​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 3 January 2023

சித்தன் அருள் - 1255 - அகத்தியர் வாக்கு - 7


கேள்வி: "பழனியில் கிரிவலம் எப்படி செய்ய வேண்டும்?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! மீண்டும் சொல்கின்றேன்! அப்பனே! இப்படி செய்தால்தான் அவனுடைய அருளும் நிலையாகும். பல யுகங்கள் பார்த்துவிட்டேன் அப்பனே! அப்பனே, எதை என்று கூற அப்பனே! வழியில் படுத்து, படுத்து சுற்றி வரவேண்டும் என்பேன் (அங்க ப்ரதக்ஷிணம்)..

கேள்வி: "மலை அடிவாரத்திலா அல்லது மேலேயா?"

குருநாதர்:"அப்பனே! சுலபமாக இருப்பதால், மேல் என்று சொல்லிவிட்டீர்களா என்ன? எதை என்று அறிய அறிய. அதன் கீழ் அடியில், அப்பனே! எண்ணற்ற ஞானியர்கள் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே! அதனால்தான் அப்பனே! கீழே சுற்றினால்தான் சக்திகள் அதிகம் என்பேன். அதனால்தான், இதை அனைவர்களும் உணர்வார்கள்!"

கேள்வி:"தோரணமலை முருகரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!"

குருநாதர்:"அப்பனே! அங்கு எதை என்று அறிய! அறிய! அப்பனே! அங்கு, விளையாடுகிறான் முருகன் அப்பனே! அப்பனே! அனுதினமும் அங்கே வருவான் முருகன் அப்பனே! ஆனால், நேரம் குறிப்பிடமாட்டேன் இப்பொழுது. அப்பனே! அந்நேரத்தை குறிப்பிட்டுவிட்டால், என்னை திட்டி தீர்த்துவிடுவான். எதை என்று கூற? யான் விளையாடி கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியும் மனிதர்கள் வந்துவிட்டார்களே என்று!  அந்த நேரம் சந்தோஷமாக இருக்கிறோமே என்று. இதனைக்கூட, முருகனிடத்தில் உத்தரவு கேட்டுத்தான் சொல்வேன்.

கேள்வி: "அதையும், கொஞ்சம் உத்தரவு கேட்டு அருளுங்களேன்!"

கேள்வி: "அங்கு தேரையர் சித்தரின் சமாதி உள்ளது என்கிறார்களே?"

குருநாதர்: "அப்பனே! எதுவென்று செப்புவது? அது தேரையர் சித்தர் மலைதான் அது. காலப்போக்கில் வழக்காட்டு சொல்லில் "தேரையர் மலை" என்பது "தோரண மலை" என்றாகிவிட்டது!

கேள்வி: "சுத்த சன்மார்க்கத்தில், ஜீவ காருண்யாத்தைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!"

குருநாதர்: "அப்பனே! இவை பல வழிகளிலும் கூட சொல்லிவிட்டேன் அப்பனே! இவை, ஏற்கனவே எடுத்துரைத்து விட்டார்கள் அப்பனே! அதனால், வள்ளலார் பெருமானின் கருத்துக்களை படித்தால், போதுமானது என்பேன்.

கேள்வி: "அகத்தியர் 12000 நிறையபேர் குழுவாக இருந்து படிக்கிறார்கள். அதற்கு உங்களின் ஆசி வேண்டும்!"

குருநாதர்: "அப்பனே! நிச்சயம் முடியாது என்பேன் அப்பனே! எதை என்று உணர்ந்து! உணர்ந்து! அப்பனே! படித்திட்டு பார்ப்போம் அப்பனே! அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து! அப்பனே! இதற்கும் பல விஷயங்கள் உண்டு என்பேன் அப்பனே! சாதாரணமாக படித்தாலும், பின் மறந்துவிடும் என்பேன், அப்பனே! இதை யான் இப்பொழுது சொல்ல மாட்டேன் அப்பனே! பின்பு, அழித்து விடுவார்கள் அனைத்தையும், அப்பனே! இருக்கட்டும்".

கேள்வி: 'ஆறாவது அறிவை, ஒரு செயலை செய்கிற அந்த நொடியில், சரியாக மனிதன் உபயோகப்படுத்தினால், கர்மாவானது சேராமல் இருக்குமல்லவா?"

குருநாதர்: "அப்பனே! ஆறாவது அறிவு என்பது, கர்மத்துக்குத்தான் அதிக சக்திகள், அதாவது, அழைத்து செல்லும் என்பேன் அப்பனே! அதாவது எதை என்று அறிய அறிய! பின் இறைவனை பற்றினால் மட்டுமே, அவ் ஆறாவது அறிவைக்கூட ஜெயிக்கலாம் அப்பனே! பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: "பல்லசூரக்கரை ஐராவதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க அருள் புரியவேண்டும்!"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! ஈசனே நடத்திக் கொள்வான்! விட்டுவிடு!"

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. குரு அகத்தியர் பாதம் சரணம் , நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  3. கதிர்காம முருகன் பற்றி தெரியவேண்டும்.?

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete