வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப் பெருமானின் ஜீவநாடியில் ஒரு தனிப்பட்ட விஷகயத்துக்காக உத்தரவு கேட்ட பொழுது பொதுவாக எல்லோரும் கடைபிடிக்க ஒரு உத்தரவை இட்டுள்ளார். அந்த உத்தரவை எளிதாக கீழே விளக்குகிறேன்.
1 இந்த மார்கழி மாதத்தில் அனைவரும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒருமுறையாவது வீட்டில் கூற வேண்டும்! கூற முடியாதவர்கள்,
2. ஒலியாக ஒலிக்கவிட்டு கேட்க வேண்டும். அதுவும் முடியாதவர்கள்
3. ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலுக்கு தினமும் சென்று முப்பது நிமிடங்கள் த்யானத்தில் அமர வேண்ண்டும்.
மேலும் தை பிறந்த பின், ஒருநாள் ஆணும், பெண்ணும் உடுத்த உடைகளையும், உணவையும் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்திட வேண்டும்!
இவ்வாறு செய்திட, பெருமாள் மனம் மகிழ்ந்து, ஒவ்வொருவரின் கரை ஏறாத பித்ரு ஆத்மாக்களுக்கு மோக்ஷத்திற்கான வழியை கொடுப்பார். ஒவ்வொருவரின் கர்மாவிலும் சேர்ந்திருக்கும் பித்ரு சாப/தோஷங்களை இச்செயல் கரைக்கும். வாழ்வு வளமாகும்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇறைவா நன்றி 🙏
ReplyDeleteநன்றி
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteநன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏
ReplyDelete
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
===================
Youtube:-
மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் - உலகம் அறியாத ரகசியம்
https://www.youtube.com/watch?v=ztausP0vTPI
===================
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1263 - திருப்பதி வைகுண்ட ஏகாதசி வாக்கு!
6/01/2023 மார்கழி திங்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் வெள்ளிகிழமை பௌர்ணமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
வணக்கம் அடியவர்களே , வாக்கின் உள் செல்லும் முன்னர் வாக்கு சுருக்கத்தை ஒரு வரை பட வடிவில் இங்கு அளித்துள்ளோம். இவ் படத்தை நன்கு புரிந்து வாக்கின் உள் செல்ல நன்று.
மார்கழி மாதம் வளிமண்டலத்தில் ஒரு படலம் சிறிய சிறிய ஓட்டைகளாகவே மாறும்.
வைகுண்டம் என்பதற்கு பொருள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு என்கின்றார்கள், வளிமண்டலம் தான்.
அது வளிமண்டலத்தில் இறைவனால் உண்டாக்கப்படும் ஒரு ஓட்டைதான். அதாவது புண்ணிய உலகம் அங்கு இருந்து அருள் ஒளி திருக்கதிர்கள் திருப்பதி வந்து அடைகின்றது.
முதலில் அவ் ஒளி பெருமாள் மீது பட்டு அப்படியே (பெருமாளை தரிசனம் செய்யும் பொழுது) மனிதர்கள் மீது எதிரொளிக்கும். அடியவர்கள் பார்வைக்கு ஒரு விளக்க கட்சியாக இங்கு அளிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் அவ் ஒளியானது
(1) முதலில் திருப்பதியில் விழும். அப்போது அவ் ஒளி அருள்கள் கொடுக்கும் ஒளி. நோய்கள் நம்மை அண்டாது.
(2) அடுத்த ஒளியானது இப்பொழுது ஒளியானது ஆதி நடராச பெருமான் சிதம்பரம் , பின் அங்கு விழும். அப்போது தரிசனம் செய்தால் உடனடியாக கர்மத்தை நீக்கும். உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து விடலாம்.
(3) அடுத்து வருவது பழனி தன்னில் விழும் அவ் ஒளியானது.
அங்கு தரிசிப்பவர்களுக்கு அவ் ஒளியானது மார்கழி மாதத்தில் , தை மாதத்தில் கூட நிச்சயமாய் அதிகளவு படும். அப்பொழுது பிரதிபலிக்கும் பொழுது நிச்சயம் பெருவாழ்வு கிட்டும்.
(4) அடுத்த ஒளியானது, அடுத்து அண்ணாமலையிலே அங்கே ஒளிவிழும்.
அங்கு செல்பவர்களுக்கு மேலான எண்ணங்களை ஈசன் நிச்சயமாய் கொடுப்பார்.
(5) அடுத்து காசி தன்னில் விழும். அங்கு எதிரொலிக்கும் பொழுது அனைவரும் கூட புத்துணர்ச்சி பெறலாம்
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் நம் அனைவரையும் "நலமாகவே நலமாகவே ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள் அப்பனே" - என்று கலியுகத்தில் முதலில் உண்மையை உணர்த்தி நமக்கு அருள் வழி காட்டியுள்ளார்கள். அடியவர்கள் நாம் அனைவரும் குருநாதர் கட்டிய வழியில் சென்று அவ் இறை ஒளியை நம்முள் சேமித்து புண்ணியம் செய்வோமாக.
================================
===========================
Youtube link
https://youtu.be/5adiVnEF2c0?feature=shared
சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)
https://siththanarul.blogspot.com/2022/09/1188.html
அப்பனே பின் மார்கழி வரும்!!!
அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே
ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!
பின் மார்கழி திங்களில் அதிகாலையிலே விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சிவபுராணத்தையும் ஓதி வந்தால் அவ் ஒளியானது நிச்சயம் தன்மீது பட்டு பட்டு எழும் என்பேன் அப்பனே சக்திகள்!!! சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!
ஆனால் அப்பனே பின் எதை இவை அறிந்து இவை அறிந்து இதை தன் மீண்டும் அப்பனே தை மாதம் இவை என்று அறிய பின் சிறிது சிறிதாக பின் ஒளிந்து விடும் அப்பனே!!!!
இதனால் எதை என்று அறிய அதனால் அப்பனே இம்மாதத்தில் இருந்து பல புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளலாம் தை மாதம் வரை!!! இதுதான் அப்பனே புண்ணிய காலம் என்பேன் அப்பனே!!!!
===========================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete