( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1762 - கோவை - பகுதி 1
சித்தன் அருள் - 1763 - கோவை - பகுதி 2
வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
61. அனைத்து இடத்திலும் “புண்ணியம் செய்” என்று வரவேண்டும்.
62. இறைவனை பிடித்துக் கொள்ளுங்கள் நன்றாக.
63. ( மனிதனுக்கு) அனைத்தும் இறைவன் கொடுத்துவிட்டால் , எதை எதையோ செய்து கொண்டிருப்பான்.
64. இவ்வுலகத்தில் மிகச்சிறந்தவை புண்ணியமே. ( புண்ணிய வழியில் ) இப்படிப்போ, அப்படிப்போ என்று ( பிறருக்கு எடுத்துச் ) சொன்னாலே அனைத்துமே கொடுப்பானப்பா இறைவன் உந்தனுக்கு. தன் மகன் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கின்றானே என்று. மற்றவை எல்லாம் வீணே.
65. திருடன், திருடன் என்று ஒத்துக் கொள்ள மாட்டான் அப்பா. பக்தன், யான் பக்தன் என்று சொல்லிக் கொள்ள மாட்டான் அப்பா. தன்னை பற்றி பெருமை பேசுகின்றவன் ஏமாற்றுக்காரன் என்பேன். இறைவனே தன்னைப் பற்றி பெருமை பேசுவதில்லையே.
66. தர்மம் பாதுகாக்கவில்லை என்றால் அனைத்து குடும்பமும் அழிந்து போய்விடும்.
67. அறியாமல் இருக்கக் கூடாது. அப்படி இருத்தால் ஆன்மா மறு பிறவி எடுத்துவிடுமடா.
68. முதலில் ( சித்தர்கள் ) எங்களை வணங்குபவர்களுக்குத் தர்மத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றோம். கஷ்டங்களே வரக்கூடாது என்று முதலில். அதைத்தான் எடுத்துரைப்போம்.
69. துன்பம் வரும் நேரத்தில் நன்மையே செய்தால் நிச்சயம் இன்பம். அடுத்து துன்பம் வரும் பொழுது நிச்சயம் நன்மையாகவே நடக்கும். ( உதாரணமாக ஏழரை நடக்கும் காலங்களில் புண்ணியங்கள் மிக மிக அதிகம் செய்ய வேண்டும்)
70. இறைவன் ஏன் இன்பத்தைக் கொடுக்கின்றான் என்றால் , பார்ப்போம். இவந்தனக்கு இன்பத்தைக் கொடுப்போம். இவன் என்ன செய்கின்றான் என்று. இன்பத்தைக் கொடுத்து விட்டால் இறைவன் பக்கம் கூட திரும்ப மாட்டான் மனிதன். ஆனால் துன்பத்தை நெருங்குகின்ற பொழுது அப்பொழுதுதான் இறைவனிடம் செல்வான் மனிதன். ஆனால் இறைவன் என்ன முட்டாளா கொடுப்பதற்கு அப்போது?
71. இறைவன் பிறக்க வைக்கின்றான். இப்படித்தான் வாழ வேண்டும் என்று. ஆனாலும் அதற்கு மீறிச் சென்றால்தான் துன்பம். ( இறைவன் இட்ட வட்டத்தின் உள் வாழ்ந்தால் எந்நாளும் இன்பமே.) அதை மீறி எப்பொழுது செல்வீர்கள் என்றால் நீங்கள் மற்றொரு பேச்சை எப்பொழுது கேட்கின்றீர்களோ அப்பொழுதே மீறி விட்டீர்கள் வட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டு. அப்பொழுது கஷ்டங்கள்.
72. இதனால்தான் மாணிக்க வாசகனும், சுந்தரனும் இன்னும் இன்னும் எதை எதையோ எழுதி வைத்து விட்டார்கள். ஆனால் அதை நம்பவில்லை. ( பொய்யான ) மனிதன் பேச்சைக் கேட்டுத் திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
73. ( இறைவன் மீது ) பயம் இருக்க வேண்டும். பயம் இல்லாவிடில் நிச்சயம் அழிவுதான். இறைவன் மறைமுகமாகவே இருந்து பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.
74. தந்தை பிள்ளைகள் கேட்டால்தான் செய்வானா?
75. நீங்கள் அனைவருமே அகத்தியர் பக்தர்கள்தான். ஆனாலும் அறிந்தும் கூட அவ்வளவு தகுதிகள் உங்களுக்கு இல்லை. அதாவது நாய்கள் கூட பின் இறைவனிடத்தில் கேட்பதில்லை. தன் சொந்த பந்தங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று. காகங்கள் கூட கேட்பதில்லை. ஏன் விலங்குகள் கூட கேட்பதில்லை. ஆனால் சிறு எறும்பும் கூட கேட்பதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே தன் சொந்த பந்தங்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்கின்றானே. எவ்வளவு பெரிய முட்டாள் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.
76. திருந்தவே இல்லை மனிதன். அடித்து நொறுக்குவோம்.
77. குறைகள் பற்றி எண்ணாதீர்கள் நிச்சயம் அகத்தியன் சரி செய்வான்.
78. மனது குரங்கு போல் இருந்தால் குறை. ( இறைவனை மனம் முழுவதும் நிறைக்க வேண்டும்) நிறைந்திருக்க வேண்டும் குடம்.
79. உணராமல் இறைவனை வணங்கினால், இறைவன் ஒன்றும் கொடுக்கப்போவதில்லை.
80. குறை, நிறை, இறை - என்றால் என்ன?
81. முதல் எழுத்தைக் கூட்டு.
82. கு + நி + இ ( குனி = பணிவு. குனிந்து நில் இறைவனிடம். ) புரிந்து கொண்டீர்களா? ஆனால் புரிந்து கொண்டினும் நிச்சயம் செயல் படுத்த எவை என்று அறிய அறிய நிச்சயம் அடித்தால்தான். ( இறைவனிடம் பனிவு வேண்டும். இல்லை எனில் அடிதான். )
83. யார் எதைச் சொன்னாலும் தலை குனிந்து பெற வேண்டும். சிந்தித்து செயலாற்ற வேண்டும். அப்படிப் பட்டவர்களுக்குத் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் ( என்று ) இறையருளும் கூட. ஆனால் ஆணவம் யான்தான் பெரியவன் என்று.
84. பழ மொழியும் உண்டு. “”””ஆணவத்தோடு எழுபவன், அவமானத்தோடு அமர்கின்றான்””””.
85. இறைவனே எவ்வளவு பெரிய ஆள்!!!!!. அவனே ஆனவம் காட்டுவதில்லை. மனிதன் காட்டுகின்றான் என்றால் அழிவுக்குத்தான் என்று அர்த்தம்.
86. மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். அகத்தியனுடைய பக்தர்கள் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டும் என்று. அப்பொழுதுதான் நீங்கள் கொடுத்தாலும், பின் உபயோகித்துக் கொள்ளத் தகுதி. இன்னும் அடுத்த மனிதர்களையும் கூட மாற்றுவீர்கள்.
87. சித்தர்களை நெருங்குகின்றவர்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு நெருங்க வேண்டும். தெரியாவிடில் நிச்சயம் கஷ்டங்கள்தான். பல புண்ணியங்கள் செய்தவர்களே எங்களிடத்தில் வந்து வந்து.
88. சொர்கத்தில் இருப்பவர் நரகத்தில் வந்து கெடுத்து விடுகின்றார்கள். இதனைப்பற்றி அகத்தியன் பின் தீவிரமாக உரைப்பான் வரும் காலங்களில்.
89. இப்பஓது நரகத்தவரும் சொர்கத்தவரை கெடுத்து விடுகின்றனர்.
90. உண்மைதனை நீங்கள் தெரிந்து கொண்டால் அனைத்து சித்தர்களும் வந்து வாக்கு உரைப்பார்கள்.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April 2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete