​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 16 November 2024

சித்தன் அருள் - 1729 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!





27/9/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி மீர் காட் கங்கைக்கரை.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள்!!! அப்பனே!!

அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே எதை என்றும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் உண்மைதனை கூட அப்பனே எதிர்பார்க்காமல் அதாவது உண்மை என்னவென்று அப்பனே ஆராய்ந்து அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே தெளிவு பெறாமல் அனைத்தும் செய்வானப்பா!!

இதற்கு தண்டனைகள் உண்டப்பா!!!

உண்டு உண்டு மனிதனின் ஏற்றங்களும் கூட அப்பனே... அதேபோல் எவ்வளவு ஏற்றங்கள் உள்ளதோ!!! அதேபோல் தாழ்வுகளும் உண்டு என்பேன் அப்பனே!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே பின் உலகத்தோர் நல்விதமாகவே அப்பனே பின் அறிந்தும் கூட நிச்சயம் அனைத்தும் தெரிந்தும் கூட வாழ வேண்டும்!!
வாழ வேண்டும் அப்பனே!!

அவ்வாறு தெரியாமல் வாழ்ந்தாலும் பயன் இல்லை என்பேன். அப்பனே..

பின்பு குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள் என்பேன் அப்பனே!!! அவை பொய் பின் இவை உண்மை என்றெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே உண்மை எது??? பின் பொய் எது?? அப்பனே தீர்மானிக்கும் அதாவது அறிவு மனிதனிடத்தில் இருக்கின்றதப்பா!!

ஆனால் மனிதனோ???? மாய வலையில் சிக்கிக் கொண்டு அப்பனே... பின் அறிந்தவையும் கூட மறந்து விட்டு... அப்பனே மீண்டும் கடைசியில் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட அனைத்தும் விட்டுவிட்டு அதாவது...அடிபட்டு அப்பனே மீண்டும் அப்பனே இறைவனிடத்திற்கு வருகின்றானப்பா!!!

அதேபோல் அப்பனே முதலிலே வந்திருந்தாலே அப்பனே அதே போலத்தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே முதலிலே அதாவது சிறு வயதிலே இறைபலங்கள் அப்பனே நிச்சயம் பின் கற்பிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அவ்வாறு கற்பித்தால் தான் அப்பனே நிச்சயம் வரும் காலம் அப்பனே பின் நன்மைகளாக முடியுமப்பா!!!

ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி இல்லையப்பா!!! இதனால் அப்பனே யாங்கள் அதாவது அறிந்தும் கூட பின் எவை என்றும் புரிந்தும் கூட உலகத்தோருக்கு சிறுவயதிலிருந்தே அப்பனே நிச்சயம் பக்திகள்... பின் எவ்வாறு புகுத்துவது என்பதையெல்லாம் வரும் வரும் காலத்தில் யார் மூலம் எதனை பெறச் செய்வது?? என்பதையெல்லாம் அப்பனே மாற்றம் அடைய செய்வோம் அப்பனே 

எவ்வாறு?? மாற்றம் என்பதை கூட... இறை பலத்தாலே மாற்றம் அடைய செய்வோம் அப்பனே 

இதனால் அப்பனே ஏன்? இங்கு தவறு நடக்கின்றது? என்பேன் அப்பனே!!...

அதாவது அப்பனே அறிந்தும் கூட அப்பனே... உன்னை ஏன் ஏமாற்றுகின்றான்?? மற்றொருவன்!! என்றால் அப்பனே பின் இறைவன் அனைவருக்குமே சமமான அறிவை தான் கொடுத்திருக்கின்றான் அப்பனே 

ஆனால்... யார் ஒருவன் ? அவ் சமமான அறிவை பயன்படுத்தவில்லையோ?! அப்பனே பின் மற்றொருவன் அதை வைத்துக்கொண்டு அதாவது அவ் அறிவை வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றான் அப்பனே 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! எதை என்று அறிய அறிய எவை  ஏமாற்றம் இவ்வுலகத்தில்?? அனைத்தும் ஏமாற்றம்!!...

ஆனால் இறைவன் மட்டும் அப்பனே மனிதன் எவை என்று அறிய தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

பின் அதாவது பின் இறைவன் மட்டும் அப்பனே ஏமாற்ற மாட்டான் என்பேன் அப்பனே கடை நாள் வரையிலும் கூட அப்பனே 

ஆனாலும் பின் தெய்வத்தை வணங்க வணங்க அப்பனே சில காலங்கள் பின் கஷ்டங்கள் ஏற்படலாம்...

ஆனாலும் அப்பனே பின் கடைசியில் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அது தான் அப்பா... சொர்க்கம்!!

ஆனாலும் அப்பனே மாயையை நம்பி கொண்டு அப்பனே சென்றடைந்தால் அப்பனே நிச்சயம் சொர்க்கம் போல் தெரியும் அப்பா.... ஆனால்?? கடைசியில் நரகமாகிவிடும் அப்பா!!!

ஆனாலும் அப்பனே பின் மனிதனாக  பிறப்பெடுத்து விட்டீர்கள்!!! ஏன் மாயையை கொண்டு பின் புகுத்தியுள்ளீர்கள்.... என்பதை எல்லாம்... சில மானம் கெட்ட மனிதர்கள் கேட்பார்களப்பா!!!

அப்பப்பா... அதனால்தான் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் அறிவை இறைவன் பலமாக கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே பின் அறிவை சரியாக பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே 

அவ் அறிவை சரியாக பயன்படுத்தி விட்டால் அப்பனே நிச்சயம் தோல்விகள் இல்லையப்பா வெற்றிகள் தான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே ஏன் எதற்கு சுற்றுகின்றான் மனிதன்?? என் ஆலயங்களுக்கு செல்கின்றான் என்றெல்லாம் அப்பனே தெரியாமல் பின் நிச்சயம் அதாவது... அவை இவை அங்கு சென்றால் இவை நடக்கும் இங்கு சென்றால் அவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே....

ஆனால் தன்னைத் தானே அறிவது முதல் வகை அப்பனே பின் பக்தி என்பேன் அப்பனே 

தன்னை அறியாமல் அதாவது தன்னை அறியாமல் எங்கு சென்றாலும் பின் அவை பொய்யான பக்திகள் தான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இறைவனை வைத்து கலியுகத்தில் வியாபாரம் செய்வார்களப்பா... அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் ஒன்றும் பயனில்லை அப்பா 

பார்த்தீர்கள் என்றால் அப்பனே பின் அவனாலே அவன் குடும்பத்தையும் கூட பின் நிச்சயம் பார்க்க முடியாதப்பா 

ஆனால் இறைவனை பார்க்கப் போகின்றானாம்?!?!?!?!?!?! அப்பனே!!!

இதனால் அப்பனே முதலில் தம் தன் கடமையைச் செய்யுங்கள் ஒழுங்காக என்றெல்லாம் அப்பனே தெரிவித்து கொண்டே வருகின்றேன். 

ஆனாலும் கடமையையே செய்வதில்லையப்பா!!! கடமையைச் செய்யாமல் இறைவனை வந்து அடைந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இறைவன் மிகப் பெரியவன் அப்பா 

இறைவனுக்கு தெரியும் அப்பா அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் எப்பொழுது தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் அப்பனே பின் இறைவனுக்கு அதாவது பின் இறைவனுக்கு வாழ தெரியும் அப்பா.... ஆனால் மனிதனுக்குத் தான் வாழ தெரியாதப்பா...

ஏதோ மனிதன்... இறைவனுக்கு வாழ தெரியாது என்றெல்லாம் எண்ணி... அப்பனே பின் நாம் தான் இறைவனை வாழ வைக்கின்றோம் என்றெல்லாம் அப்பனே பூசைகள் இன்னும் எதை எதையோ????!!!........

ஆனாலும் அப்பனே அன்பு அங்கு விளைவதில்லையப்பா.. அப்பனே பொய்யான பக்திகளை தான் காண்பிக்கின்றானப்பா

அப்பனே நீதி நேர்மை எவை என்று அறிய அறிய அப்பனே அவை மட்டுமில்லாமல் இவை கடைபிடிக்க வேண்டும் அவை மட்டும் இல்லாமல் அப்பனே பொறாமை குணத்தை நீக்க வேண்டும்... அப்பனே காமத்தை நீக்கி விட வேண்டும் அப்பனே பின் அனைத்து உயிரையும் அப்பனே பின் தன் உயிர் போல் என்ன வேண்டும்.. அனைத்து மனிதர்களும் கூட பின் தம் சொந்தக்காரர்கள் என்று எண்ண வேண்டும்.. பகையை நீக்க வேண்டும். அப்பனே பின் நீதியை நிலை நாட்ட வேண்டும் தர்மத்தை காக்க வேண்டும் அப்பனே 
இவைதான் பக்தி அப்பா முதலில் அப்பனே 

ஆனால் இவையெல்லாம் செய்யாமல் அப்பனே முதலிலே அப்படி பின் அறிந்தும் கூட இறைவனிடத்தில் சென்றால் ஒன்றும் நடக்க போவதில்லை. 

ஆனால் பின் சென்று கொண்டே இருப்பானப்பா இறைவனிடத்தில் 

ஆனால் அப்பனே ஒன்றும் நடக்கவில்லையே ஒன்றும் நடக்கவில்லையே என்று அப்பனே பின் பிதற்றுவானப்பா..

அப்பனே இறைவனுக்கு நீ என்ன செய்தாய்?? அப்பனே!!
முதலில் அதை சிந்தித்தீர்களா?? அப்பனே!!
அறிந்தும் கூட 

அப்பனே ஒன்றும் செய்யத் தேவையில்லை... இப்போது யான் சொன்னேனே அதை செய்தாலே போதுமானதப்பா 
இறைவனுக்கு. 

மற்றவை எல்லாம் அப்பனே உன்னை உயர்த்தி பின் தானாகவே அப்பனே பின் செய்து கொள்ளலாம் உன்னிடத்தில் இருந்து எதை என்று அறிய அறிய 

அப்பனே அதனால் தகுதி உள்ளவனையே அப்பனே இறைவன் தேர்ந்தெடுத்து தீர்மானித்து அனைத்தும் செய்கின்றான் என்பேன் அப்பனே 

தகுதி இல்லாதவனிடம் கொடுத்தால் அப்பனே அனைத்தையும் நாசமாக்கி விட்டு சென்று விடுவான் அப்பனே

ஆனாலும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் வரும் வரும் காலங்களில் மாறும் அப்பா. 

அப்பனே ஏன்? எதற்கு? பின் அறிந்தும் கூட அதாவது பின் இவ்வுலகம் அப்பனே.பின் பூஜ்ஜியத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... அவ் பூஜ்ஜியத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்பேன் அப்பனே. 

யார் ஒருவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய... ஆனாலும் அப்பனே பூஜ்ஜியத்திற்குள்ளே இருந்தாலும் அப்பனே...  வினை அப்பனே பூஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தாலும் வினை... அப்பனே அறிந்தும் கூட 

அதனால் ஒரு வட்டத்தை அப்பனே நீங்களே அமைத்துக் கொள்ள வேண்டும்.. இப்படித்தான் வாழ வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே எண்ணி நிச்சயம் வாழ்ந்து வந்தால் நிச்சயம் அப்பனே கர்மங்கள் வராதப்பா 

அப்பனே அவை மட்டுமில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே... அனைத்தும் ஈசனுடைய குழந்தைகள்... மீண்டும் சொல்கின்றேன் அப்பனே இவ்வுலகத்தில் அனைத்தும் ஈசனுக்கு உரியது!!! அதாவது ஈசனுக்கு சொந்தமானது என்பேன் அப்பனே. அனைத்து உயிர்களும் கூட!!

ஆனால் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அவற்றையெல்லாம் கொன்று பின் உட்கொண்டால் அப்பனே நிச்சயம் வரும் வரும் காலத்தில் பெரிய பெரிய நோய்கள் எல்லாம் உருவாகும் அப்பா 

அப்பனே இவைதன் யாராலும் குணப்படுத்த முடியாதப்பா 

அப்பனே என்னை தேடி வந்தாலும் அப்பனே யான் பொறுத்திரு !! என்று தான் சொல்வேன். 

ஏனென்றால் அப்பனே நிச்சயம் தெரிந்து அவை எல்லாம் அதாவது அப்பனே தவறு என்று தெரிகின்றது... ஆனாலும் அப்பனே அதை தான் செய்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே...

அதாவது பாவம் என்று தெரிகின்றது... அப்பனே ஆனால் பாவத்தை பின் செய்கின்றானப்பா 

ஆனாலும் அப்பனே புண்ணியம் என்று தெரிகின்றது ஆனால் அவ் புண்ணியத்தை மனிதன் பின்பற்றுவதே இல்லையப்பா!!

அப்பனே எதற்கு பின் பல (யோகா) ஆசனங்கள்???? அப்பனே இன்னும் எதை எதையோ??? மூச்சுப் பயிற்சிகள்!!!! இன்னும் அப்பனே எதை எதையோ??
ஏன்? எதற்கு அப்பனே... ஏற்கனவே சொல்லிவிட்டேன் மீண்டும்... ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!

அப்பனே பின் வழிபாடுகள் அப்பனே இன்னும் இன்னும்!!! ஏனென்றால் மனதை கட்டு அதாவது கட்டுக்கோப்பாக பின் வைத்துக்கொள்ள வேண்டும்!!. பின் அதாவது அப்பனே... இன்னும் வசி (வாசியோகம்) அதாவது யோகங்கள்!! இன்னும் இன்னும் வஜ்ரம் (வஜ்ராசனம்) அப்பனே எதை என்று கூட உடம்பு எவை என்று அறியாமல் கூட... ஆனாலும் இவற்றை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் அப்பனே பின் மனது அதாவது மனதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காகவே என்பேன் அப்பனே 

அப்பனே உடம்பை பெற்றுவிட்டால் மனதும் நிச்சயம் அப்பனே பின்  தானாகவே அங்கும் இங்கும் அலை மோதும் என்பேன் அப்பனே...

ஆனால் பின் அவை அலை மோதாமல் இருக்க அப்பனே நிச்சயம் சில திருத்தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே... அங்கு சென்று வந்தாலே போதுமானதப்பா!!!

அப்பனே நிம்மதி அப்பனே அதாவது 12 ஜோதிர் லிங்கங்கள் என்பேன் அப்பனே.


அங்கெல்லாம் அப்பனே பெரிய பெரிய பின் அப்பனே கிரகங்கள் இன்னும் இருக்கின்றதப்பா.. தெரியாமல்....

அவையெல்லாம் இன்னும் அப்பனே மனிதனால் பின் கண்டுபிடிக்கவே இல்லை அப்பா 

ஆனாலும் அங்கு தான் பின் அழகாகவே 12 ஜோதிர்லிங்கங்களை சுற்றி விழுகின்றது என்பேன் அப்பனே... (கிரகங்களின் கதிர்வீச்சு )அதனால் தான் அப்பனே பின் ஈசன் அழகாகவே அப்பனே பின் அங்கெல்லாம் அமர்ந்தான் என்பேன் அப்பனே..

 இதனால் அப்பனே ஆனாலும் சரியாகவே பின் நிச்சயம் பயன்படுத்தினால் மட்டுமே அங்கெல்லாம் ஈசன் அழைப்பான் என்பேன் அப்பனே..

ஆனால் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய மனது பின் தூய்மை இல்லாமல் இருந்தால் நிச்சயம் அழைப்பு பின் நிச்சயம் ஈசன் பின் அனுமதி கொடுக்க மாட்டான்  அப்பா... அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே... நிச்சயம் அப்பனே அதாவது பணம் சேர்ப்பதற்காக அப்பனே எங்கெங்கோ சென்று.. எவ்வளவு தூரம் ஆயினும் அப்பனே செல்கின்றீர்கள் அல்லவா!?

அப்பனே ஆனாலும் அப்பனே இறைபலத்தை தேடிக் கொள்ள அப்பனே பின் அதாவது சிறிதளவு ஆயினும் அப்பனே நேரத்தை ஒதுக்குங்கள் 

ஆனாலும் அப்பனே பலபேர்கள் சொல்வார்களப்பா என்னால் ஒதுக்க முடியவில்லை என்று!!!

ஆனால் எதற்,எதற்கோ?? ஒதுக்குகின்றாயப்பா!!...எதற் எதற்கோ? செலவுகள் செய்கின்றாயப்பா!!!

ஆனாலும் அப்பனே பின்  இறைவனுக்காக..!?!?!?!?!?...

அப்பனே இறைவன் உன்னிடத்தில் எதையுமே கேட்கவில்லை அப்பனே...
எந்தனுக்கு அபிஷேகங்கள் செய்!!! இன்னும் ஆராதனைகள் செய்!!! இன்னும் எந்தனுக்கு திருத்தலங்கள் கட்டு!!! என்னை சீராட்டி வா என்று!!!!


அப்பனே ஆனால் உங்களிடம் எதிர்பார்ப்பது நீதி!!! நேர்மை!! பொய் கூறாமை!!! அதாவது பொறாமை கொள்ளாமை... தூய்மை மனது... அனைவரிடத்திலும் அழகாக பழகுதல்!!! நிச்சயம் அப்பனே ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருத்தல்!! அவை மட்டுமில்லாமல் பின் அனைத்தும் பின் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் இறைவனுக்கு சொந்தம்... அனைத்தும் இறைவன் அருளால் தான் நடக்கின்றது என்பதை கூட அப்பனே..

இதைத்தான் அப்பனே நிச்சயம் நல் மனதைத்தான் இறைவன் கேட்கிறானே தவிர!!!.... மற்றவை எல்லாம் இறைவன் உன்னிடத்தில் கேட்கவில்லை அப்பா...

ஆனாலும் அப்பனே இறைவன் உங்களிடம் கேட்பதை அப்பனே நிறுத்திவிட்டு.... மற்றவைகளை எல்லாம் நீங்கள் செய்கின்றீர்களே.... இது தர்மமா???????
இது நியாயமா????
அப்பனே!!!

ஆனாலும் பல சித்தர்கள் யோசித்துக்கொண்டே அப்பனே.. பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் உலகத்தை காக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே...

இவ் உலகத்தை எப்பொழுதோ அழித்துவிட்டு சென்றிருப்பார்கள் மனிதர்கள்

ஆனால் யாங்களும் மனதை அதாவது திசை திருப்பி அப்பனே  பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்னும் இன்னும் அப்பனே பின் அழிவுகளை தடுப்போம் என்பேன் அப்பனே 

அதாவது அப்பனே அதனால் தான் அப்பனே பின் சரியாகவே யான் சொல்லியதை கடைப்பிடித்து வந்தாலே போதுமானதப்பா !!

அப்பனே நிச்சயம் பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் சேருமப்பா!!!

அப்படி செய்யாவிடிலும் கூட அப்பனே... எதை என்றும் அறிய அப்பனே நல்மனதோடு!! தூய மனதோடு!! நிச்சயம் அப்பனே.. இறைவன் பால் மனதை வைத்து விட்டாலே போதுமானதப்பா!!

அப்பனே நிச்சயம் பின் எதற்கும் பயப்படாதீர்கள்... இறைவனுக்காவது பயப்படுங்கள் என்பேன் அப்பனே... அறிந்தும் கூட 

இறைவனுக்கு பின் பயப்பட்டாலே போதுமானதப்பா... நிச்சயம் அப்பனே அதாவது இவ்வுலகத்தில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் சென்று கொண்டே இருக்கின்றாய்.... முள் ஒன்று தென்படுகின்றது!!!

அப்பனே ஆனாலும் அதில் கால் வைப்பாயா?? என்ன??
அப்பனே முள்ளை பார்த்து பயப்படுகின்றாய் அல்லவா!!

அதேபோலத்தான் அப்பனே... ஆனால் பாவத்தில் அதாவது பாவத்தில் தான் இருக்க இக்கலியுகத்தில் மனிதன் கால் வைக்கின்றான் அப்பனே..

பாவம் என்று தெரிந்தே அப்பனே அதற்கு பயப்படுவதே இல்லை என்பேன் அப்பனே 
ஆனால் அறிந்தும் அறிந்தும் எப்படி? எப்படியப்பா!!!

நிச்சயம் அழிவுகள் தான் பன்மடங்கு!!... எப்படி அழிவுகள் என்றால் அப்பனே வரும் காலத்தில் நோய்கள் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் அப்பா....இந் நோய்கள் என்று மருத்துவர்கள் கூட நிச்சயம் கண்டுபிடிக்கவே முடியாதப்பா 

ஏன் எதற்கு நீங்கள் தெரிந்து கொண்டீர்களா?? என்ன!!!
அப்பனே இங்கு இறைவனே கொடுப்பது.. அப்பனே 

இறைவன் கொடுத்தால் அப்பனே அதை உணர்வதற்கு இவ்வுலகத்தில் ஆள் இல்லை அப்பா....

அப்பனே இன்னும் இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே ஏன் ?எதற்கு? என்று ஒவ்வொரு கிரகத்திற்கும்... ஒவ்வொரு மந்திரங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!

வரும் காலத்தில் இடைக்காடன்... உரைக்கும் பொழுது அப்பனே.....

ஆனாலும் இன்னும் அதை எல்லாம் இன்னும் சுவடிகளில் எல்லாம் எழுதி வைத்திருந்தான் அழகாகவே இடைக்காடன் என்பேன் அப்பனே.. ஆனாலும் அவையெல்லாம் அழித்துவிட்டனர் என்பேன் அப்பனே..

ஆனாலும் மீண்டும் இடைக்காடனே வந்து சொல்லும் பொழுது அப்பனே தெளிவு பெற்று அப்பனே நீடூழி வாழ்வீர்களாக!!!

அப்பனே நிச்சயம் அப்பனே வாழ்வது சிறிது காலமே என்பேன் அப்பனே... அன்போடும் அப்பனே ஆதரவோடும் அப்பனே வாழுங்கள் அப்பனே.... நிச்சயம் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன். அப்பனே.... நிச்சயமாக தர்மத்தோடு வாழுங்கள் அப்பனே!!!.. போதுமானதப்பா!!!!

தர்மத்தோடு வாழ்ந்து வந்தாலே!!! யாங்களே வருவோம் என்போம் அப்பனே!!

ஆனால் தர்மத்தை அதாவது கடைபிடிக்கவில்லை என்றால் அப்பனே யாங்களே நிச்சயம் அப்பனே அடிப்போம் என்போம் அப்பனே!!!

எங்களை நம்பினாலும் நிச்சயம் யாங்கள் ஏற்கப் போவதில்லை!!!

அகத்தியன் என்று என்னை சொன்னாலும் அப்பனே இன்னும் சித்தர்கள் என்று.. எவை என்று பின் பெயர்களைச் சொல்லி உச்சரித்தாலும்..... நாராயணா நமச்சிவாயா முருகா... பின் கந்தா!!... அதாவது அப்பனே பின் முருகா! என்றால் பின் கந்தா! என்றால் பின் என்ன??

வேலவா!! என்றால் குமரா!! என்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே.... இதற்காகவது பின் வேறுபாடுகள் தெரியுமா? என்றால்!!! அப்பனே நிச்சயம் தெரியவில்லை அதாவது தெரிய வாய்ப்பே இல்லையப்பா!!!

ஏனென்றால் அப்பனே அனைத்துமே ஒன்று!!!!

ஏன் எதற்கு குமரா?? என்று அழைக்கின்றார்கள்? அப்பனே அதற்கெல்லாம் வரும் காலத்தில் நிச்சயம் பின் யானே வாக்குகள் செப்புவேன் என்பேன் அப்பனே...

 என் பக்தர்களுக்கு அப்பனே செப்பி!!செப்பி!! அப்பனே இன்னும் அறிவுகளை புகுத்தி புகுத்தி அப்பனே மாற்றத்தை ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் இறைவனை காண பின் செய்வேன் என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அவன் குடும்பத்தில் உள்ள வினைகளையும் தீர்த்து அப்பனே நல் மாற்றத்தை ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் பிறவியில்லா!!!....... எவை என்று அதாவது பின் பிறவிப்பெரும் கடலை.. நிச்சயம் கடக்க செய்வேன் என்பேன் அப்பனே..

அப்பனே நீங்கள் மனிதர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட... கடலில் நீந்தி கொண்டே இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.... இவையெல்லாம் ஏற்கனவே பின் பெரியோர்கள் அப்பனே பின் சொன்னதே!!!!!.. என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே இப்படியே நீந்தி கொண்டிருப்பீர்களா?????????????? அப்பனே!!!!!!

பின் இப்படியே நீந்தி கொண்டிருப்பீர்கள் என்றால் அப்பனே.... எப்படியப்பா??? கரை சேர்வது?????

அப்பனே அவ் கரையை கடப்பதற்கு தான்... அதாவது கரையை சேர்வதற்கு தான் அப்பனே.... யான் வாக்குகளாக செப்பி செப்பி பக்குவப்படுத்தி படுத்தி அப்பனே பின் அதாவது... உங்களுக்கு யான் தெரிவித்துவிட்டால் இப்படித்தான்.பின்!!. ஏற வேண்டும் என்று அப்பனே!!..


 நிச்சயம் அப்பனே ஆனால்  யான் இங்கிருந்து வா வா என்று சொன்னால் எப்படிப்பா?? நீ வருவாய் அப்பனே!!!!

அதனால் அப்பனே உங்களுக்கே... உங்களிடத்திலே சக்திகள் இருக்கின்றதப்பா!!! அதை நிச்சயம் இயக்கிவிட்டால் போதுமானதப்பா!!.. நீங்கள் உங்களை நிச்சயம் நீங்களே வழிநடத்துவீர்கள் என்பேன்.. அப்பனே....அப்பனே பின் உங்கள் உடம்பை நீங்கள் வழி நடத்த வேண்டுமே தவிர... அப்பனே அறிந்தும் கூட ஆன்மா வழிநடத்த கூடாது என்பேன் அப்பனே 

ஆனால் கலியுகத்தில் ஆன்மா தான் வழி நடத்துகின்றது என்பேன் அப்பனே... இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய... எவை என்று புரிய புரிய இதனால் ஆன்மா வழி நடத்துகின்றது என்பேன் அப்பனே.... உடம்பு பின் வழிநடத்த வேண்டும்....

உன் உடம்பு அப்பனே எப்படி வழி நடத்த வேண்டும்?????

அப்பனே பின் ஐம்புலன்களையும் கட்டுக்குள் பின் கொண்டு வர வேண்டும் என்பேன் அப்பனே 

இவ்வாறு ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால்... அதாவது ஆன்மா என்பது அப்பனே அதாவது சொல்லி விட்டேன் அப்பனே ஏற்கனவே!!
அப்பனே பின் எதை என்று அறிந்து 

ஆனாலும் அப்பனே அது பாவத்திற்கு தகுந்தார் போல அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் உடம்பை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் அப்பனே நிச்சயம் நல் மாற்றங்கள் அப்பா 

இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட பல மனிதர்கள் அப்பனே தவங்கள் செய்து எவை என்றும் அறிய அறிய ஆனாலும் உடம்பை கூட அப்பனே கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பேன் அப்பனே 

உடம்பை அதாவது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஆன்மாவும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னை தானே எவை என்று அறிய அறிய அமைதியாகிவிடும் என்பேன் அப்பனே 

இதனால் பாவத்தை ஜெயித்து விடலாம் என்பேன் அப்பனே.. புண்ணிய பாதையில் செல்லலாம் என்பேன் அப்பனே 

இதனால் முதலில் பின் உடம்பை பின் கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

எப்படி கட்டுப்படுத்துவது?? அப்பனே!!! எதை என்றும் புரியப் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் உங்களாலும் கட்டுப்படுத்த முடியுமா?? என்றால்... நிச்சயம் அவை தன் அப்பனே நிச்சயம் பின் அதாவது சித்தர்களே கட்டுப்படுத்துவார்களப்பா 

அப்பனே எங்களை நம்பினோர் நிச்சயம் கைவிடப்படுவதில்லை!!! அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... முக்தியும் பெற வழி செய்வோம். 

அதனால் என் பக்தர்களுக்கு அப்பனே உடம்பை எவை என்று கூட யாங்களே கட்டுக்குள் பின் கொண்டு வந்து விடுகின்றோம் என்போம் அப்பனே 

ஏனென்றால் யாங்கள் சொன்னாலும் எவை என்று அறிய அறிய உங்களால் செய்ய முடியாதப்பா!!!

ஏனென்றால் அவ்வளவு கர்மாக்களப்பா!!! கலியுகத்தில் அப்பனே பிறந்தாலே கர்மா தானப்பா!!!

அதாவது பாவம்தான் அதிகமாக காணப்படுகின்றது என்பேன் அப்பனே... புண்ணியம் எஞ்சிய அளவே இருக்கின்றது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இன்னும் என் பக்தர்களுக்கு அப்பனே..யானே புண்ணியத்தை கூட்டுவேன் என்பேன் அப்பனே... எதை என்றும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே பின் அதாவது பின் நீதி நேர்மையோடு வாழ்ந்து வாருங்கள் போதுமானது என்பேன் அப்பனே 

ஒருவருக்கொருவர் அப்பனே பின் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள் போதுமானது என்பேன் அப்பனே... மற்றவை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள் என்பேன். அப்பனே 

எதை என்றும் அறிய அறிய அப்பனே... அதனால் அப்பனே நன்முறைகளாக இன்னும் வாக்குகள் சொல்வேன் என்பேன் அப்பனே 

எம்முடைய ஆசிகள் என் பக்தர்களுக்கு பின் இங்கிருந்தே ஈசனின் ஆசிர்வாதங்கள் அப்பனே நிச்சயம் பின் வாங்கியும் தந்து கொண்டே என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பின் ஒவ்வொருவர் இல்லத்திற்கும் யான் வந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.. அதனால்தான் அப்பனே நிச்சயம் ஆசீர்வாதங்கள் பின் தந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

இன்னும் வாக்குகள் உண்டு அப்பனே பின் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே அனைவருக்கும்....

அப்பனே என்னால் அங்கு செல்ல முடியவில்லையே!!!! இங்கு செல்ல முடியவில்லையே!!!! என்றெல்லாம் அப்பனே பின் ஏங்கி தவிக்காதீர்கள் அப்பனே 

அப்பனே நிச்சயம் நல் முறையாகவே அப்பனே பக்தியை காட்டுங்கள்.. அப்பனே அன்பை செலுத்துங்கள் என்பேன் அப்பனே.. பின் தர்மத்தை நிலை நாட்டுங்கள் என்பேன் அப்பனே

யாங்களே வந்து பின் ஆசீர்வதித்து பின் உங்களுக்கு தேவையான எதையும் அளித்து... உங்களை அழைத்தும் செல்வோம் அப்பனே... அருமையாகவே அப்பனே. 

பின் எவை என்று அறிய அறிய சந்தோஷமாகவே என்பேன் அப்பனே 

ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!

அப்பனே நல்விதமாக அப்பனே என்னென்ன பின் யான் செப்பி இருந்தேனோ... அவையெல்லாம் அப்பனே செய்ய மறவாதீர்கள் என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு!!?? இக்கலி யுகத்தில் கஷ்டங்கள் அதிகமாக வருகின்றது???

ஆனாலும் அப்பனே பின் அதாவது சில ஆண்டுகள் எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது பழமையான ஆண்டுகள் அப்பனே எதை என்றும் புரிகின்ற பொழுதும் கூட சரியாகவே இறைவனை பின் எப்படி எவ் கிரகத்திற்கு?? எவ் மாதங்கள்??? எவ் மாதத்தில் எப்படி என்றெல்லாம் வழிபட்டு வந்தார்கள் என்பேன் அப்பனே.. ஆனாலும் சரியாகவே அப்பனே இதனால் நல் விதமாகவே வாழ்ந்திட்டு வந்தார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இப்பொழுது அப்படி இல்லையப்பா!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால்தான் மறந்து விட்டார்கள் என்பேன் அப்பனே....அதை முதலில் அப்பனே அப்படியே நிச்சயம் அப்பனே எதை என்று கூட எடுத்து வந்து விட்டாலே போதுமானதப்பா நல் மாற்றங்கள் ஏற்படுமப்பா!! உறுதியப்பா!!!

அதனால்தான் அப்பனே அவ் அவ் மாதங்களில் என்னென்ன செய்ய வேண்டும்??? என்பதெல்லாம் அப்பனே பின் செப்பிக் கொண்டே  இருக்கின்றேன் அப்பனே... அதை செய்க!!! போதுமானது அப்பனே!!!

வரும் காலங்கள் நோய்கள் காலமாகவே உள்ளது என்பேன் அப்பனே!!!... பல இயற்கை உணவுகளை உட்கொள்ள நன்று என்பேன். அப்பனே நன்மை தரும் என்பேன் அப்பனே!!! நன்மைகளாகவே முடியட்டும் என்பேன் அப்பனே 

ஆசிகள்!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment