​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 12 December 2021

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று 12/12/2021 (ஞாயிற்று கிழமை), உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி அன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லோகஷேமத்துக்காக, அகத்தியப்பெருமான் ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாளுக்கு, அபிஷேக ஆராதனைகளை செய்கிற நாள்.

இன்றைய பூசையை மூன்றாக பிரித்து அகத்தியர் அடியவர்கள் குழு நடத்துகிறது.

1. உழவாரப்பணி 
2. தாமிரபரணி தாய்க்கு மரியாதை செய்வித்தல் 
3. பெருமாளுக்கும் தாயாருக்கும் அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக பூஜை.

இதில் அகத்தியரை பொறுத்தவரை, உழவாரப்பணி மிக முக்கியமானஒன்று. சுத்தம் கோவிலை அடைந்தால், சித்தம் அங்கே கொள்வான் என்று ஒரு சித்தர் மொழி உண்டு. அதற்கேற்ப, அங்கே வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள், மிக சிறப்பாக உழவாரப்பணியை செய்துள்ளனர். அனைவருக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.




தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.



அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் குருவருளால் வழங்கப்பட்டது


அபிஷேக பூஜையை பெருமாள் ஏற்றுக்கொண்டதற்கு சாட்சியாக நல்ல மழை பெய்தது. எல்லாம் அகத்தியர் அருள்.

அபிஷேக பூஜைக்குப்பின் உழவாரப்பணி செய்து சுத்தமாக்கப்பட்ட கோவிலின் உட்புறமும், வெளிப்பிரகாரமும்!







சித்தன் அருள்............ மேலும் வளரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அற்புதம். தேடல் உள்ள தேனிக்கள் குழு அகத்திய அடியவர்களுக்கும் உழவார பணியில் ஈடுபட்ட அகத்தியர் அடியவர்களுக்கும் நன்றிகள் பல.

      Delete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. என்றும் குருவின் வழியில்

    ReplyDelete