​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 September 2021

சித்தன் அருள் - 1038 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருட பகவான், பெருமாளை பணிந்து வணங்கி,

"சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றை தயை செய்து கூறி அருள வேண்டும்" என்று வினவினார்.

"கருடன்! மனுஷ்யர்கள் வாழும் மனுஷியலோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பதினாயிரம் காதம் இடைவெளி உள்ளது. அந்த எமலோகத்தில் வாழும் எம தர்மராஜனான கூற்றுவன், உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும், ஜீவனைப்பிடித்து வரும்படியாகத் தன் தூதுவர்களிடம் கூறுவான். யாவுமே அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்களும், கனலும் காயும் சினமுடையவர்களும், பாசம், முசலம் முதலிய ஆயுதங்களைத் தரித்தவர்களும், கார்மேகம் போன்ற கருப்பு நிற ஆடைகளை அணிந்தவர்களுமான மூவகைத் தூதுவர்களை ஏவியனுப்புவான். அவ்யம் கிங்கரர்கள் மூவரும் சென்று. வாழ்நாள் முடிந்த ஜீவனை, பாசத்தால் கட்டிப் பிடித்து. காற்றின் உருவமான தேகத்தில் அடைத்துக்கொண்டு, யமலோகத்திற்கு செல்வார்கள். அங்கு சென்றதும், அந்த ஆவியுருவ ஜீவர்களை, யமபுரிக்கு தலைவனும், நாயகனுமான கால தேவனுக்கு முன்னால் கட்டவிழ்த்து நிறுத்தி,

"தர்மராஜரே! தாங்கள் கட்டளைப்படி, வாழ்நாள் முடிந்த ஜீவனை தங்களது சன்னதி முன்பு கொண்டுவந்து நிறுத்தி விட்டோம்! இனி, தங்கள் ஆக்ஞ்சைப்படி நடக்க சித்தமாயிருக்கிறோம்!" என்று கூறி ஒருபுறமாக ஒதுங்கி நிற்பார்கள்.

எருமை வாகனனாகிய, எமதர்மராஜன், அத்தூதர்களை நோக்கி "ஏய் கிங்கரர்கள், நன்று! நன்று! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு, இன்றிலிருந்து பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி அவனை மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துக!" என்று கட்டளையிடுவான்.

உடனே எமதூதர்கள் ஒரு நொடி நேரத்திற்குள், அந்த சீவனை கட்டிப் பிடித்து, 86000 காதவழி கடந்துவந்த அந்த சீவனின் இல்லத்திற்க்கே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். இதுபோல் இறந்த ஜீவன், எனலோகத்திற்கு சென்று மீண்டும் பூவுலகத்தில் உள்ள அவனது இருப்பிடத்திற்க்கே மீண்டும் வருகின்றபடியால், இறந்தவன் உடலை உடனடியாக எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யாமல், சிறிது நேரம் கழிந்த பிறகே அவ்வாறு செய்யவேண்டும். எமதூதர்களால், ஆவிஉருவில் பாசத்தால் கட்டப்பட்டிருந்த ஜீவன், அவர்களால், அவிழ்த்து விடப்பட்டவுடன், வாயு வடிவமுடைய அந்த உயிர், சுடுகாட்டிலே தன சிதைக்கு பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று, திரும்பவும் புகமுடியாதவாறு, தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியும் தன் உடலை பார்த்து, "அய்யகோ! அந்தோ! ஐயையோ!"  ஓலமிட்டு அழும். அதே ஜீவன், புண்ணியம் செய்த ஜீவனாக இருக்குமானால், "இந்த உடல் எரிந்து ஒழிந்ததே நல்லது!" என்று மகிழ்ச்சி அடையும்.

கருடா! சிதையிலே தீ மூட்டி எரியும் தீயிலே உடலானது எரிந்து, வெந்து, சாம்பலாகும் போது தலையானது, வேகும் வரையில் அந்த ஜீவனுக்கு தன உடல் மீதும், அந்த உடல் சம்பந்த பட்ட பொருட்கள், உறவு தொடர்பு, ஆகியவற்றின் மீதும் உள்ள ஆசையானது ஒழியாது. எரிகின்ற தீயிலே, சிரசு முதல் பாதம் வரை தேகமெல்லாம் வெந்து, சாம்பலான உடனே, சீவனுக்கு பிண்டத்தால் ஆன சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாள் அன்று போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்து தோலும், மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் போடும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடும் பிண்டத்தால் உந்தியும், ஆறாம் நாள் போடும் பிண்டத்தால், பிருஷ்டமும், ஏழாம் நாள் போடும் பிண்டத்தால், குய்யமும், எட்டாம் நாள் போடும் பிண்டத்தால் துடைகளும், ஒன்பதாம் நாள் போடும் பிண்டத்தால், கால்களும் உண்டாகி, பத்தாம் நாள் அன்று அவன் போடும் பிண்டத்தால், சரீரம் முழுதும் பூரணமாக உண்டாகும். ஜீவன், உடலை விட்டு பிரியும் முன்பே, மனைவி மக்களோடு, அவன் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்து, வீட்டின் உள்ளே செல்லாமலே, அந்த வீட்டின் வாசலில் நின்று, வீட்டுக்குள் போவோர், வீட்டிலிருந்து வெளியே வருவோர்களை பார்த்து, பசி தாகத்தால் "ஆ,ஆ" என்று கதறிக்கொண்டு பதறி நிற்பான். அந்த ஜீவன், பிண்ட உருவை பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரெண்டாம் நாளிலும் தன புத்திரனால், பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதிமூன்றாம் நாள் அன்று, எம தூதர்கள், எம தர்மனின் கட்டளைப்படி, அங்கு வந்து, அந்த பிண்ட உருப்பெற்ற ஜீவனை பாசத்தால் பிணித்து கட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல, அவன் தன வீட்டை திரும்பி, திரும்பி பார்த்து, கதறிக்கொண்டே எம லோகத்தை அடைவான்.

கருடனே! பிண்ட சரீரம் பெற்று சீவன், எம கிங்கரர்களால் பாசத்தால் பிணைத்து கட்டப்பட்ட நிலையில், எம கிங்கரர்களோடு, நாள் ஒன்றுக்கு 247 காதவழி, இரவும், பகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில், கூரிய பற்களை உடைய வாள் போன்ற இலைகளை உடைய ஒரு கானகத்தை கடந்து செல்ல வேண்டி இருக்கும். கருடா! மரங்கள் அடர்ந்த காடுகளில் செல்வது யாருக்கும் கடினமானதல்லவா? சூரி இலைகளான வனத்தில் எவ்விதம் செல்வது? அக்காட்டின் ஊடே நடக்கும் பிண்ட ஜீவன், பசியாலும், தாகத்தாலும் மிகவும் வருந்தி தவிப்பான். அவ்வாறு செல்லும் வழியில் அவன் படும் துன்பத்தை யார்தான் சொல்ல முடியும்? இது ஒரு புறம் இருக்கட்டும்!

சித்தன் அருள்.................தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ,🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. இந்த பதிவு எண் 1038 மாற்ற வேண்டும் ஐயா

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete