நம்பிக்கை இருந்தால் தான் யாங்களே/சித்தர்களே தேடி வருவோம். நம்பிக்கை இல்லையென்றால், நாங்களே கூறினாலும், இவன் நம்பிக்கை இல்லாதவன், ஒரு சில சோதனைகள் செய்த பின் தான் இவனுக்கு உரைக்க அனுமதி தருவேன் என்பான், இறைவன். ஆதலால் நம்பிக்கையோடு இருங்கள் என்பேன்.
அடியவர்: நிறைய அடியவர்கள் தாங்களை அணுகி அவர்களுக்கான தனிப்பட்ட வாக்கை கேட்டால், வாக்கு கொடுப்பதில்லையே. ஏன் அவர்களையும் வாக்கு கொடுத்து, ஆசீர்வதித்து கரையேற்றி விடக்கூடாதா?
அகத்தியர்: நிறையவே கர்மாக்களை சேர்த்துக்கொண்டவர்கள், தனிப்பட்ட வாக்கு கேட்கும் பொழுது, முதலில் அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள பல விஷயங்களை கூறினால், எதையுமே மனதிருத்தி, ஆத்மார்த்தமாக கூட செய்வதில்லை. பின் இங்கு வந்து அகத்தியனுக்கு எங்கு தெரியப்போகிறது என்று வாக்கு கேட்க வரும் பொழுது மறுபடியும் சுழல விடத்தான் தோன்றும். "செய்" என்று சொன்னால், முழு நம்பிக்கையுடன், இயன்றவரை நிறைவாக செய்ய வேண்டும். பல திருத்தலங்கள் ஏறி ஏறி ஏன் செய்யச்சொல்கிறேன் என்றால், கடை நாள் வரை சேவைகள் புரிய இருக்கின்றதப்பா. ஆதலால், அனைவர்க்கும் வாக்குகள் உண்டு. எப்பொழுது, எங்கு என்பதை யானே தீர்மானிக்கிறேன். அப்பனே! ஒன்றை சொல்கின்றேன். அனைவரையும் ஒன்றை (விளக்கு போடுவது) செய்யச் சொல்லியிருக்கிறேன். அதை செய்யச்சொல் முதலில்.
என் மீது அன்பு காட்டியவர்க்கெல்லாம், அவ் அன்புக்கு கட்டுப்பட்டவன் யான் என்பேன். யானே அவர்களை தேடி வந்து நிச்சயம் சொல்வேன் என்பேன். அவர்கள் என்னை தேடியும் வரவேண்டாம் என்பேன்.
அப்பனே! எம் மீது நம்பிக்கை இருந்தால், யானே சென்று அறுவை சிகிர்ச்சை செய்வேன். முன் காலங்களில் எத்தனை பேருக்கு செய்திருக்கின்றேன் அப்பனே!
சமீபத்தில், திருச்செந்தூரில் கடல் பின் வாங்கிய பொழுது, இரண்டு கல்வெட்டுகள் கிடைத்தது. அவற்றில் ஒன்று சக்தி தீர்த்தமும் இன்னொன்று சிவ தீர்த்தமும் இருந்ததை குறிப்பிட்டன. மொத்தம் அங்கு எத்தனை தீர்த்தம் உண்டு?
இன்னும் நிறைய தீர்த்தங்கள் உள்ளது. கடலுக்குள் மிகப்பெரிய பள்ளம் உள்ளதப்பா. இந்த தீர்த்தங்களில் மூழ்கினால் அனைத்து பாபமும் போய்விடுமப்பா. ஆனால், முருகன் அதை அனுமதிப்பதில்லை.
மனிதன் எதன் மூலம் ஆசை படுகின்றானோ, அதன் மூலம் பாபத்தை அனுபவிக்க விதிக்கின்றான். திருமணம் என்பதும் கர்மாதான். கணவன் அல்லது மனைவி அமைவது வரமா, அல்லது சாபமா என்பதை இறைவன்தான் தீர்மானிக்க வேண்டும். வரமென்றால் பிழைத்துக்கொள்வார்கள். சாபமென்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது.
அனைவர் இல்லத்திலும், திருவாசகம், திருப்புகழ், புராணங்கள் இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தாலே கெட்டது நாடாதப்பா. இவைகள் இருந்தால், அவ்விடத்தில், அதை எழுதியவர்களே இருப்பார்கள். அப்படி இருக்க, கேட்டது எப்படி நாடும்? காலத்திற்கும் இவைகள் அழியக்கூடாது என்று தவமிருந்து, இவைகளை எழுதியுள்ளார்கள்.
மனிதனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பார், ஆனால் திருப்பியும் எடுத்துக் கொள்வார், ஏன் என்றால், அனைத்தும் அவருடையது.
உண்மை ஞானியிடம் சென்று நீ பொய்யன் என்றால், நான் பொய்யன் தான் என்று ஒத்துக் கொள்வான்.
எத்தனை கோடி மனிதர்கள் இப்புவியில். அதில் ஒருவர் கூடவா, நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை பெறவில்லை?
நிச்சயமாக ஆமாம்!
நீங்கள் எதிர் பார்க்கிற அளவுக்கு தங்கமாக இல்லாவிட்டாலும், ஒரு பித்தளையாக கூடவா இல்லை?
செம்பாகவே இருந்துவிட்டு போகட்டும். அப்படி கூட இங்கு யாரும் இல்லை. அப்பனே! நிச்சயம், கர்மம் செய்தவன் தான் உடம்பை பெற்றுக் கொள்வான், அப்பனே!
சக்தி நிறைந்த திருத்தலங்களுக்கு செல்கின்ற ஒருவன், இயல்பாகவே அங்கிருக்கும், சக்தியை உடலுக்குள் வாங்கிக் கொள்கிறான். இதற்காகத்தான் பண்டைய காலங்களில் உலகுக்கு நன்மை செய்திட அனைத்து இடங்களையும் நாடினார்கள்.
கோவிலுக்கு செல்லும் பொழுது, அங்கிருக்கும் நவகிரகங்களை தரிசிக்காமல், எனக்கு இறைவன் போதும், என்று சென்றால், நவகிரகங்கள் ஒரு மனிதனை என்ன செய்து விட முடியும்?
இறைவன் தான் எனக்கு தேவை, நீங்கள் உங்களிடத்தில் இருந்து உங்கள் வேலையை பாருங்கள் என நினைத்து இறைவனை நாடினால், நவகிரகங்களே, விலகி வழி விடும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஓம் அருள்மிகு மருதமலை ஆண்டவன் துணை
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDelete