13/10/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மந்திர். ஜனம் பூமி.மதுரா உத்திர பிரதேசம்.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!
அப்பனே!!! நலமாக எம்முடைய ஆசீர்வாதங்கள்!!!
அப்பனே இன்னும் அப்பனே என் பக்தர்கள் நிச்சயம் ஏராளமானோர் இவ்வுலகத்தில் உள்ளனர் என்பேன் அப்பனே!!!
அவர்களுக்கெல்லாம் நிச்சயம் நல்வாக்குகளாக செப்பி அவர்கள் மனதையும் மாற்றி இப்பிறப்பே கடைப்பிறப்பாகும் என்பதுதான் எனது தீர்ப்பு என்பேன் அப்பனே!!!!!
என்னையே நம்பிக் கொண்டு இருக்கையில் அப்பனே யானே அனைத்தும் செய்வேன்!!!
ஆனால் உண்மையானவனாக!!!! அதாவது பின் பொய் சொல்லாதவனாக!! பின் பொறாமை இல்லாதவனாக அவை மட்டும் இல்லாமல் பின் யாருக்கும் துன்பம் விளைவிக்காதவாறு தான் மட்டும் எதையென்று பின்.. அகத்தியனே போதும் என்றும் இறைவனே போதும் என்றும் என்று இருப்பவர்களுக்கு... நிச்சயம் யான் விடிவெள்ளி தருவேன்!!!
பின் சில சில விதிகளில் கூட போராட்டங்கள் இருந்தாலும் நிச்சயமாய் யான் மாற்றி அமைத்து தருவேன் அப்பனே சொல்லிவிட்டேன்!!!
அப்பனே எதை என்று ஆனாலும் அப்பனே ஒரு முறை அப்பனே அதாவது இவ்வுலகத்தை ஆண்டு வந்தான் மன்னன் அதாவது இதையென்று.."" இனயன் "" என்பது அவனுடைய நாமம்!!
ஆனாலும் நன்றாகவே ஆட்சி படைத்து வந்தான்!!! ஆனாலும் அவந்தனுக்கு சரியாக அப்பனே பின் நண்பர்கள் சரியாக அமையவில்லை அப்பனே!!!
எதனால் என்பதையும் கூட ஆனாலும் இவந்தன் இப்படியே சென்று விட்டால் உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கின்றான் என்று என்பதைக் கூட நண்பர்களின் பின் எதை என்று அறியாமலே... ஆனாலும் இவந்தனை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்பதைக் கூட பின் நண்பர்களின் பின் எதை என்றும் அப்பனே இதை இதை என்று கூற நினைத்து விட்டார்கள்!!!!
ஆனாலும் அவந்தனோ!!! ஈசனுடைய பக்தன்!!!! பெரும் பக்தனப்பா!!!! ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே ஆனாலும் நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட அப்பனே நல் முறையாகவே இதனை எதனையும் என்று கூட ஆனாலும்... அவ் அரசனும் இங்கேதான்(மதுரா) கற்றுணர்ந்தான் என்பேன்!! அப்பனே!!!
அதாவது எதை என்று அறிந்து அறிந்து வசிஷ்ட குருகுலத்தில் அப்பனே அனைத்தும் கற்றுணர்ந்தான்!!!
ஆனாலும் அப்பனே எதை என்று அறியாமல் ஆனாலும் வசிஷ்டன் தவம் மேற்கொண்டே இருந்தான் இங்கேயே!!!
ஆனாலும் இதையென்று நம்பி நம்பி ஆனாலும் எதனையும் என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட ஆனாலும் ஒவ்வொரு ஒவ்வொரு யுகத்திலும் கூட வசிஷ்டன்!! வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!
இதனையும் என்றும் ஆனாலும் இவ் அதாவது எதை என்று கூட இக்கலி யுகத்திலும் வசிஷ்டன் அழகாகவே அப்பனே எதை என்று கூற "காசி"தன்னில் அழகாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!! இப்பொழுது கூட அப்பனே!!!
அப்பனே ஆனாலும் யாருக்கும் தெரியாமலே அப்பனே!!! நெருங்கவும் முடியாது !!! ஆனால் நிச்சயம் என் பக்தர்களுக்கு காண்பிப்பேன் வரும் காலங்களில் அப்பனே பல வழிகளிலும் கூட!!!
அப்பனே என்னை நம்பி வந்து விட்டீர்கள் என்றால் அப்பனே ஆனால் எதை என்று கர்ம வினையை முழுவதுமாக அழித்து விடுவேன் !!!
அதனால் என் பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்!!!
எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது!!! எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது !!என்று யாரும் சொல்லக்கூடாது என்பேன்!! அப்பனே!!!
ஏன்!? கஷ்டங்கள் வருகின்றது? அப்பனே!! பின் உன் ஆன்மா அதாவது எதை என்று அறியாமல் செய்த தவறுக்கு தான் அப்பனே தண்டனைகள் வழங்கிக் கொண்டே இருக்கின்றது!!
ஆனாலும் அப்பனே அனைத்தும் முழுமையாக அதாவது கர்மாவை நீக்கிவிட்டு பேரருளை யான் காண்பிப்பேன் அப்பனே!!!!!
இதுதான் ரகசியம்!!!!
ஆனாலும் இதையென்று ஆனாலும்...பின் அவ் அரசனுக்கு எதையென்று எதிர் கொள்ளும் அளவிற்கு கூட வசிஷ்டனுக்கு தெரிந்து விட்டது!!!!
ஆனால் வசிஷ்டன் பின் மனித ரூபம் எடுத்து அதாவது கூடுவிட்டு கூடு பாய்ந்து!!!! பின் நல்விதமாக அவ் மன்னனின் அருகிலே இருந்து பின் அடியோடு அனைத்தும் அழித்து அழித்து அனைவரையும் கூட அழித்து அழித்து மீண்டும் மீண்டும் அவ் மன்னனை உயர்த்தினான் என்பேன் அப்பனே!!!!
இதுதான் அப்பனே நல்விதமாக அப்பனே எங்களை நம்பினோர்க்கு நிச்சயமாய் யாங்களே கூடு விட்டு கூடு பாய்ந்து இக் கலியுகத்திலும் கூட அப்பனே அருகிலே இருப்போம்!!!!
அதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ளத் தேவையில்லை அப்பனே!! மனிதன் என்றால் கஷ்டங்கள் வரும் என்பதே தீர்மானம் என்பேன் அப்பனே!!!!
கஷ்டங்கள் இல்லாமல் யாரும் செல்ல முடியாது என்பதை கூட யான் பல வாக்குகளிலும் கூட யான் செப்பிக்கொண்டே வருகின்றேன் அப்பனே!!! இதனையும் எதிர்கொண்டு எதிர்கொண்டு அப்பனே நிச்சயம் எதை என்று கூற மனிதனாக பிறந்து விட்டால் அப்பனே எதனை எதனை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட யான்.......
ஆனாலும் என்னுடைய அருள்கள் அப்பனே எதை என்று கூற வரும் காலங்களில்..... என்னுடைய பக்தர்களுக்கு நிச்சயம் மிஞ்சிய அளவிற்கு அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் மூலம் மனிதர்களுக்கு நிச்சயம் யான் நன்மைகளை செய்யத்தான் போகின்றேன் அப்பனே!!!
ஆனால் உண்மையான மனிதர்கள் அப்பனே மிகவும் பின் எதை என்று சொல்லாத அளவிற்கு கூட அப்பனே குறைவுப்பா!!!!
உண்மையான பக்தர்களை பின் எதை என்று அறியாமலே அவர்களை மட்டும் யான் தேர்ந்தெடுப்பேன் அப்பனே நலமாகவே!!!
ஆனாலும் அவர்கள் எதுவும் எதற்கும் ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே!!!
தான் உண்டு!! தன் வேலை உண்டு!!. பின் இறைவன் உண்டு!!! என்று இருப்பவர்களுக்கு மட்டுமே என்னுடைய அருள்கள் அதாவது சித்தர்களுடைய அருள்கள் கிட்டி... சித்தர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்பேன் அப்பனே!!!!
அவை மட்டும் இல்லாமல் அவை வேண்டும் இவை வேண்டும் அப்படி செய்கின்றேன் இப்படி செய்கின்றேன் என்றெல்லாம் பின் மனதில் நினைத்துக் கொண்டால் நிச்சயம் எங்கள் தரிசனமும் கிடைக்காது!!! அப்பனே ஏதும் கிடைக்காது!!!
அப்பனே வந்தாய்!! மாயந்து விட்டாய்!!! இதுதான் அப்பனே பின் மீண்டும் வருவாய் பின் கஷ்டங்கள் படுவாய் இப்படியே பிறவிகள் கடந்து கொண்டே இருக்கும் அப்பனே!!!
முதலில் எதை என்று அறிய அப்பனே மானிட பிறவியே வேண்டாமப்பா!!!!!!
அதனால் தான் பல பல யுகத்திலும் யாங்கள் மனிதர்களுக்கு அப்பனே!!! பல வழிகளிலும் பல வகையிலும் நன்மைகளை அளித்து பிறவி பெருங்கடலை பின் அழகாகவே முடித்து வைப்போம்!!!
முடித்தும் வைத்தோம்! இன்றளவும் கூட!!!!!!!
அதனால்தான் நல்லதிற்காகவே எதை எதிர் கொண்டு எதிர்கொண்டு அப்பனே!!!!
இன்னும் சில வழிகளில் கூட நன்மைகளாகதான் யான் செய்வேன் அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் மகன்களே!!!! எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் ஏராளமான செய்திகளையும் கூட அப்பனே விளக்கத்தோடு அளிக்கின்றேன் அப்பனே!!!!
அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்களும் வருவார்களப்பா இதனால் நன்முறைகளாக வாக்குகள் கேட்டு நன் முறைகளாகவே இதை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இருந்தால்..........!!!!
அப்பனே....ஏது?? குறை!!! அப்பனே!!!
யாங்களே வருவோம் ஒவ்வொரு இல்லத்திற்கும் அப்பனே!!!! நலமாகவே மாற்றி அமைப்போம்!!!
அப்பனே!!! யானே !! வந்து விட்டால் அங்கு ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே!!!
மந்திரங்கள் தந்திரங்கள் அப்பனே!! எதை எதை என்று கூற!!...
அப்பனே யான் எதை என்று கூற!!!! எவை என்று கூற!!
ஒரு இல்லத்திற்கு கூட சென்று விட்டேன் அப்பனே ஆனாலும் அங்கு என் படம் அழகாக இருக்கின்றது!!!!
ஆனாலும் அவ் இல்லத்தார் என்னை வணங்கவில்லை அப்பனே!!! யார் யாரோ கொடுக்கின்றதையெல்லாம்.....!!!!!
பின் அதற்குத்தான் பூசைகள் நடக்கின்றது அப்பொழுது பார்த்தீர்களா!!!! அப்பனே!!!!
எங்கு பக்திகள் உள்ளது என்பதை கூட!!!.......
அப்பனே பக்திகள் இல்லையப்பா!!!! போலியானவனுக்கே!! பல பக்திகள்!!
ஆனாலும் அதனால் ஒன்றும் பயனில்லை என்பதை கூட யான் அறிந்து விட்டேன் அப்பனே!!
எதையென்று அறிய அறிய அதனால்..... அப்பனே மூலன்(திருமூலர்) கூட ஒன்றே குலம்!!! ஒருவனே தெய்வம்!!!.......
அப்பனே எதை எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து இதையும் கூட அப்பனே இன்னும் இன்னும்... வரும் வாக்குகளில் எதற்காக இதை சொன்னான்!!! என்பதையும் கூட நிச்சயமாய் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே!!!!
அதை கேட்டிட்டு அப்பனே நலமாகவே வாழ்ந்தாலே போதுமானது அப்பனே!!!
முதலில் மனித ஜென்மமே வேண்டாமப்பா!!!!!
அவ் ஜென்மத்தை பின் எதை என்று அறிய அறிய அதனை முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் அப்பனே!!! நலமாகவே அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு எவை வந்தாலும் அதாவது பின் கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்க கூடிய வலிமை யான் கொடுப்பேன் அப்பனே!!!!
நலமாகவே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்!!! கொள்ள வேண்டாம்!!! அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இங்கே(மதுராவில்) ஒரு முதியவன் இருந்தான்!!!!
அவந்தனும் அப்பனே கோவிந்தா!!! கோவிந்தா!!! என்று அழைத்துக் கொண்டே இருந்தான்!!!
ஆனாலும் பின் எதையென்று அறிய அறிய ஆனாலும் பின் அவ் முதியவனுக்கு பின் அனைவரும் பாவம்!! பாவம்!! என்று கூட!!.. அவர்களுக்கு பின் ரூபாய்கள்!!! அதாவது பின் எதையென்று அறியாமலே கொடுத்திட்டு சென்றனர் அப்பனே!!!!
இன்னும் அவந்தன் அப்பனே கோவிந்தா !!! கோவிந்தா!!! என்று சொல்லிக்கொண்டே இருந்தான் அப்பனே!!
ஆனாலும் பணம் ஏறக்குறைய அப்பனே அவந்தனையே மூழ்கடித்து விட்டது அப்பனே!!!!
ஆனாலும் அப்பனே பணத்திற்கு எதை என்று அறிய இன்னும் பணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தது!!!! ஆனாலும் கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றுதான்!!!
ஆனால் அவந்தன் பணத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை அப்பனே!!!
கோவிந்தன் மீதே நம்பிக்கை வைத்தான்!!!!
அதனால் பின் ஆனாலும் வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்கின்றானே!!!!ஏன்???
இவந்தனுக்கு பைத்தியமா?????
ஆனாலும் வருபவர்கள் எல்லாம்.... பக்தர்கள் தான்!!
பார்த்துக் கொண்டீர்களா!!!!
எப்படி பக்திகள் என்பதை கூட!!!........
பின் ஆனால் அப்பனே மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினாலும்!! என்ன!! பிரயோஜனம்??? அப்பனே
ஒன்றுமில்லை அப்பனே!!!
ஆனால் ஏதோ!! ஏதோ!! என்று கூட..... அதனால்தான் அப்பனே சொல்கின்றேன்!!
ஆனாலும் கோவிந்தா கோவிந்தா என்று இவ் முதியவன் சொன்னதாலும் எதையென்று அறியாத அளவிற்கும் கூட..... மனிதர்கள் இவனைப் பார்த்திட்டு.... கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி எதை என்று கூற எதைத்தான் சம்பாதித்தான்????..... என்று இவனைப் பார்ப்பது பின் உள்ளே சென்று இறைவனை தரிசிப்பது!!!...
அப்பனே!! எப்படியப்பா!!!!!!!...... இப்படி எல்லாம்!!!.......எதையென்று கூட நியாயமாகும்??????????????
நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்!!!
அப்பனே சரியாகவே அவந்தன் மீண்டும் மீண்டும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே இருந்தான்!!!
ஆனாலும் பின் முதியவன் ஆனாலும் இன்னொரு ""முதியவன்!!! தான் வந்தான் அப்பனே!!!..
ஆனாலும் அவ் முதியவன் சொன்னான் அப்பனே அவன் யாரென்றால்??
அப்பனே எதை என்று கூட உண்மையாகவே கோவிந்தனே!!!!! அப்பனே!!
அவ் முதிவனாக வந்தது கோவிந்தன் அப்பனே!!!
ஆனாலும் வந்து விட்டான் எதை என்று பின் முதியவரே!!!! இவ்வளவு பணங்கள் வைத்திருக்கின்றாயே!!!!!
பின் உந்தனுக்கு இன்னும் நிம்மதியாகவில்லையா என்று.....இக் கிழவன் அதாவது பின் கோவிந்தன் கேட்டான்!!!!
ஆனாலும் எதற்கறிந்து அறிந்து நிச்சயம் எந்தனுக்கு இதன் மீது நாட்டம் இல்லை!!!!! பணத்தின் மீது நாட்டமில்லை!!!!
எந்தனுக்கு பின் கோவிந்தன் மீது தான் நாட்டம் என்று பின் சொல்லிவிட்டான்!!!!!
இதனால் மீண்டும் அவை முதியவன் மறைந்து விட்டான்!!!! ஆனாலும் உள்ளே சென்று யோசித்தான் இவ்வளவு!!!!! நம் மீது பக்திகளா!!!....
அப்பனே பாருங்கள் அப்பனே மாயை நம்தனக்கு அருகில் வரச் செய்யும்!!! ஆனாலும் அதற்கெல்லாம் அப்பனே மயங்கி விட்டால் கர்மத்தில் நுழைந்து விடுவாய் அப்பனே!!!
ஆனாலும் எதற்கும் மயங்காமல் இருந்தால் அப்பனே என் இறைவனை பார்க்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் இறைவனே!! வந்து உந்தனுக்கு பல வகைகளிலும்.. உண்மை நிலைகளை பல பல எடுத்துரைத்து உண்மைகளை கூறி அப்பனே பல வழிகளிலும் கூட நன்மைகளை செய்ய காத்திருக்கின்றான் அப்பனே!!!!
ஆனால் மனிதன் அப்படி இல்லையப்பா!!!!
பொருளுக்கும் அப்பனே சுகத்திற்கும் ஆசைப்பட்டு சென்று சென்று அப்பனே மாயையில் விழுந்து அதன் மூலம் கஷ்டங்கள் பட்டுப்பட்டு மீண்டும் மீண்டும் இறைவனை வணங்கி!!... வணங்கி!!!......
அப்பனே முதலிலே சிறிது யோசித்து இறைவனை வணங்கி விட்டாலே போதுமானது மாயத்திரை அழிக்கப்படும் என்பேன்!!!
அப்பனே!!!
ஆனாலும் அப்பனே எதை எதை என்று தெரியாமல் அப்பனே மனிதன் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றான்.
ஆனாலும்( ஆலயத்திற்கு) உள்ளே போன முதியவன்... வெளியில் இருக்கும் அவ் முதியவன் நம்மையே அதாவது கோவிந்தா!! கோவிந்தா!! என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானே!!!!
அவந்தனுக்கு ஏதாவது ஒன்றை தர வேண்டும் என்று கூட மீண்டும் குழந்தை ரூபத்தில் வந்தான்!!!
ஆனாலும் இதையென்று அறிந்து அறிந்து.... ஆனாலும் எவை பின் அக்குழந்தை!!! யார் ?? என்பதை சரியாக அறிந்து கொண்டான் அவ் முதியவன்!!!!
இதனால் பின் நாளும் மனதில் நினைத்தது பின் அவ் மனித!!! அவ் கிழவன் எதை என்று அறியாமல் இருந்தானே நாம் நினைத்தது நிச்சயம் கோவிந்தன் குழந்தை ரூபத்தில் எப்பொழுது வருகின்றானோ!!!! அப்பொழுதுதான் நிச்சயம் எதை என்று அறியாமலே என் தவத்தை கலைப்பேன் என்று கூட!!!!!
கோவிந்தன்!!! அழகாகவே குழந்தை ரூபத்தில் வந்துவிட்டான்!!!! நிச்சயம் அவந்தனுக்கும் மகிழ்வுகள் ஏற்பட்டது!!!!!
கோவிந்தன்!! வந்து விட்டான்!! வந்து விட்டான்!!
எல்லோரும் ஓடி வாருங்கள்!! வந்து பாருங்கள்!!! என்று கூவி அழைத்து கேட்க!!!!
ஆனாலும் இதையென்று அறியாத மக்கள். பைத்தியம்!! ஏன்? அதாவது பைத்தியம் பைத்தியக்காரன் இவ்வாறு அலைந்து கொண்டிருக்கின்றானே!!! ஏன்??? என்ன இவந்தனுக்கு வந்துவிட்டது????
எதை என்று கூட அனைத்து குழந்தைகளும் கோவிந்தன் ஆகிவிடுவானா?? என்று கூட!!!
ஆனாலும் அறியாத முட்டாள்கள் மாயையில் சிக்கிக் கொண்ட முட்டாள்களுக்கு உண்மையான பொருளை எதை என்று அறியாமலே ஆனாலும் இதை சைகை(கண்ணசைத்து) வழியிலே... கண்கள் மூலமே யான் தான் கோவிந்தன் என்று அக்குழந்தை காண்பித்து மறைந்து போயிற்று!!!!
எதை என்று ஆனாலும் அனைவரும் எப்படிகுழந்தை என்றெல்லாம் ஆச்சரியப்பட்டு எதையென்று அறியாமலே... அப்பொழுதுதான் இவன் ஞானி என்று அறிந்து கொண்டார்கள்!!!
ஆனாலும் பின் அனைவரும் இவந்தன் காலில் விழுந்து விழுந்து.... எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே என் கர்மத்தை போக்குங்கள்!! போக்குங்கள்!! என்று கூற..
திடீரென்று அக் கோவிந்தனே... மாயமாக்கி கொண்டான்!!! அதாவது எடுத்துக்கொண்டான் அவனிடத்திற்கு சரியாகவே!!!
இதுதான் அப்பனே ஏதாவது என்று கூட ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இத்தனை பிறவிகள் என்று கூட ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது அப்பனே!!!!
அதாவது கூட்டி கழித்து பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லை!!!
இவ் ஆன்மா இத்தனை வருடங்கள் ஆக வேண்டும் அதாவது இப்பூமியில் பிறந்து வளர வேண்டும் ஒவ்வொரு உடலில் சேர வேண்டும் என்பதை கூட பின் பிரம்மாவின் தீர்ப்பு!!!
அப்பனே எதை என்று அறியாமலே.... அதனால் பின் ஒரு ஆன்மா ஒரு கையில் 30 ஆண்டுகள் தங்கலாம்!!! எதை என்று எதிர் கொள்ளாமலே!!! 50 வருடங்கள் தங்கலாம்!!! அல்லது எதை என்று அறியாமலே 80 வருடங்கள் தங்கலாம்!!!.... ஆனாலும் அப்பனே இதன் கணக்கு எங்களால் சித்தர்களால் மட்டுமே செப்ப முடியும் ஒவ்வொரு ஆன்மாவும் எதை என்று அறியாமலே இத்தனை ஆண்டுகள் பின் எதையென்று கூட பூமியில் திரிந்திருக்க வேண்டும் என்பதைக் கூட......
அப்பனே!!! அத்தனை ஆண்டுகள் சென்றால் தான் அப்பனே பிறவியும் முக்தி பெறும் என்பேன் அப்பனே!!!
அதாவது இத்தனை ஆண்டுகள் எதை என்று கூட அப்பனே 300 ஆண்டுகள் போக வேண்டும் என்பேன்!! அப்பனே!!! அப்பொழுதுதான் ஒரு ஆன்மா பின் முக்தி பெறும் என்பேன்!!!
அவ் 300 ஆண்டுகள் போன பின்பு தான் என்னுடைய ஆசிகளும் அருளும் பலமாக கிட்டும் என்பேன்!!!
ஆனாலும் அப்பனே முதலிலே எதை என்று அறியாமலே அவ் ஆன்மா முதலில் பிறந்து விடுகிறதென்றால் 80 ஆண்டுகள் வாழ்ந்து விடுகின்றதென்றால் அப்பனே பின் இறந்து பின் இன்னொரு உடம்பை தேடும் என்பேன் அப்பனே!!
பின் இன்னொரு உடம்பை தேடும் பொழுது அப்பனே அப்பொழுது இறைவனிடம் பக்திகள் இருக்காது மீண்டும் பின் பிறப்பு எடுக்கும் பொழுது பின் பக்திகள் இருக்காது ஆனால் கடைசியில் அனுபவித்து அனுபவித்து தான் இறைவன் இருக்கின்றான் என்பதைக் கூட மெய்யாக உணரும் அப்பனே!!! அவ் ஆன்மா!! எதை என்று கூட!!!
அதனால் வந்து விட்டீர்கள் அப்பனே நலமாகவே நலமாகவே எம்முடைய ஆசிகள்!!! அப்பனே பலகோடிகளப்பா!!!
எங்கெங்கு? பல சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது அப்பனே!!!! யானும் அங்கங்கு அழைத்து செல்வேன் அப்பனே!!!!
சரியான முறையில் சென்று கொண்டிருந்தால் அப்பனே ஏதும் தேவையில்லை அப்பனே!!!
உண்மைதனுக்கு அப்பனே இவ்வுலகத்தில் எதை என்று அறியாமலே வருகின்றது மாயை!! மாயை.!!
அப்பனே அழிவு காலம் வந்து கொண்டே இருக்கின்றது!!! அதனால் அப்பனே நல்லோர்களுக்கெல்லாம் அப்பனே வினையே சமமாக வந்து வந்து அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே குடும்பம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் நீண்ட நாட்கள் மனிதன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றோம் என்பதைக் கூட எண்ணம்.
ஆனாலும் அப்பனே உடம்பு போய்விடும் அப்பனே!!!! அவ் ஆன்மா மீண்டும் எதை என்று அறியாமலே மற்றொரு உடம்பை தேடி தேடி அப்பனே அலைந்து கொண்டு இருக்கும் அப்பனே!!!
அதனால் தான் அப்பனே எதை என்று அறியாமல் அதனால் அப்பனே எதை என்று உணராமலே எங்கள் பேச்சை கேட்டால் அப்பனே அனைத்தும் நலமாகும்!! என்பேன் அப்பனே!!!
ஒரு தீங்கும் அதாவது அணுவளவும் குறைகள் வராது என்பேன் அப்பனே எதை என்று அறியாமலே!!
ஆனாலும் மனிதன் மாயதிரையில் மறைந்து கொண்டு அப்பனே அனைத்தும் வேண்டும் அனைத்தும் வேண்டும் என்றால் அப்பனே... எதை என்று அறியாமலே பின் எதை என்று உணராமலே இறைவன் கொடுப்பதற்கு எதை எதை என்று கூட!!...
இதனால் எதையும் கேட்டு விடாதீர்கள் அப்பனே நலமாகவே!!!!!
எதை எடுத்து வந்தாயோ அதாவது அவ் ஆன்மா எதையெல்லாம் எதை என்று கூற பின் அனுபவித்து வந்ததோ அதன் மூலமே கஷ்டங்கள் ஏற்படும்..இவ் பிறப்பில் கூட!!! அதுதான் அப்பனே எதை என்று அறியாமலே அதனால்தான் தவறுகள் செய்யாதீர்கள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்பதை எல்லாம் பின் வெட்ட வெளிச்சமாகவே சித்தர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே
அப்பனே நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு அப்பனே எக்குறைகளும் கொள்ள வேண்டாம்... மீண்டும் ஆசிகளோடு உரைக்கின்றேன்.!!!! அப்பனே நலமாகவே!!!! நலமாகவே!!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
நம் குருநாதர் அகத்தியர் பெருமான் அடிக்கடி தனது வாக்குகளில் கூறும் செய்தி என்னவென்றால் உண்மையான பக்தியும் தொண்டு செய்யும் மனப்பான்மையும் இருந்தால் யாங்களே அவர்களை தேடிச் சென்று வாக்குகள் தருவோம் அவர்கள் இல்லத்திற்கும் செல்வோம் அவர்களை ஆசிர்வதித்து மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று வாக்குகளில் உரைத்துக் கொண்டே இருக்கின்றார்!!இன்னும் எத்தனை எத்தனையோ பேர் குருநாதரின் ஜீவனாடி வாக்குகளை கேட்பதற்கு காத்துக் கொண்டிருக்கையில் மதுரா ஆலயத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பக்தனான சிறுவனுக்கும் கருணையோடு அழைத்து அருகில் அமர வைத்து வாக்குகள் தந்து ஆசீர்வதித்தார் நம் குருநாதர்!!!! அந்தச் சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!!!!
நம் குருநாதரை நாம் எல்லாம் நினைத்து பெருமைப்படும் தருணம் இது அவருடைய அன்பிற்கும் கருணைக்கும் எல்லையே கிடையாது என்பதை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றார் இதுதான் உண்மை!!!!
அந்த சிறுவனுக்கு நம் குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு தந்த நிகழ்வினை பார்ப்போம்
நம் குருநாதர் அகத்தியர் பெருமான் அருள் ஆசிகளோடு யாத்திரையில் மதுராவில் யமுனா ஸ்நானம் துவாரகதிஷ் கிருஷ்ணர் தரிசனம் ஜென்ம பூமியில் உள்ள கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு ஆலயத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில் திரு ஜானகிராமன் ஐயா ஓலைச்சுவடியை பிரித்து வாசிக்க தொடங்கினார்!!
குருநாதர் அகத்திய பெருமான் அனைவருக்கும் அருளாசி வழங்கி இந்த வாக்கினை தந்து கொண்டிருந்த பொழுது ஒரு பையன் அதாவது 18 வயது மதிக்கத்தக்க அளவில் தென்னிந்திய தோற்றத்தில் வாக்குகள் தரும் இடத்திற்கு வந்து என்னவென்று கேட்க தொடங்கினான்..
ஜானகிராமன் ஐயா தமிழில் குருநாதர் வாக்குகளை வாசித்துக் கூறிய பொழுது அந்தச் சிறுவனும் நான் கேரளாவை சேர்ந்தவன் என்று கூறி விட்டு சிறிது தூரத்தில் அமர்ந்து கொண்டு வாக்குகளை கேட்டுக் கொண்டே இருந்தான்!!!!
சிறிது நேரம் கேட்டுக்கொண்டு இருந்து அவனுடைய பெற்றோர்கள் சிறிது தூரத்தில் இருந்தனர் ஆர்வத்துடன் வாக்குகளை கேட்ட அவன் எழுந்து செல்ல முற்படுகையில்...
அவந்தனை இங்கு வரச்சொல்!! அவந்தனுக்கும் வாக்குகள் யான் உரைக்கின்றேன்!!! என்று உத்தரவிட்டார்!!!!!
அகத்தியர் அடியவர் ஒருவர் அவனை அழைத்து அமரச்சொன்னார்!!!
அச்சிறுவனும் அருகே வந்த அமர்ந்தவுடன்
எதையென்று தெரியாமலே வந்தவனுக்கும் அப்பனே நலமாகவே இவந்தனை எதை என்று அறியாமலே குருவாயூர் செல்லச் சொல்!!!! அங்கே இவந்தனுக்கு ஒரு சூட்சுமம் இருக்கின்றது!!!! என்று கூற அதை அப்படியே அகத்தியர் அறியவர் மலையாளத்தில் அச்சிறுவனுக்கு விளக்கி தந்தார்!!!!
அச்சிறுவனும் புரிந்து கொள்ள!!!!! குருநாதர் அகத்திய பெருமான் அவனுடைய முற்பிறவியை பற்றியும் கூற தொடங்கினார்
அப்பனே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே கவலைகள் இல்லை எதையென்று அறியாமலே அப்பனே எதை என்று தெரியாமலே... குருவாயூரிலே அப்பனே வாழ்ந்து வந்தாய் முன் ஜென்மத்தில் ஆனாலும் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே குருவாயூரிலே நல்முறையாகவே தர்மம் ஏந்தி வந்தாய் நீ அப்பனே!!! அப்பனே நலமாகவே எதை எதை என்று கூற அப்பனே எதை என்று பின் உணராமல் அப்பொழுதே அவ் குருவாயூரன்( கிருஷ்ணன்) நல்முறையாகவே உந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி உந்தனை எதை என்று தெரியாமலே எவை என்று உணராமலே பின் அங்கிருந்து பழனி மலைக்கு அனுப்பினான் உன்னை!!!!
அதனால் அப்பனே அடிக்கடி பழனி தனுக்கும் எதை என்று தெரியாமலே குருவாயூருக்கும் அடிக்கடி சென்று கொண்டே இருந்தால்... உன் வாழ்க்கை தத்துவம் புரிந்துவிடும் அப்பனே எதை என்று அறியாமலே இச் ஜென்மத்திலே உந்தனுக்கு கிருஷ்ணனும் உதவிகள் செய்வான் எதை என்று அறியாமலே பழனி மலையில் பின் முருகனும் உந்தனுக்கு காட்சியளிப்பான்!!! உன் குடும்பத்திற்கே பழனியாண்டவன் தரிசனம் கிடைக்கும்!! கிடைக்கும்!! சொல்லிவிட்டேன்!!! என்று வாக்குகள் தந்தார் !!!
அச்சிறுவனும் தன்னுடைய பெற்றோரை அழைத்து வர அந்த அகத்திய அடியவரும் மலையாளத்தில் முழுவதும் எடுத்துக்கூற மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறி விடை பெற்று சென்றனர் நம் குருநாதரின் கருணையோ கருணை!!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா போன்
05652 423888
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா முகவரி: மதுரா - டீக் மார்க், டீக் கேட் சௌரஹா அருகில், ஜனம் பூமி, மதுரா, உத்தரப் பிரதேசம், 281001, இந்தியா
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா கோயில் திறந்திருக்கும்
நாள் மற்றும் நேரம்
திங்கள் காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
செவ்வாய் காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
புதன்கிழமை காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30
வியாழன் காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30
வெள்ளிக்கிழமை காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
சனிக்கிழமை காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30
ஞாயிறு காலை 5:00 - மதியம் 12:00 4:00 pm - 9:30 pm
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா
தர்ஷன் & ஆர்த்தி நேர விபரங்கள்
கோடைக்காலம்
காலை 5:00 முதல் மதியம் 12:00 வரை மற்றும் மாலை 4:00 முதல் இரவு 9:30 வரை
குளிர்காலம்
காலை 5:30 முதல் 12:00 வரை மதியம் மற்றும் மாலை 3:00 முதல் இரவு 8:30 வரை
மங்கள ஆரத்தி காலை 5:30 மணி
மகான் போக் காலை 8:00 மணி
சந்தியா ஆரத்தி மாலை 6:00 மணி
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் கோயில், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் கிருஷ்ணரின் பிறப்பிடமாகும்.
கிருஷ்ணரின் இருப்பிடமான மதுராவைப் பற்றி:-
மதுரா பகவான் கிருஷ்ணரின் வசிப்பிடமாக அறியப்படுகிறது, அங்கு அவர் தனது குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் அவரது இளமைப் பருவத்தின் சில பகுதிகளைக் கழித்தார். பிரிஜ் பூமி என்றும் அழைக்கப்படும் மதுரா, ஏராளமான இந்துக் கோயில்களைக் கொண்ட இந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகும். இது அதன் வரலாறு, தொல்லியல், மத வரலாறு, கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றிற்கு நன்கு அறியப்பட்டதாகும். இது யமுனை ஆற்றின் கரையில் உள்ளது.
மதுரா பல இந்துக் கோயில்களின் தாயகமாகவும் உள்ளது,
நகரம் முழுவதும் புல்லாங்குழல்களின் அழகான ஒலியைக் கேட்கலாம் மற்றும் நம்பமுடியாத அன்பு மற்றும் பக்தி உணர்வை உணர முடியும். ஹோலி என்பது மதுராவின் மிக முக்கியமான பண்டிகையாகும், மேலும் இந்த
வண்ணமயமான நிகழ்வின் பக்திமயமான மகிழ்ச்சியையும் காண உலகளவில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வருகிறார்கள்.
மதுரா இந்தியாவின் முதன்மையான ஆன்மீக தலங்களில் ஒன்றாகும்.
மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவில் பற்றி
ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் கோயில், கிருஷ்ணரின் பெற்றோரான மாதா தேவகி மற்றும் வசுதேவரை அவரது பொல்லாத மாமா கம்சனால் சிறைபிடிக்கப்பட்ட சிறை அறையை மையமாகக் கொண்டது.
சிறை அறையைத் தவிர, கிருஷ்ண ஜென்மஸ்தான் கோயிலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்ற கோயில்கள் உள்ளன. கோயிலின் புனிதமான சூழலும் தூய்மையும் கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்திய தலம் இது என்ற நம்பிக்கையை இதயத்தில் செலுத்துகிறது.
கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலில் ஜன்மாஷ்டமி (கிருஷ்ணரின் பிறந்த நாள்), பசந்த பஞ்சமி, ஹோலி மற்றும் தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும்.
#குறிப்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக கேமராக்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான மதுரா கோவில்கள் செல்போன் மற்றும் கேமராக்களை தடை செய்கின்றன, எனவே மதுராவில் எந்த கோவிலுக்கும் செல்லும்போதும் அவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலின் இருப்பிடம்
மதுராவின் டீக் கேட் சௌராஹாவிற்கு அருகில் உள்ள டீக் மார்க்கில் இந்த கோவில் உள்ளது.
மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவில் வரலாறு
கிருஷ்ணர் பிறந்த இடம் என்பதால் கிருஷ்ண ஜென்மபூமி இந்துக்களின் இதயங்களிலும் ஆன்மாக்களிலும் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
கிருஷ்ணா அர்ப்பணம்
ReplyDeleteஅகத்தீசாய நம 🙇♂️🙏நன்றி ஐயா
ReplyDeleteOm Sri Krishnaya Namaha 🙏🙏🙏
ReplyDelete