14/12/2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
உலகம் இருளில் போய்க்கொண்டு இருக்கும் வரும் காலங்களில்.
இதனையும் மீட்க பின்பு இறை வழிபாடு மிக மிகச் சிறந்தது என்பேன்.
என்பேன். இதனையும் உணர்ந்து வள்ளல் ராமலிங்கஅடிகளின் பின் அவந்தன் பாதையை (சுத்த சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) பின்பற்றினால் அனைவரும் பிழைத் துக் கொள்வது உறுதி.
உறுதியாக இவைதன் உண்டு என்பேன்.
உண்டு என்பதற்கிணங்க வருத்தங்கள் இனிமேலும் குடிகொள்ளும்.
இதனையும் உணர்ந்து சொல்கின்றேன்.
சொல்கின்றேன் தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.
ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது.
பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.
அல்லது இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன் உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.
அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.
இடுங்கள் என்பது மெய்யே.
அவை மட்டும் இல்லாமல் தீபங்கள் ஏற்றும் பொழுது எத்தனை தீபங்கள் ஏற்றுகின்றீர்களோ அத்தனை உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது முக்கியம் என்பேன்.
இவ்வாறு கொடுத்தால்தான் சில நல் பல செய்திகள் இல்லம் தேடி வரும் நல்லவையும் நடக்கும் என்பேன்.
ஆனாலும் சில மனிதர்களுக்கு இவை தெரிவதே இல்லை என்பேன்.
பின் ஏதோ இதனை என்றும் தீபம் ஏற்றி விட்டால் அனைத்தும் நடக்கும் என்பது உறுதியாக பின் ஆனாலும் இவை தன் நடந்து விட்டாலும் பிற்பகுதியில் குறைவாகிவிடும்.
அதனால்தான் இவைதன் உணர்ந்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பேன்.
ஈசனும் கட்டளையிட்டபடி நவ கிரகங்களுக்கும் பின் வேலைகள் பலம் அதிகமாக உள்ளது.
இதனால் ஒவ்வொருவரையும் தண்டிப்பதற்குரியவனாகவே வலம் வருகின்றனர்.
ராகுவும் இனிமேலும் கேதுவும் சனியும் இவ்வாறு என்பதை கூட இவர்கள் ஆட்சியில்தான் உலகம் கடந்து வருகின்றது.
இதனால் பின். இவைதன் மனம் குளிரச் செய்யவேண்டும்.
இதனை மனம் குளிரச் செய்ய பல திருத்தலங்களை நாட வேண்டும் என்பேன்.
பஞ்ச ஸ்தலத்திற்கு (பஞ்சபூத ஸ்தலங்கள்) பின்பு பின் அடிக்கடி சென்று அங்கே சிலசில ஜீவராசிகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும்.
அறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.
இவ்வாறு பின் இதனையும் அறிந்து அறிந்து பின் இவை என்று கூற அனுதினமும் பின் திருவாசகத்தை இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும்.
இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது.
இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.
இதனையும் அறிந்து நிச்சயமாய் தீபங்கள் யான் சொல்லியவாறே கடைப்பிடியுங்கள் போதுமானது. போதுமானது என்பேன்.
இதனையும் அறிந்து ஒவ்வொரு இல்லத்திலும் இனிமேலும் குழப்பங்கள் வரும்.
குழப்பங்கள் இல்லாமல் வாழ்வதற்கு இனியும் சொல்லிவிட்டேன்.
ஜீவராசிகள் பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளையும் பின் முன்பே பின் சூரியன் வருவதற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.
எழுந்திருக்க வேண்டும் .பிற உயிரினங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
பின்பு பின் பலபல புலவர்கள் இயற்றிய திருநாமங்களையும் பின் சிவபுராணம் இவையன்று ராமாயணம் இவையன்றி கூற பலப்பல இதிகாசங்கள் உண்டு இவ்வுலகத்தில் என்பதைக்கூட புறநானூறு இவை தன் அகநானூறு இவை என்று உணர இன்னும் பல பல பல பல பதிகங்கள் ஓதி வருதல் என்பது கூட சிறப்பு.
பின்பு பின் இவை தன் உணர சூரியன் வரும் அப்பொழுது சூரியனை வழிபட்டால் இவ்வுலகம் எப்படி பின் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகின்றதோ அப் போலவே மனிதன் வாழ்க்கையும் சிறிதுசிறிதாக வரும் பின் வெளிச்சத்திற்கு.
இவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்தால் இன்னும் இருளிலேயே மூழ்கி விடுவான் மனிதன் என்பது மெய்யே.
இதனால் யான் சொல்லிவிட்டேன் இதனையும் அறிந்து கூட
நமச்சிவாயனும்(ஈசன்) எவ்வாறு எவ்வாறு இருந்து வலம்வந்து இனிமேலும் தண்டனைக்குள்ளவனாகவே வருகின்றார்கள் மனிதர்கள்.
இதனால் திருந்தி யான் சொல்லியதையே சரி முறையாக பின்பற்ற ஒரு குறையும் வராது என்பது உறுதி.
இன்னும் பல வாக்குகள் உண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள்.
திருமூலனும். வாக்குரைப்பான் இதனையும் என்று கூட அறிந்து.
திருமூலரின் உரையாடல்களை பின் ஓதி வருதல் அதிசிறப்பு.
இவையன்றி கூட அனுதினமும் இல்லத்தில் பின் கந்தசஷ்டி கவசத்தையும் பின் அதற்குப் பின்பு விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் லலிதாம்பிகை தேவி(லலிதா சகஸ்கரநாமம்) சரணத்தையும் ஓதி ஓதி வருவது பின் மனிதன் வெளிச்சத்திற்கு வருவான் என்பதே மெய்.
சொல்லிவிட்டேன் இதை சரி முறையாக பயன்படுத்தி வர பின் நல்லொழுக்கமாக வாழ்வீர்கள் என்பது மெய்யே.
அதனையும் விட்டு விட்டு பின் இப்படித்தான் செல்வீர்கள் என்றால் பின் இயற்கையும் இப்படித்தான் செல்லும் என்பது உறுதியானது.
பழைய காலத்திற்கு வாருங்கள் இயற்கையும் பழைய காலத்திற்கே வந்து விடும்.
அவை விட்டுவிட்டு புதிய காலத்தில் இறங்கினால் பின் இயற்கையும் புதுமையான விளையாடல் விளையாடும் என்பேன்.
இயற்கையும் ஓர் இறைவனே என்பேன்.
பின் வாக்குகள் உரைக்கின்றேன் பலமாகவே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................... தொடரும்!
OM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
Ayya
ReplyDelete2 vilakku etrum muraigalai satru vilakkamaga sollungal ayya
ஓம் ஓம் ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் அகத்தியர் போற்றி
ReplyDeleteTranslation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/1-KMEhzD9CfVVAh_LI_y2Dv8yTUdNZRhy/view?usp=sharing
Nandri Ayya 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteஅன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
தீபங்கள் ஏற்றுவது குறித்த ரகசிய வாக்கு:-
==============================================
YouTube:-
https://www.youtube.com/watch?v=Ei8fZjyDMD8
==============================================
சித்தன் அருள் - 1054 - வைகுண்ட ஏகாதசி வாக்கு!
பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன் உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்
சர்வம் சிவார்ப்பணம்