​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 May 2026

சித்தன் அருள் - 2207 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5 

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
பகுதி 5  நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h25m30s


===========================
# மேஷ ராசி வகுப்பு - “அ”  வகுப்பு  நிறைவு 
===========================
# ரிஷப ராசி -  “ஆ” வகுப்பு ஆரம்பம்….
===========================




தேரையர் சித்தர் :-  அறிந்தும் அப்பனே இவையெல்லாம் ஏது என்று புரிய அறிந்து கொள்ள அப்பனே அடுத்த அகவைக்கு செல்க 


===========================
அடியவர்கள் பகுதி 5  நேரலை பதிவினை அவசியம் பார்க்கவும். 
பகுதி 5  நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h25m30s
===========================
( இப்போது 3 அன்பு அடியவர்கள் அங்கு உள்ள  எழுது பலகையில் எழுதிய “அகர வரிசை வார்த்தைகள் அதனை ஒவ்வொன்றாக  அழித்தனர். இதன் பின்னர் “ஆ” வரிசை வார்த்தைகளை எழுத ஆரம்பித்தனர். இதனிடையே சுவடி ஓதும் மைந்தன் மற்றும் அடியவர்கள் விளக்கங்கள் சில அளித்தார்கள்)   
===========================

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- 


(இதெல்லாம் முடிஞ்சுச்சுன்னா அடுத்து ஆ-க்கு போகச் சொல்றாங்க. கோடி ரூபாய் கொடுத்தாலும் இதெல்லாம் கத்துக்க முடியாது, ஏன்னா சித்தர்கள் நமக்காக வந்து இதெல்லாம் சொல்றாங்க. ஒருவேளை சாப்பாடு இல்லாம கஷ்டப்படுற எத்தனையோ பேரை நாம காப்பாத்தணும், அதுக்காகத்தான் சித்தர்கள் ஓடி ஓடி உழைக்கிறாங்க. ஒரு ஜாதகக் கட்டத்தை எப்படி பயன்படுத்தணும்னு இதுல சொல்லிக் குடுத்திருக்காங்க. முக்கியமா உயிரெழுத்துக்களுக்கும் 12 ராசிகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா? தெரியாது, அதைச் சொல்லிக் குடுக்குறவங்கதான் சித்தர்கள். பூமிக்கு அடியில என்ன இருக்கு, உன் உடம்புல என்ன இருக்கு, எப்ப நோய் வரும், எப்ப கஷ்டம் வரும்னு எல்லாத்தையும் சித்தர்கள் சொல்லிக் குடுப்பாங்க. இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கிட்டா மட்டும்தான் இறைவனை காண முடியும். இறைவன் இங்க நடுவுல இருக்காருங்க ஐயா. ) 


( இப்போது இவ்வேளையில் பல கலந்துரையாடல்கள் நிகழ்ந்தது. கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் ஒவ்வொன்றாக  சொல்ல சொல்ல பின் வரும்  “ஆ” கர வரிசை வார்த்தைகளை அடியவர்கள் எழுதினார்கள் எழுது பலகையில்…உரையாடலில் சில சொற்கள் பலமுறை திரும்பத் திரும்ப வந்திருந்தன (உதாரணமாக: ஆனந்தம், ஆரோக்கியம், ஆதி). அவை நீக்கப்பட்டு, ஒரு முறை மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  )  


ஆசை,
ஆற்றல்,
ஆகாயம்,
அருள்,
ஆழ்வார்,
ஆளவந்தான்,
ஆனந்தம்,
ஆழ்வார்கள்
ஆண்மை,
ஆளுமை,
ஆழ்வரம்,
ஆண்டாள்
ஆணவம்,
ஆண்டவன்,
ஆதி,
ஆத்மா
ஆன்மா,
ஆரவாரம்,
ஆசி,
ஆறு
ஆசீர்வாதம்,
ஆரோக்கியம்,
ஆராதனை,
ஆதவன்,
ஆளாளம்,
ஆறறிவு,
ஆரத்தி,
ஆணை
ஆக்கம்,
ஆதிமூலம்,
ஆருயிர்,
ஆதிக்கம்
ஆரூரான்,
ஆசான்,
ஆலயம்,
ஆயிரம்
ஆஞ்சநேயர்,
ஆலமரம்,
ஆசிரியர்,
ஆதிரை
ஆர்வம்,
ஆச்சரியம்,
ஆதி நாயகன்,
ஆடை,
ஆடு,
ஆண்டு,
ஆண்,
ஆந்தை
ஆக்ரோஷம்,
ஆணி,
ஆண்டி,
ஆட்டம்
ஆயில்,
ஆத்தி,
ஆயில்யம்,
ஆழி
ஆறுமுகம்,
ஆள்மனம்,
ஆதித்யன்,
ஆன்மிகம்
ஆதீனம்,
ஆகமம்,
ஆவணி,
ஆரம்பம்
ஆய்வகம்,
ஆராய்ச்சி,
ஆடி,
ஆயுதம்
ஆயுள்,
ஆயுத எழுத்து,
ஆயக்கலைகள்,
ஆதாரம்
ஆயுத பூஜை,
ஆபரணம்,
ஆயுர்வேதம்,
ஆதரவு
ஆரண்யம்,
ஆணிரை,
ஆவணம்.

===========================
அடியவர்கள் அவசியம் நேரலை பதிவை பார்க்கவும். அப்போதுதான் முழு புரிதல்கள் உண்டாகும். 

நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h34m04s
===========================

தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவை என்று அறிய, அப்பா, மேடத்தில் “ம்” மென்று, அதாவது முதலில் “அ” என்று,  “அம்” மென்று இடுக 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது “அ”  ஓகேங்களா. அடுத்து “ம்”  இங்க போட சொல்றாங்க. இது அம். ஐயா புரியுதுங்களா?


( மேஷ ராசியில் ஏற்கனவே “அ” என்ற எழுத்து இருந்தது. அதனுடன் “ம்” சேர்த்து , “அம்” என்று எழுத வேண்டும் )


===========================
# “அம்” -  பீஜ மந்திர ரகசியம் 
===========================


தேரையர் சித்தர் :- இவை அனைத்தும் தெரிந்து கொண்டால், “அம்” என்ற பின் மூல மந்திரத்திலிருந்து தொடங்கும் உங்கள் வாழ்க்கை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஃபர்ஸ்ட்ல வந்து “அ” வரிசையில்  என்னென்ன எழுதினாங்க வந்து அதெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தீங்கன்னா,  ஓம் அம்,  அம் என்றது என்னது மூல மந்திரம்.  


(முதல்ல "அ" வரிசையில என்னென்ன எழுதினாங்கன்னு தெரிஞ்சு வச்சிருக்கணும் ஐயா. அம்மா, அப்பா, அண்ணன், அன்னதானம், ஆண்டவன், அமைதி, அகத்தியர்னு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாதான் "அம்" என்கிற மூல மந்திரம் உங்களுக்கு சித்தியாகும். இதையெல்லாம் சொல்லிக்கிட்டே வர்றப்ப, அதுல இருந்தே ஒரு மந்திரத்தையும் எடுத்து உங்களுக்குத் தெரிவிச்சு இங்கேயே மந்திரத்தைக் கொடுக்கிறாரு. அந்த "அ" வரிசை வார்த்தைகள்ல இருந்து எடுக்கப்பட்ட மந்திரம்தான் "அம்". இதெல்லாம் தெரிஞ்சாத்தான் அந்த மந்திரம் வேலை செய்யும், புரியுதுங்களா ஐயா? அப்புறம் அந்த "அம்" மந்திரத்தை அப்படியே எடுத்துட்டாருங்க ஐயா. இதுதான் விஷயம்.) 


தேரையர் சித்தர் :-  ஏது என்று புரிய இவையெல்லாம் உணர்ந்தால் அம் என்று ஏது என்று கூற  அறிந்து கூட அனைத்து கிரகங்களும் உள் செல்லும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதையெல்லாம் வந்து நீங்க உணர்ந்துட்டீங்கன்னா “அம்” என்று சொல்லும்போது என்ன ஆகும்? அனைத்து கிரகங்களின் ஒரு சக்தி…உள்ள போகும்.


தேரையர் சித்தர் :-  அப்பா அறிந்தும் ஏது என்று அறிய,  “அ” இருக்கின்றான் இறைவன் “ஆ”விலும்  இருக்கின்றான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  “அ” என்ற சொல்லிலும் இருக்கின்றான் இறைவன். “ஆ” என்ற சொல்லிலும் இறைவன் இருக்கின்றான். அப்ப “ஆ”  என்னது?  


அடியவர் 2 :- எல்லாத்துலயும் முட்டை போட சொன்னார்ல இறைவன் முட்டை எல்லாம் இருக்கு… 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் சுலபமாக அறிந்தும் ஏது என்று புரிய அனைத்திலும் இதைத்தான் அறிந்து கொண்டு இறைவனை காணலாம் என்று. ஆனால் காணுவதில்லையே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம் ரைட்டு. அப்ப எல்லாத்துலயும் முட்டை இருக்குது பார்த்தீங்களா? இங்கேயும் ஒன்னு வச்சிருக்காரு. இதெல்லாம் நீ பயன்படுத்தினேன்னா, இந்த முட்டையிலேயே நீ காணலாம். இதை காண்டிட்டு என்ன பண்ணிடலாம்? இங்கேயே இறைவனை பார்க்கலாம் ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- இந்த ரவுண்டு போட்டு இருக்காங்க இல்ல, சுழிச்சு விட்டுருக்காங்க இல்ல.  ஆரம்பத்துல எல்லாத்துலயுமே இருக்கு பாருங்க. அதான் 12 எழுத்துக்களிலும் இறைவன் இருக்கிறான்னு சொல்றாங்க. அது என்னன்னு கேட்டீங்கன்னா, எழுத்து ஆரம்பமும் முடிவிலையும் சுழிச்சுவிட்டு தான், நம்ம ஆரம்பிக்கிறோம். முடிக்கிறோம். அப்படின்றப்போ எல்லாத்துலயும் வட்டம் இருக்கு. இறைவன் இருக்கிறார். 


===========================
# “தமிழ் உயிர் எழுத்துக்கள்” - உலகின் அனைத்து மொழிகளிலும்…
===========================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவைத்தன் இவ்வெழுத்துக்கள் எவ்வாறாக அனைத்து மொழிகளிலும் பின் நிச்சயம் ஏது என்று அறிய பயன்படுத்தப்படுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த எழுத்துக்கள் எல்லாமே பயன்படுத்துறாங்க.


===========================
# குருநாதர் அகத்திய பெருமான்  வாழ்க, வாழ்க, வாழ்க !!!  
===========================


தேரையர் சித்தர் :-  இதை பெருமையாகச் சொல்வேன் என் குருநாதரே இயக்கினான் என்று. 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- தேரையர் சித்தர் சொல்கின்றார். இதை நான் பெருமையா சொல்லுவேன்.  என் குருநாதர் இந்த எழுத்துகளிலே ,  இந்த உலகத்தை இயக்கினார். அடக்கிட்டாரு. 


அடியவர் / அடியவர்கள் :- ( ஆச்சரியங்கள் ……பலத்த கோஷங்கள் )


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அகத்தியரே இதிலேயே அ, ஆ, இ …க்கு எல்லாம் கிரகங்களை எல்லாம் சொல்லுவார் இன்னும். இதிலேயே அடக்கிட்டாருப்பா 


தேரையர் சித்தர் :-  எது என்று அறிய இதைப் பின் இவ்வெழுத்துக்களிலே உங்களை வெல்லும் சக்தியும் பின் கூட்ட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த எழுத்துக்களிலேயே இதெல்லாம் அறிஞ்சீங்கன்னா, உங்கள்  சக்தி நீங்கள் கூட்டி, நீங்களே வெல்லலாம் இறைவனை காணலாம் 


தேரையர் சித்தர் :-  ஆனாலும் இவைத்தன் மறைக்கப்பட்டது. மனிதன் ஏதோ சொல்லி குழப்பி, மனிதன் மனிதனையே கெடுத்துவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இவையெல்லாம் மறைக்கப்பட்டது. இவையெல்லாம் மறைச்சு என்ன பண்ணிட்டாங்க? மனிதன் மனிதனையே 


அடியவர் :- கெடுத்துட்டாங்கப்பா 


சுவடி ஓதும் மைந்தன் :- கெடுத்துட்டான் 


தேரையர் சித்தர் :-  இதனாலே கலியுகத்தில் அழிவுகள் பல. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் கலியுகத்துல அழிவுகள் 


அடியவர் :-  ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டதுனாலதான், அழிவுகள் இருக்குன்றாங்க.


===========================
# “ஆ” எழுத்து ரகசியங்கள்….
===========================


தேரையர் சித்தர் :-  எது என்று புரிய இதனால் மீண்டும் ஆ என்று முதலில் தொடங்குவது இவை அனைத்தும். இவையெல்லாம் பின் முதலிலே பின் இருந்தால், பின் ஆண்டவன் உங்களுக்கு காட்சி அளிப்பது உறுதி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல “அ” இருக்கிறதெல்லாம் தெரிஞ்சுக்கினீங்கன்னா,  அடுத்து “ஆ”.  ஆண்டவன் நிச்சயமாக உங்களுக்கு காட்சி அளிப்பார். 


சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு, அறம்….


அடியவர் :-  இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா,  அடுத்து உறுதி கொடுக்குறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உறுதி கொடுக்கிறார். 


அடியவர் :-  ஆண்டவன் காட்சி அளிப்பார்.  உறுதி கொடுக்குறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  உறுதி கொடுக்கிறார் 


அடியவர் :-   தரிசனம் கிடைக்கல ஆனா உறுதி கொடுக்குறாங்க உறுதி கொடுக்கிறார் . நிச்சயம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்ன்றாங்க


சுவடி ஓதும் மைந்தன் :-  நிச்சயம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்ன்றாங்க தரிசனம் கிடைக்கும். அன்னத்தை போடணும் .எல்லா உயிரினும் ஒரே மாதிரி எண்ணனும். அப்புறம் நிறைய எல்லா எல்லா ஜீவராசிகளும் அன்பு காட்டணும். எல்லாம் பண்ணோம்னா ஆண்டவன் 


அடியவர் :- உங்களுக்கு காட்சி கொடுப்பார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  காட்சி அளிப்பார். உறுதி… உறுதி… “ஆ” ஓகேங்களா 


தேரையர் சித்தர் :-  அப்பா அனைவரும் சுக்கிரன் அறிந்தும் கூட அதாவது உயிர்ப்பிக்கும் ஆற்றலை பின் எதை என்று ஆஅறிந்தும் பெற்றிருப்பான் என்று உணர்ந்ததே. 


சுவடி ஓதும் மைந்தன் :- சுக்கிரனுக்கு ஒரு வித்தை தெரியும். என்ன வித்தை தெரியும் ஐயா? 


அடியவர் :-  உயிர்ப்பிக்கும் ஆற்றல் உண்டு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- உயிர்ப்பிக்கும் ஆற்றல், சுக்கிராச்சாரியார் அவருக்கு உண்டு. 


தேரையர் சித்தர் :-  இவை அனைத்தும் நிச்சயம் தெரிந்திருந்தால், பின் உயிர் போகும் நோய்கள் வளராது மனிதனிடத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதை “ஆ” எல்லாத்தையும் கத்துக்கிட்டீங்கன்னா 


அடியவர் :-  நோய் வராது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நோய் வராது. நோயால் தானே துன்பம் வருது எல்லாம் வருது. ஏது வருது. எல்லாமே வந்து மனிதன் என்ன பண்றான்? உயிர் போகுது அதனால்தான். ஆனால் இதெல்லாம் “ஆ” இருக்கிறதெல்லாம் தெரிஞ்சு வச்சீங்கன்னா ஆண்டவனை காணலாம். சுக்கிராச்சாரி என்ன பண்ணிக்கிறார். நோய் தீர்க்கும். 


அடியவர் :-  மருத்துவம் தெரிஞ்சவர். நோய்களை வெல்லலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  வெல்லலாம். 


தேரையர் சித்தர் :-  இதனாலே அடுத்து பின் சுக்கிராச்சாரியனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனாலதான் இரண்டாவது யாரு? சுக்கிராச்சாரியனை வச்சிருக்கிறார். சுக்கிராச்சாரியன் சிறப்பு என்ன? ஆண்டவன் காட்டுவார். 


அடியவர் :- இறைவனை காண்பிப்பார். நோய்களை வெல்ல உதவி செய்வார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே பண்ணுவார். 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் “ஆ” என்ற எழுத்திலே அனைத்தும் தோல்வியுற்றால்  அனைத்தும் அதாவது நோய்கள் வரும். எது என்று புரிய ஆண்டவனைப் பற்றியும் தெளிவு பிறக்காது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப …


அடியவர் :- இங்க தெளிவு பெறல அப்படின்னா, அங்க ஆண்டவனையும் பார்க்க முடியாது. நோய்களையும் நம்மளால ஜெயிக்க முடியாது. வாழ்க்கையை முடிச்சுக்க வேண்டியதுதான். 


தேரையர் சித்தர் :-  “ஆ” என்ற எழுத்திலே அனைத்தும் ஏது என்று புரிந்து கொள்ள, அனைத்தும் பின் நல்குவான் சுக்கிராச்சாரியனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கினீங்கன்னா நீங்க மாயப்பொருளை கேக்குறீங்க பாருங்க?  என்ன வேணும்? 


அடியவர் :- எல்லாமே கொடுப்பாராம் எல்லாமே எல்லாமே அவர் தான் வச்சிருக்கிறார். பணம் பொருள் உங்களுக்கு தேவையான வீடு சொந்தம் பந்தம் சுற்றம் சரிங்களா அந்த மகிழ்ச்சி எல்லாம் அவர் வச்சிருக்கிறார் இதையெல்லாம் கத்துக்கிட்டீங்க அப்படின்னா அதை உங்களுக்கு வாரி வழங்குவார் சுக்கிராச்சாரியர் 


சுவடி ஓதும் மைந்தன் :-  சுக்கிராச்சாரியர் வாரி வழங்குவார். அதனாலதான் வந்து இதுலவே வந்து ஆசையை பூர்த்தி செய்வார் 


அடியவர் :- ( பல “ஆ”கர வார்த்தைகளுக்கு விளக்கங்கள் அளித்தார்கள்) 


ஆசையை பூர்த்தி செய்வார் 
ஆரூரானை காட்டுவார் 
ஆற்றலை பெருக்குவார் 
ஆளவந்தானை காட்டுவார் 
ஆளுமையை கொடுப்பார் 
ஆணவத்தை அடக்குவார் 
ஆண்டவரை காட்டுவார் 
ஆறுதல் அளிப்பார் 
ஆயுர்வேதம் கற்பிப்பார் 
ஆனந்தத்தை கொடுப்பார் 
ஆடி ஆவணி இதுல வந்து ஆடியில வந்து பூஜை பண்றோம்
ஆணை பிறப்பிக்கலாம் 
ஆணையோட நம்ம வெற்றி கொள்ளலாம் 
ஆக்கம் வரும் 
ஆளையும் செல்லலாம்
ஆற்றல் ஆபரணம் கிடைக்கும்
ஆசிரியர் குருவாகலாம்
ஆசிரியர் . வந்து பாருங்க குருவும் ஆகலாம் சொல்லிக் கொடுக்கலாம் ஆபரணம் வரும்
ஆதரவு கிடைக்கும் 
ஆரோக்கியம் கிடைக்கும் 
ஆதவனை பார்க்கலாம்
ஆகாயம் மாதிரி பிரகாசிக்கலாம் 
ஆஞ்சநேயர் சிரஞ்சீவி
ஆயுள் நீட்டிக்கலாம்
ஆண்டு ஆணி ஆணி 
ஆள வந்தான் 
ஆளலாம் இந்த நாட்டை ஆளலாம் ஆளலாம்
ஆதித்தனை தரிசிக்கலாம் இறைவனை காணலாம் 
ஆல  கண்டன் யாரு? நம்ம சிவபெருமான் 
ஆக்ரோசத்தை அடக்கலாம் 
ஆதீனம்  குருமார்கள்
ஆய்வகம் ஆய்வாளர் சயின்டிஸ்ட் ஆகலாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா ஐயா பார்த்தீங்களா யாருக்கு தெரியும் ஐயா யாருக்காவது தெரியுமாங்க இந்த விஷயம் நம்ம எல்லாம் விளையாட்டா நிறைய வார்த்தைகளை கொடுத்தோம். 


அடியவர் :- இந்த வார்த்தைகள் எல்லாம் அப்படியே அர்த்தத்தோட கனெக்ட் ஆகுது பாருங்க. சுக்கிராச்சாரியார் அருள் இருந்தா இது எல்லாமே நமக்கு கிடைக்கும்ன்றாங்க. 


===========================
# அடுத்த பாடம் “இ” எழுத்து ரகசியங்கள்….
# காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு ரகசியங்கள் ஆரம்பம்…
# “ மிதுனம் ராசி”  ரகசியங்கள்….
===========================


தேரையர் சித்தர் :-  ஏது என்று அறிய அடுத்தவன் பின் காக்கும் ஏது என்று அறிய அதாவது விஷ்ணுவை பற்றி. இதனால் அவனைப் பற்றி பாடுங்கள் பின்பு உரைப்பேன். உலக நன்மைக்காகவே வேண்டி பாடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது ( மேஷ ராசி , ரிஷப ராசி )  இது ரெண்டும் முடிச்சிட்டார்.  பெருமாள் பத்தி வராரு. ”இ” வந்து பெருமாள் பத்தி வராரு. அப்ப இவரைப் பத்தி நீங்க பாடுங்க. எல்லாரும் உலகத்துக்காக நினைச்சுக்கோங்க. ஒருமுறை பெருமாள்  பத்தி பாடுன்றார் 


===========================
# “ஆம்” மந்திரம் உபதேசம் ( ரிஷப ராசி ) 
===========================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய இதிலே இதிலிருந்தே ஒரு மந்திரத்தை உரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதிலிருந்தே ஒரு மந்திரம்… 


தேரையர் சித்தர் :-  எது என்று அறிய பின் ஆம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆம்.  இதிலிருந்தே ஒரு மந்திரம் எடுக்கிறேன் சொல்லிட்டாரு. ஆம் என்ற மந்திரத்தை கொடுத்திருக்காங்க இப்போ அடுத்த மந்திரம் கொடுத்திருக்காங்க 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் சந்திரன் ஈக 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க ஒரு சந்திரன்..( ரிஷப ராசி அருகின் சந்திரன் என்று எழுத வேண்டும் )  எல்லா இடத்துலயும் சந்திரன் வராங்க. மனசு எல்லாத்துக்கும் மனசு வேணும். 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் ஒன்று இங்கேயும் நீ காணவில்லை என்றால் பின் ஏது என்று புரிய அனைத்தும் பின் எவை என்று கூட சுடுகாடுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்கேயும் நீங்க எதுவும் உணரலைன்னா, இந்த சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து என்ன பண்ணுவாரு? அழகா எடுத்துட்டு போயிட்டே என்ன பண்ணுவாரு? முடிஞ்சு போச்சு. ஆயுசு முடிஞ்சு போச்சு. இங்கேயும் என்ன பண்ணுவாரு சுக்கிரன்? வந்து மனம் தெளிவடையனும் இல்லைன்னா அவ்வளவுதான். இல்லைன்னா என்ன பண்ணுவாரு நேரா தூக்கிட்டு போயிட்டு அழகா எங்க படுக்க வைக்கணுமோ அங்க படுக்க வச்சிருவார் சந்திரன் சேர்ந்து.. 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய அதாவது இவ்வாறாக இதற்கு அதிபதி முதலில் முருகன். இரண்டாவது சுக்கிரன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதலுக்கு  ( மேஷ ராசிக்கு ) அதிபதி யாரு? செவ்வாய். முருகன் முருகன். இரண்டாவது அதிபதி ( ரிஷப ராசிக்கு )   யாரு? சுக்கிரன்.  


தேரையர் சித்தர் :-  இவை இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும் நீங்களே கூறுங்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் என்ன ஆகும்? யாருக்காவது தெரியுமா ஐயா?  புதன் ஐயா. புதன் அடுத்து இங்க வரார் இது ரெண்டும் சேர்ந்தது என்ன ஆகும்?  இது ரெண்டும் சேர்ந்து யாரு பெருமாள் பெருமாள். அதாவது செவ்வாயுடைய ஆற்றலும் செவ்வாயுடைய அந்த ஆளுமை தன்மையும் ஆற்றலும் சுக்கிரனுடைய செல்வமும் சேர்ந்தால் சேர்ந்தால் பெருமாள். பெருமாள் பற்றி அடுத்து சொல்றேன் அப்ப பெருமாளை இந்த உலகத்துக்காக அவரை நினைச்சு படுங்க 


பாடகர் :- ( குறையொன்றும் இல்லை என்ற பாடலை அருமையாக பாடினார்கள்) 
இவ் பாடலின் நேரலை https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h47m30s


===========================
# ஆ வரிசையில் காணப்படும் சொற்கள் 

http://www.viruba.com/Nigandu/Letter.aspx?ID=2
===========================


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment