​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 22 November 2024

சித்தன் அருள் - 1735 - அன்புடன் அகத்தியர் - ரிஷிகேஷ் வாக்கு!





1/10/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: வசிஷ்டர் குகை.. ரிஷிகேஷ் உத்தர்கண்ட் மாநிலம்.

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகள்!!

அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே யான் பின் திரிந்து அதாவது அலைந்து அலைந்து அப்பனே பல வழிகளிலும் கூட நன்மைகள் பெற அப்பனே இன்னும் அப்பனே அதாவது கலியுகத்தில் அப்பனே சித்தர்களும் கூட அப்பனே.. பின் இவ் மலையை வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. 


பல விசித்திரமான அப்பனே பின் மூலிகைகளும் கூட மரங்களும் கூட இங்கே!!

அப்பனே பல ஞானிகளும் கூட ரிஷிகளும் கூட அப்பனே தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே


இதனால் அப்பனே சில வழிகளிலும் கூட நன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே. 


அதனால் பின் முந்தைய வாக்குகளிலும் கூட அப்பனே பின் பரப்பி விட்டேன் அப்பனே... தேடி தேடி அலைய வேண்டும் என்று!!!


அப்பனே அனைத்தும் அதாவது தேடி தேடி அலைந்தால் தான் அப்பனே பின் வெற்றியும் கிட்டும் என்பேன் அப்பனே..


பின் தேடாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் வெற்றி கிடைக்காதப்பா. எதுவுமே கிடைக்காதப்பா.


அதனால் அப்பனே எவை வேண்டுமானாலும் அப்பனே தேடி அலைய வேண்டும் என்பேன் அப்பனே..



அப்படி நிச்சயம் அலைந்தால் தான் அப்பனே பக்குவங்கள் பிறக்கும் என்பேன் அப்பனே


பக்குவங்கள் பிறந்தால் வெற்றிகள் நிச்சயம் என்பேன் அப்பனே.


இதனால் அப்பனே நிச்சயம் இங்கு (வசிஷ்டர் குகை கோயில்..) ஒரு அப்பனே பின் பசு ஒன்று... இருந்ததப்பா. 


அப்பனே அதுவும் கூட அப்பனே அதாவது ஒரு ஜென்மத்தில் அப்பனே ஒரு இளவரசியாக இருந்து அப்பனே.... அதாவது ஒரு முனிவன் சபித்ததால் பின் பசுவாக மாற வேண்டும் என்பது விதி. 


அதனால் அப்பனே எதை என்று அறிந்தும் கூட இதனால் இங்கே ஒரு அழகாக அப்பனே ஈசனின் லிங்கம் கூட!!!


இதனால் அப்பனே அனுதினமும் அவ் பசுவானது அப்பனே பின் அதாவது நீரை (அருகில் ஓடும் கங்கை நதியில் இருந்து எடுத்து வந்து) அழகாகவே லிங்கத்திற்கு அப்பனே அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து கொண்டே செய்து கொண்டே!!! இருந்தது! 


ஆனாலும் அப்பனே இங்கு மனிதர்கள் யாரும் அப்பனே வர முடியவில்லை... ஏனென்றால் அப்பனே கர்மத்தை பின் போக்கினால் மட்டுமே... மனிதனால் இங்கு வர முடியுமப்பா!!!


ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே ஈசனும் கூட இதனால் நிச்சயம் சாபத்தை பல சாபத்தை நிச்சயம் பெற்றவர்கள் நிச்சயம் இங்கு வர இயலாது என்பதையும் கூட நிச்சயம் ஈசன் இட்ட கட்டளை.

அதுபோலே. 


இதனால் தான் அப்பனே பின் இளவரசிக்கும் கூட அதாவது விலங்கு சாபம் ஏற்பட்டு அப்பனே.....


ஆனாலும் அனுதினமும் அப்பனே நல்விதமாகவே வந்து வந்து அப்பனே இவ் லிங்கத்திற்கு அபிஷேகங்கள் கூட செய்து கொண்டே செய்து கொண்டே...


இதனால் அப்பனே ஆனாலும் அப் பசுவும் கூட நிச்சயம் எண்ணி எண்ணி வருந்தியது.. முன் ஜனனத்தில் கூட இளவரசியாக இருந்து பல பல தவறுகள் செய்தாயினும் நிச்சயம் பின் எப்பொழுது?? எந்தனுக்கு பின் மோட்சமும் கிட்டும் என்பதையெல்லாம் பின் அழுது கொண்டே ஈசனிடத்தில் முறையிட்டுக் கொண்டே...


ஆனாலும் ஈசன் கவனித்துக் கொண்டே இருந்தான்... மீண்டும் மீண்டும் ஆனாலும் மனிதர்கள் நடமாட்டம் இங்கே இல்லையப்பா.


மீண்டும் மீண்டும் பின் அதாவது இவ் இளவரசிக்கும் கூட... ஒரு முனிவன் நிச்சயம் இவ்வாறு செய்தால்தான் நிச்சயம் பின் மறுபிறப்பு அதாவது இளவரசி நீ இப்பொழுது.... உன் மறுபிறப்பு நிச்சயம் சபிக்கப்பட்டது.. இதனால் நிச்சயம் நீ இவ்வாறு செய்தாயானால் நிச்சயம் மறுபிறப்பும் பின் இளவரசியாக பின் வாய்ப்பு கிட்டும் என்பதையெல்லாம். 


இதனால் மீண்டும் மீண்டும் பின் அறிந்தும் அப்பனே நல்விதமாகவே அப்பனே அவ் பசுவும் கூட அப்பனே நிச்சயம் பின் தண்ணீர் எடுப்பது நிச்சயம் அதாவது லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது... இப்படியே பல ஆண்டுகள் கடந்தாயின (கடந்து சென்றது) அப்பனே!!!


அப்பனே கடந்தாயின அப்பனே பல பல வருடங்கள். 


ஆனாலும் அப்பனே பின் அதாவது நிச்சயம் அவ் பசுவும் எண்ணியது நிச்சயம் இனிமேல் மோட்சமும் கிட்டாது நிச்சயம் எதுவும் கிட்டாது... என்று !!


ஆனாலும் நிச்சயம் அப்பனே இப்படித்தான் மனிதர்கள் என்பேன் அப்பனே...


நிச்சயம் இறைவனை தேடி தேடி அலைகின்றார்களப்பா ஆனாலும் ஒன்றுமே கடைசியில் நடக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே 


அப்பொழுதுதான் இறைவன் அப்பனே பின் சிரிப்பான் என்பேன் அப்பனே மனிதனைப் பார்த்து...


அடடா!!!!.... அறிந்தும் கூட பின் கடைசியில் நிச்சயம் பின் இப்படி நிறுத்தி விட்டாயே!!.. நிச்சயம் பக்திகள் காண்பித்து காண்பித்து என்று!!


அதனால்தான் அப்பனே... முயற்சி இருக்க வேண்டும் அப்பனே பல வழிகளிலும் கூட பல பல வழிகளிலும் கூட முயற்சிகள் பெற்று பெற்று அப்பனே... நிச்சயம் பின் எவை வேண்டுமானாலும் பின் நிச்சயம் அப்பனே.. நிச்சயம் எவ் முயற்சி அப்பனே பின் எவ் சோதனைகள் வந்தாலும் சரியாக பின் இறைவனைத் தான் யான் பிடிப்பேன் என்று சரியாகவே இருந்தால் அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா!!!


ஆனால் அப்பனே ஏதோ ஒன்றுக்காக இறைவனை பிடித்துக் கொண்டு இருக்கின்றான்ப்பா மனிதன் 


ஆனால் அப்பனே ஒன்றும் நடக்கவில்லை என்றால் அப்பனே அப்படியே பின் யான் வணங்கினேன் அங்கு சென்றேன் இங்கு சென்றேன் என்றெல்லாம் அப்பனே...


ஆனாலும் ஒவ்வொருவனுக்கும் அப்பனே கர்மம் இருப்பது பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே அறியாமல் இருக்கின்றான் என்பேன் அப்பனே 


மீண்டும் அப்பனே ஆனாலும் அழுது கொண்டே அவ் பசுவானது அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய  புரிய அப்பனே... மீண்டும் மீண்டும் அபிஷேகங்கள் அப்பனே செய்து கொண்டு இருந்தது. 


இதனால் அப்பனே வருந்தியது பசுவும் கூட..... அவ்வளவுதான் அவ்வளவுதான் பின் ஆண்டுகள் முடிந்திற்று!!!  கடைசியாக வந்துவிட்டது அதாவது பின் கடைசி நேரமும் கூட அதனால் மீண்டும் வயதாகி விட்டது பின் அழுது கொண்டே பின் நிச்சயம்.... 


ஈசனாரே!!!!!!.... நிச்சயம் பின் அதாவது வருடம் எல்லாம் அதாவது யான் அறிந்தும் கூட பின் எவை என்று கூட பிறந்ததிலிருந்தே... சில மாதங்களில் இருந்தே பின் அதாவது உந்தனை அதாவது அறிந்தும் அறிந்தும் கூட அபிஷேகங்கள் செய்து கொண்டே இருக்கின்றேன். 


அதாவது நிச்சயம் எந்தனுக்கே தெரிகின்றது... இறக்கும் தருவாய் வந்துவிட்டது என்று..


 ஆனாலும் அறிந்தும் எதை என்றும்... ஆனாலும் அப்பனே அழுது கொண்டே மீண்டும் மீண்டும் அவ்வளவுதான் நிச்சயம் இப்படியே சாபம் பெற்று பின் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறக்க வேண்டுமோ??!!!!!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட. 


இதனால்... ஈசன் அப்பசுவின் முன்னே தோன்றினான். 


நிச்சயம் பின் அதாவது பசுவிற்கும் நிச்சயம் அறிந்தும் கூட.... பசுவிற்கும் சந்தோசங்கள்!!!


ஈசனாரே வந்து விட்டாயா!! வந்து விட்டாயா!!!...


நிச்சயம் யான் இளவரசியாக இருந்தேன்... ஆனாலும் பின் ஒரு காலத்தில் ஏதோ சில தவறுகளை செய்து விட்டேன் அதனால்... என்னை முனிவரும் சபித்து விட்டார்... இப்பொழுது இப்படி ஆகிவிட்டேன்.


ஆனாலும் பின் தெரிந்தது.. நிச்சயம் இங்கு வந்து அறிந்தும் கூட அபிஷேகங்கள் செய்து கொண்டே வந்தால் நிச்சயம் பின் ஓர் சாப விமோசனமும் கிடைக்கும் என்பதை கூட. 


இதனால் நிச்சயம் பின் அதாவது... பின் அறிந்தும் கூட பின்.......



 ஈசன் சொன்னான்..அவ் பசுவிடம்...


நிச்சயம் அதாவது கடை நாள் வரையிலும் கூட... பின் யான் என்ன?? சோதனைகள் கொடுத்தாலும்... யார் ஒருவன் ? நிச்சயம்... யார் ஒருத்தி? நிச்சயம் தாங்கிக் கொள்கின்றானோ!!!!!! தாங்கிக் கொள்கின்றாளோ!!!..... தாங்கிக் கொள்கின்றதோ.......!???


 நிச்சயம் அவர்கள் நிச்சயம் ஒரு நாள் இல்லை... ஒரு நாள் உயர்வுகள் பெறுவார்கள்......அவ் உயர்வுகளை பெற்று விட்டால் நிச்சயம் அப்படி அப்படியே சந்ததிகள் தொடர்ந்து உயர்வுகள் பெறும்.





ஆனாலும் சாபங்கள் எதனால் வருகின்றது??? என்பதை எல்லாம் அப்பனே முழு... முழு மனதோடே அப்பனே நிச்சயம் அப்பனே முழு உதாரணத்திற்காகவே அப்பனே நிச்சயம் அறிவியல் விளக்கங்களோடு யான் சொல்வேன் சொல்வேன் அப்பனே... நலன்களாகவே 


அப்பனே நலன்களாகவே நலன்களாகவே இன்னும் இன்னும் செப்பி செப்பி மனிதனுக்கு... இதனால் அப்பனே மீண்டும் அப்பனே!!!





 அறிந்தும் கூட ஈசன்... அருளால்  அப்பனே நிச்சயம் பின் அதாவது பின் சாபம். அப் பசுவிற்கு.. சாபம் நீங்கியது..


நிச்சயம் பின் ஆனாலும் என்ன வரம் வேண்டும்???? என்று கேள்வி ஈசன்... பசுவிடம் பார்த்து கேட்டான்


ஆனாலும் பின்...அவ் பசுவும் கூட நிச்சயமாய்!!!... நிச்சயமாய் வேண்டாம்... இனி எந்தனுக்கு பிறவிகள் வேண்டாம்!!!


அதாவது இங்கேயே யான் தங்கிவிட வேண்டும்...!!!


 அதனால் பின் அதாவது... ஈசனாரே நிச்சயம் பின் உன்னிடத்திலே!!!!!... போதும்..


 பின் எந்தனுக்கு ஏது? பிறவி.. எப்படி வாழ வேண்டும்???? என்பதெல்லாம் தெரியாமல் தான் நிச்சயம் பின் வாழ தெரியாமல் தான் சாபங்களும் கூட....


யான்  சாபங்களையும் சம்பாதித்துக் கொண்டு பிறந்து விட்டேன்..


ஆனாலும் சாபம் நீங்கியதே பின் எந்தனுக்கு பெருமை. 


அதனால் உந்தன் காலடியிலேயே நிச்சயம் யான் இருந்து விடுகின்றேன்.


 பின் ஈசனாரும் கூட... அப்படி இல்லை!! 

அப்படி இல்லை!! நிச்சயமாய் உந்தனுக்கு மற்றொரு பிறவி இருக்கின்றது என்று!!




ஆனாலும் ஓ !!!!...... என்று அழுதாள் (பசு)பலத்த சத்தத்துடன்... !!!


நிச்சயம் இப்பிறவியே... நிச்சயம் இவ்வாறு வாழ்ந்திட்டேனே!!!


மீண்டும் அடுத்த பிறவியா?? என்று!!


நிச்சயம் அறிந்தும் நிச்சயம் உண்மைதனை கூட...


இதனால் நிச்சயம் ஈசனும் நீ மறுபிறவி எடுப்பாய்...


 இங்கேயே பிறவி எடுப்பாய்... நிச்சயம் பின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் என்றெல்லாம். 


ஆனாலும் பிறவியும் எடுத்த்திட்டாள்... நிச்சயம் அப்பசுவானது!!!!


நிச்சயம் பின் அழகாகவே அறிந்தும் உண்மைதனை.. எடுத்துரைத்து எடுத்துரைத்து மீண்டும் மீண்டும்... பின் அவ்வாறே சேவை செய்தாள்.. ஈசனுக்கே!!


ஆனாலும் பின் சிறிது வயது ஆக வயது ஆக அதாவது... பின் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் முன் ஜென்மம் எல்லாம் தெரிந்து விட்டது.. பின் இப்பெண்மணிக்கு!!


(பசுவாக இருந்து சிவலிங்கத்திற்கு செய்த பூஜைகள் எல்லாம் முன் ஜென்ம நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து மீண்டும் பெண் வடிவம் எடுத்தாலும் லிங்கத்திற்கு அதே பூஜையை கங்கை நீரைக் கொண்டு அபிஷேகங்கள் செய்து கொண்டு வந்தார் அந்த பெண்மணி)



இதனால் மீண்டும் மீண்டும் அறிந்தும் எதை என்றும் புரிய நிச்சயம் பின் அதாவது...இக் கங்கை தன்னில் கூட தண்ணீரை எடுத்து எடுத்து நிச்சயமாய் பின் எடுத்து வந்து எடுத்து வந்து பின் அபிஷேகங்கள் ஆராதனைகள். 


இதனால் நிச்சயம் அதனால் பின் அதாவது ஒரு முனிவனும்

அதாவது வசிஷ்டனும் கூட பின்.... எதை என்று அலைந்து திரிந்து... இங்கு ஓய்வெடுக்க நிச்சயம் வந்தான்... அதாவது ஓய்வெடுக்க இங்கு வந்தான்..


ஆனாலும் அப்பெண்மணியும் கூட திடீரென்று யாருமே... வரவில்லையே இங்கு... யார் இந்த முனிவன் என்று கூட இங்கு வந்திருக்கின்றான் என்று கூட...


பின் நிச்சயம் பின் அதாவது கோபத்துடனே அப் பெண்மணி

..... என் ஈசன்!!!.... எந்தனுக்கு தான் சொந்தம்!!!


இதனால் நீங்கள் யார்?????.. உடனே இங்கிருந்து எழுந்து செல்லுங்கள் என்று!!


இதனால் வசிஷ்டன் கோபமுற்றான்!!!... என்னையே நீ தாக்குகின்றாயா!!!....


 எந்தனுக்கு என்ன சக்தி?? என்று....பார்!!! இப்பொழுதே உன்னை கல்லாக்குகின்றேன் என்று.... 


கல்லாக மாறட்டும் இப் பெண்மணி என்று சபித்தான். பின் வசிஷ்டனும் கூட...


இதனால் கல்லாக மாறிவிட்டாள் அப்பெண்மணியும் கூட!!!


மீண்டும் பின் ஈசனாரே!! ஈசனாரே !! என்று அக் கல்லும் நிச்சயம் பின் அறிந்தும் கூட.. அதாவது சொல்லிக்கொண்டே இருந்தது. 


ஆனாலும் நிச்சயம் வசிஷ்டனுக்கு சந்தேகம் வந்தது....


 இப் பெண்மணி சாதாரண பெண்மணி இல்லை!!


பின் அதாவது யான் இப்பெண்மணியை சபித்து கல்லாக செய்து விட்டேன்... 


ஆனாலும் அறிந்தும் எதை என்று உணராமல் மீண்டும் மீண்டும் பின் அதாவது நமச்சிவாயனை அழைக்கின்றாளே!!!.. பின் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என்று பின் வசிஷ்டனும் அக்கல்லின் அருகில் சென்றான்!!!


பெண்ணே யார் நீ??? என்று!!


நிச்சயம் யான் ஒரு அனாதை..!!!


. நிச்சயம் இதை அறிந்து தெரிவிக்க ஆனாலும்... பின் ஒரு பிறவியில் இளவரசியாக

பிறந்து !!! 

மற்றொரு பிறவியில் அதாவது இளவரசியாக இருந்த பொழுது ஒரு முனிவன் சபித்தான்... நிச்சயம் பசுவாக இருந்தேன்... பின் ஈசனும் கட்டளை இட்டவாறு இப்பிறவியில் எடுத்தேன் பின் பெண்மணியாக.


ஆனாலும் நீங்கள் பின் முனிவரே!!!! அறிந்திருக்கவில்லை.. பின் எதை என்று!!!



 ஆனாலும் நிச்சயம்... இப்பொழுதும் கூட நீங்கள் சபித்து விட்டீர்கள் நிச்சயம்... பெண் அதாவது கல்லாக....


யான் இப்போது கல்லாகி விட்டேன் என்ன செய்வது? என்று!!!


ஆனாலும்...வசிஷ்டன் அடடா!!!!........ பெண்ணே!!!......... நிச்சயம் என் கோபத்திற்கு ஆளாகி விட்டாய்!!!..


நிச்சயம் அறிந்தும் எவை என்று உணர உணர நிச்சயம் பின் அதாவது பின் கங்கையவள் நிச்சயம்.. இதை என்று அறிந்து.. உன்னை கல்லாக்கினேன்!! 


பின் எப்போது? உன் மீது கங்கை பாய்கின்றதோ அப்பொழுது மீண்டும் பெண்ணாக.... வடிவெடுப்பாய் என்று!!!


(வசிஷ்டர் குகையில் அருகிலேயே கங்கை ஆறு ஓடுகின்றது அந்த கங்கை ஆற்று வெள்ளத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது அந்த கங்கை நீர் பொங்கி வந்து இந்த கல்லை தீண்டும் பொழுது சாபம் நீங்கும் என்று வசிஷ்டர் சாப விமோசனம் கொடுத்தார்)


ஆனாலும் பின் கங்கை பாய்ந்து கொண்டே வந்தது... பாய்ந்து கொண்டே வந்தது!!! ஆனாலும்... அக்கல் மீது விழவில்லை!!!


 ஆனாலும் நிச்சயம் ஈசனாரும் கவனித்துக் கொண்டே!!!



 நிச்சயம் பின் 

ஆனாலும் அக் கல்லும் பின் ஈசனாரே!! ஈசனாரே !! ஈசனாரே!!! என்று தான் கூறிக்கொண்டே இருந்தது!!




ஆனாலும் ஈசனும் அறிந்து அருகில் வந்து பின் பெண்ணே!!!....


 நிச்சயம் பின் எவ்வாறு என்றெல்லாம் நிச்சயம் ஆனாலும்... இவ்வாறெல்லாம் நிச்சயம் ஒரு பெண்ணானவள் பின் கோபமுற்று பேசினால் தண்டனைகள்.. அதிகம். 


பின் பெண்ணானவள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினால் நிச்சயம் ஆயுளும் நீடிக்கும்... நிச்சயம் பின் குடும்பமும் சுபிட்சமாகும்!!!


 நிச்சயம் எண்ணியதை சாதித்துக் கொள்ளலாம். 


பின் வாய் (பேச்சு) அதிகமாக இருந்தால்... இப்படித்தான் பின் நிச்சயம் இறைவன் செய்வான் என்று அறிந்தும் எதை என்று புரிய புரிய நிச்சயமாய் என்று! 


மீண்டும் மீண்டும் இதை என்று அறிந்தும் கூட


இதனால் நிச்சயம் பின் மீண்டும் மீண்டும் எவை என்று அறிய... ஆனாலும் மீண்டும் கூட அறியாமல் கூட மீண்டும் அதாவது பின் எதை என்று அறிய அறிய மீண்டும் ஆனாலும் உண்மைதனை கூட!!!



 ஆனாலும் நிச்சயம் ஈசனே பின்... கங்கை தனக்கு கூட கட்டளையிட்டான்...!!!



 கங்கை பலமாக ஓடி வந்து அதாவது பின் கங்கை கூட...அக் கல்லை தொட்டது... நிச்சயம் பின் மீண்டும் பெண்ணாகவே அறிந்தும் எதை என்று கூட மாறியது.



 மீண்டும் எதை என்று அறிய அறிய

வசிஷ்டனும் இங்கு வந்தான்... நிச்சயம் அறிந்தும் கூட பின் வசிஷ்டன் இங்கு வந்து மீண்டும் வணங்கினான்..



 பின் நிச்சயம் மீண்டும் சாபமும் தீர்ந்தது...


 அறிந்தும் கூட பின் நிச்சயம் அதாவது பின் வசிஷ்டன்  அதாவது.. அருகிலே அப் பெண்மணி வந்தாள்... நிச்சயம் முனிவரே !!! அறிந்தும் கூட உந்தனுக்கு யான் சேவை செய்கின்றேன்... என்று நிச்சயம் அறிந்தும் கூட... 



அறிந்தும் கூட அதனால் நிச்சயம் அதாவது ஈசனும் பார்வதியும் நிச்சயம் பின் இவர்கள் முன் தோன்றி நிச்சயமாய் அறிந்தும் கூட ஓர் பிறவியில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் தான்..


.. நிச்சயம் இப்பிறவியிலும் கூட நிச்சயம் நீங்கள் ஒன்றாக தான் வாழ வேண்டும்... இங்கு வருவோருக்கெல்லாம் ஆசிகள் தர வேண்டும் என்று.. ஈசனும் பார்வதியும் கட்டளை!!!


அப்பனே. பின் சூட்சும ரூபத்தில் இங்கு இவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றார்கள்... இன்னும் பின் ரகசியங்கள் எல்லாம் நிச்சயம் எடுத்துரைப்பேன் நிச்சயம் பின் இன்னும் இன்னும் ரகசியங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!! ஆசிகளப்பா!!! ஆசிகள்!!

வசிஷ்டர் குகை இருக்கும் மலை அருகிலேயே கங்கை ஆறு ஓடுகின்றது.. வசிஷ்டர் குகையின் பின்புறம் சிறுதூரம் சென்றால் அங்கே அருந்ததி தேவியின் குகையும் இருக்கின்றது... கூடுதல் தகவல். 

வசிஷ்டர் குகையில் குருநாதரிடம் அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் தந்த பதில் வாக்குகள்.




குருவே நமஸ்காரம் திருத்தலங்களில் இருக்கும் சக்திகளை பற்றி சொல்கின்றேன் என்று கூறியிருந்தீர்கள் 


அப்பனே அங்கங்கு சக்திகள் அப்பனே ஆனாலும் பின் மனிதர்கள் உடம்பில் சில சில கதிர்கள் அப்பனே அங்கங்கு இருக்கும் அப்பா... அதனால் யான் சொல்கின்ற தலங்களுக்கெல்லாம் செல்கின்ற பொழுது அவை உங்கள் உடம்பில் ஒட்டிக் கொள்ளும் அப்பா... இதனால் புண்ணியங்கள் என்பேன் அப்பனே...!!!




 நிச்சயம் தன் ஒட்டிக் கொள்கின்ற பொழுது அப்பனே உங்களுக்கு புண்ணியங்கள் ஏற்பட்டு அப்பனே உயர்வீர்கள் என்பேன் அப்பனே...


சிலருக்கு கதிர்கள் விடுபட்டு இருக்குமப்பா


 அதற்காகத்தான் அப்பனே உங்களை அனைவரையும் அங்கு செல்!!! இங்கு செல்!!! என்று அங்கும் இங்கும்.... திருத்தலங்களுக்கு செல்க என்று அப்பனே!!!


 பல பிறப்புகள் எடுத்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் நீங்கள் எல்லாம் எவை என்று அறிந்து செல்ல வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே!!!



யான் சொல்கின்ற திருத்தலங்களுக்கு சென்றால் அப்பனே தானாக அக்கதிர்கள் இயங்குமப்பா...


 ஆனாலும் அப்பனே நிச்சயம் சில கதிர்கள் மனிதர்களுக்கு விடுபட்டு இருக்கும்... அதையெல்லாம் அப்பனே புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சேகரித்துக் கொண்டால்...தான் யோகங்கள் கிட்டி அப்பனே... நல்விதமாக மோட்சமும் கிட்டி... இன்னும் ஞானமும் கிடைக்கும்... நினைத்தது நிச்சயம் நடக்கும் அப்பனே !!! ஆனாலும் அப்பனே!! இதற்கும் புண்ணியங்கள் தேவை என்பேன் அப்பனே!!!!


அப்பனே தேடி தேடி வந்து பின் எதையும் நினைக்காமல் எதையும் எண்ணாமல் வந்தாலே அப்பனே எங்களுக்கு தெரியுமப்பா கொடுப்பதற்கு என்பேன் அப்பனே...



குருவே நமஸ்காரம் !!

மனக்குழப்பங்கள் தீர்வதற்கு என்ன வழி??? மனக்குழப்பத்தினால் உடலும் சோர்வு சோம்பேறித்தனம் ஆகின்றது இதற்கு தீர்வை கூறுங்கள் 


அப்பனே எவை என்று கூட அதிகப்படியான அனைத்தும் யோசனைகள் இருந்தாலும் இப்படித்தான் அப்பா... அதனால் நிச்சயம் தியானங்கள் செய்.. எதையும் நினைக்காமல் நிச்சயம் அப்பனே... எதையும் நினைக்காமல் தியானங்கள் செய்தால் அப்பனே... அப்பொழுது ஈசனுக்கு புரியும் அப்பா அனைத்தும் கூட...



அப்பனே அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கின்றதப்பா.. அவ் கஷ்டங்களை நினைத்துக் கொண்டே இருந்தால் மீண்டும் மீண்டும் அப்பனே அதிர்வலைகள்... அப்பனே உடலில் உள்ள செல்களை நிச்சயம் உற்பத்தி செய்யும் என்பேன் அப்பனே இதனால்.. நிச்சயம் வேண்டாமப்பா... 


நல் மனதாக அகத்தியன் இவ்வாறு... வைத்திருக்கின்றானே என்று அப்பனே சந்தோசம் அடையுங்கள்.


 நிச்சயம் அப்பனே எவை என்று கூட... நீங்கள் என்னவென்று நினைக்கின்றீர்களோ அதே போலத்தான் உங்கள் உடம்பில் உள்ள செல்கள் சில சில வழிகளிலும் கூட அப்பனே அப்படியே மாற்றம் அடையும் என்பேன் அப்பனே. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே..


இதனால்தான் அப்பனே நிச்சயம் தீயவை சிந்திக்க கூடாது என்பேன் அப்பனே.. நல்லதையே சிந்திக்க வேண்டும் என்பேன் அப்பனே

ஆசிகள்!!ஆசிகள்!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா !!

வசிஷ்டர் குகை 

இது, ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில், ரிஷிகேஷிலிருந்து சுமார் 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

வசிஷ்ட குகை தியான நேரம்

ரிஷிகேஷில் உள்ள வசிஷ்ட குகையில் காலை 9 -12 மணி வரை மற்றும் மாலை 3-6 மணி வரை தியானம் செய்ய பக்தர்கள் செல்லலாம். அதன் பிறகு குகை மூடப்படும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரஞ் சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. இறைவா! நீயே அனைத்தும்.
    இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் வாக்கு
    1) சித்தன் அருள் - 1735 -வசிஷ்டர் குகை. ரிஷிகேஷ் உத்தர்கண்ட் மாநிலம்.
    https://siththanarul.blogspot.com/2024/11/1735.html

    ----------------
    Google Map link
    --------------
    2) Vashishtha Gufa Temple
    https://maps.google.com/?cid=12293318327505517951

    3) Arundhati Gufa
    https://maps.google.com/?cid=15836395148734842732

    4) அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருத்தலங்கள் Google Map link - சித்தன் அருள்
    https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&usp=sharing

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. இறைவா! நீயே அனைத்தும்.
    இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் வாக்கு
    சித்தன் அருள் - 1735 -வசிஷ்டர் குகை. ரிஷிகேஷ் உத்தர்கண்ட் மாநிலம்.

    ===================================================
    Google Map link to the Vashista Maharishi cave
    https://youtu.be/_vMK2YrNkrU?feature=shared
    ================================================


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete