​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 January 2025

சித்தன் அருள் - 1775 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு!







11/1/2025 வைகுண்ட ஏகாதசி கால சமயத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி. 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே என்னுடைய ஆசிகள் பரிபூரணமப்பா 

அப்பனே வரும் காலத்தில் உயர்வுகள் கிட்டுமப்பா.

இருப்பினும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பல நோய்கள்.... ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் எதை என்றும் தெரியாமல் கூட அப்பனே நிச்சயம் பின் மனிதர்களுக்கு!!!

ஆனாலும் பின் எம்முடைய ஆசிகள் அருள்கள் கிட்டுகின்ற பொழுது அப்பனே சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்படுமப்பா!!

அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பின் நாராயணன் அப்பனே நிச்சயம் பின் காக்கவே அப்பனே பின் அனைவரையும் கூட!!!

ஆனாலும் பின் அள்ளித் தர காத்துக் கொண்டே இருக்கின்றானப்பா!!!

ஆனாலும் அப்பனே அள்ளித் தந்தாலும் அப்பனே மனிதன் அப்பனே எதற் ? எதற்கோ? ஆசைகள் பட்டு அப்பனே பின் அவந்தன் போன போக்கிலே போயிட்டு அப்படி சில கர்மாக்களை கூட அவனே சுமந்து விடுகின்றான்  என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே பின் யோசித்து யோசித்து நாராயணன் அப்பனே பின் அறிந்தும் கூட கொடுக்கின்றான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் அதை நீங்கள் அப்பனே தகுதி உள்ளவராக இருந்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் இல் நாராயணன் இப்பிறப்பிலேயே கொடுத்திடுவான் என்பேன் அப்பனே!!

அதனால் அப்பனே அன்பு கருணை அப்பனே அனைத்தும் உயிர்கள் மீதும். பிற உயிர்களை தன் உயிர் போல் எண்ணுவது!! அப்பனே  நிச்சயம் அன்பு காட்டுவது... அப்பனே நிச்சயம் இருந்தாலே... நாராயணன் அள்ளித் தருவானப்பா..

அப்பனே பின் இவை இருந்தாலே போதுமானதப்பா அப்பனே..

அதாவது அப்பனே தானாகவே வந்து விடும் என்பேன் அப்பனே... மற்றவர்களுக்கு உணவை அளிக்க நிச்சயம் என்பேன் அப்பனே.

அப்பனே பின் இவ்வாறு இல்லை என்றால்... அப்பனே நாம் ஏன் பின் உணவை தர வேண்டும் என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அதனால் யாருக்கும் அப்பனே பின் சமமாக எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் பின் எதை என்று புரிந்தும் கூட அப்பனே... அனைவருக்கும் சமமாக தான் கொடுத்துள்ளான் என்பேன் அப்பனே இறைவன். 

ஆனாலும் அப்பனே அவன் எண்ணம் மனோ நிலைக்கு ஏற்பவே... அவந்தன் வாழ்ந்து வருகின்றான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே... அறிந்தும் கூட. 

இதனால்தான் அப்பனே எண்ணங்கள் அப்பனே பின் உயர்வாக இருக்க வேண்டும் என்பவையெல்லாம் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..

அப்பனே அனைத்தும் சொல்வேன் அப்பனே.. ஒவ்வொரு விஷயங்களை கூட..

எப்படி வாழ்வது?? என்பதை அனைத்தும் அப்பனே நீங்களே உணர்ந்து கொண்டீர்கள் என்றால் அப்பனே நீங்களே உங்களை நிச்சயம் அப்பனே உயர்ந்த நின்று அனைத்தும் பின் செய்வீர்கள்.. அப்பனை இறைவனையும் கூட காணலாம் என்பேன் அப்பனே.

அவை தன் வரும் வாக்கியங்களில் என் பக்தர்களுக்கு அழகாக எடுத்துரைப்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது நாராயணன் அப்பனே.. இங்கு சில வரங்களை அப்பனே

அப்பனே பின் அறிந்தும் கூட கொடுத்துக் கொண்டே இருந்தான்.. ஆனாலும் பின் நிச்சயம் வரங்கள் சில பின் பார்ப்போம்.. பின் எதை என்று அறிந்தும் ஒரு யோசனை நாராயணனுக்கு மனதில் தென்பட்டது. 

அதாவது  பின் வரங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோமே நிறுத்துவோம் என்று. 

ஆனாலும் பின் வரங்களை கொடுப்பதை நிறுத்தி விட்டான் நாராயணன்.. இதனால் பின் பன் மடங்கு இன்னும் இன்னும் மக்கள் வந்தார்கள். 

ஆனாலும் அறிந்தும் கூட ஒரு பக்தன் மட்டும் வந்து கொண்டே இருந்தான்.. வந்து கொண்டே இருந்தான் ஆனாலும் அவந்தனக்கு பல கோடி சொத்துக்கள். 
பின் அனைத்தும் இருந்தது...

அனைத்தும் இருந்தது ஆனாலும் அப்பொழுது கூட வந்து கொண்டே இருந்தான்...

ஆனாலும் நாராயணன் இவந்தனை அதிகமாக சோதித்தான்..

ஆனாலும் இவந்தனக்கு முக்தியை கூட!!... (முக்தி அளிப்பதற்கு நாராயணன் நடத்திய லீலை)

ஆனாலும் அனைத்தும் கூட முதலில் பின் நிலத்தை பின் மற்றொருவன் மூலம் பின் ஏமாற்றி அதாவது.. நாராயணனே போய் ஏமாற்றி... அதாவது அவந்தன் அவன் நிலத்தையும் இழந்து விட்டது...!

இதனால் பின் அது மட்டும் இல்லாமல் நிச்சயம் பின் இல்லமும் கூட அதாவது.. நாராயணனே சென்று நிச்சயம் இல்லத்தையும் கூட (பிடுங்கிக்கொண்டார்) அதாவது இல்லத்தையும் இழந்து விட்டான். 
இழந்தும் விட்டான் பல பல வழிகளிலும் கூட!!  பல பல கோடிகளை சம்பாதித்தான்.  பின் அனைத்தும் இழந்தான் !! பின் சொந்த பந்தங்களையும் இழந்தான் !!

பின் நடுத்தெருவில் வந்து நின்றான்!

அப்பொழுதும் கூட இவந்தன் நிச்சயம் திருமலைக்கு வந்து கொண்டே இருந்தான்.. நாராயணா!! நாராயணா!! என்று!!!

ஆனாலும் நாராயணனுக்கு நிச்சயம் பின் அறிந்தும் கூட என் மீது எவ்வளவு பக்தியா? என்றெல்லாம் பின் நாராயணனுக்கு தென்பட்டது... மீண்டும் அனைத்தும் இவந்தனை சோதித்தோம்... அதாவது இல்லத்தில் உள்ள அனைவரையும் கூட இழக்க செய்தோம்... இன்னும் இவனிடத்தில் என்னதான் எஞ்சி (மீதி) இருக்கின்றது?? என்று பார்ப்போம் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய!!!

அவந்தன் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தான் இங்கு!!!

ஆனாலும் நாராயணனோ நிச்சயம் அதாவது... பிச்சை ஏந்திய நிலையில் அமர்ந்தான். (யாசகன் போல்)

அவன் வரட்டும் என்று!!

பின் அதாவது அறிந்தும் கூட... அமர்ந்திருந்தான் நாராயணன்.. பின் அவ் வழியாக அதாவது இங்கேதான்... நடந்தது அதுவும் கூட!! 

(திருப்பதி திருமலையில் 300 ரூபாய் தரிசனத்திற்கு செல்லும் வழியில் அதாவது ATC ரவுண்டானா சர்க்கிளில் இருந்து சங்கமித்தா ரோடு நாராயணா த்ரீ கிரீன் சர்க்கிள் எதிரில் இருக்கும் இடத்தில் NGC Cotteges entry point  எதிரில் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசித்தார்.. குருநாதர் வாக்குகளை நாராயணன் யாசகன் போல் அமர்ந்து இருந்து லீலை நடத்திய இடம் இந்த இடத்தில் தான்)

பின்  அவ் வழியாக சென்றான்... (யாசகன் வேடத்தில் இருக்கும் நாராயணன் )அவந்தன் பின் கோவிந்தா கோவிந்தா ஏதாவது கொடு என்று!!!....

ஆனாலும் அவந்தன் யோசித்தான்... நம்மிடத்தில் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று!!!

நாராயணன் 

கோவிந்தா ஏதாவது கொடும்!! உன் மனதில் பின் அறிந்தும் !!!(என்ன தோன்றுகின்றதோ அதை கொடு என்று)

அதாவது அவனிடத்தில் இருந்து அனைத்தையும் எடுத்து விட்டான் நாராயணன். 

இருப்பினும் நிச்சயம் ஏதாவது அறிந்தும் கூட பின் அவன் கொடுக்கின்றானா??? என்று கூட (சோதனை) 

ஒன்றுமில்லை அவனிடத்தில். 

ஆனாலும் மீண்டும் கோவிந்தா... ஏதாவது கொடு என்று!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... பின் இப்பொழுது என்ன இருக்கின்றது?? என்று!!

ஆனாலும் நிச்சயம் பின் அதாவது... பின் அவனிடத்தில் அணிந்து இருந்த சட்டை மட்டும் இருந்தது... பின் அதையும் கோவிந்தா. என்று.. அறிந்தும் கூட எனை அழைத்தாய்!!!... என் பெயர் கூட பின் தட்சிணன்.

(தட்சிணன் என்ற பெயர்... அனைவரும் அறிந்த பெயரே!! உதாரணத்திற்கு தட்சிணாமூர்த்தி என்ற பொருளில் தட்சிணன் பெயர் உண்டு)

ஆனாலும் கோவிந்தா!!! என்று அழகாக அழைத்தாய்.. யான் நிச்சயம் பின் நாராயணன் மீது... அளவு கடந்த பக்தியை செலுத்திக் கொண்டே இருக்கின்றேன். 

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் பின் இழந்தேன்.

ஆனாலும் நாராயணனை யான் குறை சொல்லவில்லை. 

ஏன் குறை சொல்லவில்லை??????? என்றால்!!!!!

நிச்சயம் எந்தனுக்கு அனைத்தும் கொடுத்தான் நாராயணன்... யான் சிறுவயதிலிருந்தே இங்கு வந்து கொண்டிருக்கின்றேன்... அனைத்தையும் கொடுத்தான் ஆனாலும் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்...

அதனால் அனைத்தும் அவனுடைய பொருள் தான்!

நீயும் இப்பொழுது கேட்டாயே... அதுவும் கூட என்னுடைய சொத்து இல்லை நிச்சயம்... இந்தா எடுத்துக்கொள் என்று .. சட்டையை கழட்டிக் கொடுத்தான். 

நாராயணன் (யாசகன்) பின் கண்களில் நிச்சயம் நீர் வழிந்தது!!!

நாராயணன் (யாசகன்)

பின் அறிந்தும் கூட மீண்டும் பின் கோவிந்தா... அறிந்தும் கூட இதை நீயே வைத்துக்கொள்!!!

தட்சிணன் 

இல்லை!! இல்லை!! இதை பின் ஆனாலும்.. நிச்சயம் பின் போதும் எதை என்று அறிய அறிய...


நாராயணன் (யாசகன்)

பின் அதாவது நிச்சயம் அவந்தனை பார்த்து!! கோவிந்தா!!!  பின் நன்முறையாகவே அறிந்தும் கூட.... எங்கு செல்கின்றாய்???? என்று!!

தட்சிணன் 

இதோ... இங்கு வந்து கொண்டே இருப்பேன் சிறு வயதில் இருந்தே... அனைத்தும் கொடுத்தான் நாராயணன் அனைத்தும் எடுத்தான் நாராயணன். 

ஆனால் நிச்சயம் இவந்தனைக் (நாராயணனை) கூட... யான் விடவில்லை!! என்று!! 

 அதனால் நிச்சயம் அதாவது பின் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த நாராயணன்... அவந்தனை பார்த்து.... பின் பைத்தியக்காரனே... பின் இங்குதான்.. வந்து கொண்டிருக்கிறாய்... நாராயணன் அனைத்தும் கொடுத்திருக்கின்றான் என்றாய்.... நாராயணன் அனைத்தையும் எடுத்துக் கொண்டான் என்றாய்... பின் ஏன் நீ நாராயணனை எல்லாம் வணங்குகின்றாய்??? என்று!!

தட்சிணன். 

நீ பின் அப்படி எல்லாம் சொல்லாதே!!!! பின் ஒவ்வொருவருக்கும் கூட நாராயணன் கொடுப்பான் நிச்சயம்!!

அதை தக்க அதாவது நல் மனதாகவே பின் காத்துக்கொண்டாலே போதுமானது.. இன்னும் உயர்வுகள் ஏற்படும் என்று. அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட.


ஆனாலும் நாராயணன் கூட!! (யாசகன்)

தட்சிணனைபார்த்து
 நீ கூட நல் மனதாக தான் இருந்தாய்!! பின் ஏன் கஷ்டம்??? என்று.... நாராயணனே அறிந்தும் இதை தன் பின் விவரிக்காமல்! 

ஆனாலும் நிச்சயம் அதாவது பின் பிறந்த பொழுது அதாவது...யானே அறிந்தேன் தாய் தந்தையர் யார் என்று!!
ஆனாலும் அவர்களும் மறைந்தார்கள்... ஆனாலும் நிச்சயம் பின் அனைத்தும் மறைந்தது.. 

(எதுவுமே நிலையில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்து செல்ல இறைவன் மட்டும் மறையாமல்)

ஆனாலும் நாராயணன் எப்பொழுதும் மறையவில்லையே!!!!

அழகாக சிறுவயதில் இருந்து யான் எப்படி பார்த்துக் கொண்டிருந்தேனே அப்படியே தான் நாராயணன் இருக்கின்றான். 

இதனால் மிகப்பெரியவன் இறைவன்... அழியாதவன். பின் அனைத்திலும் இருக்கின்றான் என்றெல்லாம். 


ஆனாலும் மீண்டும் நாராயணன் (யாசகன்)... அவந்தனை பார்த்து!!

பைத்தியக்காரனே... இன்னும் இல் நாராயணனை வணங்குகின்றாயா??? பின் அதாவது நீ வணங்குகின்றாய் அல்லவா!... உன் வயதை நாராயணன் நீட்டிக்கலாம் அல்லவா!!!

அதாவது நீ சொன்னால் பல பல வழிகளில் கூட அதாவது நிலத்தையும் இழந்தேன் இல்லத்தையும் இழந்தேன் பின் சொந்த பந்தங்களையும் இழந்தேன் என்று!!!

ஆனாலும்  இனியும் இழக்க என்னதான்??? இருக்கின்றது என்று!!!

ஆனாலும் நீ நிச்சயம் அங்கு சென்றால் நாராயணனை பார்த்தால் உன்... உயிரை கூட நாராயணன் எடுத்து விடுவான் என்று!!!

பின் அடடா!!!  என்று அதாவது பக்தனுக்கு வந்தது கோபம்!!!

பின் கோவிந்தா !!! உன் வாயை மூடு!!!... இப்படி எல்லாம் நாராயணனை குறை சொல்லிக் கொண்டிருக்காதே...

நிச்சயம் நாராயணன் மிகப்பெரியவன்... எந்தனுக்கு மட்டுமே தெரியும் அவந்தன் லீலைகள் என்று. 


ஆனாலும் நாராயணன் மறைமுகமாக (யாசகன்) இப்படியும் ஒரு பக்தனா??!! என்று!! (நெகிழ்ந்து)


ஆனாலும் மனிதர்கள் இப்பொழுதெல்லாம் ஏதும் தராமல் இருந்தால் இறைவனை... இப்படித்தான் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்...

ஆனாலும் பின் கொடுப்பதும் இறைவன் பின் எடுப்பதும் இறைவன்!!!

ஆனாலும் அவனுக்குத்தான் உரிமை உண்டு!!

அதாவது உயிரும் பின் இறைவனுக்கு சொந்தம்.. அதாவது உடம்பும் இறைவனுக்கு சொந்தம்... இதனால் பின் மனிதர்களால் ஒன்றும் செய்ய இயலாது செப்பி விட்டேன்!!

இதனால் இறைவன் எப்பொழுது கொடுப்பான்?? எப்பொழுது எடுப்பான்!??? என்பதை எல்லாம் நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய பின் மனிதர்களுக்கு தெரியாது!!

அதாவது பின் நடுவில் கூட பின் அதை இதை.. என்றெல்லாம் இதை பயன்படுத்துவோமா???? அதை பயன்படுத்துவோமா...??? என்றெல்லாம்!!! 

இன்னும் நல்ல நேரங்கள் தீய நேரங்கள் என்றெல்லாம் மனிதன் பின் தானாகவே...

.(எண்ணிக் கொண்டு நடந்து வருவது)

இதுதான் மூடநம்பிக்கை...

இவ் மூடநம்பிக்கைகளில் செல்லச் செல்ல நிச்சயம் வருத்தங்கள் இன்னும்.. தோல்விகள் இன்னும் பின் ஒன்றும் நடக்காமை.

இதனால்தான் பின் இறைவன் இங்கு பொய் என்ற நிலைமைக்கு... மனிதன் வந்து படுகின்றான். 

ஆனால் இறைவன் மெய்!!
மனிதன் பொய்!!

மனிதன் பின் பொய்யாக இருப்பதால்தான் பொய் சொல்லி நடித்துக் கொண்டு நிச்சயம் பின் இறைவனையே இல்லை!!  என்று கூட பின் சொல்ல வைக்கின்றான் மனிதன் மனிதனைக் கூட. 

இதனால் நிச்சயம் மீண்டும் நாராயணனுக்கும்.. தட்சிணனுக்கும் கூட. 

இங்கு நாராயணன் பிச்சைக்காரன் என்று தான் யான் அறிந்தும் கூட (யாசகன்) 

ஆனாலும் அவந்தனக்கும் பக்தனுக்கும் கூட வாக்குவாதங்கள். 

ஆனாலும் நாராயணன் சொன்னான் ஒரு வார்த்தை...

நிச்சயம் உந்தனக்கு பின் இவ்வளவு தந்தானே நாராயணன்!!! பின் நிச்சயம் ஏன் உன்னை காக்கவில்லை????

நிச்சயம் பின் நாராயணன் இல்லை!!.... என்று!!!

அதாவது நாராயணனே இல்லை என்று நாராயணனே (யாசகன்) கூறிக் கொண்டான்.

(தட்சிணன்.)... ஆனாலும் பக்தனோ.... வாயை மூடு!!!(யாசகனைப் பார்த்து).. இன்னொரு முறை நீ பின் அறிந்தும் கூட பின் நாராயணன் இல்லை என்று சொன்னால்... நிச்சயம் யான் உன்னை அடிப்பேன் என்று கூற!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரிய... நிச்சயம்... அதாவது இருவரும் சண்டையிட்டனர்...


நாராயணன் (யாசகன்)

அறிந்தும் கூட நாராயணன் இல்லை... நம்பி விடாதே என்றெல்லாம்..

ஆனாலும் பின் பலமாக பின் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட... நிச்சயம் பின் அதாவது பின்...

"""""பளார்!!!!!!!....... என்று... வாயின் மீது கூட நெற்றியின் மீது கூட அடி விழுந்தது (யாசகன் வேடத்தில் இருந்த நாராயணனுக்கு)..
என் நாராயணனை பற்றி பேசுவதற்கு நீ யார்?? என்று!!


ஆனாலும் மறைமுகமாக பின் நாராயணன் """"ஓ !!!!!!! என்று அழுதுவிட்டான்..

ஆனாலும் பாசங்கமாக(நடிப்பாக) அழுது கொண்டே இருந்தான் !!.. பின் ஆனாலும் அடித்துக்கொண்டே இருந்தான்!! அடி விழுந்து கொண்டே இருந்தது

பின் முகம் எல்லாம் வீங்கியது!!...

நிச்சயம் நீ இன்னொரு முறை வருவோரிடமெல்லாம் நாராயணன் இல்லை என்று நீ சொன்னால்.... இவ்வாறுதான் அடி விழும் !! இப்படி தான் நடக்கும் என்று..

மீண்டும் பின்... யான் பார்க்க செல்கின்றேன் என் நாராயணனை கூட... என்று நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று கூட 

மீண்டும்.. அதாவது முன்னே நின்றான்!!!(கருவறைக்கு சென்று பழையபடி நின்றார் நாராயணன்)

ஆனாலும்(ஆனந்த நிலையத்தில் மூலஸ்தானத்தில் பூஜை செய்பவர்கள்) அங்கே இருந்த அனைவரும் கூட நிச்சயம் ஏன்.. இவ்வாறெல்லாம்??
என்றெல்லாம் அதாவது நாராயணனுக்கு பூஜை செய்பவர்கள் எல்லாம் பின் அதிர்ச்சிக்குள்ளாகினர்!! .

ஏன் எதற்கு பின் இவ்வாறெல்லாம்... வீங்கி உள்ளது??? வாய் வீங்கி உள்ளது!... அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் அனைவருக்குமே ஆச்சரியம்தான்!!! ஆனாலும் அவர்களும் அமைதியாகிவிட்டனர். 

ஆனாலும் பக்தன் நேராகச் சென்றான்... அறிந்தும் இவ் பக்தன் ஆனாலும்.. பின் வாயும் வீங்கி உள்ளது!!!.... பின் எங்கெல்லாம்... இவன் அடித்தானோ அங்கெல்லாம் வீங்கி இருந்தது) ( நாராயணன் சிலையில்)... ஆனாலும் இவன் அறிந்தும் கூட மனதில்.... வந்தது யார்? என்றும் கூட உணர்ந்து விட்டான்!!!!!!!

(யாசகன் ரூபத்தில் வந்து அடி வாங்கியது நாராயணன் தான்... அந்த அடி வாங்கிய தோற்றத்தில் மூலஸ்தானத்தில் நின்று இருந்த நாராயணன் தரிசனத்தை கண்ட பிறகு பக்தனுக்கு புரிந்து விட்டது)


நாராயணா!!!!!!!!.... நீதானா வந்தது!?!?!?

ஏன் இந்த சோதனை??? என்றெல்லாம்!!!

உன்னையா யான் அடித்தேன்??????.... என்றெல்லாம்... நிச்சயம் ஓடோடி வந்தான் இங்கு.

(மறுபடியும் இந்த இடத்திற்கு அதாவது
.மீண்டும்!!! யாசகன் எந்த இடத்தில் அமர்ந்து இருந்தாரோ சண்டை எங்கு நடந்ததோ அதே இடத்திற்கு மூலஸ்தானத்தில் இருந்து திரும்பி இந்த இடத்திற்கு ஓடி வந்தார் அந்த பக்தன்!)

(. அதாவது மேலே குறிப்பிட்டுள்ள இடம் தரிசனத்திற்கு செல்லும் வழியில் இருக்கின்ற இடம்)

ஆனாலும் இங்கு நாராயணனை இங்கு காணவில்லை!!!!


இதுதான் அப்பனே ஒவ்வொரு மனிதனுக்கும் கூட இறைவன் காட்சி அளித்துக் கொண்டே இருக்கின்றான்.... ஆனால் அதை மனிதன் உணர்வதே இல்லை!!!

அப்பனே அதாவது பக்குவங்கள் பட வேண்டும்.

. ஆனாலும் அறிந்தும் கூட மீண்டும் சென்றான் நாராயணா!! நாராயணா !! என்று...(மூலஸ்தானத்திற்கு) 

ஆனால் நிச்சயம் என் நாராயணன் நிச்சயம் என்னிடத்தில் பேசினான் என்று...

 பின் அங்கு செல்ல அங்கு இருந்த காவலாளிகள்... இவன் பைத்தியக்காரன் என்று இவனை தூக்கி வீசினார்கள் பின் குளத்தில்...(புஷ்கரணி) 

ஆனாலும் மீண்டு எழுந்து வந்தான்.... ஆனாலும் எழுந்து வந்து நாராயணா நாராயணா... பின் கோவிந்தா...... பின் நீ என்னைக் கூட கோவிந்தா என்று அழைத்தாயே...

 யான்!!!!!. நீ யார்? என்பதை தெரியாமல் கூட!!!!...........‌

ஆனாலும் அறிந்தும் எதை என்று கூட மீண்டும்... காவலாளிகள் இவனை அடித்து நொறுக்கி நிச்சயம் பின் மயக்க நிலையில் பின் ஆனாலும் அறிந்தும்... பின் எதை என்று அறிய... ஆனாலும் மீண்டும் நிச்சயம் குளத்தில் பின் தூக்கி எறிந்தனர். 

ஆனாலும் பின் நாராயணன் மறைமுகமாக வந்து... கோவிந்தா என்று அழைத்தான். 

நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய புரிய... கோவிந்தா!! என்று கெட்டியாக அணைத்து கொண்டான்.

நிச்சயம் யார் கோவிந்தன்? என்று... யான் கோவிந்தன் இல்லை என்று அங்கு கூட வாக்குவாதம்!!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் நிச்சயம்... நீ என்னுடைய நாராயணன் தான் !!
ஏனென்றால் இப்பொழுது பலமுறை உன்னை பார்ப்பதற்கு முயற்சித்தேன்.

 ஆனால் அனைவரும் என்னை நிச்சயம் விரட்டி அடித்தார்கள்!!! இதோ பார் காயங்கள்!!... என் கால்களும் வரவில்லை கைகளும் வரவில்லை... இதோ இப்பொழுது இறக்கப் போகின்றேன்...

 இப்படி இறக்கப்போகும் நேரத்தில் யார் என்னை பின் காப்பார்கள்? என்றால் நிச்சயம்... அது நிச்சயம் இறைவனாக தான் இருக்க வேண்டும்!!! என் நாராயணனாகத்தான் இருக்க வேண்டும்!!!..

 அது நீதான்!!! 

நீதான் எந்தனக்கு வேண்டும் என்று கெட்டியாக பிடித்துக் கொண்டான். 

நாராயணனே.. அறிந்தும் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று அறிய அறிய இது கூட..இவ் வைகுண்ட ஏகாதசி... எதை என்று புரியப் புரிய வைகுண்ட திருநாளில் கூட நடந்தது என்பேன். 

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிந்தும் கூட இதனால் நிச்சயம் உந்தனுக்கு என்ன தேவை?? என்று பக்தனை பார்த்து நாராயணன் கேட்க!!!

எந்தனக்கு ஒன்றுமே தேவையில்லை!! அதாவது இக்குளத்திலேயே  யான் இருக்க வேண்டும்... வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் சில கர்மாக்களை எடுத்து நிச்சயம்... அதாவது நல்லதாக கொடுக்க வேண்டும்.. என்ற வரத்தைக் கொடு!! என்று !!

நாராயணன் 

எடுத்துக்கொள் என்று!!! நீ என் பக்தன் தானே என்று!!(வரத்தை கொடுத்து விட்டார்) 

அப்பனே இப்படித்தானப்பா!!
நாராயணன் கருணை மிகுந்தவன். 

ஆனால் அப்பனே மனிதன் இதை புரிந்து கொள்வதில்லை.... உடனடியாக அனைத்தும் கிடைக்க வேண்டும்.. பின் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம்.

நிச்சயம் இறைவன் கொடுக்க மாட்டானப்பா!!

நிச்சயம் இறைவன் வேலைக்காரன் இல்லை.. அப்பனே. 

சோதனைகளுக்குப் பிறகே நிச்சயம் அப்பனே அனைத்தையும் கொடுப்பான்!!! எதை என்று கூட! 

இதனால் அப்பனே அவ் பக்தன் அங்கே தங்கி  இருந்து (புஷ்கரணி குளத்தில்) அங்கே பின் வருவோருக்கெல்லாம் சில கர்மாக்களை எடுத்து அப்பனே... நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அப்பனே. 

இதனால் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே... இன்னும் எவை என்று புரியாமல் இருந்தாலும்.. நிச்சயம் தன்னில்.. புரிய வைக்கின்றேன் வரும் காலங்களில் கூட அப்பனே நல் முறைகளாக!!

இதனால் அப்பனே பின் நாராயணன் கொடுப்பதில் வல்லவனப்பா!!!

ஆனாலும் அப்பனே அதைப் பெற்றுக் கொள்ள அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய மனிதனுக்கு அப்பனே நிச்சயம் புத்திகள் இல்லை. 

நிச்சயம் அப்பனே இன்னும் அப்பனே.. பின் மனிதன் பின் நல்மனதாக இருக்கவில்லை அப்பனே..

 அதனால்தான் அப்பனே நிச்சயம் நாராயணன் கொடுத்தாலும் அதை உபயோகிக்க தெரியாமல்.. ஏதோ ஒரு விதத்தில் உபயோகித்து அதை அழித்துக் கொண்டு மீண்டும் நாராயணத்தில் வந்தால் நிச்சயம் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் எதை என்று கூட நாராயணன் ஒரு முறை கொடுப்பானப்பா. 

நிச்சயம் அதை தன் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டு... மனம் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய... அப்பனே மனம் தாராளமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே இதனால்தான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே எதற்கு ஏன் பிறந்தோம்??? என்றெல்லாம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே. 

அதை தெரிந்து கொண்டால் உன்னை வெல்லலாம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அதை தெரிந்து கொள்ளாமல் அப்பனே மற்றவரிடத்தில் (போலி சாமியார்களிடம்) சென்றால் அவை தன் அதாவது அவன் உன்னை வென்று விட்டு.. அவந்தன் நிச்சயம் அப்பனே பின் ஏமாற்றுவான் என்பேன் அப்பனே... பக்திக்குள் நுழைந்து. இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே உண்மையான அப்பனே அன்பும் பின் பாசமும் இருந்தால் அப்பனே இறைவன் அப்பனே உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் பொழுது கூட அப்பனே நன் முறைகளாக (புஷ்கரணி தீர்த்த) குளத்தில் அழகாகவே.. அவன் (பக்தன் தட்சிணன்) பின் உயிரோடு தான் இருந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே. 

பின் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து அப்பனே நாராயணனிடத்தில் அனுப்பி அனைத்தும் செய்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நாராயணனுக்கு இணை அப்பனே எதை என்று அறிய அறிய... இன்னும் இன்னும் அப்பனே நாராயணன் லீலைகளைப் பற்றியும் சொல்வேன் இன்னும் ஏழு மலைகளைப் பற்றியும் சொல்வேன்... அப்பனே ரகசியங்கள் இன்னும் என்னென்ன ஒளிந்துள்ளது??? என்பதை எல்லாம் இங்கே சொல்வேன் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நன்குணர்ந்து அப்பனே பின் அனுமானுடைய லீலைகளையும் கூட அடுத்தடுத்து அப்பனே பின் சொல்லிக் கொண்டே வருவேன் என்பேன் அப்பனே.

பின் அனுமானுக்கும் இவந்தனுக்கும் இன்னும் என்னென்ன? சம்பந்தங்கள்.!! என்ன ஏது என்று உணர... அப்பனே அனைத்தையும் சொல்வேன் என்பேன் அப்பனே இவ்(ஏழு) மலைகளைக் கூட.... பெரிய பெரிய ரகசியங்கள் அப்பனே நிச்சயம் இவ் (ஏழு) மலைகளில் தான் தங்கி உள்ளது பல விஷயங்கள் எல்லாம் அப்பனே !!

இதை உணர்ந்து கொண்டால் அப்பனே வாழ்க்கையில் தோல்விகளே இல்லை என்பேன் அப்பனே... வெற்றிகளை அப்பனே பின் நிச்சயம் குவித்து!!!

இதனால் அப்பனே வைகுண்டம் அப்பனே நிச்சயம் அப்பனே...இவ் 10 நாட்களும் (வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்) கூட நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய ஒவ்வொரு நாளையும் கூட அப்பனே நினைத்து நினைத்து அப்பனே இல்லத்திலும் கூட சரியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று கூட பின் வேங்கடவனையும் கூட தட்சிணனையும் (பக்தன் பெயர் தட்சிணன்) கூட!!! நினைத்து !!!

நிச்சயம் துளசி இலைகளை அப்பனே பின் இட்டு அப்பனே சிறிது மஞ்சளும் இட்டு நிச்சயம் பின் இல்லத்திலே நீராடி !!!

(குளிக்கும் நீரில் துளசியின் மஞ்சளையும் இட்டு பெருமாளையும் பக்தன் தட்சிணனையும் நினைத்து வணங்க வேண்டும் இந்த பத்து நாட்களுக்கு)

நிச்சயம் தட்சிணனே!!!! நிச்சயம் உன்னை போன்ற பக்தி எங்களுக்கும் வேண்டும் என்று நினைத்து!!! பிரார்த்தனை செய்து அப்பனே பின் நீராடி வந்தாலே இல்லத்திலே... அதாவது பச்சைக் கற்பூரமும் இட்டு அப்பனே நிச்சயம் அப்பனே சில தொந்தரவுகள் அதாவது தீய சக்திகள் விலகி ஓடும் அப்பா..

அதுமட்டுமில்லாமல் அப்பனே நல்முறையாகவே அப்பனே அவை மட்டும் இல்லாமல்... இங்கு (திருமலை திருப்பதி) எப்பொழுது வருகின்றீர்களோ அப்பொழுதெல்லாம்...(புஷ்கரணி தீர்த்தத்தில்) குளத்தில் உள்ள நீரை சிறிது எடுத்துக்கொண்டு அப்பனே பின் தட்சிணா!! தட்சிணா !!!என்று அழைத்துக் கொண்டு நிச்சயம் அப்பனே இல்லத்தில் கூட சரியாகவே அப்பனே அவ் நீரை பச்சை கற்பூரமும் துளசியும் கூட மஞ்சளையும் அப்பனே சிறிதளவு அப்பனே பின் புற்று மண்ணையும் கூட எடுத்து அப்பனே சேகரித்து வைத்து அப்பனே பின் அதாவது நீராடுகின்ற பொழுதெல்லாம் சிறிது சிறிதாக இட்டு... தட்சிணனே !! தட்சிணனே!! என்றெல்லாம் பின் நினைத்துக் கொண்டு பின் நீராடினால் அப்பனே!!! பல பாவங்கள் நீங்குமப்பா!!

அப்பனே நிச்சயம் பரிசுத்தமாக இன்னும் அப்பனே பக்திக்குள் நுழைந்து அப்பனே பின் வெற்றிகளும் அப்பனே பின் வருமப்பா!!

அப்பனே இன்னும் வெற்றியின் ரகசியம்... இன்னும் எப்படி எல்லாம் பாவத்தை போக்குவது??? என்பதையெல்லாம் அப்பனே!!!....

 அனைவரிடத்திலும் புண்ணியம் மிகுந்து நிற்கின்றது !!

அதை எப்படி? நிச்சயம் வெளியே கொண்டு வருவது? என்பதையெல்லாம் அப்பனே வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு சொல்லி!!!!

 அப்பனே உங்களையே நீங்கள்... வெல்வீர்களாக!!!

அப்பனே ஆசிகள்!! ஆசிகள் !!

மற்றொரு வாக்கையும் கூட பெருமானை பற்றி அழகாக உரைக்கின்றேன் அப்பனே.. 

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. வணக்கம் 🙏
    Any ladies or any group including ladies, who are planning to go to Mahakumbhamela please let me know, I would like to join 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. அப்பா அகத்திய மாமுனியே நன்றி நன்றி நன்றி... இது வரை யாரும் அறியாத ரகசியங்களை எல்லாம் உரைத்து வாழ்வில் உயர வழிகாட்டும் உங்களுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏 பக்தியே சக்தி

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete