சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3
தான் கேட்ட காப்பியை அருந்தி முடித்தபின், எதுவும் பேசாமல், கீழே வைத்த சாமான்களை எடுத்துக் கொண்டு நேராக நடந்து வந்த வழியில் கோட்டையை கடந்து வலது புறம் திரும்பி சென்றான்.
"போதுமா?" என்றார் அந்த பெண்மணி, நண்பரை பார்த்து.
"இல்லை! போதாது. இது இயல்பாக நடந்தது போல இருக்கிறது! இன்னொரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டுங்கள்! அதோ வருகிறாரே, அந்த பெரியவர் தினமும் இங்கு வந்து ஏதேனும் அருந்தி செல்வார். இன்றும் காப்பி அருந்தத்தான் வருகிறார். கடைக்காரர் எப்போதும் போல என்ன வேண்டும் என்று கேட்ப்பார். ஆனால், அந்த பெரியவர், நான் தலையாட்டுகிறவரை எந்த பதிலும் கடைகாரருக்கு கூற கூடாது. நடத்திக் காட்டுங்கள் பார்ப்போம்!" என்றார்!
இதற்குள், அந்த பெரியவர் பாதையை கடந்து இவர்கள் அருகிலூடே சென்று காப்பி கடை முன் நின்றார்!
"டன்!" எனக்கூறி அந்த பெண்மணி கட்டை விரலை உயர்த்தி காட்ட, நண்பரும் அவரும் பொறுமையாக காத்திருந்தனர்.
பெரியவரை பார்த்து "வாங்கய்யா!" என்றழைத்தபடி கடைக்காரர் காப்பி குடித்த பாத்திரங்களை திரும்பி நின்றபடி, சுத்தம் செய்து கொண்டிருந்தார்!
"என்ன சாப்பிடறீங்க? எப்போதும் போலவா?" என்றார் கடைக்காரர்.
வந்தவர் பேசாமல் நின்று கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. தலை எல்லாம் வியர்த்து இருந்தது. கையில் இருந்த துண்டினால் தலையை துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்.
இவர்கள் இருவரும் அந்த பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் அந்த பெண்மணி "நீங்கள் தலையாட்டத வரை அவர் பேசமாட்டார்!" என்று மெதுவாக கூறினார்.
காப்பி கலக்க பாத்திரத்தை எடுத்து வைத்த கடைக்காரர் அந்த பெரியவரிடம், மறுபடியும் " அய்யா, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றார்.
பதில் இல்லை. பெரியவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பேச முடியவில்லை. கடைக்காரர் மேலும் இரண்டு முறை கேட்டும், பதில் இல்லை.
சூழ்நிலை, அந்த பெரியவருக்கு, சற்று சிரமமாக மாறுவதை கண்டு, கடைகாரரும் இவரை ஆச்சரியத்துடன் பார்ப்பதை கண்ட நண்பர், அந்த பெண்மணியை நோக்கி, தலையை ஆட்டினார். அதற்குள் மேலும் இரண்டு முறை "என்ன வேண்டும்" என்று கடைகாரார் கேட்க, பெரியவர் தான் நின்ற நிலையிலிருந்து விடுபட்டு " என்ன என்று தெரியவில்லை. எந்த எண்ணமும் வரவில்லை. சரி! நீங்கள் ஸ்டராங் காப்பி போடுங்க!" என்று கூறினார்.
"அதெப்படி முடிந்தது? உங்களை ஒத்துக் கொள்கிறேன்!" என்றார் நண்பர்!
"இதெல்லாம் மிக எளிது. ஆக்ஞா சக்கரத்தின் ஒரு இதழை தொட்டு நிறம் மாற்றி விட்டால், பேச்சு வராது, யோசனையும் இருக்காது!" என்றார் சிரித்துக் கொண்டே.
"வாங்க! காப்பி சாப்பிடுவோம்! உங்களுக்கு என்ன வேண்டும், காப்பியா? டீயா?" என்று கேட்டார் நண்பர்.
"நான் எதுவும் சாப்பிடுவதில்லை!" என நிதானமாக சிரித்தபடி கூறினார் அந்த பெண்மணி.
"ஓ! ஏதேனும் விரதமோ?" என்றார் நண்பர்.
"இல்லை! எனக்கு சாப்பாடு தேவை இல்லை. உடலுக்கு தேவையானதை, காற்று, ஆகாயம், சூரிய வெளிச்சத்திலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வேன்!" என்றார் அவர், புன்னகைத்தபடி.
"முதன் முறையாக சந்திக்கிறோம். ஏதேனும் சாப்பிடுங்களேன்!" என்றபடி, கண்ணாடி பெட்டிக்குள் கையிட்டு உளுந்து வடை ஒன்றை எடுத்து அவருக்கு கொடுத்தார், நண்பர்.
ஒரு வினாடி அந்த வடையை உற்று பார்த்து, யோசனைக்குப்பின் சிரித்தபடி அதை வாங்கி சாப்பிட தொடங்கினார், அந்த பெண்மணி.
"என்ன யோசனை? நல்ல வடைதான். இங்கு நல்லவிதமாக தயாரிப்பார். நான் காப்பி சாப்பிட வரும்போதெல்லாம் ஒன்று வாங்கி சாப்பிடுவேன். வயிற்றுக்கெல்லாம் பிரச்சினை செய்யாது!" என்றார் நண்பர்.
"இந்த வடையை உண்டபின் அதில் ஒன்று சேர்ந்து இருக்கும் கர்மா உடலுக்குள் சென்ற பின் என் உடலை விட்டு வெளியேற எத்தனை நாட்கள் ஆகும் என்று கணக்கிட்டேன். இரண்டு மாதம் என் உடலுள் இருந்து கழியும் என தோன்றியது. பற்று இல்லாவிடினும் எனக்கு அனுபவித்து கழிக்கும் விதி உள்ளது என்று தோன்றுகிறது!"என்றார் புன்னகைத்தபடி.
இதற்குள், காப்பி அருந்திய பெரியவர், இவர்களை அதிசயமாக பார்த்தபடி கடந்து சென்றார்.
"ஒரு வடைக்குள் இத்தனை நாள் நீண்ட கர்மாவா?" என்று கேட்டபடி தானும் ஒருவடையை எடுத்து சாப்பிட தொடங்கினார் நண்பர்.
"ஆம்! ஒவ்வொரு பொருளும் உருவாகும் முன்னரிலிருந்து கடைசியாக வடை ரூபத்தில் சேரும் வரை, எந்தெந்த பொருட்கள் வழி எத்தனை பேர் தன் கர்மாவை அதில் பகிர்ந்து கொள்கிறார்களோ அத்தனையும், நம்முள் சென்று உடலை வருத்தும். யோசித்துப் பாருங்கள். அதனால் தான் உணவு என்பதை இங்கிருந்து எடுத்துக் கொள்ளாமல், உணவு தரும் சக்தியை, மனித கர்ம பதிவுகள் இன்றி பஞ்ச பூதத்திலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வேன். மனிதர்கள் விடும் மூச்சில் கூட அவர்கள் சேர்த்துக் கொண்ட கர்மா நிறைந்திருக்கும். அந்த கர்ம வாசனை நம்முள் படர வேண்டாம் என்று தான் என்னை போன்றவர்கள் மனிதர் முன் வருவதில்லை." என்றார்.
அவர் பேச்சு அனைத்தும் நண்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில் புதுப் பாடமாகவும் இருந்தது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇♀️
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇♀️
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் சிவாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
சித்த ரகசியம்... அற்புதம்
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete