கேள்வி: "விடியற்காலை பிரம்ம முகூர்த்த த்யானத்தைப் பற்றியும், அது ஏதாவது காரணத்தால் நின்று போய்விட்டால், என்ன செய்வது?
குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அனைவருக்கும்! சூரியன் உதிக்கும் முன்பே, எதை என்று அறிய அறிய அப்பனே! அவந்தனுக்கு, சூரியனை விட அதிக சக்திகள் ஏற்படும் அப்பனே! என்பேன். அப்பனே! அனைத்தும் உணர்ந்து கொள்வான் அப்பனே! இதுதான் சத்தியமான உண்மை. பின், எதை என்று அறிய அறிய! பின் சூரியனும் வந்து, என்னை விட அதிக சக்தி படைத்தவன் நீ தான் என்று, சூரியனும் வணங்குவான் என்பேன். பின் எதை என்று அறிந்து, அறிந்து, ஈசனிடம், விஷ்ணுவிடம், பிரம்மனிடம் கேட்டு, இவந்தனுக்கு நானே பிறவியை அளித்து விடுகின்றேன் என்று, நிச்சயம் அடுத்த பிறவி வேண்டுமா? இதற்கு யானே பிறவி அளிக்கின்றேன், உலகத்தையும் ஆள வைக்கின்றேன் என்று கூறிவிடுவான். பின் ஆளவை என்று கூறிவிட்டால், மறுபிறப்பும் அளிப்பான். இன்றும் அப்படித்தான் ஆண்டு கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. இது யாருக்கும் தெரிவதில்லை."
கேள்வி: "ஒருவர், அல்லது நம்முடன் இருக்கும் யாராவது, நம்பிக்கை துரோகம் பண்ணினால், அதனால் பாதிக்கப்படக் கூடியவர், எந்த விதத்தில் அதை எடுத்துக் கொள்ளவேண்டும்?"
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! அனைத்தும், கர்மாதான் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்."
கேள்வி: "அவர்களை மன்னிக்கலாமா? அல்லது வேண்டாம் என்று விட்டுவிடலாமா?"
குருநாதர்: "அப்பனே! என்னுடைய கூற்றுப்படி, நன்றாக இருங்கள் என்று சொல்லி விட வேண்டியதுதான்."
கேள்வி: "சித்தர்கள் தரிசனம் கிடைக்க, முறையான வழிபாடுகள் ஏதேனும் உள்ளதா?"
குருநாதர்: "அப்பனே! யான் சொல்லிவிட்டால், அனைவரும் வந்து தரிசித்து விடுவார்கள். இப்பொழுது இல்லை."
கேள்வி: "மந்திர ஜபத்துக்கு தீக்ஷை முக்கியமா? அல்லது நேரடியாக பக்தி மார்கத்தில் போய் தெரிந்ததை செய்து போவது நல்லதா?
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய அறிய! பக்தியினால், பக்தி எது என்று அறிந்து, அறிந்து, ஏதாவது ஒரு ரூபத்தில் காட்டினால் போதும். யாங்களே வந்து, எதை என்று அறிந்து அறிந்து சொல்வோம், இதுதான் உண்மை."
கேள்வி:அப்படியாயின், மந்திர தீக்ஷை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!"
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து!. அப்பனே யான் ஏற்கனவே பாடிவிட்டேன் அப்பனே! இந்தப்பாடல் கேட்டாயா என்ன? மனமது செம்மையானால். மந்திரம் ஜெபிக்க வேண்டாம். அதனால், மனம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால், எதுவும், எதனாலும் தொந்தரவு இல்லை அப்பனே! பின் எங்காவது, பைத்தியமாகவாவது திரிந்து கொண்டு இருக்கலாம். திரிந்து கொண்டு இருக்கும் பொழுது, பின் இறைவனே வந்தாலும், நீ இறைவனா, எந்தனுக்கு என்ன செய்வாய், என அந்த பைத்தியம் இறைவனை அறிந்து அறிந்து கேட்கலாம் என்பேன்."
கேள்வி: "குருவிடம் சரணடைபவர்கள் கர்மாவை, குருவே கரைத்து விடுவாரா? அல்லது அனுபவித்து கரைக்க வைப்பாரா?"
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! முதலில், யான்தான் (உங்களை) சீடனாக ஏற்றுக் கொள்ளவேண்டும், அப்பனே!"
கேள்வி: "அப்படியானால், எங்களை உங்கள் சீடனாக நீங்கள் ஏற்றுக்கொள்ள, நங்கள், என்ன செய்ய வேண்டும்?"
குருநாதர்: "அப்பனே! எதுவும் செய்யத் தேவை இல்லை அப்பனே! யாங்களே தேர்ந்தெடுப்போம் அப்பனே!"
கேள்வி: "நல்ல செயலால், ஒருவருக்கு கர்மா வந்தால், எதிர்கொள்வது எப்படி?"
குருநாதர்: "அப்பனே! நல்ல செயல் செய்தால், யாங்களே வருவோம் அப்பனே! போதுமா?"
கேள்வி: "சித்தர்களே வந்து விளக்கி விட்டால், அதனால் நல்ல கர்மா வராதா?"
குருநாதர்: "அப்பனே! எதை அறிந்து! அறிந்து! இவற்றின் தன்மைகளை அறிந்து கொண்டால், நல்லது அப்பனே! அதனால், நன்மைகள் பல பல உண்டு என்பேன் அப்பனே! அதனால், எதை என்று அறிந்து அறிந்து! அப்பனே! இதற்கு இன்னும் விரிவாக்கம் இருக்கின்றது. இப்பொழுது வேண்டாம்!
கேள்வி: "விதி, மதி, கதி - சூட்சுமமாக என்ன?"
குருநாதர்: "விதியும் இல்லை, மதியும் இல்லை, கதியும் இல்லை. இது யான் சொல்வது இல்லை. புசுண்டன் ஆராய்ந்து, ஆராய்ந்து சொல்லியிருக்கிறான். அப்பொழுது, மனிதன் அனாதையே!
அப்படி இருக்கும் பொழுது, மனிதன் அனைத்தையும் தேர்ந்தெடுத்து அதன் மூலமே அறிவை தேடிக் கொண்டிருந்தான். பாவம் மனிதன்!"
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..... தொடரும்!
ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஅகத்தீசாய நம நன்றி ஐயா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteநன்றி ஐயா🙏🌹🙏
அருமை அருமை நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக ஓம் அகத்தீசாய நமக 🙏🙏🙏
ReplyDeleteஅகத்தீசாய நம நன்றி ஐயா
ReplyDelete