​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 18 November 2024

சித்தன் அருள் - 1732 - கலந்துரையாடலின் முன்னுரை - 2 !


பலவிதமான பிரச்சினைகள் வருவதை கண்டு, பக்திக்குள் நுழைந்தால், பிரச்சினைகள் ஓடிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். உள்ளே நுழைந்தவர்கள், எந்தனுக்கு எல்லாம் நடந்தேற வேண்டும் என்கிறான். இன்னும் சிலர், எந்தனுக்கு வசியம் செய்யும் சக்தி வேண்டும் என்கிறான். இன்னும் சிலர் எதை எதையோ கேட்கின்றான்.

ஒருவன் அறிவாளியாக இருந்தால், அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று இருக்க வேண்டும். தற்பொழுது மனிதன் அப்படி இல்லை அப்பா! சுயநலத்துடன் வாழ்கின்றான். யாராவது ஒருவன் "இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்" என்று எண்ணுகின்றானா? இல்லையப்பா! அதையும் இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றான். மனிதனுக்கு என்னென்ன கொடுக்கின்றோம், என்னென்ன செய்கின்றோம் என்று, யாராவது ஒருவன் (நன்றியாவது) சொல்வானா என்று பார்க்கின்றோம். இருந்தும் யாரும் இல்லை அப்பா. ஆகவே! இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்! பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கையை! மனிதனுக்கு வாழவும் தெரியவில்லை, வணங்கவும் தெரியவில்லை, இருந்தும் சித்தர்கள் திட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். 

கலியுகம், நீண்டு இருக்கவேண்டும் என்று இறை விருப்பம் ஆனாலும், தேவை இல்லை. யாங்கள் சித்தர்கள் ஒன்று சேர்ந்து அழித்து, புது யுகமாக தொடங்கி விடுவோம், அந்த அளவுக்கு தர்மம் அழிந்து வருகிறது, முற்றுகிறது. 

மந்திரத்தை, எங்கு சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டு செப்பினால் தான் பலனளிக்குமப்பா.

கோள்கள் ஒரு பாதையில் இருந்தால் தான் பரிகாரங்கள் பலனளிக்குமப்பா! அவை அந்த கோட்டை விட்டு சென்று இருபது வருடங்களாயிற்று. ஆகவே ஒன்றும் பலனளிப்பதில்லை அப்பா. நீங்கள் என்ன செய்தீர்களோ, அதற்கேற்றாற்போல், சனியானவனும், செய்வான், குருவானவனும் செய்வான். உங்களிடத்தில் ஏதும் இல்லை என்றால், என்னதான் செய்வான் அப்பனே. அதனால் தான் அப்பனே! புண்ணியத்தை இப்பொழுதே சேகரித்துக் கொள்ள வேண்டும். தானும், தன் குடும்பமும் வாழ வேண்டும் என்று நிறைய பணத்தை சேமித்து வைத்துக் கொள்கின்றான் மனிதன், ஆனால் அது காக்கப் போவதில்லை, புண்ணியம் தான் காக்கும் என்று அவனுக்கு தெரிவதில்லை. புண்ணியத்தை சேமித்து விட்டால், இறைவனாலும் சரி, உன்னை ஒன்றும் செய்ய முடியாதப்பா. அப்பனே! வந்துவிடு! நிறைய புண்ணியங்களை செய்துவிட்டாய், வா உன் காலங்கள் முடிந்துவிட்டது என்று கூறி எமதர்மன் வந்து உன் காலில் விழுவானப்பா. இது மனிதனுக்கு தெரியாதப்பா. 

சித்தன் என்பவன் யார்? சில சில அற்ப ஆசைகளுக்காக கொடுப்பவனில்லை அப்பா. பெரிய பெரிய விஷயங்களை செய்பவன் சித்தன். அது கூட தெரியவில்லை என்பேன் அப்பனே! மனிதன் வாயை திறந்தாலே பொய்கள் அப்பா! உண்மையை பேசச் சொல்! அவனை தேடி இறைவனே வருவானப்பா. என் அடியவர்கள் இல்லத்திற்கு சென்று கொண்டுதான் இருக்கின்றேன். எவ்வளவு சூதும், வாதும் ஒவ்வொருவர் மனதில். ஒன்று சொல்கின்றேன். பின் தர்மத்தை கடை பிடிக்காமல் எதை செய்தாலும், ஒன்றும் பிரயோசனமில்லை அப்பனே! எவ்வாறு இறைவனிடத்தில் கேட்க வேண்டும் என்று சிந்தித்து, சிந்தித்து செயலாற்றுங்கள். இன்னும் ஆன்மீகத்தின் முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறவில்லை என்பேன். யார் ஒருவனுக்கு பணத்தின் மீது நாட்டம் இல்லையோ, அவனிடம் தான் பணம் வரும் அப்பனே! புண்ணியத்தை பெருக்கத் தெரியவில்லை என்றால், இறைவனிடம் சென்று வேண்டினால் நிச்சயம் இறைவன் சொல்லிக் கொடுப்பான். ஆனால் மனிதனுக்கு புத்திகள் கலியுகத்தில் மாறிக் கொண்டே வருமப்பா. எவ்வளவு, என்னதான் சொன்னாலும் கேட்க மாட்டானப்பா! யாங்கள் சித்தர்கள் தான் முடிவெடுக்கப் போகின்றோம். மீண்டும், பொறுத்திருந்து பார்ப்போம், பார்ப்போம் என்று வீட்டுக் கொண்டே வருகின்றோம் அப்பனே! 

ஈசனும், "அகத்திய மாமுனிவரே ! தொடங்கிய காலத்திலிருந்து மனிதனை திருத்துகின்றாய், திருத்துகின்றாய், என்று சொல்லிக் கொண்டே வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றாய். ஆனாலும் மனிதன் திருந்திய பாடில்லை!. "ஈசனே! இவை எல்லாம் நீங்கள் உருவாக்கியது. போய் சுற்றி வாரும்! யாம் அறிவியல் வழி அவனுக்கு புத்தியை கொடுக்கின்றேன். நிச்சயம்!" என்று ஒரு சந்தர்ப்பத்தை கேட்டிருக்கின்றேன் அப்பனே! ஈசனும் "ஆனாலும் சரி! உலகம் தோன்றிய காலத்திலிருந்தே, மனிதனை திருத்துகின்றேன்! திருத்துகின்றேன்! என்று சொல்லி வருகிறீர். இருந்தாலும் கடைசி வாய்ப்பை தருகின்றேன்" என்று கூறி சென்றார். எனக்கு என் பக்தர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. தாயானவள், தன் பிள்ளை என்ன தவறு செய்தாலும், பின் பொறுத்து காப்பாள் என்பேன். நிச்சயம், அது போலத்தான் இவ் அகத்தியனும் என்பேன். "அகத்தியன்" என்று சொல்லிவிட்டால், நீங்கள் என்ன தவறுகள் செய்தாலும், சில பாபங்கள் போகும். நிச்சயம் உங்களை காப்பேன். அகத்தியன் என்ற பெயரின் அர்த்தம், பாபம் நீக்குவது என்று அர்த்தமப்பா. அகத்தியன் என்ற பெயரில் அ முதல் ன் எழுத்துக்குள் அனைத்து மந்திரமும் அடக்கமப்பா. இதை யார் ஒருவன் எழுதி வைத்துள்ளானோ, அவனுக்கு, இறைவன் நிச்சயம் காட்சி அளிப்பானப்பா. அப்பனே! பணங்கள் தானாக வருமப்பா. அப்பனே! அவன் நினைத்ததை அடைந்து விடலாமப்பா. அனைத்து மொழிகளை யாம் அறிவோமப்பா. அனைத்து சித்தர்களும் அறிவார்கள். இது தெரிந்து தான் அகத்தியன் என்ற பெயரில் அத்தனை மந்திரங்களையும் அடக்கி வைத்தார்கள். 

ஆகவே, யாம் கூற வருவது என்னவென்றால், முட்டாள்களாக இருக்காதீர்கள், அறிவாளியாக இருங்கள், யாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள், எமக்கு, ஏதும் செய்ய தேவை இல்லை. தர்மத்தை கடை பிடித்து மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அதுவே போதுமானது. தர்மத்தை கடை பிடிக்காவிடில், ஒரு நாள் அனைத்தும் அழிந்து விடுமப்பா! பின்னர் "அன்றே அகத்தியன் சொன்னான்" என்று புலம்பி பிரயோசனம் இல்லை.

உங்கள் அனைவரையும் யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. அருமையான கலந்துரையாடல் விளக்கம் அய்யா! நன்றி

    ReplyDelete
  3. Om sri Lobamudra samedha Agathiyar thiruvadigalaè Saranam

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete