​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 15 August 2020

சித்தன் அருள் - 892 - ஓதியப்பரின் திருநட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வரும் திங்கட்கிழமை, 17/08/2020 அன்று, போகர் சித்தரின் கூற்றின்படி, ஆவணி மாதம், பூசம் நட்சத்திரத்தில், ஓதியப்பர் என்கிற சுப்ரமண்யரின் அவதார நட்சத்திரம் வருகிறது.

யாரும், எங்கும் போகமுடியாத இந்த சூழ்நிலையில், அன்றைய தினம், உங்கள் அனைவருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது, அவரவர் இல்லத்தில் விளக்கேற்றி, ஒரு முறை, ஸ்வாமியின் முன் அமர்ந்து, கந்த சஷ்டி மந்திரத்தை ஓதி, லோகம் சீக்கிரமே, க்ஷேமமாக மாற வேண்டும் என வேண்டிக் கொண்டு, அவர் பாதத்தில் தீர்த்தத்தால் அர்க்யம் விடும்படி, அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய திட்டமிடல் இங்கு ஒன்றும் இல்லை, இறைவனின் திட்டம் புரிந்து கொள்வது மிக மிக கடினம். அறிந்தோ, அறியாமலோ, நல்லவர்களும், லோக ஷேமத்திற்காக, ஒரு சில கெட்ட கர்மாக்களை சுமந்து நடந்ததால், அனைவரையும் இந்த காலத்தில், இறைவன் அசைய விடாமல் செய்தான்.

இனி மேல்நடப்பது நல்லதாக அமைய வேண்டுமென, ஆட்சி செய்ய வரப்போகிற ஓதியப்பரிடம் வேண்டிக்கொள்வோம்.

ஓம் ஸ்ரீ ஓதியப்பர், லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஓம் நம குமாராயா நமஹ!

சித்தன் அருள்............. தொடரும்!

8 comments:

 1. அகத்தீசாய நம

  ReplyDelete
 2. Ok sir. Om sri agasthia peruman thiruvadigale potri.

  ReplyDelete

 3. ஓம் ஸ்ரீ ஓதியப்பர், லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

  ReplyDelete
 4. அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.  சென்ற ஆண்டில் 28.08.2019 -ஆவணி மாதம் - புதன் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் ஓதியப்பர் பிறந்த நாளை நாம் வள்ளிமலையில் கொண்டாடினோம்.இதோ சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.Read more - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

  குருவின் தாள் பணிந்து,

  ரா.ராகேஷ்
  கூடுவாஞ்சேரி

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  நேற்று என்னுடைய சொப்பனத்திற்கு இன்றைய பதிவு விடை ஐயா....

  ReplyDelete
 6. ஓம் ஸ்ரீ ஓதியப்பர், லோபா முத்திரா சமேத அகத்தியர் பாதங்கள் சரணம்

  ReplyDelete
 7. Ok lopamudra samata agastiyar thiruvadi saranam.

  ReplyDelete
 8. ஓதும் கிரி அது ஓதிய கிரி - ஓம் ஓதிமலை ஆண்டவரே போற்றி
  அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

  இன்று ஆவணி மாதம் பிறந்து விட்டது. ஆவணி 1 ம் தேதி யோடு இன்று பூசம் நட்சத்திரம் வருகின்றது. ஆவணி மாத பூச நட்சத்திரத்தில் திரயோதசி திதி அன்று தான் கோவை அருகில் உள்ள ஓதிமலையில் ஓதியப்பரின் திருநட்சத்திரம்! சித்தன் அருள் ஆசியுடன் நாம் அந்த நாள் இந்த வருடம் என்ற நிகழ்வில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓதிமலை தரிசனம் பெற்றோம். சென்ற ஆண்டும் கிட்ட வில்லை. இந்த ஆண்டில் சொல்லவே வேண்டாம். இன்றைய பதிவில் நாமும் ஓதிமலை சென்று மீண்டும் தரிசனம் பெற உள்ளோம் மேலும் சென்ற ஆண்டில் நாம் கொண்டாடிய நிகழ்வின் துளிகளை இங்கே இணைக்க விரும்புகின்றோம்.

  முருகா...அழகென்ற சொல்லுக்கு முருகா என்று கேட்டிருப்போம். இதனை உணர ஓதிமலை சென்று தரிசியுங்கள். .

  Read more - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_16.html

  நீங்கள் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவில் இணைய விரும்பினால் :- https://chat.whatsapp.com/GWcY0q5P7zK4lN7W4pmlWC

  ReplyDelete