​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 17 August 2020

சித்தன் அருள் - 893 - ஸ்ரீ ஓதியப்பர், ஓதிமலை!


இன்று போகர் பெருமானின் கூற்றின்படி, ஓதியப்பரின் அவதார நட்சத்திரம் (ஆவணி பூசம், திரயோதசி திதி). சித்தன் அருள் 892வது தொகுப்பில் அவரவர் வீட்டில் "கந்த சஷ்டி கவசம்" ஓதி, முருகப்பெருமானுக்கு அர்க்யம் கொடுத்திட வேண்டியிருந்தோம். கிடைத்த தகவலின் படி, ஓதிமலையில், ஆவணி மாதம் இரண்டாவது முறை வருகிற பூசம் நட்சத்திரத்தன்றுதான் அவருக்கு சிறப்பு பூசை செய்யப் போகிறார்களாம்.

அடியேனும், வீட்டிலேயே, அவருக்கு அபிஷேக பூசை செய்து, அர்க்யம் கொடுத்து லோக ஷேமத்துக்காக வேண்டிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

இத்தருணத்தில், ஓதிமலை சுப்ரமண்யரை தியானித்து, ஓரிரு தகவல்களை நினைவிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆன்மீகத்தின் உச்சகட்டமான, சித்த மார்கத்துக்குள் செல்வதற்கு, முதல் படியின் தொடக்கம் இங்குதான், ஓதிமலையில், ஆரம்பிக்கிறது. இங்கே அந்த முதல் விதை கிடைப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள். ஆம், சித்தமார்கத்துக்குள், வித்யார்த்தியாக யாரை சேர்த்துக் கொள்ளவேண்டும், யாரை விலக்கி விடவேண்டும் என மனித, ஆத்ம என்கிற இரு நிலைகளிலும் வருபவர்களை தெரிவு செய்வதே ஓதியப்பர்தான் என்று சித்த மார்கத்துக்குள் புகுந்து செல்பவர்களுக்கு தெரியும். எப்படி அகத்தியர் கண் படாத எந்த ஒரு வேண்டுதலையும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லையோ, அதுபோல் தான் ஓதியப்பர் கண் அசைவு இல்லாமல் போகர் பெருமான் எந்த ஒரு மனிதரையோ, அல்லது ஆத்மாவையோ சித்த மார்கத்த்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என ஒரு கூற்றும் உண்டு.

அபிஷேக நேரத்துக்கு வெட்டிவேர் எண்ணையும், நம்மிடம் ஆழ்ந்த, உண்மையான சரணாகதியும் இருந்தால், நிச்சயம் ஓதியப்பரை குளிரவைக்கலாம், அவரும் உடன் அருளுவார்.

போகர் தவம் செய்த பாறையில் அமர்ந்தால், அத்தனை மென்மையாக, தாமரை ஆசனம் போல் இருக்கும். த்யானம் செய்தால், கேட்கிற கேள்விக்கு நிகழ்ச்சிகளை த்யானத்தில் காட்டி பதில் அருளுவார். கவனம், அங்கு அமரும் பொழுது இயல்பாக சுவாசிக்கவும். மூச்சை பிடித்து கும்பத்தில் நிறுத்தி விடக்கூடாது. இங்கு ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்தால் சித்த/இறை தரிசனம் எளிதாக கிட்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அதிசயமே, அனுபவமே. ஒருமுறை, அவர் பிறந்த நட்சத்திரத்துக்கு அடுத்தநாள். மலையில் தங்கியிருந்து, பின் மதியம் கீழே இறங்க வேண்டிய தருணம். கோவில் பூட்டியிருந்தது. முன் மண்டபம் யாருமின்றி அமைதியாக இருந்ததால், அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்து, வேண்டுதலை வைத்தேன்.

"ஓதியப்பா! அடியேனுக்கும், ஏதேனும் ரூபத்தில் வந்து, எளிய உபதேசம் கொடு!" என்றுவிட்டு த்யானத்தில் சென்று விட்டேன்.

பத்து நிமிடங்கள் அமைதி. எங்கும் நிசப்தம். அருமையாக இருந்தது.

தூரத்திலிருந்து ஏதோ ஒரு ரீங்காரம், அடியேனை நோக்கி வருவது போல், உணர்ந்தேன்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு வண்டு, அடியேனின் வலது காதில் நின்று ரீங்காரம் செய்தது. அந்த சப்தம் பிரணவ மந்திரமாக ஒலித்தது. அடுத்தவினாடியில், தலையை மூன்று முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் "பிரணவ ரீங்காரத்தை" வலது காதில் வைத்துவிட்டு  எங்கோ நோக்கி பறந்து சென்றது. பின்னர் எங்கும் அமைதி.

த்யானம் கலைந்து, மிகுந்த சந்தோஷத்துடன், ஓதியப்பருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இறங்கி வந்தோம்.

"ஓதியப்பர் வந்தாரில்லையா?" என்று வினவிய நண்பருக்கு, ஆம்! என்று தலைகுலுக்கி சொல்கிற அளவுக்கு, மனம் ஒன்றிப்போனது என்னவோ, உண்மை.

யாருக்கும் இந்த உபதேசம் கிடைக்கும், இறைவா! உன்னை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்கிற மனநிலையில் ஒருவர் இருந்துவிட்டால்.

அவர்(ஓதியப்பர்) வீட்டில் மூலவரும், உற்சவரும், நட்சத்திர பூசையை ஏற்றுக்கொண்டு ஆசிர்வதித்த காட்சி, உங்கள் பார்வைக்கு.


ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்............... தொடரும்!

9 comments:

 1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  தாங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ ஓதியப்பர் திருவடிகளே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ
  ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
  ஓம் ஸ்ரீ போகர் திருவடிகளே சரணம்

  ReplyDelete
 3. ayya where can we get vettiver oil for othiappar, i want to buy it before next poosam for swami. pls help me buyit. thank u

  ReplyDelete
 4. 13/09/2020 பகல் 1.05pm முதல் 14/09/2020 1.00pm வரை பூசம் நட்சத்திரம் வருகிறது .. இதில் எந்த நாள் வரும் ...வேட்டி வேர் தைலம் ஓதியப்பர் க்கு என்பதும் அதன் மகத்துவம் பற்றியும் விளக்கம் தாருங்கள்...

  ReplyDelete
 5. Ayya, Very interesting and you are really blessed. Idhai padipadhe Odhiyappar karunai!
  இங்கே அந்த முதல் விதை கிடைப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள். ஆம், சித்தமார்கத்துக்குள், வித்யார்த்தியாக யாரை சேர்த்துக் கொள்ளவேண்டும், யாரை விலக்கி விடவேண்டும் என மனித, ஆத்ம என்கிற இரு நிலைகளிலும் வருபவர்களை தெரிவு செய்வதே ஓதியப்பர்தான் என்று சித்த மார்கத்துக்குள் புகுந்து செல்பவர்களுக்கு தெரியும்

  ReplyDelete
 6. ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete

 7. ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
  🙏🏼🙏🙏🙏🙏🙏

  ReplyDelete

 8. ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!🙏🙏🙏🙏

  ReplyDelete
 9. ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete