வணக்கம் அகத்தியர் அடியவர்களே
குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவுப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் ராம் டெக் ஹிவர்கேட் இங்கெல்லாம் குருநாதர் வாக்குகள் உரைத்த பிறகு அடுத்து ஜல்ஹாவ் தலத்தில் வைத்து மகாராஷ்டிரா மாநில அகத்தியர் பக்தர்களுக்கு சத்சங்கம் உரையாற்றினார்.
சத்சங்க வாக்குகளை பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துகின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் இந்த பதிவு மிகவும் அவசியமாகின்றது!!
கடந்த சில மாதங்களாக அகத்தியர் ஜீவநாடியை குறித்தும் ஜீவநாடியில் வரும் வாக்குகளை குறித்தும் பல மக்கள் பல்வேறு விதமாக பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த உலக மக்கள் நன்மைக்காக குருநாதர் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் சுவடியை எடுத்து செல்ல சொல்லி அங்கிருந்து பொது வாக்குகளையும் பெங்களூரு ஈரோடு கோயமுத்தூர் மதுரை சூரத் மகாராஷ்டிரா என சத்சங்கங்களை நடத்தியும் அனைவருக்கும் வாக்குகள் தந்து உணர்த்தி வைக்கின்றார்.
சித்தன் அருள் வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும்... எத்தனை எத்தனை ஆலயங்கள் எத்தனை சத்சங்கங்கள் குமரி முதல் இமயம் வரை அலைந்து திரிந்து மேற்கே குஜராத்தில் இருந்து கிழக்கே திரிபுரா கொல்கத்தா வரை தெற்கே திருச்செந்தூரில் இருந்து வடக்கே காஷ்மீர் அமர்நாத் வரை எத்தனை எத்தனை திருத்தலங்கள் எத்தனை சக்தி பீடங்கள் என மனிதர்கள் வாழ்வு நலம் பெற பொது வாக்குகளை கூறி வழி நடத்துகின்றார்.
ஆனால் மக்களோ பொதுவாக்குகளை அது யாருக்கோ குருநாதர் சொல்லி இருக்கின்றார் நமக்கு சொல்லவில்லை என்று.. நினைப்பில் இருக்கின்றார்கள் ஒவ்வொரு பொது வாக்கிலும் நமக்கான பாடங்கள் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதில்லை.
சித்தன் அருள் வலைத்தளத்தில் வலது புறம் கீழே கார்னரில் இருக்கும் குருநாதர் உரைத்த திருத்தலங்கள் கூகுள் மேப் லிங்கை திறந்து பார்த்தால் திரு ஜானகிராமன் ஐயா எத்தனை ஆலயங்களுக்கு சென்று இருக்கின்றார் எப்படி எல்லாம் திரிந்திருக்கின்றார் என்பது புரியும்.
ஒவ்வொரு யாத்திரையின் போதும் அவர் படும் கஷ்டங்கள் என்னென்ன என்பது யாருக்கும் தெரியாது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் உணவு உறக்கம் இதை இரண்டாம் பட்சமாக வைத்து குருநாதர் கட்டளையை செயல்படுத்த வேண்டும்... குருநாதர் கூறும் மலை கோயில்களுக்கு செல்லும் பொழுது காலசமயங்கள் மாற்றங்கள் சீதோசன நிலை குளிர் பனி வெயில் கடுமையான மலை ஏற்றம் ஏறிய பின்னர் இறைவன் தரிசனத்திற்காக காத்திருந்து தரிசனம் பெற்ற பின் உடனடியாக குருநாதர் உலக நன்மைக்காக உரைக்கும் பொது வாக்குகள் படிப்பது என எத்தனை !!எத்தனை!!
கஷ்டங்கள்... உழைப்பு!!!
சில ஆலயங்களில் படிக்கட்டு வசதிகள் இருக்காது காடுகள் கடும் குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு அலைந்து திரியும் அகத்தியர் மைந்தனை பற்றி மாற்றுக் கருத்துகளை பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர் எப்படி இத்தனை ஆலயங்களுக்கு செல்கின்றார் ??யார் உதவுகின்றார்கள்??? என்ன செய்கின்றார் அவருடைய பிழைப்பிற்கு என்ன என்று யாரும் யோசிப்பதில்லை.
யாரிடமும் அவர் ஜீவநாடி படிப்பதற்கு கட்டணம் வாங்குவதில்லை... பணத்திற்காக அவர் படிப்பதும் இல்லை.. குருநாதர் என்ன சொல்கின்றாரோ அதை மட்டும் தான் அவர் கேட்பார்.
பல இடங்களில் இவர் செல்லும் இடங்களில் இவரிடமிருந்து தான் பல உதவிகள் மற்றவர்களுக்கு தான் கிடைத்திருக்கின்றது..
திரு ஜானகிராமன் அய்யா அவர்களிடம் நன்கொடை கேட்டும் தான தர்மங்கள் உதவிகள் கேட்டும் வருகின்றவர்களுக்கு இவர் தான் செய்து கொண்டிருக்கின்றார்....
அன்னதானங்கள் தான தர்மங்கள் என குருநாதர் கூறும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உடல்நிலை சோர்வு அடைந்திருந்தாலும் குருநாதர் இட்ட பணிகளை செய்து வரும் மைந்தனின் வாழ்க்கையை குறித்து யாருக்கும் தெரிவதில்லை.
ஏழைகளுக்கு படிப்பதில்லை என்று சொல்கின்றார்கள்...
யார் ஏழை யார் பணக்காரன் என்று பாராபட்சம் பார்த்து வாக்குகள் குருநாதர் உரைப்பதில்லை
ஒருவருடைய பாவம் புண்ணியத்தை வைத்து தான் வாக்குகள் கிடைக்கும் இதை மனதில் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டும்.
உலகப் பொதுமறை ஓலைச்சுவடி இது... இதில் அனைவருக்கும் வாக்குகள் உண்டு !!
இந்த பாரத தேசத்தை தர்மத்தை முழுவதுமாக அழித்துவிட எத்தனை சக்திகள் காத்திருக்கின்றன??? நமது தர்மத்தை சிதைக்க காத்திருக்கின்றன??? அதற்கு இந்த பாரத தேசத்தை அழிவில் இருந்து காப்பாற்ற சில சமயங்களில் சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வாக்குகள் கொடுக்கின்றார். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சித்தர்கள் தீர்மானித்து வாக்குகள் தந்து வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் பேசுபவர்களோ இதை திரித்து பேசுகின்றார்கள் விஐபிகளுக்கு வாக்குகள் படிக்கின்றார் பொதுமக்களுக்கு படிப்பதில்லை என்று
அவர்கள் எல்லாம் என்ன நினைப்பில் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை....
இந்த இளம் வயதில்
தன் சொந்த வாழ்க்கை தன் குடும்பம் என எதையும் பார்க்காமல் குருநாதர் இட்ட கட்டளையை ஒவ்வொரு நாளும் ஏற்றுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி திரிந்து கொண்டு வாக்குகள் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயாவை பற்றி தவறான கருத்துக்களை கூறும் மனிதர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணிக் கொண்டு பேசக்கூடாது...
சுழற்சி முறையில் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சத்சங்கங்களை நடத்தி அனைவருக்கும் வாக்குகள் வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.
ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 50 பேர் ஏறிச் செல்லும் பேருந்தில் ஒரே நேரத்தில் 500 பேர் ஏறிச் செல்ல முடியாது இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் எப்படி வாக்குகள் தர முடியும்???
உங்கள் வேண்டுதல்களை பிரார்த்தனைகளை குருநாதரிடம் வையுங்கள் குருநாதர் இடம் எனக்கு வாக்குகள் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். குருநாதர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் தான தர்மங்களை செய்யுங்கள் புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளுங்கள் குருநாதருடைய வாக்குகள் தானாகவே உங்களுக்கு கிடைக்கும் புண்ணியங்கள் இருந்தாலும் உங்கள் இல்லம் தேடி குருநாதர் வருவார். பக்தன் வீட்டிற்கு செல் என்ற குருநாதர் ஜானகிராமன் ஐயாவிற்கு கட்டளையிடுவார் அதை புரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா கால சூழ்நிலையில் குருநாதர் கூறிய 32 மூலிகைகளையும் சேகரித்து அதை பொடியாக்கி பொதுமக்களுக்கு கொடுத்து நோயிலிருந்து காப்பாற்றி இன்றுவரை அந்த மருந்தினை மக்களுக்கு கிடைக்குமாறு செய்து அதன் மூலம் இன்று வரை இரண்டு மூன்று கேன்சர் பேஷண்ட்கள் வரை குணமடைந்துள்ளனர்.
குருநாதர் என்ன அதிசயத்தை செய்யவில்லை???
இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றே தெரியவில்லை இவர்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் நடத்திக் கொடுக்க குருநாதர் ஒன்றும் வேலைக்காரர் அல்ல!!!
ஒரு முறை ஒரு சச்சங்கத்தில் வந்து அமர்ந்த 50 பேரும் கணினி துறையில் ஐடி பீல்டில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் அடியவர்கள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் சத்சங்கம் நடந்தது... அனைவரும் அமர்ந்திருந்தார்கள் எவருக்கும் தான தர்மங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று யாருக்கும் தோணவில்லை... அந்த சத்சங்கம் நடந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பணியாளராக இருக்கும் ஒரு ஏழை பெண்மணி ஒரு நூறு ரூபாய் கொண்டு வந்து திரு ஜானகிராமன் ஐயா குருநாதர் ஓலைச்சுவடி முன்னால் வைத்து ஐயா வணக்கம் இது என்னுடைய என்னால் முடிந்த குரு தட்சனை இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வைத்த பொழுது... ஜானகிராமன் ஐயாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது... எத்தகைய மனம் இருந்தால் அந்த வேலை செய்யும் பெண்மணி கண்ணால் முடிந்ததை கொண்டு வந்து வைப்பார்!!!... அதை அந்த அம்மாவிடமே திரும்ப கொடுத்துவிட்டு அம்மா நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!... குருநாதரும் நானும் உங்கள் மனதைத்தான் எதிர்பார்க்கின்றோம்!!!.. சிலருக்கு அனைத்தும் இருந்தும் செய்வதற்கு மனம் வருவது இல்லை சரி அது அவர்களுடைய விருப்பம்!! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அம்மா நான் எதையும் ஜீவனாடி படிப்பதற்கு.. எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை... என்று தெரிவித்தார்.
குருநாதர் மைந்தனிடம் சுவடியை கொடுத்து பொதுமக்களுக்காக மகனே நீ ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டு அதன் படி ஜானகிராமன் ஐயா அலைந்து திரிந்து கொண்டிருந்த காலகட்டம்...
அந்த காலகட்டத்தில் ஜானகிராமன் ஐயாவை நிறைய பேர் தொடர்பு கொண்டு நீங்கள் எங்களுடைய இடத்திற்கு வாருங்கள். எங்களுடைய இடத்தில் இருந்து நீங்கள் வாக்குகள் படியுங்கள்.. உங்களுக்கு அதை செய்து தருகின்றோம். இதை செய்து தருகின்றோம்.
நாங்கள் பரிந்துரைக்கும் ஆட்களுக்கு நீங்கள் சுவடி படியுங்கள்.
நாம் இவ்வளவு கட்டணம் வாங்குவோம் ஆளுக்கு பாதி பாதி எடுத்துக் கொள்வோம்... எங்களுடைய ஆசிரமத்திலேயே தங்கி விடுங்கள்... உங்களுக்கு வீடு வாகனம் வசதி அனைத்தையும் செய்து கொடுக்கின்றோம் என்றெல்லாம் வலை வீசி பார்த்தார்கள். ஆசை வார்த்தைகளை பேசி மயக்க நினைத்தார்கள்.
ஆனால் திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் தெரிவித்தது இது ஒன்றுதான்.... ஐயா மன்னியுங்கள். குருநாதர் எனக்கென்று சில கட்டளைகளை கூறியுள்ளார். அதன்படி தான் நான் நடப்பேன் பணத்திற்காகவும் வசதிக்காகவும் ஆசைப்படுபவன் நான் அல்ல!!!!.... எனக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் சிலரிடம் யாசகம் பெற்று கூட வாழ்ந்து விடுவேன்... எங்கேயாவது செல்ல வேண்டும் தூரத்தில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் யாரிடமாவது கேட்டு சென்று விடுவேன் ஆனால் எனக்கு பணம் பேர் புகழ் செல்வாக்கு இதை பற்றி கவலை இல்லை குருநாதர் கூறிய பேச்சை தான் நான் கேட்பேன்... என்று அனைவருக்கும் தெரிவித்துவிட்டார்.
ஒருமுறை ஒரு ஆலயத்தில் வைத்து பக்தர்களுக்கு வாக்குகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குகள் கேட்பார்கள் அந்த நேரத்தில் தொடர்பு கொண்டு வாக்குகள் கேட்ட பக்தருக்கு முருகப்பெருமானே வந்து வாக்குகள் உரைத்தார் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மூச்சிரைக்க வாக்குகள் வாசித்த திரு ஜானகிராமன் ஐயாவிற்கு தண்ணீர் கூட கொடுப்பதற்கு அங்கு ஆளில்லை தாகம் எடுத்து விட்டது திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு.
தொலைபேசியில் வாக்குகள் கேட்ட நபரும் ஐயா நன்றிங்க ஐயா என்று ஒரே வார்த்தையில் போனை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அந்த ஆலயத்தில் இருக்கும் பூசாரி களைத்த நிலையில் இருக்கும் ஜானகிராமன் ஐயாவை பார்த்து அப்பா பொறு அப்பா நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றேன் என்று தண்ணீர் எடுக்க சென்று விட்டார்.
அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு நபர் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று பார்த்தாயா தம்பி!!!
இப்படித்தான் உலகம் இதுதான் உலகம் நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் உலகம் அப்பா இது என்று சொல்லிவிட்டு திடீரென காணாமல் சென்று விட்டார்..
அதன் பிறகு தொலைபேசியில் அந்த நபருக்கு இதுவரை முருகப்பெருமானும் சரி குருநாதரும் சரி வாக்குகள் இதுவரை தருவதற்கான உத்தரவை தரவில்லை!!
ஒவ்வொரு சத்சங்கமும் 7 மணி நேரம் 8 மணி நேரம் நடக்கும் தொடர்ந்து அந்த மின்சார அதிர்வை சித்தர்களின் கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு படிக்க வேண்டும்
ஓலைச்சுவடி ஒன்றும் செய்தித்தாள் அல்ல!! விரும்பிய நேரத்தில் விரும்பிய மனிதர்களுக்கு படிப்பதற்கு ஓலைச்சுவடி படிக்கும் பொழுது இறை ஆற்றல் சக்தி திரு ஜானகிராமன் ஐயா உடலுக்குள் இறங்கும் ஒரு மின்சாரம் தாக்குவது போல் இருக்கும் அரை மணி நேரம் பொதுவாக்குகள் படித்தவுடன் மூச்சிரைக்க தண்ணீர் தாகம் எடுத்து தவித்து விடுவார்... சில புண்ணிய ஸ்தலங்களில் ஒரு வினாடிக்கு மூன்று வார்த்தைகள் என வேகமாக படு வேகமாக வார்த்தைகள் வரும் மூச்சு திணற திணற படிக்க வேண்டி இருக்கும்
இப்படி எல்லாம் நமக்காக போராடிக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றி தவறாக பேசுவதற்கு நமக்கு என்ன அருகதை இருக்கின்றது???
இப்படி நம்மில் ஒருவர் யாராவது இத்தனை ஆலயங்களுக்கு திரிய முடியுமா???? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிலருக்கு ஜானகிராமன் ஐயா சுவடியை அகத்தியர் தான் வந்து சொல்கின்றாரா? என்ற சந்தேகங்கள் வேறு!!
மற்றும் அந்த நாடியில் அப்படி இருந்தது இந்த நாடியில் இப்படி இருந்தது என்ற வேறுபாடு கண்ணோட்டங்கள் வேறு மனிதர்களுக்கு இருக்கின்றது.
இத்தனை அதிசயங்கள் இத்தனை ரகசியங்கள் என ஒவ்வொரு வாக்கிலும் வருவது என்ன கற்பனையாகவா எழுத முடியும்??? அப்படி எழுத முடியுமா?? என்ன?? எழுதினால் என்ன ஆகும் என்று தெரியாமலா இருக்கும்????
இதற்கு முன்பாக
திரு ஹனுமதாசன் ஐயா அவர்கள் பக்தர்களுக்கு குருநாதர் உரைத்த வாக்குகள் அனுபவங்கள் தினத்தந்தியிலும் நாடி சொல்லும் கதைகள் மூலமாகவும் அனுமதாசன் அய்யா வாயிலாக நம்பி மலை கோடகநல்லூர் அகோபிலம் என பொது வாக்குகளாகவும் வந்திருக்கின்றது.
ஜானகிராமன் ஐயா அவர்கள் நாடியின் மூலம் குருநாதர் கூறிய வாக்குகள் மூலமாக பல மாற்றங்கள் குருநாதர் சொன்னதைக் கேட்டு வாழ்க்கை மாறியது குறித்தான அனுபவ பதிவுகள் ஏராளம் இருக்கின்றன.
குருநாதருடைய பொது வாக்குகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும்... குருநாதருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம் .
அனுபவப் பதிவுகளை எல்லாம் குருநாதர் அற்புதங்கள் அதிசயங்கள் எல்லாம் வெளிவரும் காத்திருங்கள்.
குருநாதர் ஏன் இத்தனை பொது வாக்குகள் கூறுகின்றார் ஒவ்வொரு வாக்கிலும் அவர் திட்டிக் கொண்டுதான் இருக்கின்றார் என்பதை குறித்தும் மனிதர்களுக்கு பல சிந்தனைகள்.
ஒவ்வொரு கால சமயத்திலும் மனிதர்களுடைய மனம் மாற்றம்.
பெருகி வரும் பாவங்கள் குற்றங்கள் !! இதற்கு தகுந்தார் போல் தான் தீர்வு சொல்வதை போல தான் வாக்குகள் வரும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் கடிதப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தனர் இன்று யாராவது கடிதம் எழுதுகிறார்களா என்ன????
இன்றைய காலகட்டத்தில் என்னென்ன அநியாயங்கள் அக்கிரமங்கள் புது புது வியாதிகள் வந்து கொண்டிருக்கின்றது அது மட்டும் இல்லாமல் பூமி சுற்றும் வேகம் குறைந்துவிட்டது இதனால் நவகிரகங்கள் தடம் மாறி நிற்கின்றது பூமிக்கு வரும் ஆபத்து என்ன மனிதர்களுடைய பாவ கர்மாக்களால் ஈசன் இந்த உலகத்தை அழித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையில் பொறுத்திரு!!! ஈசனே பொறுத்திரு ஈசனே என்றெல்லாம் குருநாதர் அகத்தியர் பெருமானும் சித்தர்களும் போராடிக் கொண்டிருக்கியில் மனிதர்களுடைய குணம் மாறிக் கொண்டிருக்கையில் அதை சரி செய்வதற்கு வாக்குகள் தந்து கொண்டிருப்பதை சரியாக உணர்ந்து கொள்ளாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேபோல் எங்களுக்கு வாக்குகள் வரவில்லை!! மற்றவர்களுக்கு மட்டும் வருகின்றது என்றெல்லாம் எண்ணங்கள் வேறு!!!
இதற்கு உதாரணமாக இரண்டு மூன்று சம்பவங்களை சொல்லலாம்..
ஒரு முறை சூரத் சங்கத்தில் குருநாதர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் வாக்குகள் தந்து கொண்டிருக்க... இரவு பத்து மணி ஆகிவிட்டது கடைசியாக ஒரு குடும்பம் வந்து குருநாதரிடம் வாக்குகள் கேட்பதற்காக திரு ஜானகிராமன் ஐயா முன்பு அமர்ந்தது.
அப்பனே இவர்களுக்கு வாக்கு இப்போது இல்லை இவர்களுக்கு கடுகளவும் புண்ணியம் இல்லை... புண்ணியங்கள் சிறிதளவாவது இருந்தால் தான் அப்பனே யான் வாக்குகள் தர முடியும்... என்று வாக்குகள் தர மறுத்துவிட்டார்.
அந்த குடும்பம் நல்ல வசதியான குடும்பம் ஆனால் புண்ணிய செயல்கள் இதுவரை செய்ததே கிடையாது.. குருநாதர் இதை கூறியவுடன் அவர்கள் முகம் வாடிவிட்டது அப்போது ஜானகிராமன் ஐயா அவர்களுடன் உடன் வந்து அடியவர் என்ன விஷயம் என்று கேட்பதற்கு மிகவும் ஒரு அவசர கால நிலையில் இருக்கின்றோம் குருநாதர் கூறும் பதில்தான் எங்கள் வாழ்க்கையே அடங்கி உள்ளது ஆனால் குருநாதர் புண்ணியம் இல்லை என்று கூறிவிட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னார்கள் அப்பொழுது அந்த அடியவர் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் இன்று இரவு உங்களுக்கு இருக்கின்றது.. இந்த இரவில் முடிந்த வரை உங்களால் யாருக்கெல்லாம் தான தர்மங்கள் செய்ய முடியுமோ அவர்களுக்கு செய்யுங்கள் முடிந்தால் கூடுமானவரை உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாங்கிச் சென்று இந்த சூரத் நகரில் பசியோடும் பட்டினியோடும் இருக்கும் ஆதரவற்றோர் இயலாதவர்களுக்கு கொடுத்துவிட்டு காலையில் வாருங்கள் ஒருவேளை குருநாதர் வாக்குகள் தரலாம் என்று கூற... அந்தக் குடும்பமும் அன்று இரவே ஒரு ஹோட்டலுக்கு சென்று 30 உணவுப் பொட்டலங்களை வாங்கி தண்ணீர் பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு சூரத் நகரில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பிளாட்பார்மில் தெரு ஓரங்களில் இருக்கும் இயலாதவர்களுக்கும் கைவிடப்பட்டோர்களுக்கும் உணவையும் நீரையும் கொடுத்துவிட்டு... அடுத்த நாள் காலையில் சத்சங்கம் நடக்கும் இடத்தில் முதல் ஆளாக வந்து அமர்ந்த குருநாதரை வணங்கி பிரச்சனைகளை கூறினார். குருநாதரும் அந்த இரவு செய்த புண்ணியத்தால் அவர்கள் குடும்பத்திற்கு வாக்குகள் தந்து சில உபயங்களையும் சொல்லி அவர்களுடைய பிரச்சினைகளில் இருந்து மீட்டுக் கொடுத்தார்.
இதேபோன்று ஒரு மருத்துவர் குடும்பம் வந்து குருநாதரிடம் வாக்குகள் கேட்பதற்கு சத்தங்கத்தில் வந்தனர் அவர்களுடைய குழந்தை நார்மலாக இல்லை எந்த ஒரு ஆக்டிவிட்டியும் இல்லை என்று... வாக்குகள் குருநாதர் தந்து வழி சொல்ல வேண்டும் என்று கேட்டனர்
இவர்களுக்கும் குருநாதர் மனம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை காப்பகத்திற்கும் அனாதை ஆசிரமங்களுக்கும் சென்று அன்னதானம் செய்துவிட்டு வாருங்கள் என்று சொன்னார்.
குருநாதர் இந்த வாக்கினை கேட்ட மருத்துவர் குருநாதர் கூறிய தர்ம செயல்களை நான் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்... என்று பதில் கூறினார்.
அப்பொழுது குருநாதர் அம்மையே இரு மாதங்களுக்கு முன்பாக உன் இல்ல தலைவன் அது கணவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதல்லவா
அந்த மருத்துவர் அப்படியே அதிர்ச்சியானார்... ஆம் குருநாதா ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது என்று சொல்ல.
அம்மையே அந்த விபத்தில் உன் கணவன் கை கால்களை இழந்து முடமாகி மயக்க நிலையிலேயே அதாவது கோமா ஸ்டேஜ் அப்படியே இருந்திருக்க வேண்டும் ஆனால் நீ இப்போது சொன்னாய் அல்லவா!!!! அந்த புண்ணியங்களால் தான் உன் கணவன் காப்பாற்றப்பட்டான். இப்பொழுது என் முன்னால் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.
நீங்கள் செய்யும் புண்ணியங்கள் உங்கள் விதியில் இருக்கும் பாவங்களை தோஷங்களை ஆபத்துக்களை விலக்கிவிடும் அம்மையே தர்மம் தலைகாக்கும் என்று பெரியவர்கள் சொன்னார்கள் ஏன் எதற்கு என்று இப்பொழுது புரிகின்றதா
நீ இதுவரை செய்த புண்ணியங்கள் உன் கணவனை காப்பாற்றி விட்டது இனிமேல் நீ செய்யும் புண்ணியங்கள் உன் குழந்தையை பாதுகாக்கும்.. செல் யான் சொல்லியதை செய்துவிட்டு வா!!! உன் குழந்தையை அந்த புண்ணியம் காக்கும் என்று வாக்குகள் தந்து அந்த குழந்தையின் வாழ்க்கையை மாற்றினார்.
குருநாதரிடம் வாக்குகள் வாங்குவதற்கு பணம் அதிகாரம் நட்பு இவையெல்லாம் தேவைப்படாது... புண்ணியங்கள் மட்டுமே தேவைப்படும் என்பதை இந்த சம்பவங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிலர் ஜானகிராமன் ஐயா ஓலைச்சுவடியில் அதிசயங்கள் அற்புதங்கள் என்ன நடந்திருக்கிறது என்று கேட்கின்றார்கள் சித்தன் அருள் தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னென்ன அதிசயம் நடந்திருக்கின்றது என்பது புரிந்திருக்கும் உயிரை ஓலைச்சுவடி எடுத்துச் சென்று வீட்டில் வைத்து வழிபட செய்து உயிரை காப்பாற்றி கொடுத்த அனுபவங்கள் முதல்... ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மீண்டு வந்தது என பல அனுபவங்கள் இருக்கின்றது.
காசியில் தரிசனம் செய்ய வந்த ஒரு குடும்பத்திற்கு விதியின் வசத்தால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநராகவே வந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து காப்பாற்றிய குருநாதர் அகத்தியர் பெருமான்.... மருத்துவமனையில் ஐ சி யூ ல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒன்றும் நீங்கள் செய்யத் தேவையில்லை சிறிது கங்கை நீரை எங்களை நினைத்து அந்த குழந்தையின் மீது தெளியுங்கள் அந்த கங்கை நீரின் மூலமாக சித்தர்கள் நாங்கள் நுழைந்து அந்த குழந்தையை காப்பாற்றுவோம் என்று ஏனென்றால் அந்த குடும்பம் பல வழிபாடுகள் பரிகாரங்கள் செய்து விட்டது... மனம் வெறுத்துப் போய் குழந்தையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு நேரடியாக கங்கை நீர் மூலமாக ஆட்கொண்டு அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்கள் சித்தர்கள்.
இப்படி பல அனுபவங்கள் எழுதுவதற்கு இருக்கின்றன பதிவுகள் பல வர இருக்கின்றன.
குருநாதர் கூறும் பொது வாக்குகளுக்கு முக்கியத்துவம் தந்து பொதுவாக்குகள் வெளியே வந்து கொண்டிருக்கின்றது.
சுவாரசியம் திரில்லிங் மயிர் கூச்செறியும் சம்பவங்கள் எல்லாம் சித்தர்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இது எல்லாம் எதிர்பார்த்து நேரப் போக்கிற்காக எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பவர்கள்.... பல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள் சுவாரசியமாக எழுதுபவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் கதைகளை படித்து திருப்தி அடைந்து கொள்ளலாம்.
குருநாதரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் எதை எதிர்பார்க்கக் கூடாது என்ற மனதோடு அணுக வேண்டும் சித்தர்களோடு விளையாட நினைத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்... அதேபோல் சித்தர்களின் ஓலைச்சுவடியை படிப்பவர்களை குறித்து தவறான கண்ணோட்டத்தில் பேசுபவர்களும் ஒரு முறை யோசித்துக் கொள்வது நல்லது.... ஜீவநாடி படிப்பது சாதாரணமல்ல.... மும்மூர்த்திகளின் அனுமதியோடு அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதத்தோடு படிக்க வேண்டியது பணி இது. அதை செய்யும் மைந்தன் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் யாரை விமர்சனம் செய்கின்றோம் அந்த விமர்சனம் யாரை சென்று அடையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!
நாம் எதிர்பார்ப்பதை குருநாதர் நினைக்க வேண்டும் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அது அவரிடம் முடியுமா? என்ன??
அவரிடம் வாக்குகள் கேட்பதற்கும் சில தகுதிகள் வேண்டும் என்பதை ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே இருக்கின்றார் அதை யாரும் சரியாக பின்பற்றுவது இல்லை எத்தனை வாக்குகள் சித்தர்கள் வெளிவந்துள்ளது.. ஒவ்வொரு வாக்கையும் படித்தால் புரியும்..
சமீபத்தில் கூட ஆம்பூரில் ஒரு ஆலயத்தில் திரு ஜானகிராமன் ஐயா நாடி வாசித்துக் கொண்டிருந்த பொழுது 200 பேருக்கு மேல் வந்து அமர்ந்து விட்டனர் குருநாதருடைய வாக்கினை கேட்க அனைவருக்கும் என்ன பிரச்சனை என்பதை குருநாதர் உணர்ந்து பொதுவாக என்ன செய்ய வேண்டும் என்பதை வாக்குரைத்து விட்டார். ஆனால் அதை முறையாக பயன்படுத்தாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் வாக்குகள் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்.
இதற்கு முன்பாகவும் சில சத்சங்கங்கள் நடந்தது... அதில் ஒரு சம்பவத்தை எடுத்துரைக்கின்றோம்.
கிருஷ்ணகிரியில் குருநாதர் வாக்கினை கேட்பதற்கு கிட்டத்தட்ட 100 பேருக்கு மேற்பட்ட நபர்கள் ஆலயத்தில் வந்து அமர்ந்து விட்டனர்.
யாருக்கு வாக்கு தர வேண்டும் என்பதை குருநாதர் தான் முடிவு செய்கின்றார் அவரவர் தகுதிக்கு ஏற்ப என்பதை உணர்த்தும் விதமாக
அப்பனே யாரெல்லாம் உயிரைக் கொன்று தின்று அதாவது இரு நாட்களுக்கு முன்பு கூட துடிக்க துடிக்க உயிர்களைக் கொன்று தின்றுவிட்டு வந்து அமர்ந்திருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் வெளியே போகச் சொல் என்று உத்தரவிட்டார்.
வந்த 100 பேரில் கால்வாசி பேர் வெளியே சென்று விட்டனர்.
அப்பனே நேற்று மதுபானங்கள் அருந்திவிட்டு தீய பழக்கங்களை செய்து விட்டு இன்று ஆலயத்திற்கு வந்து என் எதிரிலே அமர்ந்திருக்கின்றார்கள் அவர்களையும் வெளியே போகச் சொல் என்றார்.
மீதி இருந்த கூட்டத்தில் மீண்டும் பாதி அளவு குறைந்தது.
மீண்டும் குருநாதர் அப்பனே இல்லத்தாளை அடித்து சண்டை செய்துவிட்டு இன்று ஒன்றும் தெரியாதவனை போல் திருநீறு அணிந்து அதாவது வீட்டில் சண்டை செய்து தாய் தந்தை மனைவியை மதிக்காமல் சண்டை போட்டு அடித்து உதைத்து விட்டு வந்து இன்று என் எதிரில் அமர்ந்திருக்கின்றார்கள் அவர்களையும் எழுந்து வெளியே போகச் சொல் என்றார்.
கூட்டத்தில் முக்கால்வாசி பேர் காணவில்லை எல்லாம் ஆலயத்திற்கு வெளியே சென்று விட்டார்கள்.
கடைசியில் 15 பேர் மட்டும் கூடி இருந்தார்கள்.. அவர்களுக்கு மட்டும் வாக்குகள் உரைத்தார் குருநாதர்.
இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாக தான் கூறுகின்றோம்.
குருநாதருக்கு நீங்கள் இப்படி வாக்கு சொல்ல வேண்டும் அப்படி வாங்க சொல்ல வேண்டும் என்றெல்லாம் நாம் கட்டளையிட முடியாது.
அவர் என்ன சொல்லுகின்றாரோ ? யாருக்கு சொல்லுகின்றாரோ? எப்படி சொல்கின்றாரோ? எங்கு வைத்து சொல்லுகின்றாரோ ?!! அதுதான் வாக்கு!! அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்!!!
அவருக்கு நாம் கட்டளையிட முடியாது.
மும்மூர்த்திகளின் பிரதிநிதியாய் பிரபஞ்சத்தின் அதிபதியாய் விளங்கும் கருணை தெய்வம் அகத்தியர் பெருமான் நமக்கு எல்லாம் மனமிரங்கி வந்து வாக்குகள் சொல்வதே பெரிது... அதை குற்றங்கள் குறைகள் கூறிக்கொண்டு திரிகின்றார்கள் சில மனிதர்கள்.
பாவம் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பது இதெல்லாம் கர்மாவை சேர்க்கும் என்பது அவர்களுக்கு தெரியாது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
சிவ சிவ...அகத்தியன் வாழ்க!
ReplyDeleteதெளிவு குருவின் திருமேனி காண்டல்
ReplyDeleteதெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
ReplyDeleteஅகத்தியர் அய்யனே கண்களில் நீர் வருகிறது ஐயா...என்ன புண்ணியம் செய்தோமோ
ஜானகிராமன் ஐயா அகத்தியர் அய்யன் சேவைக்கு எங்களால் முடிந்த உதவி செய்ய அருள்தாருங்கள்
Guru nathare intha jenmangaluku kudiya seekiram puthi kodungal.
ReplyDeleteOm Agatheesaya Namaha...
ReplyDeleteதிரு ஜானகிராமன் அய்யா மூலம் வீட்டு பத்திரம் பற்றி நாடி கேட்டோம் அதன்படி நடந்தேன் ஆனால் அய்யா வை கேக்காமல் திருமணம் செய்தேன் நான் போகாத கோவில் இல்லை துளசி பூஜை வில்வ பூஜை மீனாட்சி பூஜை திருவையாறு திருவானைக்காவல் முருகன் பூஜை செய்து ஒரு கூலி வேலை செய்யும் பையனை கல்யாணம் செய்தேன் 1 1/2 வருடம் 7 மாதம் குழந்தை என்னுடைய கணவர் இறைவனடி சேர்ந்தார் தற்போது பழைய நாடி யை கேகும் போது நீ அகத்தியன் பிள்ளை எந்த பரிகாரமும் பலிக்காது என்று கூறி உள்ளார். திரு ஜானகிராமன் அய்யா மூலம் நாடி கேட்க எங்கள் குடும்பம் வேண்டி கொண்டு இருக்கிறோம்.
ReplyDeleteஅவதூதருடன் சில அனுபவங்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள் மிகவும் அருமை அடுத்த பாகம் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது
ReplyDeleteஅய்யனே! அம்மையே! உங்கள் திருவடி தொழுது சரணடைகின்றோம். உங்கள் வழி தவறாமல் பின் தொடர்வோம்.
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
TIRUVADI SARANAM
NANNRI AYYANE
THIRU JANAKIRAMAN AYYA AVARKALUKKUM
KODA KODI NANRI
திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள், அனைத்து நலன்களும் பெற்று நலமுடன் திருப்பணிகளை ஆற்றலுடன் தொடர தந்தை அகஸ்திய பெருமானின் திருவடி பற்றி வேண்டுகிறேன்.
ReplyDeleteஇறைவனை பழித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் இறைவனின் அடியவர்களை பழிப்பதை அகத்தியர் கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்.
ReplyDeleteஆமா நான் புலம்புவது கூட இங்க வந்துருக்கு. என் தப்பலாம் இங்க அகத்தியர் சொல்லிருக்காரு....அது எனக்கு சொன்னதா தா நான் நினைக்கிறேன். ஏன்னா சில நான் பேசிய வார்த்தைகள் கூட அச்சு பிசகாம வந்துருக்கு. குருவே சரணம்
ReplyDeleteOm agatheesaya
ReplyDeleteஓம் சிவாய நம. அகத்தியர் பெருமான் அடியவராகும் தகுதி அடியேனுக்கு இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஐயன் கருணை கூர்ந்து எங்களை வழிநடத்த பொன் பாதங்கள் பணிகிறோம்.
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswraya Namaha
ReplyDelete