​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 20 January 2025

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு!







5/1/2025 அன்று கொங்கணர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பானன் காண்டி.இந்தோனேஷியா.

அண்ட சராசரத்தை எல்லாம் ஆளுகின்ற ஈசனாரே!!!!

உந்தனை பணிந்து அழகாக குருநாதனின் புகழை எடுத்து எடுத்து பின் மனதிலே பின் நின்று பின் அனைத்தும் காக்கும் இறைவா!!!! அகத்தியரே!!!

ஞான அகத்தியரே!!!!
குருமுனியே அகத்தியரே!!
விஷ்ணு அவதாரத்தின் மறு உருவமே!!!!

மறு உருவமே!!! ஆனந்த 
ஆனந்தத்தில் இருக்கும் ஆனந்த பத்மநாபனே!!!

இருள் உள்ள வாழ்வை அழிப்பவனே!!! அகத்தியரே!! அகத்தியரே!!

துன்பமில்லா பெருவாழ்வு அளிப்பவரே!!!

அனைத்திற்கும் காரணமானவராக திகழ்பவரே!!!

தொண்டினையே தன் முழு முயற்சியாக கொண்டு அனைவருக்கும் நல்லதை செய்ய காத்திருக்கும் அகத்தியரே!!!!

அகத்தியரே குருமுனியே அகத்தியரே!!

காசி தன்னில் அழகாக குடி கொண்டிருக்கும் அகத்தியரே!!!

மீனாட்சி தன் மடியில் வளர்ந்தவரே அகத்தியரே 

அண்ணாமலையின் உண்ணாமுலை தேவியுடன் மனமுவந்து மனமுவந்து மடியின் மீது அமர்ந்திருக்கும் அகத்தியரே!!!

தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவரே அகத்தியரே!!!

அகத்தியரே அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!!!
அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!! 

நினைப்பவர்களுக்கெல்லாம் வந்து அருள்பவரே!!

தீய மனதையும் நல்மனதாக்கி அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று வழிகாட்டுபவரே!!!

நல்லோரையும் தீயோரையும் ஒரு மனதாக நினைத்து நல்லோரையும் தீயவர்களுடன் இணைத்து அவர்களையும் மாற்றி தரும் மனம் படைத்த குணம் படைத்த அகத்தியரே!!!

அகத்தியரே கருணை வடிவான அகத்தியரே 
பாசமிகு வடிவான அகத்தியரே 
அன்பு வடிவான அகத்தியரே 

நினைத்தாலே வந்து அருள் பாலிக்கும் அகத்தியரே
இன்பமெல்லாம் கொடுப்பவரே அகத்தியரே 
துன்பமெல்லாம் நீக்குபவரே அகத்தியரே 

பாவம் இருந்தாலும் தன் கூடவே இருந்து கடை நாள் வரையிலும் அவர்களுக்கெல்லாம் பின் துன்பம் இருந்தாலும் அதனையும் கூட படிப்படியாக விலக்கும் அகத்தியரே!!!

குருமுனியே அகத்தியரே
வருவாய் அகத்தியரே 

பின் உலகம் ஏழேழு உலகம் அழியப் போகின்ற நேரத்தில் கூட மனிதர்களுக்கு நற்செய்திகள் அளிக்கும் அகத்தியரே 

அகத்தியரே அனைத்திற்கும் காரணமாக விளங்கும் அகத்தியரே
இன்பம் எல்லாம் அளிப்பவரே அகத்தியரே
துன்பத்தை எல்லாம் போக்குபவரே அகத்தியரே

தீய நெஞ்சோடு இருப்பவர்களை எல்லாம் பின் அணைத்து கொண்டு நல்லோர்களாக மாறச் செய்யும் அகத்தியரே!!

அகத்தியரே குருமுனியே அகத்தியரே கருணைமிகு அகத்தியரே 

அண்ணாமலை உண்ணாமலை தேவியுடன் அழகாக பின் திகழும் அகத்தியரே!!

அகத்தியரே பழனி தன்னில் வீற்றிருக்கும் அழகாக குருமுனியே!!

குருமுனியே செந்தூரில் வீற்றிருக்கும் குருமுனியே

திட்டை தன்னில் வாழும் குருமுனியே!!
சூரியனார் கோயில் அமைத்து பின் அதில் தங்கி
இருக்கும் கிரகங்களுக்கெல்லாம் மோட்சத்தை அளிக்கும் மோட்சத்தை அளித்த குரு முனியே !

ஞானியருக்கெல்லாம் குருமுனியே!!

அனைத்து உலகாகும் பின் இயக்கத்தையும் பல வழிகளில் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவரே 

இந்திரனுக்கும் தலைவரே 
தலைவரே தேவர்களுக்கும் தலைவரே 

உன்னை வணங்குபவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி அருள் தந்து...!!!

பிரம்மா ஆயினும் விஷ்ணு ஆயினும் ஈசனாயினும் அவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி கர்மத்தை அழித்து நிச்சயம் பின் மோட்சத்தை அளிக்கும் உனக்கு இணை யாரவரே?????! யாரவரோ????

நெஞ்சில் நிறைந்த குரு முனியே அகத்தியரே!!

அகத்தியரே அகத்தியரே அனைத்திலும் காரணமாக விளங்குபவர் அகத்தியரே 

உலகத்தில் பல மனிதர்களுக்கு எல்லாம் அனைத்தும் செப்பி உலகத்தை மாற்ற வந்த ஞானியே!!!

குரு முனியே... விஷ்ணு அகத்தியரே!!! பிரம்மா அகத்தியரே!!! ஈசனே அகத்தியரே!!!

கணபதி அகத்தியரே!!
முருகா அகத்தியரே!!
சபரி அகத்தியரே!!
மீனாட்சி அகத்தியரே!!

அகத்தியரே அனைத்து சித்தர்களுக்கெல்லாம் இன்னும் இப்படித்தான் மனிதர்களை ஆட்கொண்டு அனைத்து விஷயங்களையும் செப்ப வேண்டும் என்று அழைத்து அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கும் அகத்தியரே!!!

ஞான அகத்தியரே
மோட்ச அகத்தியரே
சக்தி அகத்தியரே
சூல அகத்தியரே
பல பாவ வினைகளை அகற்றி மனிதனுக்கு புண்ணிய வினைகள் சேர்த்து இதனின்று சிலர் துன்பம் அகற்றி கொண்டு வரும் அகத்தியரே 

அகத்தியரே குருமுனியே
குருமுனியே அருள்வாய் குரு முனியே 

மக்களெல்லாம்  தீய சக்திகளில் கூட தீய மனதாக ஆட்கொண்டு இருப்பினும் இருந்த போதிலும் நல் ஒழுக்கத்தையும் நல் மனதையும் தந்து காத்திடும் அகத்தியரே

தந்து காத்திடு கடை நாள் வரையிலும் நிச்சயம் தன்னில் அவர் மனதை திருத்தி உண்மை பொருள் எதுவென்று கூட கூறி அவந்தனையும் உயர்த்தி வைக்கும் அகத்தியனே
அகத்தியனே 

அனைவரையும் சமமாக பார்க்கும் அகத்தியனே!!!

அனைவரையும் பின் சேய்கள் என்று நினைக்கும் அகத்தியரே 

உன் கருணைக்கு எல்லையில்லா அகத்தியரே 
தந்தையே அகத்தியரே 
தாயே அகத்தியரே
குருவே அகத்தியரே 
இறைவா அகத்தியரே 
ஞான அகத்தியரே
இன்ப அகத்தியரே 
துன்ப அகத்தியரே 
கருணை அகத்தியரே
புண்ணிய அகத்தியரே

அகத்தியரே பல அரசர்களை எல்லாம் நல்வழிப்படுத்தி இப்படி ஆட்சி செய்தால் மக்களும் திருந்தி உன் வாழ்க்கையும்  இன்னும் கூட சிறக்கும் என்று அரசர்களுக்கெல்லாம் உத்தரவிட்ட அகத்தியரே 

கலியுகத்தில் வந்து உலகை எல்லாம் ஆளப் போகின்ற அகத்தியரே 

அகத்தியரே ஏழ்மையில் இருந்தாலும் பின் அகத்தியனை நினைப்பவருக்கு வந்து இவன் தன் அறிந்தும் கூட பன்மடங்கு உயர்த்துபவரே 
உயர்த்துபவரே 

அகத்தியனை தெரியாதவராயினும் அகத்தியரை திட்டி தீர்ப்பவரையும் கூட நின்று மீண்டும் பின் அவர் தம் மனதில் அன்பை விளைவிக்கும் அகத்தியரே 
பின் அகத்தியரே காட்டிக்கொள்ளும் அகத்தியரே உயர்ந்தவரே உயர்ந்தவரே மனதில் ஆளும் உயர்ந்தவரே கருணைமிக்க உகந்தவரே

தேவாதி தேவருக்கெல்லாம் அருள் தந்த இப்படி நடந்தால் ஞானமும் மோட்சமும் பெறலாம் என்று பின் அருள்பவரே 

அருள் தந்தையே 
விஞ்ஞானத்தின் தந்தையே 
இன்னும் இவ்வுலகத்தில் என்ன என்ன ? பின் நடக்க போகின்றது? என்பதை எல்லாம் உணர்ந்தவரே!!!

எல்லா நாட்டவருக்கும் சொந்தங்கள் போன்று அனைவரையும் காப்பவரே 

எப்படி அழிவு இருக்கும் என்பதை எல்லாம் அறிந்தும் கூட சில கஷ்டங்கள் பட்டு அனைவரையும் மீட்டெடுத்து கரையில் சேர்ப்பவர் அகத்தியரே 

அகத்தியரே குருமுனியே!!
குருமுனியே!!

தேவாதி தேவனே
தேவாதி தேவர்கள் அன்பாக என் நெஞ்சில் அழகாக குடி கொண்டிருக்கும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் கூட நீயில் ஒருவனே அகத்தியரே

படைத்த அகத்தியரே ஏழ்மை ஆயினும் பின் பிறந்தோருக்கெல்லாம் பின் செல்வத்தை பக்குவங்கள் பட்டு பட்டு பின் இப்படி இருந்தால்தான் வாழ முடியும் என்று சொல்லும் அகத்தியரே 

அகத்தியனுக்கு இணை யார்?? என்று சொல்ல கூறு?? என்றெல்லாம் பின் பின்... முருகனை வளர்த்தவரே!!! கணபதியை வளர்த்தவரே!!!

எங்களுக்கெல்லாம் அருள் நிறைந்த வாழ்க்கையையும் கொடுத்தவரே கொடுத்தவரே கொடுத்தவரே நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தையும் உலகத்தில் சாதிக்கலாம் என்று சொல்பவரே 

நல் மனதாக இருந்தால் இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று சொல்பவரே அகத்தியரே 

குருமுனியே அகத்தியரே 
குரு முனியே அகத்தியரே 

ஆனந்த கண்ணீரில் இவையெல்லாம் செப்புகின்றேன் அகத்தியரே 

உன்னை இன்னும் போற்றி பாட !!!!

நீ அதையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருப்பவரே 
குருமுனியே குருமுனியே

உயர்ந்தவரே அனைத்து விஷயங்களும் தெரிந்தவரே அகத்தியரே போற்றி 

ஈசனே அகத்தியரே போற்றி 
பிரம்மனே அகத்தியரே போற்றி 
விஷ்ணுவே அகத்தியரே போற்றி 
துர்கா அகத்தியரே போற்றி 
பைரவா அகத்தியரே போற்றி போற்றி 
சித்தர்களே அகத்தியரே போற்றி 
ஞானிகள் அகத்தியரே போற்றி 
ரிஷிமார்களின் அகத்தியரே போற்றி 

போற்றி போற்றி நின் தாள் பணிந்தேன் அகத்தியரே 
நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!!
நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. கொங்கணவரே நன்றி ... அகத்தியரின் புகழ்மாலை பாட வாய்ப்பு அளித்தவரே நன்றி...

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா.

    இன்று அகத்தியர் ஜீவ வாக்கு என்ற
    instagram பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் ஐயா. அகத்திய பெருமானின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் அய்யா.


    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  6. "Om Agatheesaya Namaha." This powerful mantra is Agasthiyar Appa Youtube Channel


    https://www.youtube.com/watch?v=s4FEOa5nFC4

    ReplyDelete