​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 20 August 2020

சித்தன் அருள் - 894 - தாவர விதி!


வாழையின் நன்மைகள்: பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை மற்றும் வாழை சார்ந்த உணவுகள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை. மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழையின் நன்மைகள்

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள இலை, பழம், பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து பாகங்களும் நமக்கு மருத்துவ குணங்களை தருகின்றன.

வாழையின் பாகங்கள்
 1. வாழை இலை
 2. வாழைத்தண்டு
 3. வாழைப்பழம்
 4. வாழைப்பூ மற்றும்
 5. வாழைக்காய்

வாழை இலை

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது.  

வாழைத்தண்டு

நமது உடலில் இருக்கும் உப்பை வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகரான உணவு எதுவும் இல்லை என்பதே உண்மை. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வாழைத்தண்டை சாறாகவோ அல்லது பொறியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும். வாழைத்தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.  

வாழைப்பூ

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் மருத்துவ தன்மை உடையது. ஒரு வாரத்திற்கு இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு தேவையான சில மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்கிறது. இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புகள், நார்ச்சத்துக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.  

வாழைக்காய்

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், சிறிதளவு உணவில் எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய், மூட்டு வலி இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.  

வாழை கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம் தேவையான வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது தேவைப்படுகிறது. 

 வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.

பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.

கனி, சதைப்பற்றானது. வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம், அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. தமிழகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம். 

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.

ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக் கொடுக்கலாம்.

வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.

வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது கட்ட வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

சித்தன் அருள்.................தொடரும்!

5 comments:

 1. வணக்கம் ஐயா,

  "ஆத்மாவின் சுயசரிதம் - கலியுக காவியம்" என்ற புத்தகத்தை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் நிச்சயமாக படிக்க வேண்டும். இந்த கலியுகம் முடியும் தருவாயில் பல தெய்வ இரகசியங்களை இதில் வால்மீகி மகரிஷி மற்றும் அகத்திய மகரிஷி கூறியுள்ளனர். இது ஞானாலயம் (பாண்டிச்சேரி) வெளியீடு.

  1, முக்கனிகளுமே முழு முதல் உணவு, சர்க்கரை நோயாளிகள் இவற்றை உண்ணுவது எப்படி,
  2. எப்படி நாம் உண்ணும் உணவே நம் மூளையில் உள்ள தெய்வங்களின் ஆசிகளையும் மற்றும் ஆற்றல்களையும் நல்கும்,
  3,புறத்தில் புரியும் செயல்கள் யாவும் அகத்தில் எப்படி வேலை செய்கிறது,
  4, அகத்தில் / மூளையின் ஆற்றல்கள் எப்படி நமது புற- உலகியல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்,
  5, மும்மலங்கள் எப்படி நம்முள் படிந்துஉள்ளன மற்றும் அவற்றை எப்படி நீக்குவது,
  6, முப்பெருந்தேவியர்கள் மற்றும் மும்மூர்த்திகள் நம்முள் எப்படி உள்ளனர்,
  7,ஆதிபராசக்தியே கலியுக தெய்வம்,
  8, கலிபுருஷன் எப்படி நம்மை ஆள்கிறான் மற்றும் எப்படி கலியை வெல்வது -

  போன்ற பல உயர் உண்மைகளை நமக்கு தெள்ள தெளிவாக புரிய வைக்க மஹரிஷிகள் செயல் ஆற்றியுள்ளனர்.

  அகத்தியர் அடியவர் அனைவரும் இந்த அரிய புத்தகத்தை வாங்கி படித்து கலியை வென்று ஆத்ம தரிசனம் அடைய வேண்டும் என்று பணிவுடன் இது கேட்டு கொள்கிறது.


  எல்லாம் அவன் செயல்.

  புத்தகங்கள் online ordering மூலமாக பெற ஞானாலயம் Pondicherry வெப்சைட் https://www.enlightenedbeings.org/ செல்லவும்.

  ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

  ReplyDelete
  Replies
  1. Om Eshwaraya Namaha
   Om Agastheeswaraya Namaha.
   Sir can i be in touch with you . i was in circle 8th. have read the book Moolai (english version -Brain ) . doing second round reading . i could see that you have grasped the book Atmavin Suya saritham and have given an abstract of it very nicely.
   hence for exchanging any thoughts would like to be in touch with you . Thank you

   Delete
 2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  ஐயா... விநாயகர் , முருகப்பெருமான், அன்னை சக்தி மூல மந்திரம் தாருங்கள் ஐயா...

  ReplyDelete