வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில் 18/10/2021 அன்று மிக சிறப்பாக அபிஷேக, அலங்கார பூசையுடன் நடந்தேறியது. கோவிலில் பவித்ர உற்சவம் அன்று தொடங்குவதினாலும், வேறு சில காரணங்களாலும், பூஜை காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை வேளை 4 மணி வரை நீண்டு சென்றது. இம்முறை, அபிஷேக ஆராதனைகள் மூலவர் சன்னதிக்கு முன்பு வைத்து நடத்தப்பட்டது. நிறைய அகத்தியர் அடியவர்கள் வந்திருந்தனர். இடமின்மையால், வந்தவரில் பலரும், வெளியே அமர்ந்திருந்தனர்.
சில விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சற்று பின் செல்வோம்.
அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்ததாசன், (அகத்தியர் ஜீவநாடி வாசித்தவர்) அவர்களின் மூத்த சகோதரர், திரு.ராமஸ்வாமி அய்யங்கார், தச்சநல்லூரில் வசித்து வந்தார். அவரின் உதவியினால், எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் "அந்தநாள் இந்த வருட" கோடகநல்லூர் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே, அடியேனின் உடல் இயலாய்மையை கண்ட அகத்தியப்பெருமான், இந்த வருட பூசைக்கான ஏற்பாட்டை செய்கிற வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க சொன்னார். அவர் சொன்னபடி திருமதி.லக்ஷ்மி (சென்னை) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சற்று விலகி நின்றேன். ஏதோ ஒரு விஷயம் நெருடியது. சற்று பொறுத்திருந்து பார்ப்போம் என அமைதியானேன். செப்டம்பர் மாதம் 26ம் தேதி, திரு.ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோடகநல்லூர் முதல் தொடர்பு அறுந்து போனது. பெருமாளுக்கு வேண்டியதை செய்ய இனிமேல் அகத்தியர்தான் பார்த்து உதவ வேண்டும் என மனதை தேற்றிக் கொண்டேன். இந்த சித்தன் அருளை வாசித்து, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் அருளை பெற்ற நாம் அனைவரும், அகத்தியப்பெருமான், திரு.ஹனுமந்ததாசன் அவர்கள், திரு ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள் போன்றவர்களுக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம். அன்னாரது இறுதி சடங்கில், ப்ரஹன்மாதவர் கோவில் அர்ச்சகர் திரு ரமணன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. தனியாக அழைத்து 18/10/2021 அபிஷேக பூஜையை பற்றி பேச, "செய்யலாம்! ஆனால் கோவிலின் பவித்ர உற்சவம் அன்று தான் தொடங்குகிறது. இப்படி வராதே. கோவில் உற்சவம் முடிந்துதானே எப்போதும் வரும். ஒரு முறை கூட தியதியை சரி பார்த்துவிடுங்கள் என்றார்.
"அது குருநாதர் அகத்தியப்பெருமான் பார்த்துக் கொடுத்தது. மேலும் அன்றைய தினம் பூசை நடக்கும் எனவும் ஆசிர்வதித்துள்ளார்" என்ற செய்தியை தெரிவித்தேன். அப்படியானால் செய்து விடலாம் என தெரிவித்தார். இம்முறை பொறுப்பு எனக்கில்லை, திருமதி.லக்ஷ்மி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடியேனும் வரப் பார்க்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களே முன் நின்று நடத்தி தர வேண்டும் என்றேன்". சம்மதித்தார்.
பூஜைக்கு ஒரு வாரம் முன்பு, அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. திரு.ரமணன் அர்ச்சகரின் தாயார் அவர்கள் இறைவன் திருவடியை அடைந்தார், அதனால், அவருக்கு 16 நாட்களுக்கு கோவிலுக்குள் வர முடியாது என. உடனே அவரை தொடர்பு கொண்டவுடன், அடியேனின் வருத்தத்தை தெரிவித்து, என்ன சூழ்நிலை என வினவினேன்.
அவரால் வர முடியாது எனவும், பதிலுக்கு வேறு ஒருவரை தின பூசைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவரால் "அந்தநாள்" பூசையை செய்து தர முடியாது என கூறியதாகவும், தெரிவித்தார்.
வேறு வழி இல்லை, என்ன செய்வது இன்னும் நான்கைந்து நாட்களே உள்ளது. வேறு அர்ச்சகர் யாரும் கிடைக்க மாட்டார்கள். அகத்தியரிடம் நாடியில் கேட்போம் என தீர்மானித்தோம்.
நாடியில் வந்ததை கீழே தருகிறேன்.
"யாமும், லோபாமுத்திரையும் கோடகநல்லூர் தாமிரபரணிக்கரை வழியாக நடந்து வந்த பொழுது பெருமாளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றோம். அப்பொழுது, "அகத்தியா! நீ ஏன் இங்கே அலைந்து நடக்கிறாய்? என கேள்வியை எழுப்பினார், பெருமாள்.
அனைவரையும் ஆசிர்வதிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன், என்றார்.
எனக்கு ஒரு உதவி செய் அகத்தியா. இந்த ஐப்பசி மாதம் முழுவதும் இங்கிருந்து எனக்கு அபிஷேக பூசைகளை செய்! என்றார் பெருமாள்.
செய்கிறேன் என கூறியும், எனக்கு சத்தியம் செய்து கொடு என சத்தியம் வாங்கிக்கொண்டார். ஆகவே இந்த ஐப்பசி மாதம் முழுவதும் யாம் இங்கே இருந்து பெருமாளுக்கு பூசை செய்யப் போகிறோம். அதை மனிதர்களாகிய உங்களால் காண முடியாது. அன்றைய தினம் (18/10/2021) அபிஷேக பூசைகள் நடக்கும். இருந்தாலும் அபிஷேக பூசையை அவர் செய்தால் (திரு.ரமணன் அவர்கள்) பெருமாள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். ஆனால் 18/10/2021 அன்று அது நடவாத காரியம். நடக்கிற பூசையை ஏற்று கொள்ள சொல்லி பெருமாளிடம் யாம் விண்ணப்பிக்கிறோம்.
இருந்தும் எம் சேய்கள் ஒன்று செய்யுங்கள். அவர் (திரு.ரமணன்) கோவிலுக்கு வரும்பொழுது ஒரு நல்ல தினத்தில், இவைகளை அவரிடம் கூறி, ஐப்பசி கடை நாளுக்குள், ஒரு முகூர்த்தத்தை தேர்ந்தெடுத்து, ஒரு முறைகூட, பெருமாளுக்கு அபிஷேக பூசையை செய்துவிடுங்கள்" என்றாரே பார்க்கலாம்.
இதை கேட்டதும் அடியேன் அசந்து போனேன். மறுபடியும் முதலில் இருந்தா?
மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்.
"கவலை வேண்டாம்! எல்லாம் நடக்கும். போய் நடக்கிற விஷயங்களை கவனித்து கொண்டிரு! பூஜைக்கு உதவி வரும்! இரண்டு அபிஷேக பூசையும் நடக்கும். எம் ஆசிகள் உண்டு!" என முடித்துக் கொண்டார்.
இனி அவர் வந்து சேர்ந்து பேசிய பின்தான் ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்க முடியும் என உணர்ந்தேன்.
சித்தன் அருள்...................தொடரும்!
எல்லாம் அகத்திய பெருமான் செயல். நாம் அவரது கருவிகள். ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி.
ReplyDeleteஅகத்தீசாய நம
ReplyDeleteஅக்னி லிங்கம் ஐயா வணக்கம். பூஜைக்கு எப்படி உதவிகள் செய்வது என்று சொல்லுங்கள். முடிந்த உதவிகள் செய்கிறேன்.நன்றி. G. K Sreenivasan
ReplyDelete18/10/2021 அன்று அபிஷேகத்தில் அடியேனும் கலந்துகொண்டேன்..அகத்தியர் ஐயா காட்சிதந்த சூட்சம வடிவத்தை பற்றி ஒரு சிறிய விண்ணப்பத்தை ஜீவநாடியில் கேட்டு தந்தாள் மிகவும் மனம் மகிழ்வோம்.. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கும் ஐயா
ReplyDeletePl.let us know the next puja proceedings once it is concluded. With Sage Agathiar's blessings it will happen for sure and seeking your guidance on carrying out the puja and sponsoring information.
ReplyDeleteCan someone help me get through to person who reading jiva nadi,.from Malaysia badly need help
ReplyDeleteHello! His name is Janakiraman and his contact number is +918610738411. It's better to text him in Whatsapp first (you can send a voice note too, if you speak Tamil). Since he's on a pilgrimage around India, it'll take a few days for him to read nadi. Good luck!
Deleteபெருமாள், அகத்திய பெருமான் சித்தம் வைத்தால் நாங்களும் உதவ தயாராக இருக்கிறோம். அகஸ்தியர் அன்பு பெரியது
ReplyDeletesurely i too will sponsor.even posibility of coming is less,we will support .
ReplyDeletethis backiyam given to us by agathiyar appa.plks let us know the account details
appa sharanam
ஐயா, தங்கள் உடல்நலம் மேம்படவும் இறைபணி தொடரவும் குருநாதரை வேண்டுகிறோம்.
ReplyDeleteகுருநாதர் அருளால் இரண்டு அனுபவ பதிவுகள்.
ReplyDeleteகுருநாதர் அருளிய தியான மந்திரமும் உள்ளது.
1) அனுபவ ஞானம் - 1 - மணி
http://fireprem.blogspot.com/2021/10/1.html?m=1
2) அனுபவ ஞானம் - 2 - மந்திரம்
http://fireprem.blogspot.com/2021/10/2.html?m=1
Om Agatheesaya namah 🙏🙏🙏
ReplyDeletePlease let us know the dates for the 2nd time poojai...will try to be there ayya.
If anyone goes from Bangalore,kindly post here.
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
When the next pooja in kodaganalla?
ReplyDelete