​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 29 December 2024

சித்தன் அருள் - 1756 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - 18


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 
16
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17

நம் குருநாதர் :- அப்பனே இன்னும், இன்னும் இக் கலியுகத்தில் பயங்கள் ஏற்படும் அப்பா. கலியுகத்தில் அழிவுகள் பின் பலம் என்பேன் அப்பனே. பூகம்பங்கள், ரத்தமாக மழை பொழிதல், சுருண்டி அதாவது மயங்கி விழுதல் அப்பனே இவையெல்லாம் நடக்கும் அப்பா. தனைத்தான் காப்பாற்ற முடியாமல் அப்பனே மாயையை கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர் :- அப்பனே சொந்த பந்தங்கள் , நேற்றைய பொழுதிலே சொல்லி விட்டேன்.  எந்தனுக்கு மாமனார், இன்னும் மாமியார், இன்னும் கணவன், இன்னும் மனைவி, என் பிள்ளைகள் என்று.  ஆனாலும் அப்பனே அனைவருமே அனாதை தான் இறைவனிடத்தில் அப்பனே. ஆன்மா வெவ்வேறு அப்பா. 

அடியவர்கள் :- புரியுது ஐயா

சுவடி ஓதும் மைந்தன் :- ஆன்மா என்பது அனாதைதான். 

நம் குருநாதர் :- அவ் ஆன்மாவை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். அதனால் தான் சொன்னேன். தன் நிலைமையைத் தான் எப்படி வாழ வேண்டும் என்று முதலில் தெரிந்து கொண்டால் மற்ற ஆன்மாக்களை அப்படியே சுலபமாக மாற்றி விடலாம். 

அம்மையே,  பல நபர்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. மனைவி கணவன் சண்டைகள், மனைவி தன் மாமியார், மனைவி தன் அம்மா அப்பா ,  இன்னும் தன் மகளுடன் போராட்டங்கள், சண்டைகள். ஏன்? எதற்கு இவ்வாரெல்லாம் இட வேண்டும்? 

அடியவர் :- அறியாமைதான் ஐயா

நம் குருநாதர் :- அம்மையே இன்னும் சொல்லியும் புரியவில்லையே தாயே. ஆன்மா வெவ்வேறு தாயே. 

( உன்னிடம் உள்ள ) இவ் பாவத்தை அதாவது ஒரு பத்து சதவீதம் பாவம் இருக்கின்றது அல்லவா? அவ் பத்து சதவிகித ஆன்மாவை உன்னிடம் அனுப்புவான் இறைவன். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படித் தெரியுமா இறைவன் அனுப்புவார் ? சூப்பராக சொல்லிவிட்டார் அம்மா. இப்போ ஒரு 100% புண்ணியம் இருந்தால் அதற்கு தகுந்தவாறு ( தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தை என்று ) உங்களிடம் ஆன்மாவை அனுப்புவார் இறைவன். 

அதே மாதிரி ஒரு 10% பாவம் இருந்தால், இறைவன் அதற்குத் தகுந்த மாதிரி உங்களிடம் ஆன்மாவை அனுப்புவார். ஐயா புரிகின்றதா? எல்லாமே பாவ புண்ணிய கணக்குதான். 

நாம் எல்லாம் ஒரு ரோபோ. ( இறைவன் சொருகிய ) ஒரு சிப் ( cell ) நம்ம மூளையில். ரிமோட் இறைவன் கையில். அப்போ இறைவன் எவ்வளவு பெரியவர்? இதை வைத்து வெளிநாட்டவர்கள் ( சித்தர்கள் ஓலை சுவடியை வைத்து ) 
எல்லாம் செல் கண்டுபிடிக்கிறது என்று பல வேலைகள். எல்லாம் திருடிவிட்டார்கள். 

நம் குருநாதர் :- அப்பனே அடுக்கடுக்காக தஞ்சை திருத்தலத்தில் சுவடிகளப்பா. அவையெல்லாம் காசுக்காக அப்பனே விற்றுவிட்டானப்பா. 

( அடியவர்களே, இவ் மாயமான ஓலைச்சுவடிகள் மூலம் தான் தற்போதைய விஞ்ஞானங்கள், microprocessor , computer, Robo எல்லாம் காசுக்காக உண்டாயின.) 

அம்மையே இக்கலியுகத்தில் இப்படித்தான் மனிதன் கூட பக்தியில் நுழைந்து கிரகங்களைப் பற்றி பொய் கூறிக்கொண்டிருக்கின்றான் அம்மையே. எப்படியம்மா? இவ்வாறே பொய் கூறிக்கொண்டிருந்தால் பக்தி என்பது பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன் கடைசியில். 

( *** உலகம் இதுவரை அறியாத, மகிமை புகழ் சித்தர்கள் ஜோதிடம் , ஜோதிட ரகசியங்கள் வாக்கு ஆரம்பம்***** ) 

அப்பனே அனைவரையும் ஒன்றைக் கேட்கின்றேன். உங்களைப் பக்குவப் படுத்தப் போகின்றேன். அதாவது ஐந்தில் கேது இருந்தால் என்ன? லக்கினத்திற்கே என்று சொல்லுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கு இங்க ஜோதிடம் தெரியுமோ, ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் என்ன என்று கேட்கின்றார். அகத்தியர் ஏன் இந்த கேள்வியை எடுத்து வருகின்றார் என்றால், யாருக்கோ இங்கு (ஜோதிடம்) தெரியும் என்று அர்த்தம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஜோதிடம் தெரிந்த அடியவர்களை முன்னே வருமாறு அழைத்தார்கள் ) பதில் சொல்லுங்க ஐயா. 

அடியவர் :- ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் என்று சொல்கின்றார்கள். புத்திரத்தின் மூலமாக சிரமங்கள், மனக்கஷ்டம் ஏற்படும் என்று சொல்கின்றார்கள்.

நம் குருநாதர் :-  அப்படியே நில் அப்பனே. இவை பொய் என்பேன் அப்பனே. பின் ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம்தான் அப்பா. ஆனாலும் முன் ஜென்மத்தில் யார் குழந்தைகளோ அக்குழந்தைகளே பிறப்பார்கள் அப்பா ஐந்தில் கேது இருந்தால். ஆனால் இதை யாராவது சொல்வார்களா அப்பா? மீண்டும் சொல்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர் :- நூலில் சொல்லப்பட்டதைச் சொல்கின்றேன். அது பாக்கிய ஸ்தானம் என்பதால் முற்பிறவியில் நம்ம பாவங்கள் நிறைய கொண்டு வந்திருக்கின்றோமா? புண்ணியங்கள் கொண்டுவந்திருக்கின்றோமா? என்று சொல்லும் ஸ்தானம் என்று சொல்கின்றார்கள். 

நம் குருநாதர் :- அப்பனே ஐந்தாம் இடம் முக்கிய பங்கு வகிக்கின்றது அப்பனே. அங்கு கேது இருந்தால் அப்பனே, இறைவன் ஆற்றல் பலமாக எப்பொழுதும் இருக்குமப்பா தன்னைச் சுற்றி.  வாழ்ந்துவிடலாம் எளிதில். அப்பனே தன் ஆன்மா அதாவது ஒரு பிறவியில் பிறந்திருப்பீர்கள். இப்பொழுது சொன்னேனே பத்து சதவிகிதம் என்று. அவ் ஆன்மாக்கள் சொந்த பந்தங்களோடு அப்பனே இப்பிறப்பிலேயே பிறக்கும் அப்பா. இதுதான் ஐந்தில் கேது அப்பனே. யாருக்காவது தெரியுமா அப்பா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) யாருக்கும் தெரியாது ஐயா. ஐயா சொல்லுங்கள் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே ஐந்தில் கேது இருந்தால் மோட்சம் என்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே. இதனால் அனைத்தும் எடுப்பானப்பா. இறைவனே தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டு உந்தனுக்கு எதுவுமே சொந்தமில்லை என்று தன் பக்கத்திலே வைத்துக்கொண்டு அனைத்தும் செய்வானப்பா. இது யாராவது சொன்னீர்களா அப்பனே?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்தில் கேது இருந்தால் மோட்சம். இறைவன் பிள்ளையாக வாழலாம். ஆனால் எல்லாவற்றையும் எடுப்பார். சொந்த பந்தங்கள் கொடுக்க மாட்டார். எதுவுமே இல்லாம தனியாக நிற்க வேண்டும் என்று சொல்கின்றார். சொல்லுங்க ஐயா. 

அடியவர் :- பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் மோட்சம் என்று சொல்கின்றார்கள்?

நம் குருநாதர்:- அப்பனே சொல்கின்றேன். ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடம், ஏழாம் இடம், ஒன்றாம் இடம் இவற்றில் கேது இருந்தால் அள்ளிக் கொடுப்பானப்பா அதாவது முன் ஜென்மத்தில் செய்த தவறுகள் எல்லாம் இச் சென்மத்திலேயே கழித்து.  மோட்சத்திற்கு வழிகள் பின் கொடுப்பானப்பா. இவற்றிற்கு பரிகாரங்கள் எங்களிடையே இருக்கின்றதப்பா. யாரும் இதை எடுத்துரைக்க முடியாதப்பா. மனிதனால் ஆகாதப்பா. ஆனால் மனிதன் என்ன சொல்வான்? சர்ப்ப தோஷம், ராகு தோஷம் என்று சொல்லிச் சொல்லி அதைச் செய், இதைச் செய் என்று சொல்லிச் சொல்லி ஒன்றும் நடக்காமல் போகும் அப்பா. இறைவன் பின் போட்ட கணக்கு தவறாதப்பா!!!! தவறாது!!!!

அடியவர் 1:- ஐயா பத்தில் கேது இருந்தால் என்னங்க ஐயா?

நம் குருநாதர் :- அம்மையே முன் ஜென்மத்தில் அதிக நபர்களுக்கு வேலைகள் கொடுத்து, அதாவது நீ முதலாளியாக இருந்தாய். பின் பல நபர்களுக்கு வேலை கொடுத்து ஏமாற்றப்பட்டாய். ஆனால் இப் பிறப்பில் வேலை அமையாது. அப்படி பின் அமையாமல் இறைவன்தான் உண்மை என்று தெரிய வைத்து , அதன் மூலம் நிறைய பக்குவங்கள் கொடுத்துக் கொடுத்து, அம்மையே பல வகையில் புகுத்துப் புகுத்து வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று கடைசியில் நிம்மதியாக இறைவன் அழைத்துக் கொள்வான்.

அடியவர் 2:- ஐயா, நான்கில் கேது இருந்தால் ?

நம் குருநாதர்:- அப்பனே நீ கேட்பது சரியா? அப்பனே முதலில் அதனால்தான் சொன்னேன் ஒன்றாம் வகுப்பே முடிக்க வில்லை என்று. 

அடியவர் 3:- எனக்கு சந்திரன் கேது சேர்ந்து இருக்கு. சந்திரன் கேது சாரம் வாங்கி இருக்கு. எனக்கு என்ன பன்னனும்னு சொல்லுங்க ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே சந்திரன் கேது சேர்ந்து இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா அப்பனே. பைத்தியக்காரன் அப்பா. அப்பனே ஆனால் நீ இப்படி இருக்கின்றாய் அல்லவா? அதற்கு யான்தான் காரணம். அப்பனே அதனால்தான் சொன்னேன் எதையும் கேட்டு விடாதே. யான் அழைத்து செல்கின்றேன் என்று. (இதே போல் மற்றொருவர்) ஆனாலும் யான் அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றேன். அதனால்தான் அமைதி காத்திருங்கள் என்று.

அப்பனே கிரகங்கள் என் பிடியில் அப்பனே. இப்பொழுது நீ சொன்னாய் அல்லவா? சந்திரன் கேது என்று..அப்பனே சந்திரனை அடுத்த பின் இல்லத்திற்கு சென்றுவிடு என்று சொன்னேன். அதனால் உந்தனுக்கு சேரவில்லை அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( நம் குருநாதர் கிரகங்களை ) மாற்றிவிட்டார் ஐயா. புரிகின்றதா ஐயா?

அடியவர் :- பைத்தியமாகி இருக்க வேண்டும். ஆனால்…

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சந்திரன் கேது சேர்ந்து இருக்கின்றது என்று சொன்னீர்கள் அல்லவா?

அடியவர் 4:- தலை எழுத்தையே மாற்றிவிட்டார் சுவாமி ( அகத்தீசப்பன்) .

சுவடி ஓதும் மைந்தன் :- தலை எழுத்தையே மாற்றி எழுதிவிட்டார். சந்திரனை அடுத்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். 

அடியவர் 3:- ( இவர் கேள்வி கேட்டவர். குருநாதர் கருணை மழையால் இவருக்கு என்ன நடந்துள்ளது என்று புரியாமல் ) அப்படியா? 

அடியவர் 4:- போனதனால்தான் ஐயா இப்படி ( நன்றாக ) இருக்கின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா!!!! போனதனால்தான் ஐயா இப்படி இருக்கின்றீர்கள் ஐயா. 

அடியவர் 4:- இல்லை என்றால் பைத்தியம் ஆகி இருப்பேன்!!!!! (இப்பொழுது அவ் அடியவருக்கு  உண்மை நிலைமை புரிய ஆரம்பித்தது) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆம். அப்ப கேதுவும் சந்திரனும் ஒன்றாக இருக்கின்றது என்று சொன்னீர்கள் அல்லவா, சந்திரனை அடுத்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார். யப்பா ( சந்திரனே ) மாறிவிடு என்று சொல்லிவிட்டார்.  அப்பொழுது நீங்கள் தெளிவடைந்து விட்டீர்கள். ( புத்தி ) தெளிவுகள் வரும். இது யாருக்கும் தெரியாது. நீங்கள் ஜாதகத்தை எடுத்து ( ஜோதிடரிடம் ) சென்றால் என்ன சொல்வார் அவர்? 

அடியவர் 3:- சந்திரன், கேது சேர்ந்து இருக்கின்றது என்று சொல்லுவார்.

சுவடி ஓதும் மைந்தன் :- சேர்ந்து இருக்கின்றது என்றுதான் சொல்லுவார். ஆனால் அகத்தியர் என்ன சொன்னார்? நான் சந்திரனை அடுத்த வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டேன். அப்போது உங்களுக்கு அந்த தோஷம் போய்விட்டது.  அதனால கிரகங்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு சக்தி என் கையில் உள்ளது என்று சொல்கின்றார் அகத்தியர். 

அடியவர் 6:- சித்தர்கள் வழி வந்து விட்டாலே ஜோதிடம், ஜாதகம் பார்க்க வேண்டாம். 

நம் குருநாதர் :- அப்பனே இருப்பினும் தவறாகச் சொல்லிக்கொண்டுள்ளார்கள். நீயே உன் வாயால் மாட்டிக்கொண்டாய் அப்பனே. நீயே தவறு பல பேர்களுக்குச் சொல்லியுள்ளாய். வா மகனே இங்கு.

அடியவர்கள் :- (சிரிப்பு) நீங்க தவறாக (ஜோதிடம் சொல்லி) பலரை தப்புத் தப்பாக guide பன்னிஇருக்கீங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ( சுவடி முன்னே ) வாருங்கள். உங்களுக்கு (தவறாக) தெரிந்து உள்ளது.  வாங்க ஐயா. 
(அடியவர் 6 - முன்னே வந்தார்)

அடியவர் 6:- எனக்குத் தெரியாது இப்போ.

நம் குருநாதர் :- அப்பனே ஆமாம் அப்பா. தெரியாது. உன் பின்னே இருப்பவனுக்கும் கூட ஒன்றும் தெரியாது. ( ஜோதிடம் தெரிந்தும் முன்பு அழைத்து எழுந்து முன் வராத அடியவர்களை ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தார் கருணைக்கடல்.) 

அடியவர்கள் :- (அடியவர் 7) அவரும் ஒருவர். ( சிரிப்பு. கருணைக் கடலின் அருள் வலையில் மாட்டிக்கொண்டதால்.) 

சுவடி ஓதும் மைந்தன் :- யாருங்க ஐயா? இவருக்கும் ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார். அப்போ நீங்க எல்லாம் ஜாதகத்தில் ஏதோ செய்துள்ளீர்கள்….

அடியவர்கள் :- ( பல சிரிப்புக்கள் ) 

அடியவர் 7:- ஐயா அசுவினி, மகம் , மூல நட்சத்திரம் எல்லாம் கேது பகவான்தான் வருவார். இங்க இருக்கும் நிறைய பேருக்கு, உலகத்தில் பிறக்கும் எல்லோருக்கும் அசுவினி, மகம் , மூல நட்சத்திரத்தில் (பிறந்து) இருந்தால் அவங்க எல்லோருமே பைத்தியம் , அந்த மாதிரிதான் இருக்குமா? 

நம் குருநாதர் :- அப்பனே அதனால்தான் உன்னை ( ஆன்மா வந்த நோக்கம் ) நீ அறிந்தால் அங்கு கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் வேலை ஏதப்பா? அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அதாவது தன்னை நீங்கள் அதாவது உங்களை நீங்கள் வெல்வீர்களாக. அதை பக்குவப் படுத்திவிட்டால் அப்பனே கிரகங்களும் ஒன்றும் செய்யாது. 

அகத்தியன் அனைத்தும் சொல்லிவிட்டான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நம் பாதையில் அதாவது உன் பாதையில் நீ சென்றால், (கிரகங்கள்) தன் பாதையில் அவை செல்லுமப்பா. அவ்வளவுதான். இதற்கு நீயே எழுந்து சொல் மகனே? 

அடியவர் 8 :- எட்டில் கேது இருந்தால் ஞானத்தின் அதிபதி என்று சொல்கின்றார்கள். அந்த சந்தேகத்தை தான் அகத்தியர் ஐயாவிடம் கேட்கின்றேன்.

நம் குருநாதர் :- அப்பனே எட்டில் கேது , வாழ்க்கையே விளையாட்டப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு இருக்கா ஐயா.

அடியவர் 8 :- ஆமாம் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கையே விளையாட்டு ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே ஆனாலும் எட்டில் கேது இருந்தால் அதிவிரைவிலே இறந்துவிடுவார்கள் என்பார்கள் அப்பனே. ஆனால் நீ இருக்கின்றாய் அல்லவா?

அடியவர் 8 :- ஆமாங்க ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி உயிரோடு இருக்கின்றாய் என்று கேட்கின்றார் ஐயா

அடியவர் 8 :- ஒரு வேளை உணவோடு இருக்கின்றேன் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் ஐயா. இறைவனுடைய விளையாட்டு. இறைவனோட கன்ட்ரோல்ல போய்விடுவாங்க. 

அடியவர் 8:- இன்று வரை விளையாட்டாகத்தான் போய்க்கொண்டே உள்ளது (வாழ்க்கை). எதையுமே கஷ்ட, நஷ்ட…

நம் குருநாதர் :- அப்பனே அதாவது நல் கிரகங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தோம் அழகாக. ஆனாலும் அப்பனே திருடிச் சென்றுவிட்டு,  மாய வலையில் இப்படி எழுதிவிட்டார்கள் என்பேன் அப்பனே. அதை கற்றுக் கொண்டு, அதையே மக்களுக்குப் பரப்புகின்றார்கள் அப்பனே. அதுதான் தவறு என்பேன் அப்பனே. ( உண்மையான ஜோதிடம் இங்கு இல்லை. கர்மா உண்டாகும்.) 

அடியவர்கள் :- oh….

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா உண்மையா ஓலைச் சுவடி எல்லாம் ( வெளிநாட்டவர்கள் ) எடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் தவறானதை வைத்து இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என்று சொல்லிவிடுகின்றனர். இதனால்தான் யாராலும் மனிதன் வாழ்க்கையைக் கணிக்க முடியவில்லை. 

அடியவர் 9:- ஐயா சரியான ஜோதிடத்தை அகத்தியப் பெருமானிடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுது யான் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றேன் கூறு?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )

அடியவர் 10:- சரியான ஜோதிடம். 

அடியவர் 11:- ஐயா ஐந்தாவது இடம் பிள்ளைகளுக்காக என்று சொன்னீர்கள். ஐந்தாவது இடத்தில் செவ்வாய் உச்சமாகவும், புதன் நீச்சமாகவும் இருந்தால் எப்படிங்க ஐயா?

நம் குருநாதர் :- அம்மையே நீச்சம் , உச்சம் என்பதே இல்லை தாயே. இதை எப்படி நீ கேட்கின்றாய்?

அடியவர் 11:- எனக்குத் தெரியவில்லை ஐயா. எனக்கு சொன்னாங்க.

நம் குருநாதர் :- அம்மையை எழுந்து நில்.

அடியவர் 11:- (எழுந்து நின்றார்)

நம் குருநாதர் :- நீ தான் புவி என்று நினைத்துக் கொள். அனைத்து கிரகங்களும் உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதில் எப்படி நீச்சமாகும் என்று நீதான் விளக்கம் தர வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்போ நீங்கதான் இந்த பூமி என்று நினைத்துக்கொள்ளச் சொல்கின்றார் குருநாதர். நவ கிரகங்களும் இப்போது உங்களைத்தான் பார்க்கின்றது. அப்படி இருக்கையில் எப்படி (நவ கிரகங்கள்) நீச்சம் ஆகும் என்று கேட்கின்றார். 

அடியவர் 11 :- ( அமைதி )

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா யாராவது சொல்லுங்க ஐயா. 

அடியவர் 6 :- பூமி தனது தற்சுழற்சியில் அதாவது அந்த ஒளிக்கதிர்கள் மாறும் பொழுது அந்த பலா பலன்கள் மாறும்.

அடியவர் 11:- அந்த டிகிரி (பாகை) என்று சொல்ராங்க, அதுதான் (உச்சம் , நீச்சம் ) 

நம் குருநாதர் :- அம்மையே இவை எல்லாம் ஏற்க முடியாது.

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete