​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 24 November 2024

சித்தன் அருள் - 1736 - அன்புடன் அகத்தியர் - லோபாமுத்திரா!









வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!

நமது அன்னை லோபா முத்திரை தேவியின் மகிமைகள் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது குருநாதர் ஏற்கனவே... அப்பனே அவள்தான் காசி நகரிலே சுற்றித் திரிகின்றாள்... அவளுக்கு மிகவும் பிடித்த இடமும் கூட என்று காசியை குறித்து கூறியிருந்தார்.

அன்னை லோபா முத்ரா தேவி விதர்ப்ப தேசத்து இளவரசி என அறியப்படுவதை குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது..

லோப முத்திரை பிறந்த இடம் மராட்டிய மாநிலம் நாகப்பூரில் உள்ளது அங்கு செல்லுங்கள் என்று குருநாதர் உத்தரவிட்டார். 

அதன்படியே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விதர்பா பிராந்தியம் ராம் டெக் கோட்டை கோவிலுக்கு சென்றபோது அங்கு குருநாதர் அகத்திய பெருமானின் ஆசிரமமும் ராம் லட்சுமணன் பிரதானமான கோட்டை கோயிலும் மலை மீது இருக்கின்றது. 

6/11/2024 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் ராம் டெக்.. கோட்டை கோவிலில் வாக்குகள் தந்தருளினார். 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எம்முடைய ஆசிகள்!!

அப்பனே நல்விதமாகவே அப்பனே இன்னும் ஏராளமான வாக்குகள் அப்பனே 

பின் நிச்சயம் மனிதன் தெளிவடைந்து விட்டால் அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!

அதனால்தான் அப்பனே சில விஷயங்களை அப்பனே சொல்லி சொல்லி தெளிவடைந்து விட்டால் அப்பனே... நிச்சயம் பின் பாவத்தை.. அப்பனே நிச்சயம் அதாவது பாவம் மனிதனை நெருங்காதப்பா

புண்ணியம் மட்டுமே நெருங்கும். 

அப்பனே அதனால்தான் அப்பனே சித்தர்கள் பல பல ரூபங்களில் கூட வந்து வந்து அப்பனே மனிதனுக்கு பல உதவிகளும் கூட செய்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே 
அதாவது நல்விதமாகவே அப்பனே 

அது மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் அப்பனே நிச்சயம் பின் அதாவது தீய எண்ணங்கள் அப்பனே இன்னும் இன்னும் அதிகமாகுமப்பா!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் சரியாகவே அப்பனே 

நிச்சயம் அப்பனே ஒரு குழந்தை பிறக்கின்றது அப்பனே சரியாகவே சூரியனின் ஆதிக்கம் நிச்சயம் அப்பனே ஆறு ஆண்டுகள் அப்பனே. 

(குழந்தையின் ஜாதகத்தை சூரிய திசை) 

அப்பனே அதனுடன் நவகிரகங்கள் கூட அப்பனே பின் அதாவது
ஆறு அதனுடன் நிச்சயம் அப்பனே பின் ஒன்பது அப்பனே சரியாகவே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட கூட்டினால்

(சூரியன் திசை 6+நவகிரகங்கள் 9
6+9= 15)


 அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அவ் (15) வயதில் இருந்து அப்பனே நிச்சயம் பின் தந்தையின் பேச்சை நிச்சயம் பின் கேட்டு நடக்க வேண்டும் என்பேன் அப்பனே.

இவ்வாறு கேட்டு நடந்தாலே அப்பனே நிச்சயம் வயது ஆக ஆக நிச்சயம் பின் சூரியன் அப்பனே அதாவது அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் சக்திகள் வழங்கி வழங்கி அப்பனே பின் நிச்சயம் உயர வைப்பானப்பா!!!

அப்பனே அவை மட்டுமில்லாமல்.. அப்பனே சந்திரனும் கூட அப்பனே சரியாகவே அப்பனே பத்து பின் ஆண்டுகள்... அப்பனே பின் சமமாகவே பின் அதன் உள்ளே அப்பனே சிறிது அப்பனே அறிந்தும் கூட அப்பனே... ஒன்பதை அப்பனே கூட்டினால் அப்பனே

சந்திர தசை 10 ஆண்டுகள் நவகிரகங்கள் 9
10+9=19..

அறிந்தும் இதை தன் உணர அப்பனே நிச்சயம் அவ் வயது தன்னில் இருந்து கூட அப்பனே நிச்சயம் அதாவது... 15 இல் இருந்து நிச்சயம் இன்னும் அப்பனே பின் 19.. அப்பனே இதிலிருந்தும் கூட தாயின் பேச்சையும் சரியாகவே கேட்டு நடக்க வேண்டும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட 

பின்பு அப்பனே அறிந்தும் கூட.... குருவானவன் அப்பனே.. பின் நிச்சயம் 16 வருடங்கள் அப்பனே

அப்பனே பின் 16 உடன் ஒன்பதை கூட்டுங்கள் அப்பனே 

 குரு திசை0 16+
நவகிரகங்கள் 9
16+9=25

அப்பனே பின் இதுவரை அப்பனே நிச்சயம் பின் தாய் பின் தந்தை அப்பனே பின் நிச்சயம் குருவானவன் பேச்சை கேட்டால் அப்பனே.. அவர்கள் பின் உயர்ந்து நிற்பார்கள் என்பேன் அப்பனே...

 சொல்லிவிட்டேன் அப்பனே இவ் ரகசியத்தை அப்பனே.

அப்பனே பின்பு பின் நிச்சயம் ராகுவும் கேதுவும் அப்பனே நிச்சயம் பிடிக்க மாட்டார்களப்பா!!!

அப்பனே அதனால் நிச்சயம் அதாவது ராகுவானவனுக்கும் அப்பனே 18 ஆண்டுகள் கேதுவானவனும் அப்பனே பின் நிச்சயம் 7 ஆண்டுகள் அப்பனே... நிச்சயம் இதை இரண்டையும் கூட்டினால்

ராகு 18+கேது 7=25

 நிச்சயம் இவ் வயது... அவ் வயதிலிருந்து அப்பனே யோகங்கள் பல பல செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே

இப்படி அதாவது தாய் தந்தையின் பேச்சை பின் கேட்கவில்லை அப்பனே பின் குருவானவன் பேச்சையும் கேட்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அதாவது பின் எப்படியப்பா???

அப்பனே பின் அதாவது 25 அறிந்து எதை என்று கூற அப்பனே நிச்சயம்.. ராகு18 அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட கேதுவானவன் அப்பனே பின் சப்தங்கள் (7 ஆண்டுகள்)

(சப்தம் என்றால் ஏழு என்று
பொருள் . உதாரணத்திற்கு சப்தரிஷிகள் சப்த கன்னியர்கள்)

அப்பனே அறிந்தும் கூட சரியாகவே அப்பனே பின் எவை என்று 25 க்கு மேலே நிச்சயம் அப்பனே நிச்சயம் ராகுவானவனும் விடமாட்டானப்பா... கேதுவானவனும் விட மாட்டானப்பா... அப்பனே பின் சந்தித்துக் கொள்ளுங்கள் நீங்களே 
அதாவது பின் அனைத்து பிரச்சினைகளையும் கூட!!

அப்பனே இப்பொழுது புரிகின்றதா???

அப்பனே யாரிடமிருந்து பிரச்சனைகள் உருவாகின்றது? என்பதை கூட!!

இதனால் அப்பனே ராகுவும் பின் அதாவது... மூவரின் பேச்சையும் கேட்கவில்லை என்றால் (தாய் தந்தை குரு) அப்பனே ராகுவானவன் எடுத்துக் கொள்வான் கேதுவானவன் எடுத்துக் கொள்வான் என்பேன் அப்பனே... இவர்களின் ஆன்மா பலத்தையும் கூட..

பின் அதிலிருந்து கஷ்டங்கள் பல பல பின் கஷ்டங்கள் பட்டுப்பட்டு தான்.. எழுந்து எழுந்து தான் அப்பனே இறைவனை நாடிட்டு சென்றால்தான் பாவமே தொலையும் அப்பனே 

அப்பனே நிச்சயம் இவை தன் உணர வேண்டும்...

அப்பனே யாரும் இதை உணர்வதில்லையப்பா!!


(ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை குரு திசை என வரும்.... சூரிய திசை 6 ஆண்டுகள் சந்திர திசை 10 ஆண்டுகள் குரு திசை 16 ஆண்டுகள் என இப்படி வரும்... இதற்கான நற்பலன்கள் எப்படி வரும் என்றால் 

தாய் தந்தை குரு பேச்சைக் கேட்டு மதித்து நடக்க வேண்டும் அப்பொழுதுதான் இவ் கிரகங்களின் ஆசிகள் கிடைத்து.... அதன் பிறகு ராகு கேது திசை நடக்கும் பொழுது அதனுடைய தோஷங்கள் அண்டாமல் இருக்கும்.... அப்படி தாய் தந்தை குருவின் பேச்சை கேட்காமல் நடந்தால் அதன் பிறகு வரும் ராகு கேது திசைகளில் ஆத்ம சக்தியை இழந்து பல வகையிலும் கஷ்டப்பட நேரிடும் நமது பிரச்சனைகளுக்கு நாமே காரணமாகி விடுவோம்)



அப்பனே இன்றளவு கிரகங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே 

ஆனாலும் பல விஷயங்கள் அப்பனே பின்  சுவடிகளில் மறைத்து விட்டோம் என்போம் அப்பனே....

மறைத்தும் விட்டனர் அப்பனே... பின் மறைத்தும் விட்டோம்!!!... ஏன் எதற்கு என்றால் அப்பனே இக்கலி யுகத்தில்... அப்பனே நிச்சயம் அப்பனே பின் காசுகளுக்காக எதையும் செய்வார்களப்பா!!!

அதனால் சில ரகசியங்களை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் பின் புண்ணியமாகுமப்பா!! மனிதனுக்கு!!! நிச்சயம் அப்பனே அப் புண்ணியம் சரியாகவே பின் அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே..

அவை மட்டும் இல்லாமல் அப்பனே யார் ஒருவன் சரியாகவே அப்பனே பின் குருவானவனுக்கு அதாவது பின் மன்னனானவனுக்கு (குரு கிரகம்) அப்பனே பின் அறிந்தும் எதை என்று அறிய அப்பனே சரியாகவே அப்பனே சேவைகள் செய்வோர் அதாவது அப்பனே இறைவனுக்கு சேவைகள் செய்வோர் அப்படி நிச்சயம் நீடூழி வாழ்வார்களப்பா... பிறவிகள் அப்பனே நிச்சயம் அவ் தொடர்ந்து அவர்கள் சந்ததிகள் பெருகுமப்பா!!!!

ஆனாலும் இப்படி ஆள் இல்லையே!?!?!?! அப்பனே!!

கலியுகத்தில் அப்பனே பின் சொல்லிச் சொல்லி அப்பனே யாங்கள் பக்குவங்கள் பட்டு எழுந்திட வேண்டும் என்பதை எல்லாம் மனிதனுக்கு.. உரைத்துக் கொண்டே வருகின்றோம்..

ஆனால் மனிதன் என்னவோ.. அப்பனே பின் அதாவது... யான் போவேன் திடீரென்று எந்தனக்கு மாற்றம் அடைய வேண்டும் என்பதையெல்லாம்... அப்பனே

யார் ஒருவன் அப்பனே.. இப்பொழுதெல்லாம் அப்பனே பின் அதாவது கடனில் இப்பொழுது பின் சிக்கிக்கொண்டு இருக்கின்றானே!!....

அதாவது யான் இங்கு என்ன சொல்கின்றேன் என்றால் அப்பனே... அதாவது பணத்தை பின் அதிகம் பேர் அப்பனே பின் நிச்சயம்... பின் பணம் வாங்கிட்டு அப்பனே பின் நிச்சயம் திரும்ப தராமல் அப்பனே ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே 

இவர்கள் எல்லாம் இவ் சாபத்தை பெற்றவர்கள் தான் அப்பனே..

தாய் தந்தையின் கூட அப்பனே குருவின் சாபத்தை பெற்றவர்கள் தான்... இவ்வாறெல்லாம் அப்பனே...

எப்படியப்பா????

ஆனாலும் அப்பனே இவையெல்லாம் தீருமப்பா அப்பனே நிச்சயம்... யான் வரும் வரும் வாக்கியத்தில் கூட ஒவ்வொன்றாக சொல்லும் பொழுது... அதை நிச்சயம் அப்பனே... பின் நிச்சயம் யானே தீர்ப்பேனப்பா!!!

அப்பனே நிச்சயம் இதன் அடியில் தான் அப்பனே நிச்சயம்... பின் அறிந்தும் கூட... அப்பனே பின் எவை என்று அறிய அறிய உலோபா முத்திரையின் இல்லமும் கூட அழகாக அமைந்துள்ளது என்பேன் அப்பனே!!!

(ராம் டெக் ராமர் லக்ஷ்மணர் கோட்டை கோவில் சிறு குன்றின் மீது அமைந்துள்ளது அருகிலேயே குருநாதர் அகத்தியர் பெருமானின் ஆசிரமமும் உள்ளது ஆசிரமத்திற்கு உள்ளே ஒன்பது ஞானிகளின் ஜீவ சமாதியும் உள்ளது ஜீவசமாதியில் அருகே உள்ளே பாதாளத்தில் குருநாதர் குகை ஒன்று உள்ளது ஆனால் அதற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை குருநாதர் குறிப்பிடுவது அன்னை லோபா முத்திரை தேவியின் இல்லம் குருநாதர் குறிப்பிடுவது போல் கோட்டை கோவிலுக்கு கீழே உள்ளே உள்ளது) 

நன் முறைகளாகவே பல அரசர்கள் அப்பனே பின் எங்களை தேடி தேடி வந்தார்கள்!!

(குருநாதர் அகத்தியர் பெருமான் அன்னை லோபா முத்திரையின் இல்லம் குருகுலம் தேடி பல அரசர்கள் வந்தார்கள்)

அப்பனே அறிந்தும் கூட பல வகைகளிலும் கூட அப்பனே யான் தான் அகத்தியன் என்று அப்பனே ஒருபோதும் சொல்லவில்லை அப்பனே பின் நிச்சயம் மனித ரூபமாக எடுத்து எடுத்து அப்பனே பல அரசர்களுக்கும் கூட யான் நிச்சயம் அப்பனே... பல பல பொன்மொழிகளையும் கூட நிச்சயம் அப்பனே இப்படி சென்றால் நன்று!! என்றெல்லாம் அப்பனே..

அப்படி நிச்சயம் ஒரு நாள் அல்லது இரு நாள் இருப்பேன் அப்பனே திடீரென்று அப்பனே சென்று விடுவேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே அவர்கள் பின் ஒரு நாள் (குருநாதரை சந்திப்பதற்கு புண்ணியங்கள்) எதை என்று அறிய அறிய ஆனாலும் அதற்கும் கூட புண்ணியங்கள் இருக்க வேண்டும் அப்பா..

அப்பனே நிச்சயம் பின் அதாவது நீங்களும் கூட புண்ணியங்களை சரியாகவே பெற்றுக் கொண்டால் அப்பனே எனை நீங்கள் பார்க்கலாம் என்பேன் அப்பனே..

எனை பார்த்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே.. பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே உங்களுக்கு புண்ணியத்தை அப்பனே செப்பிய அதாவது பின் செப்பிவிட்டால் அப்பனே போதுமானதப்பா.... பின் நீங்களே வளர்ந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மனிதனுக்கு மனிதன் அப்பனே பின் பாவத்தை செப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பா.. அப்பனே 

அதனால்தான் முன்னேற்றம் இல்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் சில பேர் முன்னேற்றம் அடைந்தது போல் இருப்பார்கள் அப்பனே... ஆனால் கடைசியில் பார்த்தால் அப்பனே

அதாவது இரண்டு அல்லது மூன்று அல்லது பின் நிச்சயம் ஐந்து வருடங்கள் அப்பனே....

மீண்டும் அப்பனே கீழே விழுந்து விடுவார்கள் என்பேன் அப்பனே.. ஏனென்றால் அப்பனே நிச்சயம்.. பின் அன்பு தான் தேவை என்பேன் அப்பனே 

சித்தர்களை நெருங்க சரியான ஆயுதம் அன்பு என்பேன் அப்பனே 

ஆனால் இப்பொழுது அப்பனே ஆயுதத்தை அதாவது பணத்தை ஆயுதம் போல் எண்ணுகின்றார்கள் என்பேன் அப்பனே 

எப்படியப்பா?? குடும்பமும் செழிக்கும்??

அப்பனே அறிந்தும் எதை என்று கூட... அப்பனே பின் நிச்சயம் இதனையெல்லாம் நிச்சயம் பல பல வழிகளிலும் கூட அப்பனே இன்னும் கூட அப்பனே இதனடியில் அப்பனே யாங்கள் வசித்து!!! அறிந்தும் கூட அப்பனே

(அகத்தியர் பெருமான் லோபா முத்திரை அன்னையின் இல்லம்) 

அப்பனே பின் பல சித்தர்கள் பின் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே.. நிச்சயம் யான் அதாவது அப்பனே எங்கெங்கோ இருப்பவர்கள் எல்லாம் அப்பனே பல அரசர்களும் கூட.... ராமனும் கூட அப்பனே இங்கே வந்து பல ஆசிகளை அப்பனே பல பல மனிதர்களைக் கூட எப்படி அதாவது சகித்துக் கொண்டு அப்பனே பின் உயர்ந்த நிற்பது என்பதை எல்லாம் அப்பனே... ராமனுக்கும் பல வழிகளிலும் கூட அப்பனே இங்கே தான் பாடத்தை கற்பித்துக் கொண்டே இருந்தேன் அப்பனே... சீதா தேவியும் கூட அப்பனே பின் பல பல வழிகளிலும் கூட எப்படி எல்லாம் நிச்சயம் பின் கர்மங்கள் அண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் பின் அப்பனே பல வழிகளிலும் கூட பல ரிஷிகளும் பல ஞானிகளும் அப்பனே இங்கு வந்து  வந்து அப்பனே நிச்சயம் பல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள் என்பேன் அப்பனே 

இப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் அதாவது 9 சமாதிகள் அப்பனே... ஒவ்வொரு கிரகத்தையும் கூட அப்பனே நிச்சயம் ஒவ்வொரு தோஷத்தையும் கூட நீக்கும் தன்மை பெற்றது அப்பனே 

இதனால்தான் அப்பனே தேடுங்கள் தேடுங்கள்... தேடுதல் வேட்டையிலேயே இருங்கள் என்றெல்லாம் அப்பனே 

ஆனாலும் அப்பனே... எதை எதையோ தேடிக் கொண்டிருக்கின்றான் மனிதன்...

அப்பனே.. மனிதன் தேடுகின்றான் அப்பனே பின் பணத்தை நோக்கி... ஆனாலும் அதுவும் அப்பனே எவ்வாறு நிரந்தரம் என்பதை கூட அப்பனே

இன்னும் அப்பனே நிச்சயம் எதை எதையோ தேடுகின்றான் என்பேன் அப்பனே 

ஆனால் அப்பனே நிச்சயம் இறைவனை தேடுவதே இல்லை என்பேன் அப்பனே 

அப்பனே இறைவன் ஓரிடத்திலே.. நின்று விட்டால் அதாவது... மனிதர்கள் பல பேர் சொல்கின்றார்கள் என்பேன் அப்பனே!!

ஒருவன் என்னிடம் அவன் என் பக்தன் தானப்பா!!! அதாவது அகத்தியன்... அதாவது என்னிடத்திலே இருக்கின்றான்... யான் தான் அகத்தியன் என்றெல்லாம்...

அப்பனே இதனால் தான் அப்பனே

இறைவன் மீது நம்பிக்கை போய் விடுகின்றது என்பேன் அப்பனே....

மீண்டும் பின் மனிதன் அப்பனே அதாவது அறிவில்லாத மனிதன் அவனை தேடி சென்று பின் நீங்கள் தான் அகத்தியனா? என்று பின் காலில் விழுவான் என்பேன் அப்பனே...

இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பின் அவன் இவனிடம் இருந்து அனைத்தையும் பிடுங்கி விடுவான் என்பேன். அப்பனே நிச்சயம். 

ஆனால் கடைசியில் அகத்தியன் இல்லை பின் அதாவது அகத்தியன் என்று சொன்னான்... ஆனாலும் அனைத்தும் பிடுங்கி விட்டான்... அதனால் அகத்தியன் பொய் என்று சொல்லிவிடுவானப்பா!! இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே 

அப்பனே நிச்சயம் யாங்கள் பின் தரிசனம் கொடுக்க தயாராக.... ஆனாலும் அப்பனே நிச்சயம் நீங்கள் அப்பனே அதற்கு சரியான..ஆளா?????..... என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே  பின்  ஒரு சதவீதம் கூட இல்லையப்பா!!!

அப்பனே முதலில் பொறாமைகள் வந்து விட்டாலே நிச்சயம் அகத்தியனை நெருங்க முடியாது அப்பனே!!!

நிச்சயம் அப்பனே கருணை படைத்தாக வேண்டும்... அன்பு நிறைந்திருக்க வேண்டும்... அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் என்னிடத்தில்.. நெருங்கலாம் அன்பாலே!!! அப்பனே... 

மற்றவை எல்லாம் வீண் அப்பனே!!

அப்பனே பல பக்தர்களையும் கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... அப்பனே நிச்சயம் நல்லது.. நடந்தால் அகத்தியன். 

பின் தீயவை நடந்தால் அகத்தியன் இல்லை என்று.!!

அப்பனே எப்படியப்பா??
அப்பனே நிச்சயம் நன்மையும் தீமையும் கூட அப்பனே.. யார் ஒருவன் சரியாக பாவிக்கின்றானோ??..அவந்தனுக்கு தான் என்பேன் அப்பனே!!!

அதனால் தான் அப்பனே பின் நிறைய வாக்குகள் நிச்சயம் மனிதன் எதையோ நோக்கி செல்கின்றான் என்பேன் அப்பனே 

ஆசைகளை நோக்கி செல்பவனுக்கு வாக்குகள் இல்லையப்பா!!!

அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே!!...

அவன் ஆசையை நோக்கி சென்று விட்டு அப்பனே படுதோல்வி அடைந்து விட்டு கீழே விழுந்து விட்டு பல நோய்களை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் என்னிடத்தில் வருவானப்பா!!!

பின் வந்து பின் அகத்தியன் உடனடியாக காப்பாற்ற வேண்டுமென்றால்??? எப்படியப்பா????

அப்பனே மீண்டும் காப்பாற்றி விட்டாலும் மற்றொருவன் சொல்வான்..
இவந்தன் இவ்வளவு பின் அதாவது தரித்திரங்களை செய்தானே... இத்தனை தவறுகளை செய்தானே... இறைவனே இவனுக்கு நல்லதை செய்து விட்டான் என்று!!

அதனால் தான் அப்பனே... யானும் கூட அப்பனே இழுத்துக் கொண்டே வருவேன்..... ஏனென்றால் பயம் இருக்க வேண்டும்... நிச்சயம் அப்பனே பின்.. அதாவது பாவம் செய்தவனுக்கு அப்பனே பின் நிச்சயம்... அதனால் தான்... 

"""""""நிச்சயம் பாவம் செய்தவனுக்கு கூட... வாக்குகள் உண்டு ....!!!!!!

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட பின் நல்லது செய்ய நிச்சயம் தாமதங்கள் ஆகும் என்பேன் அப்பனே 

அதுவரையில் அதாவது.. அதற்குள்ளே அகத்தியன் இல்லை என்று சொல்லிவிடுகிறார்களப்பா!!!

அப்பனே நிச்சயம் எங்கள் ஆசிகள்!!!... அப்பனே நிச்சயம் யாங்கள் அப்பனே எங்கிருப்போம் என்பதை எல்லாம் அப்பனே மனிதன் அப்பனே... நினைத்து விட்டாலே கருணையோடு வந்து விடுவோம் அப்பனே 

ஆனால் மனிதனுக்கு அது தெரிவதே இல்லையப்பா!!

இதனால்தான் அப்பனே சில சில ரகசியங்கள் அப்பனே எங்கு செப்ப வேண்டும்??? என்பதையெல்லாம் அப்பனே செப்பினால் தான் அப்பனே நிச்சயம் பின் கர்மம் அதாவது... பாவம் சேராதப்பா... அப்பனே பின் அதாவது... சொல்பவனுக்கும் புண்ணியம்... அதைக் கேட்பவனுக்கும் புண்ணியம் என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே...

ஆனால் அப்பனே உங்களால் அதாவது அப்பனே புண்ணியம் இருந்தால்தான் அப்பனே சில சில திருத்தலங்களையும் கூட நெருங்க முடியுமப்பா!!!

ஆனால் ஒருவன் சொல்கின்றானப்பா!!!

பக்கத்தில் இருக்கும் திருத்தலத்திற்கு செல்லவில்லை என்று!!! செல்ல முடியவில்லை என்று!!!

அப்பனே பின் இவந்தனக்கு
எதற்கப்பா??? கொடுக்க வேண்டும் அப்பனே 

நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இவந்தன் எதை என்று அறிய அறிய எதை கொடுத்தாலும்...இவந்தனுக்கு வீணப்பா!!!... இவந்தன் எதை என்று... யான் சொல்ல??? இவனைப் பற்றி!!!

அப்பனே  நிச்சயம் அப்பனே தேடித்தேடி.....

இறைவன் முட்டாளா???? மனிதன் முட்டாளா??? அப்பனே 

இறைவன் பின் எங்கெல்லாம் திருத்தலங்களை எல்லாம் அப்பனே அதாவது அப்பனே அதாவது எங்கெல்லாம் பின் எவை என்று கூற பாவத்தை தொலைக்க வேண்டுமோ... மனிதர்களுக்காகவே அங்கெல்லாம் பின் இறைவன் அமைந்திருக்கின்றான். 

ஆனால் மனிதனோ!?!?!?!... நிச்சயம் பின் பாவத்தை மட்டும் வேண்டும் என்றெல்லாம்... ஆனால் உடனடியாக நடக்க வேண்டும் அனைத்தும் என்று எண்ணுகின்றானே... மனிதன் போல் முட்டாளே இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... பல சக்திகளையும் கூட பல அறிவுகளையும் கூட இறைவன் கொடுத்து அனுப்புகின்றான் அப்பனே 

ஆனால் மனிதனோ அதை பயன்படுத்துவதே இல்லை 

அதை பயன்படுத்தாவிடில் அப்பனே...யாங்களும் பின் சிறிதளவு அப்பனே பயன்படுத்துமாறு... அப்பனே நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம் சொல்லிக் கொடுப்போம். 

அதையும் பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே......."""வீண் எதைக் கொடுத்தாலும் வீண்!!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் யாங்கள் கொடுக்க தயாராக இருக்கின்றோம் அப்பனே 

ஆனால் அவனவன் சக்திகளுக்கு ஏற்ப தான் யாங்கள் கொடுக்க முடியுமே தவிர.... அப்பனே நிச்சயம்... ஒருவனுக்கு அப்பனே அதாவது... ஜீவநாடி வேண்டுமென்றெல்லாம் அப்பனே இன்னும்... சுவடிகள் வேண்டும் என்றெல்லாம்.. பின் அப்பனே எண்ணங்கள்.. அப்பனே 

ஆனாலும் அப்பனே.. எதை என்று அறிய அறிய... குமரி முதல் இமயம் வரை பின் திரிய வேண்டும் என்பேன் அப்பனே...

(சுவடியை எடுத்துக்கொண்டு இந்திய கண்டத்தின் ஒருமுனையான கன்னியாகுமரியில் இருந்து மேலே ஹிமாச்சல மலைப்பகுதிகள் வரை திருத்தலங்கள் திருத்தலங்களாக சுற்றித் திரிய வேண்டும்)

இதற்கு தயாரா???????????

அப்பனே நிச்சயம் தயாராக இருக்க மாட்டானப்பா!!!

அப்பனே நிச்சயம்.. ஏனென்றால் பின் அப்பனே நிறைந்து எவை என்று கூட ஜீவநாடி அப்பனே எவை என்று புரிய புரிய... அப்பனே எவை என்று அறியாமல் கூட பணத்திற்காகவே!!! இதை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்றே அப்பனே!!!

எப்படியப்பா?? அப்பனே முடியும் என்பேன் அப்பனே 

ஆனால் அப்பனே பின் அதை வைத்துக்கொண்டு பணத்தை சம்பாதிப்பதோடு அப்பனே நிச்சயம் பாவத்தையும் சம்பாதித்து கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன் அப்பனே 

இப்படித்தான் அப்பனே நிச்சயம் பின் மனிதர்கள் அழித்தார்களப்பா!!! காலங்கள் காலங்களாக!!! என்பேன் அப்பனே 

அப்பனே நிச்சயம் பின் யாருக்கு?? எவை என்று தேவை? என்பதை எல்லாம் யாங்கள் புரிந்து நடப்போம்.

ஆனாலும் அப்பனே பல பேர்கள் பின் நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் எதை என்று கூட யான் நிச்சயம் மனிதனுக்கு பல வழிகளிலும் கூட பின் நிச்சயம் பல நன்மைகள் செய்தாக வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அவை (இப்படியும் நினைக்கின்றார்கள்) நிச்சயம்...... பலிக்காதப்பா!!

அண்மம்.

அப்பனே அண்மம்... என்பது அப்பனே அதாவது ஓர் இடத்தில் இருந்து கொண்டே பாவத்தை சேர்ப்பது என்பேன் அப்பனே 

இப்படித்தான் அப்பனே ஓரிடத்தில் இருந்து கொண்டு அப்பனே நிச்சயம் மனிதன் பல மந்திரங்களை மனிதர்களுக்கு செப்பி செப்பி.. அப்பனே பாவத்தை அவன் பாவத்தையும் கூட இவன் ஈர்த்து கொண்டே இருக்கின்றான் அப்பனே 

ஆனால் கடைசியில் அடித்தால்... அப்பனே யாரும் அப்பனே பின் உருப்படியாக இருக்க மாட்டார்கள் என்பேன் அப்பனே 

(ஓரிடத்தில் இருந்து கொண்டு மாந்திரீக தாந்திரீக வழிகளில் சுவடியை வைத்துக்கொண்டு மந்திர உபதேசம் செய்து பாவத்தை சம்பாதிப்பது... இப்படிப்பட்ட சுவடிகள் ஆலயத்திற்கு செல்ல முடியாது சென்றாலும் செயலிழந்து விடும் என்று ஏற்கனவே குருநாதர் காசியில் வாக்குகள் தந்திருக்கின்றார்)

பன்மம்!!

அப்பனே பன்மம்... அப்பனே இரண்டாவது முறையாக பன்மம் என்பது அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட காசுகளை பெற்று அப்பனே நிச்சயம் வாக்குகளை சொல்வது என்பேன் அப்பனே....

பின் இதற்கும் காரணங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே அழிவுகள் உண்டு குடும்பமே நிச்சயம் நடுத்தெருவில் நிற்குமப்பா!!!

(காசுகளுக்காக ஓலைச்சுவடி படிப்பது)


அசமம்!!

அப்பனே நிச்சயம் இன்னும் அசமம் அப்பனே... இவைதன் கூட அப்பனே காரணங்கள் அப்பனே நிச்சயம் அசைவத்தை உண்ணுதல் அப்பனே 
இவை தன் உண்டு கொண்டே இருத்தல் அப்பனே... நிச்சயம் கடை காலங்களில் நோய்கள் ஏற்பட்டு அப்பனே பின் அதாவது இல்லத்தில் உள்ள அனைவருக்குமே நோய்கள் ஏற்பட்டு விடும் என்பேன் அப்பனே... எதை என்று புரியும் அளவிற்கு கூட 

(சிலர் அகத்தியர் பெயரை வைத்துக் கொண்டு ஓலைச்சுவடி படிப்பவர்கள் அசைவ உணவையும் உண்டு கொண்டு இருக்கின்றார்கள்)

நன்மம்!!

அப்பனே பின்.. நன்மம்... அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பல வகையிலும் கூட அப்பனே பல திருத்தலங்களுக்கு செல்லுதல்.. அப்பனே நிச்சயம் அனைத்தும் இறைவன் செயலே!! என்று இருத்தல்!!! என்பேன் அப்பனே 

இவ்வாறு இருந்தால் அப்பனே... நிச்சயம் இவைதன் (சுவடிகள் ) செயல்படும் என்பேன் அப்பனே

(ஓலைச்சுவடியை படிப்பதற்கும் இவை தகுதிகள் குணங்கள் என்பதை பற்றி குருநாதர் கூறிய விளக்கம்)

குரோததன்!

அப்பனே குரோததன் அப்பனே எதை என்று அறிய அறிய.... கருணை காட்ட வேண்டிய இடத்தில் கருணை காட்டாமல் அன்பு இடத்தில் அன்பு காட்டாமல் அப்பனே அனைத்தும் செய்பவன் அப்பனே... நிச்சயம் தன் வாழ்க்கையை இழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே 

அப்பனே நிச்சயம் ஒவ்வொன்றாக... பின் என் பக்தர்களுக்கு தெரிய வேண்டும் என்பேன் அப்பனே 

அகத்தியன் என்று சொல்லிவிட்டால் போதுமா????????? அப்பனே

நிச்சயம் எவை என்று அறிய அறிய அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அகத்தியன் என்று சொல்வதற்கே ஒரு தகுதி இருக்க வேண்டும் என்பேன் அப்பனே

நிச்சயம் அவை மனிதரிடத்தில் இல்லையப்பா

அதனால் தான் அப்பனே யான் எதுவுமே செய்வதில்லையப்பா

நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே... அறிந்தும் கூட 

அப்பனே நிச்சயம் அப்பனே யார் மூலம்??? எதை???......................


சிறிது பார்ப்பேன் அப்பனே திருந்தினால் போதும்....

திருந்தாவிடில் அப்பனே... யார் மூலம் அப்பனே எதை பின் பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே மனிதன் பின் பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே என்னை வைத்துக் கொண்டே அப்பனே அவை இவை... என்று காசுகள் புரட்டிக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே 

ஆனால் அவந்தனுக்கு அப்பனே... வினை வந்து விட்டால் அப்பனே.... நியாயம் பேசுவானப்பா

வாக்குகள் வரவில்லையே அப்பனே அதாவது இவன் சொல்லவில்லையே என்று !!!

(அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா வாக்கு எனக்கு படிக்கவில்லை எனக்கு சொல்லவில்லை என்று)

அப்பனே நீ ஒழுங்காக இருந்தால் அப்பனே உன் இல்லத்தை தேடி வருவேனப்பா!!

நீ ஒழுங்காக இல்லை!!!

அதனால் தான் அப்பனே யான் வாக்குகள் செப்புவதில்லை!!!
ஏன் சித்தர்களும் வாக்குகள் உந்தனக்கு செப்புவதில்லை!!! என்பேன் அப்பனே!!! அறிந்தும் கூட! 

இதனால் நிச்சயம் அப்பனே நிச்சயம் பின் அன்பின் உருவமாக இருங்கள் போதுமானது என்பேன் அப்பனே 

யாங்கள் வருவோம் அப்பனே நிச்சயம்... அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே மனிதனுக்கு பின் அப்பனே...எத் தகுதியும் இல்லை அப்பனே 

அதாவது எங்களுக்கு வாக்குகள் செப்பவில்லை என்று சொல்வதற்கு அப்பனே 

நிச்சயம் வாக்குகள் சொல்வதற்கு யாங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் அப்பனே 

அதைக் கூட மனிதனுக்கு தெரிவதில்லை என்றால்  அப்பனே... எப்படியப்பா???? அவனுக்கு யான் வாக்குகள் செப்பி புரியவைப்பது???????

சொல்லுங்கள் நீங்களே என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பல பேர்கள்... இப்படித்தான் அப்பா... இன்னும் இன்னும் அப்பனே பின்... வெளி தேசத்தினர் கூட அப்பனே பின் நிச்சயம் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே 

ஆனாலும் பின் எதை என்று கூட.... அனைத்தும் பொய்!!

இறைவன் தான் மெய் என்பேன் அப்பனே 

அவ் மெய்யானதை எப்படி?? பின் எப்படி காண்பிக்க வேண்டும் என்பதைக் கூட யாம் அறிவோம் அப்பனே 

நிச்சயம் வரும் காலத்தில் அவை அனைத்தும் யான் தெரிவிப்பேன் அப்பனே 

இன்னும் அப்பனே வாக்குகள் உண்டு ஆசிகள் ஆசிகளப்பா!!!

ராம் டெக்கில் குருநாதர் பொதுவாக்கு உரைத்தப்பின் குருநாதரிடம் லோப முத்திரை தாயின் பிறந்த இடம் குறித்து கேட்ட பொழுது 

அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் ராமன் அப்பனே என்னுடைய அப்பனே பின் சீடன் தான் அப்பா 

அப்பனே என்னிடத்தில் இருந்து பல உபதேசங்களை பெற்றுக் கொண்டான். 

அப்பனே ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே அப்பொழுது... லோபா முத்திரையும் கூட அருகில்.. அதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட... அப்பனே நிச்சயம் உண்மைதனை கூட... அப்பனே நின்றிட்டு அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய 

நிச்சயம் பின் எங்களுக்கு அப்பனே... பல இடங்களில் கூட அப்பனே... பிறப்பு!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது அன்பு இருந்தாலே அப்பனே நிச்சயம் அங்கே அப்பனே உடம்பை விட்டுவிட்டு மீண்டும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே... நிச்சயம் பிறப்பு எடுத்து விடுவோம் அப்பனே 

பின் அதாவது ராமனும் சீதாவும் இங்கு அமர்ந்து கொண்டு... எப்படி செல்வது?? என்று தெரியாமல் அப்பனே நிச்சயம்.. பின் அதாவது அழகாகவே பின் நிச்சயம் இங்கு எவை என்று அறிய அறிய அப்பனே 

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு அப்பனே நிச்சயம் பின் அதாவது உலோபா முத்திரை பிறப்பெடுத்தால். நிச்சயம் பின்.. சாபங்களும் மறையும் ராமனுக்கும் சீதாவுக்கும் என்று கூட விதி... இதை யாம் அறிவோம். 

இதனால் அப்பனே பின் மீண்டும் அப்பனே காசி தன்னில் இருந்து அப்பனே மீண்டும் இங்கு பிறப்பு எடுப்பதற்காகவே அப்பனே யான் உத்தரவிட்டேன் அப்பனே 

மீண்டும் அப்பனே பின் எவை என்று கூட அப்பனே இதன் ரகசியங்கள்.. அப்பனே பல பல உள்ளது என்பேன் அப்பனே... அவையெல்லாம் வருங்காலத்தில் யான் செப்புவேன் அப்பனே பொறுத்திருந்தால்!!!

அப்பனே இன்னும் யான் வாக்குகள் பரப்புவேன் அப்பனே... சிறிது சிறிதாக பரப்பினால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டால் மீண்டும் நீங்கள் மறந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே.... சிறிது சிறிதாக அப்பனே அனைத்தையும் அனைத்து ரகசியங்களையும் யான் சொல்வேன் அப்பனே!!!

ஆசிகள் ஆசிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு🙏 ஓம் அகத்தீசாய நம ❤️ ஓம் லோப முத்ராய நம ❤️

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. இறைவா! நீயே அனைத்தும்.
    இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1736 - அன்புடன் அகத்தியர் - லோபாமுத்திரா!
    https://siththanarul.blogspot.com/2024/11/1736.html

    ================================================
    Google Map link
    https://maps.google.com/?cid=7809362408300344206
    ================================================


    =======================================================================================================================
    நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் இவ் உலகிற்கு சுட்டிக்காட்டப்பட்ட மகத்தான ஆலயங்கள் - Google Map link
    https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&usp=sharing
    =======================================================================================================================


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete