​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 19 November 2024

சித்தன் அருள் - 1734 - கலந்துரையாடலின் முன்னுரை - 3 !


​மனிதனை பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன். தவறுகள்  செய்கின்றான். செய்யாதே! செய்யாதே என்று திரும்பித் திரும்பி கூறி வருகிறேன். கடைசியில் "காப்பாற்றுங்கள் சித்தர்களே!" என அழுவானப்பா! குழம்புவானப்பா! இப்படிப்பட்ட மனிதனை பார்த்துப் பார்த்து சலித்துவிட்டேன் அப்பனே. இப்படியே போய் கொண்டிருந்தால், சித்தனே பொய்! பின் இறைவனே பொய்! என்று கூறத் தொடங்கிவிடுவான்!

இறைவன் காட்சி கொடுக்க தயாராக இருக்கின்றான்! ஆனால், நீங்கள் சூழ்ச்சிகள் செய்கின்றீர்கள். கலியுகத்தில், இறைவனே நேரடியாக வருவானப்பா! சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்பனே! நீங்கள் நம்பினால், நம்புங்கள். ஆனால், நிச்சயம் வருவானப்பா. ஆனால் மனிதன் என்ன சொல்வானென்றால், "கடவுளா? வேஷம் போட்டுவிட்டாயா?" என்றெல்லாம் கூறுவான். இப்படித்தான் கலியுகம் என்பேன் அப்பனே!

[இதில் அடியேனின் கருத்து! அகத்தியப்பெருமான் கூறுவது உண்மை! இறைவன் காட்சியளித்து கேட்பான். "உனக்கு என்ன வேண்டும் என்று? அல்லது உன் சார்பாக ஏதேனும் தானம் செய்" என்று. மிக மிக தெளிவாக இருங்கள். அப்படி ஒரு சூழ்நிலை நீங்கள் சந்திக்க வேண்டி வந்தால், என்ன வேண்டும் என கூறுவீர்கள்? என்ன தானம் செய்வீர்கள்? இப்பொழுதே யோசித்து தெளிவாக அமர்ந்து விடுங்கள்! இறைவன் வரட்டும், காத்திருங்கள்!]

குருநாதர் தொடர்கிறார்!

இறைவன் அருளாசிகளுக்கு தயாராக இருக்கிறானப்பா! மனிதன் "புத்திகளுக்கு" எட்டவில்லை அப்பா! அதனால் தான் சொல்லுகின்றேன், புத்தியை அதிகப்படுத்து என்று. அவ் புத்திகள் அதிகமாகிவிட்டால், இறைவன் கண்ணுக்கு தெரிவானப்பா! அதனால் தான் அப்பனே, புண்ணியத்தை கடை பிடியுங்கள், தர்மத்தை கடை பிடியுங்கள், நீதி, நியாயத்தை கடைபிடித்து வாழுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். ஈசன் காத்துக் கொண்டே இருக்கின்றான். கோபப்பட்டால் நிச்சயம்! அதாவது தலை முடியை பின்னி வைத்துள்ளானப்பா! அதை கோபத்தில் அவிழ்த்துவிட்டால், அவ்வளவுதானப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே! இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்வேன் அப்பனே!

அப்பனே! நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, உடம்புதான் தூங்கும் என்பேன்! ஆன்மா தூங்குமா என்றால், நிச்சயமாக இல்லை அப்பா! ஆன்மா தூங்கிவிட்டால் அவ்வளவுதான். ஆன்மா சுற்றிக்கொண்டே இருக்குமப்பா! என்னென்ன புண்ணியங்கள் செய்தோம், என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதற்கு ஏற்றவாறே உடம்பை பயன்படுத்தும் அப்பா! ஆன்மாவை கொண்டு காந்தத்தில் சேர்க்க வேண்டும்! அவ் காந்தம் தான் இறைவன் என்பேன்.

உங்களை பக்குவப்படுத்தி நன் முறைகளாக விளக்கங்கள் செப்பிவிட்டால் போதுமானதப்பா. அகத்தியனே! என்று சொல்லிவிட்டால், அவ் ஆத்மாவும் கூட சொந்த பந்தங்கள் இன்றி வாழும். அனைத்தையும் எழுதி வைத்திருக்கின்றேன். நிச்சயம்! தீய சக்திகளை நாடி விடாதீர்கள் என்பேன் அப்பனே!

என் பக்தன் ஒருவன் இருந்தான்! நிறைய உதவிகள் செய்தேன்! ஆனாலும், சில நாட்களில் சூழ்ச்சிக்குள் சென்று விட்டான், ஆனாலும் சுடுகாட்டுக்குள் சென்று சூழ்ச்சி செய்து ஒரு ஆத்மாவை ஒரு பெண்மணியின் உடலுக்குள் செலுத்திவிட்டான். அப்பெண்மணியும் என் பக்தை! அகத்தியனே! என தினமும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ஒருவன் செய்த தவறு, எங்கு தீங்கு செய்துள்ளது என பார். இதுவா பக்தி? சுடுகாட்டில் யான் செய்யச் சொன்னேனா என்ன? பின் அவனோ, அகத்தியனை தான் நம்பிக்கொண்டிருந்தேன்! பின் சித்தன் தான் செய்யச் சொன்னான் என்று! வேறொரு பக்தன் இருந்தானப்பா! நன்றாக பாடல்களை பாடுவான். பெண் விஷயத்தில், வேண்டாமடா! என்று கையை பிடித்து கெஞ்சினேன்! கையை உண்மையாகவே பிடித்தேன் அப்பா! வேண்டாமடா! வேண்டாமடா! என்று! என் மீதும் பாடல்களை நன்றாக பாடியிருந்தான். ஆனால் கடைசியில் பார்த்தால், மாயையில் சிக்கி கொண்டான். காதல் வலையில் சிக்கி கொண்டான். என் மடியின் மீதும் அவனை உறங்க வைத்து வேண்டாமடா என்று சொன்னேன். பின் அப்படியும் திருந்தவில்லை.

இங்கு யார் தவறு? நீங்கள் தான் அப்பா! உங்களில் பலரையும் கையை பிடித்து பல சூழ்நிலைகளில் கையை பிடித்து "வேண்டாமப்பா!" என்றுதான் கூறுகிறேன். ஆனால், மாயையை தான் நீங்கள் விரும்புகின்றீர்கள்! மாயை விருப்பங்களை யான் கொடுக்கப் போவதில்லை.  அனைவருமே மாயையை விரும்புகின்றார்கள்! அப்பனே! படைத்தவன் ஈசன். அவ் வாழ்க்கையை நடத்துவதற்கு என்ன தேவை என்பதை அவன் அருளுவான். அதை பெற்றுக் கொண்டாலே போதுமானதப்பா. 

எதற்காக பிறந்தோம், எப்படி வாழவேண்டும் என்பதை உணர்ந்துவிட்டால், மறுபடியும் பிறவி இல்லையப்பா. இறைவனிடம் சென்று சேர்ந்துவிடலாம். ஆகவே அதை தெரிந்து கொள்ளுங்கள்.

எம்முடைய ஆசிகள்!

கலந்துரையாடலின் முன்னுரை நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. அவர் தலைமுடியை அவர் அவிழ்த்து விட்டு போகிறார் இதில் யாருக்கு என்ன பயன் என்று

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக. 🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக இருகிறது. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏

    ReplyDelete
  6. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  7. ஓம் சிவாய நம ஐயா. அருள்மிகு அகத்தியர் ஐயா திருவடி சரணம். தங்களிடம் ஜீவ நாடி பார்க்க திருவடி பற்றி வேண்டுகிறேன் ஐயா. தொடர்பு எண் 9476025003.மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete