அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6
நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY
===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
===========================
தேரையர் சித்தர் :- அய்யனே, அனைவருக்குமே அறிந்தும் கூட ஆற்றல் பின் சம அளவு. அதை மீண்டும் கூட அதிகப்படுத்த இவ்வாறாக பாடல்கள் பாடி, சரியாக கைதட்டல் இன்னும் ஆற்றல் அதிகரிக்கும் அண்ணாமலையிலே. முருகன் நினைத்துப்பார், நினைத்துப்பார், ஆற்றலை அதிகரிக்கும் பின்பு யான் செப்புகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, இறைவனை நினைச்சு நம்ம பாடினாவே என்ன ஆகுமா? நம்ம ஆற்றல் அதிகமாகும். அப்ப சில நேரத்துல தோல்வி அடைஞ்சிடுறாங்கப்பா. திருப்பியும் ஆற்றல் வர , நீ அடிப்பா, பாடுப்பான்றாரு. முருகன் பாட்டு பாடுங்கன்றாரு. இன்னும் எல்லாம் கைதட்டி நல்லா ஆற்றலோட பாடுங்க, இணைஞ்சு அப்பதான் உங்களுக்கு புரியும். ஏன்னா ஆற்றல் இணைஞ்சு டயர்ட் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? அங்க ஏதோ சொல்லிக்கிறாங்க அப்படின்னு நடந்துரும். அதனால உங்களுக்கு ஏத்தி ஏத்தி இணைஞ்சு ஏத்தி ஏத்தி அவர் சொல்றாரு, வேற ஒன்னும் இல்ல.
பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகய்யா - என்ற பாடலை அருமையாக பாடினார்கள் )
பாடல் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h53m24s
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
அடியவர்கள் :- ( திருக்கைலாய இசை அங்கு ஓங்கி ஒலித்தது)
திருக்கைலாய இசை நேரலை :-
https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h59m28s
===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
===========================
அடியவர் :- சிறப்பாக வாசித்த கைலாய வாத்திய குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
அடியவர் :- அனைவரும் அமைதியா அமருங்கள்.
அடியவர் :- அடுத்து திருப்பி தேரையர் வருவாங்க. நிறைய தமிழ் ரகசியங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.
அடியவர் :- ஜாதக கட்டத்தை வச்சு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்துட்டு இருக்காங்க நமக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. அதான்.
அடியவர் :- தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்துறாங்க.
===========================
# மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் இருதயம் புத்துணர்ச்சி பெறும் ரகசியங்கள்.
===========================
தேரையர் சித்தர் :- ஏது என்று அறிய அனைவருக்குமே சொல்கின்றேன். மருதம் ஏது என்று புரிய. மருதமலை பற்றியோன் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், அனைத்திற்கும் எது என்று புரிய இருதயம் சரியாகவே அறிந்தும் கூட சக்தியாக இருக்க வேண்டும்.
தேரையர் சித்தர் :- அப்பொழுதுதான் எண்ணும் எண்ணங்கள், செயல்கள் இன்னும் சக்தியை கூட்டும். அதனால்தான் மருத மலையிலே, ஏன் அவன் அங்கே உட்கார்ந்து இருக்கின்றான் என்பதையெல்லாம் அடுத்தடுத்து தெரிவிக்கின்றேன்.
தேரையர் சித்தர் :- இப்பொழுது அவனை அழைத்தாலே இன்னும் அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது மனம் தளருபவர்கள் இன்னும் மனம் அப்படியே உயரட்டும். இதைத்தான் மருதமலையும் மீண்டும் அழை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அடிக்கடிக்கு இதை ஏன் பாட சொல்றாருன்னா, எல்லாருக்கும் இருதயம் பலவீனமா இருந்தா என்ன ஆகும்?
அடியவர் :- சக்தி இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி போயிடும். என்னடா லைஃப், ஏது லைஃப்லாம் என்னன்னா ஒரு மாதிரி ஆயிடும். அதனால மருதமலையும்… ஏன் அங்க (சுப்பிரமணிய சுவாமி - மருதாசலமூர்த்தி) இருக்கிறார் வந்து சொன்னாருன்னா, அதுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.
அடியவர் :- சொல்றேன்னு சொல்ராங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அது நான் சொல்றேன். அதற்காகத்தான் அடிக்கடி நான் என்ன பண்றேன்?.
அடியவர் :- மருதமலை முருகனை அழைக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா சித்தர்களும் அவர் அழைப்பான்றார் வந்து திருப்பியும் வந்து.
தேரையர் சித்தர் :- ஏன், எதற்கு? பின் கை ஓசைகள் பலமாக ஏது என்று அறிய அனைத்து நரம்புகளும் பின் ஆடட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் கைதட்டி நல்லா மீண்டும் சரியா வந்து பாடணும்ன்றார் வந்து. அப்புறம்தான் நான் சொல்லுவேன்றார் வந்து. ஏன்னா இருதயம் வந்து எல்லாருக்கும் ஒரு டென்ஷன் ஆயிடும். இது என்னடா லைஃப், இது என்னடான்னு சொல்லிட்டு என்னடா இது வந்து நம்ம வாழ்க்கை. என்னடா இறைவன் வணங்க பிரயோஜனம் இல்லையான்னு சொல்லிட்டு இதெல்லாம் வந்து யாருக்கு வந்து இதெல்லாம் வந்து அந்த மருதுமலையவன் தான் ஸ்ட்ராங் பண்ணுவார். அப்ப மருதமலையானை அழைத்தால் ஒரு புத்துணர்ச்சி மாதிரி ஆகும். எனர்ஜி கொடுக்கும். நம்ம வாழலாம். நம்ம சக்தி இருக்கிறது. நமக்கு ஆளுங்க இருக்காங்க ன்னு சொல்லிட்டு என்ன ஆகும்?
அடியவர் :- ஒரு தெம்பு வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தெம்பு வரும். அதனால்தான் சித்தர்கள் என்ன எல்லாரும் என்ன பண்றாங்க. மருதுமலையோனை அழை என்று சொல்ராங்க.
===========================
# மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் இருதயம் பலமாகும் பெறும் மருத மர ரகசியங்கள்.
===========================
தேரையர் சித்தர் :- அறிந்தும் இளம் ஏது என்று புரிய இருதயம் பலவீனப்பட்டவர்கள் அங்கேதான் அறிந்தும் கூட அமர்ந்து தியானம் செய்தால், பின் “மரத்தில் உள்ள ஓசைகள்” அறிந்தும் கூட பின் “உடம்பில் விழுந்து பின் இருதயம் பலமாகும்”.
===========================
# சிறு குறிப்பு :- மருதமலையின் முதன்மை ஸ்தல விருட்சம் மருத மரம் (Terminalia arjuna) ஆகும். மருத மரங்கள் அதிக அளவில் காணப்படுவதால், இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. நீர் மருது, கரு மருது, பிள்ளை மருது போன்ற பல்வேறு வகைகள் இங்கு காணப்படுகின்றன. மருத மரத்தின் பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இதய நோய் மற்றும் பல உடல் பிணிகளைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதயம் பலவீனமானவர்களை இங்கு செல்ல சொல்லுங்கள். மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் நமது இருதயம் பலமாகும்.
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- அங்க ஒரு ரகசியம் இருக்குது.
அடியவர் :- பெரிய உண்மையை சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- மனசெல்லாம் விட்டுப்போச்சு. என்னடா இது வாழ்க்கை. என்னடா இதுன்னு சொல்லி இருக்கிறவங்க எல்லாம் வந்து மருதுமலையில கொஞ்சம் தியானங்கள் செஞ்சா, அதெல்லாம் அங்க நீக்குற சக்தி.. என்னங்க அது?
அடியவர் :- இருதயத்துடைய வலிமையை வந்து அதிகப்படுத்துற சக்தி மருதுமலையில இருக்கு.
தேரையர் சித்தர் :- அனைவருமே நல்லது நடக்கத்தான் வந்திருக்கின்றீர்கள். இதனால் பின் மருதுமலையோனை பின் அழைப்பேன். அழையுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- நானும் அழைக்கிறேன். நீங்களும் சேர்ந்து?.....
அடியவர் :- நீங்களும் சேர்ந்து அழைங்க. எல்லாரும் கைதட்டி பாடுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எல்லாரும் நல்லா கைதட்டுங்க. இதுலதான் நம்மளுக்கு உற்சாகமே இருக்குதுங்க ஐயா. நம்ம கவலைப்பட்டுறோம்ல. நாம நல்லா இருக்க எல்லாரும் நல்லா கைதட்டுங்க அய்யா.
===========================
# ( அடியவர்கள் மனம் சோர்வடையும் பொழுதெல்லாம் இவ் பாடலை பாடுங்கள். உங்கள் மனது / இருதயம் தெம்பு அடையும். உற்சாகம் பிறக்கும். இவ் ரகசியத்தை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்.)
===========================
பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகய்யா - என்ற பாடலை அருமையாக பாடினார்கள் )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment