வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்று ஆவணி திருவோணம். நம் குருநாதர் திருவோண நட்சத்திரத்தன்று செய்யச் சொன்ன பிரார்த்தனையை செய்துவிட்டீர்களா.
"ஆலயங்களும் விநோதமும்" என்கிற தலைப்பில், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில் தொடர்ந்து பின்பற்றக்கூடிய வித்யாசமான பூசை முறை, வழிபாடு போன்றவற்றை ஒரு தொகுப்பாக தரலாம் எனத்தோன்றியது. இதை, தினமும், ஒரு கோவிலின் தகவல் என்று தர வேண்டும் என்று விருப்பம். ஆயினும் நம் குருநாதர் என்ன தீர்மானித்திருக்கிறாரோ அதன் படி நடக்கும், என்ற நம்பிக்கை அடியேனுக்கு உண்டு.
இந்த தலைப்பில் வரும் விஷயங்களை பொக்கிஷமாக கருதி, அந்த கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், அந்த அருளை மறக்காமல் பெற்றுக்கொள்ளும்படி, வேண்டுகிறேன்.
முதல் கோவிலாக, காசி விஸ்வநாதர் கோவில், காசி!
தினமும், மாலை வேளை பூஜையின் பொழுது, இறைவன் காசி விஸ்வநாதர் ஸ்வாமிக்கு, 108 வில்வ தளங்களால், அர்ச்சனை செய்யப்படும். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்படும். இதில் விசேஷம் என்னவென்றால், அந்த "108" வில்வதளங்களில் மட்டும், சந்தனத்தினால் "ராமா" என்று எழுதப்பட்டு இருக்கும்.
எல்லோரும் காசி விஸ்வநாதரை தரிசித்து அருள் பெரும்பொழுது, இறைவி அவரிடம், "அடியாள் எப்படி பூசை செய்தால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?" என வினவ, சிவபெருமான், "மாலை வேளையில்", நித்ய பிரதோஷம் முடிந்தபின் 108 வில்வ தளங்களில் சந்தனத்தால் ராமா என்று எழுதி, பூசை செய்தால், அதை யாம் ஏற்றுக்கொள்வோம்" என உத்தரவு கொடுக்க, அம்மையும் அவ்வாறே பூஜை செய்ததாக காசி புராணம் கூறுகிறது.
அதுவே, இன்றும் தொடர்ந்து வருகிறது.
சரி! இங்கு நம் ஞாபகத்தில் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காசிக்கு சென்று எதை விட்டோம் என்பதல்ல, இறைவன் ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்கும் அந்த வில்வதளம் ஒன்றை பிரசாதமாக பெற்று வந்து வீட்டில் வைத்தால், இறைவனே நம்முடன் என்றும் உறைவார். காசியின் கங்கை தீர்த்தத்திற்கும், 108 வில்வதளங்களில் ஒன்று பிரசாதமாக கிடைக்கவும், பிரார்த்தனை செய்யுங்கள்.
இவைகளை விஞ்சியது இவ்வுலகில் இல்லை!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...................... தொடரும்!
Om sri agasthia peruman thiruvadigale potri. Thank u very much sir.
ReplyDeleteToday thiruvonam. I did sir.
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏
ReplyDeleteArumai swamiji.om agathesya namaha
ReplyDeleteஐயா அன்பு வணக்கம்,
ReplyDeleteமுதல் ஸ்தலம் காசி விஸ்வநாதர் பற்றி தாங்கள் கூறிய அறிய வேண்டிய உயர்ந்த கருத்து அப்பாவின் அருளால், தங்கள் அன்பால் எங்களுக்கு கிடைத்து உள்ளது. இப்போதே எண்ணம் போட்டு விட்டோம் ஐயா. மிக்க நன்றி! வாழ்க வளமுடன் ஐயா ,அம்மா. ஓம் அருணாச்சல சிவ காசி விஸ்வநாதர் போற்றி!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஇறைவன் சித்தம் ஐயா