​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 9 January 2023

சித்தன் அருள் - 1260 - அகத்தியர் வாக்கு - 10


கேள்வி: "சிவலிங்கம்! அதன் உண்மையான அர்த்தத்தை கூறமுடியுமா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று கூறுவது? இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே!"

கேள்வி: "எட்டிரெண்டு என்பது லிங்கம் என்று அறியார் என சித்தர் கூறியுள்ளார். அதனுடைய அர்த்தமாவது சொல்லலாமா?

குருநாதர்: "அப்பனே! அதை நீயே புரிந்து கொள்வாய் அப்பனே!"

கேள்வி: "விதி இல்லை என்றால், அருள் கிடைக்காதா?"

குருநாதர்: "அப்பனே! மதி இல்லை என்றால் அறிவு கிடைக்காதா?"

அடியேன்: "அனுபவத்தினால் வாய்ப்புள்ளது!"

குருநாதர்: "அப்பனே! இதுபோல், அதையும் வைத்துவிடு. ஆனால் பதில் எதை என்று அறிய? விதி இல்லை, சொல்கின்றேன்!

கேள்வி: "தலைகீழ் லிங்கத்தை பற்றி இதற்கு முன் கேட்டிருந்தேன். அடுத்த முறை சொல்கிறேன் என்று கூறியிருந்தீர்கள்! சித்தர் கோவில், மதுரையில் இருக்கும் தலை கீழ் லிங்கத்தை பற்றி கூற முடியுமா?"

குருநாதர்: "அப்பனே! எதனை என்று அறிய! அறிய! இதனை பற்றியும் கூட அடுத்த முறை சொல்கின்றேன்!"

கேள்வி: "மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை கட்டியது, பாம்பாட்டி சித்தர் தானே!"

குருநாதர்: "அப்பனே! உண்மைதான். ஆனால் (வெளியே கூறினால்) பைத்தியம் என்று சொல்வார்கள். போதுமா! நீ சொல்! பைத்தியம் என்று பெயர் வாங்கிக்கொள்! போதுமா?"
[அப்படியானால், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், பாம்பாட்டி சித்தர் கோவில், அழகர் கோவில் பெருமாள் - இவர்கள் இடையே உள்ள நிகழ்வும்/தொடர்பும் உண்மைதான்!]

கேள்வி: "உடல் ஆரோக்கியத்துக்கு ஏதேனும் கூற முடியுமா?'

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே நான் முதலிலேயே சொன்னேன்! அதை ஞாபகப்படுத்திக்கொள்! [துளசி இலை, வில்வ இல்லை, முருங்கை இலை. ஜீரகம், மிளகு போன்றவை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்த வேண்டும்!] இதனுடன், சிறிது, ஆவாரம் பூ, செம்பருத்திப் பூ, சிறிது தாமரையும் சேர்த்து, நீரில் இட்டு சூடேற்றி அதையும், அருந்தி வா! ஆனாலும், இவ்வுலகத்தில், திரிபலா, திரிகடுகத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்பேன்! அப்பனே! உணர்ந்து, உணர்ந்து சொல்கின்றேன்! அப்பனே! பின் நெல்லிக்கனியை மென்று தின்னவும்.

கேள்வி: "ஜாதகப்படியும், கோசாரப்படியும் ராகு, கேது, சனி, குரு இவர்கள் நல்ல நிலைமை இல்லாத இடங்களில், உதாரணமாக, ஆறு, எட்டு, பன்னிரண்டு போன்ற இடங்களில் அமர்ந்தால், உடல் நிலைக்கு பிரச்சினை வரும் பொழுது, அதை விட்டு நம்மை காப்பாற்றி எப்படி வெளியே வருவது?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! கோசாரம் இல்லை, கிரகங்களும் இல்லை! யான் தெரியாமலே கேட்கின்றேன்! ஆளுகின்றவனுக்கு மரண கண்டம் என்று! வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்! இதற்கு என்னதான் கூறப்போகிறாய் நீ?

அடியேன்: "எல்லா மனிதர்களுக்கும் ரொம்ப ஆச்சர்யமான விஷயம் அதுதான்! ஏன் என்றால், அவ்வளவு தூரம் தவறுகளை செய்து விட்டு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது எந்த விதி அவர்களை இந்த மாதிரி கொண்டு போகிறது என புரியவே மாட்டேன் என்கிறது. இல்லை, எந்த இறை சக்தியானது அவர்களை பாதுகாத்து கொண்டு போகிறது என தெரியவில்லை. ஏன் என்றால், அத்தனை மனிதர்களுடைய, வருத்தத்தையும்/சாபத்தையும் வாங்கிக் கொண்டுதான் உட்கார்ந்து இருக்கிறார்கள்."

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து! அப்பனே இதனை பற்றி பின்னர் ஒருநாள் விவரமாக குறிப்பிடுகின்றேன்! இப்பொழுது சொன்னாலும் இவந்தானுக்கு (நாடி வாசித்தவருக்கு) தாங்கக் கூடிய சக்தியும் இல்லை என்பேன் அப்பனே!

கேள்வி: "இந்து மதத்துக்கான ஆபத்து என்பது, அரசியல்வாதிகளாலும்/மற்றவர்களாலும் ரொம்ப கூடிவிட்டது. இதற்கு ஏதேனும் பதில் உண்டா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் எண்ணிக்கொள் அப்பனே. ஒரு பலசாலி இருக்கிறான் என்றால், அதற்கு மிஞ்சிய பலசாலியும் வருவான் என்பேன் அப்பனே!  அப்பனே, எதை என்று அறிய! அறிய! ஒருவன் உன்னை ஏமாற்றுகிறான் என்றால், நீயும் ஏமாறிப்போகலாம். ஆனால், ஏமாற்றுகின்றவனை மிஞ்சிய அவன், பலசாலியாக இருப்பான்."

கேள்வி: "சனாதன தர்மத்தை தொடர்வதற்கு மிக எளிய வழிகள் என்ன?"

குருநாதர்: "அப்பனே! இதனைத்தான் என்று குறிப்பிடுவது எப்படி! வேண்டாம் என்பேன், இப்பொழுது".

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அப்படியானால், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், பாம்பாட்டி சித்தர் கோவில், அழகர் கோவில் பெருமாள் - இவர்கள் இடையே உள்ள நிகழ்வும்/தொடர்பும் உண்மைதான்!]|||
    ஐயா இதைப்பற்றி சற்று விளக்கவும்.. நன்றீங்க
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி ..

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete