​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 8 October 2021

சித்தன் அருள் - 1040 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் வாக்கு!


3/10/2021 அன்று 

திருமூலர் உரைத்த பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : கங்கை கரை. காசி. 

உலகையாளும் சிற்றம்பலனை பணிந்து வாக்குகள் உரைக்கின்றேன்.  மூலனவன். (திருமூலர்). 

நல் முறையாக அனு கிரகங்கள் மனிதர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதன் அதை ஒழுங்காக பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை.

தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் நீங்கள் மனதில் நினைத்தவாறே நடக்கும் நடக்கும் என்பேன். இதனால் யாங்களும் பல பல மனிதர்களை எவ்வாறு வரவேண்டும் என்று எண்ணி முறையான பணி தன்னில் செலுத்தி அவர்களையும் மாற்றுத்திறன் ஆக வளர்க்க முயற்சி செய்கின்றோம்.

 ஆனால் மனிதனோ தீய எண்ணங்களால் தீயவை நினைத்து அழிந்து விடுகின்றான். எதனால்? மனிதன் போக்கைப் பார்த்தால் சரி இல்லாததாக தோன்றுகின்றது.

இதனால் பின் யாங்களும் உரைத்துக்கொண்டே வந்து கொண்டே இருக்கின்றோம். இவ்வுலகத்தில் யாரும் யார் மீது பின் குறைசொல்ல இனிமேலும் மனிதன் இறைவன் மேலேயே குறை சொல்லுவான் அது தவறு என்பேன்.

நிச்சயம் தான் தான் செய்த பாவத்திற்கு தான்தான் தண்டனையை அனுபவிக்க வேண்டுமே தவிர இறைவன் மேல் குற்றம் சொல்வதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை என்பேன்.

இதனால் இன்னும் பல மாற்றங்கள் நிகழ போகின்றது. வரும் காலங்களில் இதனால் மனிதன் யுத்தத்தில் எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே பல கஷ்டங்கள் நடந்தேறும் இதனையும் தடுப்பதற்கு சித்தர்கள் முயற்சிகள் செய்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

கலியின் வேகம் ஆண்டுகளாக ஆக ஆக கலியின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பக்தர்களுக்கு எவை கூற?

பக்தர்களுக்கு பக்தர்களே விரோதம் ஆவார்கள்.

பக்தர்களுக்கு பக்தர்களே யான் தான் பெரியவன் நீ சிறியவன் என்ற போட்டிகள் இனிமேலும் வரும்.

வேண்டாம் மனிதனே! அறிவுகள் பலமாக படைத்திருக்கின்றான் இறைவன்.

ஆனால் யான் மனிதனை அறிவுள்ள முட்டாள் என்றுதான் உரைப்பேன்.

ஏனென்றால் எதையுமே தெரிந்து கொள்ளாமல் பிறக்கின்றான் மனிதன் பின் எதனையுமே தெரிந்துகொள்ளாமல் இறந்து போகின்றான் மனிதன். என்ன லாபம்??

இதனிடையே சிலகாலம் போராட்டங்கள் சிலகாலம் எவை எவையோ நினைத்து ஆனாலும் இதனின்றி எவ்வாறு நீ எதன் மூலம் மிகப் பற்று வைக்கின்றாயோ அதன் மூலமே அழிவு என்பது தெரியாமல் போய்விட்டது.

ஏன்?  நமச்சிவாயம்!

உரைத்ததை நன் முறையாகவே நன் முறையாகவே பயன்படுத்துபவர் எவர்?? எவர் என்பேன். 

ஏன்? இறைவனே மனிதனிடம் மனிதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றான்.

எதனால்??

பலபல ஞானியர்களையும் இறைவன் உருவாக்கினான் ஆனால் ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை .இல்லை.

 ஏன்? 

இயேசுவும் நல் முறைகளாக நபிகள் நாயகமும் தன் தன் இனத்தோரை இப்படி மனிதர்கள் பின் யாங்கள் சொல்லாததை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் கலியின் வேகம் கலியவே வென்று விடுவதாக உள்ளது.

 இதனால் மானிட ஜென்மங்களே திருந்திக் கொள்வது நன்று என்பேன்.

புத்தனே வந்தாலும் மனிதன் பின் எவ்வாறு பல பல உண்மைகளை சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஆனால் அவனுக்கு எதிராகவே போராட்டங்களாம்! மனிதன் திருந்துவதாக இல்லை திருந்துவதாக இல்லை இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் இன்னும் கஷ்டங்களை இறைவன் ஏற்படுத்துவான் என்பேன்.

அதனால் மனித ஜென்மங்களே திருந்துங்கள் நீங்கள் சரியாக நடந்து கொண்டால் இறைவனை உன்னிடத்தில் வந்து அனைத்தும் செய்வான். பின் நீ சரியாக நடந்தது கொள்ளவில்லை என்றாலும் நீ இறைவனை தேடியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அன்பு மக்களே கேளுங்கள் இனிமேலும் உறங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்பேன்.

விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொண்டால் தான் நன் முறையாக நன்முறை களாகவே நீங்களும் உங்கள் சந்ததிகளையும் நல் முறைகளாக வலம் வருவார்கள் இவ்வுலகத்தில்.

அதை விட்டுவிட்டு பின் மனதை பின் எவையெவை மீதோ செலுத்திக் கொண்டே இருந்தால் போதாது வாழ்க்கை. 

பிறப்புக்கள் தோன்றித் தோன்றி கஷ்டங்கள் பட்டு பட்டு கடைசியில் பின் பைத்தியக்காரன் ஆகவே போய்விடுவான்.

யான் பல மனிதர்களை பலப்பல மனிதர்களை இவை  மூலம் பார்த்துக் கொண்டே தான் வந்திருக்கின்றேன் இக்கலியுகத்திலும். 

யான் முன்பே சொன்னேன் என் நூல்களையும்(திருமூலர் திருமந்திரம்) படிப்பதால் மாற்றங்கள் உண்டாகும் என்பேன்.

ஆனாலும் அதையும் அழித்து விடுகின்றான் மனிதன் வேண்டாம் முட்டாள் மனிதனே. மனிதனே இனிமேலும் கேளுங்கள் யான் சொல்வதையும் நன் முறைகளாக கவனித்து என்னுடைய நூலையும் சிறிது ஆராயுங்கள். அதில் எவ்வாறு எழுதி இருப்பதைப் பற்றியும் யான் விளக்கமாக பின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு வருடமாக நினைத்து நினைத்து உலகத்தில் மனிதன் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே  என்று எண்ணி தான் யானும் படைத்திருக்கின்றேன்.

இதனால் மக்களே பின்வரும் காலங்களில் அநியாயங்களை மனிதனே  ஏற்படுத்துவான். இதற்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள்.

காரணம் ஆகாதீர்கள் இறைவன் மீது குற்றம் சொல்லாதிருங்கள். 

சொல்லுங்கள் இனிமேலும் நாங்கள் நல் முறைகளாக வாழ்வோம் நல்லெண்ணத்தோடு வாழ்வேன்.

 பின் பொய் கூறாமை பின் நன்மைகள் தன்னைப்போலவே பிறரையும் எண்ணுவேன். அனைவரும் ஒருவரே அனைவரும் என் சொந்தங்களே என்று நினைத்து நினைத்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன் .

விடிவெள்ளி உண்டு என்பேன் இதனால் யானும் சொல்கின்றேன் மறைமுகமாகவே.

மறைமுகமாகவே உரைக்கின்றேன் இனிமேலும் கெடுதல்கள் எதன் மூலம் மனிதன் செய்கின்றானோ அதன் மூலமே அழிவுகள் நிச்சயம் உண்டு உண்டு இதனால் பல மாற்றங்கள் புவி உலகில் உண்டு இதனால் இறைவனும் சற்று மௌனம் சாதித்தால்  நீங்கள் நிச்சயமாய் அழிவுகளில் ஏற்பட்டு விடுவீர்கள்.

யான் சொல்கின்றேன் இனி மேலும் நீங்கள் தவறான பாதையில் செல்கின்றது நிச்சயம் என்றால் யாங்களும் கஷ்டங்களை நிச்சயம் நிறைய அள்ளி தருவோம் இதுவும் நிச்சயம் என்பேன்.

நோய்களையும் ஏற்படுத்துவோம் என்பேன்.

ஆனாலும் இதனையும் மனிதன் உணர தான் கடமையை செய்துவர எத்துன்பமும் வருவதில்லை மனிதனுக்கு. தன் துன்பத்தை நிச்சயம் இறைவன் துடைப்பான் என்பேன்.

அதை விட்டுவிட்டு மனிதனே ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இனிமேலாவது பிழைத்துக் கொள்.

ஏன்? நீயும் இருக்கின்றாய். மனைவியும் இருக்கின்றாள். ஏன் உன் பிள்ளைகளை பற்றியும் நினைத்துப் பார். சிறிதாவது நினைத்துப்பார் அப்பொழுது தெரியும் நீ தான் கர்மம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றாயே?  

இன்னும் உன் பிள்ளைகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் கர்மத்தை சேர்த்து வைக்க வைக்கின்றாயா? 

தெரிந்து கொள் வேண்டாம் இனிமேலும் நல் பாதையில் செல்க.

என்னுடைய நூல்களையும் நல் முறைகளாக ஓதுக.

அனைவர் இல்லத்திலும் ராமனின் கதை ராமாயணம் என்கின்றார்களே அதையும் வைத்துக்கொள்ளுங்கள் .கீதையையும் வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள நன்றே. 

அதன் மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவன் நல் முறைகள் ஆகவே சொல்லி வந்து கொண்டே இருக்கின்றான் இதனையும் பின் தாழ்வானதாக மனிதன் நினைத்தும் இன்னும் மயங்கி பின் கலியுகத்தில் மாய உலகத்தை நோக்கி தான் மனிதன் செல்கின்றான் .

அதனை யாவது யாங்கள் நிச்சயம் நிச்சயமாய் தடுப்போம் தடுப்போம் இவையன்றி கூட இனிமேலும் ஞானங்கள் நல் முறைகளாக நல் மனதாய் பிறப்பதற்கு ஒன்றே வழி கஷ்டங்கள் தான்.

கஷ்டங்கள் கொடுத்தால்தான் மனிதன் இனிமேலும் திருந்துவான்.

 ஆனாலும் இறைவனை சொல்லி இறைவன் பெயரைச் சொல்லி பின் பொய் பேசி புறம் கூறி பின் அவனவன் வாழ்வதற்கு அவன் பணத்தை சேமித்து கொண்டிருக்கின்றான்.

பணத்தை சேமித்ததை  விட அதனோடு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கிறான் என்பதை அவனுக்கு தெரியவில்லை இதனால்தான் அறிவுள்ள முட்டாளே என்கின்றேன் மனிதனை.

இதனால் நல் முறைகளாக முதலில் நீ பிழைத்துக் கொள் பிழைத்துக் கொள் பின் இறைவன் நல் முறைகள் ஆகவே மனிதனை படைத்தான் எப்படி?

அப்படியே அவனுக்குத் தெரியும் மனிதர்களை காப்பாற்றுவதற்கு.

ஆனால் இவையன்றி நீயும் பிழைப்பதற்காக வே அதைச் செய் இதைச் செய் இவையெல்லாம் கூறிக்கொண்டே வந்துகொண்டிருந்தால் நீயும் கர்மத்தை சேர்த்துக் கொள்வாய் பின் உன் நிழலில் வருவோர் அனைவரையும் கர்மத்தின் பாதைக்கு எடுத்துச் செல்வாய்.

அதனால் இறைவனை நம்புங்கள் இறைவனை நம்புங்கள் இறைவனுக்கு நல் முறையாய் பின் இறைவனை தேடி அலையுங்கள். ஆனாலும் இறைவனின் ரூபம் எங்கு உள்ளது? என்பதைக் கூட மனிதன் காணவில்லை.

 பல பெரியோர்கள் உரைத்தும் விட்டனர்.

இறைவனை எங்கு வணங்குகின்றார்களோ அங்கு வருவான் நல் மனதாக இருந்தால் மட்டுமே.

இதனால் விதிவிலக்கும் உண்டு என்பேன்.

பின் வெளிச்சத்திற்கு வாருங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் மட்டுமே பிழைத்துக் கொள்வீர்கள் இனிமேலும்.

கர்ம பூமியில் 

கர்மா மனிதனை சுமந்து கொண்டிருக்கின்றதா?? 

இல்லை 

மனிதன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கின்றானா?? 

என்பதைக்கூட சந்தேகத்திலேயே திகழ்கின்றது .

 மனிதன் யோசிக்க.

புத்திகள் செயலாக்குக.

அறிவுகள் மேம்படுக.

அறிவுகள் கொடுத்தான் இறைவன். அவ்அறிவை ஒழுங்காக பயன்படுத்தியதே இல்லை மனிதன் இதனை பல சித்தர்களும் பல பல வண்ணங்களில் எடுத்துரைக்கின்றோம் .

ஏன்? அகத்தியனும் மனிதன் திருந்துவான்! திருந்துவான்! என்று

பூவுலகில் நிச்சயமாய் நின்ற பொழுதும் கூட பின் திரிந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறான்! அகத்தியனும்.

 இவ்வளவு மனிதன் கீழ்தரமாக உள்ளானே! என்று.

அகத்தியன் எப்பொழுதோ புவி உலகத்தில் வந்து இறங்கி விட்டான்.

மனிதனை நோக்கி பார்த்தால்!  ஆ!!?? இவ்வாறா?  மனிதன் இருக்கின்றான்! பொய் வேடமா! போடுகின்றான்! இவையெல்லாம் எண்ணும் பொழுது!

அகத்தியனுக்கே  மனம் பொறுக்கவில்லை அதனால்தான் அகத்தியனும் பின் தலைகுனிந்து  உட்கார்ந்து விட்டான்.ஓர் இடத்தில். பின் அவை எவ்வாறு என்பதை நிமிர்ந்து பார்த்தால் குற்றாலத்திலே இப்பொழுது கூட தங்கி இருக்கின்றான்.

அகத்தியன் என்பேன்.

இதனையும் நன்குணர்ந்து இனிமேலும் பைத்தியக்காரனாக திரியாதே மனிதனே எச்சரிக்கின்றேன் யானும் கூட இதனால் தான் உணர்ந்து உணர்ந்து யான் பல நூல்களை படைத்தேன். அதில் மனிதன் பல நூல்களை அழித்து விட்டான் .

அவ் நூல்களின் வழியாக சொல்லியதை யானும் மக்களுக்கு இனிமேலும் உரைப்பேன். அழிந்ததை இனிமேலும்.

ஆனாலும் மனிதர்கள் யாங்கள் எழுதியதை நல் முறைகளாக உண்மையானதை கலியுகத்தில் எப்படி நடக்கின்றது யார் காப்பார்கள் என்பதையெல்லாம் மனிதன் தெரிந்துகொண்டு பின் மனிதன் மனிதனே அழிய வேண்டும் என்று எண்ணி அதனையும் அழித்துவிட்டார்கள் பைத்தியக்கார மனிதர்கள்.

பைத்தியக்கார மனிதர்களே இனியும் திருந்துங்கள் வேண்டாம் வேண்டாம் என்பேன் எதனையும் நினைத்து.

இறைவனின் பலமே இங்கு அதிகமாகக் கூடிக்கொண்டிருக்கின்றது .

இதனால் மனிதனே யான் தான் இறைவன் 

யான் தான் இறைவன் யான் குரு என்றெல்லாம் மனிதன் இனிமேலும் தன்னைத்தானே போற்றி கொள்வான்.

அது பொய் அதுதான் பொய் அங்கேதான் கர்மம் ஆரம்பிக்கின்றது.

யான் தெரியாமல் கூறுகின்றேன் கூறுகின்றேன் இவையே என்று யான் முருகனை பார்ப்பேன்

யான் ஈசனை பார்ப்பேன் .

யான் அகத்தியனை பார்ப்பேன் யான் சித்தனை பார்ப்பேன்.

யான் ஏன் எதனை எதனையோ என்று யான் இறைவனை நேசித்த தோடு பார்ப்பேன் என்று ஆனால் இதனை எல்லாம் எதற்காக என்று தெரியுமா??

பணம் சம்பாதிப்பதற்கே! 

பணம் சம்பாதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் மனிதன் தன்னைத்தானே இழந்து கொண்டு.!

 மனிதா இப்பொழுது தெரியாது நீ செய்யும் செயல்கள்.

தெரிந்து கொள்!

மகனே மகளே என்று கூட அகத்தியன் அன்பாக உரைத்துக் கொண்டிருக்கின்றான்.

அப்பொழுது கூட அகத்தியனா? அகத்தியனா??

போனால் போகட்டும் எந்தனுக்கு பணம்தான் மூலாதாரம் என்று கூட சென்று கொண்டிருக்கின்றான் மனிதன்.

என்ன லாபம்??

லாபமில்லை கோடிகோடி மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் இவ்வுலகத்தில் பிறக்கின்றான் திருமணம் செய்கின்றான் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்றான் கடைசியில் பார்த்தால் இறைவா பயமாக இருக்கின்றது என்று கதறுகிறான்.

முதலிலேயே நீ இறைவனை பிடித்துக்கொண்டால் இறைவனே அனைத்தும் தருவான் எடுத்துக்கொள் என்று.

இதனால் பயம் ஒன்றும் இல்லை ஆனாலும் மனிதனின் நிலைமையைப் பார்த்தால் தவறுகள் இனிமேலும்.

ஒருமுறையும் இனிமேலும் விளக்குகின்றேன் ஒருவர் இருவர் தனியாக சென்று தவறு செய்தாலே அது கர்மா நிலைக்கு சமம் ஆகின்றது தெரிந்து கொள்ளுங்கள் எதனை என்று கூட.

எதனை என்றும் நிற்கும் பொழுதும் கூட பலமுறையும் இனிமேலும் வருவார்கள் இன்னும் பொய்யர்கள் திருடர்கள்.

 திருடர்கள் இவர்களும் எப்படி.? கண்டுபிடிப்பது? என்பது கூட!

 ஈசனின் மறு வாக்கும் நல் முறைகளாக

இங்கேயே தன் காசிதனிலே (காசியில்) உரைப்பான் என்பேன். நல் முறைகளாக மக்களுக்கு.

ஈசன் அமைதியாக இனிமேலும் நடந்து கொண்டிருந்தால் உலகம் பொய்யாக கூடிவிடும். பின் ஆற்றில் அடித்துக்கொண்டே போய்விடும் இதனால் இன்னும் பல கஷ்டங்கள் பலப்பல மறைமுகமாகவே வரும்.

 இதனால் ஈசன் நிச்சயமாய் காப்பாற்றுவான் .

அவனுக்கு யாங்கள் எல்லாம் எத்தனை என்றும் கூற முற்படும் பொழுது எங்களுக்கும் தெரிவித்தான்!

 சித்தர்களே நீங்கள் மனிதரை காப்பாற்றுங்கள் என்று. 

ஆனால் மனிதனை போய் பார்த்தால் 

 எங்களை பின் (சித்தர்கள்) கீழ்தரமாக எண்ணி 

எங்கள் பெயரைச் சொல்லி நடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இது தகுமா??

என்று கூட சித்தர்கள் இல்லாமல் இல்லை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பயம் வேண்டும் இனிமேலும் தவறு செய்யாதீர்கள் இறைவன் இருக்கின்றான் இறைவன் தண்டிப்பான் என்று கூட நினைக்க வேண்டும் நிச்சயமாக தண்டிப்பான் என்பேன் .பின் எதனை என்றும் கூட.

இவை போலும் இப்பொழுதும் கூட தண்டித்து கொண்டே தான் இருக்கின்றான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுதான் வந்திருக்கின்றோம் நாங்கள் .

அதனால் மக்களே நீங்கள் ஒன்றும் ஞானிகள் இல்லை 

ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயம் பின் விடிவெள்ளி என்பேன்.

விடிவெள்ளி உண்டு என்பேன் இனிமேலும் பின் ஏமாறாதீர்கள் ஏமாந்து விடாதீர்கள் பின் இரவிலேயே மீந்து விடாதீர்கள். பகலுக்கும் வாருங்கள். பகலுக்கும் வாருங்கள்.

 இதனால் தான் அகத்தியன் அகத்தியன் என்று கூட இனிமேலும் அகத்தியனை பார்த்தால் என் பெயர் அகத்தியன் இப்படியெல்லாம் கூட மனிதர்கள் பொய்யான மனிதர்கள் பெயர் வைத்து திரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.

ஏன் ஏன் பல கோடி வருடங்களாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் இவ்வாறே அகத்தியன் என்ற பெயரை சொல்லி சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பெயரை மாற்றிக்கொண்டு இப்பொழுது அகத்தியன் பல அகத்தியன் என்று கூட பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பின் பகலுக்கு ஒருவனே சூரியன்.

இரவுக்கு ஒருவனே சந்திரன்.

உலகத்திற்கு ஒருவனே அகத்தியன்.

மானிடா தெரிந்துகொள் ஏன் பித்தலாட்டங்கள்??

பிழைப்பதற்கு வேறு வேலை இல்லையா?? உந்தனுக்கு??

வேண்டாம் இனிமேலும் நல்வழிப்படுத்த மனிதனுக்கு மனிதன் முயற்சிகள் செய்ய வேண்டும் .

இவ்வாறு செய்க.

இவ்வாறு திருத்தலங்களுக்கு சென்று வாருங்கள் அங்கே நன்மையை செய்யுங்கள்.

சில மனிதர்களுக்கும் பின் இயலாதவர்களுக்கும் இருக்கும் உன்னிடத்தில் இருந்து நல் முறைகள் ஆகவே கொடுங்கள்.

இயலாதவனுக்கும் இல்லாதவருக்கும். நல் முறைகளாக.

பலகோடி எவ்வாறு என்பதையும் கூட ஜென்மங்கள் எடுத்தாலும் மனிதன் திருந்த போவதாக இல்லை ஏன் நல் மனதாக தூய உள்ளம் ஆக இருந்து விட்டால் ஏன் இறைவனைத் தேடி நீ அலையத் தேவையில்லை இறைவனே உன்னை தேடி வந்து நோக்குவான்.

இதனால் எங்கெங்கு சென்று எங்கெங்கெல்லாம் கர்மங்களை அழிக்க வேண்டும் என்பதைக் கூட அவனே உன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் செல்வான்.

 அதை விட்டு விட்டு பின் பிழைப்பதற்காகவே பின் இறைவனை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தால் 

நிச்சயம் கர்மாக்கள் உண்டு உண்டு உண்டு .

இதனால் பிறவிகள் உண்டு உண்டு உண்டு.

மனிதனே  யான் தான் பெரியவன் என்று நினைத்து விடாதே

யாங்களும் சித்தர்களும் இதன் மூலம் நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோம் மறைமுகமாகவே.

யாங்கள் வந்துவிட்டால் யான் மூலன் (திருமூலர்)  என்று சொன்னாலும் 

ஓ !மூலனா??? என்று கீழேயும் மேலேயும் பார்ப்பார்கள் அதனால் தான் மறைமுகமாக மறைமுகமாக ஆனாலும் அகத்தியனும் இப்புவி உலகத்தில் வந்து பார்த்து திருந்துவானா?  என்றான் .

என்றெல்லாம் எதை எதையோ சொல்லிக்கொண்டு ஆனால் அகத்தியனுக்கே! பின் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்களே! மனிதர்கள் என்று பின் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான்.

மக்களே இனியும் உங்களிடமே இருக்கின்றது தகுதியானவை அனைத்தும் கூட. 

இதனால் சிறு பிள்ளை யிலிருந்து ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஈசனாரும் சொன்னார் என்பேன்.

அதனால் சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தாருங்கள் இப்போதுகூட இப்போதிலிருந்தே கொடுத்தால்தான் இனிமேலும் உலகம் அழியாது என்பேன்.

அழியாது என்பேன் ஆனாலும் 

இனிமேலும் இவ்வாறு உண்மைகளை சித்தர்களும் படையெடுப்பார்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த. இன்னும் ஆனாலும். இதனை அன்றி கூட 

கலியுகத்தில் முதலில் ஆபத்தாக வருபவை நோய்களே என்பேன்.

இதுதான் கலி யுகத்தின் ஆரம்பம் என்பேன்.

புரிந்துகொள்ளுங்கள் இறைவனை நாடுங்கள்.

அமைதியாக மௌனத்தை கடைபிடியுங்கள்.

ஏன் என் இறைவனே இறைவனே வணங்குவதற்கும் போட்டி பொறாமைகள். புத்திகெட்ட மனிதனே திருந்துங்கள்.

அனைவருக்கும் இறைவன் ஒன்றே என்பேன்.

பொறாமைக்காரர்களை

 யானே  நிச்சயம் தண்டிப்பேன் .

பின் அகத்தியனை வணங்கிக்கொண்டு ஏன்? மூலனை வணங்கிக்கொண்டு! ஏன்? போகனை (போகர்)  வணங்கிக்கொண்டு! ஏன் பல பல சித்தர்களை வணங்கி கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்றெல்லாம் திரிந்து விடுகின்றீர்கள்.

பின் பொறாமைக்காரர்களே மனிதர்களை பொறாமைக்காரர்களே என்றுதான் யான் அழைப்பேன் . திரும்பவும்.

மனிதன் முட்டாளே யூகித்துக் கொள் பொறாமை வேண்டாம் பொறாமை வேண்டாம். 

மனிதனடா  நீ உன்னால் என்ன செய்ய முடியும்?? என்ன செய்ய இயலும்?

 பொறாமை படுவதைத் தவிர!

பொறாமை உன்னை அழித்து விடும் என்பதை கூட உந்தனுக்கு தெரியாத வண்ணமாக நிகழ்கின்றது .

வேண்டாம் பின் சித்தர்களை தூண்டினால் நிச்சயம் அடி பலமாக இருக்கும் என்பேன்.

சொல்லி விடுகின்றேன் எச்சரிக்கின்றேன் எச்சரிக்கையாக   சொல்லி விடுகின்றேன் காசி தன்னிலே! 

இனிமேலும் நீங்கள் இவ்வாறு போட்டி பொறாமைகள் கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்று கூறிக்கொண்டே இருந்தால் நிச்சயம் அதி விரைவிலேயே அழிவுகள் உண்டு மனிதனே.

அதனால் உந்தன் நாக்கே உந்தனக்கு பகையாகி விடும் என்பேன்.

அதனால் அனைத்தும் பெரியவர்களே!  என்ற எண்ணத்திற்கு அனைவரும் வரவேண்டும்.

தன் போல மற்றவரை எண்ண வேண்டும் எண்ண வேண்டும் என்பேன்.

பொறாமைக்கார மனிதனே! தேவையா? இது?

யான் காறியும் துப்புவேன்! இனிமேலும் மனிதனை.

ஏன் ?இறைவன் இல்லாததையும் கூட ஏன்? சித்தர்கள் மறைமுகமாக இருப்பதை எண்ணி இவ்வாறு பல வாக்குகளை யான் சொல்லிக் கொண்டு இருந்தால் சித்தர்களுக்கா? தெரிய போகிறது?  இறைவனுக்கா? தெரியப்போகிறது?

என்றெல்லாம் பொய் பேசி புறம் கூறி நல்லோர் போல் நடித்து நன்றி கெட்ட மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் எங்கள் பெயரை சொல்லி.

ஆனாலும் இனிமேலும் இவ்வாறே பிழைத்துக்கொண்டிருந்தால் வரும் காலங்களில் அதி விரைவிலேயே இறைவனும் பொய் சித்தனும் பொய் என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்பேன்.

அதனால் பொய்யான பக்தியை காண்பிக்கவே வேண்டாம் என்பேன்.

ஒன்று நீ திருந்து இல்லையென்றால் அமைதியாக உட்கார்ந்து விடு.

இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.

பொய்கள் எல்லாம் கூறி இவன் ஞானி போல் நடிப்பான் என்பேன்.

 தான் தான் ஞானி தான் தான் சித்தன் தான் எண்ணுவதெல்லாம் சிறப்பு என்றெல்லாம் கூட மக்களை மயக்கி கடைசியில் பார்த்தால் அவன் கர்மா அவனை விட்டு விடாது.

பல நோய்களுக்கு ஆட்பட்டு பின் மறைந்து விடுகின்றான்.

ஆனால் அவனுடைய கர்மா பின் அவந்தனை  அனுபவித்துவிட்டு இவன் பெயரை எவ்வாறு இவன் தன் யார் யார் மக்களுக்குச் சொன்னார்களோ இக் கர்மம் அவர்களுக்கும் சேர அவந்தனும் அழிந்து போவான் என்பேன்.

இதனால் கடைசியில் இறைவா இறைவா என்று வருவது நியாயமா?

அதனால் மனிதன் திருந்தி கொண்டால் மட்டுமே உண்டு என்பேன்.

இனிமேலும் பின் சபதத்தை ஏற்க வேண்டும் .

தன்னைப்போலவே பிறரை எண்ண வேண்டும்.

யான் தான் பெரியவன் என்று எண்ணக்கூடாது. என்பேன்.

யான் தான் சிவனின் மகன் யான் தான் அகத்தியன் மகன் யான் தான் சித்தர்களின் மகன் என்றெல்லாம் பொய் கூறி திரிந்துவிடக் கூடாது.

நீங்கள் அவ்வாறு சொன்னாலும் யாங்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

பின் அவ்வாறே சொல்லுங்கள் ஏன்?

உந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது?? அகத்தியன் பிள்ளை என்றால் ஏன்? உந்தனுக்கு கஷ்டம் வருகின்றது??

எண்ணிப்பார் மனிதனே முட்டாள் மனிதனே அறிவுள்ள முட்டாள் மனிதனே

எண்ணிப் பார்

 காறித் துப்புவேன் இவை போன்று செயல்பட்டால். 

காறித் துப்புவேன்  இவை போன்றும் கூட

முறைகளாக செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள் 

வேண்டாம். அடுத்த வாக்கும் கூட  இக் காசி தனிலே நிச்சயமாய் ஓர் முறை ஈசனும் உரைப்பான். 

இன்னொருமுறை பதிகம் பாடி துதித்து நல் முறைகள் ஆகவே.

 என்று கூட சொன்னாலும் மனிதனுக்கு வெட்கமில்லை வெட்கம் இல்லை என்பேன்.

 போட்டி பொறாமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.

என்ன ?லாபம்? என்ன? லாபம்? 

மனிதன் இவ்வாறே செய்து கொண்டு இருந்தால் வீணாகவே போய்விடுவான் ஏன்? 

இவன் மட்டும் வீணாக போவதில்லை அவனைச் சுற்றி இருப்பவர்களும் வீணாக போய் விடுமாறு செய்து விடுகின்றான்.

ஏனிந்த? மறைமுகமான போராட்டங்கள் போராட்டங்கள்.

வந்தோமா இறைவனை வணங்கினோமா இவ்வுலகத்தில் இருந்து சென்று விட்டோமா என்று இல்லாமல் மனிதன் பொய் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கின்றான்.

மனிதனே தவறு நீ எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் பொய் கணக்கு.

இறைவன் எண்ணும் எண்ணங்கள்தான் மெய்க்கணக்கு. 

இனிமேலும் திருந்துவதாக நீங்கள் இல்லை என்றால் நிச்சயம் யாங்களே தண்டிப்போம் கஷ்டங்களைக் கொடுப்போம் கொடுப்போம் கொடுப்போம்

அப்போதாவது நீங்கள் திருந்துவதற்கான வழிகள் உண்டா? என்று 

உண்டு .

நல் முறை தீயமுறை இவையெல்லாம் எவ்வாறு வருகின்றது என்பதெல்லாம் மனிதன் மனிதன் உணர்ந்து கொண்டு நன்றாக செயல்பட்டாலே இனியும் விடிவு காலம் பிறக்கும் பிறக்கும் .

அடுத்த திங்களும் (மாதமும்)  நமச்சிவாயம் உரைப்பான்.

சித்தன் அருள் ......... தொடரும்!


32 comments:

 1. 1. திருமூலரே வணக்கம். அறிவுரைகள் யாருக்கு. நாட்டை கோவில்களை கொள்ளை அடிப்பனுக்கு நீங்கள் தண்டனை தர தாமதம் ஏன். கோவில்களை சிதைத்தவனை நீங்கள் என்ன செய்தீர்கள்..இங்கு கெட்டவன் திருந்த போவதில்லை. 18 சித்தர்கள் ஒன்றாகி இறங்கி வந்து அரிவுரை சொன்னாலும் கெட்டவன் மாற மாட்டான். திருந்த மாட்டான். கொஞ்சம் விட்டால் திருப்பதி மலையே ஜல்லியாக மாற்றி விற்று விடுவான். கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கு நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வாக்குகள் கொடுக்க வேண்டும். முடிந்தால் கெட்டதை கெட்டவனை இரவோடு இரவாக அழித்து விடுங்கள். ஒரு இரவில் இவர்கள் அழிவை கொடுங்கள். அதை விட்டு விட்டு திருந்து என்றால் எப்படி.

  ReplyDelete
 2. கொரோனா வுக்கு பயப்படாதவன் இவன்..இப்படியே நீங்கள் பொறுமை அக இருந்தால் ஒன்றுமே இருக்காது. கால்வாய் கிணறு ஆறு குளம் இது எல்லாமே ஓர் இரவுக்குள் விற்று பணமாக மாற்றி விடுவார்கள். உங்கள் பொறுமைக்கு அளவே இல்லையா. கைலாச மலையும் ஜல்லியாக மாற்றும் வரை நீங்கள் பொறுமையுடன் இருங்கள். கெட்டவன் திருந்த போவதில்லை. நல்லவர்களையும் சேர்த்து தண்டனை அனுபவிக்க வேண்டுமா? சுனாமி மாதிரி ஓர் இரவுக்குள் கெட்டதை கெட்டவனை அழித்து விட்டு நல்லவர்களை வாழ விடுங்கள். கோவில்களை காப்பாற்றுங்கள்.

  ReplyDelete
 3. தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு யார் உங்கள் அறிவுரை கேட்டு திருந்தப்போகிறார்கள்.சிவன் மகன் அகத்தியர் மகன் என்று இங்கு சொல்வதில்லை. நான் தான் சிவன் அகத்தியர் என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள். கெட்டவன் இந்த சித்தன்அருள் படிக்கும் வாய்ப்பு கிடைக்காது.கெட்டவனால் சித்தன் அருள் படிக்கவும் முடியாது. அதனால் உங்கள் கோபத்தை நேரடியாக காட்டி நல்லவர்களை வாழ வழிவிடுங்கள்

  ReplyDelete
 4. ஒம் அகத்தீசாய நமக

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் பதினெண் சித்தர்களே சரணம்
  ஓம் சத்குரு ஷிர்டி சாய் பாபாவே சரணம்
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 6. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகத்தியர் அடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சித்தருகாவூர் கோவில் பற்றி ஒரு வேண்டுகோள். இங்கு ஒரு 80வயது பெரியலர் (பச்சையப்பன்) கோவில் கட்டி வருகிறார். இவர் 20 வருடங்கள் முன்பு retired ஆன பணம் மொத்ததையும் போட்டு சிவனுக்கு 3 ஏக்கர் நிலம் வாங்கி அதில் பராமரிப்பு பணிகள் செய்து கோவில் கட்டி வருகிறார். கோவில் வேலை நடந்து வருகிறது. இதை கட்டி முடிக்க பொருள் உதவி தேவை. தனக்கு என்று சேர்த்து வைத்த பணம் மொத்தமாக சிவனுக்கு கொடுத்து விட்டு 7000 pension வருமானத்தில் எதுவும் செய்ய முடியாமல் கோவில் வேலை முடிக்க முடியாமல் சிரமம் படுகிறார். அனைவரும் முன் வந்து உதவி செய்ய வேண்டும். உதவுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. Hello,
   Could you please provide me the contact of that person?

   Delete
 7. இதில் என்ன வேடிக்கை என்றால் சிவன் இருந்த கோவில் நிலம் பட்டா போட்டு இடத்தை கையகப்படுத்தி விட்டார்கள். வெட்ட வெளியில் பராமரிக்க ஆள் இல்லாமல் இருந்த சிவனை தான் இந்த பெரியவர் தன் சொந்த சேமிப்பு முழுமையாக போட்டு இடம் வாங்கி சிவன் கோயில் கட்டி வருகிறார். அதனால் தயவு செய்து இவருக்கு உதவி கோவில் முடிக்க வேண்டும்

  ReplyDelete
 8. Replies
  1. Please read it 1037 article sir. He need our help to complete construction of the temple.

   Delete
 9. Dear Nitin sir
  Goto wwww.google.com. Type tamil to english and click search.
  In sithanarul website copy 5 lines(3600 words) and paste in google.com left side box
  you can get english translation. Rest line do like this you can get

  ReplyDelete
  Replies
  1. We cannot rely fully on Google translator , It is having accuracy of 85℅,thank for suggestions,🙏

   Delete
 10. 28th sep Tuesday 2021 article 1037 இதில் அகத்தியர் நமக்கு சொன்ன கோவில் தான் சித்தருகாவூர். இந்த கோவில் பற்றி தான் நான் சொன்னேன். உதவுங்கள் என்று. நிறைய பேர் மனதில் நாம் கொடுக்கும் பணம் தவறாக பயன்படுத்தபடும் என்று சந்தேகம் எழுப்பும். உண்மை தான். இன்று நிறைய பேர் கோவில் கட்டுகிறோம் நன்கொடை தாருங்கள் என்று கேட்டு வாங்கி சொந்த செலவு செய்வதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் இவர் அப்படி இல்லை. கோவில் அழிக்க பட்டு சிவன் நந்தி மட்டுமே திறந்த வெளியிலேயே இருந்து இருக்கிறார்கள். அவர்கள் இருந்து இடம் பட்டா போட்டு கைமாறி விட்டது. சிவன் இருந்த இடத்திலே கோவில் அமைக்க முடியாது. பட்டா போட்டு இது என் இடம் என்று சொல்லும் தர்மமான மனிதனிடம் போராட முடியாது. அதனால் தான் இந்த பெரியவர் பச்சையப்பன் அய்யா அவர் சேமிப்பு போட்டு ஈசனுக்கு 3 ஏக்கர் இடம் வாங்கி அதில் தான் கோவில் கட்டி வருகிறார். அவர் வயதான பெரியவர். அவரால் இனி உழைக்க முடியாது. அதனால் முடிக்க முடியாமல் சிரமம் படுகிறார். அகத்தியர் சொன்ன கோவில் இது.அதனால் உங்கள் பணம் வீணாக போக வாய்ப்பு இல்லை. நம்பி உதவுங்கள். அகத்தியர் அருளால் நல்லதே நமக்கு நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Please contact Sivanadiyar kootam in south
   I have the contact of Sivanadiayar kootam head contact no
   Please contact Mr.Hariharan

   Delete
  2. Can I have the contact of Mr Hariharan, head of Sivanadiayar kootam

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Thank you very much
   Om agstishay namah🙏

   Delete
 18. ஸ்ரீ திருமூல சித்தர் பிரானுக்கும், அனைத்து சித்தர் ஸ்வாமிகளுக்கும் அடியேன் நமஸ்காரம்..தாங்கள் என்னதான் அறிவுரை கூறினாலும், நாலு அயோக்கியர்கள், கண்ணெதிரே தண்டனை அனுபவிப்பதை பார்க்காமல், இந்த மனிதர்கள் பயப்படவோ,திருந்தவோ போவதில்லை..இன்றைய தினம், தென்னாட்டின் தமிழ பூமியின் கோவில்கள் அடைக்கப்பட்டு, தெய்வதரிசனம் தடுக்கப்பட்டு, தெய்வத்தின் சொத்துக்கள் பகல்கொள்ளை அடிக்க்ப்படுவதை தடுக்க இயலாமல், தெய்வதரிசனத்துக்கு ஏங்கி, வழி தெரியாமல் , மனதுக்குள் ஊமை அழுகை அழுதுகொண்டு, தவிக்கும் மக்களுக்கு , என்று விடியும்..அயோக்கியத்தனம் செய்பவன், எந்த ஊறும் இன்றி , ராஜபோகமாக வலம் வருவதை பார்க்கும்போது, திட நம்பிக்கை கொண்டவனுக்கே சித்தம் கலங்கி, அவநம்பிக்கை துளிர் விடுகிறது..இது மேலும் வளராமல் இருக்க, தெய்வநம்பிக்கை திடமாக இருக்க, கோவில்கள், வழிபாடுகளுக்கு ஊறு விளைவிப்பவன், ஏதாவது ஒரு வழியில் ,அனைவருக்கும் கண்முன் தெரியும் வகையில் தண்டிக்கப்படல் வேண்டும்...இறை சித்தம், திருந்த அவர்களுக்கு வாய்ப்பளித்தாலும், திருந்தாத அவர்கள் தண்டனையை வெளிப்படையாக அடைவதே, அவநம்பிக்கை பெருகாமல், கொடியோரைக்கண்டு, தாமும் அதேபோல ஆகிவிடலாமா?-என்ற எண்ணம் கொண்டோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்...அடியேனது எண்ணத்தில் தவறு இருப்பின் , தயை கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்...இன்றைய கொடூரங்களை கண்டு மனம் வெதும்புவதால்,தங்களிடம் இவ்வாறு முறையிடத் தோன்றுகிறது...சித்தர் ஸ்வாமிகள்தாம் இதற்கு விரைவில் ஒரு நல்ல வழி காண்பிக்கவேண்டும்...அனைவரும் காண வெளிப்படையான தண்டனைகளே, இன்றைய நிலையில் , ஓரளவாவது இறை நம்பிக்கை நிலைநிறுத்தப்பட அவசியம் என்று தோன்றுகிறது...அனைத்தும் அறிந்த சித்த மஹா புருஷர்கள் வழிகாட்டி அருளவேண்டும்....சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், அடியேன், சத்தியநாராயணன், சென்னை-63

  ReplyDelete
  Replies
  1. சுய நலத்திற்காக நாட்டைக் கெடுப்பவர்கள்,பாரம்பரியத்தை சீர்குலைக்க நினைப்பவர்கள்,பிற உயிரினங்களை வதைப்பதையே தொழிலாக கொண்டவர்கள்,தகுதிக்குமேல் சம்பளம் பெற்றுக்கொண்டும் லஞ்சம் பெறும் ஊழியர்கள்,நேர்மையற்ற வணிகர்கள் இவர்களை உடனடியாக தண்டிக்க இறைவன் முன்வரவேண்டும்.

   Delete
 19. //இயேசுவும் நல் முறைகளாக நபிகள் நாயகமும் தன் தன் இனத்தோரை இப்படி மனிதர்கள் பின் யாங்கள் சொல்லாததை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.// - சித்த மஹாபுருஷர் ஸ்ரீ திருமூல சித்தர் பிரபுவுக்கு, அடியேன் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்..தங்களுடைய மேற்கண்ட நாடி வாக்கினை படித்தவுடன் எனக்கு இதனை எழுதவேண்டும் என ஒரு உந்துதல் இருந்துகொண்டே இருக்கிறது...அடியேனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு முதற்கண், பொறுத்தருளக் கோருகிறேன்...இன்று ஹிந்து தர்மமும், கோவில்களும் பண்பாடும் சிதைவதற்கு பெரும்காரணம், தாங்கள் குறிப்பிட்ட நபிகளும் ஏசுவும் உபதேசித்த மார்க்கங்களின் அத்துமீறல் என்பது வெள்ளிடை மலை..இஸ்லாம் / குரான் பெயரைச்சொல்லி, இங்கு நடந்துகொண்டிருக்கும் 800 ஆண்டு அட்டூழியங்கள், ஏசுவின் பெயரால், இந்த மண்ணில் இன்றும் நடந்தேறும் கேவலங்கள் தங்களுக்கு தெரியாததல்ல..ஹிந்து தெய்வங்களை சாத்தான் என்றும், ஹிந்து பெருமக்களை, நாங்கள் வணங்கும் மஹாபுருஷர்களை பாவிகள் என்றும் அழைத்து கேவலப்ப்டுத்துவது ஏசுவுக்கும் ,முஹம்மது நபிக்கும் உடன்பாடானதா? அது அவர்களை பொறுத்தவரை சரி என்றால், ஏன் மனம் வெதும்பி, தங்கள் மக்களை நல்வழி நடக்க அறிவுறுத்தவில்லை?- பாரத வர்ஷத்தின் சித்த மஹாபுருஷர்களான தாங்கள், நவநாத சித்தர்கள், ரிஷி முனிகள் ஜீவன் முக்தர்கள், எங்களை பல்வேறு வகையில், ஸ்வப்னம், ஆவேசம், நாடி வாக்கு போன்றவை மூலம் வழி நடத்துவது போல , அவர்களால் செய்ய இயலாதா? அல்லது மனமில்லையா? தற்போது கூட, தங்களைப்போன்ற மஹா புருஷர்கள், தெய்வநிலையில் , அவர்களை தொட்ர்பு கொண்டு ஆவன் செய்ய கோரலாமே?-நமது கஷ்டங்கள், ஆப்ரஹாமிய மிலேச்சர்களின் இறை வழி காட்டுதல் இன்மையால் என்றால், அதனை ஏதாவதொரு வழியில் சரி செய்யலாமே? அல்லது, இம்மாதிரி கஷ்டங்கள் அனுபவிப்பது, இறைவன் பாரத ஹிந்துக்களுக்கு தரும் சோதனை, அல்லது அனுபவித்து தீர்க்க வேண்டிய கர்மா- என்பது வெளிப்ப்டையாக தெரிந்தால், இன்னும் ஊக்கத்தோடு இறை சிந்தனை, பிரார்த்தனைகளில் ஈடுபட்டு கர்மாவாக இருந்தாலும், அதை அனுபவிக்கும் மனோ பலத்தை தரும்படி, இறைவனிடம் பிரார்த்தனை செய்ய இயலுமே? இல்லை, இது கர்மா அல்ல, எதிர்கொள்ள இயலும்-என்றால், அத்றகான பணிகளிலும், தங்களைப்போன்ற சித்த மஹா புருஷர்களிடம், வழிகாட்ட கோரி, பிரார்த்தனை செய்ய இயலும் இல்லையா? திக்கு தெரியாத நிலையில், ஒரு திணறலான சூழ் நிலையில் இருக்க வேண்டியது இல்லையே? சித்த மஹா புருஷரே, தாங்கள்,அல்லது தங்களது சித்த கணத்தை சார்ந்த ஒரு சித்தர், அடுத்த நாடிவாக்கில் இன்றைய நிலைக்கு, ஒரு தீர்வு, அல்லது, இன்றைய கஷ்டம் நீடிக்கும் கால அளவு, அவற்றை போக்க செய்யவேண்டிய பிரார்த்தனை முறைகள், நடவடிக்கைகள், அப்படி, ஒரு கஷ்டத்தை அனுபவித்தே ஆகவேண்டிய சூழல் நிலவினால், அதைப்பற்றிய ஆமோதிப்பு, ஆகியவற்றை தெளிவு படுத்தவேண்டும் என அடியேன் பிரார்த்தனை செய்கிறேன்..திசை அறியாமல், இருப்பதை விட இருளில் தெரியும் விளக்கு வெளிச்சம்போல இன்று தெரியும் தங்களிட்ம் தவிர வேறு யாரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்க/ பிரார்த்திக்க இயலும் சித்த பிரபு? எங்கள் மீது கருணை காட்டி ஒரு தெளிவான வாக்கை தாருங்கள், வழி காட்டுங்கள் -என்ற வேண்டுதல்களோடு- அடியேன்-சத்தியநாராயணன்,சென்னை -63

  ReplyDelete
 20. ==========
  Part #1
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  Respecting Chitrambalam the ruler of the world, Thirumoolan speaking (Thirumoolar).

  In a good way, blessings (anugraham) keep coming to humans, but man does not know how to use it properly.

  If you know, then, everything, will happen as you thought in your mind, will happen, I will say. Thus, we also, thinking how so many different people should come (grow) and put them in proper work and trying to develop them as alternatives (alternate skill) as well.

  But man, by evil thoughts, thinks of evil and perishes. Why? Looking at the man's trend (behavior), it seems to be not right.

  Because of this, then, we keep on saying and keep coming. In this world, everyone on whom, then to blame, henceforth, man will blame on God. That's wrong, I would say.

  Surely, for the sin he has committed, only he has to suffer the punishment himself, humans are not qualified to blame the God, I will say.

  Thus, many more changes are going to happen. In the times to come, because of this, many hardships will take place just as man is in war. To prevent this, the Siddhars have been making efforts.

  The speed of Kali, over the years, the speed of Kali has been increasing. So, what to say to the devotees?

  To the devotees, the devotees themselves will be hostile. Devotees to devotees, I am the big one, you are the small one, such contests will come in the future as well.

  No man! The God has created knowledge strongly.

  But I would call man a wise fool.

  Because man is born without knowing anything and then man dies without knowing anything. What is the profit ??

  Meanwhile, for some time struggling, for some time thinking of something, but how without this, "by what means are you most obsessed, through it all the destruction", that is not known.

  Why? Namachchivayam!

  Who uses the lessons taught in a good way, in a good way?? Who, I will say.

  Why? The God himself, in human, thinking of man and grieving.

  Why ??

  God created many many sages but man is not going to change. No.

  Why?

  Jesus, too, in a good way Namigal Nayagam as well, then, says, everything we did not say, people are doing.

  Thus, the speed of Kali, Kali itself is about to win.

  Thus, human beings, it is good to change, I will say.

  Though the Buddha came, humans then, said many, many facts, and gone. But fighting against him as well! The man is not going to change. Not going to change. If it continues like this, surely the God will cause more difficulties, I will say.

  So, human beings, change. If you behave properly the God will come to you and do everything. Then there is no point in you seeking the God even, if you have not done the right thing.

  Dear people, listen, do not sleep anymore, I will say.

  Awake, only if you wake up, in a good way, you and your descendants, in a good way, will come around (survive), in this world.

  ReplyDelete
 21. ==========
  Part #2
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  Leaving that, then if the mind, then keep paying attention on something something, life is not enough.

  Births appear again and again, facing problems again and again, eventually, he will become insane.

  I have been seeing so many people, so many people, through these, even in this Kali yuga.

  I have already said that reading my books (Tirumular Thirumanthiram) will bring about change, I will say.

  But still, he destroys it as well. Don't. Stupid man. Man, listen hereafter. Take a good look at what I am saying and explore my book a bit. I explained how it was written and then I thought about every song every year and I created it thinking that man is living like this in the world.

  Thus, people, in the following times, man will cause injustice. You don't become cause for this.

  Don't be the cause. Do not blame the God.

  Tell we will live in good ways and live in good thoughts.

  Then I will not lie, then the benefits, I will think others as myself. Thinking, everyone is one, everyone is my relative, only if you think, I will say that there is dawn (Vidi velli).

  I say there is dawn and so I say indirectly.

  Indirectly speaking. Henceforth, by what means does man do harm, with that, destruction is certain. Certainly. Thus, there are many changes in the Earth world. Thus, if the God is a little silent, you will surely be doomed.

  I say, if you're sure you're going the wrong way again, we're sure to give you a lot of trouble too. This is also for sure, I will say.

  We will cause diseases, I will say.

  Yet, man has to realize all this, to do his duty, and suffering (no suffering) does not come to man. The God will surely wipe away his suffering, I will say.


  Leaving that, learn to live properly as a human being. Henceforth, survive.

  Why? You too, are there. There is also the wife. Why even think about your children. Think a little at least. Then you know, you're the one adding the karma?

  Still, your children and their children, are you saving karma for them?

  Know that. Do not. From now on, go on the good path.

  Read my books (texts) in a good way.

  Everyone in the house says Raman's story is Ramayana. Keep it as well. Keep the Gita as well. Good to keep it with you.

  Through it the God keeps on saying good ways in every matter. Man goes to the world of magic in Kali Yuga after he thinks that this is inferior and becomes more enchanted.

  We will definitely stop it. Even without these, henceforth, difficulties are the only way for wisdom to be born into good minds in good ways.

  Only if difficulties are given, man hence forth, will change.

  Yet, saying the God, saying the name of the God, then lying, complaining, then, for him to live, he is saving money.

  Little did he know that he was adding karma to it rather than saving money. This is why I call man an intelligent fool.

  Thus, in a good way first you survive, survive. Then God, in good ways, how did God create man?

  As such, he (God) knows, to save humans.

  But, besides these, "do that, do this", for the sake of survival, if you keep saying all this, you too will add karma and then take all those who come in your shadow, to the path of karma.

  ReplyDelete
 22. ==========
  Part #3
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  So, trust the God. Believe in God. To God, in good ways, then wander in search of God. But where is the image (roopam) of the God?, the man did not even see that.

  Many seniors, have said it as well.

  The God, wherever they worship, will come there, only if you are in good faith (mind).

  Thus, there are exceptions as well, I will say.

  Then come to light. You will only survive if you come to light anymore.

  On the earth of karma (Karma Bhoomi), is karma carrying man ??

  Or, Is man carrying karma ??, even that is in doubt.

  Think man.

  Process the intellects.

  Improve knowledge.

  The God gave knowledge. Man has never used that knowledge properly. Many Siddhars express this in many different colors.

  Why? Agathian, man will change !, will change !, saying that
  even when standing firm on the planet, then, he is wandering. But still, sitting and thinking!, Agathian as well.

  So much man is inferior! That.

  Agathian, long time ago, came down to Earth.

  Looking at the man !, ah !! ??, like this ?, the man is there! Lying pretending !, all these, when thinking!

  For Agathian himself, the mind does not tolerate. That is why Agathian also bowed his head and sat down in a place. Then if you look straight at how they are, he still stays in the Courtallam (Kuttralam), even now, Agathian, I will say.

  Realize this, and don't go crazy anymore, man. I warn you, too. This is why, realizing and realizing I created so many texts (books). In it man has destroyed many texts.

  What I said through those texts, to the people, henceforth, I will tell. What was destroyed, henceforth.

  Yet, human beings, what we have written, what is true in good ways, "how it happens in Kaliyuga, who will save", knowing that man, then man, thinking that man himself should perish, destroyed it as well. Mad men.

  Crazy men, henceforth, change. Don't, don't, I will say, thinking everything.

  The power of the God is gathering more and more here.

  Thus man, I am the God. I am the God, I am the Guru, saying that, man henceforth, will glorify himself.

  That's a lie, that's a lie, that's where the Karma starts.

  I unknowingly say, say, that these are, I will see Murugan.

  I will see Eshan.

  I will see Agathian, I will see Siththan.

  I wonder why, what, that I will see the God with the beloved, but do you know what all this is for?

  Just to make money!

  Man is not only making money but also losing himself.!

  Manitha, do not know now, the actions you do.

  Know that!

  Even son, daughter, Agathiyan is lovingly narrating.

  Even then, Agathiyana? Agathiyana?

  Let him go, for me, money is the source (important), saying that, man is going.

  What is the profit ??

  No profit. I have been looking at billions of people.
  He is born into this world, he marries, having children he lives, and at last, God (Iraiva), he cries out (screaming) that he is afraid.

  ReplyDelete
 23. ==========
  Part #4
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  If you catch the God first (itself), the God will give you everything, saying take it.

  Thus there is no fear. But if you look at the situation of man, mistakes, henceforth.

  Once again, I will explain.
  One or two, if you go alone and make a mistake it becomes equal to the state of karma even if you know what it is.

  Whatever it is, even when standing, many times, many more will come, more liars, more thieves.

  Thieves, how to find these too ?, even!

  Eshan's next blessings, in good ways, is here, in his kasi (in kasi), will speak, I will say. To people in good ways.

  If Eshan were quietly walking any longer, the world would lie, together.
  Then, hitting the river, go away. Thus many more difficulties will come indirectly.

  Thus Eshan will surely save.

  To him, we all, when trying to say how many, told us too!.

  Siddhars, you save man, said that.

  But if you go and see the man, he thinks of us (the Siddhars) as inferior and pretends to live by our name. Is it worth it ??

  That is not even without the Siddhars. They are just watching. They are living. Should fear (humans). Make no mistake anymore. The God is there. One should even think that the God will punish. Definitely will punish, I will say. Even if it means anything.

  Like these, he is still punishing. We have been causing problems for everyone in every way.

  So, human beings, you are not sages.

  But if you all come together then I will definitely call it dawn.

  I will say, there is dawn. Don't be fooled anymore. Do not be deceived. Then, don't stay in the night itself.
  Come during the day as well. Come during the day as well.

  This is why, even if it is Agathian, Agathian, if you look at Agathian anymore, my name is Agathian, even like this, people are wandering around with false human names.

  Why, Why, I'm been watching for billions (koti) of years. Thus, by saying the name Agathian, deceiving and changing the name, now, Agathian, many even Agathian, are lying.

  But then, there is only one sun for the day.

  For the night, there is only one moon.

  To the world, there is only one Agathian.

  Manitha, find out, why the fakes ??

  Is there no other job to survive ?? To you ??

  Don't, no longer, man to man, to make efforts to do good.

  Do so.

  Thus, go visit the temples. Do good there.

  For some people, and for those who can't, there are, from you, so give in good ways.

  For the incapable and for those don't have. In good ways.

  Even if humans take billions (koti) of births, man is not going to change. Why do you not need to wander in search of the God if you have a good heart (mind) and a pure heart?. The God will come looking for you and look at you.

  Thus, where to go, even where the karmas have to be destroyed, he will take your hand and lead you away.

  Leaving that, then for survival, then surviving in the name of God, surely there are karmas, definitely, definitely.

  Thus, there are re-births, definitely, definitely.

  Man, do not think that I am the greatest.

  ReplyDelete
 24. ==========
  Part #5
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  We, the Siddhars, are, by this means, well aware and knowing, implicitly (indirectly).

  If we come, even if I say Moolan (Tirumular), Oh, Moolana ???, saying that will look down and up. That's why, implicitly.

  But, Agathian as well, came to this world and saw, "will he change"? said Agathian. But to Agathian!, then they are doing this!, the humans, said, then, bowed his head and sat down.

  People, you still have everything you deserve.

  Thus, Eshan also said that discipline should be observed from an early age, I will say.

  So teach discipline to young children. Even now, from now on, if we give, the world will no longer perish.

  Will not perish, I will say, though.

  Henceforth, thus the truths, the Siddhars will invade, for the good of men. Still though. Even without this, in Kali Yuga, the first to become dangerous are diseases, I will say.

  This is the beginning of the Kali Yuga.

  Understand and seek the God.

  Keep quiet, observe silence.

  Why, my God, God, for even worshiping, rival jealousy. Stupid man, change.

  To all, the God is one.

  I will surely punish the jealous ones.

  Then why worship Agathian?. Why worship the Moolan?. Worshiping Bogan (Bogar)! Why?. By worshiping so many Siddhas, you are roaming, I am the great, I am the great.

  Then I will call people jealous, people jealous. Again.

  Man, you idiot, guess what. Do not be jealous. Do not be jealous.

  You are just Man, what can you do? What can you do?

  Except to be jealous!

  It happens without even realizing that jealousy can destroy you.

  Don't, then, if the Siddhars are provoked, definitely, will hit severely, I will say.

  Let me tell you. I warn. As a caution, I am saying. In Kasi!.

  Henceforth, if you keep on saying that I am the greatest, I am the greatest, with such competition and jealousy, surely there will be destruction very soon man.

  Therefore, your tongue will become hostile to you, I will say.

  So everyone should come to the idea that all are great!.

  Like you, have to think of others, you should.

  Jealous man !, Is this necessary ?, this ?.

  I will also spit!, henceforth, man.

  Why ?, Why even the absence of the God ?, Considering that the Siddhas are implicit, thus, if I am saying so many blessings, are the Siddhars going to know ?, Is the God going to know?

  Like that, lying, complaining, pretending to be good, the ungrateful man, is living, saying our name.

  But, if they continue to survive like this, in the future, very soon, they will come to the position that God is a lie and Siththan also is a lie, I will say.

  So do not show false devotion, I will say.

  Either you change, otherwise, sit quietly.

  In the name of the God, do not cheat, do not cheat, do not cheat.

  ReplyDelete
 25. ==========
  Part #6
  ==========
  https://siththanarul.blogspot.com/2021/10/1040.html
  (Note - Not a word-for-word translation)
  3/10/2021 - ThiruMoolar - General Blessings at Ganga Riverbank, Kasi (place).


  Telling all sorts of lies, he will pretend to be a sage, I will say.

  He is the sage, he is the siddhan, everything he thinks is special, even so, he mesmerizes people, finally if you see, his karma will not leave him.

  Suffers from many diseases and then disappears.

  But his karma, after enjoying him, how did his name, whoever told his people, this karma will join them, and he too will perish, I will say.

  So, in the end, is it fair to say, God (Iraiva), God (Iraiva) ?

  So, only if the man changes, will I say yes.

  Henceforth, then, must the vow be accepted.

  You have to think others like yourself.

  I'm great, don't think that, I will say.

  I am the son of Sivan, I am the son of Agathian, I am the son of Siddhars, like that do not lie.

  Even if you say so, we will not accept it and we are not going to accept it.

  Then, say so, why?

  You are having difficulties??. If Agathians child, why are you having difficulty ??.

  You man think, you foolish man. Wise stupid man.

  Think.

  I will spit, if you act like this.

  I will spit, even like these.

  Learn to act in proper ways.

  Don't. Even the next blessings, in this Kasi, definitely once, Eshan as well will narrate.

  Once again, sing (pathigam), praise, in good ways.

  That being said, man is not ashamed, not ashamed.

  Man is living with rival jealousies.

  What's the profit ?, What's the profit?.

  If man is doing this, he will go in vain, why?

  He is not the only one going in vain. He makes those around him go in vain.

  Why this, implicit struggles, struggles?

  Did we come, did we worship the God, did we leave this world, without that, the man is making a false account.

  Man, you are wrong. All the thoughts you think are false accounts.

  The God thoughts, those thoughts, are real accounts.

  Henceforth, we will surely punish you if you do not change. We will give difficulties. We will give. We will give.

  At that time, whether there are ways for you to change, thinking that.

  Yes.

  The good and the bad, how all this is coming, when man realizes this, and acts well, the time of liberation will be born again.

  Next Monday (month) as well, Namachchivayam will speak.


  Siththan Arul ......... will continue!
  Om Sri Lopamudra Sametha Agathiar Thiruvadigal Samarpanam!

  ==========


  ReplyDelete