயற்கைதான் நாடுவான்.
குருநாதர் :- நிச்சயம் இவ்வாறாக வரும் காலத்தில், நிச்சயம் இவ்வளவு எது மூலிகைகளுக்கு என்ன மந்திரம்? பின் எவை என்று கூட சொல்கின்றேன். உயிர் பிழைத்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்துல மந்திரமும் மந்திரமும் சொல்லித் தராது. உயிர் பிழைத்துவிடும். என்னது?
அடியவர் :- அந்த அந்த செடியை பறிக்கும் போது…..
===========================
# பழங்கள் மூலம் எப்படி உயிர் சக்தி பெறுவது?
===========================
குருநாதர் :- தாயே, இப்பழங்களை வைத்துள்ளீர்கள். நீங்கள் எதை என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- பழத்தை எல்லாம் வச்சிருக்கீங்க. வந்து
குருநாதர் :- அறிந்தும் ஆனாலும், ஏது ஏது எதற்கு என்றால், நிச்சயம் தனி அனைவரும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இறைவனிடம் வைத்தால் , அதற்கு உயிர் சக்தி கிடைத்துவிடும். நீங்கள் உட்கொள்ளலாம் என்று…
அடியவர் #1 :- இறைவனுக்கு படைச்சு நமக்கு…. இது பண்றது… அதனால சக்தி வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் வந்து உயிரற்ற பொருட்கள். அப்போ, இறைவன் எல்லாம் வைக்கிறீங்க. எல்லாம் பழங்கள் எல்லாம் சொல்லிட்டு… படைக்கும் பொழுது, அது வந்து இறை வணங்கும் பொழுது, அது ஒரு சக்தி வரும். அதை நீங்கள் உட்கொண்டால், உடம்புக்கு நல்லது.
குருநாதர் :- தாயே, இதனால் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒவ்வொன்றாக சொல்கின்றேன். கவலைகள் விடு.
அடியவர் #3 :- ஐயா, இப்ப எனக்கு இந்த மாதிரி கண்ணாடி நீங்க கழட்ட சொல்றீங்க. ஆனா, இது முன்னாடியே கொஞ்ச நாள் கழட்டுனதுனால கண்ணுல ரொம்ப வலிக்குதுன்னு சொல்லி அழுது இருக்கான். அப்ப?
குருநாதர் :- தாயே, நிச்சயம் பின் எவை என்று புரிய. பின் கவலை வேண்டாம். யான் பார்த்துக் கொள்கின்றேன். பின் மூலிகைகளை யான் சொல்லிய மூலிகைகளை இட்டுக் கொண்டே இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ கவலைப்படாதம்மா. அடிக்கடி கழட்ட சொல்லுங்க. வந்து ஓகேங்களா? கழட்டும் பொழுது…….
குருநாதர் :- தாயே, இவையே எதை என்று கூறப்பின், நிச்சயம் தன்னில் கூட. அதாவது, நிச்சயம் தன்னில் கூட. பின் இவையும் பின், அதாவது போதை பொருள் எவை என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு போதை மாதிரிதான். எல்லாமே இப்ப குடிக்கிறாங்கன்னா, வந்து அது விட்டா என்ன ஆகும்? ஆனா, உடம்பு நல்லா இருக்கும். குடிச்சு இருப்பான் ஒருத்தன். வந்து அது விட்டா என்ன ஆகும்? கை கால் தளரும்….அந்த நிலைமைக்கு அப்படியே வந்துரும். டேய், என்னடா இதுன்னு சொல்லிட்டு வந்து, அதனால ஒரு கெட்ட பழக்கத்துல இருந்து சீக்கிரம் விட்டான்னா என்ன ஆகும்? அதனால வந்து கஷ்டமாதான் இருக்கும். கஷ்டமாதான் இருக்கும். வந்து ஓகேங்களா?
குருநாதர் :- தாயே , கவலைகள் இல்லை. பார்த்துக் கொள்கின்றேன். அடுத்தடுத்த வாக்கு சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் சொல்றது செய்யுங்க வந்து….
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சிலர் எவை என்று அறிய பின், அதாவது, பின் குளிர்ந்த பின் பழங்கள் எல்லாம் கண்களில் இடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- குளிர்ந்த பழங்கள் எல்லாம் வெள்ளரிக்காய், பிஞ்சு தண்ணி பழங்கள். தண்ணி பழங்கள் எல்லாம் கண்கள்ல வந்து கொஞ்சம் கொஞ்ச நேரம் விடுங்க.
அடியவர் #3 :- இல்ல. இதுல வச்சிருக்கிற வெள்ளரிக்காய் அப்படியே கட் பண்ணி, ஒயிட் கிளாத் வச்சீங்க. அது மேல பழத்துண்டுகளை வச்சு கொஞ்ச நேரம் குளிர்ச்சி பண்றதுக்காக
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மாதிரி பண்ணுங்க.
===========================
# இறை பலங்கள் மனிதனுக்கு தெரியாது……
===========================
குருநாதர் :- ( ………………………………………… ……………………… ……………………………………………… ………………………………………. ஒரு அடியவரின் குழந்தைக்கு குருநாதர் மகத்தான ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு விதி ரகசியங்கள், இறை பலங்கள் ரகசியங்கள் அடங்கிய வாக்குகள் அருளினார்கள். …….. …..………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… )
===========================
# அடியவர் # 4 பாடல்கள் பாடினார்கள்
===========================
பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே…
குருநாதர் :- அப்பனே, இவ் பொருள் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- நீ படிச்சியே அதோட பொருள் என்னன்னு கேக்குறாரு.
அடியவர் # 4:- இந்திரலோகத்தை விட நீதான் வேண்டும் அப்பா,
குருநாதர் :- அப்பனே, எப்படியோ பின் எவையோ தப்பித்துக் கொண்டாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ ஒன்னு சொல்லி தப்பிச்சிட்டப்பா.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் # 4:- உங்கள் பிள்ளை அல்லவா….
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட அறிந்தும் எவை என்று கூற, எதையோ சொல்லி தப்பித்துக் கொள்கின்றாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதையோ சொல்லி தப்பித்துக் கொள்கின்றாய்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- அப்பனே, கேள்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்கலாம்.
அடியவர் # 4:- நம் வீட்டில் வேல் வழிபாடு செய்கின்றோம்.
குருநாதர் :- அப்பனே, எது என்று நீ அழைத்து வந்தாயே. பின் ஒன்று சேர்ந்து எவை என்று கூறுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ரெண்டு பேரு ஒன்னா நின்னுங்கன்றாரு. இன்னொரு வாங்க, இன்னொரு வாங்க,
அடியவர் 7:- முன்னாடி வாங்க.
இது ரசனாமா. உள்ள வாங்க. ஐயா, சூப். ஐயா, ஐயா, அடுத்த சூப் சூப் குடிக்கிறாங்க. உள்ள போய் படுத்துக்கடா. உள்ள போய் படுத்துக்க. கண்ணாடி கை. லெமன் ஜூஸ். லெமன் ஜூஸ் சாப்பிடுறீங்களா? லெமன், லெமன், லெமனா. ஓகே, இந்த பழம் இருக்குமா? இந்த ஆரஞ்சு ஆப்பிள் கூட ஆப்பிள் இங்க இருக்கு. ஆப்பிள் போடலாம். ஆப்பிள் போட்டு கொடுப்பான். ஏய், முன்னாடி வாங்க. ஐயா, முன்னாடி வாங்க. ரெண்டு பேரும்
குருநாதர் :- அப்பனே உங்களுக்கு சந்தர்ப்பத்தை தருகின்றேன். நீ ஒரு கேள்வி, அவன் ஒரு கேள்வி.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ ஒரு கேள்வி, அவர் ஒரு கேள்வி. கேட்கலாம்.
அடியவர் #4:- ஐயா, நம் வீட்டில் வேல் வழிபாடு செய்கின்றோம். ருத்ராட்சத்தில் இடும் குவளை மட்டும் நீர் கணிசமாக தினமும் குறைகின்றது. ஐயா,
குருநாதர் :- அப்பனே, இதன் தன்மை இப்பொழுது யான் உரைக்கப் போவதில்லை. இப்ப சொல்ல மாட்டாராம்.
அடியவர் #5:- ஐயா, ஒரு பாடல் சொல்லிட்டு கேட்கலாமா?
குருநாதர் :- அப்பனே, பாடும்,
சுவடி ஓதும் மைந்தன் :- பாடும்.
===========================
# அடியவர் #5 - அருமையான “அகத்தீசர்” பாடல்கள் பாடினார்கள்
===========================
===========================
(கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டு முறை பாட சொல்லி கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்களுக்கு பின் வரும் இவ் பாடலை அனைவருக்கும் எடுத்துச் செப்புக…)
===========================
அ - என்று சொல்லினிலே அன்பை தருவாய், போற்றி !!!!!
ஆ - என்ற சொல்லினிலே ஆணவத்தை போக்குவாய், போற்றி !!!!!
இ - என்ற சொல்லினிலே இயல், இசை, நாடகத்தை தருவாய், போற்றி !!!!!
ஈ - என்ற சொல்லினிலே ஈன்றவர் நெஞ்சை மகிழ்விப்பாய், போற்றி !!!!!
உ - என்ற சொல்லினிலே உலகெலாம் வலம் வருவாய், போற்றி !!!!!
ஊ - என்ற சொல்லினிலே ஊன் உடம்புக்குள்ளே ஆலயம் அமைத்தாய், போற்றி !!!!!
எ - என்ற சொல்லினிலே எங்களையும் வாழ வைப்பாய், போற்றி !!!!!
ஏ - என்ற சொல்லினிலே ஏழு பிறப்பின் நிலையை மாற்றுவாய், போற்றி !!!!!
ஐ - எனும் சொல்லினிலே ஐயம்பட உரைப்பாய், போற்றி !!!!!
ஒ - எனும் சொல்லினிலே ஒளியின் ஒளியாய் இருப்பாய், போற்றி !!!!!
ஓ - என்ற சொல்லினிலே ஓம்கார பிரணவ வடிவே, போற்றி !!!!!
ஔவெனும் சொல்லினிலே ஔடதமாய் இருப்பாய், போற்றி !!!!!
அகத்துக்குள் வாழுகின்ற ஈசனே !!!! போற்றி, போற்றி, போற்றி !!!!!
அகத்தீசனே !!!!! போற்றி, போற்றி, போற்றி, போற்றி !!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete