30/12/2024 மார்கழி அமாவாசை திதி அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். சாவித்திரிகாட் சக்தி பீடம். ரத்னகிரி மலை புஷ்கர். அஜ்மீர் மாவட்டம் ராஜஸ்தான்.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே நிச்சயம் ஒவ்வொரு ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றையும் கூட இனி வரும் காலங்களில் ஒவ்வொரு சித்தனும் வந்து செப்புவான் என்பேன் அப்பனே
இப்பொழுது அப்பனே ஒரு ரகசியத்தை இதை இங்கிருந்தே விளக்கப் போகின்றேன்.
அதாவது விசுவாமித்திரன்..
அப்பனே பின் பன்மடங்கு அப்பனே இன்னும் ஞானிகள் இருந்தார்களப்பா.
ஆனாலும் அவர்களைப் பற்றி எல்லாம் தெரியாமல் போனதப்பா.
இவ்வாறு தெரியாமல் போனதால்தான் அப்பனே நிச்சயம் கஷ்டங்களப்பா.
ஆனாலும் நிச்சயம் அப்பனே வரும் காலத்தில் சித்தர்கள் அவையெல்லாம் எடுத்து வருவார்களப்பா.
அப்பனே இதனால் நிச்சயம் அவரவர் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இன்னும் அப்பனே தவத்தில் தான் இருக்கின்றார்களப்பா!!
ஞானிகள் கூட ரிஷிகள் கூட இன்னும் அப்பனே
இதனால் அங்கங்கு சென்று தரிசித்து வந்தாலே போதுமானதப்பா
நீங்கள் அங்கெல்லாம் சென்றாலே அப்பனே அவந்தன் அதாவது கண்விழித்து பார்ப்பானப்பா..
இதனால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் போகுமப்பா!!
ஆனாலும் அதைக் கூட பின் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே
இதனால் எதை என்று உணராமலே இருந்தாலும் அதனால்தான் பக்குவங்களை உங்களுக்கு கொடுத்து கொடுத்து அப்பனே அதாவது அனைவருக்குமே பக்குவங்களை கொடுத்து கொடுத்து அப்பனே நிச்சயம் பல வழிகளிலும் கூட அப்பனே பின் அதாவது எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்...யானே!!! அதாவது சித்தர்களே அனைவரையும் அழைத்துச் செல்வோம் என்போம் அப்பனே.
அவ்வாறு அங்கு தியானங்கள் செய்கின்ற பொழுது அப்பனே பல பாவங்கள் விலகி ஓடுமப்பா!!
அப்பனே நிச்சயம் இவ்வாறு அப்பனே அதாவது....
கன்னியாகுமாரி தன்னில் அப்பனே நிச்சயம் பின் விஸ்வாமித்திரன் பல வழிகளிலும் கூட (வழி) காட்டிக் கொண்டிருந்தான் பல மக்களுக்கு..
ஆனாலும் அறிந்தும் கூட பல வழிகளில் மக்களுக்கு இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் பாதி பேர் பின் நன்றாக செய்தார்கள்... பாதி பேர் நிச்சயம் இவன் பைத்தியக்காரன்... இவன் என்ன??? பின் சொல்வது!?!?!?!?!?!
இதனால் இவன் சொல்வதெல்லாம் பொய்.. இதனால் யாரும் நம்பி விடாதீர்கள் என்று!!!
ஆனாலும் பின் பாதி பேர் அதாவது பின் நல்லதை தானே சொல்கின்றான் என்று!!!
ஆனாலும் பின் தீயவர்கள் நிச்சயம் அதுவும் கூட கலியுகத்தின் ஆரம்பம் அதுவும் கூட.
இதனால் பின் அதாவது தீயவர் கூட்டங்கள் நிச்சயம் நல்லோர்களை மாற்றி அனைவருமே நிச்சயம் கேலியும் கிண்டல்களும் கூட விஸ்வாமித்திரனை செய்து கொண்டிருந்தார்கள்...
பின் பொய் இவன்!!!!
இவன் சொல்வதெல்லாம் பொய்!!
அதாவது பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இவை என்று கூட முடியும் (ஜடாமுடி) கூட இவந்தன் விட்டிருந்தால்.. இவன் ஞானியா????? இவன் சொன்னாலே நடந்துவிடுமா?? என்று!!
ஆனாலும் விசுவாமித்திரன் மேலே உற்று நோக்கினான்!!
இறைவா!!!... என்னை ஏன் படைத்தாய்????
நிச்சயம் நல்லதை தான் யான் சொன்னேன்.
ஆனாலும் நிச்சயம் இங்குள்ளவர்கள்.. இப்படி செய்து விட்டார்களே.. என்ன இதற்கு????(பதில்)
இதனால் யான் தவத்தில் செல்ல போகின்றேன்.. அதாவது உன்னை நினைத்தே!!! நிச்சயம் தவத்தில் செல்ல போகின்றேன் என்று!!
ஆனாலும் மீண்டும் ஒரு யோசனை வந்தது.
ஏன்?? தவத்திற்கு செல்ல வேண்டும்???
யாம் நல்லதே தானே சொன்னோம்!!!.. என்று!!
ஆனாலும் இறைவா!!! வா!!
நிச்சயம் இறைவா !! வா!!
என்றெல்லாம்!!
ஆனாலும் அறிந்தும் கூட பின்... வருகின்றாயா?!!! வர மாட்டாயா!??? என்றெல்லாம்!
ஆனால் இறைவன் நிச்சயம் பின் அறிந்தும் ஆனாலும் அதனுள்ளே மக்கள் அனைவரும் தீய சக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் விசுவாமித்திரனோ!?.... நிச்சயம் இறைவா!!!
இருப்பதே யான் ஒருவன்!!!... ஆனால் இவ்வாறு செய்தால் என்ன லாபம் என்று???
ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் இதை என்றும் கூற நிச்சயம் தவத்தில் பின் மூழ்கினான் விசுவாமித்திரன்.
நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் பின் அதாவது பல மாதங்கள் ஆயிற்று!!!
ஆனாலும் நிச்சயம் கூட பின் பார்வதி தேவியும் கூட... ஈசனிடம்...
. உன் பக்தன் தானே!! இவன்!!!!
ஆனாலும் இவந்தன் தவங்கள் மேற்கொண்டு இருக்கின்றான்... இவந்தனுக்கு ஏதாவது ஒரு வழியை விடும் என்று.
ஈசனும்
நிச்சயம் தேவியே... கருணை நிச்சயம் உண்டு.. என் பக்தன் தான் இவன்!!
இவந்தனும் கூட நல்லோர்களுக்கு!!!......
அனைவரையும் கூட நல்லோர்கள் ஆக்க பார்த்தான்...
ஆனாலும் நிச்சயம் முடியவில்லை..
பார்த்தாயா தேவியே இதுதான் கலியுகத்தின் கட்டாயம்.
இதனால் நல்லதை சொன்னால் இங்கு பின் அறிந்தும் எதை என்று கூட யாரும் ஏற்க மாட்டார்கள்.
ஆனாலும் இவன் என்னதான் செய்யப் போகின்றான் என்று யாமும் அறிவோம் !!! நீயும் பார்!! என்று ஈசன்!!!
ஆனாலும் பின் தவத்தின் பின் வலிமை கூட இன்னும் இன்னும் கூட... எதை என்று அறிய அறிய ஆனாலும்... இன்னும் எவை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் பின் இவ்வாறு என்பதையெல்லாம்...
ஆனாலும் பின் அதற்குள்ளே மக்கள் பல பேர்... பின் வந்திட்டு பார்த்திட்டு... நிச்சயம் இவன் தவத்தில்.. மூழ்கினானா... என்று பார்ப்போம் பின்.. இவன் தவத்தினால் என்ன ஆனது என்று... செருப்புகளையும் சிலர் வீசினர்.
ஆனாலும் பின் அறிந்தும் கூட ஆனாலும்.. பின் அதாவது நினைத்து நினைத்து பின் இறைவனை நினைத்து நினைத்து... மீண்டும் இவனை கூட... அதாவது பின் சாட்டையால் இன்னும் எதனை எதனையோ பயன்படுத்தி அதாவது பின் தகாத வார்த்தைகளை எல்லாம் கூறினார்கள்.
ஆனாலும் எதற்கும் விசுவாமித்திரன் செவி சாய்க்கவில்லை..
இறைவன் ஒருவனே என்று நினைத்து... இறைவா!!!
ஏனென்றால் பின் உன் சக்திகளை கொடுத்தால்தான் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் இவந்தனக்குள்ளே சக்திகள் இருந்தது.
ஆனாலும் இறைவனை நினைத்து நினைத்து தவங்கள் பல!!! பல !! பல!!
ஆனாலும் பல ரிஷிகளும் கூட இவந்தனை பார்த்தனர்.
நிச்சயம் விசுவாமித்திரனுக்கு இது தேவையா???? நல்லதைச் செய்ய அதாவது நல்லதை செய்ய சென்று பின் இவ்வாறு ஆகிவிட்டானே என்று...
ஆனாலும் மனக்கலக்கங்கள் பின் இவ்வாறெல்லாம் நிச்சயம் என்று மனிதனின்.. அதாவது முட்டாள்தனமே இவை.... அறியாமலே இவை தன்.
நிச்சயம் அறிந்து கொண்டால் இப்படி செய்வார்களா? என்று!!
ஆனால் மீண்டும் மீண்டும் பின் எதனையும்!! அதாவது.. இவனை நிச்சயம் கூர் முனையால் (வேல் ஈட்டி) நிச்சயம் தாக்கினர்.... வில்லால் கூட குத்தினர்.
ஆனாலும் அறிந்தும் இறைவன் அருளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..
ஆனாலும் சிலர் உணர்ந்தனர்.. சிலர் உணர்ந்து விட்டு இவந்தன் நிச்சயம் இவ்வாறு செய்கின்றானே... நிச்சயம் பாவமன்னிப்பு தான்...யாம் கேட்க வேண்டும் என்று..
நிச்சயம் இறைவா!!! இவன் தவத்தில் மூழ்கியுள்ளான்... இவந்தனுக்கு நிச்சயம் சேவைகள் செய்ய என்றெல்லாம் பாதுகாப்பாக இருந்தனர்.
பின் ஆனாலும் ஈசனும்கூட
பார்வதி தேவிக்கு வந்தது கோபம்!!!....
ஈசனாரே!!!... நிச்சயம் இப்படி எல்லாம் நீ செய்யக்கூடாது!!!!!
அறிந்தும் ஏன் அறிந்தும் கூட இப்படி எல்லாம்... உன் பக்தன் தானே!!!
இவந்தனுக்கு நிச்சயம் ஆற்றலை கொடு... நிச்சயம் அதாவது இவன் என்ன செய்தான்???
தீயதை ஏதாவது செய்தானா?????
நல்லதை தானே செய்தான்!!!
இவந்தனுக்கே இவ் தண்டனைகள் என்றால் நிச்சயம்... அறிந்தும் அறிந்தும் கூட.
ஈசனும்
இதனால் நிச்சயம் தாயே தேவியே நில்லும்!!
நிச்சயம் அறிந்தும் கூட பார்வதி தேவியே அறிந்தும் எதை என்று கூட கலியுகத்தில்.. இப்படித்தான்.
நல்லதை ஏற்க மாட்டார்கள்.. நல்லதை சொன்னாலும் நிச்சயம்.. இவன் பைத்தியக்காரன் என்று கூறுவார்கள்..
இதனால் பின் ஆட்டத்தை பார்!!!
இனிமேல் யான் நிச்சயம் அதாவது இவனிடத்தில் நேரடியாகவே செல்ல போகின்றேன் என்று.
பின் அதாவது அறிந்தும் கூட எதை என்று புரிய நிச்சயம்... அதாவது பின் தர்மம் ஏந்துபவன் போல் பின் நிச்சயம் ஈசன் அவனிடத்தில் செல்ல...
நிச்சயம் பின் அதாவது பின் முனிவரே!!!!!.... தர்மம் தா என்று!!!
ஆனாலும் உடனடியாக விசுவாமித்திரன் பின் அறிந்தும் இதை என்று அறிய....
ஈசனே!!!.... வந்து விட்டாயா!!!!... யான் நீ யார் என்பதை தெரிந்து கொண்டேன்!!!
நிச்சயம் நீ அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் ஏன் எதற்கு எவை என்று புரிய நீயே.. பின் அதாவது வேடம் அணிந்து வந்தாலும் நிச்சயம்... பின் யான் கண்டுபிடித்து விடுவேன்.
ஏனென்றால் பின் அதாவது எவை என்று கூற உன்னை தவிர... என்னை இங்கு அழைப்பதற்கு ஆள் இல்லை.
அதனால் தெரிந்து கொண்டேன்.
நிச்சயம் பின் அதாவது இன்னும் பின் தவத்தில் மூழ்கி விடட்டுமா... என்று.
ஈசனும் விசுவாமித்திரனே!!! உன்னை சோதிக்கவே இவ் நாடகம்!!
ஆனாலும் அறிந்தும் என்று.
பின் ஈசனாரே!!!... நிச்சயம்...யான் என்ன தவறு செய்தேன்??? ஏன் எந்தனுக்கு பிறப்பு கொடுத்தாய்????
நிச்சயம் அறிந்தும் ஏன் இந்த நிலைமை ??எந்தனுக்கு என்றெல்லாம்???
ஈசன்
ஆனாலும் விசுவாமித்திரனே...கேள்!!!
அதாவது ஈசனாரும் சொன்னார்.
நிச்சயம் இதற்கெல்லாம் பின் அனைத்தும் அதாவது அனைவருக்குமே தண்டனைகள்.. எப்பொழுது ஏன் தர வேண்டும் என்பவை எல்லாம்...யான் அறிவேன்..
விசுவாமித்திரனே நிச்சயம் ஏன்? பின் இவ்வளவு அலைகழிப்புகள் என்றால் நிச்சயம் ஓர் பிறப்பில்.. நீ இல்லறத்தில் இருந்து... நிச்சயம் பின் அதாவது.. இல்லத்தவள் பேச்சை கேட்கவில்லை..
நிச்சயம் பின் அவ் பாவங்கள்.பின்.. தீர்க்கவே இவ்வாறு நிச்சயம்...
. இப்போது அதுவும் தீர்ந்துவிட்டது!!! பின் அதனால் தான் இப்படி நிலைமை என்று.
அப்பனே புரிந்து கொண்டீர்களா!!!
நிச்சயம் அப்பப்பா!!! அறிந்தும் கூட அதாவது அதனால் தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... இல்லறத்தில் இருப்பவர்கள் சரியாகவே தன் கடமையை செய்ய வேண்டும். தாய் தந்தையை மதிக்க வேண்டும்... அவ்வாறு நிச்சயம் விட்டுவிட்டு பின் அதாவது இறைவனை வணங்கினாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!
புரிந்து கொண்டீர்களா!!!
இன்னும் இன்னும் என் பக்தர்களுக்கு எடுத்துரைத்து... அவர்களுக்கு சக்தியை கொடுத்து... நிச்சயம் பின் அறிந்தும் கூட... அனைத்தும் செய்திடுவேன்.
ஏனென்றால் என் பக்தர்களுக்கு இன்னும் பின் அறிந்தும் கூட... ஏதும் தெரியவில்லை...
நிச்சயம் இறைவன் அனைத்தும் கொடுப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும்.... அறிந்தும் புரிந்தும் கூட அவையெல்லாம் பொய்.
நிச்சயமாய் தன்னை உணராமல் நிச்சயம் இறைவன் எதையும் கொடுக்க மாட்டான்.
அதனால் நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் உண்மை நிலையை கூட அறிந்து கொள்ளுங்கள்.. நிச்சயம் பாடுபட்டு.
இதனால் பல வழிகளிலும் கூட பல பேர்கள் அவை செய்தால் நல்லது நடக்கும். இவை செய்தால் இவைதன் நடக்கும் என்பது...
ஒன்றும் நடக்கப் போவதில்லை..
நிச்சயம் பின் ஏற்கனவே நிச்சயம் பிரம்மா அழகாகவே இப்படித்தான் என்று அறிந்தும் கூட விதியை எழுதி வைத்திருக்கின்றான் அல்லவா...
நிச்சயம் அதாவது இவ் ஸ்தலம்...(புஷ்கர்)ஏன் அறிந்தும் கூட... மீண்டும் நிச்சயம் பின் அறிந்தும் அதாவது விசுவாமித்திரன்
ஈசனாரே!!! யான் என்ன தவறு செய்தேன்??? என்று!!
ஆனாலும் பின் அதாவது ஈசனும் கூட அறிந்தும்...
உந்தனுக்கு அனைத்தும் கொடுத்து விடுகின்றேன்... நீ எதையாவது செய்து கொள்!! என்று!!
பின் அப்படியா!!!! என்று பலமாக... விசுவாமித்திரன் சிரித்தான்.
பின் ஆட்டத்தை துவக்குவோம் என்று மனதில்..
ஈசனாரே நிச்சயம் போதும் அறிந்தும் எவை என்று அறிய அறிய
நீர் செல்லும்!!!... மீதி யான் பார்த்துக் கொள்கிறேன் என்று...
ஈசன் விசுவாமித்திரனிடம்
மீண்டும் வரக்கூடாது அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய.... இன்னும் என்ன வேண்டும் என்று
ஈசனாரே.... அனைத்து சக்திகளையும் கொடுத்து விட்டாய்.
இன்னும் யான் என்ன கேட்கப் போகின்றேன்????... இனி நீர் செல்வீர்... என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது ஈசனாரும் சென்றுவிட்டார்.
விசுவாமித்திரன் சிரித்தான்.. ஓஹோ..!!. என்று... ஆஹா !! என்று.... அறிந்தும் எதை என்று புரிய
இனி மக்களை எப்படி எல்லாம்.. என்றெல்லாம்.
ஆனாலும் பின் மக்கள் அனைவரையும் கூட நிச்சயம் எதை என்று அறிந்தும் கூட நிச்சயம் பின் அனைவரையும் திருத்த பார்த்தான்...
நிச்சயம் முடியவில்லை...
ஈசனாரே.... பின் என்னை நீ ஏமாற்றி விட்டாயே!!!.... அறிந்தும்.. அனைத்து சக்திகளையும் கொடுக்கின்றேன் என்று... நிச்சயம் இவ்வாறு ஏமாற்றி விட்டாயே என்றெல்லாம்!!!
மீண்டும் பின் அதாவது மனம் வருந்தி நிச்சயம் அறிந்தும் கூட தவத்தில் அதாவது தியானத்தில் அமர!!!!
நிச்சயம் இனிமேலும் யான் தவத்தில் பின் நிச்சயம் அதாவது நிச்சயம் பின் ஈசனை நினைத்து தவம் செய்யப் போவதில்லை... என்றெல்லாம்.
ஆனாலும் நிச்சயம் அழகாகவே நிச்சயம் ஈசனாரே!!!.... இதோடு முடித்துக் கொள்கின்றேன்... இனி பிறவியும் வேண்டாம்... மக்களை யான் இன்னும் திருத்த அதாவது முடியவில்லை... அதனால் பின் இங்கேயே... கல்லாக அமர்ந்து விடுகின்றேன் என்று!!!
இப்பொழுது கூட நிச்சயம் பின் கல்லாகவே இருக்கின்றான் பின் ஓரிடத்தில் கூட..
அவை நிச்சயம் பின் உங்களுக்கே அறியும்... (உங்களுக்கே தெரியும்)
(இராமாயண கால சிறப்பு பெற்றதும், நவக்கிரக பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான கூடம்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற ஊரில் அருள்புரியும். அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பு விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில் தமிழகத்துலயே இங்குதான் இருக்கின்றது.விஜயாபதி என்ற வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும்.கடற்கரை கிராமமான இந்த விஜயாபதி, கூடங்குள அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த திருக்கோவில் என்பது கூடுதல் தகவல்.)
அதாவது கல்லாக இல்லை பின் இன்னும் கூட பின் நல்லோர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்... அவர்களுக்கெல்லாம் நிச்சயம் பின் பாவத்தை நீக்கி விட்டு பின் புண்ணியத்தை தந்து கொண்டே இருக்கின்றான்.
ஆனாலும் பாவப்பட்டவர்களும் கூட நடிப்பவர்களும் கூட அங்கு சென்று வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
ஆனால் நிச்சயம் அவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்... தண்டனைகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்..
ஆனாலும் உண்மையான யார் ஒருவன் செல்கின்றானோ... அவந்தனுக்கு நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்பாடு.
அதாவது ஏற்படுத்தி நடத்தியே தீருவான் அனைத்தையும் கூட.
அதனால் நிச்சயம் பின் உணர்ந்து விட்டான்... ஒருவன் கூட நல்லவன் இல்லை என்று... அதனால் அறிந்தும் கூட பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.
யாராவது?? நல்லோர்கள் வருவார்களா?? என்று!!
ஆனாலும் நிச்சயம் பின் என்னிடத்திலே ஒரு நாள் முறையிட்டான் விசுவாமித்திரன்.
பின் அகத்தியரே... பின் உன் பக்தர்கள் எல்லாம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.. என்னிடத்தில்...
ஆனாலும் ஒருவன் கூட நல் மனதாக இல்லை....
தீய எண்ணங்கள் நிச்சயமாய் பின் அவ்வாறு மனைவியை காணாமல் (பார்க்காமல்) பின் இல்லத்தில் மனைவியிடம் சண்டை சச்சரவுகள் இட்டு கொண்டு நிச்சயம் நடித்துக் கொண்டிருக்கின்றான்..
இது தர்மம் ஆகுமா??? உன் பெயரை சொல்லி என்று!!!
ஆனாலும் நிச்சயம் யான் சொன்னேன்... அப்பொழுது கூட...
நிச்சயம் பின் விசுவாமித்திரரே... நிச்சயம் பின் எவர் வந்தாலும்... அதாவது உன்னைப் பற்றி எனக்கு தெரியும் நன்றாகவே...
இதனால் பின் எவர் வந்தாலும் ஒரே சராசரியாகத்தான் நீ சமமாகத்தான் தண்டனைகள் கொடுப்பாய் என்று... இதனால் நிச்சயம் கொடு... தாராளமாக...
நிச்சயம் என்னை திட்டினாலும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட திட்டிக் கொள்ளட்டும் என்றெல்லாம்.
பின் அதாவது நிச்சயம் பின் அதாவது ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நிச்சயம் பல பேர் என்னை திட்டி தீர்த்தனர் அப்பனே... ஆனாலும் அப்பனே யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... ஆனாலும் அவர்கள் செய்யும்... பின் அவர்கள் செய்தது எவ்வாறு என்பதைக் கூட!!!!
மாந்திரீகத்தில்!!!
ஆனாலும் அவை தன் பின் பலிக்காமல் போனதே.......
பின் என்னை வைத்தும் கூட பின் என்னிடத்தில் அதாவது... யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... பல பல வதந்திகளையும் கூட... எவ்வாறெல்லாம்... என்பதையெல்லாம்...
நிச்சயம் அப் பெண்ணையும் கூட!!!... அவள் பெயரையும் கூட இங்கு சொல்லுவேன் ஆனால் வேண்டாம்.....
தண்டனைகள் உண்டு!!!!!
அறிந்தும் கூட இதனால் ஒன்றும் தெரியாமல் பின் சித்தர்களை நெருங்கினாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை.. சொல்லிவிட்டேன்.. உண்மையை பின் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு நிச்சயம் வந்தால் நிச்சயம் விதியினை கூட யான் செப்புவேன்.
எங்கெல்லாம் என்று நிச்சயம் பல திருத்தலங்கள் இருக்கின்றது.. எங்கு சென்றால்?? விதி மாறும் என்பதை எல்லாம் சித்தர்கள் அறிந்ததே!!!
மற்றவை எல்லாம் நிச்சயம் ஆகாது!!!
ஏன் எதற்கு?? அதனால் பக்தி என்பது இவ்வாறு தான் கலியுகத்தில் பின் அங்கு சென்றால் நலமாகும் இங்கு சென்றால் நலமாகும் என்று பின் அதாவது இப்பொழுது நிச்சயம் தொலைக்காட்சியில். (யூடியூப் உட்பட). மக்கள் அதாவது அறிந்தும் கூட எதை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்... அதை பின் பின்பற்றுவார்கள் மனிதர்கள்.
ஆனாலும் ஒன்றும் நடக்காமல்... அறிந்தும் எதை என்று புரியாமலும்..
ஆனாலும் ஒவ்வொரு அதாவது பின் இன்னும் பின்...இத் தேதியில் பிறந்தால் என்ன ஆகும்???? இக் கிழமைகளில் பிறந்தால் என்ன ஆகும்?? என்பதையெல்லாம் இத் திதியில் பிறந்தால்?? பின் என்ன ஆகும்??? இடைக்காடன் வந்து வாக்குகள் உரைக்கும் பொழுது புரியும்!!
நிச்சயமாய் அவ்வாறு புரிகின்ற பொழுது நிச்சயம் என் பக்தர்கள் நீடூழி வாழ்வார்கள்.... எத்துன்பமும் வராது.
அதனால்தான் முதலில் என் பக்தர்களுக்கு பக்குவங்களை எடுத்துக் கூறி அனைத்தையும் கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.
அதனால் நிச்சயம் விசுவாமித்திரன் கூட மீண்டும் அறிந்தும் எதை என்று அறிய
இதனால் கல்லாக அமர்ந்தான்.
ஆனாலும் கயவர்கள் நிச்சயம் வந்து... மீண்டும் இவந்தன்... கல்லாக அமர்ந்து விட்டான் என்று இடித்துத்தள்ளி!!!!....
ஆனாலும் பின் கல்லாகவே இருக்கின்றான்... ஆனாலும் உயிரும் இருக்கின்றது ஆனாலும்... ஐயோ ஈசனே!! இவ்வாறு நிச்சயம் சிதைத்து சிதைத்து விட்டார்களே என்னை!!! கால் தனியாக தனித்தனியாக பின் அதாவது கண்கள் தனியாக என்றெல்லாம்.
ஆனாலும் உடனடியாக ஈசன் வந்து அவையெல்லாம் பின் ஒட்டவைத்து மீண்டும் அமர வைத்தான்.
ஆனாலும் நிச்சயம் ரிஷிகளும் வந்து பின் நிச்சயம்...
விசுவாமித்திரரே!!! அறிந்தும்... இவ்வாறாக மக்களை பின் நினைத்து நினைத்து நிச்சயம் எவ்வாறு மாற்றினாய்....
ஆனால் மாற்ற முடியவில்லையே... அறிந்தும் இவ்வாறு தான் ஒருவனை கூட உன்னால் நல்லவனாக மாற்ற முடியவில்லை.... ஏன் இந்த வீராப்பு?? என்பதையெல்லாம்!!
பின் மீண்டும் அமைதி பொறுத்தான்.. எவ்வாறு என்பதெல்லாம்.
பின் மீண்டும் கடைசியாக நிச்சயம்.. அறிந்தும் புசுண்டனும்(காகபுஜண்டர்) சென்றான். அறிந்தும் இதை என்று அறிய..
நிச்சயம் அதாவது இதை என்று கூற நிச்சயம்.. விசுவாமித்திரனே எழுந்து நில்.. என்று பின் அதாவது உயிரையும் அனைத்தையும் கொடுத்து விட்டான்.
விசுவாமித்திரன்... என்ன ஏது என்று உந்தனுக்கு யான் சொல்லி கொடுக்கின்றேன்.... நிச்சயம் நீ அவ்வாறே செல்.
இங்கிருந்து அதாவது அறிந்தும் எதை என்று அறிய... ஒரு மாநிலம்....
அப்பொழுதெல்லாம் எதை என்று கூட இங்கு.. இப்பொழுது நடக்கும் மாநிலமாகவே கூறுகின்றேன்...
பின் அனைத்தும் எங்களுக்கு ஒன்றே!!
(அனைத்து மாநிலங்களும் அனைத்து நாடுகளும் சித்தர்களுக்கு ஒன்றேதான்)
இதனால் ஓரிடத்தில் நிச்சயம் அழகாக பிரம்மன் அமர்ந்திருப்பான்.
(அஜ்மீர் புஷ்கரில் பிரம்மாவிற்கு திருத்தலம் உள்ளது. காயத்ரி தேவியுடன் பிரம்மா அருள் பாலிக்கின்றார்)
அங்கு செல்!!! நன்றாகவே!! நிச்சயம் பின் உந்தனுக்கு கூட விதி தன்னில் கூட அதாவது அனைத்தும் அறிந்தவன் அல்லவா!!!..
நிச்சயம் நீ செல்!! என்றெல்லாம்!!
ஆனாலும் பின் சிலசில வழிகளிலும் கூட பின் மந்திரங்களை கூட புசுண்ட முனி.. பின் விஸ்வாமித்திரனுக்கு செப்ப!!!...
நிச்சயம் பின் முனியே தேவாதி தேவர்களுக்கெல்லாம் முனிவரே நிச்சயம் பின் அறிந்தேன் யான்.... அங்கு செல்கின்றேன் என்று.
அப்பப்பா இவ்வாறு இன்னும் சித்தர்களின் ரகசியங்கள் கூட பல கோடி இருக்கின்றதப்பா....
ஆனாலும் இருந்தது!!!
ஆனாலும் பின் சித்தர்களை கடைப்பிடித்து நிச்சயம் பின் அதாவது...அச் சுவடிகளை எல்லாம் எடுத்துக்கொள் எடுத்துக்கொள் என்று... ஏனென்றால் இவந்தனுக்கு பின் அறிந்தும்.. இவை தன் அதாவது நிச்சயமாய் அவந்தனுக்கு பல வழிகளிலும் கூட புண்ணியங்கள் பின் இருந்தால்தான் பின் சுவடிகளை கூட படிக்க முடியும்..
ஆனாலும் அவை தன் இல்லாமல் போகவே!!!!... இவை வைத்து என்ன.(பிரயோஜனம்). ஏது என்றெல்லாம் விற்று பின் அறிந்தும் கூட இவையெல்லாம் தெரியாமல் போனது!!
(சித்தர்களை சித்தர்களின் ரகசியங்கள் எல்லாம் சுவடியில் இருந்தது சித்தர்களை வழிபட்டு சித்தர்கள் மூலம் ஓலைச்சுவடிகள் கிடைக்க!! ஆனால் புண்ணியங்கள் இல்லாத காரணத்தினால் ஏனென்றால் ஓலைச்சுவடி படிப்பதற்கும் அதிகப்படியான புண்ணியங்கள் தேவைப்படுகின்றது.. அப்படி ஓலைச்சுவடியை படிப்பதற்கு புண்ணியங்கள் இல்லாத காரணத்தினால் எழுத்துக்கள் தெரியாததால் இந்த சுவடிகள் இருந்து என்ன பிரயோஜனம் என்று விற்று விட்டார்கள் இதனால் பல சித்தர்களின் ரகசியங்கள் யாருக்கும் தெரியாமல் போனது)
இதையும் கூட நிச்சயம் மீண்டும் பின் அதாவது அறிந்தும் இதை என்று புரிய... நிச்சயம் பின்!!
புசுண்டனாரே!!!! அறிந்தும் கூட அதாவது... போதும் மனம் வலிக்கின்றது!!!
என்னால் முடியவில்லை... நீயே என்னை அங்கு அழைத்துச் செல் என்று!!! நிச்சயம் அறிந்தும் கூட காகபுஜண்டன் காகமாக மாறி நிச்சயம்... என் மீது அமர்ந்து கொள் என்று.. நேராக இங்கே பின் (ரத்னகிரி மலை புஷ்கர்) எடுத்து வந்தான்!!
எடுத்து வந்து அறிந்தும் கூட.. பார்த்தான் அங்கும் இங்கும் கூட...
பின் யாரும் எதை என்று கூற இங்கு யாருமே இல்லை என்று.. ஆனாலும் இதை என்று புரிய புரிய.. ஆனாலும் நிச்சயம்...
நீ இங்கு அமர்ந்து மந்திரத்தை உச்சரி!!!!
நிச்சயம் அறிந்தும் எதை என்றும் கூட பல வழிகளிலும் கூட நிச்சயம் பிரம்மா... இங்கு வந்தே ஆக வேண்டும் கவலைகளை விடு... நிச்சயம் என்றெல்லாம்.
ஆனாலும்... ஈசனாரும் பார்த்துக் கொண்டிருந்தார்.. நிச்சயம் விஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தார்.. அனைவரும் அனைத்தும் பார்க்க!!!
ஆனாலும் இவையெல்லாம் ஒரு விளையாட்டே!!!(இறைவனின் திருவிளையாடல்கள்)
விளையாட்டாகவும் அறிந்தும் ஆனாலும்.. இதனால் தான் பின் விளையாட்டு எதை என்று கூட....(நல்வினையாகும்)
ஆனாலும் அனைத்து திறமைகளும் கூட விசுவாமித்திரனுக்கு உண்டு.
பின் இக் கலியுகத்திலும் கூட வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான் நிச்சயமாய்.. அறிந்தும் இதையென்று.
இதனால் நிச்சயம் விசுவாமித்திரனின் தன் சக்தியே விசுவாமித்திரனுக்கே புரியவில்லை.. அதனால்தான் இவையெல்லாம்.. ஈசன் பின் நாடகமாகவே அனைத்தும் பின் நடத்தேற்றினான். (நாடகமாகவே நடந்தேற வைத்தார் ஈசன்)
இதனால் நிச்சயம் மீண்டும் பின் அதாவது... பின் விசுவாமித்திரன்..
புசுண்டனாரே... என்னை இங்கு அழைத்து வந்து விட்டாய்!! யான் இங்கு என்ன ஏது செய்வது?? என்று!!!
காக புஜண்டர்.
நிச்சயம் உன்னுடைய இஷ்டம் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்...
அதாவது யான் வழியை காட்டிவிட்டேன்... நீ என்ன செய்கின்றாயோ நீ செய்து கொள்.
ஆனாலும் அனைத்தையும் யான் சொல்லிக் கொடுத்து விட்டால்... நீயே ஒரு பிரம்மரிஷி தான்.. அறிந்தும் கூட என்றெல்லாம்.
ஆஹா!!..... பிரம்ம ரிஷியா???? யான்!?!?!?!?!?
பின் புசுண்டரே நிச்சயம் இதையெல்லாம் அறிந்தும் எவை என்று புரிய அப்படி என்றால் நிச்சயம் பின் யான் தியானத்தில் அமர்கின்றேன் என்று.
நிச்சயம் பின் அதாவது புசுண்ட முனி சொல்லிக் கொடுத்த மந்திரங்களை எல்லாம் விசுவாமித்திரன் செப்பினான் அழகாகவே..
பிரம்மன் பின் அதாவது வந்து அறிந்தும் விஸ்வாமித்திரன் முன்னே நின்றான்.
ஆஹா பிரம்மா!!!! பிரம்மனாரே.... வந்து விட்டாயா??... நிச்சயம் அதாவது... எந்தனுக்கு சக்திகள் வேண்டும்....
நீ மட்டும் அறிந்தும் கூட விதியை எழுதுகின்றாய் அல்லவா!!!!
நிச்சயம் அத்தகுதியை எந்தனுக்கும் கொடு.. கொடு என்று!!
பிரம்மன்
பின் விசுவாமித்திரனே நிச்சயம் எவ்வாறு என்றெல்லாம்...
ஆனாலும் விசுவாமித்திரனும்..யான் என்ன தவறு செய்தேன்?? என்றெல்லாம்!!! நிச்சயம் ஈசனும் என்னை ஏமாற்றி விட்டான்!!! விஷ்ணுவும் என்னை ஏமாற்றி விட்டான்!!!... நீயும் என்னை ஏமாற்ற போகின்றாயா??? என்று!!!
பிரம்மன் நிச்சயம் அதாவது மனமகிழ்ந்து.. பின் பெற்றுக் கொள்!!!! விசுவாமித்திரனே!!!!.
.. விதியை பின் வருபவருக்கெல்லாம்... பின் அதாவது சில அறிந்தும் நீ என்ன நினைக்கிறாயோ... என்றெல்லாம் நிச்சயம். நடக்கும்.
(விசுவாமித்திரர் நினைப்பதெல்லாம் நடப்பதற்கும் விதியை மாற்றுவதற்கும் வரம் பிரம்மா அவருக்கு கொடுத்துவிட்டார்)
அதாவது சிரித்தான் விஸ்வாமித்திரன்... இப்பொழுது பார்த்துக் கொள்வோம் மனிதா!!!!! என்னவென்று!!!
மனிதா நீ என்ன செய்கின்றாயோ???? அதற்கு தகுந்தார் போல் பிரம்மனும் அறிந்தும் எதை என்று கூட இதனால்..
பிரம்ம ரிஷி பட்டம் அழகாகவே... அழகாகவே அறிந்தும் கூட பிரம்மனே கொடுத்திட்டு அறிந்தும் இதை என்று அறிய அறிய!!!
புஷ்கர் சாவித்திரி காட் ரத்தனகிரி மலையில் விசுவாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் மற்றும் வரம் கிடைத்த இடம்.
இதனால் அனைவரும் வந்து விட்டனர் அனைத்து ரிஷிமார்களும் இன்னும் ஞானிகளும் கூட...
பின் விசுவாமித்திரனுக்கு இவ்வளவு பெரிய பட்டமா??????? என்று!!!
ஆனால் அறிந்தும் கூட பின் விசுவாமித்திரன் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் அதாவது...
பிரம்மனே!!! நீ தான் கொடுத்தாய் எனக்கு!!... ஆனாலும் ஏன்? கொடுத்தாய்??? என்றெல்லாம்... பின் விவரி (விளக்கம் கொடு) என்று!!!
பின் பிரம்மனோ... நிச்சயம் ஈசனும் சோதித்தான் விஷ்ணுவும் சோதித்தான் யானும்... சோதித்தேன்..
ஆனாலும்.. இவன் நிச்சயம் பின் உறுதியோடு இருந்தான்... மனித குலத்தைக் காக்கவே என்று..
இதனால் பின் கலியுகம் முழுவதும் கூட இவன் பிரம்ம ரிஷியாக செயல்பட்டு... அனைவரின் விதியையும் மாற்றும் சக்தி இவனிடத்தில் நிச்சயம் உண்டு என்று.
நிச்சயம் இதனால் பின் அறிந்தும் கூட பின் அதாவது நிச்சயம் அதனால் நிச்சயம் தேவாதி தேவர்களும் கூட...இவ் மலையில் வந்து நிச்சயம் பின் நிற்க!!!!
நிச்சயம் அறிந்தும் கூட விசுவாமித்திரனை போற்றி வாழ்த்தி இன்று முதல்... பிரம்மரிஷி என்று பின் அறிந்தும் இதனால் எவை என்றும் அறிய
ஆனாலும் மீண்டும் பின் அதே இடத்திற்கு கன்னியாகுமரிக்கு.. தன்னிற்கு விசுவாமித்திரன் சென்றான்... அறிந்தும் இதை தன் புரிய ... நிச்சயம் பின் மனிதரிடத்தில்.
இதனால் நிச்சயம் இவ்வாறாக விதியில் இருந்தால்... இவன்(மனிதன்) இன்னும் இன்னும் தீயவர்களாக ஏற்படுத்துவான் என்று... கடலே பொங்கி வா!! அழி!!! என்று அனைவரையும் கூட பின் அழித்து!!!..(விஸ்வாமித்திரர் கடலை பொங்கி வர செய்தது குமரி கண்டம் ). மீண்டும் பின்... அதாவது சரியாகவே வழி நடக்க வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் பின் முழு மனதோடு எழுதி விதியை கூட நிச்சயம் மீண்டும் படைத்தான். அனைவரையும் கூட...
பின் நிச்சயம் அங்கிருந்தவர்கள் எல்லாம் பின் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.. பின் அறிந்தும் கூட இதனால் இன்னும் இன்னும் கூட பின் அதாவது பின் அதாவது எதை என்று கூட கஷ்டங்களோடு வாழ்ந்து வந்தார்கள் மனிதர்கள்...
சில உண்மைகளை புரிய வைக்க நிச்சயம் பல ஞானியர்களையும் கூட பின் அவ் சுற்றுவட்டாரத்தில் விசுவாமித்திரனே ஏற்படுத்தினான்... நல்லோர்களை காக்க...
ஆனாலும் இருக்கின்றார்கள் பல திருத்தலங்களில் கூட நிச்சயம் ஏற்படுத்திய ஏற்படுத்தி நிச்சயம்.. அறிந்தும் கூட.
இதனால் மீண்டும் இங்கே வந்தான் (புஷ்கர் ராஜஸ்தான்) மனிதர்களை பார்த்து நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் எதை என்று கூட இங்கிருந்தே பிரம்மாவிடத்தில்
(புஷ்கரில் ரத்தினகிரி மலையில் அடிவாரத்தில் புஷ்கர் தீர்த்த குளம் அருகில் பிரம்மாவிற்கு தனி ஆலயம் உள்ளது....)
பிரம்மனே!!! பின் அதாவது என்னை அதாவது... உன் மகனாக ஏற்றுக்கொண்டு... நிச்சயம் பிரம்மரிஷி பட்டம்.. பெற்று!!!
ஆனாலும் ஒரே ஒரு உதவி எந்தனக்கு வேண்டும் என்று.. ஒரே ஒரு உதவி என்று...
பிரம்மா
சொல்!!! விஸ்வாமித்திரனே.. அனைத்தும் உன்னிடத்தில் கொடுத்து விட்டேன்... மீண்டும் என்னவென்று???
விசுவாமித்திரன்
நிச்சயம் அதாவது பின் அனைத்து ரிஷிகளும் வரவேண்டும்... அனைத்து சித்தர்களும் இங்கு வர வேண்டும்... தேவாதி தேவர்களும் வரவேண்டும் நிச்சயம் பின் அதாவது நிச்சயம் அறிந்தும் இதை என்றும் புரிந்தும் எதை என்றும் உண்மைதனை கூட.
இதனால் அனைவரும் வந்து விட்டனர்.
ஆனாலும் நிச்சயம் அனைவரும்.. வந்துவிட்டனர் அல்லவா... நிச்சயம் எதை என்று அறிய அறிய... எவை என்று கூட பின் இங்கிருந்தே நிச்சயம் கூறுகின்றேன்..
யார்?? அதாவது எதை என்று கூற இதன் மதிப்பு... அதிகம். (புனிதமான புஷ்கர்)
யார் ஒருவன் இங்கு வந்து நிச்சயமாய் பலமுறை அதாவது ஒரு முறை இல்லை... பலமுறை வந்து காயத்ரி மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க.. அதாவது பின் கீழே.. தண்ணீர் உள்ளதல்லவா
.(மலையின் கீழே... உள்ள புஷ்கர் தீர்த்த குளம்)
அதாவது அங்கு பின் அதாவது பின் அழகாகவே காயத்ரி மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க... அவந்தனுக்கு முழு சக்தி ஏறும்!!!
நினைப்பது நடக்கும்.
ஆனாலும் விஸ்வாமித்திரன் பின் நல்லோர்களை மட்டுமே.. அனுப்புவான் இங்கு. தீயோர்களை எல்லாம் இங்கு அனுப்புவதில்லை!!
ஏனென்றால் நல்லோர்களை அனுப்பி அனுப்பி உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றான்.. விஸ்வாமித்திரன் ஒரு இடத்தில் இருந்து கொண்டே!!!
நிச்சயம் அதனால்தான் இன்னும் அங்கு செல்ல எப்படி செல்ல வேண்டும்?? அவனிடத்திற்கு... எப்படி எல்லாம் பின் சென்று அங்கு பின் மந்திரத்தை ஓத வேண்டும் என்பதையெல்லாம்... அடுத்தடுத்த வாக்கில்!! எடுத்துரைப்பேன்.
அவனிடத்தில் சென்று அழகாகவே 1008 பின் தீபங்கள் ஏற்றி நிச்சயம் ஒவ்வொரு தீபத்திற்கும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... காயத்ரி மந்திரத்தை!!! எடுத்துக் கூறி நிச்சயம் பின் அறிந்தும் கூட இங்கேயே கூட அதாவது புஷ்கரணியே என்றே.. பின் அறிந்தும் அவ் நதி எதை என்று அறிய அறிய... இங்கெல்லாம் நிச்சயம் நதியும் இருக்கின்றது.. ஆனாலும் எவை என்று அறிய.. எங்கிருந்தாலும் இங்கு தண்ணீர்.. எங்கு ஓடுகின்றதோ அங்கு அமர்ந்து பின் காயத்ரி மந்திரத்தை 1008 முறை செப்பிக் கொண்டு வந்தாலே அடிக்கடி நிச்சயம் பின் தலை விதியே மாறும்.
(காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ ஆகும்
காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது :
"ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் !!"
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.)
இன்னும் ஒவ்வொரு திருத்தலத்திலும் கூட ரகசியங்கள் உண்டு... ஒவ்வொரு ரிஷிகளுக்கும் இன்னும் முனிவனுக்கும் பின் சித்தர்களுக்கும் கூட இன்னும் இன்னும் என்னென்ன?? பின் சக்திகள் இருக்கின்றது என்பதை எல்லாம் வரும் காலத்தில் யாங்களே உரைப்போம்.
அதனால் நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதுமே தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.
யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... ஆனால் ஒரு முறை வந்துவிட்டு நிச்சயம் அதாவது இது எப்படி இருக்கின்றது என்றால்... ஒருவனுக்கு ஒரு முதலாளி வேலையை கொடுக்கின்றான் ஒரு தொழிலாளிக்கு... நிச்சயம் ஒரு நாள் மட்டும் வந்து வேலையை செய்து விட்டு பின் ஒரு மாதத்திற்கான முழுவதும் சம்பளம் தா என்று.. எதிர்பார்க்கவே கூடாது.
இங்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். வந்து கொண்டே இருந்தால் காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால்... எவ்வளவு பெரிய விதி ஆயினும் நிச்சயம் மாற்றம் ஆகிவிடும்.
ஆனாலும் பின்... இதைப் பார்த்து ஒருவன் கேள்வி கேட்பான்..... பக்கத்தில் இருக்கும் திருத்தலத்திற்கே போக முடியவில்லை.. என்று ஆனாலும் நிச்சயம் அறிந்தும் இவை எல்லாம் நிச்சயம் வீணான பேச்சுக்கள்.
இன்னும் யான் பக்தியில் இருக்கின்றேன் ஆனாலும் ஒன்றுமே இறைவன் பின் செய்யவில்லை என்று... இவையெல்லாம் நிச்சயம் பின் அதாவது... பக்தியில் இருப்பவர்களை எல்லாம் கெடுப்பதற்கே!!!
இன்னும் இன்னொருவன் சொல்வான் இவையெல்லாம் பின் நிச்சயம் எதை என்று புரிய புரிய இன்னும்... ராமாயணம் கூட கற்பனையே என்று... இன்னும் மகாபாரதம் கூட கற்பனையே என்று.. ஆனால் இறைவனை வணங்கிக் கொண்டே சொல்லுவான் சொல்லிக் கொண்டிருப்பான் ஏமாற்றுக்காரன் கலியுகத்தில்.
ஆனாலும் எப்படி எல்லாம் யாங்கள்... அதாவது இவ் அதாவது ஒரு அறிந்தும் கூட இவையெல்லாம் நிச்சயம் கீழானவன்... கீழான செயல்.
பின் பக்தியை காட்டி பின் அவ்வாறு என்று இவ்வாறு என்று சொல்வதெல்லாம்...
நிச்சயம் பின் இவந்தனையும் ஓதி கொண்டிருப்பவனையும் கூட (அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா) உயர்ந்த இடத்தில் வைத்து நிச்சயம் எவ்வாறெல்லாம் ஆக்குவது என்பதை சித்தர்கள் யாங்கள் எதிர்பார்த்து அனைத்தும் உடனடியாக ஆக்குவோம்.
அப்பொழுது புரியும்.
அதனால்தான் நிச்சயம் சித்தர்கள் யாங்களும் ரிஷிகள் யாங்களும் நிச்சயம் மனிதர்களை நம்ப போவதில்லை..
அறிந்தும் எதை என்று கூட எவ்வளவு சொன்னாலும்!!
ஆனாலும் யாங்கள் இருக்கின்றோம்... ஆனாலும் எங்களுக்கு பூஜைகள் இன்னும் அறிந்தும் எதை என்றும் மனதில் அழுக்குகளை வைத்துக்கொண்டு..... இதனால் என்ன லாபம்???
இதனால் அறிந்தும் எதை என்று அறிய அறிய.
நிச்சயம் இன்னும் திருத்தலங்கள் பற்றி சொல்கின்றேன்.
அங்கெல்லாம் வந்து சென்றாலே விதியின் பாதையே மாறும்!!!
ஆனாலும் பிரம்மன் விட்டுவிடுவானா என்ன??????????
நீங்கள் நினைத்தாலும் பிரம்மன் உங்களை விட வேண்டுமே!!!!!
ஆனாலும் பின் நிச்சயம் இவ்வாறு திருத்தலம் சென்றால் நலமாகும்... என்பதெல்லாம் ஆனாலும் அதற்கும்... பாவம் கூட இங்கு செல்ல முடியுமா??? என்றெல்லாம் யோசிப்பார்கள்!!! மற்றொருவன் கெடுத்து விடுவான்!!! அங்கெல்லாம் செல்லாதீர்கள்!!! சித்தர்கள் பொய் அதாவது பொய் சொல்கின்றார்கள் என்று! இவையெல்லாம் பொய் என்று கூட!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட முயற்சிகளோடு நிச்சயம் அங்கு சென்று விசுவாமித்திரனுக்கு நிச்சயம் தீபங்கள் ஏற்றி வந்தாலே... பின் பிரம்மன் இங்கு அழைப்பான்... பின் விதியினையே மாற்ற வைப்பான்..
நிச்சயம் அனைவருக்குமே அதாவது என் பக்தர்கள் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும்.. பின் அதாவது ஏழை ஆயினும் பணக்காரன் ஆயினும் நிச்சயம் அனைவரும் பின் சமம் தான்...
பின் குடும்பம் இருக்கின்றதல்லவா... அதை சித்தர்கள் அழகாகவே காத்துக் கொண்டிருப்பார்கள் அனைவருமே... நிச்சயம் இன்னும் வாக்குகள் பரப்புவேன்.
இன்னும் இத்திருத்தலத்தில் பல வாக்குகள் இருக்கின்றன.. ஒவ்வொரு பின் நிச்சயம் ரிஷிமார்களை பற்றி எடுத்துரைக்கும் பொழுது புரியும்...
நிச்சயம் இங்கு வந்தாலே அனைத்து ரிஷிகளின் அருளும் கிடைக்கப்பெற்று அவந்தன் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொள்வான்.
ஆசிகள்!!! ஆசிகள்!! ஆசிகள்!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
பூமிக்கு மேலே இருக்கும் கிரகங்களில் எல்லாம் வேற்று கிரக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் புண்ணியங்கள் அடிப்படையில் மேலே சந்திரனிலும் மற்ற கிரகங்களிலும் மேலே லோகங்கள் இருக்கின்றது அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே பல வாக்குகள் தந்திருந்தாலும்... சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் விநாயகர் உருவம் போன்று ஒரு புகைப்படம் தெரிந்தது அருகிலேயே கற்களால் ஆன ஆலயம் போன்றும் இருந்தது இது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
இதன் உண்மை தன்மையை குறித்து குருநாதரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட முறையில் கேள்வியாக கேட்ட பொழுது
அப்பனே மேலோகத்தில் கிரகங்களில் எல்லாம் சித்திரக்குள்ளர்கள் ஞானிகள் ரிஷிகள் அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே சந்திரன் செவ்வாய் அங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே
அங்கு திருத்தலங்கள் இருக்கின்றது அதாவது கிரகங்களில் .
ஆனால் புண்ணிய நதிகள் அங்கு இல்லை .
அதனால் கீழே இங்கு வந்து மானசரோவர் கங்கோத்திரி காசி கங்கா காவேரி தாமிரபரணி புஷ்கர் புனித ஏரி நர்மதா தபதி சிந்து மற்றும் புனித நதிகள் அனைத்திலும் நீராடி செல்வார்கள் பிரம்ம முகூர்த்தத்தில்...
குறிப்பாக ஐப்பசி மார்கழி மாதத்தில் வந்து நீராடுவார்கள் என்று அதனால்தான் உங்களையும் நீராடச் சொன்னேன் என்று வாக்குகளில் கூறியிருந்தார் இதைப்பற்றி திருவனந்தபுரம் சத்சங்கத்திலும் தெரிவித்திருந்தார்.. அப்போது நீங்கள் அனைவரும் நீராட வேண்டும் என்று பக்தர்களுக்கு தெரிவித்து இருந்தார். நீராடினால் சில கர்மங்கள் தொலையும் என்றும் வாக்குகளில் குறிப்பிட்டிருந்தார். சித்திரக்குள்ளர்கள் ராஜஸ்தான் பாலைவனத்திற்கும் வந்து தங்கி தவங்கள் செய்வது பற்றி அம்பாஜி ஆலய வாக்கிலும் தெரிவித்திருந்தார். புஷ்கர் புனித ஏரியை பற்றி குருநாதர் சித்திரக்குள்ளர்கள் அதிகாலையில் வந்து நீராடி செல்வார்கள் அவர்கள் நீராடி சென்ற பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்களுடைய சக்திகள் அந்த நீரில் இருக்கும் அப்பொழுது நீராடினால் கர்மங்கள் தொலையும் என்றும் புஷ்கர் புனித தீர்த்தத்தை பற்றி குருநாதர் வாக்குகளில் கூறினார். இதனால் புஷ்கர் செல்லும் பக்தர்கள் அடிக்கடி வந்து புஷ்கர் தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மா ஆலய தரிசனம் மற்றும் சாவித்திரி காட் தரிசனம் 1008 தீபங்கள் ஏற்றி காயத்ரி மந்திரம் ஜெபம் செய்தல் வேண்டும்.
ஆலயம் மற்றும் விபரங்கள்
ராஜஸ்தான் அஜ்மீரிலிருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள கம்பீரமான ரத்னகிரி மலையின் மேல் அமைந்துள்ள சாவித்ரி கோயில்.சாவித்ரி கோவிலுக்கு உங்களின் வருகையானது 650 படிகள் ஏறி அல்லது மலை உச்சிக்கு ரோப்வே சவாரி மூலம் தொடங்குகிறது,நேரங்கள் கோவில் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.புஷ்கர் ஏரியில் இருந்து 2.2 கிமீ (1.37 மைல்) மற்றும் பிரம்மா கோயிலில் இருந்து 1.9 கிமீ (1.18 மைல்) தொலைவில் உள்ளதால், நகர மையத்திலிருந்து நடந்தே செல்லலாம்.கேபிள் கார் மூலம்:
கேபிள் கார் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.சாவித்திரி கோயிலை எப்படி அடைவது
ராஜஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் இந்த கோவிலுக்கு சாலை வழியாக எளிதில் அணுகலாம். புஷ்கரில் இருந்து, உள்ளூர் டாக்ஸி அல்லது ஆட்டோ ரிக்ஷாவில் செல்லலாம். அருகில் இருக்கும் விமான நிலையம் கிருஷ்ணகாட். விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் புஷ்கர் உள்ளது.
புஷ்கர் புனித ஏரிக்கு அருகில் பிரம்மா ஆலயம் அமைந்துள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Agatheesaya Namaha.
ReplyDelete'அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் விநாயகர் உருவம் போன்று ஒரு புகைப்படம் தெரிந்தது அருகிலேயே கற்களால் ஆன ஆலயம் போன்றும் இருந்தது இது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியானது."
Sir, Can you show that picture?
Regards
Chitra