​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 9 November 2024

சித்தன் அருள் - 1725 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 16


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15

அடியவர் 4:- தியானம் பன்ன முடியவில்லை. பக்தி பன்னகூட மனச ஒருமுகப் படுத்த முடியல, பல பல தவறான எண்ணங்கள் வருது. வினையை வந்து பக்தி செஞ்சு குறைக்கலாம்னா அதுவும் முடியலயே. 

நம் குருநாதர்:- அப்பனே ஏன் (உன் வினையை) குறைக்க முடியவில்லை? எடுத்துரை. 

அடியவர் 4:- பக்தி பன்னும்போது ….

நம் குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன். கர்மா அதிக அளவில் இருந்தால் நிச்சயம் இறைவன் கூட தன் ஆலயத்திற்கு நிச்சயம் ( கர்மா உள்ளவர்கள் ஆலயம் ) செல்ல விரும்ப மாட்டான். 

அடியவர் 4:- (நீண்ட) ம்….( புரிதல் சந்தோசம் )

நம் குருநாதர்:- அவை மட்டும் இல்லாமல் இதனால்தான் அப்பனே யான் சொல்லியது என்னென்ன என்றெல்லாம் மக்களுக்கு, அதாவது மூட நம்பிக்கையிலேயே ஒளிந்துள்ளார்கள் அப்பனே மக்கள். இதை எடுத்துரைக்கவே , முதலில் தன்னை அறிந்து மூட நம்பிக்கையை ஒழித்தாலேயே அனைத்தும் நடக்குமப்பா. அப்பனே உங்களிடையே அனைத்து சக்திகளும் இருக்கின்றது. அதை நீங்கள் கொண்டு வரவில்லை. இதனால்தான் தோல்வி அடைந்து விடுகின்றீர்கள் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர் :- அப்பனே அவ் சக்தியை பின் எப்பொழுது ஒருவன் நிச்சயம் வெற்றி கொள்கின்றானோ, எதை என்று கூற அது எப்பொழுதும் ஒரு மூலையில்தான் மனிதனை அடக்கி , அவை தன் நெற்றியில் வந்து விட்டால் பின் அனைத்தும் தெரியுமப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர் :- அதனால்தான் துன்பத்திற்கு காரணம் என்று பின் உணர்ந்து உணர்ந்து சொல்லிவிட்டான் ஞானி எதை என்று கூற ஆசை என்று. ஆனால் அதைத்தான் நீங்கள் பின்பற்றி வருகின்றீர்கள். எப்படியப்பா அவ் சக்தியை பின் நெற்றியில் கொண்டு வர முடியும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

அடியவர் 4:- எவ்வளவு கஷ்டம் வந்தாலும் திரும்ப ஆசைக்குத்தான் போகின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஆசைகள் போகும் வரை அந்த சக்தி நெற்றிக்கு வராது. 

நம் குருநாதர் :- அப்பனே அவ் சக்தியானது அப்பனே சூரியன் ரூபத்தில் சூடாகவே இருக்கும் என்பேன். அதை வெளிக்கொண்டு வராவிடில் , அவ் ஆன்மாவுக்குப் பிறப்பு,  பிறப்பு என்று எல்லாம் சென்று கொண்டே இருக்கும் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சக்தியானதை வெளிக்கொண்டு வரவில்லை என்றால், கஷ்டங்கள் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றே போய்க்கொண்டு இருக்கும். அது மட்டும் இல்ல. திரும்பவும் பிறவி வந்து விடும். 

நம் குருநாதர் :- அப்பனே , அவை வேண்டும் , இவை வேண்டும் என்றெல்லாம் ( வேண்டுவதை )  முதலில் நிறுத்துங்கள். தன் நிலைமைக்கு , தன்னை ஆற்றுதல் , தன்னைப் பக்குவப் படுத்துதல் அப்பனே எதை என்று புரியப்புரிய. இதனால் தன் நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்கள். தன் நிலைமையைச் சற்று யோசித்துப் பார்த்தாலே அவைதன் வெளிக்கொண்டு வர முடியும் அப்பா. அதனால்தான் சித்தர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்  அவை வெளிவர. பின் அவை வெளி வந்துவிட்டால் யாங்கள் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை உங்களுக்கு. நீங்களே உயர்ந்து விடுவீர்கள் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர் 4:- ( அப்படி உயர்வதற்கு ) அதுக்கு அகத்தியர் அருள் வேண்டுமே. 

நம் குருநாதர் :- அப்பனே அருள் இருந்ததனால்தான் இங்கு வந்து வாக்குகள் நீ கேட்கின்றாய் அப்பனே. ( எம் ) அருள் இல்லாவிடில் உன்னைத் துரத்தியிருப்பேன் அப்பொழுதே. 

அடியவர்கள்  :- ( சிரிப்புக்கள் ) 

அடியவர் 4:- அவ்வளவு கர்மா இருக்கு..

சுவடி ஓதும் மைந்தன் :- இல்லை. அருள் இருந்தனால்தான் நீங்கள் எல்லாம் இப்போது கேட்டுக்கொண்டு உள்ளீர்கள். அருள் இல்லை என்றால் உங்களை எல்லாம் எழுந்து போகச்சொல்லி இருப்பார். ( அதாவது இந்த சத்சங்கத்திற்கே வந்து இருக்கவே முடியாது என்று பொருள் கொள்க. ஒவ்வொரு சத்சங்கத்தில் அடியவர்களைக் கலந்து கொள்ள அழைப்பதே குருநாதர்தான் என்பதே பலருக்கும் தெரியாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு மர்மமான சித்த ரகசியம்.) 

நம் குருநாதர் :- அப்பனே இதனால் மனிதன் கேட்பது அனைத்தும் பாவங்களையே கேட்கின்றான். அதனால்தான் இறைவன் கொடுப்பதே இல்லை. 

அடியவர் 5:- ஐயா, புருவ மத்தியில் தியானிக்கனும்னா அது எந்த புருவத்தைக் குறிக்கும் ஐயா?

நம் குருநாதர் :- அப்பனே நீ எதையும் செய்யாதே அப்பனே. யானே உன்னை எடுத்து பின் அனைத்தும் செய்கின்றேன். போதுமா அப்பனே? உந்தனுக்குச் சொன்னாலும் புரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். அப்படியே போ. நான் பார்த்துக்கொள்கின்றேன். (அகத்தியன்) என்னை நம்பிவிட்டாய் அல்லவா, இதுதான் அர்த்தம். ) 

அடியவர் 4:- எதுவும் செய்ய முடியாது. 

குருநாதர் :- அப்பனே அதனால் கேட்கக் கூடாது என்பேன். தியானம் செய்வது எப்படி? அவை செய்வது எப்படி? கர்மாவை நீக்குவது எப்படி என்று மனிதரிடத்தில் கூறி , மனிதனே மனிதனைச் சரியாகப் பயன்படுத்துகின்றான்., இவன்தனை இப்படி வரவழைத்து விட்டால் காசுகள் சுலபமாகப் பிடுங்கி விடலாம் என்று. இதுதான் பக்தியா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நீங்கள் கேட்டது போல் பிறரிடம் கேட்டால் அதை பயன்படுத்திக் கொள்வார்கள் மற்றவர்கள் ( காசு பிடுங்குவதற்காக ). நான் கற்றுக் கொடுக்கின்றேன். கற்றுக்கொடுத்துவிட்டு காசு கொடு என்று கேட்பார்கள். இது மாதிரிதான் பக்தி இனிமேல் போகும் என்று சொல்கின்றார். 

அடியவர் 4:- வியாபார நோக்கமாக இருக்கு

அடியவர் 3:- ( தியானம் பயிற்சி வகுப்பு எடுக்கும் ஒரு பெரிய குழுவை குறிப்பிட்டு )  அவங்க செய்யும் தியானம் எல்லாம்…

நம் குருநாதர் :- அப்பனே எதை சொல்லித்தந்தாலும் தன் இடத்தில் கர்மா அதாவது பாவங்கள் அதிகம் இருக்கும் பொழுது எதையும் கற்றுக்கொள்ள முடியாதப்பா. 

அடியவர் 4:- அங்கதான் விசயம்.

நம் குருநாதர் :- அப்பனே பாவம் கரைந்து விட்டால் தானாகவே ஓடோடி அனைத்தும் உந்தனுக்கே தெரிந்துவிடும் என்பேன் அப்பனே. இதற்காகத்தான் இறைவன் முயற்சி செய்து கொண்டிருக்கின்றான். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே கலியுகம் என்பது மாய உலகமப்பா. அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் மாயமானதாகவே இருக்கும். 
( ஒரு அடியவருக்குத் தனி வாக்கு ). 

இதனால் சில வகைகளில் கூட மனிதனால் முன்னேறவே முடியாது. ஆனால் பின் அதிக அளவு பக்தி கொண்டிருப்பான். ஆனாலும் யாங்களே வந்து உதவிகள் செய்வோம். பல நபர்களுக்கும் செய்து கொண்டே தான் இருக்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- சில பேர்களுக்கு ஒன்றுமே தெரியாது. எப்படி போவது? ஏது போவது என்று. ஆனால் ( சித்தர்களே) directஆ வந்து செய்து கொடுத்து விடுவார்கள். 

அடியவர் 6:- அது மாதிரிதாங்க ஐயா நான் இருக்கின்றேன். இருக்காங்க என்ற ஒரு தைரியத்தில இருக்கேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் சொல்கின்றார். நானேதான் இருக்கின்றேன் என்று. ( அங்கு இருக்கும் ஒரு அடியவரை காட்டி ) ஏன் இவருக்கு பரிகாரம் சொல்லக்கூடாதா? ஏன் சொல்லவில்லை? அதை நானே தீர்த்து வைக்கின்றேன் என்று குருநாதர் சொல்கின்றார். என்னாலதான் தீர்த்து வைக்க முடியும் என்று சொல்கின்றார். 

நம் குருநாதர் :- அப்பனே நலன்கள். இதனால் முதலில் பக்குவங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்பனே அனைவரையும் பார்த்து ஒன்றைச் சொல்கின்றேன். 
ஒன்றாம் வகுப்பு முடிக்கவே இல்லை.
இரண்டாம் வகுப்பும்…
மூன்றாம் வகுப்பும்…
நான்காம் வகுப்பும்..
ஆனால் பத்தாம் வகுப்பில் பின் கேள்விகள் , அப்படித்தான் நீங்கள் கேட்கின்றீர்கள் அப்பனே. எப்படியப்பா பதில் உரைக்க முடியும் யான்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல்ல ஒரு விளக்கங்கள். அடியவர்கள் புரிதல்கள்.) 

அடியவர் 6 :- ( சித்தர்கள் உதவிகள் செய்ததை குறித்து விளக்கினார்.) 

நம் குருநாதர் :- அறிந்தும் அறிந்தும் கூட நேற்றைய பொழுதில் கூட ( சத்சங்கத்தின் முதல் நாள் வாக்கில் ) சொல்லிவிட்டேன்.  அதாவது பல புண்ணியங்களை செய்திட்டு சில கர்மாக்களே ஆன்மாக்கள் செய்யும். ஆனால் நிச்சயம் பின் நீண்ட வரிசையில் ( இறைவன், குருநாதர் முன் ). ஆனாலும் புலம்பிக்கொண்டிருக்கும். இவ்வளவு புண்ணியங்கள் செய்தேனே, சிறிய தவறு செய்து விட்டேனே என்று. ஆனால் அவ் ஆன்மாவிடத்தில் யாங்கள் வந்து நிச்சயம் அடுத்த பிறவி உண்டு, யாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று கூறிவிட்டு எதை என்று அறிய அறிய இப்பொழுது வந்து விட்டீர்கள் அல்லவா?
பின் அனைவரையும் இதனால் நீங்கள் அனைவருமே அதாவது இவ் ஆன்மா என்னைப் பார்த்ததுதான். 

அடியவர் 7:- எனக்கு வாக்கில் இது தான் கடைசி பிறவி என்று சொல்லி உள்ளார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மிக அருமையான விளக்கங்கள் அளித்தார்கள்) 

நம் குருநாதர் :- அப்பனே அம்மையே இதனால் பின் ஏதும் தெரியாமல் இறைவனை வணங்குவது , நிச்சயம் ஏதும் தெரியாமலேயே பின் கஷ்டங்கள் வந்துவிடும். 

இதனால் முடிந்த அளவு நன்மையைச் செய்யுங்கள். பிறருக்கு உதவிடுங்கள். 

(நீங்கள்) கஷ்டங்கள் படும் பொழுது பின் எந்தனுக்கு இது உதவியாக இருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :- (அடியவர்களிடம்) ஏன் உதவியாக இருக்கும்? யாராவது சொல்லுங்கள் ஐயா? 

அடியவர்கள் :- ( அமைதி ) 

நம் குருநாதர் :- என் பக்தனாக இருப்பான் அப்பனே. அன்பைப் பொழிவான். ஆனால் புண்ணியங்கள் இருக்காதப்பா. இதை வைத்து அப்பனே யான் காப்பாற்றி விடுவேன். ஆனாலும் பிரம்மாவும் அகத்தியனே உன்னை வணங்கி விட்டால் நீ அனைத்தும் சரி செய்து விடுவாயா? என்ன புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று என்னைக் கேட்பானப்பா. அதனால்தான் சொல்கின்றேன். அன்பு மகன்களே!!!! அன்பு மகள்களே!!!!

அடியவர்கள் :- ( பரவசம் அடைந்த நிலையில் ) 
அகத்தீசப்பா!!! 
அகத்தீசப்பா!!!! 
அகத்தீசாய நம!!!!

நம் குருநாதர் :- கிரகங்களைக்கூட என்னால் கட்டுப்படுத்த முடியும். அதே போல் உங்களாலும் கட்டுப்படுத்த முடியும். பின் எப்படி? 

அறிந்தும் கூட சொல்லிவிட்டேனே நெற்றியில் பிழம்பை வைத்து விட்டால் கிரகங்களும் ஒன்றும் செய்யாது. ஆனால் அனைத்தும் அடிபட்டு.

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் நல்லா அடிபட்டு கஷ்டத்தை கொடுத்த பின்தான் நெற்றியில் வரும். அப்பொழுது கிரகங்கள் ஒன்றும் செய்யாது. கஷ்டத்தைக் கொடுக்காது. 

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது நீங்களே சொல்லுங்கள். அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு என்ன அவசியம்? 

அடியவர் 3 :- எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே கஷ்டம்தானப்பா. அப்பனே கஷ்டம் என்பது புண்ணியம். இன்பம் என்பது பாவம். 

அடியவர் 3:- (குருநாதர் ) அப்பா ஏற்கனவே சொல்லி இருக்கின்றார்கள். இன்பம் எப்படி ஒரு மாயையோ, அது போல் துன்பமும் ஒரு மாயையாக கருதிக்கொண்டால்..

நம் குருநாதர் :- அம்மையே இன்னொரு முறையையும் சொல்லிவிடுகின்றேன். இன்பத்தை, இன்பத்தாலேயே அடிக்க வேண்டும். துன்பத்தை, துன்பத்தாலே அடிக்க வேண்டும். 

அடியவர்கள் :- புரியவில்லை ஐயா. 

அடியவர் 1:- ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடியவர் 2:- ஆம்.

அடியவர் 3:- ( இன்பம் , துன்பம் ) இரண்டையும் ஒன்றாக்க் கருத வேண்டும்

நம் குருநாதர்:- எவ்வளவுக்கு எவ்வளவு துன்பம் வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு புண்ணியங்கள் நீங்கள் சேர்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

எவ்வளவுக்கு எவ்வளவு பின் இன்பம் வருகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பின் பாவங்கள் சேர்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று. ஆனால் ஓர் நாள் அடித்தால் தாங்க முடியாது தாயே!!!!! தந்தையே!!!!!

அடியவர் :- ஐயா இன்பம் வந்து குறையுது என்றால் அப்போ நம்ம deposit amount குறையுது. துன்பம் குறையுது என்றால் நம்ம  செய்த பாவங்கள் குறையுதுதானே? அது எப்படி…

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி எப்படி சொல்றீங்க. சொல்லுங்கள். ( கேள்விகளை மேலும் விளக்கங்கள் சொல்லச் சொல்லினார்கள் அனைவருக்கும் புரியும்படி ) 

அடியவர் :- துன்பம் வந்து குறையுதுன்னு சொல்றீங்க ஐயா. நமக்கு (துன்பம்) குறையுது. நம்ம அனுபவிச்சுக்கிட்டு இருக்கும் போது. இப்ப நமக்கு ஒரு பிரச்சனை வருதுங்க ஐயா. அந்த பிரச்சினை…

அடியவர் 2 :- துன்பம் அனுபவிச்சு குறையுது…

சுவடி ஓதும் மைந்தன் :- ம்…. ( சரியே ) 

அடியவர் :- அந்த ஒரு பிரச்சினையை அனுபவிச்சிக்கிட்டு இருக்கின்றோம். அப்போ அது குறையுது. நமக்கு அந்த பாவ கணக்கு குறைகின்றது. 

நம் குருநாதர் :- அம்மையே அப்படி இல்லை. துன்பத்தை எவை என்றும் அறிய அறிய துன்பம் குறைந்து கொண்டே வந்தால் அம்மையே பாவம் குறையும். ஆனால் என்ன ஆகும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- சரி. நீங்க சொல்லும் வழியிலேயே வந்து விட்டார். என்ன ஆகும் அடுத்து? பாவம் குறையும் பொழுது என்ன ஆகும்?

அடியவர் :- பாவம் குறையும். புண்ணியம் சேரும். 

அடியவர் 1:- புண்ணியம்..

நம் குருநாதர் :- அறிந்தும் , அறிந்தும் அம்மையே தூங்கிக்கொண்டிருக்காதே. சொல்லிவிட்டேன். 

அடியவர் :- ( சிரிப்பு ) 

நம் குருநாதர் :- அறிந்தும் கூட இதனால் அப்பொழுது இன்பமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் கடைசியில் எவராலும் எதையும் சாதிக்க முடியாது. பின் துன்பமாகவே இருந்தால் , நிச்சயம் சாதித்துக்கொள்ளலாம். அப்பொழுது சாதிக்க வேண்டுமா? சாதிக்க முடியாத அளவிற்கு நீங்கள் போக வேண்டுமா? 

அடியவர் 2:- சாதிக்க வேண்டும்.

அடியவர் 3 :- சாதிக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் துன்பம் என்ற நிலை வரவேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். துன்பம் இல்லை என்றால்…

அடியவர்கள் :-  சாதிக்க முடியாது. ( சிரிப்பு அலைகள் அங்கு ) 

சுவடி ஓதும் மைந்தன் :- சாதிக்க முடியாது. அப்போ நீங்க சாதிக்க முடியாமல்  போக வேண்டுமா? சாதிக்கும்படி போக வேண்டுமா?

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலை ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ துன்பம் வரும்பா. ஏற்றுக்கொள் என்று சொல்கின்றார். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலை ) 

நம் குருநாதர் :- அப்பனே துன்பம், துன்பத்தால் அடிக்க வேண்டும் என்று சொல்கின்றேன் அல்லவா? அப்பனே இதையும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் அப்பனே. துன்பம் வரும்பொழுது அப்பனே சிரிக்க வேண்டும் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏற்கனவே பழமொழி உள்ளது. 

அடியவர் :- இடுக்கண் வருங்கால் நகுக..

அடியவர் 4:- வள்ளுவர்..

( தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் 621: பால்: பொருட்பால். அதிகாரம் - 63 - இடுக்கணழியாமை.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

விளக்கம்:- நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை. ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ துன்பத்தை எப்படி நம்ம control பன்ன வேண்டும்?….. சிரிக்க வேண்டும். 

அடியவர் :- இடுக்கண் வருங்கால் நகுக. 

அடியவர் 3 :- துன்பம் வரும் போது சந்தோஷப்பட வேண்டும். 

அடியவர் 4:- (இப்படி) சொல்லுவது ஈசியாக இருக்கு. ஆனால் நடைமுறையில் கஷ்டமாக இருக்கு. 

அடியவர்கள் :- ( சிரிப்பு அலை ) 

நம் குருநாதர் :- அப்பனே சாப்பிடுவதற்குக் கூட , சாப்பிடு என்று சொல்வார்கள் அப்பனே. இதை எப்படிச் சொல்வாய் என்பேன் அப்பனே? ஆனால் உட்கார்ந்து சாப்பிடுவது கஷ்டம். ஆனால் அப்பனே உள் சென்றால் சாப்பிட்டுக்கொண்டே இருப்பாய் அல்லவா? ……

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. குந்தி தேவி கண்ணனிடம் அடிக்கடி துன்பம் வர வேண்டும் அப்போது தான் உன் தரிசனம் கிடைக்கும் என்று சொல்லி உள்ளார்.

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  5. ஓம் கணபதியே போற்றி, ஓம் முருகா, ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேதக அகத்திசய நமக... இந்த வருட கோடாநல்லூர் பூஜை பற்றிய தகவல் கூறவும். நன்றி ஈச...

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  7. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பாதம் சரணம்.

    வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் 22 பகுதிகளாக வெளிவந்து நிறைவு அடைந்தது. அடியவர்கள் இந்த வாக்கினைப் படித்து மகிழ , இந்த 22 வழக்குகளின் பதிவு எண் மற்றும் அதன் 22 இணைப்புகள் ( blog spot links ) இங்கு அளிக்கின்றோம். இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப் புண்ணியங்கள் உண்டாகும். அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்துச் சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும்.

    சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
    https://siththanarul.blogspot.com/2024/06/1639-1.html

    சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
    https://siththanarul.blogspot.com/2024/06/1640-2.html

    சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
    https://siththanarul.blogspot.com/2024/07/1644-3.html

    சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
    https://siththanarul.blogspot.com/2024/07/1645-4.html

    சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
    https://siththanarul.blogspot.com/2024/08/1665-march-2024-5.html

    சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
    https://siththanarul.blogspot.com/2024/08/1666-march-2024-6.html

    சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
    https://siththanarul.blogspot.com/2024/08/1667-march-2024-7.html


    சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
    https://siththanarul.blogspot.com/2024/09/1672.html

    சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
    https://siththanarul.blogspot.com/2024/09/1674-march-2024-9.html

    சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
    https://siththanarul.blogspot.com/2024/10/1690-march-2024-10.html

    சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
    https://siththanarul.blogspot.com/2024/10/1698-march-2024-11.html

    சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
    https://siththanarul.blogspot.com/2024/10/1700-march-2024-12.html

    சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
    https://siththanarul.blogspot.com/2024/10/siththan-arul-1707-march-2024-13.html

    சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
    https://siththanarul.blogspot.com/2024/10/1704-march-2024-14.html

    சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
    https://siththanarul.blogspot.com/2024/10/1709-march-2024-15.html

    சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
    https://siththanarul.blogspot.com/2024/11/march-2024-16.html

    சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
    https://siththanarul.blogspot.com/2024/12/1755-march-2024-17.html

    சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
    https://siththanarul.blogspot.com/2024/12/1756-march-2024-18.html

    சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19
    https://siththanarul.blogspot.com/2024/12/1757-19.html

    சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
    https://siththanarul.blogspot.com/2024/12/1759-20.html

    சித்தன் அருள் - 1760 - மதுரை வாக்கு - 21
    https://siththanarul.blogspot.com/2024/12/1760-21.html

    சித்தன் அருள் - 1761 - மதுரை வாக்கு - 22
    https://siththanarul.blogspot.com/2024/12/1761-22.html


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete